உலகப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்:
சட்டிகளை (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள்) காப்பாற்றாமல், அகப்பையில் என்ன வரும்?
‘'ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டமானது சமஸ்கிருதத்திற்கு கேடாகும்; என்று சமஸ்கிருத ஆதரவு புலமையாளார்கள் எதிர்த்து வரும் பின்னணியில்;
அந்த சமஸ்கிருத திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக் தமிழுக்கு கேடாகும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சூழலில்;
ஹார்வார்டில் தொடங்கும் தமிழ் இருக்கையால், வருடத்திற்கு எவ்வளவு நிதி செலவிட்டு என்ன திட்டங்கள் செயல்படப் போகின்றன? அத்திட்டங்களால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுமா? தீங்கு நேரிடுமா? என்ற கேள்விகளை, எனது சமூக கடமையாக கருதி, தமிழ் ஆதரவு புலமையாளர்களை நோக்கி முன் வைக்கிறேன்; என் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் எல்லாம், இது போன்ற 'சர்ச்சைகளில்' ஈடுபடுவதை தவிர்க்குமாறு என்னை அறிவுறுத்தியுள்ள நிலையிலும்.
என்னை போற்றுவதும், தூற்றுவதும் அவரவர்க்கு உள்ள உரிமையாகும்.'
('சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?';
http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html)
('சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?';
http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html)
உலகில் ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளுக்காக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'இருக்கை'
(Chair) ஏற்படுத்துவதற்கு முன்பாக, என்னென்ன முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார்கள்? அதன் அடிப்படையில் உருவாகும் 'இருக்கை'யானது, உண்மையாகவே தமது மொழியின் நலனுக்கு பயன்படுவதை எப்படி உறுதி செய்தார்கள்? ஹார்வார்ட் தமிழ் இருக்கையானது, அது போன்ற முயற்சிகள் இன்றி, தமிழுக்கான நலனை உறுதிப்படுத்தாமல் மேற்கொள்ளப்படுகிறதா? அந்த தமிழ் இருக்கையானது, உண்மையில் தமிழுக்கு நலன் பயப்பதாகுமா? கேடாக வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளை எல்லாம்; அறிவுபூர்வமாக விவாதிக்கும் எண்ணம் உள்ளவர்களின் பார்வைக்கு ஏற்கனவே முன்வைத்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
அது தொடர்பாக, வெளிவந்துள்ள மறுப்பு கீழே குறிப்பில் உள்ளது. திருக்குறள் (423)
வழியில், ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.
ஏற்கனவே பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கைகள் உள்ளன.
ஹர்வார்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து, கனடா நாட்டில் டொரோன்டொ பல்கலைக்கழகத்திலும், பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும், தென்னாப்பிரிக்காவில் ஜோன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும், மலேசியாவில் மலாய்ப் பல்கலைக்கழகம், இலங்கையில் யாழ்ப்பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கவும், அவை தவிர, உலகிலும், இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்படும் என்றும், தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார். (http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/29/tamil-nadu-government-to-create-tamil-chairs-in-top-global-universities-1835341.html
)
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 10 கோடி நிதி தர மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ள செய்தியும் வெளிவந்துள்ளது. (https://polimernews.com/)
தமிழக அரசும், மத்திய அரசும் தமிழின் வளர்ச்சி தொடர்பாக காட்டும் ஆர்வம் மிகுந்த பாராட்டிற்குரியதாகும்.
உலக அளவில் பல்கலைக்கழகங்களில் தமிழ் தொடர்பான கல்வியும், ஆய்வும், அறிஞர்களின் எண்ணிக்கையும் 1967க்கு முன் எந்த நிலையில் இருந்தது? 1967க்குப் பின் வளர்ந்ததா? வீழ்ந்ததா? பின் உலக அளவில் தமிழ் இருக்கைகள் உருவாக்கும் ஆர்வம் எந்த காலக்கட்டத்தில் வெளிப்பட்டு, இன்றுள்ள மிகுந்த வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட உருவாகியுள்ள/உருவாகப்போகும் தமிழ் இருக்கைகளில் உண்மையிலேயே தமிழில் புலமையுள்ளவர்களை பணியமர்த்த வேண்டுமானால், அத்தகையோரை உருவாக்குவதில் முதல் தர நிறுவனங்களாக இருக்க வேண்டியது, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைகழகமும் ஆகும்.
தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் தமிழுக்கு பாதிப்புகள் வெளிப்படத் தொடங்கியது. இடையில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அந்த போக்கிலிருந்து, தற்காலிக 'விடுதலை' கிடைத்த காரணத்தால், தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாகி, வளர்ந்து, பின் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் நிதி நெருக்கடியிலும் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html & http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html) ஊழலுக்கும், கட்சி அரசியல் பாரபட்சத்திற்கும் இடமின்றி தமிழுக்கான நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பதற்கு, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில், துணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம் (http://worldcat.org/identities/lccn-n50012133/)
இலக்கணம் வகுத்து தந்துள்ளார்.
சென்னையில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகமானது, எனது 'தமிழ் இசையின் இயற்பியல்'
(Physics of Tamil Music) முனைவர் பட்ட ஆய்விற்கு மிகவும் உதவிய நூலகம் ஆகும். அந்த நிறுவனமும் நிதி நெருக்கடியில் சிக்கி, ஆய்வுகளுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த நிறுவனத்தில் எம்.ஏ, எம்.பில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு இதழ்கள் ஒவ்வொரு வருடமும் வெளிவராமல், நீண்ட இடைவெளியில் வெளிவருவதும் அறிந்து மிகவும் வருந்தினேன்.
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகமும் இன்று என்ன நிலையில் இருக்கின்றன? அவை மேலே குறிப்பிட்ட கவலைக்குரிய நிலைகளில் இப்போதும் தொடர்ந்திருக்குமானால், ஹார்வார்ட் உள்ளிட்டு மேலே குறிப்பிட்ட தமிழ் இருக்கைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டியவர்கள் எல்லாம்;
அந்த இருக்கைகளில் பணியமர்த்த உண்மையிலேயே தமிழில் ஆழ்ந்த புலமையுள்ளவர்களை உருவாக்கக்கூடிய 'தரத்தில்';
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைகழகமும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளும் இருக்கின்றனவா?
என்று 'தர ஆய்வு' மேற்கொண்டார்களா? இனியாவது மேற்கொள்வார்களா? நிதி நெருக்கடியிலும், ஊழலிலும் சிக்கிய எந்த கல்வி நிறுவனத்தில் இருந்தும், தரமான கல்வி பெற வாய்ப்புண்டா?
ஒரு சமூகத்தில் உள்ள புலமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், அச்சமூகத்தில் உள்ள கல்விச் சூழலைப் பொறுத்ததாகும். ஆரம்பப்பள்ளி முதல், கல்லூரி
- பல்கலைக் கழகங்கள் வரை கல்வி கற்பிப்பவர்களின் பணி நியமனங்களில், 'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால், புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )\
அத்தகைய புலமை வீழ்ச்சி
சூழலில், தமிழ்நாட்டில் முனைவர் பட்ட ஆய்வறிக்கைகள் விலைக்கு வாங்கப்பட்டு, லஞ்சம்/பாலியல் சேவை மூலமாக முனைவர் பட்டங்கள் 'வாங்கப்படும்' தகவல்கள் எல்லாம் ஊடகங்களில் வெளிவருவது, மேலே குறிப்பிட்ட 'தமிழ் இருக்கை' ஆர்வலர்களின் கண்களில் படவில்லையா?
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )\
அத்தகைய புலமை வீழ்ச்சியும், அதன் தொடர்ச்சியான தாழ்வு மனப்பான்மையும், அறிவுபூர்வமான சான்றுகளைப் பற்றிய கவலையின்றி, எத்தகைய முட்டாள்த்தனமான 'சாதனை அறிவிப்புகளுக்கு' வழி வகுத்துள்ளது? என்பதற்கு ஓர் உதாரணம்:
"'ஆங்கோர் வாட்' ஒரு தமிழ் அரசனால் கட்டப்பட்டது; தமிழ் மன்னர்கள் படையெடுத்த நாடுகளில் ஒன்று கம்போடியா; தமிழ் மரபில் வந்த சூர்யவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் 'ஆங்கோர் வாட்’. அது ‘தமிழனின் 'அடையாளம்' என்று அறிவித்திருப்பதானது;
அறிவு வரை எல்லைகளைத் தாண்டிய துணிச்சலா? தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட வெளிப்பட்ட உயர்வு வெளிப்பாடா? 'ஆங்கோர் வாட்' ஈர்த்து வரும் உலக சுற்றுலா பயணிகளின் பார்வையில் 'இது முட்டாள்த்தனமான அறிவிப்பு' என்று வெளிப்படாதா? (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html
)
அந்த போக்கில், பல்கலைக்கழகத்தில் 'உயர்ந்த' பதவிகளில் இருந்தவர்களில் யார்? யார்? (பணி ஒய்வு பெற்ற புலமையாளர்களுக்கு 'வாலாட்டி' ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வாங்கி) சர்வதேச ஆய்வரங்களில் பங்கேற்று 'புலமை வெளிச்சம்' போட்டு வருகிறார்கள்? ஏற்கனவே ஆண்ட முதல்வர்களின் காலில் விழுந்த, 'செல்வாக்கு சமூக செயல்நுட்ப விற்பன்னர்களாக' இருக்கும் அத்தகையோர் உலக பல்கலைக்கழகங்களில் உருவாகியுள்ள/உருவாகவுள்ள தமிழ் இருக்கைகளுக்கு பொறுப்பேற்றால் என்ன ஆகும்? அத்தகையோரின் செல்வாக்கில் நடக்கும் தமிழ் மாநாடுகளிலும், கருத்தரங்கங்களிலும், தன்மானமுள்ள புலமையாளர்கள் எவரும் கலந்து கொள்வார்களா? உலக அளவில் தமிழ் கேலிக்குள்ளாகாதா? ஏற்கனவே உலக அளவில், தமிழ்ப்புலமையானது, கேலிக்குள்ளாகி விட்டதா? (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_6.html)
தமிழ்நாட்டில் அரசியல் கொள்ளையர்கள் தமிழ்ப்புரவலர்களாக முன்னெடுக்கும் கூட்ட மேடைகளில் நான் பங்கேற்றதுமில்லை. 'அந்த' மேடைகளில் பங்கேற்றவர்களை எனது சமுக வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை.
தமிழ்நாட்டில் அரசியல் கொள்ளையர்கள் தமிழ்ப்புரவலர்களாக முன்னெடுக்கும் கூட்ட மேடைகளில் நான் பங்கேற்றதுமில்லை. 'அந்த' மேடைகளில் பங்கேற்றவர்களை எனது சமுக வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை.
சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்ப்பது தொடர்பான ஹார்வர்ட் பல்கலைக்கழகத் திட்டமானது, பேரா.செல்டான் பொல்லாக் தலைமையில் செயல்படுவது தொடர்பான குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பினை 132 சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
அதே செல்டான் பொல்லாக் தமிழைப் பற்றி, அபத்தமான, தவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது தொடர்பான, எனது அறிவுபூர்வ எதிர்ப்பு முயற்சிகளை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்.
“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடனே யார் யார் கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்; என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர்
Sheldoon Pollock - ஷெல்டான் போல்லாக் –
‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in
Premodern India ’ by Sheldoon Pollock
(permanent black - Delhi 2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 9 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும், 'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள, கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?”
( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டி வருபவர்கள் உள்ளிட்டு, தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் எல்லாம் உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர் ஒருவர், தமிழை இழிவுபடுத்தியதை இது வரை கண்டு கொண்டார்களா? இனியாவது கண்டு கொண்டு, தமது எதிர்ப்பினை பதிவு செய்வார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று பாதுகாப்பு வளையத்தில்
(Comfort Zone) தொடர்ப் போகிறார்களா?
(http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html )
(http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html )
அமெரிக்காவில் ஏற்கனவே பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைகழகங்களில் உள்ள தமிழ் இருக்கைகளின் பொறுப்பாளர்களில் எவராவது, தமிழைப் பற்றிய செல்டன் பொல்லாக்கின் தவறான கருத்துக்களை எல்லாம், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் மறுத்துள்ளார்களா? இல்லையென்றால், அதே வழியில் தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கையும் பயணிக்குமா?
இவை அனைத்தும் முற்றிலும் தவறான முடிவுகள். வைதிகக் கருத்துகள் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இவரைப் போன்ற நவீன ஆய்வாளர்கள் பலர் இந்திய வரலாற்றை அணுகுவதால் இந்த விபரீதங்கள் நேர்கின்றன. உரிய இலக்கியப் புரிதலும் இவர்களிடம் இல்லை." - மருதமுத்து.
ஜார்ஜ் ஹார்ட்டின் மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் தவறானவை என்பதை வெளிப்படுத்திய எனது பதிவுகள்:
‘இசையில் தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடையா’?; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html
தமிழ் இருக்கைகளில் மேலே குறிப்பிட்டது போன்ற அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணித்து, அவை தொடர்பாக உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிவரும் மறுப்புகள் இருளில் சிக்காமல், உரிய முக்கியத்துவம் பெற வழி உண்டா? தமிழ் இருக்கை ஆர்வலர்கள் எல்லாம் இனியாவது அதில் கவனம் செலுத்துவார்களா?
தமிழின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டு, வருடம் தோறும் பலகோடி ரூபாய் செலவில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் உள்ள மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், இது போன்ற அவலம் நிகழ்ந்தது கிடையாது. (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )
பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் , தமது ஆய்வின்(?) மூலமாக,
"தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்."
என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்று 'புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ?
[1]' என்ற தலைப்பில், எழுத்தாளர் மருதமுத்து மறுத்துள்ளார்.(
http://inioru.com/ )
"மதச்சடங்குகள் யாவும் கீழ்ச்சாதிகளான பாணர், பறையர் முதலிய புலையரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. ஆபத்தான சக்திகளோடு உறவாடும் கீழ்ச்சாதியினரைத் தீண்டினாலும் ஆபத்துதான் என்று கருதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது.
மேற்கூறிய கருத்துகளை ஜார்ஜ் ஹார்ட் “பண்டைத் தமிழிலக்கியம்”
என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
(“Essays on South India”, ed. Burton Stein, Vikas, New Delhi , 1976).
ஜார்ஜ் ஹார்ட்டின் மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் தவறானவை என்பதை வெளிப்படுத்திய எனது பதிவுகள்:
‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ; http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html
தமிழ் இருக்கைகளில் மேலே குறிப்பிட்டது போன்ற அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணித்து, அவை தொடர்பாக உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிவரும் மறுப்புகள் இருளில் சிக்காமல், உரிய முக்கியத்துவம் பெற வழி உண்டா? தமிழ் இருக்கை ஆர்வலர்கள் எல்லாம் இனியாவது அதில் கவனம் செலுத்துவார்களா?
தமிழின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டு, வருடம் தோறும் பலகோடி ரூபாய் செலவில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் உள்ள மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், இது போன்ற அவலம் நிகழ்ந்தது கிடையாது. (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை
எல்லாம், 1996 முதல் நான் வெளியிட்டு வந்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html & https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)
இன்று வரை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் எல்லாம், அதை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தி, தீர்வுகள் நோக்கி பயணித்தனவா? இல்லையென்றால், அது போன்ற திசையில், உலகில் உருவாகியுள்ள/உருவாகவுள்ள தமிழ் இருக்கைகளும் பயணிக்க நேரிடுமா? பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சங்க இலக்கிய நூல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் தொடர்பான திருத்தங்கள் இன்றியே நீடிக்கின்றனவா? சங்க இலக்கியங்களில் வரும் பாணர், பறையர் மற்றும் புலையர் பற்றிய தவறான நிலைப்பாடுகளும், காலனி ஆட்சியில் அரங்கேறிய இன்றுள்ள சாதிகளில் அவற்றைப் பொருத்தும் அபத்தமும், 'அந்த' ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களில் உள்ளனவா?
சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது குறித்து மகிழாமல், அந்த மொழிபெயர்ப்பில் உள்ள ஆபத்துகள் பற்றி சமஸ்கிருத புலமையாளர்கள் எந்த அளவுக்கு துணிச்சலுடன் கண்காணிக்கிறார்கள்? என்பதை மேலே பார்த்தோம்.
ஆங்கிலத்தில் எது வெளிவந்தாலும், தமிழைப்பற்றி வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் எழுதி எது வெளிவந்தாலும், அறிவுக்கண்களை மூடிக்கொண்டு பாராட்டுவதானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?
ஜார்ஜ் ஹார்ட்டின் மேலே குறிப்பிட்ட அபத்தமான ஆய்வுகளுக்கு, உரிய
சான்றுகளின் அடிப்படையில் மறுப்பு தெரிவிக்காமல், கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவரை பாராட்டியதற்கும், மேலே குறிப்பிட்டதற்கும் வேறுபாடு உண்டா?
ஏற்கனவே உலக அளவில், தமிழ்ப்புலமையானது, கேலிக்குள்ளாகி விட்டதா? என்ற கேள்வியானது செல்டன் பொல்லாக் மூலம் வெளிப்பட்டுள்ளது.
(http://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html & https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)
இன்று வரை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் எல்லாம், அதை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தி, தீர்வுகள் நோக்கி பயணித்தனவா? இல்லையென்றால், அது போன்ற திசையில், உலகில் உருவாகியுள்ள/உருவாகவுள்ள தமிழ் இருக்கைகளும் பயணிக்க நேரிடுமா? பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சங்க இலக்கிய நூல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் தொடர்பான திருத்தங்கள் இன்றியே நீடிக்கின்றனவா? சங்க இலக்கியங்களில் வரும் பாணர், பறையர் மற்றும் புலையர் பற்றிய தவறான நிலைப்பாடுகளும், காலனி ஆட்சியில் அரங்கேறிய இன்றுள்ள சாதிகளில் அவற்றைப் பொருத்தும் அபத்தமும், 'அந்த' ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களில் உள்ளனவா?
சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது குறித்து மகிழாமல், அந்த மொழிபெயர்ப்பில் உள்ள ஆபத்துகள் பற்றி சமஸ்கிருத புலமையாளர்கள் எந்த அளவுக்கு துணிச்சலுடன் கண்காணிக்கிறார்கள்? என்பதை மேலே பார்த்தோம்.
அந்த கண்காணிப்பு தமிழ்ப்புலமையாளர்களிடம்
இல்லையென்றால், அது தமிழுக்குக் கேடாகாதா?
ஆங்கிலத்தில் எது வெளிவந்தாலும், தமிழைப்பற்றி வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் எழுதி எது வெளிவந்தாலும், அறிவுக்கண்களை மூடிக்கொண்டு பாராட்டுவதானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?
' ‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’
by M.S.S pandian (1992)' என்ற நூல் எழுத குறிப்புகள் கொடுத்து உதவி செய்ததாக, ஒரு
அ.இ.அ.தி.மு.க ஆதரவு பேராசிரியர் என்னிடம், சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பெருமையுடன்
தெரிவித்தார்; அறிவுபூர்வமற்ற முறையில், எம்.ஜி.ஆரை இழிவு செய்து, அந்த நூலின் உள்ளடக்கம்
இருந்தது தெரியாமல்.
ஏற்கனவே உலக அளவில், தமிழ்ப்புலமையானது, கேலிக்குள்ளாகி விட்டதா? என்ற கேள்வியானது செல்டன் பொல்லாக் மூலம் வெளிப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியிலும், ஏலத்தில் துணைவேந்தர் பதவிகள் வாங்கப்பட்ட நிலையிலும் இருந்த தமிழ்நாட்டில், இன்று 'செல்வாக்குடன்'(?) வலம் வரும் தமிழ்ப்புலமையாளர்களில் இருந்து, உண்மையிலேயே ஆழ்ந்த புலமையுள்ள தமிழ்ப்புலமையாளர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்? செல்வாக்கு வளையத்திற்கு அப்பால்,
உணமையில் புலமையுள்ளவர்கள் இருந்தால், அவர்களை எல்லாம் எவ்வாறு அடையாளம் காண்பது? சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும். ஊழலிலும் நிதி நெருக்கடியிலும் இருந்து சட்டிகளை (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள்) காப்பாற்றாமல், அகப்பையில் என்ன வரும்? என்று தெரியாமல், உலகப்பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கைகள் தொடங்கி, அகப்பையில் 'கிடைத்ததை'க் கொண்டு, அந்த தமிழ் இருக்கைகளில் பணிகளில் அமர்த்தினால், என்ன ஆகும்? ('Decks have been cleared for registration of case against four including former V-C G Baskaran after Madras HC ruled that the syndicate of Tamil University could not sit in judgement over DVAC probe into allegation of irregularities in appointment of 21 professors and 100 non-teaching staff in the University.'; http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/oct/01/madras-hc-clears-deck-for-inquiry-into-appointments-in-tamil-university-2041540.html)
உலக அளவில், தனித்துவமான கேலிக்கிடமான மொழியாக தமிழ் இடம் பெறுமா?
என்ற கேள்விக்கு விடை தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.
'நான் எழுப்பிய ஐயங்கள் எல்லாம் அபத்தமே. ஊழலின்றி, நிதிநெருக்கடி இன்றி, சட்டிகள் எல்லாம் சரியாக உள்ளன. எனவே தமிழ் இருக்கைகள் மூலமாக, மேலே குறிப்பிட்ட கேள்வி எழலாம், என்பது எனது வீணான கற்பனையே'
என்பது நிரூபனமானால், நான் பகிரங்கரமாக மன்னிப்பு கேட்டு, எல்லையில்லாத மகிழ்ச்சி அடைவேன்.
தமிழ்நாட்டில் சட்டிகள் சரியானால், பெர்க்லி தமிழ் இருக்கை போன்றவற்றிலிருந்து,
"தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை."
என்பது போன்ற அபத்தமான ஆய்வுகள் வெளிவராத அளவுக்கு, 'தமிழ் இருக்கைகள்' மீதான வலிமையான அறிவுபூர்வ கண்காணிப்புகள் செயல்பாட்டில் இருக்கும். எனவே முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் வழியில் பயணிக்காமல், 'சட்டிகளுக்கு' போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், ஊழலிருந்தும், கட்சி அரசியல் பாரபட்சத்திலிருந்தும் காப்பாற்றாமலும் இருந்தால், உலகில் உருவாகும் தமிழ் இருக்கைகள் எல்லாம், உரிய கண்காணிப்பு இன்றி, உலக அளவில் தமிழ் மொழிக்கு கேடாகவே முடியும்.
தமிழக அரசு 'தமிழ் இருக்கைகள் கண்காணிப்பு மையம்' ஒன்றினை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அல்லது தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதும் அவசியமாகும்; போதுமான நிதி ஒதுக்கீடு அதற்கென ஒவ்வொரு வருடமும் ஒதுக்கி; உண்மையில் தமிழில் ஆழ்ந்த புலமையுள்ளவர்களை பொறுப்பாளராக,
உரிய வசதிகளுடன் பணி நியமனம் செய்து.
Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)
‘The Origins of Tamil Classical Music’ Organized by the Centre for Singapore Tamil Culture
The complimentary dimensions of Tamil & Sanskrit are referred in the above talk. Also, yAppilakkaNam, the universal grammar for the musically rendered text in tholkAppiam, was explained.
Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)
‘The Origins of Tamil Classical Music’ Organized by the Centre for Singapore Tamil Culture
Part 1 of 2
https://youtu.be/7lGtWcwS7Ww
https://youtu.be/7lGtWcwS7Ww
குறிப்பு:
எனது பதிவில் உள்ளது போன்றவைக்கான மறுப்பு கீழே குறிப்பில் உள்ளது. திருக்குறள் (423) வழியில், ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.
‘'வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவற்றுக்கு சிறிதேனும் உண்மைத்தன்மை கிடைக்கச் செய்யும் என்பதால் அவற்றை ஹார்வர்டு பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கைக் குழுவும் கண்டுகொள்ளவே போவதில்லை. ஆனால் நன்கொடையாளர்கள் நடுவேயும் தொடர்ந்து வதந்திகளையொட்டிய கேள்விகளை எழுப்பப் படுவதால் அவர்களுக்காக தமிழ் இருக்கைக் குழு இந்த ஒருமுறை மட்டும் சிறுவிளக்கத்தைத் தர கடமைப்பட்டுள்ளது. முதலில், வதந்திகளைத் திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தனிப்பட்ட உள்நோக்கங்களுக்காகவோ அல்லது நீண்டநாளைய அரசியல் காரணங்களுக்காகவோ இதைச்செய்கிறார்கள். அவர்களுடைய தனிப்பட்ட கடந்தகாலச் செயல்களின் நம்பகத்தன்மையையும், நீண்டகால அரசியல் பின்னணியையும் இணையத்தில் கூர்ந்து தேடினாலே அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் ஏன் பொய்களை உண்மைகளாகக் கற்பிக்க முயல்கிறார்களென்று புரிந்தும் கொள்ளலாம். அரசியல் காரணங்களுக்காகச் செய்பவர்கள் முன்பு கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைக் கழகத்தில் இருக்கும் தமிழ் இருக்கை பற்றியும் பரப்பிய இதுபோன்ற பொய்கள் சான்றுகளில்லாமையால் அறிவுலகத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளன. அடுத்து, ஹார்வர்டு பல்கலைக் கழகம் பற்றி பரப்பப்படும் பொய்கள் பற்றிப் பார்ப்போம்'’; http://harvardtamilchair.org/

No comments:
Post a Comment