Saturday, November 12, 2016



'திராவிட மனநோயாளிகள்'  தமிழ்நாட்டில் எவ்வாறு உருவானார்கள்? (1)


திருச்சி பெரியார் மையத்தில் நான் பங்களிப்பு வழங்கிய காலத்தில், நான் படித்த பல நூல்களின் அடிப்படையில், 'சமூக உளவியல்' (Social Psychology) தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதி சுற்றுக்கு விட்டேன். அதை சிறு நூலாக வெளியிட்டதாக ஞாபகம் இல்லை.

திருச்சி பெரியார் மையம் மூலம் வளர்ந்து, 'உலா' வரும் சமூக கிருமிகள் எல்லாம், எனது சமூகவியல் ஆய்வுக்கு திறவுகோல் ஆகியுள்ள நிலையில், அந்த கட்டுரையின் அடிப்படையில், 'திராவிட மனநோயாளிகள்' தமிழ்நாட்டில் எவ்வாறு உருவானார்கள்? என்பதை விளங்கிக் கொள்ள, அக்கட்டுரையானது பயன்படும்.

ஒரு மனிதர் நல்ல அல்லது தீய செயலில் ஈடுபட, அவர் மனதில், அதற்கான தூண்டுதல் எண்ணம் (Motivation)  உருவாக வேண்டும்.

செயலில் ஈடுபட தூண்டுதல் எண்ணம் உருவாக, மனதில் அது தொடர்பான ஈடுபாடு (interest) இருக்க வேண்டும்.

மனதில் ஈடுபாடு உருவாக வேண்டுமானால், அதற்கான தேவைகளை (Needs) உணரவேண்டும்.

எனவே திராவிட மனநோயாளிகள் எல்லாம், எந்த தேவைகளின் அடிப்படைகளில் உருவானார்கள்? என்பது ஆய்விற்குறியதாகும்.

ஒரு குழந்தை வளரும் காலக்கட்டத்தில், தம்மை சுற்றியுள்ள, தம்மை விட வலிமையான, அதிக செயல்பாடுடைய வயதானவர்களின் தாக்கத்தில், ஒரு வகையான தாழ்வு உணர்வுகளை அனுபவிக்க நேரிடும் என்பதை, ஆல்பிரட் அட்லர் என்ற ஆராய்ச்சியாளர் தெளிவுபடுத்தியுள்ளார். 'தாழ்வு மனப்பான்மை'(Inferiority Complex) என்பதை முதலில் அறிமுகப் படுத்தியவரும் அவரே ஆவார்.(http://www.2knowmyself.com/alfred_adler_social_interest_theory)

நல்ல குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும், மோசமான குடும்ப சூழலிலும் 'திறமைசாலிகள்', தாம் அனுபவிக்க நேரிடும் தாழ்வு உணர்வுகளை, படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் சாதித்து, செல்வாக்கையும், அங்கீகாரத்தையும் பெற்று (strives for power and recognition) ஈடுகட்டி(compensate), பெரியவர்களாக வளர்ந்து விடுவார்கள். அத்தகையோரே சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(Passions), தமக்கு தாமே எஜமானராக வாழ்வார்கள்; சாதனையாளர்களாக வெளிப்படுவார்கள்; பிறர் தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற 'சமூக ஒப்பிடு' (Social Comparison) நோயில் சிக்காமல். 

அவ்வாறு ஈடுகட்டும் சவாலில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம், 'தாழ்வு மனப்பான்மையுடன்' பெரியவர்களாக வளர்வார்கள். (If the child failed to meet certain life challenges during his act of compensation then he will develop an inferiority complex.  So according to Adler every child feels inferior but not every one develops an inferiority complex which only affects those who failed to compensate correctly.) 

அந்த தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட, பெரும்பாலானவர்கள் தவறான திசையில் பயணிப்பதால், அந்த தாழ்வு மனப்பான்மையானது, சாகும் வரை அவர்களை துரத்தும். (Most people usually try to compensate in the wrong direction and that’s why their inferiority complex keeps hunting them as long as they live.) அவ்வாறு தவறான திசையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும், செல்வாக்கும், எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த சமூகமானது, வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும். 

'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் அடையாளம் கண்டுள்ள சமூக கிருமிகளின் குடும்ப சூழல் பற்றி கிடைத்த உள்ளீடுகளின் அடிப்படையில், அவர்கள் எல்லாம், தாம் வளர்ந்த சூழலில் அனுபவித்த தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட, தவறான திசையில் பயணிக்கும் 'திராவிட மன நோயாளிகளா'? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமது அறிவு வரை எல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, பல பரிமாண அறிவுச் செல்வமான தமிழ் இலக்கியங்களையும், புராணங்களையும் 'சமூகத்திற்கு கேடான மூட நம்பிக்கை'யென கண்டித்த;( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html &    http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளின் மகத்துவம் தெரியாமல், சுயலாபத்திற்கு காவு கொடுக்கும்(http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )


தத்தம் சாதி வலைப்பின்னல்களின் பலன்களை 'அனுபவித்து'க் கொண்டே, அதே நேரத்தில் 'சாதி ஒழிப்பு முற்போக்கு வீரர்களாக' அம்பலமாகாமல்;

மனித மதிப்புகளுக்கும்(Human Values), புலமைக்கும் கேடான;


உலகில் வேறெங்கும் காண முடியாத ‘சமூக கிருமிகளாக’ வாழ்ந்து கொண்டும்;

ஊழல்வழி ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தாய்மொழி தமிழைக் காவு கொடுத்தும்;

ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்களை கொள்ளையடித்தும்;

ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றி, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்து வரும் போக்கிற்கும் காரணமான;

 'திராவிட மனநோயாளிகள்' ;

எந்த தனித்துவமான தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்டும் தேவைகளின் அடிப்படைகளில் உருவானார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்ட நாடுகளில் எல்லாம், அந்த சமூக அளவிலான தாழ்வு மனப்பான்மையை, காலனி ஆட்சியாளர்கள் திட்டமிட்டு உருவாக்கினார்கள். காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் மன‌ங்களில் 'தாழ்வு மனப்பான்மையை' விதைத்து, காலனிய மனநோயில்  சிக்க வைத்து, அதன் பாதிப்புகள் 'விடுதலைக்குப்'  பின்னும் தொடர்வது  பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

காலனி ஆட்சியில் சிக்கி, விடுதலையான நாடுகள் எல்லாம், மேற்கத்திய வழிபாடு போக்கிலான 'தாழ்வு மனப்பான்மை' மூலம்;

'காலனிய மனநோயில்' சிக்கி, சீரழிந்து வருவது பற்றிய ஆய்வுகளின் பின்னணியில்,

தமிழ்நாட்டில் மட்டுமே;

தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களை சிதைத்து, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையே சுயலாபத்திற்கு காவு கொடுக்கும், 'திராவிட மனநோயாளிகள்' எவ்வாறு உருவானார்கள்?

என்ற ஆய்வுக்கு 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்து வலம் வரும் சமூக கிருமிகள், வெளிப்படுத்தியுள்ள‌ திறவுகோல் பெரிதும் உதவி வருகிறது.( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) தாழ்வு மனப்பான்மையை(inferiority complex) ஈடுகட்ட, தவறான திசையில் பயணிப்பவர்களை 'சிற்றினமாக' பழந்தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காட்டுகின்றன. 1944-இல் 'திராவிடர் கழகம்' உருவாகி, 'தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு' அனைத்தும் தமிழர்க்கு கேடானவை, என்ற திசையில் பயணித்ததால், அந்த 'சிற்றினமானது', 'தீயினமாக' வலிமை பெறும் சமூக செயல்நுட்பம் அரங்கேறியதா? அதன் தொடர் விளைவாக ஈ.வெ.ரா அவர்களையே ஓரங்கட்டி, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவமதித்து, 'திராவிட மன நோயாளிகள்' எவ்வாறு உருவாகி, வளர்ந்தார்கள்? ஈ.வெ.ரா இயக்கத்தில், விலைமதிப்பற்ற எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், 'திராவிட' அரசியல் கொள்ளை'க்கான சமூக செயல்நுட்பத்திற்கு, எவ்வாறு வழி வகுத்தது? தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' உருவான போதே, அதற்கான 'விதை' போடப்பட்டு, அதன் வளர்ச்சியிலேயே, ஈ.வெ.ரா, மற்றும் அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், அந்த சமூக செயல்நுட்ப வளர்ச்சியில் பலியானதா? என்ற ஆய்வின் திறவுகோலாக;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்து வலம் வரும் சமூக கிருமிகள் எல்லாம், எனக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மூலம் நான் 'விழித்து', அவற்றையே மதிப்புமிக்க உள்ளீடாக(input) கருதி, முன்னெடுத்த ‘சமூகவியல் ஆய்வுக்கள சோதனைக்கான மிருகங்களாக' (Sociological Experimental Animals) வெளிப்பட்டு, அரிய கண்டுபிடிப்புக்கு உதவி வருகிறார்கள். ( குறிப்பு கீழே)

ஏற்கனவே 'காலனிய மனநோயில்' சிக்கியிருந்த தமிழ்நாட்டில், மேற்கத்திய வழிபாட்டுப் போக்கில், தாய்மொழி, பாராம்பரியம், பண்பாடு போன்றவற்றை சீரழித்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' குழப்பம் மூலமான அடையாளச் சிதைவு போக்கில், 'இந்தியர்' என்ற அடையாளத்தையும் பலகீனப்படுத்தி, பயணித்த போக்கில், சமூக உளவியலில், 'தாழ்வு மனப்பான்மையில்' சிக்கியவர்கள், 'ஈடுகட்டும்' (compensate) போக்கில், எவ்வளவு சமூகக் கேடான 'திராவிட மனநோயாளிகளான' திசையில் பயணித்தார்கள்? என்பதை அடுத்து பார்ப்போம். 

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும், திராவிட மனநோயாளித்தனத்தின் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.('திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html ) 

ஊழல்வழி ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தாய்மொழி தமிழைக் காவு கொடுத்தும்; ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்களை கொள்ளையடித்தும்; ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றி, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்து வரும் போக்கிற்கும், காரணமான அரசியல் கொள்ளையர்களை எதிர்க்காமல் பயணிப்பதில், 'திராவிடர் கழகமும்'(மற்ற 'பெரியார்' கட்சிகளும்), 'பிராமணர் சங்கமும்' ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவர்களைப் போலவே, இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், அகத்தில் சாதிப்பற்றுடன், புறத்தில் 'தனித் தமிழ்நாடு', 'தமிழ்த் தேசியம்’ என்று  பயணிப்பவர்கள் எல்லாம், எந்த வகையிலான தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட வாழ்கிறார்கள்? அது போலவே சொந்த வாழ்வில் இழிவான சமரசங்களுடன் கோழையாக வாழ்ந்து கொண்டு, தமது 'சொகுசு பாதுகாப்பு மண்டிலம்' (Comfort Zone) சீர்குலைய வாய்ப்புள்ள, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இருக்கும் அரசியல் ரவுடிகள் 'வரைந்த', 'இலட்சுமணன் எல்லை'களைத்(https://en.wikipedia.org/wiki/Lakshmana_rekha) தாண்டாமல், புறத்தில் 'வீரமாக' பேசியும் எழுதியும், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை உசுப்பி காவு கொடுக்கும் 'முற்போக்குகளும்', 'மனித உரிமை தாதாக்களும்', எந்த வகையிலான தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட வாழ்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'உயர்வு மனப் பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் ‍ - நோயின் -  இரு பக்கங்களாகும்."We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex." (Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 260).) 

எனவே பேராசிரியர்கள் துணை வேந்தர்கள் முதல் அரைகுறையாகப் படித்த அடிமட்டத் தொண்டர் வரை, 'காரியம்' சாதிக்க, தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதும், தலைவர்கள் அதை 'ரசிப்பதும்' ஒரே நோயின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டு 'நோயாளிகளின்' ஆதரவைப் 'பலமாக' நம்பி, பயணித்த 'தமிழ் ஈழ முயற்சிகள்' சாண் ஏறி முழம் ச‌றுக்கினக் கதையானதில் வியப்புண்டோ? அந்த போக்கில், வறுமையில் வாடிய அகதிகளாக, தமிழ்நாட்டிற்கு வந்து, திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு நேசமாகி, வசதியான 'ஈழ - திராவிட மனநோயாளிகள்' மற்றும் 'அதிவேக புதுப் பணக்காரர்கள்' மூலமாக, அந்த நோயானது, எந்த அளவுக்கு, இலங்கையில் வாழும் தமிழர்களையும், 'அந்த நோயில்' சிக்க வைத்துள்ளது? முள்ளி வாய்க்கால் அழிவிற்கு எந்த அளவு பங்களித்தது? தமிழ்நாட்டில் ந்த 'நோய்', திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தான் அரங்கேறியது என்பதை எவராலும் மறுக்கமுடியுமா? 'திராவிட' போக்கிலிருந்து விலகி, 'தனித்தமிழ்' என பயணித்தவர்களில், பின் தடம் மாறி, 'திராவிட மனநோயாளிகளாக' யார், யார் பயணித்தார்கள்?  அவர்கள் மூலம் வெட்கமின்றி பலன்கள் பெற்று, 'தனித்தமிழ்' போக்கில் யார் யார் பயணித்தார்கள்? 'முற்போக்கு' வேடத்தில் கிடைக்கும் செல்வாக்கை, இழிவான சுயலாபங்களுக்கு பயன்படுத்தி, 'அம்பலமாகாமல்' வலம் வருபவர்கள் யார்? 1967க்கு முன் 'பலகீனமான' மனிதர்கள் எல்லாம், தமது வைப்பாட்டியை (அல்லது இரண்டாவது மனைவியை), தமது சமூக வட்டத்தில் (வெட்கப்பட்டு) 'இரகசியமாக' வைத்திருந்த போக்கானது, பின் மாறி, இன்று சமூகத்தில் 'செல்வாக்குடன்' வலம் வரும் போக்கானது, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையே சுயலாபத்திற்கு காவு கொடுக்கும் சமூக நோயை வளர்த்து வருகிறதா? 'சாதி எதிர்ப்பு' என்ற பேரில், 'சாதி வெறி'யும், சாதி மோதல்களும் 1967க்குப்பின் அதிகரித்துள்ளதா? தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில், யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்? என்று ஆராய்ந்தால், நமக்கு தெரிந்தவர்களில், நாம் உள்ளிட்டு, எத்தனை பேர்?, அந்நோயில் சிக்காதவர்கள் என்பது மிகக் குறைவாக வெளிப்பட்டால், வியப்பில்லை…….

தாய்மொழியும், பாரம்பரியமும், பண்பாடும் ஒரு மனிதரின் அடையாளத்தோடு தொடர்புடைய ஆணிவேர்களாகும்.

தமது பாரம்பரியப் பண்பாட்டு சூழலில் தாய்மொழி வழியில் அடிப்படைக்கல்வி கற்பதே, குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.

அத்தகைய மூளை வளர்ச்சி பெற்றவர்கள், தான் வாழும் சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டிய வாழ்வும், அதன் மூலம் தனது இயல்போடு இசைந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passions)  அடையாளம் கண்டு, பேணி வளர்த்து, இயல்பான இன்பங்களை அனுபவித்தும், துன்பங்களை அதற்கான 'விலையாக' ‘அனுபவித்தும்’, வாழ இயலும்.
( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html ) 

எனவே அந்த ஆணிவேர்களைப் பேணிப் பாதுகாப்பதும் அவசியமாகும். உலக அளவில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளும்,தொழில்நுட்ப வல்லுநர்களும், படைப்பாளர்களும் உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு அவ்வாறு வாழ்ந்தவர்களே என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றியாக வேண்டும்.' (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

“1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' மற்றும் பின் வெளிவந்த திராவிட இயக்க இதழ்கள், புத்தகங்கள், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்களின் நூல்கள், ஜீன் பால் சாத்ரே(http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre), சாம்ஸ்கி (http://en.wikipedia.org/wiki/Noam_Chomsky )  உள்ளிட்ட பல நவீன சிந்தனையாளர்களின் நூல்கள், கட்டுரைகள், எல்லாவற்றையும் விட பெரியார்  இயக்கங்களில், குறிப்பாக திருச்சி பெரியார் மையத்தில் கிடைத்த, மதிப்பு வாய்ந்த உள்ளீடான(Valuable input), 'அனுபவங்கள்'  போன்றவை துணையுடனே தான், நான் 'திராவிட மன நோயாளித் தனத்தின்' தோற்றத்தையும், வளர்ந்த செயல்நுட்பத்தையும் கண்டுபிடிக்க முடிந்தது.” (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )


குறிப்பு : 

சமூகவியல் ஆய்வுக்கள சோதனை முடிவுகளில் மாதிரி ஒன்று:

“நான்காவது இரகசியம்

புதிதாக ஒரு மனிதரை சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த மனிதர் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான மனிதர் எனில், அவருக்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அவருக்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான மனிதர்களை தமக்குப் பயன்படுவார்கள் என்றால், தம்மிடம் அவர்களுக்கான 'எலும்புத் துண்டுகள்' இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாதவர்களை உடனே தள்ளி வைக்க வேண்டும். சமமான மனிதர் எனில், அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும்.” (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்; வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) 

மேற்குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலிகள்' ஈட்டிய செல்வத்தில் மயங்கி, அவர்களுடன் நெருக்கமானவர்களும், அதே நோயில் சிக்கி வருவதும், எனது சமூகவியல் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. அது போன்ற 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?), முள்ளி வாய்க்கால் அழிவின் போது, தானோ, தனது குடும்பமோ, பிள்ளைகளோ வீதியில் இறங்கி போராடாமல், பாதுகாப்பான மேல்தட்டு நிலையில் வாழ்ந்து கொண்டு, வீதியில் இறங்கி அதற்காக போராடாத‌ தமிழ்நாட்டு தமிழர்களை, 'தமிழ் இன உணர்வு அற்றவர்கள்' என்று குறை சொல்லியதும், எனது சமூகவியல் ஆய்விற்கான முக்கிய சிக்னல் ஆனது. 

சாதாரணமாக வாழும் தமிழர்கள், அந்த 'ச‌மூக விபச்சாரிகளிடம்' என்னைப் போல ஏமாறாமல், என்னை விட புத்திசாலிகளாக;

அந்த மனிதர்கள் எவ்வளவு ' பெரியார், தமிழ், தமிழ் உணர்வு, செல்வ வெளிச்சம்' போட்டாலும் மயங்காமல், மனித மதிப்புகளுக்கும்(Human Values), புலமைக்கும் கேடான போக்கில் பயணிக்கும் அவர்களை இழிவாகக் கருதி, ஒதுங்கி வாழ்வது, அல்லது பணம் தேவைப்பட்டால் அவர்களிடம் 'ஆதாயத் தொண்டராக' பணியாற்றி, தேவை முடிந்த பின் விலகி வாழ்வது, எனக்கே வியப்பான அனுபவமாகி;

தமிழ்நாட்டின் 'அரசியல் நீக்கம்'(Depoliticize)  போக்கிற்கு, மேற்குறிப்பிட்ட 'வாழ்வியல் வெற்றி இரகசிய நிபுணர்கள்' (?) எவ்வாறு பங்களித்துள்ளார்கள்? என்ற ஆய்வுக்கும் துணை புரிந்துள்ளது. 

பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, சாதாரண மக்களை விட‌, குறிப்பாக 'அதிவேக'(?) பணக்காரர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் அதிக அளவில்; 

குடும்பம், நட்பு உள்ளிட்ட தமது சமூக வட்டத்திலும் கூட; 

எந்த சமூக, சட்ட ஒழுக்க நெறிகளையும் பணத்திற்காக 'காவு' கொடுத்து, சீரழிந்து வருவதன் மூலம், திராவிட மனநோயாளித்தனத்தில் அனைத்து சாதி, மதத்தினரும், சிக்கி வருகிறார்களா?  http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html

No comments:

Post a Comment