Saturday, May 19, 2018

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (2);

 


கருப்பு, சிவப்பு, காவி அணிகளிடையே, அறிவுபூர்வ விவாதத்திற்கு;



‘துக்ளக்’ மூலமாக கனியும் சமூக சூழல்

 


முந்தைய பதிவில் கீழ் வருவதைப் பார்த்தோம்.

‘என்னை அறிமுகப்படுத்தி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதிய கட்டுரையானது, ‘துக்ளக்’ (15-05-2018) இதழில் வெளிவந்துள்ளது. அது தொடர்பாக, ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து, கீழ்வரும் பின்னூட்டம் வந்துள்ளது

துக்ளக் அனுமதித்து கருப்பு காவி பாதிப்பு இல்லாமல் வந்தால் வரவேற்புக்குரியதே.

துக்ளக் கில் வருவதால் பெரியார் அமைப்புகளின் கவனத்தைப் பெறும்.
தாங்கள் எதிர்பார்க்கும் விவாதம் கருப்பு, சிவப்பு, காவி அணிகளிடையே ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை காத்த அமைதி கலையலாம்.’

'இதுவரை' என்பது குறைந்த காலமல்ல;’. (http://tamilsdirection.blogspot.sg/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

என் மீது மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டுள்ள இன்னொரு 'பெரியார்' ஆதரவாளர், துக்ளக்கில் நான் எழுதும் முடிவினை மறுபரீசீலனை செய்ய வேண்டும், என்ற ஆலோசனையை வலியுறுத்தி, நீண்ட மடல் எழுதியுள்ளார். அதில் 'பிராமணர்கள், பிராமணியம்' தொடர்பாக, .வெ.ரா அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் உள்ள அபத்தங்கள் பற்றிய, சான்றுகள் அடிப்படையிலான எனது பதிவுகளை படிக்காமலேயே பல கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது;  'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html   ) இது போன்ற எனக்கு வரும் மடல்களில் வெளிப்படும் கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொண்டே, துக்ளக்கில் எனது கட்டுரைத் தொடர் வெளிவரும்.

எனது பதிவில் குறிப்பிட்ட கீழ்வரும், இன்னும் மோசமாக துக்ளக்கையும், குருமூர்த்தியையும் இந்துத்வா ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் கருத்துக்களை கணக்கில் கொண்டு,  அந்தமடல் எழுதப்பட்டதாக தெரியவில்லை'

" “ரத்தம் உறிஞ்சும் வைரஸ்களை கூட வைத்துக் கொண்டே தேசியம் பேசுது துக்ளக் -


சனி பிடித்திருப்பது துக்ளக்கை.”


எட்டப்பர்களை எட்டி வைத்தால்தான் பத்திரிக்கை பலப்படும்.”


இல்லையேல் பஜ்ஜி மடிக்கும் பேப்பருக்குக் கூட லாயக்கில்லாமல் குழந்தைகளின் வெளியேற்றத்தைத் துடைக்கத்தான் பயன்படும்.

மேலே குறிப்பிட்ட மடலில்  கீழ்வரும் பகுதியை பொது விவாதத்திற்கு உரியவையாக கருதி, கீழே குறிப்பிட்டுள்ளேன்.

துக்ளக் இன்று தமிழ் வழிக் கல்வி பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றது.” 

மேற்குறிப்பிட்ட கருத்து தொடர்பாக‌ படிக்கவும்

1. October 19, 2014 ; ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8)
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html

2. November 10, 2015; ‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?
Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
 
மேலே குறிப்பிட்ட பதிவுகளை எதிர்த்து எந்த பின்னூட்டமும்(Feedback) வரவில்லை; இனி வந்தாலும் வரவேற்பேன்.

எனது பதிவுகளை சரியாக படிக்காமல், அதில் தமக்கு படும் குறைகளை சமூக பொறுப்புடன் கூடிய அறிவுநேர்மையுடன் தெரிவிக்காமல்;

ஏற்கனவே மனதில் உள்ள விடையோடு மேலோட்டமாக படித்து, 'மனித எந்திரர்' பாணியில் எழுதி எனக்கு வரும் மடல்கள் எல்லாம், ' மனித எந்திரர்' தொடர்பான சமூக ஆய்விற்கும் பயன்படும்.

ஒரு மனிதர் எந்த அளவுக்கு நேர்மையானவர், புலமையுள்ளவர், சமூக அக்கறையுள்ளவர்? அல்லது சுயலாப நோக்கில், பொது ஒழுக்க நெறிகளை சீர் குலைத்து வாழ்பவர்? என்பதைப் பற்றிய கவலையின்றி:

கொள்கை 'புற லேபிள்கள்' அடிப்படையில், நம்மை விரும்பியவர்கள், நமது அறிவு அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக 'வெறுக்கவும் செய்வார்கள்' என்பதை, 'சில பெரியார் ஆதரவாளர்கள்' அனுபவபூர்வமாக எனக்கு புரிய வைத்துள்ளார்கள்; 'கருத்துரிமைக்கு வழியற்ற குருட்டுப் பகுத்தறிவும்' ஈ.வெ.ரா அவர்களின் தொண்டால் அரங்கேறியுள்ளதா? என்ற ஆய்வுக்கும் வழி வகுத்து.( (‘Rationalism cannot be a basis for subscribing to a political party based on any dogma, or to express an a priori affiliation or support for a non-dogma based political party.’ ; https://mm-gold.azureedge.net/Special_Event_/rationalist_day/rationalism_aparthib.html  )

முரண்பாடுகள்(Contradictions) பற்றிய புரிதலின்றி, 'இந்து, முஸ்லீம், தலித், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்' போன்ற இன்னும் பல,‌  புற 'லேபிள்களை' வைத்து, அந்த 'லேபிள்'களுக்குள் உள்ள ஆக்கபூர்வ/அழிவுபூர்வ முரண்பாடுகள் ( இயக்கத் தன்மையிலான சமூக தள விளைவு - dynamic social polarization ) பற்றிய புரிதலின்றி, எந்த ஒரு மனிதரையும், கட்சியையும் விரும்பி/வெறுத்து வாழ்பவர்கள் எல்லாம்மனித எந்திரர்கள்’ ஆவர். நான் சந்தித்த சாமான்யர்களிடம், அந்த 'மனித எந்திரர்' போக்கு வெளிப்பட்டதில்லை. இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் பாதுகாப்பின்மை மனநோயில்(Insecurity; குறிப்பு கீழே) சிக்கியவர்களும், 'சொகுசு பாதுகாப்பு மண்டிலத்தில்'(Comfort Zones) வாழ்பவர்களும், அவ்வாறு மனித எந்திரர்களாக வாழ்வதையே விரும்புவார்கள்.

சாதாரண தமிழர்களின் குறைபாடுகள் பற்றிய 'மறுபக்கம்' தொடர்பான நூல் எழுதிய எழுத்தாளரைப் போல, படித்த இடத்தில், பணியாற்றிய இடத்தில், வாழ்ந்த இடத்தில் எந்த அநீதிக்கும் எதிராக போராடாமல், 'புத்துசாலித்தனமான சமரசத்துடன்' வாழ்ந்து,   திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு 'வாலாட்டி' பயணித்து, ஜென் தத்துவம், ரமண மகரிஷி தத்துவம் உள்ளிட்ட 'மேல்மட்ட அறிவுஜீவி' கவசங்களுடன், 'உபதேசிகளாகவும்' 'பாதுகாப்பு மண்டிலத்தில்' வாழ்ந்து வருபவர்களை நான் அறிவேன்; அத்தகையோரிடம் 'சாமான்யனாக’, அவமானங்களை, சமூகவியல் பரிசோதனை நோக்கில், விரும்பி அனுபவித்திருக்கிறேன். (http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

பிராமணர்களை எதிரியாக சித்தரித்து, இயக்கம் நடத்திய பெரியார் .வெ.ரா அவர்கள், இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை கோரி, பெற்று, பகிரங்கமாக அறிவித்தது ஏன்? என்ற செயல்பாட்டை, அந்த மனித எந்திரர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்கள் மோடி  ஆதரவாளர்களாக ஏன் மாறினார்கள்? (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU), 

அது  போல, இன்று பெரியார் .வெ.ரா அவர்கள் உயிரோடிருந்தால், தான் அன்றைய முதல்வர் காமராஜரை ஆதரித்தது போல, இன்றைய பிரதமர் மோடியையும் ஆதரித்திருப்பார் என்பதையும் அந்த 'எந்திரர்களால்' விளங்கிக் கொள்ள முடியாது. (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) அது மட்டுமல்ல, விவாதங்களில் விவாத வரம்பை மீறி, விவாதத்தில் எதிர்நிலைப்பாட்டில் உள்ளவரின் நோக்கத்தையும், அறிவையும் சந்தேகித்து இழிவு செய்யும், அநாகரீகமும், அந்த எந்திரர்களின்' மூளையின் செயல்பாட்டில் இருப்பதானது, தமிழ்நாடு அறிவுபூர்வ திசையில் பயணிக்க தடையாக உள்ளது. 

இன்று பேரா .மார்க்ஸை போற்றி பாராட்டும் 'பெரியார்' ரவாளர்களுக்கும், வன்மையாக கண்டித்து வரும் இந்துத்வா ரவாளர்களுக்கும், கீழ்வரும் தகவல் நம்பமுடியாததாக இருந்தால் வியப்பில்லை.

தஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், நான் 'பெரியார்' கொள்கையாளனாக வளர்ந்த காலக்கட்டத்தில், 'தமிழ்நாட்டை கெடுத்த பாவியாக பெரியாரை' சித்தரித்து பல கேள்விகளை எழுப்பிய பேரா.மார்கஸ் தான், அன்று எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற எனது நூலை எதிர்த்து நூல் வெளியிட்டு, பல கூட்டங்களிலும் (அவருடன் சென்று, அவர் மேடையில் அமர, நான் பார்வையாளனாக பங்கேற்ற‌) 'கடுமையாகவே' பேசினார். ஆனால் எங்கள் நிலைப்பாடுகளில் ஒருவரையொருவர் நோக்கத்திலோ, அறிவுநேர்மையிலோ, சந்தேகித்ததில்லை. ஏனெனில் அவரவருக்கு கிடைக்கும் உள்ளீடுகளைக்(inputs) கொண்டு, அவரவர் அறிவு அனுபவ அடிப்படைகளில் நிலைப்பாடுகள் மேற்கொள்வார்; என்ற புரிதல் எங்கள் இருவருக்கும் இருந்தது.  அந்த புரிதல் இன்றி நண்பர்களாக பயணிப்பவர்கள் யாராகஇருந்தாலும், அது 'அகத்தில் பொருந்தாமல், புறத்தில் பொருந்திய' நட்பு ஆகும். (திருக்குறள் 821; இசையியல் பொருள் உள்ள முதல் வரிக்கான உரைகள் எல்லாமே தவறு, என்று எனது ஆய்வில் நிரூபித்துள்ளேன்.-http://musicresearchlibrary.net/omeka/items/show/2450 )

காலத்தின் ''நகைச்சுவையை' ரசிக்க விரும்புபவர்கள் 1980 களுக்கு சற்று முன்னும், பின்னும், 'பெரியார் .வெ.ரா‍' பற்றியும், 'தேசியம்' பற்றியும் பேரா..மார்க்ஸ் எழுதி வெளிவந்த, கட்டுரைகளையும், புத்தகத்தையும் படிக்கவும். அன்று சக பேராசிரியராகவும், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பருமாக இருந்த அவர், நான், பெரியார் கொள்கைப் பற்றில் எழுதி, வெளியிட்ட 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற சிறு நூலை மறுத்து, 'கடுமையாக'க் கண்டித்து, கட்டுரைகளும், நூலும் வெளியிட்டார். அதிலும் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளிவந்திருக்கும். அவற்றைப் படித்து விட்டு, கீழ் வரும் அவரின் கருத்தையும் படித்தால் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அவரே மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். நீண்ட இடைவெளி; இப்போது எப்படி என்று எனக்கு  தெரியாது. 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களை, இந்த காலக்கட்டத்தில், 'ஆசிரியர்' என்று பேரா..மார்க்ஸ் எழுதி வருவதானது, எனக்கு நம்பமுடியாத நகைச்சுவையாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/04/2.html )

'பெரியார்' கொள்கையாளராக பயணித்த காலத்தில் தான், விவாதிப்பவரின் நோக்கத்தையும், அறிவுநேர்மையையும் சந்தேகித்து, குறை சொல்லும் சமூக நோயினை, 'பெரியார், கம்யூனிஸ்ட், தமிழ்த்தேசியம்' ஆதரவு அறிவுஜீவிகளிடம் அனுபவித்தேன். அதனால் என் மனம் நொந்ததில்லை. ஏனெனில் அது போன்றவற்றையும் ' சமூக சிக்னலாக' கருதி, எனது ஆய்வுக்கு உட்படுத்தியே பயணிக்கிறேன்.  

விவாதப்பொருளின் வரம்பு எல்லைக்குள் நின்று, அறிவுபூர்வமாக விவாதத்தினை முன்னெடுக்கும் அறிவு வலிமை இல்லாதவர்கள் எல்லாம், அந்த எல்லையைத் தாண்டி, விவாதிப்பவரின்  நோக்கத்தையும், அறிவுநேர்மையையும் சந்தேகித்து, இழிவு செய்து தப்பிக்கும் குறுக்குவழியை நாடுவார்கள். அது போன்ற பெரியாரிஸ்டுகளை எல்லாம் குப்பையாக கருதி ஒதுக்கினால் தான், தமிழ்நாட்டின் பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் முன்னேறும், என்பதும் எனது அனுபவமாகும்.

1944க்கு முன் தம்மை எதிர்த்து கருத்துக்கள் வெளியிட்ட முத்துச்சாமி வல்லதரசு, ஜீவா போன்றவர்களின் நோக்கத்தையும், அறிவுநேர்மையையும், .வெ.ரா அவர்கள் சந்தேகிக்கவில்லை. 1944க்குபின் தான், அண்ணாதுரை உள்ளிட்டு தம்மை எதிர்த்தவர்களின் நோக்கத்தையும், அறிவுநேர்மையையும் சந்தேகித்து அவர் கருத்துக்கள் வெளியிடும் போக்கினைத் தொடங்கி வைத்தார்

அறிவுபூர்வ விவாதத்திற்கு வழியின்றி, விவாதிப்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி தூற்றும் போக்கில் தி.க.வும் தி.மு.கவும் பயணித்து 1967இல் 'சங்கம‌மாகி', இன்று அந்த போக்கில், தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்களும் சீர்குலைவுக்குள்ளாகி வரும் அபாயத்திலிருந்து, தமிழ்நாடு விடுதலை பெற்றாக வேண்டும். தவறினால் 'மாட்டிக் கொள்ளாமல்' சட்டத்தையும், சமூக ஒழுக்க நெறிகளையும் சீர்குலைத்து, 'அதிவேக பணக்காரகளாக', திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு 'முட்டுக்கொடுத்து, பல்ன்பெற்று' பயணிக்கும் 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்து வருவதை எல்லாம் ஒழிக்கமுடியாது.


அந்த 'கூட்டணியில்', உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்து, தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளின் வளர்ச்சிக்கு அபாயமாகி வரும் போக்கிலிருந்து, தமிழ்நாடு மீள முடியாது; அந்த 'கூட்டணியின் மூல பலமான' தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் தண்டிக்கப்படாமல்.

இன்றுள்ள  ஆங்கில வழி மாணவர்களும், இளைஞர்களும், சாமான்ய மக்களும் எவர் பேச்சை கேட்பதிலும், எழுத்தை படிப்பதிலும் ஆர்வமின்றி உள்ளார்கள். தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் செயல்பூர்வமாக பேசி வருபவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் போக்கானது தொடங்கி விட்டது. அவர் 'பெரியாரிஸ்டா? ஆர்.எஸ்.எஸா? கம்யூனிஸ்டா? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. கல்வி நிலையங்களில், தொழில், வியாபார நிறுவனங்களில். சாதி, மத அடிப்படைகளில் வெளிப்படும் பாரபட்சத்தையும், ஊழல் ஒழுக்கக் கேடுகளையும், செயல்பூர்வமாக யார் எதிர்த்தாலும், அவர்களை பாராட்டி ஆதரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன், என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல் அது.

திருச்சி  NIT-இல் சுமார் 10 மாணவ நண்பர்கள் தமது பணத்தில், அங்கு சில நாட்கள் நடந்த மாணவர் விழாவில், 'தற்காலிக உணவகம்' நடத்தி, அதன் மூலம் ஈட்டிய சில லட்சம் ரூபாய்கள் மூலமாக, அருகிலுள்ள கிராமத்தில், 'சமுதாய கூடம்' கட்டித் தந்துள்ளார்கள்: ஏற்கனவே தாம் புரிந்து வந்த உதவிகளின் தொடர்ச்சியாக.

தெலுங்கு, வடமாநில மாணவர்கள் முன்னணி பங்காற்றிய அக்குழுவில் தமிழ் மாணவர்களும் இருந்தனர். விளம்பரமின்றி, தமது மன திருப்திக்கு நடந்த காரியம் அது.

சென்னையில் படிக்கும் பொறியியல் மாணவ நண்பர்கள் ஒரு குழுவாக, கீழ்வரும் உதவியை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், தாம்பரம் அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 'உதவிக்கு தகுதியானவர்களை' தேர்ந்தெடுத்து, அவர்களின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறார்கள்.

மீடியா வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்த, இது போன்ற போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும், அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post.html )

சாதி, மத, மொழி, வேறுபாடுகளை எல்லாம் ஓரங்கட்டி, மனிதாபிமானத்தை மட்டுமே முன்னிறுத்தி, மேலே குறிப்பிட்டவை தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன.

மேலே குறிப்பிட்ட பின்னணியில், கருப்பு, சிவப்பு, காவி அணிகளிடையே அறிவுபூர்வ விவாதம் நடைபெற வேண்டிய சமூக சூழலும் துக்ளக் மூலமாக கனிந்து வருகிறது.

தமிழ்வழிக்கல்வி மீட்சி, கல்வி நிறுவனங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சத்தினை எதிர்ப்பதை, ஆதரிப்பவர்களை எல்லாம் ஓரணியாக்கி செயல்படாமல்;

'ஆர்.எஸ்.எஸ்ஸா? வேண்டாம்' என்று ஒதுங்கும் 'பெரியார்' கட்சிகள் எல்லாம் சமூக சருகாகி உதிரும் காலமும் நெருங்கி வருகிறது.

மாறாக அந்த ஒற்றுமை முயற்சியை தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எவரேனும் தவிர்த்தால், அவர்களை அடையாளம் கண்டு, ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு தெரிவித்து;

ஆர்.எஸ்.எஸ் தலைமையானது, தாய்மொழிவழிக்கல்வி மற்றும் சாதி, மத அடிப்படைகளிலான பாரபட்ச எதிர்ப்பு போன்றவற்றில் எந்த அளவுக்கு செயல்பூர்வமாக உண்மையாக இருக்கிறது? என்று அறிந்து, அந்த முடிவின்படி பாராட்டலாம்; கண்டிக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்ஸை பாராட்டலாமா? என்று 'பெரியார்' கட்சிகளில், சுயலாப நோக்கின்றி வாழ்பவர்கள் எல்லாம் குழம்ப வேண்டியதில்லை.

1925 வைக்கம் போராட்டமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமும் பெற்ற வெற்றிகளுக்கு, அது போன்ற ஓற்றுமையே முக்கிய காரணமாகும். இன்று அந்த ஒற்றுமை கூடி வருவதைக் கெடுக்கும் எந்த அமைப்பையும் ஒதுக்கி வைத்தால் தான், தமிழும், தமிழ்நாடும் மீள முடியும்.

அந்த சமூக சூழலை கணக்கில் கொண்டே, 2016-இல் கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’ (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

இன்று வரை அதை எதிர்த்து, எந்த பின்னூட்டமும் வரவில்லை; இனி வந்தாலும் வரவேற்பேன்

1944க்குப்பின், மேலே குறிப்பிட்ட இரண்டு போராட்டங்களையும் போன்ற போராட்டத்தினை, ஈ.வெ.ரா முன்னெடுக்காதது மட்டுமின்றி, 'இரட்டைக்குழல் துப்பாக்கியில்' 'ஒரு குழலான' தி.மு.க, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டத்தை அறிமுகப்படுத்தி, இன்றுவரை தமிழ்நாடு 'அந்த போராட்ட நோயிலிருந்து' மீள முடியாமல் தவிக்கிறது; மேலே குறிப்பிட்டது போன்ற  ஓற்றுமை தாமதமாவ‌தன் காரணமாக.

‘துக்ளக்’ மூலமாக கனியும் சமூக சூழல் மூலம், 'அந்த தாமதம்' முடிவுக்கு வருவதும், அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு: படிக்கவும் ; ‘ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்;   'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா?’; http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html

குருட்டுப் பகுத்தறிவிற்கு ஒரு சான்று: 'ரேஸ்'(Race), அடிப்படையில் 'ஆரியர், திராவிடர்' தொடர்பான சூழ்ச்சியில், மேக்ஸ் முல்லரின் (Max Muller)  பங்களிப்பு குறித்த, ஆங்கிலத்தில் வெளிவந்த, மறைந்த மலேசிய அறிஞர் லோகநாதனின் கருத்தினை எனது பதிவில் பயன்படுத்தினேன். அது தொடர்பாக, ஒரு 'பெரியார்' ஆதரவாளர் எனக்கு அனுப்பிய மடல்.

""அய்யா, தமிழில் எழுதமுடியாத பேற்றிஞர் எனக்கு அனுப்பவேண்டாம் ,தமிழருக்கான துரோகக் கடிதஙகளை." ( http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html) அவர் தனிப்பட்ட முறையில் நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், மதிக்கத்தக்க முறையில் வாழ்பவர் என்பதை நான் அறிவேன். அவரை 'பெரியார்' இயக்கத்தின் விளைவால் சிக்கிய 'குருட்டு பகுத்தறிவுவாதியாக' அடையாளம் காண்பதானது, அவரை இழிவுபடுத்துவதாகாது.


Insecurity & Xenophobia: Xenophobia is not the only possible response to insecurity or a sense of lacking, of course; taking drugs, drinking heavily, and becoming obsessively materialistic or ambitious may be other responses. And psychologically healthy people don't need to resort to racism in the same way that they don’t need to resort to taking drugs……… there is no biological basis for dividing the human race into distinct "races." There are just groups of human beings — all of whom came from Africa originally — who developed slightly different physical characteristics over time as they travelled to, and adapted to, different climates and environments. The differences between us are very fuzzy and very superficial. Fundamentally, there are no races — just one human race.; https://www.psychologytoday.com/us/blog/out-the-darkness/201801/the-psychology-racism 

No comments:

Post a Comment