Tuesday, January 16, 2018


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) (3);


சீனா, ஜப்பான், கொரியா, ஏற்படுத்திய 'இருக்கை' போலின்றி,



ஹார்வார்ட்  'தமிழ் இருக்கை'யானது தமிழுக்கு பலன் தருமா? கேடாகுமா?


'ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டமானது சமஸ்கிருதத்திற்கு கேடாகும்; என்று சமஸ்கிருத ஆதரவு புலமையாளார்கள் எதிர்த்து வரும் பின்னணியில்;

அந்த சமஸ்கிருத திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக் தமிழுக்கு கேடாகும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சூழலில்;

ஹார்வார்டில் தொடங்கும் தமிழ் இருக்கையால், வருடத்திற்கு எவ்வளவு நிதி செலவிட்டு என்ன திட்டங்கள் செயல்படப் போகின்றன? அத்திட்டங்களால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுமா? தீங்கு நேரிடுமா? என்ற கேள்விகளை, எனது சமூக கடமையாக கருதி, தமிழ் ஆதரவு புலமையாளர்களை நோக்கி முன் வைக்கிறேன்; என் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் எல்லாம், இது போன்ற 'சர்ச்சைகளில்' ஈடுபடுவதை தவிர்க்குமாறு என்னை அறிவுறுத்தியுள்ள நிலையிலும்.

என்னை போற்றுவதும், தூற்றுவதும் அவரவர்க்கு உள்ள உரிமையாகும்.' ('சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?';http://tamilsdirection.blogspot.in/2017/11/tamil-chair.html )

உலகில் ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளுக்காக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'இருக்கை' (Chair) ஏற்படுத்துவதற்கு முன்பாக, என்னென்ன முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார்கள்? அதன் அடிப்படையில் உருவாகும் 'இருக்கை'யானது, உண்மையாகவே தமது மொழியின் நலனுக்கு பயன்படுவதை எப்படி உறுதி செய்தார்கள்? ஹார்வார்ட் தமிழ் இருக்கையானது, அது போன்ற முயற்சிகள் இன்றி, தமிழுக்கான நலனை உறுதிப்படுத்தாமல் மேற்கொள்ளப்படுகிறதா? அந்த தமிழ் இருக்கையானது, உண்மையில் தமிழுக்கு நலன் பயப்பதாகுமா? கேடாக வாய்ப்பிருக்கிறதா?

என்று அறிவுபூர்வமாக விவாதிக்கும் எண்ணம் உள்ளவர்களின் பார்வைக்கு;

ஹார்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டமானது, சமஸ்கிருதத்தின் நலனுக்கு கேடாக வாய்ப்புள்ள அபாயத்தை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ராஜிவ் மல்கோத்ராவின் காணொளி கீழே:

தமிழ்நாட்டில் அறிவுபூர்வபோக்கிற்கு எதிரான, சமஸ்கிருதம் தொடர்பானஉணர்ச்சிபூர்வ முட்டாள்த்தன     எதிர்ப்பானது வளர்ந்துள்ளதையும், அதன் காரணமாக உலகில் வேறு எந்த மொழி தொடர்பான ஆய்வுத்திட்ட நேர்க்காணலில் நடக்க வாய்ப்பில்லாத அளவுக்கு;
 
தமிழ் தொடர்பான எனது ஆய்வுத்திட்ட நேர்க்காணலில், அந்த ஆய்வுத் துறையில் புலமையற்றவர்கள் நேர்க்காணல் நடத்தியதையும், நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2017/12/tamil-chair-2.html   

வைரமுத்து போன்ற தமிழ் பிரபலங்கள் எல்லாம், தமிழுக்கு ஏற்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட ஆபத்துகள் பற்றிய கவலையின்றி, பயணிக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

முதலில்லாத மூலதனமாக (Capital without investment) தமிழைப் பயன்படுத்தி வரும் பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில், அறிவுபூர்வ அபாய எச்சரிக்கைகள்  எல்லாம் புறக்கணிப்புக்கு உள்ளாகும் இழிநிலையானது;

உலக மொழிகளிலேயே தமிழுக்கு மட்டுமே நேர்ந்துள்ளதா?

1967க்கு முன், இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு சர்ச்சைகளில் சிக்காமல், புலமையை ஊக்குவித்து தமிழானது வளர்ந்து வந்த போக்கிலிருந்து தடம் புரண்டு, 1967க்குப் பின் திராவிட அரசியலிலும், இந்துத்வா எதிர்ப்பிலும், பிரிவினை போக்கிலும், சிக்கி புலமை வறட்சி திசையில் தமிழ்நாடானது பய‌ணிக்கிறதா?                             ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

அந்த போக்கிலேயே, ஹார்வார்ட் தமிழ் இருக்கை முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறதா?

ஏற்கனவே அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பெர்க்கிலி பல்கலைக்கழக தமிழ் இருக்கையில் பணியாற்றும் ஜார்ஜ் ஹார்ட் உள்ளிட்ட எவராவது, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் செல்வாக்குள்ள செல்டன் பொல்லாக் தமிழை ஆராய்ச்சி என்ற பெயரில் இழிவுபடுத்தியதற்கு, அறிவுபூர்வ மறுப்பை வெளியிட்டார்களா? இல்லையென்றால், இனியாவது வெளியிடுவார்களா? அல்லது இவை போன்ற அமெரிக்க பல்கலைக்கழக 'தமிழ் இருக்கைகள்' எல்லாம் தமிழின் நலனை விட, இந்திய சமூகத்தில் பிரிவினைப் போக்குகளை ஊக்குவிக்கும் உள்மறை நலன்களுக்காக (Hidden Agenda) செயல்படுகின்றனவா? (https://www.hindupost.in/society-culture/distorting-tamil-culture-ethos-certainty-harvard-tamil-chair/    )

'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) என்ற தலைப்பில், நான் 1996-இல் முனைவர் பட்டம் பெற்று, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்திருந்த, இசையியல் (Musicology), இசை மொழியியல் (Musical Linguistics) நுட்பங்களை கண்டுபிடித்து,வெளியிட்டு வருகிறேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html & http://tamilsdirection.blogspot.in/2016/08/linguistics-musical-linguistics.html    

அமெரிக்காவில் பெர்கிலி பல்கலைக்கழக தமிழ் இருக்கையில் பணியாற்றும் பேரா.ஜார்ஜ் ஹார்ட் கோவை செம்மொழி மாநாட்டிற்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, 'தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்' என்ற எனது நூலை நேரில் கொடுத்து, அவர் விரும்பினால், அவருக்கு தோதான நேரத்தில் சந்தித்து விவாதிக்கும் விருப்பத்தையும் தெரிவித்தேன். அங்கு தங்கியிருந்த நாட்களிலும், அவர் நேரம் ஒதுக்கி என்னை சந்திக்கவில்லை. இன்று வரை எனக்கும் அவரிடம் இருந்து, எனது கண்டுபிடிப்புகளை ஏற்றோ, மறுத்தோ, எந்த மடலும் வரவில்லை.

பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசையியல்' (Musicology) தொடர்பான சொற்களில் பலவற்றிற்கு, உரைகளும், அகராதிகளும் சரியான பொருள் தரவில்லை; ('தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளும்';
http://tamilsdirection.blogspot.com/2018/

என்பது பற்றிய எனது ஆய்வுகள் சரி என்றால்;

ஜார்ஜ் ஹார்ட் உள்ளிட்டோர் மொழிபெயர்த்து, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, ஒரு திருத்த பின்னணிப்பு (Appendix)  சேர்க்கப்படவில்லையென்றால்;

அந்த மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எல்லாம், பிழையான திசையில் பயணிக்க நேரிடாதா? 
('DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; Free Excerpt: 
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

அமெரிக்காவின் நலன்களுக்காக, தமிழ்நாட்டின் திராவிட/தமிழ் அரசியலின் மீது செல்வாக்கு செலுத்தும் உள்மறை நலன்களுக்காகவே பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் இருக்கை செயல்பட்டு வருகிறதா? ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உருவாகும் தமிழ் இருக்கையும், அதே போக்கில் தானே செயல்படும்?

அந்த மேற்கத்திய சூழ்ச்சிவலையில் தெரிந்தும் தெரியாமலும், யார், யார், தமிழ்/திராவிட அமைப்புகள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களாக பயணித்து வருகிறார்கள்?
என்ற கேள்விகளை நான் எழுப்புவது தவ்றாகுமா?
என்ற அறிவுபூர்வ விவாதத்தை இனியும் தாமதப்படுத்துவதானது, தமிழுக்கு கேடாகவே முடியும்.


Note: visit; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html

மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, துரைப்பாண்டி இணையத்தில் முன்னெடுத்த விவாதத்தில் வெளிப்பட்ட, கீழ்வரும் கருத்துக்கள் எனது கவனத்தினை ஈர்த்தன.

"முதலில் பேரா.ஷெல்டன் போல்லாக் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இருக்கைப் பேராசிரியரா இல்லையா என்று தேடிப்பார்க்காமல் எழுதும் ஆய்வாளரின் திறமையைப் பற்றி என்ன நினைப்பது?"

'ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக்' இருப்பதைத் தான் எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதனை 'பேரா.ஷெல்டன் போல்லாக் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இருக்கைப் பேராசிரியராக',  நான் குறிப்பிட்டதாக நினைத்தது சரியா?

அடுத்து, 'ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக்' இருப்பதற்கான கீழ்வரும் சான்றினை துரைப்பாண்டி விவாதத்தில் பதிவிட்டார்.
https://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/infosys-chairman-funds-to-an-indian-classics-project-at-harvard/9938.html

அதில் கீழ்வரும் தகவல் இடம் பெற்றுள்ளது.

Harvard University announced that the Murthy family of Bangalore (Narayana Murthy is the Founder-Chairman of Infosys a global software company) had established a new publication series called the Murthy Classical Library Series (MCLI) with a generous gift of $5.2 million. It also announced that renowned scholar Sheldon Pollock, who is currently Ransford Professor of Sanskrit and Indian studies at Columbia University, had been named the general editor of the volumes.”

அதையும் கண்டு கொள்ளாமல் கீழ்வரும் கருத்தும் வெளிப்பட்டது.

“it reads like someone complaining about water supply in his street and moaning that the others get all the water”

மேற்குறிப்பிட்ட கருத்து வெளிப்படுவதற்கு எனது பதிவில் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எவராவது விளக்கினால் நன்று.

தொடர்ந்து அந்த நபர் மேற்குறிப்பிட்ட பதிவின் அடிப்படையில் என்னைப் பற்றி எழுதியவைகள் எந்த திசையில் பயணித்தன? என்பதற்கு ஒரு sample.

I would not have wasted my time reading this except for the fact that I was tagged. If a PhD cannot be bothered to get basic facts right, why should his readers take him seriously.”

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஆதரித்து, இன்னொருவர் பதிவிட்ட கருத்து:

“That’s the kind of psedo-academics that seems to appeal to the readers” 

எனது பதிவின் துவக்கத்திலேயே, "என்னை போற்றுவதும், தூற்றுவதும் அவரவர்க்கு உள்ள உரிமையாகும்." என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். எனவே மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வெளியிட்டதானது, அவரவர்க்கு உள்ள உரிமையாகும்.

ஆனால், கீழ்வரும் கருத்தினை நான் முன்வைக்க விரும்புகிறேன்; எனது பதிவில் வெளிப்படுத்தியவற்றில் ஏதும் பொய் இருக்குமானால், அதை ஆய்ந்தறிந்து என்னைத் திருத்திக் கொள்ளும் நோக்கில்.


Will anyone point out the ‘wrong basic facts’ in any of my blog post?

No comments:

Post a Comment