Sunday, November 18, 2018


தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (3)


திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில்  மீண்டும் பயணிக்குமா?


'பாரதியாரின் வசனக்கவிதையே தமிழ்ப்புதுக் கவிதைக்கு அடிப்படையாக விளங்குகின்றது...... தமிழ்மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களையும் பின்பற்றி வருவது மரபுக் கவிதையாகும். இவற்றுள் யாப்பிலக்கணம் மீறப்பட்டு ஏனைய நான்கு இலக்கணங்களுடன் வருவது புதுக்கவிதையாகும்.' (http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/62155/1/themalatha_chapter1.pdf  ) 'புதுக்கவிதையின் மூன்றாவது காலக்கட்டமான வானம்பாடி இதழில்' கவிதைகள் எழுதிய வைரமுத்துவைப் போற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தான், மேற்குறிப்பிட்ட கருத்து வெளியாகியுள்ளது.

ஆனால் 1970இல் 'வானம்பாடி' இதழை ஒரு இயக்கமாக ஆரம்பித்தவர்கள் புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ. இராஜாராம், மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் ஆவர்.' அதில் வந்த கவிதைகள் எல்லாமே அன்றைய திமுக அரசையும் நிலைப்பாடுகளையும் எதிர்த்து எழுதப்பட்டவையாக இருந்தன' (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)  ) அதில் புதுக்கவிதை எழுதி கிடைத்த விளம்பரத்தில், பின் தி.மு. தலைவர் கருணாநிக்கு நெருக்கமாகி, திரை இசையில் ஆதிக்கம் செலுத்தினார் வைரமுத்து.

அந்த பின்னணியில் திரை இசையில் நுழைந்த வைரமுத்து எழுதிய பாடல்கள் மூலமாக தான், சுருதி சுத்தமற்ற(Defective Pitch) எழுத்துக்கள் அடங்கிய சொற்கள் எல்லாம் திரை இசையைக் கெடுத்து வருகின்றனவா? என்ற கேள்வியை ஏற்கனவே எழுப்பியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )

சுருதி சுத்தமுள்ள எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து, பாடல்களில் பயன்படுத்துவது? என்பது தொடர்பான;

உலக மொழிகளுக்கான இசையியல் இலக்கணமே, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் ஆகும். (‘Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development’; https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

அந்த புரிதல் இன்றி, புதுக்கவிதை திறமைகளுடன் திரைஇசைப் பாடல்களை எழுதினால் என்ன ஆகும்? என்பதற்கு, வைரமுத்துவின் பாடல்கள் இலக்கணமாக வெளிப்பட்டால் வியப்பில்லை.

திராவிட அரசியல் பின்பலமானது, திரைத்துறையில் வைரமுத்துவின் தவறுகளுக்கு பாதுகாப்பு அரண்களானதா? என்றும், விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.

இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கு அண்ணாவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். உதாரணமாக; சிங்கம் குகை வாழ் மிருகமா? குகையாய் இருந்தாலும், வீடாய் இருந்தாலும் தொந்திரவற்ற சுவரில் சிலந்தி கூடு கட்டதா? சிங்கத்தைப் பார்த்தவுடன் மனிதர்கள் பயப்படுவதை போல, சிலந்தி, கொசு உள்ளிட்ட சிறிய பூச்சி வகைகள் பயப்படுமா? என்ற அறிவுபூர்வ ஆராய்ச்சியின்றி; 'சிங்கத்தின் குகைக்குள் சிலந்திகள் கூடு கட்டிவிடக்கூடாது' என்று தி.மு.கவினரின் எழுத்துக்களிலும், பேச்சுகளிலும் வெளிப்படுவதானது;

பாரதி பாணி உணர்ச்சிபூர்வபோதையை அரசியலில் வளர்க்க, பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கிற்கு மிகவும் உதவியது. பாரதியின் படைப்புகளைப் போல, அண்ணாவின் படைப்புகளில் இலக்கணப் பிழை உள்ளதா, இல்லையா என்பது பற்றி எவரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாக தகவல் இல்லை.’ (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், வளர்ந்து வரும் சமூக விசைகள் (Social Forces) யாவை? தேய்ந்து வரும் சமூக  விசைகள் யாவை? என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வளர்ந்து வரும், மற்றும் தேய்ந்து வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை ஆராய்வது பலன் தரும்.

அந்த 'சாவியை' (Key), பழந்தமிழ் இலக்கியமான 'நாலடியார்', கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

"பணிவு இல் சீர்
 மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
 கோத்திரம் கூறப்படும். " - நாலடியார் 25:2
(‘The history of a city and the history of music of the city are intertwined’; http://musicdrvee.blogspot.in/2012/08/history-of-city-and-history-ofmusic.html  )

மேற்குறிப்பிட்ட பதிவானது, இசையானது எவ்வாறு ஒரு ஊரின் 'யோக்கியதையை' கண்டுபிடிக்க துணை புரியும்? என்று விள‌க்கியுள்ளது. (‘நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் (Isadora Dunken) வழியில்; பிரபு தேவாவும், ராகவா லாரன்சும் மீட்பார்களா?’; http://tamilsdirection.blogspot.com/2016/10/ )

'எழுத்து அசைத்து இசைக் கோடலின்' மூலம் உருவான அசைகள் சேர்ந்து உருவாக்கிய சீரின் இசையியல் (Musicology) பற்றிய புரிதல் இல்லாத தமிழ்ப்புலமையாளர்களுக்கு எல்லாம், மேலே குறிப்பிட்ட பொருள் விளங்காது.

தமிழர்களின் வாழ்வில் அகம், புறம் ஆகிய இரண்டு புலங்களிலும் பலன் தரக்கூடிய வகையில், தமிழின் அடுத்த கட்ட புலமை வளர்ச்சியானது பயணித்தாக வேண்டும். தமிழரின் தர அடையாளத்தை (benchmark) உயர்த்தவும் அதுவே சரியான வழியாகும். (https://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )

தமிழரின் தர அடையாளம் எந்த அளவுக்கு வீழ்ச்சியில் சிக்கியுள்ளது? என்பதானது திரை இசையில் வெளிப்பட்டு வருகிறதா? அந்தப் போக்கானது மரண வாயிலை நெருங்கி, இன்று மீட்சியை நோக்கி பயணிக்க உள்ளதா? என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவின் 'சிக்னலாகவே' திரை இசையில், 'பணிவு இல் சீர்' ஆதிக்கம் செலுத்தி, இன்று வீழ்ச்சி திசையில் மரண வாயிலை நெருங்கி விட்டதா? திரை இசைப் பாடல்களில் அந்த வீழ்ச்சிக்கு பங்களித்து, 'செல்வாக்குடன்'(?) வலம் வந்த வைரமுத்துவும், இனியும் திருந்தவில்லையென்றால், அதே முடிவினை சந்திப்பதைத் தவிர்க்க முடியுமா?

வைரமுத்துவால் திரை இசைக்கு நேர்ந்துள்ள அவலங்கள் தொடர்பான, எனது ஆய்வு முடிவுகள் எல்லாம், சுமார் 15 வருடங்களாக தமிழ்நாட்டில் பொது விவாதத்திற்கு வராத இருளில் நீடித்து வருகிறது.

சுமார் 15 வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்துசிங்கைச் சுடர்மாத இதழின் ஆசிரியர் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். தமிழிசை பற்றிய எனது ஆய்வுகளை அறிந்த அவர், தமது இதழில் தமிழ் இசை தொடர்பாக கட்டுரைகள் எழுதி அனுப்புமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நான் எழுதிய பல கட்டுரைகள், அந்த இதழில் வெளிவந்துள்ளன.

அக்கட்டுரைகளில் ஒன்றில், தமிழில் எழுத்தின் ஒலிக்கும், இசைச் சுருதிக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்ததை, விளக்கியிருந்தேன். தமிழில் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் அதைப் பின்பற்றாமல், திரைப்பாடல்கள் எழுதுவதால் வரும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தேன். சிங்கப்பூர் தமிழ் வாசகர்கள் மூலமாக, தமிழ்நாட்டில் ஒரு விவாதப்புயல் கிளம்பும் என்று எதிர்பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை.

பின் 'சுதேசி செய்தி' (மே, 2014) இதழில், 'திறவுகோல்' என்ற தலைப்பில், திரு. என்.சொக்கன் எழுதியுள்ள 'வண்ண வண்ண பூக்கள்' என்ற புத்தகம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் கீழ்வரும் பகுதி எனது கவனத்தை ஈர்த்தது.

" 'ஈரமான ரோஜாவே' பாட்டில் ஒரு வரி. 'தண்ணிரில் மூழ்காது காற்றுள்ள பந்து' என்று வரும்.யேசுதாஸ் ' தண்ணிரில் மூள்காது" என்று பாடினாராம்.

உடனே வைரமுத்து திருத்தியிருக்கிறார்."மூள்காது இல்லை, மூழ்காது"

யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் "மூழ்காது" வரவில்லை.'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம். 'சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்' என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ விடாமல் திருத்துகிறார். 'மூழ்காது'ன்னு அழுத்திப் பாடுங்க'.

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை திருத்திப் பாடி பார்த்தார்.முடியவில்லை.கடைசியில் அவருக்குக் கோபம், 'நான் சாகும் வரை திருத்துவீங்கள்களா?' என்று வைரமுத்து மேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ' தமிழ் சாகாத வரைத் திருத்துவேன்' “ -'சுதேசி செய்தி' (பக்கம் 26: மே, 2014)

மேலே குறிப்பிட்ட இலக்கணம் பற்றிய அறியாமையில், வைரமுத்து தவறு செய்து விட்டு, யேசுதாஸ் மீது கோபப்பட்டாரா? என்பதையே உதாரணமாக, மேலே குறிப்பிட்ட விளக்கத்தை கூடுதலாக தெளிவுபடுத்தி, பதிவு வெளியிட்டேன். (பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html   ) தெரிந்த பலருக்கும் ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தேன். (http://tamilsdirection.blogspot.com/2017/07/next-phase-4-15.html )

ஆனாலும் பொதுஅரங்கில் அது வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதன்பின், வைரமுத்து, கேலிக்கிடமான சான்றின் அடிப்படையில், ஆண்டாள் மீது அவதூறு பேசி, தேன் கூட்டினைக் கலைத்து, தன்னைத் தானே தண்டித்துக் கொண்ட திசையில் பயணித்தார். அதனால் வெளிப்பட்ட 'ஆண்டாள் கருணையில், மேலே குறிப்பிட்ட எனது பதிவானது, ஆண்டாள் பக்தர்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது. (‘ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையா? அல்லது தமிழ்ப்புலமையா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/httpwww.html  ) ஆனால் வைரமுத்து பக்தர்கள் எவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவோ, மறுத்ததாகவோ தெரியவில்லை.

'
கண்ணதாசனுக்குப் பின், திரை இசைப்பாடல்களில் சுருதி சுத்தமான எழுத்துக்கள் அடங்கிய திசையில் சொற்கள் தடம் புரண்டு, புதுக்கவிதை திறமைகளுடன்(?) வைரமுத்து பயணித்த திசையில், மேற்கத்திய மோகத்தில் சிக்கிய ரசனையும், எந்த அளவுக்கு வினையூக்கி (catalyst) ஆனது? என்பதும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய நேரமும் வந்து விட்டது

1970களின் பிற்பகுதியில் ஆங்கிலவழிப் பள்ளிகள் புற்றீசல் போல, அதிகரித்த வேகத்தில், தமிழ்நாட்டு இசை ரசனையில் மேற்கத்திய மோகம் ஆதிக்கம் செலுத்திய சூழலே, வைரமுத்து திரை இசையில் ஆதிக்கம் செலுத்த வழி வகுத்ததா? என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்துவது, திரை இசைத்தமிழுக்கு நல்லதல்ல

இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுகின்றன. அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருகின்றன.

தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் துணையுடன், மேற்கத்திய மோக ஆதிக்கத்தில்விளைந்தரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்தால், அது தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனையில் இருப்பதன் வெளிப்பாடாகும். எனவே திரை இசைத் தமிழை மீட்பதற்கான காலமும் இதுவாகும்.

(வளரும்)

No comments:

Post a Comment