Tuesday, November 1, 2016

நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் (Isadora Dunken ) வழியில்; 

 

பிரபு தேவாவும், ராகவா லாரன்சும் மீட்பார்களா?



தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், வளர்ந்து வரும் சமூக விசைகள் (Social Forces) யாவை? தேய்ந்து வரும் சமூக  விசைகள் யாவை? என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வளர்ந்து வரும், மற்றும் தேய்ந்து வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை ஆராய்வது பலன் தரும்.

அந்த 'சாவியை' (Key), பழந்தமிழ் இலக்கியமான 'நாலடியார்', கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

"பணிவு இல் சீர்
 மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
 கோத்திரம் கூறப்படும். "
  நாலடியார் 25:2
( ‘The history of a city and the history of music of the city are intertwined’; http://musicdrvee.blogspot.com/2012/08/history-of-city-and-history-ofmusic.html )

மேற்குறிப்பிட்ட பதிவானது, இசையானது எவ்வாறு ஒரு ஊரின் 'யோக்கியதையை' கண்டுபிடிக்க துணை புரியும்? என்று விள‌க்கியுள்ளது.

அது போல, இன்று தமிழ்நாட்டில் குழந்தைகள் உள்ளிட்டு, இளைஞர்கள், மற்றும் மாணவர்களை ஈர்த்து வரும் நவீன நடனத்தை பற்றி பார்ப்போம்.

மேற்கத்திய உலகில் 'மைக்கில் ஜாக்சன்' பிரபலமாகி, அதன் தொடர்விளைவாக, தமிழில் திரைப்பட நடனத்தில் பிரமிக்க வைக்கும் அங்க அசைவுகளை அரங்கேற்றிய பெருமை பிரபு தேவாவைச் சேரும். (‘I was speechless when I finally met my inspiration’- Prabhu Deva; http://www.deccanchronicle.com/entertainment/kollywood/080416/prabhu-deva-s-fanboy-moments-with-michael-jackson.html )

மைக்கில் ஜாக்சானோ, அமெரிக்காவில் நவீன நடனத்திற்கு புகழ்பெற்ற, மார்த்தா கிரகாம் (Martha Graham; https://en.wikipedia.org/wiki/Martha_Graham ) என்பவரின் நடனத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தவர் ஆவார். (‘The angularity and Jackson's feet - in a position known to dancers as forced arch - could be from an early work by modern dance pioneer Martha Graham, but Jackson imbues the move with a smooth sensuality that owes more to Broadway choreographer Bob Fosse.’; http://www.nydailynews.com/entertainment/michael-jackson-dancer-moved-measure-gifts-jackson-dance-genius-article-1.373191  & https://www.reddit.com/r/videos/comments/2lyokp/the_source_for_most_of_michael_jacksons_dance/ )

மார்த்தா கிரகாம் வளர்த்த நவீன நடனமானது, இசாடோரா டுன்கன்(Isadora Dunken; https://en.wikipedia.org/wiki/Isadora_Duncan ) தோற்றுவித்த நவீன நடனத்திலிருந்து, வளர்க்கப்பட்டதாகும். (‘Much more important, though, was the ground she opened up for other dance pioneers. Martha Graham's stark, serious modernism may have evolved far beyond Duncan's rhapsodies.’; https://www.theguardian.com/stage/2004/feb/21/dance.art )

எனவே நவீன நடனத்தின் 'பிதா மகள்' என்ற பெருமையானது, இசாடொரா டுன்கன்னையேச் சாரும்.

தொன்மை கிரேக்க மூலங்களிலிருந்தும், சமூகத்திலிருந்தும், இயற்கையிலிருந்தும், தான், இசாடோரா டுன்கன் நவீன நடனத்தை உருவாக்கியுள்ளார். (‘She developed within this notion free and natural movements inspired by the classical Greek arts, folk dances, social dances, nature and natural forces as well as an approach to the new American athleticism which included skipping, running, jumping, leaping and tossing.’; https://en.wikipedia.org/wiki/Isadora_Duncan#Philosophy_and_technique )

அவ்வாறு நவீன நடனத்தை அவர் உருவாக்க, தமது வாழ்வில் சந்தித்த துயரங்களும், அவமானங்களும், இழப்புகளும் பற்றிய கட்டுரைகளும், அவரது சுயசரிதையும், படிப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடியவையாகும். பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடன இயக்குநர்களின் பார்வைக்கு, அது சென்றாக வேண்டும். 

சாதனையாளர்களுக்கான 'வாழ்வியல் இலக்கணத்தை', ‘தொத்து நோயாக’, சாதாரண மனிதர்கள் பின்பற்றினால், சமூகத்தில் சீர்குலைவு ஏற்படும் என்பதையும் இசாடொரா டுன்கன் சுட்டிக்காட்டியுள்ளார். (I suppose this must be so, or who would supply us with the thousands of shop and bank clerks, etc., who seem to be necessary for organised civilised life.” - ‘My Life’ Isadora Dunken ) மேற்கத்திய உலகில் இசாடொரா டுன்கன் போன்ற பெண் சாதனையாளர்கள் சந்தித்த தடைகளின்றி, தொன்மை இந்தியாவில் பெண் புலமையாள‌ர்கள் இருந்த, நெகிழ்வுத் தன்மையிலான சமூக அமைப்பு இருந்ததை, பழந்தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் உணர்த்தியுள்ளன.

'சமூக ஒப்பீடு' (Social Comparison) நோயில் சிக்கி, 'வறட்டு கெளரவத்தில்' மூழ்கி, கலை உணர்வின்றி (Art Sense) வாழும் பணக்காரர்கள் பற்றி, கீழ்வரும் வரிகளில், இசாடொரா டுன்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“These people seemed so enwrapped in snobbishness and the glory of being rich that they had no art sense whatever.”-Isadora Duncan; http://www.azquotes.com/quote/450041 

தமிழ்நாட்டில் இன்று, குறிப்பாக 'புது பணக்காரர்களில்', எத்தனை பேருக்கு 'கலை உணர்வு' (art sense) இருக்கிறது? அரசியலை, 'பொதுவாழ்வு வியாபாரமாக்கி'யதன் விளைவாக, தமிழ்நாட்டில் கலைகள் எல்லாம், சமூகத்திற்கு கேடான திசையில், சரியான 'கலை உணர்வு' என்ற மாலுமியின்றி, வெறும் பொழுது போக்காக, பாலியல் வக்கிர வன்முறை உணர்வுகளின்  'தீனியாக'  சீரழிந்து வருகிறதா? 'கலை உணர்வு' வறண்டதால், 'ரச‌னையும்', 'மதிப்பும்' (Value), 'எந்த வழியிலும்', பணம் ஈட்டும் திறமைகளை நோக்கி குவிந்ததா? மேற்கத்திய பொருளில் 'இனம்' மற்றும் 'சாதி' திரிந்து, விளைந்த அடையாளச் சிதைவானது, 'ரசனையும்', 'மதிப்பும்', சீரழிய, எந்த அளவுக்கு பங்களித்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இன்று தமிழ்நாட்டில் மாணவர்களும், இளைஞர்களும்;


இசாடோரா டுன்கண் தோற்றுவித்த போக்கிலிருந்து தடம் மாறிய,‌ நவீன நடன மோகத்தில் ஈர்க்கப்பட்டுள்ள போக்கிற்கும், பொழுது போக்கையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட போக்கில், அவர்களில் பலர்,  வன்முறை, திருட்டு, கொலை, தற்கொலை போன்ற நோய்களில், சீரழியும் போக்கிற்கும், தொடர்பு உண்டா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இவற்றின் தொகுவிளைவாக, இசாடோரா டுன்கண் போன்ற சாதனையாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக காரணமான‌, சமூகத்தின் உயிரோட்டமான, 'உள்ளார்ந்த ஈடுபாடு'  (Passion) என்பது;

தமிழர்களிடையே 'வற்றி' வருவதானது, திரும்பவும் மீட்க அரிதான (irreversible) இழப்பாகும். 'புதுப் பணக்கார பெரியார் சமூக கிருமிகள்' மூலமாக, எனது குடும்பத்திலேயே அதை நான் சந்தித்ததும், எனக்கும், தமிழ்நாட்டிற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். (குறிப்பு கீழே) 

ஒரு சமூகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதைப் பற்றி வளரும் ஈடுபாடுகளை(interests) அடையாளம் கண்டு, அவற்றை பிரதிபலித்து அவர்கள் மனதில் இடம் பெற்ற, பொதுக் கருத்துருவாக்க வலிமையாளர்கள் (Opinion Leaders), சுயநல நோக்கிலோ அல்லது பொதுநல நோக்கிலோ,  செல்வாக்கு செலுத்துவதன் மூலமே, சமூகத்தில் மாற்றங்களை ( நல்ல திசையிலோ அல்லது தீய திசையிலோ) ஏற்படுத்த முடியும். இந்த சமூக செயல் சூட்சமத்தில் (Social Strategy Technique), ஈ.வெ.ரா அவர்கள், அண்ணாவிடம் தோற்றதன் பலன்களைத் தான், தமிழ்நாடு இன்று 'அனுபவித்துக் கொண்டு' இருக்கிறது. எனக்கும், தமிழ்நாட்டிற்கும், ஏற்பட்ட‌ மேற்குறிப்பிட்ட ஈடு செய்ய முடியாத இழப்புக்கு காரணமும் அதுவேயாகும். 

இன்று இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் 'அதிவேகமாக' பரவி வரும் அந்த, தவறாக தடம் புரண்டுள்ள நவீன நடன‌ மோகத்தை, சமூக பொறுப்புடன் நெறிப்படுத்த வேண்டிய சமூக கடமையை, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட இன்னும் பல‌ முன்னணி நடன இயக்குநர்கள் தான் நிறைவேற்ற முடியும்.

இசாடோரா டுன்கன், நவீன நடனத்தை, 'அங்க அசைவுகளை ஊடகமாகக் கொண்டு, மனித உயிர்ப்பின் இறைமை வெளிப்பாடு' என்ற நோக்கில் தோற்றுவித்தார். (‘the divine expression of the human spirit through the medium of the body's movement’) ஆனால் இன்று நவீன நடனமானது, எந்த அளவுக்கு அந்த நோக்கிலிருந்து தடம் புரண்டு, சமூகத்திலிருந்தும், இயற்கையிலிருந்தும், விலகி, பயணிக்கிறது? என்பது ஆய்விற்குரியதாகும்.

சமூகத்திலிருந்தும்,  இயற்கையிலிருந்தும் , இசாடோரா டுன்கன் நவீன நடனத்தை தாமாகவே உருவாக்கியதாக தான், எனது தேடலில் வெளிப்பட்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில் இருந்து,  அவர் அதற்கான குறிப்புகளை பெற்றதாக தெரியவில்லை.

ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில் சமுகம் மற்றும் இயற்கை ஆகியவற்றை ஊற்றுக்கண்களாகக் கொண்டே,  இசையும்  நடனமும் வளர்ந்தது என்பது தொடர்பாக பல சான்றுகள் உள்ளன. உதாரணமாக; (From:https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336)

“ oru thiRam, pAdal nhal viRaliyar olkupu nhudangka,
´ ஒரு திறம்,பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, ¸
(இசைக்கு பொருத்தமான நடனக் கலைஞர்களின் அசைவுகள் ஒரு புறம்; one side, movement arose from dancers matching the music)

oru thiRam, vAdai uLarvayin pUng kodi nudangka,
 ஒரு திறம்,வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க, ¸
(குளிர் காற்றில் பூக்களுடன் உள்ள தண்டுகளின் அசைவுகள் நடனமாக ஒரு புறம்; one side, movement similar to the dancer arose from stem with flowers subjected to cold wind)”
-          பரிபாடல்- paripAtal -  17

(‘‘Smiling’ dancing branches with leaves in trees’; 
http://veepandi.blogspot.com/2012/12/normal-0-false-false-false_23.html ) 

மேற்கத்திய சமூக இறுக்கத்திற்கு எதிராக உருவான மனித உரிமை, பெண்ணுரிமை  தொடர்பான, மேற்கத்திய குறிப்பாய (Western Paradigm) மன அடிமைகளாக, தமிழ்நாட்டில் வலம் வரும் பெண்ணுரிமை, மனித உரிமை தலைவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களை, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் அணுகினால், 'விடுதலை' பெற வாய்ப்பிருக்கிறது; சாதனையாளர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையிலான வாழ்வியல் வேறுபாடுகள் தொடர்பாக, இசாடொரா டுன்கன்னுக்கு இருந்த தெளிவுடன், அவர்கள் பயணித்தால்.

தமிழ்நாட்டில் இன்று (காலனிய சூழ்ச்சியில் அறிமுகமான) செவ்வியல்(Classical), நாட்டுப்புறம்(Folk)  என்ற மேற்கத்திய மூல பிரிவுகளின் அடிப்படைகளில்,  வலம் வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகள் எல்லாம், காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில், அது போன்ற பிரிவுகள் இன்றி, எவ்வாறு நிகழ்த்தப்பட்டன? என்பதும் ஆய்விற்குரியதாகும். மேற்கத்திய உலகில், அந்த பிரிவுகளை சீர் குலைத்து, இசாடொரா டுன்கன் 'கடும் விலை' கொடுத்து, 'புரட்சியாக' உருவான 'நவீன நடனமானது', காலனியத்திற்குப் பின், தமிழ்நாட்டில், எவ்வாறு, வெறும் பொழுது போக்காக, திரிந்து, அறிமுகமானது? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.

இசாடொரா டுன்கண் தோற்றுவித்த நவீன நடனமானது,  தற்போது எந்த அளவுக்கு தடம் புரண்டு, சமூகத்திற்கும், இயற்கைக்கும் கேடாக பயணிக்கிறது? அந்த தவறான பயணத்திலிருந்து, குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும்,  நவீன நடனத்தின் மூலமாகவே மீட்கும் வழிமுறைகளை கண்டுபிடிக்க, பழந்தமிழ் இலக்கியங்கள் எந்த அளவுக்கு துணை புரியும்? என்ற ஆய்வைத் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது, என்பதும் என் கருத்தாகும். பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட இன்னும் பல‌ முன்னணி நடன இயக்குநர்கள் அதில் கவனம் செலுத்தினால், மீட்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

தமிழ்நாட்டில் அந்த முயற்சி வெற்றி பெறுமானால், இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் தடம் புரண்டுள்ள  நவீன நடனத்தை, சமூகத்திற்கும், இயற்கைக்கும் கேடான 'சமூக மனப்பாங்கை' (Social Psychology), நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் வழியில் ('அங்க அசைவுகளை ஊடகமாகக் கொண்டு, மனித உயிர்ப்பின்,  இறைமை வெளிப்பாடு') மீட்டு, ஆக்கபூர்வமாக திசை திருப்ப முடியும். 

குறிப்பு 1: தமிழ்நாட்டில் 'உள்ளார்ந்த ஈடுபாடு'களை(Passions) சிதைக்கும் 'பெரியார் சமூக கிருமிகள்' ?

“ஒருவரின் சொந்த வாழ்வு, குடும்ப வாழ்வு, அவர் வாழும் சமூகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புடையது என்பது பற்றியும், அந்த சமூக பிணைப்பில் 'குடும்ப மதிப்பீடுகள்' வகிக்கும் முக்கிய பங்கு பற்றியும், கீழ்வரும் இணைய தளத்தில், எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

https://prezi.com/2jsow7toikpm/how-changes-in-the-society-affects-the-family-values/

குடும்ப மதிப்பீடுகளை சீர்குலைக்கும் அளவுக்கு, சமூக நச்சுக் கிருமிகள்,  'பெரியார்' முகமூடியில் வலம் வருகிறர்களா?

மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பத்தில், எனது தொடக்க கால ஆய்வு உதவியாளர்களாக பங்களிப்பு வழங்கிய எனது மனைவியும், கூடுதலாக எனது ஆய்வுகள் வழியில் 'நடனத்தின் இயற்பியல்(Physics of Dancing)' ஆய்வுகளுக்காக நன்கு 'உருவாகி' வந்த என் மகளும், எப்போது, எப்படி 'திசை திரும்பி', 'பெரியார்' போர்வையில் ஒழுக்கக்கேடான, (ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய) வழிகளில் 'அபரீதமான' செல்வம் ஈட்டிய நபரை முன்மாதிரியாக(role model) கொண்டு, நான் 'வாழ்வியல் முட்டாள்த்தனமான' முறையில் குடும்பம் நடத்தியதாக கருதி, என்னை வெறுக்கத் தொடங்கினார்கள்?”; (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'வாழ்வியல் புத்திசாலித்தனம்(?)' என்று நினைத்து, சமூகத்திற்கு கேடான திசையில், தமிழர்களில் பலர் பயணிக்க காரணமான நோயை, வெற்றி கொள்ள, அந்த கேள்விக்கான விடை துணை புரியும்.

குறிப்பு 2: " When I hear fathers of families saying they are working to leave a lot of money for their children, I wonder if they realize that by so doing they are taking all the spirit of adventure from the lives of those children. For every dollar they leave them makes them so much the weaker. The finest inheritance you can give to a child is to allow it to make its own way, completely on its own feet. Our teaching led my sister and me into the richest houses in San Francisco. I did not envy these rich children; on the contrary, I pitied them. I was amazed at the smallness and stupidity of their lives, and, in comparison to these children of millionaires, I seemed to be a thousand times richer in everything that made life worthwhile.” – ‘My Life’ Isadora Dunken  (Bold Mine)

No comments:

Post a Comment