Friday, November 18, 2016

'திராவிட மனநோயாளிகள்'  தமிழ்நாட்டில் எவ்வாறு உருவானார்கள்? (2)

 

தவறான திசையில் பயணிப்ப‌வர்கள், இழக்கக்கூடாத‌வற்றை இழந்து வாழ்கிறார்களா?



“நல்ல குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும், மோசமான குடும்ப சூழலிலும் 'திறமைசாலிகள்',  தாம் அனுபவிக்க நேரிடும் தாழ்வு உணர்வுகளை, படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் சாதித்து, செல்வாக்கையும், அங்கீகாரத்தையும் பெற்று (strives for power and recognition)  ஈடுகட்டி(compensate), பெரியவர்களாக வளர்ந்து விடுவார்கள்.” என்பதையும்;

“அவ்வாறு ஈடுகட்டும் சவாலில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம், 'தாழ்வு மனப்பான்மையுடன்' பெரியவர்களாக வளர்வார்கள். அந்த தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட, பெரும்பாலானவர்கள் தவறான திசையில் பயணிப்பதால், அந்த தாழ்வு மனப்பான்மையானது, சாகும் வரை அவர்களை துரத்தும்.” என்பதையும்; ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html)

அப்படி தவறான திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் 'மகிழ்ச்சி, இன்பம்' போன்றவற்றை 'தமக்காக' அனுபவிக்கும் இயல்பையே 'துறந்து', மற்றவர்கள் தம்மை 'பெரிதாக' நினைக்க அல்லது 'பொறாமைப்பட' வைக்கும், 'சாதனைகளை' 'துரத்தும்' 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' சிக்கி விடுவார்கள்.

மற்றவர் காரை விட, அதிக விலையுள்ள கார் தம்மிடம் இருக்கிறதா? (திருச்சி பெரியார் மையம் மூலம் 'வளர்ந்து'(?), திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பத்தின் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரர்' ஆனவர்,  நகரில் பெரிய பணக்கரரின் காரை விட, அதிக விலையுள்ள கார் தம்மிடம் இருப்பதாக, என்னிடமே 'பெருமையுடன்' (?) குறிப்பிட்டு, திராவிட மனநோயாளி ஆய்வுக்கு அரிய உள்ளீடை(input) எனக்கு வழங்கினார்; அதன் பின்னும் 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தையும் தொடர்ந்தவாறே.)

மற்றவர் வீட்டை விட, அதிக மதிப்புள்ள வீடு தம்மிடம் இருக்கிறதா? மற்ற குடும்ப குழந்தைகளை விட, நமது குழந்தைகள் (அவர்களை உடைமைக் கூண்டில்- possessive prison- சிறைப்படுத்தி) படிப்பில்/விளையாட்டுகளில் 'அதிகம் சாதிக்கிறார்களா?
(" When I hear fathers of families saying they are working to leave a lot of money for their children, I wonder if they realize that by so doing they are taking all the spirit of adventure from the lives of those children. For every dollar they leave them makes them so much the weaker. The finest inheritance you can give to a child is to allow it to make its own way, completely on its own feet.” ‘My Life’ Isadora Dunken  (Bold Mine); 
http://tamilsdirection.blogspot.com/2016/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html

மற்றவரை விட, குறுகிய காலத்தில், அதிகமாக சம்பாதிக்க முடிகிறதா? என்பது போன்ற இன்னும் பல 'போட்டிகளில்' சாகும் வரை, 'ஓடி'க் கொண்டிருக்க வேண்டிய 'கட்டாயத்தில்' சிக்கியே, அத்தகையோர் எல்லாம் வாழ்வார்கள்.

“அந்த மனநிலையில் உள்ளவர்கள், வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கும் இன்பங்களைக் கூட அனுபவிக்க முடியாமல், தொலைத்து வாழவும் நேரிடும்.  ஒரு நல்ல இசையை கேட்கும் வாய்ப்புடைய நபர், அந்த நேரத்தில் 'ஷேர்' மார்க்கெட்டில் (share market),  தம்மிடமுள்ள பங்குகள் ஏற்றத்திலா?/இறக்கத்திலா? என்று யோசித்துக் கொண்டிருந்தால், அந்த இசையின் இன்பத்தை அனுபவிக்க முடியுமா?” (‘“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html) 

உலகமயமாக்கலின் வீச்சில், நுகர்வு பண்பாட்டிற்கு அடிமையாகி, இது போன்ற 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' சிக்கியவர்கள் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் இத்தகைய ஓட்டப்பந்தயத்தில், 'பெரியார் முகமூடியில்', 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி' போன்றவற்றையும் 'துருப்புச் சீட்டுகளாக்கி',  'செல்வம், செல்வாக்கு' ஈட்டி, தமது எடுபிடிகளுடனும், ரசிகர்களுடனும் வலம் வரும் 'திராவிட மன நோயாளிகள்' எல்லாம், உலகிற்கு புதிய அறிமுகமாகும். 

அந்த ஓட்டப்பந்தயத்தில் 'வெற்றி' பெற, அவர்கள் கடைபிடிக்கும் 'வாழ்வியல் வெற்றியின் இரகசியங்களை' ஏற்கனவே பார்த்தோம். ”தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும், அதை தமது எலும்புத் துண்டு வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதும் அவசியமே. தமது ஊழல் குறுக்குவழி பணத்தின் ஒரு பகுதியை, 'முதலீடாக' 'நன்கொடை' வழங்கி, 'சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' போன்ற, அமைப்புகளின் புரவலராக வலம் வருவதும் அந்த செயல்நுட்பத்தில் அடங்கும்."
(https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

அந்த 'நோயில்' அவர்களின் குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டமே சிக்கி விடுவதால், அந்த வட்டத்திலேயே, யார் அதிகம் சம்பாதிக்கிறார்களோ, அவர்களுக்கே 'அந்த வட்டத்தில் அதிக மரியாதை' என்பதால், அந்த சமூக வட்டத்தில் உள்ளவர்களிடையிலும், ஒரு 'ஓட்டப்பந்தயம்' அரங்கேறிவிடும். ஆக ஒரே நேரத்தில், வெளி உலகத்திற்காகவும், தமது கமூக வட்டத்திற்காகவும், தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில், அவர்கள் சிக்கி விடுவார்கள்.

அதாவது, எதையும் கொண்டு வராத பிறப்பிற்கும், எதையும் எடுத்து செல்ல முடியாத இறப்பிற்கும் இடையிலான வாழ்க்கைப் பயணத்தில்:

மற்றவர்கள் தம்மை பெரிதாக நினைக்க வேண்டும் என்ற 'போலி கெளரவம்' நோயில் சிக்கி, தமக்கான வாழ்க்கையை தொலைத்து, 'ஓடி கொண்டிருப்பவர்கள்' எல்லாம், ஒரு மனிதர் இழக்கக்கூடாத பலவற்றை இழந்து வாழ்கிறார்கள்.

அவர்கள் 'லாப நட்ட கணக்கின்' அடிப்படையிலேயே எவருக்கும் உதவிகள் புரிவதாலும், மதிப்பதாலும், அவர்களை மற்றவர்களும் 'லாப நட்ட கணக்கின்' அடிப்படையிலேயே மதிப்பார்கள்; உதவுவார்கள்.

அதன் தொடர் விளைவாக, அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள் எல்லாம்‌, அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது  சமூக  வட்டமே சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும் 'ஓட்டப்பந்தய'  வட்டமாகி; 

குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையும், சமூக ஒழுக்க நெறிகளையும், 'பணத்திற்காக காவு கொடுக்க' தயங்காத, சமூகத்திற்கே கேடான சமூக வட்டமாக‌, அமையவும் வாய்ப்புண்டு. 

'எந்திரன்' திரைப்படத்தில் நல்ல விஞ்ஞானியின் பிடியிலிருந்து, தீய விஞ்ஞானியிடம் சிக்கிய 'எந்திரனின் மூளை செயலாக்கியை'(Brain Processor of the Human Robot) மாற்றியவுடன், சமூகத்திற்கு கேடாக 'எந்திரன்' பயணித்தது போல, 'தாழ்வு மனப்பான்மையுடன்' வாழும் 'திராவிட மனநோயாளிகளும்' சமூகத்திற்கு கேடாக, பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். விழித்திருக்கும் நேரமெல்லாம், சமூக ஒப்பீடு நோயில், சுயலாப கணக்கிலேயே, அவர்களின் மூளைகள் செயல்படுவதால்(processing), கேடான மனித அலையியற்றிகளாக(Negative Human Oscillators) அவர்கள் வெளிப்படுவார்கள். சமுகத்திற்கு கேடான மனித அலையியற்றிகள் எல்லாம், சுயலாபத்திற்காக மன‌சாட்சியின்றி, தமது பேச்சுக்கள் மற்றும் செயல்கள் மூலம், மனித  இழிவின் எல்லைக்கே தயங்காமல் பயணிப்பார்கள். சுயலாப நோக்கற்று, இயல்பான அன்புடன் நேர்மையாக வாழ்பவர்கள் எல்லாம், அவர்களைத் தவிர்ப்பதன் மூலமே, தேவையற்ற இழப்புகளை தவிர்த்து, வாழ்வில் முன்னேற‌ முடியும் என்பதும் எனது அனுபவமாகும்.

தமிழ்நாட்டில் லாபநட்ட கணக்கில்லாமல், யாரும் யாரையும் மதிப்பது கிடையாது, என்ற சமூக வட்டத்தை விட்டு விலகி வாழும்போது மட்டுமே, இயல்பான மதிப்பையும், அன்பையும் அனுபவிக்க முடியும். அந்த இயற்கையான வாழ்வு வாழ்வது அபூர்வமான இன்பமாகும்.

மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' ஓடி, ஒழுக்கக் கேடான, சட்டவிரோத வழிகளில், பணம் ஈட்டியவர்களும், அந்த 'திறமை' இல்லாமல், அந்த 'வெற்றியாளர்களின்' அடிவருடிகள் ஆனவர்களும்;

அவ்வாறு வாழ்ந்து வருவதானது 'புத்திசாலித்தனமா?' என்ற சந்தேகமானது, அவர்கள் மத்தியில் முளை விடத் தொடங்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து'(?) திராவிட அரசியல் கொள்ளை குடும்பத்திற்கு நெருக்கமாகி, அந்த 'ஓட்டப்பந்தயத்தில்' வெற்றி பெற்றவர்களும், அவர்களின் அடிவருடிகளும், ரசிகர்களும்;

"ஆன்டன் பாலசிங்கத்திற்கு நெருக்கமாக இருந்தவர்; விடுதலைப்புலிகளை விமர்சிக்காமல் 'அட்ஜஸ்ட்'-'adjust'- பண்ணியிருந்தால், எவ்வளவு வசதியாக உயர்வான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்?  எனது மனைவி தொடர்பான, குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான‌ வழக்குகளுக்கு உதவ, தி.க தலைவர் திரு.கி.வீரமணி தாமாகவே முன்வந்த போது, அதை ஏற்று, தி.க தலைவர் வீரமணியை 'அட்ஜஸ்ட்' பண்ணியிருந்தால், எவ்வளவு வசதியாக உயர்வான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்? பிழைக்கத் தெரியாதவர்; என்றெல்லாம், எனது முதுகுக்குப் பின்னால் பேசியதையும்,  நான் அறிவேன்."
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html) அவ்வாறு, அவர்களைப் போல, நான் 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழத் தெரியாமல், நான் மீள்வதற்கே வாய்ப்பில்லாமல், 'மூழ்கி' விட்டதாகவும், 'பிரச்சாரம்' செய்திருக்கிறார்கள்.

தப்பிக்க உதவக்கூடிய,‌ எனது பார்வையில் 'அவமானமான' வழிகளை, எனது இயல்பின் காரணமாக தவிர்த்து,

நான் பண நெருக்கடியில் வாழ்ந்த காலத்தில், என்னை 'வாழ்வியல் முட்டாள்' என ஒதுக்கியதைப் பற்றிய கவலையின்றி, எனது உள்ளார்ந்த ஆய்வு ஈடுபாடுகளோடு, கீழே குறிப்பில் உள்ள‌  இன்பங்களை அனுபவித்து, நான் பயணித்து வந்தேன். "நமது வாழ்க்கை என்ற சிற்பத்தை செதுக்க, நமது துயரங்களையும் அனுமதிப்பானது, கற்றல் மனப்பான்மையின் சிறந்த பகுதியாகும்" என்று மலேசியாவில் வாழும் சைவப் புலமையாளர் பேரா.சிவக்குமார் தெரிவித்த கருத்தானது, எனது வாழ்வில் அனுபவமானது. ("Allowing the pain to sculpt the life is part and parcel of best LEARNING aptitude",  as Malaysia based Saivite scholar Dr.Sivakumar explained)  

தாழ்வு மனப்பான்மையில் பயணிக்கும் மனிதர்கள், தமது வாழ்வில் சந்திக்கும் துயரங்களை சந்திக்கும் அணுகுமுறையானது, பழிவாங்கல், கோபம் என்று தனிமனித உறவுகளிலும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், சாதி, மத, மொழி, இனம்(?) உள்ளிட்ட இன்னும் பல அடிப்படைகளில், உணர்ச்சிபூர்வ வெறுப்பை வெளிப்படுத்துதல்,  குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையும், ஒழுக்க நெறிகளையும் மனசாட்சியின்றி, 'பணம் ஈட்ட' 'காவு' கொடுத்தல், வசதியில் தமக்கும் மேலானவர்களிடம் வாலட்டி நெருக்கமாதல் என்று சமூக அளவிலும் பிரதிபலிக்கும். எனவே ஈ.வெ.ரா அவர்களின் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும், மற்றும் சுயமரியாதைக்கு கேடான‌ போக்குகள் எல்லாம், திராவிட மனநோயாளித்தனத்தின் ஊடே வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

நான் திட்டமிடாமலேயே, எனது ஆய்வுகள் ஒவ்வொன்றாக, எனக்கு பணமும், இந்தியாவிலும், உலக அளவிலும், புலமையை அடையாளம் கண்டு மதிப்பவர்களிடம் செல்வாக்கும், ஈட்டும் மூலங்களாக மாறி வருகின்றன.

இந்தியாவியேயே உயர்கல்வி துறையில் முதன் முதலாக, 'இசைத் தகவல் தொழில் நுட்பம்' (Music Information Technology) என்ற பாடத்தை, பொறியியல் மாணவர்களுக்கு, சாஸ்திரா பல்கலைக்கழகத்திலும், திருச்சி NIT- இலும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

கட்டிடத்தில் உறைந்துள்ள இசையை(frozen music) பிரித்தெடுக்கும் (decipher) ஆய்வு முயற்சியானது, கி.மு.விலிருந்து தொடங்கி, நவீன காலம் வரை, தொடர்கதையாகவே இருந்து வந்ததானது, திருச்சி NITஇல், நான் ஆய்வு ஆலோசகராக(Project Consultant)  பணியாற்றும்  R & D Project முயற்சியின் மூலமாக முடிவுக்கு வந்துள்ளது: விரைவில் உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புடன். (‘ஐந்திறம் சர்ச்சையால் ஏற்பட்ட இழப்பு’ ; 
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது ஆய்வுக் கட்டுரையானது வெளிவந்து (‘Musical Phonetics in tholkAppiam ‘- Published in the December 2013  issue of the journal from the International Institute of Tamil Studies, 
http://www.ulakaththamizh.in/journal ); 

பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாக புதிய தொழில் வியாபார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பயணிக்கிறது. 
(http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

இவை போன்று, இன்னும் சில ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களை ஒதுக்கி, அதனால் வரும் இழப்புகளையும் விரும்பி ஏற்று, இயற்கையோடு இயைந்து, எளிமையாக வாழ்வத‌ன் மூலம், நாம் திட்டமிடாமலேயே கிடைத்த பலன்கள் மேற்குறிப்பிட்டவையாகும்; அவை தவிர, கிடைக்கும் 'நம்ப முடியாத' பலன்களும் நமக்கு கிட்டும்; கேடான மனித அலையியற்றிகளை விட்டு விலகி, நாம் நல்ல மனித அலையியற்றிகளாக வாழும் போது. (Joyful Life: Do they, the inanimate, have life? ; 
http://veepandi.blogspot.com/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html) மனிதர்கள் எல்லாம் ஒரே நேரத்தில், அண்டத்தில்(Cosmos), அலையியற்றி(Oscillator)‍, பரப்பி(Transmitter,) ஏற்பியாக(Receiver) செயல்பட்டு, அவரவர் 'விழிப்புணர்வை'(Awareness) பொறுத்து, உரிய பலன்களையும், இழப்புகளையும் அனுபவிப்பதானது, எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
(http://veepandi.blogspot.com/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html)

திராவிட மனநோயாளிகளால் விளைந்த அரசியல் நீக்கத்திலிருந்து(Depoliticize), தமிழ்நாடானது திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கும் சூழலில், எனது ஆராய்ச்சிகளின் பலன்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருவதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான அறிகுறியாக, நிரூபணமானால் வியப்பில்லை. 

மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' 'வெற்றியாளராக' பயணித்து, என்னை 'வாழ்வியல் முட்டாள்' என ஒதுக்கியவர்கள் எல்லாம், என்னை திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். ஊழல் ஒழிப்பானது வலிமையாகும் போது, இழப்பையும், சிக்கலையும் சந்திக்க உள்ள‌, அவர்களின் ஆர்வமெல்லாம் எனது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்வதை விட, அவற்றின் மூலம் எனக்கு எவ்வளவு பணம் வருகிறது/இன்னும் வரும், என்பது பற்றி தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.

அந்த அளவுக்கு அது, திராவிட மன நோயாளித்தனத்தில், தமிழ்நாட்டில், புலமைக்கான சூழலில் ஏற்பட்டுள்ள‌, கடந்த கால வீழ்ச்சியின் அறிகுறியே ஆகும். 

பெரும்பாலும் சுமார் 50 வயதுக்கும் அதிகமான திராவிட மனநோயாளிகளிடமிருந்து, 'அந்நியமாகி' பயணிக்கும், இன்றைய மாணவர்களின், இளைஞர்களின், கவனத்தையும், ஆர்வத்தையும், மேலே குறிப்பிட்ட எனது ஆய்வுகளின் பலன்கள் ஈர்த்து வருவதானது, நிகழ்கால‌ புலமை மீட்சியின் அறிகுறியாகும்.

‘இசையின் இயற்பியல்(Physics of Music)’ அடிப்படையிலான‌ 'எனது ஆய்வுகள் வழியில், 'நடனத்தின் இயற்பியல்(Physics of Dancing)' ஆய்வுகளுக்காக, நன்கு 'உருவாகி' வந்த என் மகள்;

1944இல் 'திராவிடர் கழகம்' உருவான போதே, அதற்கான 'விதை' போடப்பட்டு, அதன் வளர்ச்சியிலேயே, ஈ.வெ.ரா, மற்றும் அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், அந்த சமூக செயல்நுட்ப வளர்ச்சியில் பலியானதா? என்ற ஆய்வின் ‘திருச்சி பெரியார் மையம்’ திறவுகோலாக வெளிப்பட்ட;

திராவிட மனநோயாளியாக, ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய வழிகளில், 'அபரீதமான' செல்வம் ஈட்டிய நபரை முன்மாதிரியாக(role model) கொண்டு, நான் 'வாழ்வியல் முட்டாள்த்தனமான' முறையில் குடும்பம் நடத்தியதாக கருதி;
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html) 

மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' சிக்கி, திசை திரும்பியதானது, ஈ.வெ.ரா அவர்கள் பலியான, மேலே குறிப்பிட்ட அதே சமூக செயல்நுட்பத்தில், எனக்கு ஏற்பட்ட‌ இழப்பே, என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், உலகிற்கும், 'நடனத்தின் இயற்பியல்(Physics of Dancing)' என்ற‌ ஆய்வானது சீர் குலைந்ததானது, எவ்வளவு பெரிய, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதற்கு, எனது ஆய்வுகளே சாட்சிகளா? இல்லையா? என்பதை, மனசாட்சியுள்ள தமிழர்கள் எல்லாம், அவரவர் அறிவு, அனுபவ அடிப்படைகளில் முடிவு செய்து கொள்ளலாம். ஈ.வெ.ரா உள்ளிட்டு அவர் வழியில் பயணித்து, எண்ணற்றோர் அனுபவித்த இழப்புகளிலிருந்து, தனித்துவமாக வேறுபட்ட இழப்பு இதுவாகும்.

‘சமூகத்திற்கு கேடான  'திராவிட மன நோய்க் கள்வர்களின்' ஊழல்வழி செல்வத்தில் 'மயங்கி', அவர்களை 'முன்மாதிரிகளாக'(Role Model) கருதி, மற்றவர்கள் தம்மை 'பெரிதாக' நினைக்க, அல்லது 'பொறாமைப்பட' வைக்கும், 'சாதனைகளை' 'துரத்தும்' 'வாழ்வியல் ஓட்டப்பந்தயத்தில்' சிக்கி,  வாழ்வது இழிவு என்பது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேகமாக வளர்கிறதோ, அந்த வேகத்தில் தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
  

குறிப்பு: உள்ளார்ந்த ஆய்வு ஈடுபாடுகளோடு(Passions), வாழும்போது அனுபவிக்க நேரிடும்  இன்பங்கள்:

 

“சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்ற‌வற்றிற்கு ஏங்கி வாழ்வதைத் தவிர்த்து, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இன்பங்கள், தனித்துவம் (Unique)  வாய்ந்தவையாகும்.

மரங்கள் சூழ்ந்த பகுதியில் காலை நடைப்பயிற்சி செய்யும்போது, காதில் விழும் பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து கவனிக்கும் போது, அந்த ஒலிகளில் இயற்கையாக வெளிப்படும் சந்தத்தைக் கண்டுபிடிப்பது ஒரு இன்பமாகும். இசைத் தொழில் நுட்பத்தில் அந்த ஒலிகளைப் பதிவு செய்து, சந்தத்தைப் பிரித்து, இசையாக‌ மாற்றினால் எப்படி இருக்கும் என்று மூளையைப் பயன்படுத்தி யூகிப்பதும் இன்பம். அதை செயல்படுத்தும்போது கிடைப்பதும் இன்பம்.

காற்றில் தாள இடைவெளியில் (Rhythmic)  அசைகின்ற கொடிகள், மரக்கிளைகள், இலைகள் அகியவற்றை கூர்ந்து கவனிக்கும் போது,  வெளிப்படும் நடனவகை அசைவுகளை (choreography related)  உணரும்போதும் கிடைக்கும் இன்பம் சொற்களில் அடங்காது. இவ்வாறு இயற்கையில் எழும் ஒலிகளிலும், அசைவுகளிலும் இருந்து, இசை, நடன கூறுகளை, அடையாளம் காட்டும் சங்க இலக்கிய வரிகளில் மூழ்குவதும், அரிய இன்பமாகும்.
(https://musicdrvee.blogspot.com/2020/06/how-to-live-to-identify-music-and-dance.html)

நமது சமூக வட்டத்தில் எவராவது துயரப்பட்டால், அவர்கள் நம்மிடம் உதவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்க்காமல், அவருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வாழ்வதும் ஒரு வகை இன்பமே.

தாமாகவே 'பாராட்டு, புகழ்' போன்ற வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது, சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்தாமல், அவற்றைத் தவிர்த்து வாழ்வதும் ஒரு இன்பமே ‍ - தமிழ்நாட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் 'புகழ், பாராட்டு' நோயில் சிக்காமல், புத்திசாலித்தனமாக தப்பித்த காரணத்தால்.

தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) 'அறிவுஜீவி', 'முற்போக்கு', 'புதுப்பணக்காரர்', 'பாரம்பரிய பணக்காரர்' என்று பலவகை கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.” 

என்று நான் அனுபவித்து வரும் இன்பங்கள் சிலவற்றையும் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

No comments:

Post a Comment