“இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்". திரு.வி.க.
'மைக்ரோ உலக நாட்டார்' வழியில், ‘மேக்ரோ உலக வசதிமிகு நாட்டார்’ பயணிப்பது எப்போது?
'இருட்டறையில் 'இல்லாத' கறுப்பு பூனையை தேடும் வேலை தொடர வேண்டுமா?' என்ற தலைப்பில், நான் கீழ்வரும் கருத்தினை வெளியிட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_27.html
)
‘தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் குடும்பங்களில், தத்தம் தாய்மொழிகளில் 'அப்பா, அம்மா' என்று அழைத்து, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு வெளிப்படுவதும்;
தமிழ்நாட்டு கிராமங்களில் கூட, ஆங்கில வழி 'விளையாட்டுப் பள்ளிகளின்'
(Play School) புற்றீசல் வளர்ச்சி மூலமாக, 'மம்மி, டாடி' அரங்கேறி, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு சீர்குலைந்து, 'சுயநல மனித மிருக போக்கு' அதிகரித்து வருகிறது என்பதும்;
எனது அனுபவத்தில் வெளிப்பட்டுள்ளது; மனிதர்களாக பழகுவதற்குள்ள தகுதியையும் தமிழர்களில் பலர் இழந்து வருகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ள சூழலில்.
சுயலாப நோக்கமின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும், தலைவர்களையும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல், தம்மால் இயன்ற முயற்சியை, தாமதமின்றி தொடங்க வேண்டும்.
இது தொடர்பாக, திரு.வி.க 1920களிலேயே முன் வைத்த, கீழ்வரும் கோரிக்கையும் கவனிக்கத் தக்கதாகும்.
"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது. தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்". திரு.வி.க 18-4-1928; தமிழ்ச்சோலை
( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்?; http://tamilsdirection.blogspot.in/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html )
"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது. தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்". திரு.வி.க 18-4-1928; தமிழ்ச்சோலை
( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்?; http://tamilsdirection.blogspot.in/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html )
'நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்' என்று திரு.வி.க
1928இல் அறிவுறுத்திய பாதையில் தான், இன்று தமிழ்நாட்டில் மைக்ரோ உலகில் சாமான்யர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
'சமூகத்தில் 'மைக்ரோ உலகம்' தொடர்பற்று வாழும் 'மேக்ரோ உலகத்தில்' வாழும் மனிதர்களால், மைக்ரோ உலகத்தின் நியாயங்களை விளங்கிக் கொள்ள முடியாது'
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html).
எனவே திரு.வி.க அறிவுறுத்திய திசையில், தனித்துவமான (Unique) புத்திசாலித்தனத்துடன் தமிழ்நாட்டின்
மைக்ரோ உலகமானது பயணிக்கிறது;
என்பதை மேல்தட்டு வசதியான வாழ்க்கையில் 'சிக்கியவர்களால்'(?) விளங்கிக் கொள்வது கடினமாகும்.
அத்தகைய மேல்தட்டு வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயத்தில் சிக்கி;
‘சாகும் வரை தன்மானம் இழந்து பணம் ஈட்டும் போட்டியிலேயே காலத்தைக் கழித்து சேர்த்த சொத்தையும், செல்வாக்கையும், சாகும் போது கூட எடுத்துப் போக முடியாது:
என்பது தெரிந்தும், தமக்கான வாழ்க்கையைத் தொலைத்து, அந்த போட்டியில் மூழ்கி, சமூகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்த சமூக குற்றவாளியாக, அரசியல் கொள்ளையர்களின் சமூக முதுகெலும்பாக வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?
அதே நேரத்தில் இன்னொரு போக்கும் எனது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாழ்வதற்கான நம்பிக்கையை இழக்காத, அந்த 'கீழ்மட்ட' சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில்;
மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறி'யுடன் வாழ்பவர்களை எல்லாம், எளிதில் அடையாளம் கண்டு, எள்ளி நகையாடும் போக்கும், கீழ்மட்டத்தில் அதிகரித்து வருகிறது; திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் அரங்கேறிய 'அரசியல் நீக்கம்' வெளிப்படுத்தி வரும் ' சிக்னல்களில்' ஒன்றாக.
அந்த போக்கில், தேர்தல் காலங்களில், கட்சிகளில் உள்ள 'அந்த இலட்சிய வெறியர்களின்' வாக்கு சேகரிப்பு பலமானது குறையத் தொடங்கியதை, 'உணர்ந்து', வாக்கு சேகரிப்பில் திருப்பு முனையாக;
வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்ததானது, சில ஆயிரங்களாக 'திருமங்கலம் ஃபார்முலா'வில் உயர்ந்தது; வாக்கு சேகரிக்கும் வலைப்பின்னலானது ஆளுங்கட்சிகளின் கட்டமைப்பிலிருந்து விலகி, 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்கள் வலுவாகி, ஆர்.கே.நகர் ஃபார்முலாவில் அதிக லாபத்திற்கு விலை போகும் போக்கினை தூண்டுவித்து.
ஆட்சியாளர்கள் பலமணி நேரம் மின்வெட்டுக்கு பிறகும், அதிக விலையுள்ள சொத்துக்களை எவரும் 'சுதந்திரமாக' விற்கவும், வாங்கவும் முடியாத நிலையை உருவாக்கிய பிறகும், அதிக வருமானம் தரும் தொழில், சினிமா உள்ளிட்ட வியாபரங்களிலும் 'அந்த' சுதந்திரத்தைப் பறித்த பிறகும்;
திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது;
என்பதை அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தல் உணர்த்தியது.
அதாவது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கோபமோ, அல்லது செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் தலைவரோ அல்லது கட்சியோ வெளிப்படாத வரையில்;
திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி தேர்தலில் வெற்றி பெறலாம்.’ (‘'திருமங்கலம் ஃபார்முலா’வின் அடுத்த கட்ட வளர்ச்சியில், 'ஆர்.கே.நகர் ஃபார்முலா' மூலம் வீழ்ந்த கட்சி அரசியல்?’; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
திருமங்கலம் ஃபார்முலாவில் பணம் வாங்கிய வாக்காளர்களை குறை சொன்னவர்களில், எவராவது அடுத்து வந்த சட்ட மன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டு 'சாமான்ய நாட்டார்களிடமிருந்து, வெளிப்பட்ட, மேலே குறிப்பிட்ட, சினிமா பாணி 'ட்விஸ்டை'(twist) கவனித்திருந்தால், ஆர்.கே.நகர் வாக்காளர்களை குறை சொல்ல மாட்டார்கள். ஆதாய அரசியல் பயணித்த திராவிட, தேசியக்கட்சிகளின் கதைகளை முடித்து வைத்த 'எதிர்மறைப் புரட்சியே', ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.
ஒரு ‘நண்பர், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப்பின் கீழ்வரும் கேள்வியை எழுப்பினார்.
'நடுத்தரப் பிரிவு மக்களும் வாக்குக்கு பணம் வாங்குவார்களா?"
அவருக்கு கீழ்வரும் பதிலை தெரிவித்தேன்.
"வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்தது வரை, ஈர்க்கப்படாத நடுத்தர மக்களை, திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவில், வாக்குக்கு ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டதானது, 5 வாக்குகள் உள்ள குடும்பத்துக்கு ரூ.25000 என்பது ஈர்த்ததில் வியப்பில்லை.
'பணமே தெய்வம்' என்று பயணிக்கும் படித்த, மேல்தட்டு குடும்பங்களும் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில்;
வாக்குக்கு 5 லட்சமாக உயர்ந்தால், இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காத வசதியான குடும்பங்களும், பல மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள்".
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், 'லேப்டாப்', 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கும் அளவுக்கு ஒரு குடும்பத்துக்கு விநியோகிக்கப்பட்ட பணமானது, இளைஞர்களையும், மாணவர்களையும் பெரும் அளவில் வாக்களிக்க வைத்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.com/2017/12/3_26.html )
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உதயகுமாரோ, அச்சுறுத்தல் மற்றும் கொலை மூலம் சொத்தையும் அல்லது கூடுதலாக உயிரையும் இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், ஏ ஆர் ரகுமான், நிகழ்காலத்தில் சத்யம் தியேட்டர்ஸ் வரை பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில், நமது குடும்பத்தினர் இல்லையே என்ற நோக்கில்;
அதைக் கண்டிக்காமல், இன்றும் கூட கண்டிக்க துணிவில்லாமல், ஆண்ட/ஆளும் கட்சித்தலைவருகளுக்கு நெருக்கமாக பயணித்த பழைய/புதிய கட்சிகளின் தலைவர்களில் எவரும், மேலே வெளிப்பட்ட 'ட்விஸ்டை' புரிந்து கொள்ளாமல், 'பணம் வாங்கி வாக்களிக்காதீர்கள்' என்று சாமான்ய நாட்டார்களுக்கு அறிவுரை சொல்வது எல்லாம், அவர்களை மக்கள் பார்வையில் கோமாளிகள் ஆக்காதா?
தமிழ்நாட்டில் பொது ஒழுக்க நெறியை 'நுகரும் திறன்' இழந்து, 'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியின்- பங்களிப்பில் 'சமூக மூச்சுத்திணறலில்' தமிழ்நாடு எவ்வாறு சிக்கியுள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )
அந்த சூழலில், திரு.வி.க அறிவுறுத்திய திசையில், தனித்துவமான (Unique) புத்திசாலித்தனத்துடன் தமிழ்நாட்டின் மைக்ரோ உலகமானது பயணிக்கிறது. திருமங்கலம் ஃபார்முலாவின் வெற்றி, அதை நம்பி பயணித்த ஆளுங்கட்சியான தி.மு.க அடுத்து வந்த தேர்தலில் பெற்ற தோல்வி, அந்த போக்கில் வளர்ந்து முற்றிய ஆர்.கே.நகர் ஃபார்முலாவில், ஆளுங்கட்சி வாக்குகள் பிரிந்த நிலையில், ஆளுங்கட்சி பெற்ற தோல்வி, தி.மு.க டெபாசீட் இழப்பு, பா.ஜ.க நோட்டா கட்சியானது, திராவிட, தேசியக்கட்சிகளின் கதைகளை முடித்து வைத்த 'எதிர்மறைப் புரட்சி' ஆகாதா?
‘ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவையும் விஞ்சிய தினகரன் காட்டிய வழியில் பயணிக்காத, பழைய/புதிய கட்சிகளை எல்லாம், நோட்டாவுடனும், டெபாசீட்டுடனும் போட்டி போட்ட கட்சிகளாகவே, இனி வரும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்; சமூக மூச்சுத்திணறலானது நீடிக்கும் வரை. அறிவுஜீவிகள், பத்திரிக்கை அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் ஊழல் திமிங்கலங்களுடன் 'நெருக்கமாகி', அவரவர் 'யோக்கியதைக்கு' ஏற்ற பலன்கள் அனுபவித்து, சமூக மூச்சுத்திணறலுக்கு காரணமாகி வரும் சூழலில், அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க, மனித சங்கிலியில் பங்கேற்க, மொட்டை போட, etc, சேவைகள் கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை குறை சொல்ல முடியுமா? (‘தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறுகிறாரா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html) கடந்த சட்ட மன்ற தேர்தலில், உயிரைப் பணயம் வைத்து, ஒரு பெண் அதிகாரி ஆம்னி பெருந்தில் இருந்து கைப்பற்றிய பணமானது, தேர்தலுக்குப் பின், உரியவர் காட்டிய சான்றுகளின்(?) அடிப்படையில் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அது போல, தேர்தலில் கைப்பற்றிய பணம் திருப்பிக் கொடுத்ததில் ஊழலுக்கு இடமிருந்திருந்தால், இனி வரும் தேர்தல்களில் கைப்பற்றுப்படும் பணம் எல்லாம் கேலிக்கிடமாகாதா?’ (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )
தமிழ்நாட்டில் செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கிய அப்பாவித் தமிழர்களுக்கு குரல் கொடுத்த கட்சிகளும் தலைவர்களும், செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட/ஈடுபடும் தமிழர்கள் பற்றியும், அவர்களால் நடுக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆந்திர வனத்துறை அதிகாரி பற்றியும் இதுவரை கவலைப்பட்டார்களா? இனியாவது கவலைப்படுவார்களா? தமிழர்கள் செம்மரக்கடத்தல் திருடர்களாகி பிழைக்க வேண்டியதன் மூல காரணங்களை கண்டுபிடித்து களைவார்களா?
ஈ.வெ.ரா அவர்களின் மறைவிற்குப் பிறகு, தனித்தமிழ்நாடு கோரிக்கையானது பொதுவாழ்வு வியாபார 'முதலில்லா மூலதனமாக' வளர்ந்த சமூக சூழலிலேயே, அவ்வாறு சமூகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்த சமூக குற்றவாளிகளின், மேலே குறிப்பிட்ட 'முக்கூட்டணி' உருவாகி வீரியம் பெற்றது;
என்ற எனது கண்டுபிடிப்புக்கு திறவுகோலாக, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள்' அமைந்தன.
(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )
என்ற எனது கண்டுபிடிப்புக்கு திறவுகோலாக, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள்' அமைந்தன.
(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )
நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;
செம்மரக்கடத்தல் திருடர்களைப்போல, அந்த 'திருட்டு/ஊழல் வலைப்பின்னலின்' மூலமாக வசதியாக வாழ்ந்து வரும் தமிழர்களைப் போல வாழாமல்;
தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;
மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது;
மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;
என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.
தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாக இருப்பது போல, மேல் மட்டத்திலும் இழப்புகளை விரும்பி ஏற்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் அதிகரிக்கும்போது தான்;
'நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்' என்று திரு.வி.க
1928இல் அறிவுறுத்திய பாதையில், இன்று தமிழ்நாட்டில் பயணித்து வரும் மைக்ரோ உலகிலிருந்து மேக்ரொ உலகமானது துண்டிக்கப்பட்டு, ஆதாய அரசியலின் சமூக முதுகெலும்பாக, சமூக மூச்சுத்திணறலுக்கு காரணமாகி வருவதும் முடிவுக்கு வரும்.
சமூக மூச்சுத்திணறலானது முடிவுக்கு வரும் வரையில், அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க, மனித சங்கிலியில் பங்கேற்க, மொட்டை போட, etc, சேவைகள் கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதும் தொடரும்; செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் தலைவர் அல்லது கட்சி ஏதும் வெளிப்படாத வரையில்.
அதுவரையில் ஆர். கே.நகர் பாணியில் சசிகலாவின் படத்தைத் தவிர்த்து செயல்படும் தினகரன் கட்சியும், அ.இ.அ.தி.மு.கவும் முதல் இரண்டு இடங்களுக்கு போட்டி போட, தினகரன் பாணியில் பயணிக்காத தி.மு.க உள்ளிட்ட மற்ற பழைய/புதிய கட்சிகள் எல்லாம் டெபாசீட்டுடனும், நோட்டாவுடனும் போட்டி போட்டதாகவே, இனிவரும் தேர்தல்களின் முடிவுகள் வெளிப்படுத்தும்; வாக்கு சேகரிக்கும் வலைப்பின்னலானது, 'அரசியல் அமாவாசை செயல்நுட்பத்தில்' செல்லரித்து, இன்று திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகி, 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, அந்தந்த தொகுதிகளில் அதிக லாபத்திற்கு விலை போகும் சூழலில்.( http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
No comments:
Post a Comment