Tuesday, May 8, 2018


தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’ (Macro-world (5)

 

'புரட்சி'(?) சமூக செயல்நுட்பம் மூலம் சீரழிந்ததமிழ்நாட்டை, எவ்வாறு மீட்பது?



‘தமக்கு வேண்டிய மனிதர்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், சமுக நீதி கோரும் இரட்டை வேடப் போக்குகளின் காலமும் டிஜிட்டல் யுகத்தில் முடிவை நெருங்கி விட்டது. பாரபட்சமற்ற அறிவுபூர்வ விமர்சனங்களுக்கே மாணவர்கள் மத்தியிலும், படித்த இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.’ 
(http://tamilsdirection.blogspot.sg/2018/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

அகத்தில் சீரழிந்தவர்கள் மட்டுமே, அவ்வாறு 'தமக்கு பிடித்தவர்களுக்கு ஒரு நீதி; பிடிக்காதவர்களுக்கு வேறு (அ)நீதி' என்று பயணிக்க முடியும். அத்தகைய அகச்சீரழிவு போக்கில், இளைமைகாலத்தில் 'புரட்சி, பொதுவுடமை, பகுத்தறிவு' என்று போராடியவர்களில் பலர், இன்று பொதுவாழ்வு வியாபாரிகளாகவும், பலவகை தரகர்களாகவும் 'வளமாகி' வருவதுடன், அவர்களில் 'அதிபுத்திசாலிகள்' எல்லாம், இன்று தமிழ்நாட்டில் 'மனித உரிமை, பார்ப்பன‌ எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு' போராளித்தலைவர்களுடன் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் 'நல்லுறவில்' பயணித்து உருவாக்கிய சமூக சூழலில் தான்;

நிர்மலாதேவி போன்ற‌ ‘இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடம்' சிக்கி, இன்று தமிழ்நாடு அந்த பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறும் போக்கில் உள்ளது; 
(http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html   )

சென்னை வெள்ள நிவாரண‌ம் முதல் அண்மையில் வெளிப்பட்ட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் துயர் நீக்கம் வரை, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட 'சாமான்ய' தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், ஆக்கபூர்வசெயல்கள் மூலம் வலிமையாக வெளிப்படுத்திவரும் 'சிக்னல்கள்' அதை உறுதிப்படுத்தி வருகின்றன.

அந்த 'சிக்னல்களை' அறியும் 'கண்ணோட்டம்' இன்றி (திருக்குறள் 573), தமது குடும்பத்தை நன்கு செட்டில் செய்து கொண்டு, ஊரான் வீட்டுப்பிள்ளைகளை உணர்ச்சிபூர்வமாக தூண்டி, தமிழ்நாட்டை மேலும் சீர்குலைக்கும் போராட்ட முயற்சிகள் எல்லாம், சமூக சருகாகி உதிரும் காலமும் அதிக தொலைவில் இல்லை.

நீட் தேர்வு தொடர்பாக, மோடியையும், மத்திய அரசையும் உணர்ச்சிபூர்வமாக புழுதி வாரி தூற்றியவர்களில் யார், யார்? அந்த தேர்வு மாணவர்களுக்கு உதவி செய்தார்கள்? விளம்பரமின்றி, தன்னிச்சையாக ஆக்கபூர்வமாக உதவிகள் புரிந்தவர்கள் யார், யார்? (நீட் தேர்வு.. மறக்கப்படும் மறுபக்க நிஜங்கள்!; http://tamil.thehindu.com/opinion/reporter-page/article23798839.ece  )

‘தமிழ்நாட்டில் 170 மையங்களில், 107288 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். திருநெல்வேலி, மதுரை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த 3685 மாணவர்களுக்கு, சென்னையை விட அருகில் உள்ள எர்ணாகுளம் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். தமிழில் நீட் தேர்வு எழுத விரும்பிய 24,720 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே எழுத அனுமதிக்கப்பட்டனர். கர்நாடகம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருடம் தமிழ்நாட்டில் 149 ஆக இருந்த தேர்வுமையங்கள், இந்து வருடம் 170 ஆக உயர்ந்துள்ளது. வரும் வருடங்களில் தேவைக்கேற்ப உயர்த்தப்பட்டு, இந்த வருடத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்படும்.’  (HRD ministry issues clarification on NEET centre controversy in Tamil Nadu ; 
http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/may/05/hrd-ministry-issues-clarification-on-neet-centre-controversy-in-tamil-nadu-1810656.html )

முகநூலில் நீட் தேர்வு தொடர்பான மேலே குறிப்பிட்ட உண்மை நிலவரங்களை விளக்கிய பதிவில் வெளிப்பட்ட கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

"நமது கவனம் எல்லாம் பிரச்சனைகள் தீர்வுகள் அதற்கான சரியான அணுகுமுறைகள் பற்றியதில் இல்லை! 

எல்லா பிரச்சினைகளையும் அரசியல் நோக்கில் அதுவும் ஏற்கனவே முடிவு செய்து கொண்டு விட்ட காழ்ப்புணர்ச்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது நமது தனி அடையாள நோய் ஆகி இருக்கிறது!


நீட் தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடிகளில், நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அதை உறுதி செய்து இருக்கிறது!!!

தலைவர்களின் வழிபாட்டுப் போதைகளில் இருந்து விடுபட்டு, பாரபட்சமற்ற அறிவு நேர்மையுடன் 'சமூக எக்ஸ்ரே' (Social X-Ray) போல செயல்பட்டு, சமூக நோய்களுக்கான காரணங்களை கண்டுபிடித்து முன்னேற வேண்டிய வழிமுறையில் தான், தமிழ்நாட்டின் மீட்சி அடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காலனி மனநோயுடன், ‘தமிழ் - தாய்மொழி அடிப்படையிலான அடையாள இழப்பு’ நோய்க்கு (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)  காரணமான‌ திராவிட மனநோயும் சேர்ந்த சமூக செயல்நுட்பத்தின்
(http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) தொகுவிளைவாகவே(Resultant);

எல்லா பிரச்சினைகளையும் அரசியல் நோக்கில், அதுவும் ஏற்கனவே முடிவு செய்து கொண்டு விட்ட காழ்ப்புணர்ச்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது என்பதான‌ நமது தனி அடையாள நோய் அரங்கேறியதா? என்ற ஆய்வுக்கான நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.
 

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டுவது அரிது. தகர்ப்பது எளிது. அது போல சமூகத்தில் ஆக்கபூர்வமாக எதையும் உருவாக்குவது அரிது. 'முற்போக்கு, புரட்சி'  என்ற பெயரில் அதனை சீர்குலைப்பது எளிது; என்பதற்கு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்து, வி..சுப்பிரமணியத்தை துணைவேந்தராக நியமித்து, ஊழலுக்கு இடமின்றி தமிழ் பாரம்பரியத்தை முன் நிறுத்தி, கணபதி ஸ்தபதி மேற்பார்வையில் கட்டப்பட்டு உருவான 'தமிழ்ப்பல்கலைகழகமானது', எந்த போராட்ட வழிமுறைகளில் சீர்குலைவுக்கு உள்ளானது? அந்த போராட்டங்களில் முன்னுக்கு நின்றவர்களில் எவராவது, அந்த சீர்குலைவினைப் பற்றி கவலைப்பட்டு, அதனை மீண்டும் சீரமைக்க மெனக்கெட்டார்களா? அது போன்ற சீர்குலைவுகளின் விளைவுகளை தமிழ்நாடு தொடர்ந்து அனுபவித்தாக வேண்டுமா? சீர்குலைத்த தலைவர்கள், அந்த பாதிப்புகளில் பங்கேற்காமல், அடுத்தடுத்த 'புரட்சி' சீர்குலைவுகளை தூண்டி, வசதி வாய்ப்புகளில் வளர்வது என்ற போக்கிலிருந்து, தமிழ்நாடு விடுதலையாகாமல் மீள முடியுமா?

மைக்ரோ உலகத்தில் உள்ள 'தனிநபர் நம்பிக்கை'யானது (personal trust), எவ்வாறு மேக்ரோ உலகத்தில் 'சமூக நம்பிக்கையாக'(Social Trust) சரியான திசையில் பயணித்து சமூகத்தை வளர்க்கும்? என்ற வினாவிற்கு, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பிரமிப்பூட்டும் விடைகளை கீழ்வரும் நூல் தந்துள்ளது.
Making Democracy Work: Civic Traditions in Modern Italy (ISBN 978-0-691-07889-2) is a 1993 book written by Robert D. Putnam  

(https://en.wikipedia.org/wiki/Making_Democracy_Work)

நாம் பிறந்த, வாழ்ந்த/வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், எந்த அளவுக்கு நேர்மையையும், சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையையும் செயல்பூர்வமாக‌  வெளிப்படுத்தி வாழ்கிறோமோ, அந்த அளவுக்கே, 'தனிநபர் நம்பிக்கை'யை நாம் ஈட்ட முடியும்.

'தனிநபர் நம்பிக்கையை' மைக்ரோ உலகத்தில் இழந்து, மீடியா வெளிச்சத்தில் மேக்ரோ உலகில் போலியான 'சமூக நம்பிக்கை'யுடன் வாழ்பவர்களை, மேய்ப்பர்களாக கருதி பயணிக்கும் 'மனித ஆடுகளும்' இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக, மேலே குறிப்பிட்ட அறிவுபூர்வ முறையிலான‌ ஆய்வுகள் வெளிப்படுத்தினால் வியப்பில்லை.  
(http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) 

தமது அறிவுவரை எல்லைகள்(Intellectual limitations) பற்றிய புரிதலின்றி, காலனி சூழ்ச்சியில் உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயில் சிக்கி, வேறு எந்த தலைவரும் ஈட்டியிராத 'அதீத சமூக நம்பிக்கையுடன்', ஈ.வெ.ரா அவர்கள் பயணித்தன் விளைவாகவே; 

தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் அவ்வாறு போலியான 'சமூக நம்பிக்கை'யுடன் வாழக்கூடிய சாத்தியமானது, 1944க்குப் பின் தான் அரங்கேறியது என்பதும், எனது ஆய்வு முடிவாகும்.
தகுதிக்கு மேல் 'குறுக்கு வழியில்' கட்சியிலும்/அரசிலும் உயர்பதவிகள் பெற்றவர்கள் என்று தெரிந்தும், அத்தகையோருக்கு நெருக்கமாகி, காரியம் சாதித்துக் கொண்டே;

தமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம், அவர்களைப் பற்றி கேலி பேசும் 'புரட்சி மேய்ப்பர்'(?) சமூக செயல்நுட்பமும், அந்த போக்கிலேயே அரங்கேறியது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.


அவ்வாறு 'தனிநபர் நம்பிக்கையை' மைக்ரோ உலகத்தில் இழந்து, போலியான 'சமூக நம்பிக்கை'யுடன் வாழக்கூடிய 'மேய்ப்பர்' சாத்தியமானது வளர்ந்த போக்கில், ‘சமூக ஆற்றல் ரத்த ஓட்டமானது’, அந்த சமூக நோயில் சிக்கி, ‘சமூக இழைகளும், சமூக பிணைப்புகளும்’, 'சுயலாப கள்வர் நோயில்' சிக்கி வளர்ந்த வேகத்தில்; 
(http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து உச்சமாகி, இன்று மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, திருட்டு, (மது/போதை மாத்திரை, சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில் பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம் அதிகரித்துள்ள விளைவில் முடிந்துள்ளது. 

வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய லாப நட்ட கணக்கை எல்லாம், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட மனித உறவுகளில் 'நுழைத்து', ஆனால் அம்பலமாகாமல் வளரும் திறமையைப் பொறுத்தே, 'அந்த மேய்ப்பர்களின்' வளர்ச்சி(?) இருந்து; இப்போது சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது.

கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையைப் படித்த பின்,
 
அன்னி பெசண்ட் அம்மையாரையும், 'தியோசொபிகல் சொசைட்டியையும்' (Theosophical Society; https://en.wikipedia.org/wiki/Theosophical_Society_Adyar ) கண்டித்து 'குடிஅரசில்' வெளிவந்த கட்டுரைகள் நினைவிற்கு வந்தன. சென்னையிலும் குப்பத்து மக்களின் கல்விக்கு அவர்கள் ஆற்றிய தொண்டினை, அடையாரில் உள்ள அந்த அமைப்பின் நூலகத்திற்கு சென்றபோது அறிந்து வியந்தேன்.

நல்லவைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்காமல், தீயவைகளை மட்டுமே குவியமாக்கி, உணர்ச்சிபூர்வ சுனாமியை உருவாக்கி, நல்லவைகளையும் சேர்த்து அழித்து, தரகர்கள், திருடர்கள் பிடியில் தமிழ்நாடு சிக்கியதே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்திற்கு காரணமானதா? என்ற விவாதத்தை தவிர்க்க முடியுமா?

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நானறிந்தகிராமத்தில் இருந்து சிலர், நூல் நூற்கும் பெரிய தொழிற்சாலையான‌ 'காவேரி மில்'லில், தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்து, அந்த கிராமத்தில் பலர் ஏங்கும் அளவிற்கு நல்ல மாத ஊதியத்துடன் வளமாக வாழ்ந்தார்கள்; இன்று வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளில் கட்டிட வேலை, கழிவறை சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளில் தினமும் பெரும்பாலும் 12 மணிநேரம் வேலை பார்த்து, அதில் சிக்கனமாக வாழ்ந்து, கிராமத்தில் உள்ள தமது குடும்பத்திற்கு பணம் அனுப்பி, வருடத்தில் சில வாரங்கள் மட்டுமே விடுமுறையில் தமது கிராமத்திற்கு வந்து, 'அனுபவிக்கும் அதீத மரியாதையை', அந்த காலத்தில் அந்த மில் ஊழியர்கள் தத்தம் கிராமங்களில் வருடம் முழுவதும் அனுபவித்தார்கள்; பெரும்பாலும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்திற்கு சந்தா கொடுத்து, ஆதரவாளர்களாகவும் பயணித்தார்கள். அதற்கு பிரதிபலனாக, தமது சுயலாப கட்சி அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களினால், அந்த மில் மூடப்பட்டு, இன்று 'அந்த  மில் ஊழியர்கள்' குடும்பத்தினரில் பெரும்பாலோர் கூலிகளாகவும், சிறு விவசாயிகளாகவும் அந்தந்த கிராமங்களில் வாழ்கின்றனர்; விதி விலக்காக நன்கு படித்து வெளியூரில் வேலை/வியாபாரம் செய்து ஓரளவு வசதியான குடும்பங்களைத் தவிர்த்து.

அண்மையில் புதுக்கோட்டையில் வாழும் சுமார் 78 வயதுடைய எனது நண்பரை சந்தித்த போது, அவர் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தார்.

இந்தியா விடுதலையானபோதும், தனி அரசாக இருந்த புதுக்கோட்டையில் காவேரி மில்லைப் போல, இன்னும் நான்கு பெரிய ஆலைகள் செயல்பட்டதாகவும், இந்தியாவுடன் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைந்து, அந்த 'சுதந்திரத்தில்', கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்ச்சங்க போராட்டங்களின் காரணமாக, அது போன்ற பெரிய ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு, கோயம்புத்தூர் போன்ற இன்னொரு தொழில்நகரமாக புதுக்கோட்டை 'வளர்ந்திருக்கும்' வாய்ப்பும் கெட்டுப்போனது, என்று வருத்தத்துடன் கூறினார். (https://en.wikipedia.org/wiki/Pudukkottai_State  )

மேலே குறிப்பிட்ட பின்னணியில், சில வருடங்களுக்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உமாநாத்தின் மறைவு செய்தியானது எனது கவனத்தை ஈர்த்தது. புதுக்கோட்டையின் மேலே குறிப்பிட்ட வீழ்ச்சிக்கான தொழிற்ச்சங்க தலைவர்களில் அவருக்கு முக்கிய இடம் உண்டு

கேரளாவில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து, படித்து, கம்யூனிஸ்ட் ஆகி, புதுக்கோட்டைக்கு 'கட்சியின் தொழிற்ச்சங்கப்பணி ஆற்ற வந்த போது, அவருக்கு இருந்த வசதி வாய்ப்புகளை எல்லாம், சாகும்போது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இருந்த வசதி வாய்ப்புகளுடன் ஒப்பிட்டு;

புதுக்கோட்டையில் எல்லா ஆலைகளும் செயல்பட்ட காலத்தில் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் கிராமங்களில் எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் இருந்து, பின் ஆலைகள் மூடப்பட்டப்பின் அந்த வசதி வாய்ப்புகளில் இழந்தார்கள்? என்பதையும் ஒப்பிட்டு;

1962 மற்றும் 1967 தேர்தல்களில் வென்று புதுக்கோட்டை எம்.பியாக இருந்தவர், பின் ஏன் புதுக்கோட்டையை கைகழுவி விட்டு, 1977 மற்றும் 1980 தேர்தல்களில் நாகப்பட்டினம் எம்.பியாக இருந்தார்
(https://en.wikipedia.org/wiki/R._Umanath )

சில வருடங்களுக்கு முன் அவர் மறைந்த போது, புதுக்கோட்டை தொகுதி மக்களில் எத்தனை பேர் வருத்தப்பட்டார்கள்? எத்தனை இரங்கல் நிகழ்ச்சிகள் நடந்தன? இன்று புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையானது 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன கதையாகி விட்டதா?

1998-  2000 இரண்டே வருடங்கள் மட்டும் திருச்சி (பா..) எம்.பியாக இருந்த ரெங்கராஜன் குமாரமங்கலம் மறைந்த போது, திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களில் பெரும்பாலோர் சோகத்தில் மூழ்கும் அளவுக்கு, தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? என்னென்ன உதவிகள் கிராம மக்களுக்கு புரிந்தார்? கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரின் மனைவியை பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தியிருந்தால், நிச்சயம் வென்றிருப்பார், என்று கட்சி சார்பில்லாத பணி ஒய்வு பெற்ற பேராசிரியர் என்னிடம் தெரிவித்தார். அந்த அளவுக்கு அவர் மறைந்து பல வருடங்கள் கழித்தும், அவருக்கு திருச்சி தொகுதியில் செல்வாக்கு நீடித்து வருகிறதா? (‘he was one of that rare breed of Indian leaders who delivered on his promises, never forgetting the welfare of the common rural Indian, and the farmer, while, simultaneously, propelling mega power projects forward with matchless administrative and managerial capability.’; https://en.wikipedia.org/wiki/Rangarajan_Kumaramangalam )

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை ஆக்கபூர்வ தீர்வு நோக்கில் அணுகுபவர்கள் யார்? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுத்து வரும்  கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாவையோ, ராகுலையோ, நடுநிலை நாடகத்திற்காக சம்பிரதாயமாக கூட கண்டிக்காமல், பிரதமர் மோடியை மட்டுமே குவியப்படுத்தி கண்டித்தது சரியா?

'காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டிக்கொள்ள ஆட்சேபணையில்லை' என்று முதல்வர் தமிழக சட்டசபையில் அறிவித்த போது, எதிர்க்காதவர்கள் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1998902 வாசகர் மடல்: Vimalathithan - Abu Halifa,குவைத்), தமிழ்நாட்டின் ஆறுகள், ஏரிகள், கிரானைட், தாதுமணல் ஊழலுக்கு இரையான போதும், தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, அபகரித்த போதும், எதிர்க்காதவர்கள் எல்லாம், இன்று தமிழ்நாட்டில் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதானது, தீர்வை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுமா? அல்லது இன்னொரு முள்ளிவாய்க்காலாக தமிழ்நாட்டை பின்னேற்றுமா?(http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html  )

இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கானது, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கில் உருவான‌ மேலே குறிப்பிட்ட 'மேய்ப்பர்கள்' நோயில் சிக்கி, ‘சங்க‌மானதன்’ விளைவே முள்ளிவாய்க்கால் அழிவா? 
(http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post_19.html )

என்ற உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதத்திலிருந்து அந்த 'மேய்ப்பர்கள்' எல்லாம் இனியும் தப்பிக்க முடியுமா


மேலே குறிப்பிட்ட 'மேய்ப்பர்களிடம்' தமிழர்கள் எந்த அளவுக்கு ஏமாந்து பயணிக்கிறார்களோ, அந்த அளவுக்கு  தமிழர்கள் வீழ்ச்சி திசையிலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் வளர்ச்சி திசையிலும் பயணிக்கிறார்கள்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும். 
(http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html )

மைக்ரோ உலகத்தில் உள்ள 'தனிநபர் நம்பிக்கை'யானது (personal trust), மேக்ரோ உலகத்தில் 'சமூக நம்பிக்கையாக'(Social Trust) சரியான திசையில் பயணித்து தமிழ்நாட்டை மீட்பதற்கு தடையாக உள்ள ;

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்து வலம் வரும் மேலே குறிப்பிட்ட 'மேய்ப்பர்களை' எல்லாம்;


எவ்வாறு வெற்றி கொள்வது? என்ற கேள்விக்கான விடையில் தான், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி அடங்கியுள்ளது.
 
 

தமிழ்நாட்டில் அரசியல் பொதுவாழ்வு வியாபாரிகளின் (வீழ்ந்து வரும்) செல்வாக்கையும் மீறி, ஆக்கபூர்வமாக சமூகத்திற்கும் இயற்கைக்கும் உதவும் வகையில் எவ்வாறு வாழ்வது? என்று முயற்சித்து வரும் நான், அண்மையில் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பார்த்த கீழ்வரும் ஆவணப்படம் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
 
இளைமைகாலத்தில் 'புரட்சி, பொதுவுடமை, பகுத்தறிவு' என்று போராடி, அதில் பாடங்கள் கற்று, பின் சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன் பயணித்து பெற்ற அறிவு முதிர்ச்சியில், 'சாத்தியமுள்ள வழிகளில்' பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அழிவிலிருந்து மீட்கும் போக்கினையும் உள்ளடக்கிய தொழில் வியாபார வாய்ப்புகளை முன்னெடுத்து, பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, குறுக்குவழி அதீத லாபத்திற்கு ஆசைப்படாமலும், நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி சீரழியாமலும்,  மியன்மார் நாட்டில் வாழ்ந்து வரும் பெண் ‘இன் மியோ சூ’  (Yin Myo Su) ஆவார்.

அவரின் பணிகள் குறித்த கீழ்வரும் இணையதளம் மூலமாக‌, நான் ஆழ்ந்து படிக்க வேண்டிய பாடங்கள், அங்கு செயல்பூர்வமாக வெளிப்பட்டு வருவதாக உணர்ந்துள்ளேன்.
 
அந்த பாடங்கள் மூலம் பெறும் கல்வியை, தமிழ்நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு நெறிப்படுத்தினால்,

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சியானது, வலுவான அடித்தளத்துடன் முன்னேறும்,

என்பது எனது கணிப்பாகும். எனவே அங்கு சென்று, சிலகாலம் தங்கி, பாடங்கள் கற்கவும் திட்டமிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment