Friday, November 4, 2016


தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (2)


புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்


 

சங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் அணுகும் போக்கிலிருந்து, 'தமிழை' விடுவிக்கும் அறிகுறிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

 

‘தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்:ஒரு தகவல் கோட்பாட்டு அணுகு முறை’ ( The Study of Structure – Property Relationships of Tamil: An information Theory Approach) என்ற நூல் (Rs.250; Discovery Book Palaca (P)  Ltd: Ch-78; Ph::+91 8754507070) அண்மையில் வெளிவந்துள்ளது.


கல்பாக்கம் அணு மின்நிலையம் விஞ்ஞானி முனைவர் சு.சீனிவாசன் அவர்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேடே, அந்நூலாக வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தைப் போல் சம நீளக் குறியீடாக (Fixed length code) அமையாமல், தமிழ் எழுத்து வடிவம் மாறும் நீளம் கொண்ட குறியீடாக (variable length code) அமைந்திருக்கிறது. இதன் வரலாற்றுப் பின்னணியில் தரவு அமுக்கம்(data compression)  என்ற பண்பு மறைந்திருப்பதைத் தகவல் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தமிழில் மூலத்தை எழுதிய நூலாசிரியர் யார் என்று அடையாளம் காண எழுத்துறவு கணிப்பு முறையையும்(Letter correlation method), மார்க்கோவ் செயல்முறையையும் (Markov process,)  எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த ஆய்வு விளக்கியுள்ளது.

இந்நூலில் உள்ளவை தொடர்பாக, கீழ்வரும் பதிவில் கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன்.
‘தமிழின்  அடுத்த கட்ட(Next Phase) புலமை? (1)’;
    http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html

காதல், வீரம் மட்டுமின்றி, அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும், சங்க இலக்கியங்கள் இருப்பதை, அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன; என்பதையும் மேற்குறிப்பிட்ட பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

மேற்குறிப்பிட்ட தமிழ் தொடர்பான ஆய்வுகளை தமிழ் புலமையாளர்களை விட, அறிவியல் (Science) தொழில் நுட்ப (Technology) மாணவர்கள், ஆர்வத்துடன் படித்தால், விளங்கிக் கொள்ள முடியும். தமிழ்ப் புலமையாளர்களுக்கு ஆர்வமிருந்தால், முனைவர் சு.சீனிவாசன் அவர்களுடன் தொடர்பு கொண்டு, பயிற்சி பட்டறை (Work Shop)  நடத்தி, அந்த அறிவியல் துறையில் அடிப்படை அறிவு பெற்றால் தான், அவரது ஆய்வினை விளங்கிக் கொள்ள முடியும்.

அறிவியல் தொழில் நுட்ப மாணவர்களின்  அந்த ஆர்வமானது, அந்த ஆய்வுகளை புரிந்து கொள்ள,  அவை தொடர்பான‌ தமிழ் இலக்கியம் ‌ மற்றும் இலக்கணங்களை நோக்கி, அவர்களை படையெடுக்கத் தூண்டும். அந்த படையெடுப்புக்கு, தமக்குள்ள தமிழறிவு போதுமா?  என்று அவர்கள் தயங்க வேண்டியதில்லை. அந்த துணிச்சலை தூண்டவே, கீழ்வரும் கட்டுரையையும் வெளியிட்டுள்ளேன்.

பழந்தமிழ் இலக்கியங்களில், புதையலைத் தேடுவோம்.’; 
http://musicresearchlibrary.net/omeka/items/show/2444

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் மேற்குறிப்பிட்ட படையெடுப்பில் ஈடுபட வேண்டுமானால், அதன் மூலம் தங்களுக்கு நல்ல வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பதில், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விடைகள் கிடைக்க வேண்டும்.

வெறும் பேச்சும், எழுத்தும், அதிலும் 50 வயதைத் தாண்டியவர்களிடம் 'அறிவுரையாக' வெளிப்பட்டால், அதை ஏளனமாக பார்க்கும் போக்கில் தான், அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலையாகும். எனவே அவர்களுக்கு, அதை செயல் மூலம் தெரிவிக்கும் முயற்சியிலும், நான் ஈடுபட்டுள்ளேன்.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில் நான் மேற்கொண்ட ஆய்வுகளானது, இசைத் தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information technology) புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு நானே எதிர்பார்த்திராத‌ அதிசயம் நிகழ்ந்து வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘தொல்காப்பியம் மூலம் புதிய வேலை வாய்ப்பு; கணினி இசை அமைப்பாளர்(Computer Music Composer); 
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_22.html & https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (National Institute of Technology), நான் ஆய்வுத் திட்ட ஆலோசகராக உள்ள ஆய்வுகள் (Project Consultant to R & D Project involving Music & Buildig Architecture) பற்றி அறிந்து, அவர்கள் அழைத்தன் பேரில், கோவை PSG Tech- ECE Dept-இல்  இசைத் தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information Technology) உள்ள ஆய்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி, ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பட்டறை (Work Shop)  நடத்தியுள்ளேன்.

ஆய்வுப் பளு காரணமாக, அங்கு அந்த பாடத்தை அறிமுகப்படுத்துமாறு வந்துள்ள அழைப்பை செயல்படுத்த நேரம் கிட்டவில்லை. 

உலக மொழிகளில்,  (Syllabic Languages) ஒரு பாடலை ஒளிநகல்- Scan செய்து, கணினிக்கு  உள்ளீடு- input ஆக கொடுத்தால், கணினி மூலமே அந்த பாடலுக்கு இசை அமைத்து, இசையாகவும், இசைக் குறியீடாகவும், output- வெளியீடு கிடைக்கும் ஆய்வினையும் தொடங்கியுள்ளேன்; தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்’ (Musical Linguistics; http://musictholkappiam.blogspot.in/ ) என்ற புதிய‌ ஆய்வுத்துறையையும் கண்டு பிடித்து.

அந்த ஆய்வுக்கு முதலில் குறிப்பிட்ட, 'தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாட்டு அணுகு முறைஎன்ற நூலாக வெளிவந்துள்ள ஆய்வும், மிகவும் பயன்படக்கூடியது ஆகும்.

இது போன்ற புதிய பாடங்களிலும், ஆய்வுகளிலும், ஒப்பீட்டளவில், ஆந்திரா, கர்நாடக, வட மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் எனது அனுபவமாகும்.

எனவே சாதனையாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக காரணமான‌, சமூகத்தின் உயிரோட்டமான, 'உள்ளார்ந்த ஈடுபாடு'  (Passion) என்பது; தமிழர்களிடையே 'வற்றி' வருகிறதா? என்ற ஆய்விலும் நான் ஈடுபட்டு வருகிறேன். (‘நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் (Isadora Dunken ) வழியில்; பிரபு தேவாவும், ராகவா லாரன்சும் மீட்பார்களா?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html ) 

குழந்தைகளிடம் 'உள்ளார்ந்த ஈடுபாடு' வளர, பெற்றோர்கள் எவ்வாறு பங்களிப்பு வழங்க முடியும்? என்று வழிகாட்டும் கட்டுரை கீழே: 

(‘Every child needs this list of 7Cs to survive the future.  Because these are the seeds of genius that can create leaders in every field.’; http://www.straitstimes.com/opinion/7cs-to-survive-an-anti-jobs-future )

No comments:

Post a Comment