Monday, November 19, 2018


தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (4)


இருளில் இருந்து விடுதலையாகும் திரை இசைத்தமிழ்?


1) ஒரு ஊரின் யோக்கியதையை அந்த ஊரின் இசையை வைத்து எவ்வாறு யூகிக்க முடியும்? என்பது தொடர்பான, 'நாலடியார்' வழங்கிய திறவுகோலையும்;

2) ‘யாப்பிலக்கணம் ஒழிந்த புதுக்கவிதைத்’ திறமைகளுடன் வைரமுத்து திரை இசையில் ஆதிக்கம் செலுத்தியதால் திரை இசைத் தமிழானது எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது?

3) அந்த சீரழிவுக்கு 'திராவிடபாதுகாப்பு அரண்கள் துணை புரிந்தனவா?

4) 1970களில் ஆங்கிலவழிக்கல்வி புற்றிசலாக வளர்ந்து, இசை ரசனையில் உணர்ச்சிபூர்வ மேற்கத்திய மோகத்தை வளர்த்ததும், அந்த சீரழிவிற்குத் துணை புரிந்ததா?

5) சுமார் 15 வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ‘சிங்கைச் சுடர் மாத இதழில் வைரமுத்துவால் திரைஇசைத் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள் தொடர்பான கட்டுரையும், எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லையா?

6) தமிழரின் தர அடையாளம் (benchmark) எந்த அளவுக்கு வீழ்ச்சியில் சிக்கியுள்ளது? என்பதானது திரை இசையில் வெளிப்பட்டு வருகிறதா? அந்தப் போக்கானது மரண வாயிலை நெருங்கி, இன்று மீட்சியை நோக்கி பயணிக்க உள்ளதா?

7) தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் துணையுடன், மேற்கத்திய மோக ஆதிக்கத்தில்,  விளைந்தரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்து, இன்று தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனைக் கட்டத்தில் உள்ளதா?

ஆகிய கேள்விகள் தொடர்பான விளக்கங்களையும், சென்ற பதிவில் பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2018/11/3-social-forces.html )

தமிழ்நாட்டில் 'ரசனை' என்பது எந்த அளவுக்கு சீரழிந்து கொண்டிருக்கிறது? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய கட்டாயமும் இன்று எழுந்துள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா, சிதம்பரம் ஜெயராமன், நாகூர் அனிஃபா போன்ற இன்னும் பல பாடகர்களின் பாடல்களில் வெளிப்படும் சுருதி சுத்தமும், இசை அழகியலும்;

வைஜயந்திமாலா, பத்மினி போன்ற இன்னும் பல நடிகைகள் திரைப்படங்களில் எந்த வகை நடனம் ஆடினாலும், அதில் வெளிப்பட்ட ஆடல் கலைக் கூறுகளும்;

அவர்களின் கடுமையான பயிற்சியின், பக்தியுடன் கூடிய உள்ளார்ந்தஈடுபாட்டின் (Passion) தொகு விளைவாகும் (Resultant).

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், கேட்கும் பக்தி பாடலானது;

எந்த மதக் கடவுளைப் பற்றிய பாடலாயிருந்தாலும், அந்த பாடல் வெளிவர உழைத்தவர்களின் (கவிஞர், பாடகர், இசை அமைப்பாளர், இசைப்போர்) கடுமையான பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும் ஒன்றிய போக்கானது வெளிப்பட்டால், அந்த பாடலை மெய்மறந்து ரசிப்பார்கள் என்பதை சிங்கப்பூரிலும், தாய்லாந்திலும் கம்போடியாவிலும் அனுபவித்தேன். குறிப்பாக தாய்லாந்தின் பாங்காக் நகரிலும், கம்போடியாவின் சியாம் ரீப் நகரிலும், இராமாயண ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், அந்தந்த நாடுகளின் மொழிகளில் இசைக்கப்பட்டு நடனமாடியது, உலக சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது; வருடம் முழுவதும் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் அளவுக்கு.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை எல்லாம் 'அறிவு மஞ்சள் காமாலை' நோயில் சிக்கி, எதிர்ப்பின்றி 'மலமாக' பார்த்துப் பயணித்த‌ தமிழ்நாட்டில், 'குருட்டுப் பகுத்தறிவு ரசனை' போக்கில் பயணிப்பவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். ஆனால் அதன் எதிர்விளைவாக, இன்று 'அதிர்ஷ்ட பக்தி' மோகத்தில் சிக்கி, மாணவர்களும், இளைஞர்களும் மிக மிக அதிக அளவில் கோவில் கூட்டங்களில் நிறைந்து காணப்படுகிறார்கள்; 1967க்கு முன் வாழ்ந்த மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் இருந்த 'ஆன்மீக பக்திக்கு' மாறாக.

1970களில் ஆங்கிலவழிக்கல்வி புற்றிசலாக வளர்ந்து, இசை ரசனையில் உணர்ச்சிபூர்வ மேற்கத்திய மோகத்தை வளர்த்ததன் காரணமாக;

தமிழ் ஆணிவேரை இழந்து வாழும் அவர்களின் மனங்களில் உள்ள தேவைகள் (Needs) மற்றும் ஈடுபாடுகளுடன் (Interests)  தொடர்புடையதாக மேற்கத்திய ரசனையானது தொத்து நோயாகி விட்டது…. ’(http://tamilsdirection.blogspot.com/2017/10/ )

இன்று தமிழ்நாட்டில் எந்த மத பக்திப் பாடலாயிருந்தாலும்;

அரைகுறை பயிற்சியுடன், யாப்பிலக்கண அடிப்படை அறிவு கூட இல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் வியாபார பலத்தில் வெளிவரும் பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பெரும்பாலானபாடல்களை கேட்கும்போது, தமிழ்நாட்டின் பல பரிமாண சீரழிவானது, பக்தி  'ரசனை'யிலும் வெளிப்படுவதை உணர முடிகிறது. (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html)

 ................................. ஒரு மனிதரின்,  சமூகத்தின் 'ரசனை' என்பதனாது, அவர்களின் வாழ்வியல் அடிப்படையில், அவர்களின் மனங்களில் உள்ள தேவைகள் (Needs) மற்றும் ஈடுபாடுகளுடன் (Interests)  தொடர்புடையதாகும். (http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2017-10-24T22:21:00-07:00&max-results=7  ) யாப்பிலக்கண சுருதி சுத்த நெறியில் தடம் புரண்டு பயணிப்பதற்கு, வைரமுத்துவின் அகத்தில் என்ன தேவைகளும், ஈடுபாடுகளும் இருந்தன? வைரமுத்து பக்தர்களும் அதே திசையில் பயணிப்பவர்களா? என்ற கேள்விகள் எல்லாம்;

வைரமுத்துவின் அதீத செல்வாக்கில்; திரை இசைத்தமிழும் 'மீ டூ' -வில் சிக்கியதால் வெளிப்படுவதை குறை சொல்ல முடியுமா?

'மீ டூ'(Me Too) பிரச்சினையில் வைரமுத்து சார்பாக வாதாடியவர்களில் எவராவது, வைரமுத்துவால் திரை இசைக்கு விளைந்துள்ள பாதகங்கள் தொடர்பான, எனது ஆய்வு முடிவுகளை எதிர்த்து, அறிவுபூர்வ மறுப்பினை முன்வைத்துள்ளார்களா? இனியாவது முன் வைப்பார்களா?

'மீ டூ' இயக்கம் போக்கில் வெளிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பொதுஅரங்கில் கிடைத்த முக்கியத்துவமானது, வைரமுத்துக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியை, ஏன் ஏற்படுத்தியது? ஆனால் வைரமுத்துவால் திரை இசைப் பாடல்களுக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக, சுமார் 15 வருடங்களாக, இசை ஆராய்ச்சியின் அடிப்படையில், திரை இசைத்தமிழும் 'மீ டூ' வில் சிக்கியதானது, வைரமுத்துக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியை ஏன் ஏற்படுத்தவில்லை?  வைரமுத்துவின் ஆராய்ச்சிப் பிழையின் விளைவாக, ஆண்டாள் கருணையால், ஆண்டாள் ஆதரவாளர்கள் மூலம் அவை வெளிச்சத்திற்கு வந்ததும் கூட, அந்த நெருக்கடியை ஏன் ஏற்படுத்தவில்லை?

என்ற கேள்விகளைப் புறக்கணித்து, தமிழ்நாட்டின் பொது அரங்கம் பயணிப்பதால், நட்டம் யாருக்கு? திரைத்துறைக்கா? தமிழ்நாட்டிற்கா? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

தொழில் சார்ந்த பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் தமக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கிய‌ 'மீ டூ'(Me Too) 2017 அக்டோபரில் அமெரிக்காவில் முளை விட்டு, அதிவேகமாக உலகெங்கெங்கும் பரவி வருகிறது. (https://en.wikipedia.org/wiki/Me_Too_movement#India )

'மீ டூ' என்பதானது, செல்வாக்கின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி, பாலியல் துன்பத்துக்கு உள்ளானவர்கள் பற்றியது என்பதையும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிறு வயது ஆண்களும் அடங்குவர் என்பதையும், கீழ்வரும் காணொளியில் பாடகி சின்மயி தெளிவுபடுத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=Khb3tR4-4Ps ). அவ்வாறு வைரமுத்து என்ற தனிநபரின் செல்வாக்கு காரணமாக, திரை இசைத்தமிழும் பாதிக்கப்பட்டிருந்தால், திரை இசைத்தமிழும் 'மீ டூ' வில் சிக்கியதாகாதா?

'மீ டூ'  இயக்கமானது சமூக நோக்கில் அறிவுபூர்வமாக பயணித்து, கர்நாடக இசை உலகில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. (http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/oct/14/metoo-200-members-of-carnatic-music-community-raise-voice-1885421.html & https://www.firstpost.com/india/metoo-in-carnatic-music-madras-music-academys-n-murali-on-addressing-sexual-harassment-allegations-against-artists-5450711.html

அவ்வாறு வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்திய பாடகி சின்மயி உள்ளிட்டவர்களும் கூட, திரை இசைக்கு அவரால் விளைந்த பாதகங்கள் தெரியாமல், திரையிசைப் பாடல்கள் தொடர்பாக, அவரைப் பாராட்டியதும் எனது கவனத்தை ஈர்த்தது.

முந்தையப் பதிவில் விளக்கியிருந்தவாறு, பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தமிழந்த எழுத்துக்களைப் பாட முடியாத அளவுக்கு, சுருதி சுத்த இசையில் யேசுதாஸுக்கு இருந்த உள்ளார்ந்த ஈடுபாடு, சின்மயி போன்ற இளம் பாடகர்களுக்கு இருக்கிறதா? யேசுதாஸ் போல சிரமப்படாமல், அவர்கள் சுருதி சுத்தத்தினைச் சிதைத்துப்  பாடி வருகிறார்களா? என்ற கேள்விகளுக்கு, அத்தகையோரின் பாடல் ஒலிப்பதிவுகளை எல்லாம், கணினி துணையுடன், இசைத்தகவல் தொழில் நுட்ப (Music Information Technology) ஆய்வுக்கு உட்படுத்தி விடைகள் பெற முடியும். அந்த விடைகளின் அடிப்படையில், சின்மயி போன்றவர்கள் எல்லாம், திரை இசைக்கு அவரால் விளைந்த பாதகங்கள் தெரியாமல், வைரமுத்துவை மேலே குறிப்பிட்டவாறு பாராட்டியுள்ளார்களா? என்ற கேள்விக்கு விடை பெறலாம்.

'தமிழ் உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ முட்டாள்களை வளர்த்து, 'கோழை இரட்டை வேடப் போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும் 'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத 'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூலாசிரியர் நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும்துக்ளக், தினமலர் தவிர்த்த மீடியா வெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு;

தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா?

இன்றைய மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் இந்த கேள்விகள் விவாதிக்கப்படும் போது தான், அந்த சீரழிவிலிருந்து தமிழும் தமிழ்நாடும் விடுதலை பெறும்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு எல்லாம், 'தமிழர்' அடையாளத்தின் சமூகத் தேவைகள் புரிந்து, அவர்கள் மூலமாகவும், இணையம் மூலமாகவும், தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் ரசனையானது, 'தமிழர்' அடையாளத்துடன் பிணைப்பினை ஏற்படுத்தி வருகின்றனவா?

வைரமுத்து போன்றவர்களால் தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளுக்கு, சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களாகப் பயணித்ததே முக்கிய காரணமா? என்ற விவாதத்தினையும் இனி இருளில் வைக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )

சுமார் 15 வருடங்களுக்கு முன்னேயே, வைரமுத்துவால் திரை இசைக்கு நேர்ந்துள்ள பாதிப்புகள் தொடர்பான எனது அபாய எச்சரிக்கையை இருட்டில் தள்ளாமல், வெளிச்சத்தில் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்பட்டிருந்தால், திரை இசை ரசனையும் சுருதி சுத்தமான திசையில், தடைகளின்றி பயணித்திருக்கும். வைரமுத்து தனது குறைபாடுகளை அடையாளம் கண்டு திருந்தி இருப்பார்; அல்லது திரை உலகத்தினை விட்டு ஒதுங்கியிருப்பார். 

ஓரு மனிதரின் அகவாழ்வானது எந்த அளவுக்கு சுயலாப நோக்கில் சமூகக் கேடான திசையில் பயணிக்கிறதோ, அந்த அளவுக்கு, அவரின் ரசனையும் சமூகக் கேடான போக்குகளை வளர்த்தவாறே பயணிக்கும்.

சமூகக் கேடான ரசனையில் பயணிக்கும் மனிதர்களில் பெரும்பாலோர், அந்த சமூகத்தில் படிப்பிலும், பதவியிலும், வசதியிலும் மேல் தட்டினராக இருக்கும் சமூக சூழலில்;

அந்த சமூகமானது வீழ்ச்சி திசையில் பயணிப்பதில் வியப்பில்லை.’
(http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html )

வீழ்ச்சியின் உச்சத்தைச் சந்தித்த எந்த சமுகமும், மீட்சியை நோக்கிய திருப்பு முனையினை சந்திப்பதும் இயற்கையின் விதியாகும்திருக்குறள் (448)-இன் படி, 'இடித்து' அரசை வழி நடத்த வேண்டிய உயர் பதவிகளில், 'வாலாட்டும்' நபர்களை 'தேர்ந்தெடுத்து'(?) ஆட்சியில் இருந்தவர்கள் பயணிக்க துணை புரிந்தசமூக முதுகெலும்பு முறிந்த 'அறிவியல் தற்குறிக் கூட்டம்', தமிழைச் சீரழித்ததானது, இனி தொடராது. மேலே குறிப்பிட்ட சமூகக் கேடான ரசனையும் இனி தொடராது. (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )

மேற்கத்திய மோக ஆதிக்கத்தில், தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் ஆதிக்கத்தில், விளைந்தரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்தால், அது தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனையில் இருப்பதன் வெளிப்பாடாகும். தமது மூளையில் வெளிப்பட்டவைகளை ஏமாந்து தானம் செய்த இளம் கவிஞர்கள் விழித்துக்கொள்ளும் போக்கும், உலகில் எந்த இசையைக் காப்பி அடித்தாலும், உடனே கண்டு பிடித்து, இணையத்தில் வெளிப்படுத்தி வரும் போக்கும், மேலே குறிப்பிட்ட கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில், பெரிய அளவில் 'ஹிட்' பாடல்கள் தர முடியாமல் பயணிப்பதற்கு காரணமா?

இனி அந்த போக்குகள் எல்லாம், உண்மையான படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு வசந்த காலத்தைத் திறந்து வரும் வாயில்களாகும். எனவே திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான ரசனை திசையில்,  மீண்டும் பயணிக்கும் காலமும் நெருங்கி வருகிறது. அதன் விளைவாக, திரை இசைத்தமிழானது, யாப்பிலக்கண சுருதி சுத்த எழுத்துக்கள் அடங்கிய சொற்களை அகவயப்படுத்தி(internalize), புத்துயிர் பெறும் காலமும் நெருங்கி வருகிறது.

No comments:

Post a Comment