Friday, November 28, 2014



தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய 

திருக்குறள் ஆய்வுகள்


தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்து வந்த அறிவுபூர்வ போக்குகள் 1944-இல் திராவிடர் கழகம் உருவான‌ பின் தடம் புரண்டு,  உணர்ச்சிபூர்வ திசையில் பயணம் செய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

1944 முதல் தமிழ் பற்றி வெளிவந்துள்ள தரமான‌ ஆய்வுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக, காலத்தை  X-அச்சிலும்,  தரமான படைப்புகளை  Y- அச்சிலும் கொண்டு ஒரு வரைகோடு(graph)  வரைவது சாத்தியமே. அந்த வரைகோடு  எதிர்சரிவில் (negative slope)  1944இல் தொடங்கி, சரிவு வேகமானது 1944 - 1949 இல் அதிகரிக்கத் தொடங்கி, 1949 -1967 இன்னும் வேகமாகி , 1969 முதல் எதிர்சரிவு வேகம் அதிகரித்து, இன்று சிறும நிலையில் (Minima)  இருப்பதாக வெளிப்பட்டால் வியப்பில்லை. அதே வரைபடத்தில் (graph)  உணர்ச்சிபூர்வ தனிமனித வசை பாடும் படைப்புகள் பற்றிய வரை கோட்டையும் (graphical line)  வரைவதும் சாத்தியமே. அந்த வரைகோடு 1944-இல் சிறுமத்தில் தொடங்கி, இன்று உச்சத்தில் இருந்தாலும் வியப்பில்லை. இடையில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அந்த போக்கிலிருந்து , தற்காலிக 'விடுதலை'  கிடைத்த காரணத்தால், தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாகி, வளர்ந்து, பின் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் நிதி நெருக்கடியிலும், மேலேக் குறிப்பிட்டப் போக்குகளிலும் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இது தொடர்பாகக் கீழ்வரும் ஆய்வும் முக்கியமாகும். 

தமிழ் இலக்கியங்களைத் தமிழர்க்குக் கேடாகக் கருதிய பெரியாருக்குத் துணையாக அண்ணா 'கமபரசம்' போன்ற நூல்களை எழுதினார். அவரே 1967இல் முதல்வரான பின், அது பற்றி நினைவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை, நினைவூட்ட வேண்டாம்' என்று கருத்துத் தெரிவித்த தகவலும் உண்டு. தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக பெரியார் தெரிவித்த கருத்துகளின் பின்னணியில், கடந்த சில வருடங்களில்,  'தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ள‌  தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மேடையில்  அதை நடித்துக் காட்டிய நிகழ்ச்சிகளும் ஆழ்ந்த ஆய்விற்குரியவையாகும். அதாவது அறிவுபூர்வ போக்கு பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் வளர்ந்த காலக் கட்டத்தில்,  தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்ற தமிழரின் 'ஆணி வேர்கள்' தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரத்தை வலிமையுடன் பெரியார் மேற்கொண்டு வந்தார். 1949இல் தி.மு.க தோன்றி, 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று அறிவிப்புக்கு இணங்க, பெரியாரின் நிலைப்பாட்டை ஒட்டி, அந்தப் பிரச்சாரப் போக்கில் தி.மு.க பயணித்ததா? அதில் அண்ணாவின் நிலைப்பாட்டிற்கும், கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டிற்கும் எப்போது வேறுபாடு முளைவிட்டு, வளர்ந்து, மேலேக் குறிப்பிட்ட விளைவில் இன்று உள்ளது என்பதும் ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும். 

மேலேக் குறிப்பிட்ட போக்குகள் தமிழை வளர்த்ததா? அல்லது வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்தி, வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'தமிழ்நாட்டு ‘திராவிட’ ‌அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்'' என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2014_10_01_archive.html )

அந்தப் பதிவில் “ 'கூத்த நூல்' எம்.ஜி.ஆரால் வெளியிப்பட்டவில்லை. எனவே அந்த கூத்த நூல் வெளிவந்ததை பற்றியோ , அது சிலப்பதிகார உரையில் குறிப்பிடப்பட்ட நூலா இல்லையா என்ற விவாதத்தைப் பற்றியோ, கலைஞர் கருணாநிதியோ ,அவர் சார்பு 'அறிஞர்களோ'  கண்டுகொள்ள‌வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  அச்சிடப்பட்ட நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப் பட்டன என்பது தமிழ் உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு? கணபதி ஸ்தபதி அவற்றைப் பற்றி என்னிடம் விவரித்தபோது கண் கலங்கியதை, என்னால் மறக்க முடியாது.

அவர்கள் எதிர்க்காமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் ஆதரவுடன் என் போன்றோரின் ஆராய்ச்சிகள் அந்த ஐந்திற தொழில்நுட்ப அடிப்படைகளில் எவ்வளவு வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும்? அதன் மூலம் திராவிடக்கட்சி ஆட்சிகளில் உலகப் பல்கலைக் கழகங்களில் மூடப்பட்டு வந்த தமிழ்த் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்குமா? இல்லையா? உலக அளவில் பல்கலைக் கழகங்களிலும் தனியார் ஆராய்ச்சி மையங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, புதிய தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு படையெடுப்புகள் தொடங்கியிருக்குமா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையளிக்கும் நோக்கில், எனது ஆய்வு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.” என்று, மேற்குறிப்பிட்ட பதிவில், விளக்கியிருந்தேன். 

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கி, சிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா? என்ற கேள்வியை எழுப்பும் எனது அனுபவங்களை அடுத்து பார்ப்போம்.

மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள அறிஞர்களின் ஊக்கமூட்டும் ஆர்வத்தை ஈர்த்துள்ள, தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது ஆய்வுகள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html ). தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது கண்டு பிடிப்புகளுக்கு 1996இல் நான் மேற்கொண்ட திருக்குறளில் தமிழ் இசையியல் தொடர்பான ஆய்வுகள் திறவுகோலாக (Key)அமைந்தன.

அதன்பின் நடந்த ஒரு சம்பவம் தான் திராவிட அரசியலில் திருக்குறள் சிறைபட்டிருக்கிறதோ? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்த காலக் கட்டத்தில் ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் எனது திருக்குறள் ( 821) ஆய்வில் உரையாசிரியர்கள் அனைவரின் உரைகளும் தவறு என்று வெளிப்பட்டிருப்பதைத் தெரிவித்தேன். உடனே அவர் தன் வீட்டில் இருந்த கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையை எடுத்துப் பார்த்தார். அவரது உரையும் தவறு என்று எனது ஆய்வில் வெளிப்பட்டது அவருக்கு ஏமாற்றமானது. ஆக கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையைத் தவறு என்று வெளிப்படுத்தும் ஆய்வு கலைஞர் கருணாநிதிக்கு எதிரான ஆய்வாக அணுகும் போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. நியூட்டனின் பல ஆய்வுமுடிவுகள் அவருக்குப் பின் வந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் தவறு என்று வெளிப்பட்டது நியூட்டனுக்கு எதிரான ஆய்வாக அறிவியல் உலகில் கருதப்படவில்லை. மாறாக அது அறிவியல் வளர்ச்சியாகவேக் கருதப் பட்டது. ஆனால்  திராவிட அரசியலில் சிக்கிய தமிழ்நாட்டில் அது உணர்வுபூர்வமாக, சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராகக் கருதப்படும் நிலை உள்ளதா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும்.  'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் வெளியிட்ட தமிழ் அறிஞர்,தான் சாகும் வரை, தமிழ் ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

அந்த ஆய்வுகள் பற்றி அறிந்து, என்னிடம் கேட்டு வாங்கிப் படித்த, கலைஞர் கருணாநிதியை துதி பாடி பிழைக்கும் தேவையில்லாத,  புரட்சிதாசன், அக்கட்டுரைகளை தனது 'இசைத் தமிழ்' இதழ்களில் 1997 - 1998 கால‌க் கட்டத்தில் வெளியிட்டார்.

அதன்பின்  கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்த போது, வெளிவந்த 'கோட்டம் முதல் குமரி வரை' (2000) மலரில் 'திருக்குறள் கூறும் இசைக்கலை நுட்பங்கள்' என்ற தலைப்பில் எனது திருக்குறள் ஆய்வுகள் தொடர்பான கட்டுரை வெளி வந்தது. அக்கட்டுரையில் திருக்குறள் (821) இல் வரும் 'பட்டடை' என்ற சொல் பற்றிய எனது ஆய்வு விளக்கங்கள் நீக்கப்பட்டு வெளிவந்தது எனக்கு அதிர்ச்சியானது. தொல்காப்பியத்தில் இசை மொழியியல் பற்றிய எனது கண்டுபிடிப்புக்குத் தொடக்க திறவுகோலாக‌(Key), அந்த 'பட்டடை' என்ற சொல் பற்றிய ஆய்வு விளக்கமே இருந்தது. எனவே அதை நீக்கியது எதற்காக என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பட்டடை' தொடர்பான ஆய்வு விளக்கத்திற்கு: 
http://musicresearchlibrary.net/omeka/items/show/2512

அதன்பின் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, தமிழக அரசின் கவனத்திற்கு எனது திருக்குறள் ஆய்வு பற்றியும் அடுத்தக் கட்ட வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் மடல் அனுப்பினேன். அதற்கு ( தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக முனைவர்.ம.இராசேந்திரன் ‍- பின்னாள் தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தரானவர் -  இருந்தபோது)  கீழ்வரும் பதில் கிடைத்தது.

"திருக்குறளுக்கு அறிஞர்கள் பலரால் இதுவரை ஏராளமான உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.வெளிவந்தும் கொண்டுமுள்ளன.இவற்றுள் பொருள்களும் கருத்துக்களும் ஒத்திருப்பதும் காணப்படுகிறது. மாறுபடும் நிலைமையும் காணப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது.எனவே இதன் மீது அரசு நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்."         -- - தமிழ் வளர்ச்சித் துறை   ந.க.எண். நிதி3/1257/2003, நாள் 4.5. 2004

அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில், சுயநல அரசியலுக்காக, அவசர கதியில், உரிய விதிகளின்றி, துவக்கப்பட்ட, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வினை, விருப்பமின்றி, நிர்பந்தத்தால்,  'ஆய்வுத் திட்டமாக' நான் மேற்கொண்டு, மறக்க முடியாத அவமானத்திற்குள்ளானேன்.

நேர்க்காணல் குழு தலைவராக‌, அவர் ஐ.ஐ.டி(I.I.T) யில் பொறியியல் பேராசிரியர்; (https://inae.in/expert-search/index.php/s-mohan) எப்படி தமிழ் இசையியல் (Tamil Musicology)  தொடர்பான நேர்காணலில் பங்கேற்று, அபத்தமாக கேள்விகள் கேட்டார்? என்று வியந்தேன்.('திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?'; http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html)

முறையான விசாரணை மூலம், அதன் பரிந்துரையில், உரிய விதிகளின்படி,  அந்நிறுவனம் செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன். அதன்பின், சட்டபடியான முறையில், வாங்கிய நிதியைத் திருப்பிக் கொடுத்து, எனது ஆய்வுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, அந்நூலை வெளியிட எண்ணியுள்ளேன். அந்த 'செம்மொழி' அனுபவங்களை பதிவாக, அதன்பின் வெளியிடவும் எண்ணியுள்ளேன்.

1996இல் திருக்குறள் ஆய்வுகள் மூலம் கிடைத்த திறவுகோலின்(Key) அடிப்படையில், தொடங்கிய ஆய்வுகள், தமிழ்நாட்டில் பிழைப்பு வேத சுயநல அரசியலில் தமிழ் சிக்கியதால், சுமார் 18 வருடங்கள் தாமதமாகி,  'உலகப் பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையை விரைவில் உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள், தொல்காப்பியத்திலிருந்து 2014இல் வெளிப்படத் தொடங்கியுள்ள
 

குறிப்பு: 

மத்திய அரசின் செம்மொழி நிறுவனம் தொடர்பான கீழ்வரும் கேள்விகள் அடிப்படையில்,  பாரபட்சமற்ற முறையான விசாரணை நட‌த்தி, தவறு செய்தவர்களைத் தண்டித்து, விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சரியான சட்டதிட்டங்கள் நெறிமுறைகளை உருவாக்கினால் தான்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்.
கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தது வரை, அக்கட்சிகளின் இலக்கிய அமைப்புகள் மூலமாக செம்மொழி நிறுவன நிதிகள் செலவிடப்பட்டனவா? அச்செலவுகள் எந்த அளவுக்கு நேர்மையாக செலவிடப்பட்டன? அவற்றால் தமிழுக்கு என்ன பலன்கள் ஏற்பட்டன? கூட்டணியிலிருந்து அக்கட்சிகள் விலகியவுடன், அந்த கட்சிகளின் இலக்கிய அமைப்புகள் மூலமாக செம்மொழி நிறுவன நிதிகள் செலவிடப்பட்டது நிறுத்தப்பட்டதா?

ஆய்வுத் திட்டங்கள் எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு அனுமதிக்கப்பட்டன? தி.மு.க தேர்தலில் தோற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டதா?

ஆய்வு வளர்ச்சியை ஆய்வு செய்தவர்களுக்கு அத்துறைகளில் தகுதி இருந்ததா? தகுதி இல்லாதவர்கள் 'தலைமை' வகித்து அபத்தமான கேள்விகள் கேட்டார்களா? அதை அவமானமாகக் கருதிய ஆய்வாளர் எவரின் ஆய்வுத் திடடம் ஏதேனும் முடங்கியுள்ளதா?

செம்மொழித் தமிழுக்கான (classical Tamil)  நிறுவனம்,  சங்க இலக்கிய வரிகளை பாரம்பரிய முறையில் இசையாகப் பாடி (the traditional style of Musical rendering of Classical Tamil verses ) ஒலிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தேவாரம் போன்ற நூல்களில் உள்ள வரிகளை ஓதுவார்கள் பாரம்பரியமாக ஓதி வருவது பற்றிய சான்றுகள் உண்டு. ஓதுதல் (chanting) என்பது இசைத்தல் (musical rendering) என்பதிலிருந்து மாறுபட்டதாகும். பழந்தமிழ் இலக்கிய வரிகள் மரபு வழியாக பாரம்பரிய முறையில் இசையாக வெளிப்படுத்தியதற்கு சான்றுகள் உண்டா? உ.வெ.சா, வை.தாமோதரன் பிள்ளை போன்ற பலரின் முயற்சியால் சுமார் 80 வருடங்களுக்குள் வெளிவந்த பழந்தமிழ் இலக்கிய வரிகளை, அவரவர் திறமைக்கேற்ப இசையாக வெளிப்படுத்துதலுக்கு, 'பாரம்பரியம்' என்ற போர்வையை மாட்டுவது சரியா?                                                                

2008 ‍ கோடையில்  காரைக்குடியில் மத்திய அரசு நிதி உதவியில் , செம்மொழி நிறுவனம் சார்பாக , நடந்த உலக அளவிலான செம்மொழி இலக்கியம் தொடர்பான மாநாடு நடந்தது.கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வுக்கு 'உலக அளவிலான' மாநாட்டு கட்டுரை சமர்ப்பிக்கும் நிபந்தனையான (condition) தேவையை நிறைவு செய்ய, பல கல்லூரி ஆசிரியர்கள் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க அனுமதிக்கப்பட்டு,  ஒவ்வொருவருக்கும் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதா? இது போன்ற மாநாடுகள், பிற அமைப்புகளுடன்  சேர்ந்து நடத்திய நிகழ்ச்சிகளில் என்னென்ன அடிப்படையில் செலவுகள் செய்யப்பட்டன? அவற்றால் தமிழ்ச் செம்மொழி பெற்ற பலன்கள் யாவை?

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அடிப்படையில்,  பாரபட்சமற்ற முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களைத் தண்டித்து, விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், சரியான சட்டதிட்டங்கள் நெறிமுறைகளை உருவாக்கினால் தான்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்.

மேலேக்குறிப்பிட்ட குறைபாடுகளைக் கண்டித்து இது வரை எந்த தமிழ்த்தலைவரும்/தமிழ் அமைப்பும் ஏதேனும் முயற்சித்திருக்கிறார்களா?

அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் ' பெருமைகள்'(?); தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம்
http://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html 

No comments:

Post a Comment