Monday, November 10, 2014


தமிழ்நாடு: தனித்துவமான‌ சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களம் ( Tamilnadu: Unique Sociological Research Experimental Laboratory)



‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  ) என்ற புத்தகம், உயிரியல்(Biology), இயற்பியல்(Physics),வேதியல்(Chemistry), கணிதம் (Maths)  உள்ளிட்ட  அறிவியல் அடிப்படைகளில் உயினங்களின் வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும்,அந்த வளர்ச்சிப் போக்கில் உயிர்களின் உடல் உறுப்புகள் எத்தகைய வடிவத்தில் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியும் விளக்கியுள்ளது.(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

சமூகவியலில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக 'சமுகவியல் கொள்கைகள்' (Sociological theories) தொடர்பான முதுநிலைச் சான்றிதழ்(post graduate certificate course)  படித்திருந்தேன். பெரியார் இயக்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழ விடுதலை இயக்கங்கள், சாதி/மத/விவசாய இயக்கங்கள் போன்றவை தொடர்பாக,  எனக்கிருந்த‌ சமூக அனுபவங்கள் அடிப்படையில்,  கடந்த 20 வருடங்களில் குறிப்புகள் எடுத்து வந்தேன். அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் மேற்கண்ட நூலையும் படித்து குறிப்புகள் எடுத்து வந்தேன்.இரண்டு வகைக் குறிப்புகளின் அடிப்படையில், மேற்கண்ட புத்தகத்தின் வழியில், 'சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி' ( ‘On Social Growth and Form’ ) என்ற ஆய்வை மேற்கொண்டு,  ஒரு புத்தகம் உருவாகும் அளவுக்கு, தமிழ்நாடு ஒரு வித்தியாசமான சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களமாக (Unique Sociological Research Experimental Laboratory )  இருப்பதை அறிந்தேன். அந்த வகையில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு ஏற்கனவே பதிவுகள் செய்துள்ளேன்.

திறந்த மனதும், அறிவு நேர்மையும், ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்களோடு சேர்ந்து , 'சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி' ( ‘On Social Growth and Form’ ) என்ற புத்தகம் உருவாக்கும் பணியைக் கூட்டு முயற்சியாக செய்ய எண்ணியுள்ளேன். அந்த நோக்கில் இந்த பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

பல அரசர்களின் ஆட்சியில் இருந்து, பின் காலனிய ஆட்சியில் அடிமைப்பட்டு அதன்பின் விடுதலையானது முதல், 'இந்தியர்' என்ற அடையாள வளர்ச்சியிலும், தமிழர்/திராவிடர் என்ற அடையாளக் குழப்பத்திலும் சிக்கி, இந்தியாவில் தமிழ்நாடு வித்தியாசமான மாநிலமாகப் பயணித்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். (‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html   )

இரவில் அதிகமாக மது குடித்தவர்கள் மறுநாள் காலை கண் விழித்த பின்னும், மது போதையின் விளைவுகள் தொடர்வதை 'ஹேங்க் ஓவர்' (Hang Over- a severe headache or other after-effects caused by drinking an excess of alcohol  ) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். அதே போல், இந்திய விடுதலைக்குப் பின்னும் நமது நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் இழிவாகக் கருதி, மேற்கத்திய நாகரிகம் உள்ளிட்ட போக்குகளை வழிபட்டு வரும் 'காலனிய மன நோயாளி'களாக இந்தியர்களில் கணிசமானோர், குறிப்பாக படித்த 'முற்போக்குகள்' இருந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். அந்த 'காலனிய மன நோயாளி'களிடையே, தமிழ்நாட்டில் வித்தியாசமான 'திராவிட மன நோயாளிகள்' இருப்பதையும் அதில் பார்த்தோம். (''காலனிய' மனநோயாளிகளும்,'திராவிட' மன நோயாளிகளும்'; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  ) அத்தகைய மனநோயாளிப் போக்குகள் காரணமாக, புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'(Signals)  தெரியாமல், அவற்றை இரைச்சலாகவே (Noise)அணுகுவதில் உள்ள தவறு பற்றியும் பதிவு செய்துள்ளேன். (‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?'; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html ).உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டைப் போல், 'குறுக்கு வழிகளில்' பெற்ற 'செல்வம், செல்வாக்கோடு' திருப்தி அடையாமல்,'பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கும் ஏங்கும் மனநோயாளிகளின் எண்ணிக்கையானது, இந்த அளவுக்கு, வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகையோருக்குள்ள மனநோயை ‘cultural cringe’- பண்பாட்டு அடிமைச் சேவக மனப் பாங்கு – என்று அடையாளம் கண்டு, அந்நோயிலிருந்து அந்நாடுகளில் உள்ள  தமது மக்களை பேராசிரியர்கள் மீட்கும் முயற்சிகள் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தமிழ்நாட்டில் அவர்கள் 'முற்போக்குகளாக' வலம் வருவது தனித்துவமாகும்.

எனவே உலக அளவில் சமூகவியல் ஆய்வு நோக்கில், 'வித்தியாசமான சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களம்' (Unique Sociological Research Experimental Laboratory) என்ற வகையில் தனித்துவமாக (Unique)  தமிழ்நாடு இருக்கிறது. 

உதாரணமாக, ஒரு பெண் பருவமடைந்ததைக் (menarche - first menstruation)  ) காரணமாக வைத்து, அந்த பெண்ணின் புகைப்படத்தோடு,  மிகப்பெரிய 'பிளக்ஸ்' பேனர்கள் வைத்து,கட்சித்தலைவர்கள் உள்ளிட்டு 'பிரபலங்களை' அழைத்து, மிகப்பெரிய திருமண விழா போன்று அதை நடத்தும் போக்கு இந்தியாவிலோ, உலகிலோ வேறு எங்கும் இருப்பதாகத் தெரிய வில்லை. தமிழ்நாட்டிலும், திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் இது அறிமுகமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒரு பெண் பருவமடைந்த பின் பாரம்பரிய முறையில் நடந்த சடங்குகள்(rituals)  ஆனவை, அந்த பெண்ணிற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களை வயதான பெண்கள் விளக்கி, மனவியல் நோக்கில் பக்குவப்படுத்தி, ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டதை இன்று நவீன ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. (குறிப்பு கீழே) 
அது போன்ற சடங்குகளை 'மூட நம்பிக்கை' என்று 'பகுத்தறிவு' பிரச்சாரம் செய்தது சரியா? இப்போது தமிழ்நாட்டில் 'தனித்துவமாக' அரங்கேறி வரும் மேலேக் குறிப்பிட்ட சடங்கு எந்த வகையைச் சாரும்? 'பாலாபிசேகம்' போன்ற‌ கடவுள்களுக்கான சடங்குகள் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தலைவர்களின், நடிகர்களின் கட் அவுட்களுக்கு செய்யப்படுவது சரி தானா? தமிழக அரசியலில் திரை உலகச் செல்வாக்கும்,குடும்ப அரசியல் செல்வாக்கும், இந்தியாவிலோ, உலகிலோ, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, எவ்வாறு தோன்றி வளர்ந்தது?

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்த'(?) 'பெரியார் சமூக கிருமிகளின்' துணையுடன், 'திராவிட அரசியல் கொள்ளை'க் குடும்பத்தின் வலைப்பின்னலில் இடம் பெற்று, ஒழுக்கக்கேடான வழிகளில், 'அதிவேக பணக்காரரான' 'பெரியார் சமூக கிருமி'யானவர், எனது மகளுக்கு 'வாழ்வியல் முன்மாதிரி'யாகி(Role Model), எனது குடும்பத்தை சீர்குலைத்த போக்கும், அதை தடுக்காமல் அதற்கு துணை போன உறவினர்கள் போக்குககும், எனது குடும்பத்தில் ஏற்படுத்திய சீர்குலைவுகள் மூலம், சமூகத்திற்கான கெட்ட சமூக ரத்த ஓட்டத்திற்கு, எனது குடும்பம், சுற்ற‌ம், நட்பு உள்ளிட்டவற்றில் இடம் பெற்ற 'சமூக இழைகளும்', 'சமூக பிணைப்புகளும்' எவ்வாறு சமூகத்திற்கு கேடான போக்கில் திரிந்தன? என்ற எனது சமூகவியல் பரிசோதனைக்கு(Sociological Experiment), மேலே குறிப்பிட்ட 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், கிடைத்தற்கரிய 'சமூகவியல் பரிசோதனை மிருகங்களாக' (Sociological Experimental animal specimens) எனக்கு அமைந்துள்ளார்கள். 

இத்தகைய தனித்துவமான திராவிட மனநோய்ப் போக்கை அதிக அளவில் வெளிப்படுத்தி வருபவர்கள் யார்? அவர்கள் எந்தெந்த வழிமுறைகளில் 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிக்கிறார்கள்? அவர்கள் 'செல்வாக்காக' வலம் வரும் குடும்பம், கட்சிகள்,  போன்ற அமைப்புகளில் 'எத்தகைய' மனித உறவுகளின் ('சமூக இழைகளின்'- social fibre), அமைப்புக்கானப் பிணைப்புகளின் (social bonds)  , மூலமாக‌ அந்தந்த அமைப்புகளுக்கான சமூக ஆற்றல் (இரத்த) ஓட்டம் நடைபெறுகிறது? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி, விடைகளைத் தேட, அரிய(Rare), தனித்துவமான‌ (Unique), சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் லாப நட்டம் பார்க்கும் கள்வர் நோயில் சிக்கிய சமூக ஆற்றல் (இரத்த) ஓட்டமானது,  குடும்பம், கட்சிகள், அரசு/தனியார் உள்ளிட்டு தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகளில்(structures)  இடம் பெற்றுள்ள மனிதர்களுக்கிடையிலான மனித் உறவுகளில் ‍- சமூக இழைகளில் (Social Fibers)  -என்னென்ன பண்பு மாற்றங்களை- நோய்களை - ஏற்படுத்தி வருகின்றன? அந்தந்த அமைப்புகளிலுள்ள சமூக பிணைப்புகளில் (Social Bonds)   -என்னென்ன பண்பு மாற்றங்களை- நோய்களை - ஏற்படுத்தி வருகின்றன? அவற்றின் தொகு விளைவாக  (Resultant)  அந்த அமைப்புகளின் செயல்பாட்டு தர ஏணியில் (Functional Hierarchy) என்னென்ன பண்பு மாற்றங்களை- நோய்களை - ஏற்படுத்தி வருகின்றன?

மேலேக் குறிப்பிட்ட கேள்விகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில் அதி வேகமாக‌ அதிகரித்து வரும் பள்ளி/கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்புடைய தற்கொலை('தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகம்': http://tamil.thehindu.com/tamilnadu), கொலை, பாலியல் வன்முறை, கொள்ளை போன்ற சமூகக் குற்றங்களும், சமூக அளவில் குடும்பம் உள்ளிட்ட  அனைத்து அமைப்புகளிலும் அன்பின் அடிப்படையிலான உறவுகள் சிதைந்து, குடும்ப உறவுகளில் வயதானவர்கள் 'அனாதைகள்' ஆகி வரும் போக்குகள் உள்ளிட்ட அனைத்து விளைவுகளையும் ஆராய வேண்டும். அந்த போக்குகளில் இந்தியாவில் உள்ள பொதுவான போக்குகள் யாவை? தமிழ்நாட்டில் உள்ள தனித்துவமான போக்குகள் யாவை? என்பதையும் ஆராய வேண்டும். அந்த தனித்துவமான  போக்குகளுடன் தொடர்புடைய வகையில் இந்தியாவிலும் தனித்துவமாக‌ , தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு சீரழிவு திசையில் பயணிப்பதையும் ஆராய வேண்டும்.)

அந்த ஆராய்ச்சி மூலம் உருவாகக் கூடிய புத்தகமே  'சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி' ( ‘On Social Growth and Form’ ) ஆகும். உலகப் பல்கலைக் கழகங்களில் உள்ள சமூகவியல் துறைகளில், அறிவியலின் அடிப்படையில் ஒரு புதிய பாடம் அறிமுகமாகவும், அப்பாடம் மூலம், உயிரியல்(Biology), இயற்பியல்(Physics),வேதியல்(Chemistry), கணிதம் (Maths) ஆகியவைப் பற்றிய‌ , அறிவியல் அடிப்படைகளை சமூகவியல் மாணவர்கள் படிக்க வேண்டிய தேவையும் ஏற்படும். அதன் தொகு விளைவாக சமூகவியல்(Sociology)  துறையானது, கலைத்துறையிலிருந்து (Arts Department) அறிவியல் துறைக்கு (Science Department)  இடம் பெயர்ந்தாலும் வியப்பில்லை.

--------------------------------------------------------------------------

குறிப்பு :

Rituals are society’s way of teaching and maintaining the culture. To restore the matrilineal lines of initiation (old women teaching young women) rituals are essential. A menarche (first menstruation) ritual can make this time easier and more meaningful for both the young woman beginning menstruation, and her mother. Such a ritual comforts the young woman and lets her know that her feelings are natural and have been shared by women throughout time. It focuses the attention of the community on the young women's needs at this time in her life. And it instructs the young woman about what her family and society expect of her now that she is entering womanhood.
When your daughter's first menstruation arrives, congratulate her, love her, and make sure you take care of her immediate physical and emotional needs. Then call together your community of women to participate in the ritual you have planned. Let other women support and nurture you both at this time. You may be surprised, especially if you have never attended a menarche ritual, at the healing and joy that accompany such a gathering. http://matriarchy.info/index.php?option=com_content&task=view&id=117&Itemid=148

No comments:

Post a Comment