'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' ;
'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்
Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.
“எனது
இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.”
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html
) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த,
தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன்.
2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு
(http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)
, தொடர்ந்து 'இணைய வழியில்' அந்த கண்டுபிடிப்பை விளக்கி பல கட்டுரைகள் வெளியிட்டு
வருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு, 2005 முதல் இன்றுவரை, ஏன் வெளிவரவில்லை?
என்பதும் ஆய்விற்குரியதாகும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.
உணர்ச்சிபூர்வ போதையிலோ, அல்லது 'பொதுவாழ்வு வியாபாரியாக' வாழ்வதாலோ, ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’, 'பெரியார்' கட்சிகளும், 'பெரியார்'
கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற ஆராய்ச்சியையும் தொடங்க வேண்டுமா?
1944க்கு முந்தைய ஈ.வெ.ராவின் 'குடிஅரசு'
இதழ் பாணியில், எனது பதிவுகளையும், அவற்றிற்கும் வரும் அறிவுபூர்வ மறுப்புகளையும், ஒரே
நூலாக வெளியிடும் எண்ணமும் எனக்குண்டு. எனவே, எனது பதிவுகளுக்கு கீழே வாசகர் பதிவிடும்
கருத்துக்களையும் அகற்றாமல், ஆர்வமுடன் படித்து வருகிறேன்.
இசை ஆராய்ச்சிக்கு முன், மார்க்சியம், லெனினியம்
புலமையோடு, 'பெரியார்' கொள்கையில் நான் பயணித்த காலத்தில், ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’
கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி
எழுந்ததை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
“தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில்
பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது
மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ
வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது
ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும், வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த
சமஸ்கிருத நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது
தொடர்பான புலமையையும், வடநாட்டு மார்க்சிய
அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும்
எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.
மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள்
உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி
உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி
(Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு
(Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base),
மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்……………………..இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன்,
தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த
ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற
பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக
தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன்
தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த
போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை,
என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.
பெரியார்
இயக்கத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும், தமக்குள்ள அறிவு வரை எல்லைகள்
(limitations) பற்றிய புரிதலும், தாம் ஏற்றுக்
கொண்ட கொள்கை தொடர்பான புலமையை அதிகரிக்க விரும்பும் ஆர்வமும், அதற்கான உழைப்பும் இருந்ததில்லை
என்பது எனது களப் பார்வை(Observation) ஆகும். இது தொடர்பாக 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’
சிக்கிய தமிழ்நாடு' என்று பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html
)
உண்மையில்
மார்க்சியம் லெனினியம் தொடர்பாக, முனைவர்
பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள்
பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பான பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
[ http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html ]”
[ http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html ]”
ஒரு சமூகத்தில் தாய்மொழியும், அவர்களின் அடையாளமும், நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது தாய்மொழியும், அடையாளமும், பயனற்றது என்று கருதும் மக்கள், கட்சிகளையும், கொள்கைகளையும் 'விரயமாக' கருதி, பலவகை போதைகளில் பயணிக்கத் தொடங்குவார்கள். (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm ) தமிழ்நாட்டில்
தமிழர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் தமிழையே, ' விரயம் - waste' ஆக கருதும் அபாயமும் வளர்ந்து
வருவது உண்மையானால், கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ
விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக, மாறி வருகின்றனவா?
“பொது
மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும்
அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்)மத்தியில்,
'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி
மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக, தமிழையே,
அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும்
வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ்
அழிவு சுனாமி' தொடக்கத்தின், முதல் அறிகுறியாகவும் இருக்கலாம்.”
கம்யூனிஸ்ட் கொள்கைகளும்,
'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக, மாறி வருகின்றனவா? என்ற கேள்வி தொடர்பான பதிவு வருமாறு.
'அரசியல் பின்புலம்
எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை
மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த
முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.'
'மறுபடியும் முதலிலிருந்தா?'-
அரவிந்தன்
“ ''எங்களுக்கு கொள்கை
இல்லை; அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,'' என,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கொள்கைகள் சருகாகி,
ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், 'தேர்தல் ஆதாய' நோக்கில், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து
கட்சிகளும் பயணிக்கிறார்களா? அந்த கட்சிகளின் 'வால்களாக' (வெளியில் தெரிந்தும், தெரியாமலும்)
' 'பெரியார் கட்சிகள்' பயணிக்கிறார்களா?...................... தமிழ்நாட்டில், இன்று
கட்சிகளின் சித்தாந்த முழக்கங்கள் எல்லாம் கேலிப்பொருளாகியுள்ளது பற்றியும், 1952 பொது
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியானது 131 தொகுதிகளில் போட்டியிட்டு, 62 தொகுதிகளில் வெற்றி
பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக வெளிப்பட்டது பற்றியும், 64 வருட வளர்ச்சி/வீழ்ச்சிக்கு(?)
பின், 2016 சட்டமன்ற தேர்தலை, விஜயகாந்த் தலைமையில் உள்ள அணியில் சந்தித்துள்ளது பற்றியும்,
ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.”
தமிழ்நாட்டில் கிரானைட்,
தாது மணல், ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்களை கொள்ளையடித்தவர்களை
எதிர்த்து, மக்களை திரட்டி, போராடாததில், கம்யூனிஸ்ட் கட்சிகளும், 'பெரியார்' கட்சிகளும்
'ஒரே வகையில்' பொதுவாழ்வில் பயணித்தார்களா? அக்கொள்ளைக்கு துணை போன, அந்தந்த ஆளுங்கட்சி
'புள்ளிகளுடன்', தத்தம் சுயநலன்களுக்காக, வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நெருக்கமாக
'பொதுவாழ்வில்' பயணித்தார்களா? அத்தகைய சுயநல போக்கில், தமிழ்நாட்டில் 'இந்துத்வா'
கட்சிகளில் யார்? யார்? பயணித்தார்கள்? இப்படிப்பட்ட மோசமான சமூக சூழலே, 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? தமது தாய்மொழியை 'காட்டுமிராண்டி' மொழியாக கருதி, தமிழில் இருந்த 'இனம்' திரிந்து, 'அடையாளச் சிதைவுக்குள்ளாகி', 'உணர்ச்சிபூர்வ போதையாளர்களாகவோ', அல்லது 'பொதுவாழ்வு வியாபாரிகளாகவோ', பெரும்பான்மையான 'பெரியார்' கொள்கையாளர்கள் வாழ்கிறார்களா, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர அனுமதித்து? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்';
கட்சிகளின் தொடர்பின்றி, தமிழ்நாட்டில் தினமும் ஆங்காங்கே,
தண்ணீர் பிரச்சினை, சாலை பிரச்சினை, மோசடி உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்காக,
வீதியில் இறங்கி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருவதற்கும் தொடர்பு உண்டா?
மேற்குறிப்பிட்ட தொடர்பின் பின்னணியில், முந்தைய
பதிவில் குறிப்பிட்டபடி, திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின்
தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் வளர்ந்தார்களா?
அந்தந்த கட்சிகளில் சுயலாப நோக்கின்றி, தத்தம்
கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்கள் எவரேனும் இருந்தால்;
தத்தம் கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம்,
'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க'
வேண்டாமா? அது இயலாதெனில், 'சமூக கிருமிகளின்' பிடியில் மீளமுடியாத வகையில் சிக்கியுள்ள, அப்படிப்பட்ட கட்சிகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா? 'அழுகும் கழகங்கள்' (சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/) வரிசையில் அக்கட்சிகள் இடம் பெறாதா? 'அழுகும் கழகங்கள்' செல்வாக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா? 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை' மீட்க முடியுமா? (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )
அத்தகைய ஆய்விற்கு முதல்படியாக, 'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கு' முடிவு கட்ட வேண்டாமா, திருப்பு முனையில் இருக்கும் தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரிய ?
அத்தகைய ஆய்விற்கு முதல்படியாக, 'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கு' முடிவு கட்ட வேண்டாமா, திருப்பு முனையில் இருக்கும் தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரிய ?
No comments:
Post a Comment