'இந்துத்வா எதிர்ப்பு' தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதா?
'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' சாத்தியமா?
அழுகிய
மனிதர்களை ஆதரவாளர்களாகவும், தொண்டர்களாகவும், அதிகம் அழுகியவர்களுக்கே கட்சியில் பதவியில் முன்னேற வாய்ப்புள்ளதாகவும் பயணிக்கும் கட்சியாக எந்த கட்சி இருந்தாலும்;
(‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்;
http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )

அந்த
கட்சியானது ஆதாய நோக்கற்ற
இயல்பான எதிர்ப்பு வலிமையின்றியும், அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், பயணிக்க நேரிடுவதும், தவிர்க்கவியலாத விளைவே ஆகும். அந்த இரண்டு வகை
வலிமைகளும் வெளிப்பட வேண்டிய நெருக்கடிகள் தமிழ்நாட்டில் எதிர்பாராமல் நிகழும்போது;
அத்தகைய
கட்சிகள் எல்லாம் 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாக அம்பலமாவதைத் தவிர்க்க
முடியாது.
அரசியல்
நீக்கத்தில் (depoliticize)
ஆதாய அரசியலில் பயணித்த கட்சிகளின் ஆதரவில் சிக்கிய 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, இன்று தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மையாகி
விட்டதா? என்று அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.
திராவிட
ஊழல் திமிங்கிலங்களின் அரவணைப்பில் புற்றீசல் போல் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக்கல்வி
மூலமாக, தமிழில்
எழுதப் படிக்க தெரியாத மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கையானது, அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்;
சுமார்
50 வயத்துக்கும் அதிகமான ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே பெரும்பாலும் தமிழ் இதழ்களை படித்து, மீடியா செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களில்
திராவிட/கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களே இந்துத்வா எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர். அவர்களில் வீதியில் இறங்கி போராடுபவர்களின் எண்ணிக்கையானது மிக குறைவாகும்.
தமிழ்ப்
பத்திரிக்கைகளின் செல்வாக்கு வளையத்தில் சிக்காத மாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தில் பெரும்பாலோர் கோவிலுக்கு
சென்று வழிபடும் போக்கானது, நம்ப முடியாத அளவுக்கு
அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்;
'கட்சி
அரசியலுக்கு' அப்பாற்பட்ட இந்துத்வா ஆதரவு போக்கானது தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பிடித்து வருகிறது.
'தமிழ்நாட்டில்
'இந்துத்வா' எதிர்ப்பானது, 'திராவிட' அரசியல் கொள்ளை குடும்பங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக;
அது
தமிழ்நாட்டில் இந்துத்வா வளர உதவி செய்து
வந்துள்ளது.
தமிழ்நாட்டில்
இன்றுள்ள கட்சி அரசியல் என்பதானது, தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வலிமையற்ற சுமார்
50 வயதுக்கும் அதிகமானவர்களையே பெரும்பாலும் வாசகர்களாக கொண்ட மீடியாக்களின் 'தீனியாக'
மட்டுமே பயன்பட்டு வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதல்வராக
இருந்த ஜெயலலிதாவின் மர்மமான மரணம் தொடர்பாக, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல்,
சசிகலாவை தரிசித்து வாழ்த்து கூறிய கட்சித்தலைவர்கள் மற்றும் பத்திரிக்கை அதிபர்கள் வழியில்;
தமிழ்நாட்டில்
மனித உறவுகளிலும், உரையாடல்களிலும் 'லாபநட்ட கள்வர் கணக்கு' ஆதிக்கம் செலுத்தி வருவதால்;
கருத்துக்கணிப்பில்
கேள்வி கேட்பவருக்கு என்ன லாபம்? எந்த பதில் சொன்னால் தனக்கு லாபம் அல்லது பாதிப்பு
இருக்காது? என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்னே தான் பதிலே வெளிப்படும்.
தமிழ்நாட்டு
சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் 2011 மற்றும் 2016 முதல் கடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்
வரை, துக்ளக் தவிர்த்த, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம், பெரும்பாலும் தி.மு.க வை
நம்ப வைத்து ஏமாற்றிய கணிப்புகளாக முடிந்ததற்கு, அதுவே காரணமாக இருந்தால் வியப்பில்லை.
தமிழ்நாட்டில்
மீடியாக்களில் 'சூடாக' விவாதிக்கப்படும் கட்சி அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம்;
மீடியாவின்
செல்வாக்கு வளையத்தில் சிக்காமல் பயணிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் மத்தியில்
சிறு சலசலப்பை கூட ஏற்படுத்துவது கிடையாது.
மீடியாக்களில்
'சூடாக' வெளிப்படும் கட்சி அரசியல் செய்திகளை, பரிசோதனைக்காக, நான் அத்தகையோரிடம் தெரிவித்த
போது, அவர்கள் எள்ளளவு ஆர்வம் கூட காட்டாதது, எனக்கு
வியப்பை அளித்தது.
விலைவாசி
உள்ளிட்ட அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளும், தாம் வாங்கும் பொருளுக்கு
ஜி.எஸ்.டி என்று
சொல்லி கூடுதல் பணம் வாங்கும் போது,
மோடி அரசின் மீதும் வெறுப்பும் அவர்களின் உரையாடல்களில் 'ஆதிக்கம்' செலுத்துகிறது. மோடியின் ஊழல் ஒழிப்பானது அம்மக்களிடையே
கேலிப் பொருளாகி விட்டது. மோடி பிரதமரான பின்,
ஊழல் ஒழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் 'பண
நீக்கம்' மூலம் வந்த துயரங்களை பொறுத்துக்
கொண்ட மக்கள் மத்தியில்;
ஜி.எஸ்.டி மூலம்
வெளிப்பட்ட வெறுப்பானது, 2ஜீ குற்றவாளிகள் விடுதலை
ஆனபின், மோடி மீதான அதிருப்தியானது
அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதே
போக்கு நீடிக்குமானால், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க
மட்டுமல்ல, பா.ஜ.கவுடன்
கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் 'ஆர்.கே.நகர்
பாணி அதிர்ச்சி வைத்தியம்' காத்திருக்கிறது;
என்பதும்
எனது கணிப்பாகும்.
மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் தமக்குள்ள ஆர்வத்தை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் தொடர் முயற்சியின்றி, மோடியின் செல்வாக்கு என்ற முதுகின் மேல், 'திராவிட' கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், இந்துத்வாவை விட தமக்கான முக்கியத்துவத்தில் 'குவியமாகி', தமது 'விசுவாசிகள்' கூட்டத்தை பேணி பாதுகாத்து வரும் 'குழு'(?) தலைவர்கள் அரசியலில் சிக்கி பயணித்து வரும் தமிழக பா.ஜ.கவானது;
தமிழ்நாட்டில்
ஆழமாக வேர் பிடித்து வரும்
'இந்துத்வா' மூலம் பலன் பெற வாய்ப்பில்லை.
இதில்
வினோதம் என்னவென்றால், தமிழ்நாட்டில் 'மோடி மீதான வெறுப்பு
அலையானது, மீடியாவின் செல்வாக்கு வளையத்தில் வராதவர்கள் மத்தியில் 'அதிவேகமாக' வளர்ந்து வந்தாலும், கட்சி சார்பற்ற 'பக்தி' அடிப்படையிலான 'இந்துத்வா' ஆதரவு போக்கினை, அந்த வெறுப்பு அலையானது
பாதிக்கவில்லை;
என்பதையே
ஆண்டாள் சர்ச்சை தொடர்பான, வைரமுத்துவுக்கு எதிரான போராட்டமானது வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.
முதல்வர்
ஜெயலலிதாவின் 'மர்ம மரண'த்திற்குப்
பின், நடந்த ஆர்.கே.நகர்
தேர்தல் முடிவானது, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சியை தோற்கடித்து, சட்டசபை எதிர்க்கட்சியையும் 'டெபாசீட்' இழக்க வைத்து, மோடியின் ஊழல் ஒழிப்பானது, தமிழ்நாட்டில்
கேலிக்கூத்தாகி விட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு
மட்டுமின்றி;
தமிழ்நாட்டில்
'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது;
'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானது, ஆண்டாள்
சர்ச்சையில், வைரமுத்துவின் மூலம் வெளிப்பட்டுள்ளதா? என்ற கேள்வியையும் கீழ்வருமாறு
எழுப்பியுள்ளது.
‘தமிழ்நாட்டில்
உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றிய சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில் உள்ள 'பிரபல' தலைவர்கள் எவரும் கண்டித்தார்களா? அவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி
தமிழர்' வரையறையின் அடிப்படையில், குறைந்த பட்சம், அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.com/2017/02/porki.html) மாறாக
அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்ப அரசியலை அவர்களும் ஆதரித்ததானது, எதை உணர்த்துகிறது? ஆதாய
நோக்கற்ற இயல்பான எதிர்ப்பு வலிமையின்றியும், அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானது, ஆண்டாள்
சர்ச்சையில், திருக்குறளுக்கு (
711 & 713) முரணாக அவை அறியாமல் பேசிய வைரமுத்துவின் மூலம் வெளிப்பட்டுள்ளதா?’
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
'தமிழ்
உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ
முட்டாள்களை வளர்த்து, 'கோழை இரட்டை வேடப்
போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும் 'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில்,
அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத 'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும், மீடியா வெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு;
தமிழும்,
தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?
வேறு
வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா?' என்ற கேள்வியையும் ஏற்கனவே
பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
தமிழ்நாட்டில்
பிரமிக்கும் வகையில் வேர் பிடித்து வளர்ந்து வரும் 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா'வை
பிணைத்து, குஜராத் மாநில பா.ஜ.க, அஸ்ஸாம் மாநில பா.ஜ.க போன்று, தமிழக பா.ஜ.கவோ அல்லது
வேறு கட்சியோ பயணித்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை
உண்மையான மக்கள் ஆதரவுடன் நிரப்ப முடியும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள 'அரசியல் வெற்றிடமானது', 1967க்குப்பின் ஆட்சி அதிகாரமானது அரசியலை பொதுவாழ்வு வியாபாரமாக்கிய போக்கில் உருவான, ஆதாய அரசியலை ஊக்குவித்த, 'அரசியல் நீக்கத்தின்' (depoliticize) விளைவாகும்.
தாய்மொழி தமிழ், இலக்கியங்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஆணிவேர்களை எல்லாம் குருட்டுப் பகுத்தறிவின் அடிப்படையில் சேதப்படுத்தி

(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html & http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html
) ;
இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில், திராவிட ஊழலுக்கு பாதுகாப்பாக 'பயன்பட்டு வந்ததானது', தாய்மொழி வழிக்கல்விக்கே ஆபத்தாகி, தமிழ்நாட்டின் வளங்களை சூறையாடிய, 'இந்துத்வா எதிர்ப்பு புரவலர்களாக' வலம் வந்த அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு எதிரான சுனாமி தொடங்க காரணமாகி விட்டது. அந்த சுனாமியின் தொடக்க சிக்னலாக, திராவிட ஊழல் பாதுகாப்பு கவசமாக 'அச்சுறுத்தி' வந்த 'இந்துத்வா எதிர்ப்பு' என்பது, 'சமூக சோளக்கொல்லை பொம்மை' என்பது வெளிப்பட தொடங்கியுள்ளது.
சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, 'பெரியார்' ஈ.வெ.ரா தொடர்பாக நான் வெளிப்படுத்திவரும் ஆய்வு முடிவுகளை எல்லாம், 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களில் எவராவது அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தினார்களா? 'திராவிட' கட்சிகளின் தலைவர்களை 'புரவலர்களாக'(?) கொண்டு பயணிக்கும் தமிழ் புலமையாளர்களில் எவராவது, சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக, தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான எனது ஆய்வு முடிவுகளை எல்லாம் எவராவது அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தினார்களா?
மேலே குறிப்பிட்ட 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யின் பொய்யான அச்சுறுத்தலானது 'ஆண்டாள்' மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டதால்;
இனிமேலாவது மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் எல்லாம், அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாகும் காலமானது நெருங்கி வருகிறது.
'ஆண்டாள்' தொடர்பான சர்ச்சையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக கூட்டாக அறிக்கை வெளியிட்ட, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மோடியை எதிர்த்து கூட்டாக அறிக்கை வெளியிட்ட, எழுத்தாளர்களும், மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கும், ஹார்வாட் தமிழ் இருக்கை தொடர்பாக நான் வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கை கேள்விகளுக்கும்

(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html),
அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டு, விடைகள் கண்டு, கூச்சமின்றி 'பெரியார்' ஈ.வெ.ராவை போல,
தவறுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, திருந்தி பயணிப்பார்களா? அல்லது அறிவுபூர்வ விவாத
வலிமையின்றி, மேலே குறிப்பிட்ட 'சமூக சோளக்கொல்லை பொம்மையின்' 'மிரட்டும் அலங்காரங்களாக'
தொடர்வார்களா?
'பெரியார்' ஈ.வெ.ராவால் விளைந்த ஆன்மீக சீர்குலைவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு
'பெரியார்' ஈ.வெ.ராவால் விளைந்த ஆன்மீக சீர்குலைவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு
தமிழ்
மொழி, இலக்கியங்கள், பரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களை வலுவாக்கி;
சமஸ்கிருதம் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளத்தை உள்ளடக்கிய இந்துத்வாவே இந்தியாவில் 'தேச கட்டுமானத்தை' (Nation Building) வலுவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில்;
வளர்த்தெடுப்பதே, 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' ஆகும்.

No comments:
Post a Comment