Friday, November 9, 2018


தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும் (5)


பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், .வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்


ரவிக்குமார் என்பவர், .வெ.ரா அவர்கள் பற்றி அபத்தமாக  எழுதியவைக்கு 'Outlook India ' , 'Indian Express ' போன்ற இந்திய அளவில் பிரபலமானபத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருவது, எனது கவனத்தை ஈர்த்தது.

‘Periyar's Hindutva’ - Ravikumar- Ravikumar is a Pondicherry-based writer. The article was written on 1 March 2003 and was translated from the Tamil by S. Anand. A drastically cut version of this appeared in the edit page of The Indian Express titled Questioning Periyar’s legacy dated 12 March 2003.- https://www.outlookindia.com/website/story/periyars-hindutva/225056

தத்தம் சார்பு(Subjective) கண்ணோட்ட அடிப்படையில், .வெ.ராவின் எழுத்துக்களை அதன் பின்னணியிலிருந்து பிரித்து, பயன்படுத்தி அவரை பார்ப்பன எதிர்ப்பு/ஆதரவு, தமிழர் எதிர்ப்பு/ஆதரவு, தலித் எதிர்ப்பு/ஆதரவு, முக்குலத்தோர் எதிர்ப்பு/ஆதரவு, அம்பேதர்கார் எதிர்ப்பு/ஆதரவு  காந்தி எதிர்ப்பு/ஆதரவு, ராஜாஜி எதிர்ப்பு/ஆதரவு என்று இன்னும் பல எதிர்ப்பு/ஆதரவு கட்டங்களுக்குள், .வெ.ரா அவர்களை சிக்க வைத்து எவ்வாறு எழுதுவது?

என்று பயிற்சி வகுப்பு எடுக்க உதவும் பாடப்புத்தகத்தினை ரவிக்குமார் உருவாக்கியுள்ளார். அறிவுபூர்வ திசையில், எந்த பெரியார் கட்சியாவது பயணித்தால், ரவிக்குமாருக்கு நன்றி தெரிவித்து, 'Outlook India ', 'Indian Express ' போன்ற இந்திய அளவில் பிரபலமானபத்திரிக்கைகளில் உரிய விளக்கங்கள் அளிக்கலாம். அந்த முயற்சிக்கு என்னால் இயன்ற பங்களிப்பையும் வழங்க இயலும்.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், 1980-களில் ஒரு முறை மதுரைக்கு 'பெரியாரியல்'  தொடர்பாக உரையாற்ற சென்றிருந்தேன். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஒரு 'பெரியார்' ஆதரவாளர் என்னை சந்தித்து, உரையாடலில் கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

அவர் தேவர் சாதியில் பிறந்து, 'பெரியார்'  ஆதரவாளராக வாழ்ந்து வருவதன் காரணமாக, அவரது உற்றத்திலும், சுற்றத்திலும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருவதாக கூறினார். ஏன்? என்று நான் கேட்டதற்கு, கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

முதுகளத்தூர் கலவரம் நடந்த போது, .வெ.ரா அவர்கள் காமராஜரை தீவிரமாக ஆதரித்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.  அதன் விளைவாக, முத்துராமலிங்க தேவர் செல்வாக்கில் இருந்த பகுதிகளில் திராவிடர் கழக எதிர்ப்பு உச்சமாக இருந்தது. அதனால் தமிழ்நாட்டிலேயே அந்த பகுதிகளில் தி. வேர் பிடிக்க முடியாமல் பலகீனமானது.  அந்த முக்குலத்தோர் சமூக கோபத்தின் தொடர்ச்சியாகவே, அவரது உற்றத்திலும், சுற்றத்திலும் (1980கள் வரை) 'பெரியார்' ஆதரவாளராக வாழ்ந்த அவருக்கு கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது.

காமராசர் ஆட்சியில் முதுகளத்தூர் கலவரத்தில் முத்துராமலிங்கத்தேவரை, 'இலாவகமாக'ச் சிக்க வைத்து, 'சாதித் தலைவராக' ஊதிப் பெருக்க வைத்த சதி தொடர்பான கேள்விகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_4.html & http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

வாழ்ந்த/வாழும் தலைவர்களில் பொதுவாழ்வு வியாபாரிகளாக வாழ்ந்தவர்களையும், தமது சொத்து, சுகத்தை இழந்து சுயலாப நோக்கமின்றி வாழ்ந்தவர்களையும் பிரித்துணரும் அறிவையிழந்து, சார்பு(Subjective) கண்ணோட்டத்தில்,  எந்த தலைவர் மீதும், உணர்ச்சிபூர்வ வெறுப்பை உமிழ்பவர்களை எல்லாம், ஓரங்கட்டும் சமூகமே உருப்பட முடியும். அதிலும் தாம் பொதுவாழ்வு வியாபாரியாக வாழ்ந்து கொண்டு,  தமது சொத்து, சுகத்தை இழந்து சுயலாப நோக்கமின்றி வாழ்ந்த தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் ஓரங்கட்டாத சமூகம் உருப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. அது போன்ற சமூக சூழலில், தமிழ்நாட்டில் சமூகக் கிருமிகளை உருவாக்கிய சமூக செயல்நுட்பத்தினை, கண்டுபிடிக்க உதவும் திறவுகோலாக, எனது 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அமைந்தன.

'பெரியார்'  ஆதரவு மற்றும் எதிர்ப்பு  என்ற முகமூடிகளுடன் வலம் வரும்  'சமூக கிருமிகளின்' செல்வாக்குகள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களையே முட்டாள்களாக்கியுள்ளன. மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் அவர்கள் எல்லாம் கேலிப்பொருளாகி வருகின்றனர்; தமிழ்நாட்டின் மீட்சியின் அறிகுறியாக.

.வெ.ராவாக இருந்தாலும், முத்துராமலிங்கத்தேவராக இருந்தாலும், வேறு எந்த தலைவராக இருந்தாலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில், அபத்தமாக அவர்களை எதிர்த்து எழுதுபவர்கள் கேலிக்கு இடமாவார்கள். நானறிந்தது வரையில், .வெ.ரா அவர்கள் தற்சார்புடன்(physically & mentally independent) வாழ்ந்தது வரையில், தமிழ்நாட்டில் வாழ்ந்த தலித் தலைவர்கள் எல்லாம் அவரது தொண்டினை பாராட்டினார்கள். பின் அவர் தற்சார்பு இழந்து, சாகும் வரையிலும் கூட, அதே போக்கு தான் தொடர்ந்தது. பின் அவர் மறைந்து, 1980களில் தான், அவர் தலித் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் தொடர்பாக, சிலதலித் தலைவர்களால் அபத்தமாக கேள்விகள்  எழுப்பப்படும் போக்கு  தொடங்கியது.

அதனை நான் 'நுகர்ந்து'  முளையிலேயே கிள்ளும் நோக்கில்;

தமிழ்நாட்டில் 1925 முதல், 'தீண்டாமை' தொடர்பாக எங்கெங்கு பிரச்சினைகளும், போராட்டங்களும் வெடித்தன? அவை தொடர்பாக, .வெ.ரா அவர்கள் எத்தகைய ஆதரவினை நல்கினார்? அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த சுயமரியாதை இயக்க/பின்னர் தி. ஆதரவாளர்கள் எவ்வாறு ஆதரித்தனர்? என்பவை தொடர்பாக, 'குடிஅரசுஇதழில் வெளிவந்த ஆதாரங்களைத் தொகுத்து, ஒரு சிறு நூலாக எழுதினேன். பின்னர் புதுக்கோட்டை பகுத்தறிவாளர் கழகம் சார்பில், திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி. பொதுச்செயலாளர் கி.வீரமணி அந்நூலை வெளியிட்டார்அதன் தொடர்ச்சியாக, அந்தந்த பகுதிகளுக்கு சென்று, கள ஆய்வு செய்து, ஒரு தொகுப்பு வெளிவந்திருந்தால், ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம் அபத்தமாக, .வெ.ராவை 'தலித் விரோதி' போல சித்தரித்து எழுதும் துணிச்சலே வந்திருக்காது.

அந்த தகவல்கள் தொடர்பான நினைவுகளுடன் 1980களில் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த முதியவர்கள் எல்லாம் இன்று மரணித்திருப்பார்கள். எனவே இன்று கள ஆய்வு மேற்கொண்டால், எந்த அளவுக்கு தகவல்கள் கிடைக்கும்?  என்பதும் ஐயமே. அது மட்டுமல்ல, வைக்கம் போராட்டமானது எவ்வாறு தொடங்கி முன்னேறியது? அதன் உச்சக்கட்டத்தில், தமக்கு எந்த சூழலில் அழைப்பு வந்தது? அதில் தமது பங்களிப்பு என்ன? என்பதையெல்லாம் விளக்கமாக .வெ.ரா வெளியிட்டுள்ள நிலையிலும்,  “Even the Vaikkom struggle (in Kerala, 1924), which the Periyarists praise, was not something initiated by Periyar.” என்று ரவிக்குமார் எழுதியுள்ளது அறிவுநேர்மையாகுமா? அது போலவே, .வெ.ரா அவர்களின் தொண்டுகள் பற்றி அம்பேத்கார் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும், அம்பேத்கார் பற்றி .வெ.ரா தெரிவித்த கருத்துக்களையும் கணக்கில் கொள்ளாமல்,  'தலித் எதிரியாக'  .வெ.ராவை சித்தரித்து எழுதியுள்ளதும் அறிவுநேர்மையாகுமா?

பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிபூர்வமாக 'பிராமண எதிர்ப்பு', படித்த, மிகவும் மதிக்கத்தக்கவர்கள் மத்தியில் அறிவுபூர்வ 'பிராமண எதிர்ப்பு' என்ற போக்கினைப் பின்பற்றி வந்த ஈ.வெ.ரா அவர்கள். 1944க்குப் பிறகு, உணர்ச்சிபூர்வ போக்கில் அதிகமாக பயணித்து, வயதாகி தற்சார்பு நிலையை (Physically & mentally independent) இழந்த போக்கில், அந்த வேறுபாடு மறையத் தொடங்கியது;

என்பதும் அனது ஆய்வு முடிவாகும்.

'பிராமண எதிர்ப்பு' மற்றும் '.வெ.ரா எதிர்ப்பு' செனோபோபியா (https://en.wikipedia.org/wiki/Xenophobia) மனநோயில் சிக்கியவர்களின் எழுத்துக்களில், பேச்சுகளில் ஈர்க்கப்பட்டவர்களின் பார்வைக்கு கீழ்வரும் தகவல்களையும் முன்வைத்துள்ளேன்.

‘1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றது;

காலனி அரசின் சார்பில், ராஜாஜி  .வெ.ராவை சந்தித்து, சென்னை ராஜதானியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தியது;

தமது கட்சி தொண்டர்களுக்கான பயிற்சி வகுப்புகளை, .வெ.ரா தனது பிராமண நண்பரின் தோட்டத்தில் நடத்தியது;

திராவிடநாடு பிரிவினை கோரிக்கைக்கு, ராஜாஜி உள்ளிட்ட பிராமணர்களின் ஆதரவை, .வெ.ரா கோரி பெற்றது (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html   ) ;

சென்னை லட்சுமிபுரம் பிராமணர் அமைப்பில்,.வெ.ரா பேசியது; (குறிப்பு கீழே)

ஆந்திராவைச் சேர்ந்த பிராமண நாத்தீகர் கோராவுடன் சேர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டது;

தமது உடல்நல குறைவிற்கு பிராமண மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றது;

தமது வேனை பழுது நீக்கம் செய்ய 'பிராமண' டி.வி.எஸ் நிறுவனத்தை அணுகியது;

மணியம்மையை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக, ராஜாஜியுடன் ஆலோசனை செய்தது;

சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாட்டில் சேது ரத்தினம் ஐயர் பங்கேற்றது, கம்யூனிஸ்ட் ஆதரவு பெயரில் பிராமணர்களான பி.இராமமூர்த்தி, .பாலசுப்பிரமணியம் ஆகியோரையும், காங்கிரசு ஆதரவு பெயரில் பிராமணர்களான பி.எஸ்.சீனிவாசன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரையும் ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது; (முகநூல் விவாதத்தில் வெளிப்பட்டவை)

தனது ஆருயிர் நண்பர் ராஜாஜியின் பிணம் எரியூட்டப்படுவதற்கு முன், சக்கர நாற்காலியுடன் தன்னைத் தூக்கச்செய்து, மூன்று முறை வலம் வந்து, 'இந்து மத' சடங்கை நிறைவேற்றிய அளவுக்கு, தனிமனித நேயத்தில் 'சிகரமாக' .வெ.ரா வாழ்ந்தது (http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html  );

போன்றவை தொடர்பான சான்றுகளின் அடிப்படையில்;

.வெ.ராவின் மறைவிற்குப் பின்னர், 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' (https://en.wikipedia.org/wiki/Xenophobia) மனநோயாளிகளாக வாழ்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா (1); http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html )

அது போலவே, ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம், அறிவு நேர்மையில் தடம் புரண்டு, '.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா'  மனநோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழுவதற்கும் வாய்ப்புள்ளது

..வெ.ரா, கோட்சே, உள்ளிட்டு எந்த பொதுவாழ்வு மனிதரின் தியாகங்களைப் புறக்கணித்து, அறிவுபூர்வ விமர்சனப் பார்வையையிழந்து,  அவர்கள் மீது உணர்ச்சிபூர்வ வெறுப்பினை உமிழும் 'செனோபோபியா'' எழுத்தாளர்கள் எவராவது, நம்முடன் நல்லுறவில் இருந்தால், அவர்களை திருத்த வேண்டும்; இயலாதெனில் நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயில் சிக்கியது தொடர்பாக, இன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

‘"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்? இந்தக் கேள்விகள் உடன் செயலாற்றிய எங்களுக்கு ஏற்படுவது நியாயமா? இல்லையா?”

என்று என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் தொடர்பாக, எனது விளக்கத்தினையும் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html )

அது போல முன்பு 'பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில் எனக்கு நெருக்கமாக இருந்தவர்களில், நான் மதிக்கும் சிலரும் எனது துக்ளக் ஆதரவு நிலைப்பாடினைக் கண்டித்து எழுதியவற்றிற்கும், நான் உரிய விளக்கங்கள் அளித்துள்ளேன்.(‘ 'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா? (2)- '.வெ.ரா செயலாக்கியை' (EVR Processor) மேம்படுத்தி பயன்படுத்துவதா? சமூக  காயலான் கடைக்கு ஒதுக்குவதா?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html  & http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_18.html & 'நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா?';
http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_27.htmlபாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை  'பெரியார்' கொள்கையாளனாக நான் வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா.அ.மார்க்ஸ் அதைக் கண்டித்து புத்தகமும் கட்டுரைகளும் வெளியிட்டார்; சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். அப்போது கூட நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்டமுறையில் இது போல அவரவர் அறிவு நேர்மையை சந்தேகப்பட்டதில்லை.)

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில், அம்பேத்காரைப் போல, .வெ.ரா அவர்களின் சமூக சமத்துவ இலக்கு நோக்கிய தொண்டுகளை அங்கீகரிக்கும் போக்கும் துவங்கியுள்ளது. (https://www.deccanchronicle.com/nation/current-affairs/180518/rss-will-strengthen-roots-in-dravidian-turf-dr-manmohan-vaidya.html ) அதை எதிர்த்து, இந்துத்வா ஆதரவாளர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைக்கு, ரவிகுமார் போன்றோரின் எழுத்துக்களே முக்கிய சான்றாக அமைந்துள்ளன‌. (https://indiainteracts.wordpress.com/2018/05/19/evrs-hindutwa-or-hindutwa-of-periyar-rsss-comparison-of-ideologies-of-periyar-and-hindutwa/#_ftn6 ) 19-05-2018-இல் வெளிவந்த இக்கட்டுரையின் மூலமாகவே, ரவிகுமாரின் மேற்குறிப்பிட்ட கட்டுரையானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’ (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html  ) என்ற தலைப்பில், கீழ்வரும் கருத்தினை நான் வெளியிட்டிருந்தேன்.

‘“ஈ.வெ.ரா அவர்கள் சாகும் வரை பொது சிவில் சட்ட கோரிக்கையை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார்.. அந்த 'பெரியார் தந்த புத்தியை' இழந்து, இன்று தி.க அதை எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது.

.வெ.ரா இன்று உயிரோடிருந்தால்;

குன்றக்குடி அடிகளாரை பாராட்டியது போல, ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை (Bold mine)  பாராட்டி, வரவேற்று;

சமத்துவமின்மையையும் (inequality), பாரபட்சத்தையும் (discrimination), 'செயல்பூர்வமாக' எதிர்க்க, வாய்ப்புள்ளவற்றில், இன்றும்(present)  நாளையும்(future) ஆர்.எஸ்.எஸுடன்   கூட்டாக செயல்பட்டு, அக்கருத்து 'வெறும் பேச்சா? அல்லது செயல்பூர்வமா?' என்று சமூகவியல் சோதனை (sociological experiment)  மூலம் நிரூபிப்பார் என்பது என் கருத்தாகும்.

" Without mentioning the debate on intolerance,  Bhagwat emphasised that truth has no place for inequality and discrimination. “Accept all the diversities and look at others with affection in all circumstances. Consider others in your place. They all our ours. The society gets its power from the social unity. A person behaves when he realises that all are equal,” Bhagwat said.

He referred to Ambedkar to insist that political unity cannot be achieved sans economic and social unity. “The Constitution can’t protect us unless we stand united leaving aside social inequality. Equality will be established only when everyone resolves that he won’t exploit anyone,” Bhagwat said echoing Ambedkar’s opinion.": http://www.newindianexpress.com/nation/Embrace-People-of-Different-Beliefs-Ideologies-Bhagwat/2016/01/04/article3210181.ece

இந்துதவா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் இருந்து, மேலே குறிப்பிட்ட எனது பதிவுகளுக்கு, எந்த பின்னூட்டமும் இதுவரை வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்று, திறந்த மனதுடன் ஆய்வுக்கு உட்படுத்தி, எனது எழுத்துக்களில் தவறேதும் உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிப்பட்டால், அதற்கு நன்றி தெரிவித்து, பகிரங்கமாக திருத்திக் கொண்டு பயணிப்பேன்; 1944க்கு முன் .வெ.ரா அவர்கள் பயணித்தது போலவே.

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் பலவகை செனோபோபியா நோயாளி எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் ஓரங்கட்டினால் தான், தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளை ஒழிக்க முடியும். திறந்த மனதும், அறிவு நேர்மையும், சுயலாப நோக்கற்ற சமூகப்பற்றும் உள்ளவர்கள் எல்லாம் ஓரணியில் சேர முடியும்; தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிவிலிருந்து மீட்க; இந்தியாவிற்கே முன்னுதாரணமான தேசக்கட்டுமானத் திசையில் (Nation Building) தமிழ்நாடு பயணிக்க

சமூகத்தில் வாழும் மனிதர்களை தோற்றுவாயாகக் கொண்டு வெளிப்படும் சமூக ஆற்றல்கள்(Social Energy) எல்லாம்;

எந்த சமூக இயக்கவியல் தொழில்நுட்பத்தில் (Social Dynamics Mechanism) தொகுவிசைகளாக (Resultant Forces) வெளிப்படும்?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

சமூக முரண்பாடுகளின்(Social Contradictions)   சமூக தொகுவிசை திசையில் (Social Resultant Force Direction) தான் ஒரு சமூகமானது பயணிக்கும். சமூகத்தில் எதிரெதிராக வெளிப்படும் சமூக விசைகளின்(Social Forces)  தொகுவிளைவு திசையில் தான் சமூகமானது நல்ல/தீய‌ திசையில் பயணிக்கும்.  தமிழ்நாடு சீரழிவு திசையில் பயணிப்பதற்கு, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு சமூக விசைகளில், சுயலாப நோக்கில் பொதுவாழ்வு வியாபாரிகள் அம்பலமாகாமல், எதிரெதிர் முகாம்களில் பதுங்கி, ஒட்டுண்ணியாக  பயணிக்க முடிவதே முக்கிய காரணமாகும். எதிரெதிர் உணர்ச்சிபூர்வ பேச்சுக்களும் எழுத்துக்களுமே அவர்களை அம்பலமாகாமல் பாதுகாத்து வரும் கவசங்கள் ஆகும்.  திறந்த மனதும், அறிவு நேர்மையும், சுயலாப நோக்கற்ற சமூகப்பற்றும் உள்ளவர்கள் எல்லாம் விழித்துக் கொண்டால், அந்த கவசங்கள் உதிரும். சமூகமானது சீரழிவு திசையில் இருந்து திரும்பி, மீட்சி திசையில் பயணிக்கத் தொடங்கும்.


குறிப்பு :

" தோழர்களே!

யாரோ சில பிராமணர்கள் " பெரியார் ராமசாமி நாயக்கர் பிராமணர்கள் இந்த நாட்டில் வாழ்வே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாக கேட்டார்கள்" என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ, திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல....... அதிருப்திகளுக்கு காரணமானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார்."
இராயப்பேட்டை லட்சுமிபுரத்தில்  5.1.1953இல் சொற்பொழிவு- விடுதலை 8.1.1953

No comments:

Post a Comment