தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (2)
சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்', தமிழைச் சீரழித்தது இனி தொடராது
சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில், தமிழ் நூல்களை - குறிப்பாக பாரதி, ஜெயகாந்தன் போன்ற இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை - விரும்பி தேடி படிக்கும் வாசகர்கள் எல்லாம், நானறிந்தது வரையில், சுயலாப நோக்கின்றி, இழப்புகளைப் பற்றிய கவலையின்றி, தாம் பணியாற்றும் இடத்தில், வாழும் இடத்தில், அநீதியை எதிர்த்தோ, நியாயமான கோரிக்கைகளுக்காகவோ போராடியதில்லை.
அத்தகைய 'எலிகளாக' வாழ்பவர்களை நம்பி, நான் ஒரு சமயம் 'பூனைக்கு மணி’ கட்டினேன். பின் அந்த எலிகள், சரணடைந்த பூனையை, எனது எதிர்ப்பினையும் மீறி, 'சேடிஸ்ட்'(Sadist)
பழி வாங்கும் நோக்கில் துன்புறுத்த, நான் வெறுத்து ஒதுங்க, பின் அதே பூனையானது அந்த எலிகளைத் தூக்கிப் பந்தாடிய விநோதமும் அரங்கேறியது. அது தொடர்பான அனுபவங்களையும் நேரம் வாய்க்கும்போது பதிவு செய்வேன்.
அவ்வாறு சமூக முதுகெலும்பு முறிந்த தமிழ் வாசகர்களை, தமது நூல்கள் மூலமாக ஈர்க்கும் எழுத்தாளர்களும், நானறிந்தது வரையில், அதே திசையில் பயணித்தவர்கள் ஆவர். (‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து, கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது', வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html
)
எழுத்தாளர் ஜெயகாந்தன் எந்த அளவுக்கு சமூக முதுகெலும்பு முறிந்த எழுத்தாளராக வாழ்ந்தார்? அதை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம்? தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்?"
என்று, நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்ச்சிபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற 'திருச்சி பெரியார் மைய'த் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத 'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்ச்சிபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர். (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html
)
அந்த திசையில் பயணித்த தமிழ் எழுத்தாளர்களும், ஒரே நேரத்தில் ஆண்ட/ஆளும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கு நெருக்கமாகி சுயலாப பலன்கள் அனுபவித்துக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எல்லாம், 'நோகாமல்' எதிர்த்து எழுதி, புகழும் பெற்றிருக்கிறார்கள்; அது போன்ற எழுத்துக்களை 'ரசித்த' தமிழ் வாசகர்களின் ஆதரவுடன். அத்தகையோர் எல்லாம் எவ்வாறு சமூகக்கேடான 'அழிவுபூர்வ அலையியற்றி' (Negative Oscillator) ? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none.html) அது போன்ற எழுத்தாளர்களையும், தமிழ் வாசகர்களையும் அடையாளம் கண்டவுடன், எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றியே வாழ்கிறேன்; அவர்கள் என்னைப் பாராட்டி எனக்கு நெருக்கமாக முயற்சித்தாலும்; 'அழிவுபூர்வ அலையியற்றி' மனிதர்களை ஒதுக்குவதன் மூலமே, நமது ஆற்றல் பெருகி பிரமிக்கும் திசையில் நாம் பயணிக்க முடியும், என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளதால்.

அதிலும் தாம் பொதுவாழ்வு வியாபாரியாக வாழ்ந்து கொண்டு, தமது சொத்து, சுகத்தை இழந்து சுயலாப நோக்கமின்றி வாழ்ந்த தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் ஓரங்கட்டாத சமூகம் உருப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. (https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html
)
விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் வாசகர்களும், சமூக முதுகெலும்பு முறிந்து, 'நோகாமல் நொங்கு சாப்பிடும்' திசையில் பயணித்ததானது, எந்த சமூக செயல்நுட்ப அரங்கேற்றம் மூலமாக, முளை விட்டு, வளர்ந்து, இன்று மரணத்தின் வாயிலை நெருங்கியுள்ளது? என்பதை அடுத்து பார்ப்போம்.
பிறக்கும் குழந்தை வளரும் போது, அக்குழந்தையின் வளர்ச்சியின் ஊடே, தமது குடும்பம், மொழி, சாதி, மதம், நாடு உள்ளிட்ட ஒரு மனிதருக்கான, பண்பாட்டுடன் தொடர்புடைய அடையாளக் கூறுகளும் வளர்கின்றன. அவ்வாறு வளர்கின்ற அடையாளக் கூறுகளில், பண்பாட்டுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த, சாதியும் மதமும் எதிர்க்கப்பட வேண்டிய அடையாளங்களாக
, மக்கள் செல்வாக்குடன் திராவிட/முற்போக்கு இயக்கங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்/போராட்டங்கள் போன்றவற்றில், இந்தியாவில் தனித்துவமாக(Unique), தமிழ்நாடு உள்ளது. அதாவது தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரமானது, சமூக நீதிக்கான போராட்டத்தில் பின்னிப் பிணைந்து தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டதே, அந்த வித்தியாசத்திற்கு வழி வகுத்தது.
“நமது சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மீது பலவிதமான வழிகளில் செல்வாக்கு செலுத்துவதாக, நமது மனதில் உள்ள, அடையாளம் இருக்கிறது.”- நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் அமர்த்யா சென்
(‘the conception of identity
influences, in many different ways, our thoughts and actions’ xii ‘Identity and
Violence, The Illusion of Destiny’ Amartya Sen)
எனவே ஒரு சமூகத்தின் பண்பாட்டில் ஏற்படும் சிதைவு முயற்சிகள், அந்த சமூகத்தின் அடையாளத்திலும், புலமையிலும் சிதைவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. (‘தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (1) ; http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_4.html
)
‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு
(social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை
(suicide), போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug
use) போன்றவை அதிகரிக்கும். (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm
)
சமூகத்தின் அடையாளத்திலும், புலமையிலும் மேலே குறிப்பிட்ட முறையில் ஏற்பட்ட சிதைவின் மூலமாக, தமிழ்நாட்டில் சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' உருவாகி, தமிழை எவ்வாறு சீரழித்தது? என்பதை இங்கு பார்ப்போம்.
எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்பட்டுள்ள, தமிழில் யாப்பிலக்கணக் கல்வியில் உள்ள குறைகளை நீக்குவதானது, 20 வருடங்கள் தாமதமாகியும், அதை நீக்க முயற்சிக்காத 'தமிழ்ப்புலமையாளர்கள்/ஆர்வலர்கள்', எத்தகைய முட்டாள்த்தனமான முயற்சியில் ஈடுபட்டு, முகத்தில் கரியைப் பூசிக் கொண்டார்கள்? என்று அடுத்து பார்ப்போம்.
தேவநேயர் பாவாணர் மறைந்த பிறகு, அவர் முன் வைத்த லெமூரிய கண்டம் பற்றிய கருத்தானது, அறிவியல் ஆய்வு முடிவுகளின் படி தவறு என்று வெளிப்பட்டுள்ளது.
“The Lemuria theory
disappeared completely from conventional scientific consideration after the
theories of plate tectonics and continental drift were accepted by the larger
scientific community.”
அது தெரியாமல், தேவநேய பாவாணரின் பக்தர்களாக பயணித்ததானது, தேவநேய பாவாணரையே கேலிப்பொருளாக்கி விட்டதா? அதை இணையத்தில் கேலி செய்தவரை, அறிவுபூர்வமாக மறுக்கும் அறிவு வலிமையின்றி, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம்,
"மின் தமிழ் கூகிள் குழுமத்தையும், விக்கிபீடியாவையும் மூடி,”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்” கோரிக்கையை முன்வைத்த 'தமிழ்ப்புலமையாளர்கள்/ஆர்வலர்கள்' யார்? யார்? என்ற விபரமும்;
'தேவநேயனை பின்பற்றுபவர்களுக்கு மூளையில் ஸ்க்ரூ லூஸ் என்பது இது தக்க சான்று. பொற்கோ, பொன்னவைக்கோ ஆகியவர்கள் லெமூரியாவிலிருந்து விலகி இன்றைய உலகத்தில் ஆஜராகுவதுதான் அவர்களுக்கு தக்க அறிவுரை.' என்ற கருத்தும் கீழ்வருவதில் உள்ளது.
அதாவது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல், பயணிக்கும் 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக, உலக அளவில் அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் கருதும் விளைவில் அது முடியும். (‘உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்கள்';
http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html) தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா.ந.சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (’ தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும் (1)’ in font TM TTVALLUVAR; http://tamilsdirection.blogspot.sg/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_3429.html ) சுமார் 5 வருடங்களுக்கு முன் இதனை வெளியிட்டபோது, தமிழ் உலகில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் தொடர்பாக, அறிவுபூர்வ மறுபரீசிலனைத் துணிச்சலான திசையில் தொடங்கும், என்று நான் எதிர்பார்த்தேன். எப்பொருள் எவர் வாய் என்று ஆய்ந்து, சுயலாப நோக்கில், அப்பொருளைப் பாராட்டும், கண்டிக்கும், இருளில் தள்ளும் தமிழ்ப்புலமையாளர்களின் செல்வாக்கு ஒழியாமல், அது சாத்தியமில்லை, என்பதை உணர்ந்தேன்.
'சிவில்'(civil) பொறியியல் பேராசிரியரும், ஆங்கிலப் பேராசிரியர்களும் 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தாம் வகித்த பொறுப்புகளின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல், நான் மேற்கொண்ட 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வுத்திட்ட நேர்க்காணலில், முட்டாள்த்தனமாகவும், அபத்தமாகவும் கேள்விகள் கேட்கும் 'துணிச்சல்' வந்ததற்கும், தமிழ்நாடு அவ்வாறு பயணித்ததே காரணமாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் உள்ள மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், இது போன்ற அவலம் நிகழ்ந்தது கிடையாது. 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், இது போன்ற, சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களில், தமது சான்றுகளின் வரை எல்லைகள் தெரியாமல், 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' ஆய்வுகள் உள்ளனவா? என்று எவரும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால், அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பும் வழங்க இயலும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html
)
தமிழ், தமிழ் இசை போன்றவற்றை 'உயர்த்தி'க் காண்பிக்கும் 'உணர்ச்சிபூர்வ' ஆராய்ச்சிகள் காரணமாக, தமிழும், தமிழ் இசையும் உலக அரங்கில், 'கேலிக்குள்ளாகும்' ஆபத்தும் இருக்கிறது. ('தேவநேய பாவாணர், 'பெரியார்' ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?' ;http://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

மேலே குறிப்பிட்டவாறு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், "மின் தமிழ் கூகிள் குழுமத்தையும், விக்கிபீடியாவையும் மூடி,”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்” கோரிக்கையை முன்வைத்த 'தமிழ்ப்புலமையாளர்கள்/ஆர்வலர்கள்' யார்? யார்?
‘“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன' என்பது உள்ளிட்ட தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்', உலக அரங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரான ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள நூலில் ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock (2007) வெளிவந்துள்ளதை மறுத்தார்கள்? எவருமே மறுத்திருக்கவில்லை என்றால், அது தமிழின் வளர்ச்சிக்கு கேடாகாதா?’ (‘'திராவிடர், திராவிட' சிறையிலிருந்து, தமிழை எவ்வாறு மீட்க முடியும்?’;
http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html )
மேற்குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளவாறு, திருக்குறள்(573)-இன் படி, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமல், தமிழ் இலக்கியங்களை எல்லாம், 'மலமாக' பார்த்த 'அறிவு மஞ்சள் காமாலை நோயினை’, மேலே குறிப்பிட்ட கோரிக்கையில் கையெழுத்திட்டவர்களில், எவராவது எதிர்த்திருக்கிறார்களா? ஈ.வெ.ரா அவர்களுக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், திருக்குறள்(448)-இன் படி, அவர் 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' போல் பயணித்து, தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாக' பார்க்க நேர்ந்ததா? (‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' ஈ.வெ.ராவா?’; http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html )
தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாக' இன்றும் பார்க்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு, நான் 'அறிவுபூர்வ இடிப்பாராக' பயணித்து, எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்.
மேலே குறிப்பிட்ட 'அறிவு மஞ்சள் காமாலை நோயில்' சிக்கிய 'பெரியார்' யோக்கியர்கள்(?) எல்லாம், பொது ஒழுக்க நெறிகளை காவு கொடுத்து, அதீத பணக்காரராகி, சீரழிவு சமூக ஒப்பீடு நோயைப் பரப்பி வரும் 'பெரியார்' சமூகக் கிருமிகளுக்கு, தெரிந்தும், தெரியாமலும் பாதுகாப்பு அரண்களாக வலம் வருகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட 'அறிவு மஞ்சள் காமாலை நோயில்' தமிழ்நாடு சிக்கி 'சமஸ்கிருத எதிர்ப்பு செனோபோபியா' நோயுடன் பயணித்ததன் விளைவாக, இன்று குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்புள்ளவையா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
( https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html )
எனது ' தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music-1996) ஆய்வின் மூலம் வெளிவந்து;

பேராசிரியர்கள் ஜெயதேவன், வீ. அரசு, பொற்கோ, ம.இராசேந்திரன் உள்ளிட்ட இன்னும் பல, 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, பெரும்பாலும் 'இந்துத்வா எதிர்ப்பு' தமிழறிஞர்களின் பார்வைக்கு வந்தும், அவர்கள் எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டிய பின்னரும்;
கடந்த சுமார் 20 வருடங்களாக தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கிலிருந்தும்;
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் எப்போது விடுதலை பெறுவது? என்பது பற்றியும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக; 'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html
)
நிகழ்கால வரலாற்றில், மொழியில் பாடல் எழுதும் இலக்கணம் தொடர்பான கல்வியில் உள்ள குறைகளை ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தி, அதனை அம்மொழியில் செல்வாக்குள்ள புலமையாளர்களும் ஏற்றுக்கொண்டு, ஆனால் மாணவர்கள் உரிய பலன் பெற 20 வருடங்கள் தாமதமான அவலமானது;
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும், இது போன்ற அவலம் நிகழ்ந்திருக்கிறதா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளியலாம்.
மேலே குறிப்பிட்ட புலமையாளர்கள் எல்லாம், 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய நக்கீரன் போல, தமிழின் நலனுக்காக, துணிச்சலாக வாழ்ந்திருந்தால், மேலே குறிப்பிட்ட அவலமானது தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்காது; தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கி, சிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா?
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) என்பது பற்றி 'அந்த வாழ்வியல் புத்திசாலி'(?) புலமையாளர்கள் எல்லாம் இதுவரை கவலைப்பட்டார்களா இனியாவது கவலைப்படுவார்களா?
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

இனியும் கூட அவர்களிடமிருந்து அந்த துணிச்சல் வெளிப்படுமானால், அது தமிழின் வளர்ச்சிக்கான தடைகள் நீங்கி வரும் போக்கிற்கு துணை புரியும். அதில் அவர்கள் தயங்கினாலும், தமிழின் வளர்ச்சிக்கான தடைகள் அகலுவதை, டிஜிட்டல் யுகத்தில் எவராலும் தடுக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html
)
திருக்குறள் (448)-இன் படி, 'இடித்து' அரசை வழி நடத்த வேண்டிய உயர் பதவிகளில், 'வாலாட்டும்' நபர்களை 'தேர்ந்தெடுத்து'(?) ஆட்சியில் இருந்தவர்கள் பயணித்தாலேயே, சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்', அகத்தில் சுயலாபக்கணக்குகளுடன் வாழ்ந்து, புறத்தில் வளமாகி, தமிழைச் சீரழித்தது நடந்தது; தமிழை வைத்துப் பிழைத்த சுயலாப வலைப்பின்னல்களின் துணையுடன். அது இனி தொடராது; தமிழும், தமிழுணர்வும், முதலில்லாத பொதுவாழ்வு வியாபார மூலதனமாக பயன்பட்டதானது, இன்றைய மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் டிஜிட்டல் உலகத்தில் கேலிப்பொருளாகி வருவதால்.
தமிழின் அடுத்த கட்ட புலமையானது, தமிழரின் வாழ்வு முன்னேற்றத்துடன் தொடர்புடைய திசையில் பயணித்தாக வேண்டும். முன்னேற்றம் என்பது புறத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதாகவும், வாழ்வில் சந்திக்கும் அகம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நல்ல முறையில் சந்தித்து ஆக்கபூர்வமாக வாழ துணை புரிவதாகவும் இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வில் அகம், புறம் ஆகிய இரண்டு புலங்களிலும் பலன் தரக்கூடிய வகையில், தமிழின் அடுத்த கட்ட புலமை வளர்ச்சியானது பயணித்தாக வேண்டும். தமிழரின் தர அடையாளத்தை (benchmark) உயர்த்தவும் அதுவே சரியான வழியாகும்.

குறிப்பு:
‘தமிழின் அடுத்த கட்ட(Next
Phase) புலமை? (1)&(2)&(3)’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html
& http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html & http://tamilsdirection.blogspot.com/2017/06/next-phase-3.html
No comments:
Post a Comment