Tuesday, March 6, 2018


'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா? (2)



'.வெ.ரா செயலாக்கியை' (EVR Processor) மேம்படுத்தி பயன்படுத்துவதா? சமூக  காயலான் கடைக்கு ஒதுக்குவதா?


'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தப்பட்டு வளர்க்கப்படாத கொள்கைகள் எல்லாம், கால ஓட்டத்தில் சமூக போக்கில் சருகாகி உதிர்ந்து விடும்;

என்பதை எச்சரித்தவர் .வே.ரா ஆவார். இன்று அந்த அபாயத்தில் அவரின் கொள்கைகள் சிக்கியதாலேயே, கீழ்வரும் நெருக்கடியை 'பெரியார்' கட்சிகள் சந்தித்துள்ளன.

ஒன்று .வெ.ராவின் ஆங்கிலவழிக் கல்வி ஆதரவு போக்கினை நியாயப்படுத்தி, தமிழ்வழிக்கல்வியை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸையும், துக்ளக்கையும், 'பெரியார்' கட்சிகள் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், தாய்மொழிவழிக்கல்வி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான .வெ.ராவின் கொள்கை தவறு என்று, .வெ.ரா வழியிலேயே துணிச்சலுடன் அறிவித்து, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு பகிரங்கமாக பங்களிக்க வேண்டும். எனது ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த சுமார் 20 வருடங்களாக நான் முன்வைத்துள்ள எச்சரிக்கைகளை எல்லாம் புறக்கணித்து, இன்று இந்துத்வா ஆதரவு முகாமில் சுட்டிக்காட்டப்படும்  .வெ.ராவின் தாய்மொழி விரோத, தமிழ் விரோத மற்றும் ஆங்கிலவழிக் கல்வி ஆதரவு தொடர்பான ஆதாரங்களை எல்லாம் அறிவுபூர்வமாக சந்திக்க முடியாமல் தடுமாறி, இரண்டும் கெட்டானாக இனியும் பயணிக்க முடியாத சூழல் உருவாகி வருவதை அக்கட்சிகளால் உணர முடியவில்லையென்றால், மரணித்து அடக்கம் செய்ய வேண்டிய கட்டத்தினை அக்கட்சிகள் எட்டி விட்டன, என்று பொருளாகி விடாதா? ‘ ( ‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்; 'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா? (1)’; http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html ) 

காரல்மார்க்ஸின் மார்க்சியம் என்பதானது காரல் மார்க்சின் ஆய்வுக்கு கிடைத்த உள்ளிடுகள் (Inputs), அந்த உள்ளீடுகளை தாம் உருவாக்கிய ஆய்வு முறைக்கு (Processing) உட்படுத்தியது, அந்த ஆய்வின் மூலம் கிடைத்த அவரின் கணிப்புகள் உள்ளிட்ட வெளியீடுகள் (Outputs) ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

உலக அளவிலும், இந்திய அளவிலும் காரல் மார்க்சின் பெரும்பாலான கணிப்புகள் வரலாற்றில் பொய்த்து போய்விட்டன. அதன் காரணமாக மார்க்சியத்தின் முக்கியத்துவம் பொய்த்து போகவில்லை. மாறாக லெனின் மார்க்சிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, லெனினிய அணுகுமுறையாக மாற்றியே, ரஷ்யாவில் புரட்சியை முன்னெடுத்தார். அதையும் மாவோ மாற்றியே, சீனாவில் புரட்சியை முன்னெடுத்தார். ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும், சீனப்புரட்சியின் விளைவுகளும் இன்று ஆய்வுக்கு உள்ளாகி, அந்தந்த அணுகுமுறைகளில் இருந்த குறைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக மீண்டும் மார்க்சியத்தை நோக்கிய ஆய்வுகள் புத்துயிர் பெற்றும் வருகின்றன.(https://call-for-papers.sas.upenn.edu/node/42163 )  உலக அளவில் அச்சுறுத்திவரும் பொருளாதார, சமூக சிக்கல்களுக்கு தீர்வுகள் காண மார்க்சியம் மட்டுமின்றி, இந்தியா, சீனா உள்ளிட்டு உலக அளவில் தொன்மை தத்துவங்கள் எல்லாம் அறிவுபூர்வ ஆய்வுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாகி வருகின்றன.

.வெ.ராவின் 'பெரியாரியல்'  என்பதானது .வெ.ராவின் ஆய்வுக்கு கிடைத்த உள்ளீடுகள், அந்த உள்ளீடுகளை தாம் உருவாக்கிய ஆய்வு முறைக்கு உட்படுத்தியது, அந்த ஆய்வின் மூலம் கிடைத்த அவரின் கணிப்புகள் உள்ளிட்ட வெளியீடுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

.வெ.ராவின் உள்ளீடுகளில் (Inputs) இருந்த குறைபாடுகள் யாவை? அந்த உள்ளிடுகளை உட்படுத்திய அவரின் ஆய்வுமுறையில் (Processing) தமது அறிவு வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, 1944க்குப் பின் அவற்றைச் சுட்டிக்காட்டும் கடிவாளமின்றி, அவர் பயணித்ததால் விளைந்த குறைபாடுகள் யாவை? அவற்றின் தொகுவிளைவாக அவரின் வெளியீடுகளில் (Outputs) இருந்த குறைபாடுகள் யாவை? என்பதையெல்லாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘ 'பெரியார்' .வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html

.வெ.ரா தமது அறிவு வரைஎல்லைகள் (intellectual limitations)  தெரியாமல் பயணித்தது போலவே, தமது அறிவின் வரை எல்லைகள் தெரியாமல், சமூகத்தில் தொகுவிசைகளாக (Social Resultant Forces) (http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html) வெளிப்படும் கட்சிகளின் மீதும், தலைவர்களின் மீதும் செல்வாக்கு செலுத்தி, நினைத்ததை சாதிக்க முடியும் என்று பயணித்து, தோற்றவர் ராஜாஜி ஆவார்.

ஈ.வெ.ரா அவர்களின் 'திராவிடநாடு பிரிவினை' கோரிக்கையை ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த சூழலில், இந்திய விடுதலைக்குப் பின் ஈ.வெ.ராவும், ராஜாஜியும் எதிரெதிர் திசைகளில் பயணித்ததாலேயே தி.மு.க வளர்ந்து, 1967-இல் ராஜாஜியுடன் துணையுடன் ஆட்சியைப் பிடித்து, பின் முதல்வர்  அண்ணாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் வளர்ந்து வந்த நல்லுறவானது இருளில் சிக்க (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html   ) ;

அண்ணாவின் மறைவுக்குப் பின், அதே ராஜாஜி ஆதரவுடன் 1969இல் கருணாநிதி முதல்வராகி, நேரு பாணி குடும்ப அரசியலை முன்னெடுக்க, அதன் எதிர்விளைவாக எம்.ஜி.ஆர் அ.தி.மு.க துவங்கி ஆட்சியைப் பிடிக்க, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடிக்க, 1991 முதல் ஜெயலலிதாவை குடும்ப அரசியலில் சிறை பிடித்ததன் மூலமாக‌,  1969இல்  நேரு பாணியில் துவங்கியதானது, பின்னர் அந்த பாணியிலிருந்து மாறுபட்ட சசிகலாவிடம்  சிக்கி, பயணித்த தமிழ்நாட்டில்;

1969இல் தொடங்கிய‌ ஊழல் சுனாமியில், 1970களில் தொடங்கிய‌ ஆங்கிலவழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி மூலமாக‌ தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணம் தொடங்கியது. இன்று தமிழ்நாட்டில் தமிழில் சரளமாக‌  எழுதவும் படிக்கவும் தெரியாத, (ஆங்கில வழியில் படித்த) மாணவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வருகிறது.’ (http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

தனிப்பட்ட முறையில் ஈ.வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பின் மூலமாகவே, ராஜாஜியின் தூண்டுதலால் காங்கிரசில் சேர்ந்தார் ஈ.வெ.ரா. ஈ.வெ.ரா அவர்கள் பணக்கார வாழ்வு நிலையிலிருந்து நம்ப முடியாத அளவுக்கு 'சாமான்ய' வாழ்வு நிலைக்கு இறங்கி, தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தோடு ஒட்டிப் பயணித்து அபரீதமான சமூக ஆற்றலை வளர்த்து வந்த போக்கில், அதை சரியாக கணித்து ஈ.வெ.ராவுடன் ஒட்டி மைக்ரோ உலகத்தில் பயணிக்காமல், மேக்ரோ உலகத்தில் இருந்தபடியே நினைத்ததை சாதிக்க முடியும் என்ற தவறான அணுகுமுறையில், இந்திய விடுதலைக்குப் பின், ஈ.வெ.ராவிற்கு எதிரான திசையில் தி.மு.க மீதும், கலைஞர் கருணாநிதி மீதும் செல்வாக்கு செலுத்தி பயணித்தார் ராஜாஜி.

ஈ.வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட நட்பானது சாகும் வரை நீடித்ததைப் போலவே, பொதுவாழ்விலும் நீடித்திருந்தால், பரிமாற்ற முறையில் இருவரிடமும் வெளிப்பட்டிருந்த குறைபாடுகள் நீங்கி, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாடு சிக்கியிருக்காது; தமிழ்வழிக்கல்வியானது மரணப்பயணத்தில் சிக்கும் அவலமும் நிகழ்ந்திருக்காது; இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். இன்று இந்தியாவில்  பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில், தமிழர்களிடையே தரகராகி/திருடராகி தன்மானமிழப்பில் வளரும் போக்கும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரிடையே 'மம்மி, டாடி' நோயில் பெருமளவில் சிக்காமல், வசதிகளிலும், வாய்ப்புகளிலும், தன்மானத்திலும் வளரும் போக்கும், எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.(http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html )

தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்திற்கு காரணமான திராவிட கட்சி அரசியலானது மரணித்து விட்டதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உணர்த்தி விட்டன; திராவிட அரசியலின் வீழ்ச்சியானது நேரு பாணி குடும்ப அரசியலில் தடம் புரண்டு துவங்கியதானது, அந்த போக்கிலேயே சசிகலா பாணி பினாமி குடும்ப அரசியல் வளர்ச்சியின் மூலம் முடிவை எட்டி விட்டது; இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் - ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது; என்பது வெட்ட வெளிச்சமாகி வரும் சூழலில்;

ஈ.வெ.ரா வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' ஈ.வெ.ரா வின் உள்ளீடுகளிலும், ஆய்வுமுறையிலும், வெளியீடுகளிலும், உள்ள குறைபாடுகளை எவ்வாறு சரி செய்வது? என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (குறிப்பு கீழே)

சுமார் 20 வருடங்களுக்கு முன் நான் எச்சரிக்க துவங்கியபோது, எந்த ' பெரியார்' கட்சியாவது ஈ.வெ.ராவின் சுயலாப நோக்கற்ற அறிவுபூர்வ அணுகுமுறையில் அதை கவனித்து விழித்திருந்தால்;

அஸ்ஸாமுக்கு முன்பேயே, தமிழத்துவாவுடன் இந்துத்வாவை பிணைத்து வளர்த்து, 'தனித்தமிழ்நாடு' கோரிக்கை பின்னணியில் இருந்து வளர்ந்த ஒருவர் தான் இன்று தமிழ்நாட்டில் முதல்வராக இருந்திருப்பார்; பிரதமர் மோடியின் ஆதரவுடன். அஸ்ஸாமில் எச்.ராஜா போன்றவர்கள் இருந்திருந்தால், அஸ்ஸாம் பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவர் இன்று முதல்வராகி பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது; வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசை ஓரங்கட்டியிருக்க முடியாது. (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html  


எச்.ராஜா போன்று இந்துத்வா ஆதரவு முகாமில் உணர்ச்சிபூர்வமாக‌ எதிர் கொள்கையாளர்களை இழிவுபடுத்தும் போக்கு தொடர்பாக‌; (குறிப்பு கீழே)


தமிழ்நாட்டில் 1944இல் முளை விட்டு, 1949இல் வீரியம் பெற்று, 1967இல் ராஜாஜியின் துணையுடன் ஆட்சியைப் பிடித்து மேலும் வலுவான உணர்ச்சிபூர்வமாக‌ எதிர் கொள்கையாளர்களை இழிவுபடுத்தும் போக்கில், தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவும் சிக்கியுள்ளதை வெளிப்படுத்தும் சிக்னலாகவே எச்.ராஜா வலம் வருகிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு ஈ.வெ.ராவின் கொள்கையை உட்படுத்தி வளர்த்திருந்தால்;



அறிவுபூர்வ போக்குகள் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றிருக்கும். எச்.ராஜா, வைகோ, சீமான் போன்ற இன்னும் பலர் தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் வெளிப்பட்டிருக்கமுடியாது; என்பதும் எனது ஆய்வு முடிவாகும். 



மேற்குறிப்பிட்டது தொடர்பான எனது அபாய எச்சரிக்கைகளை 20 வருடங்கள் தாமதித்த குற்றத்தால்;

இன்று இந்துத்வா ஆதரவு முகாமில் சுட்டிக்காட்டப்படும் ஈ.வெ.ராவின் தாய்மொழி விரோத, தமிழ் விரோத மற்றும் ஆங்கில‌வழிக் கல்வி ஆதரவு தொடர்பான ஆதாரங்களை எல்லாம் அறிவுபூர்வமாக சந்திக்க முடியாமல் தடுமாறி, இரண்டும் கெட்டானாக பயணித்து;

இனியும் விழிக்கவில்லையென்றால், தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு காரணமான பிதாவாக ஈ.வெ.ரா பழி சுமத்தப்பட்டு, சமூக காயலான் கடைக்கு அனுப்பப்படுவதை தவிர்க்க முடியாது; அவ்வாறு நடந்தால், அதன் முழு பழியும் இன்றுள்ள 'பெரியார்' கட்சிகளையே சாரும்.

Note:‘To rescue the Tamil medium, Tamil & Tamils, all kinds of 'anti-intellectual & emotion saturated' hate politics, including anti-Brahmin, anti-RSS, anti-Muslim, anti-Dalit, anti non-dalit,  etc, shall be reversed, to genuine pro-Tamil politics, availing the services from all directions to the social 'ICU' Tamil medium rescue operation. Reversing the 'Dravidar, Dravida, Tamil, identity confusion process' initiated by 'Periyar' EVR in 1944,  the 'open minded' & 'intellectual honest' processor in the 'social computer EVR' can be upgraded, and  the 'hard disc' of his ideologies updated, to help the above rescue operation, with his 'self respect' concept as the beacon light; I suggest, to safeguard his 'reputation' from the future probable 'unjust' branding, as the 'prime social culprit' , causing the death of the Tamil medium Education (& hence Tamil), Tamil heritage & culture.‘ (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )  



கோவில்களுக்கும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் தொந்திரவின்றி, தமது காசில் கடைகளில் பிள்ளையார் பொம்மைகளை வாங்கி உடைக்கும் போராட்டத்தை நடத்தியவர் .வெ.ரா; சமூக பொறுப்புணர்வுடன், வன்முறைகளுக்கு இடமின்றி, காந்தி தோற்ற இடத்தில் வெற்றி பெற்றவர் .வெ.ரா. எச்.ராஜாவின் சமூக பொறுப்பற்ற, வன்முறைகளை தூண்டக்கூடிய பேச்சு தொடர்பாக, முகநூலில் கீழ்வரும் செய்தி வெளிவந்துள்ளது.


'இந்துக்கள் பெரியார் மீது கை வைத்தால் இந்து கோயில்களை தகர்ப்போம்' திரு.ஸ்டாலின்; 06.03.2018    www.thanthitv.com; Sreepriya Iyer 6 March at 8.07 PM



மேற்குறிப்பிட்ட செய்தி தவறு என்றால், ஸ்டாலினும் தந்தி தொலைக்காட்சியும் தாமதமின்றி காவல்துறையிடம் புகார் செய்து, பொய் செய்திக்கு காரணமானவர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்தினால் தான், தமிழ்நாட்டின் பொதுநலன் (Public Interest) பாதுகாக்கப்படும்.



செய்தி உண்மை என்றால், அது ஈ.வெ.ராவின் கொள்கைக்கு எதிரானதாகும்; ஸ்டாலின் அரசியலை விட்டு ஒதுங்குவதே, தமிழ்நாட்டின் பொதுநலனுக்கு உகந்ததாகும்.  


அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி, முகநூலில் கீழ்வரும் கருத்தை வெளியிட்டவர்களின் பார்வைக்கு; ‘தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல் (2); 'தமது பக்கமே கோல் போட்ட(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' ?; http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html       & http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html

From Facebook:  
‘கடந்த காலங்களில் பல்வேறு பொதுக்கூட்ட மேடைகளில் பகிரங்கமாக ஈவெரா எதிர்ப்பை திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் வெளிப்படுத்திய போது வராத தீவிர எதிர்ப்பும் கண்டனமும் இப்போது ஒரு டிவிட்டர் பதிவுக்கு எதிராக திடீரென வருவதற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் திராவிடத்திற்கு மாற்றாக தேசியத்தை தீவிரமாக வளர்க்க ஆயத்தமாகும் பாஜக தேசிய தலைமையின் எண்ண ஓட்டத்தை திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சதி என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த தருணத்தில் நாம் அனைவரும் திரு.ஹெச்.ராஜா ஜி அவர்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் அவருடன் இணைந்து இந்து விரோத இந்து துரோக சக்திகளை எதிர்கொள்வதே இந்து சமுதாய பாதுகாப்பிற்கு நாம் செய்யும் சிறந்த கடமையாகும்.

WE SUPPORT SHRI.H.RAJA JI
Paramasamy Pandian is with Ramakrishna Gauthaman and 48 others. In facebook.’ 




எச்.ராஜாவும் மேற்குறிப்பிட்ட நபர்களும், தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பை' குறைக்கும் நோக்கிலாவது, சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், நீண்ட கால போராட்டத்திற்குப் பின், உயர்நீதிமன்றம் மூலமே அவருக்கு நீதி கிடைக்க வேண்டிய அளவுக்கு (Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html ) தாமதமாகியிருக்காது. இன்று பூணூலை அறுத்தவர்கள் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் 'பெரியார்' கட்சிகள் அவரின் போராட்டத்திற்கு ஆதரவளித்து 'நல்ல பேர்' வாங்கியிருக்க முடியாது. அநீதிக்கு எதிராக பாரபட்ச போக்கு இருக்கும் வரை, பிராமண எதிர்ப்பு சூழல் தொடரும். தி.க தோன்றுவதற்கு முன்பேயே தமிழ்நாட்டில் பூணூல் அறுப்புகள் நடந்திருக்கின்றன, பிராமண எதிர்ப்பின் வெளிப்பாடாக.

தமிழகத்தில் திராவிடத்திற்கு மாற்றாக தேசியத்தை தீவிரமாக வளர்க்க ஆயத்தமாகும் பாஜக தேசிய தலைமையின் எண்ண ஓட்டத்தை தான், பா.ஜ.கவில் தேசிய தலைவராக பதவி வகிக்கும் திரு.ஹெச்.ராஜா முன்னெடுத்து செல்கிறார்; அந்த நோக்கிலேயே ஈ.வெ.ரா, அண்ணா உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி வருகிறார்;

என்பது உண்மையானால், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இரட்டை வேடப் போக்கில் பயணிக்காமல், அதை தெளிவுபடுத்துவதே, அவர்கள் வகிக்கும் பதவிக்கு உள்ள சமுக கடமையாகும். அதற்கான அழுத்தத்தை தர வேண்டியதானது, இந்துத்வா ஆதரவாளர்களில் இரட்டை வேடப் போக்கினை வெறுக்கும் நேர்மையாளர்களின் சமூக கடமையாகும். 



உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலை வெறுத்து, 'பிறர் பார்வை' (Empathy) அணுகுமுறையில் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமே, பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, பேருந்துகள் உள்ளிட்ட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற‌ வன்முறை போக்குகளிருந்து தமிழ்நாடு விடுதலை பெற முடியும்.

No comments:

Post a Comment