Friday, March 16, 2018


‘ 'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்? (3)



 .வெ.ராவின் தோல்வியும், தினகரனின் வெற்றியும்


தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் மாணவர்களின், இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி, அவர்களின் செல்வாக்கு தமது கட்சிக்கு இருப்பதாக பறை சாற்றும் போக்கும் தொடங்கி விட்டது.

சில மாதங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவரிடம் உரையாடியபோது வெளிப்பட்ட தகவல்:

மோட்டர் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் முழுவதையும் நிரப்பி, கூடுதலாக பிரியாணி, குவார்ட்டர் கொடுப்பதால், அந்த கல்லூரி மாணவர்களில் பலர் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். அந்த போதையில் பொதுக்கூட்டத்தில் அந்த 'புரவலர்கள்' மேடை ஏறும்போதும், உணர்ச்சிகரமாக பேசும் போதும், 'போதை உற்சாகத்தில்', ஆர்ப்பரித்து கைத்தட்டல், விசில், நடனம், என்று 'போதையின் அளவுக்கு ஏற்ப' வெளிப்படுத்துவது எல்லாம் அவர்களிடம் 'உள்மறைந்துள்ள (Latent) வக்கிரங்களை' எல்லாம் வெளிப்படுத்தும் வடிகாலாக, தங்களுக்கு பிடித்த 'கதாநாயக நடிகர்களின் திரைப்பட முதல்நாள் காட்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளைப் போல, அம்மாணவர்களுக்கு 'போனசாகவும்' அமைந்து விடுகிறது.

சில நாட்களுக்கு முன், ...தி.முகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத (அதற்கு ஆசைப்படாதஅடிப்படை உறுப்பினராகவும், நேர்மையான சுயசம்பாத்தியத்தில் வாழும் ஜெயலலிதா விசுவாசியாகவும் வாழும் ஒரு பெண் தொண்டரிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியையும், சட்டசபை எதிர்க்கட்சியையும் மிரட்டும் அளவுக்கும், 'திராவிட' என்ற (1967 முதல் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிகளில் பெயர்களில் இடம் பெற்ற) சொல்லை தவிர்த்தும், தினகரன் துவங்கிய கட்சிக்கும் பிரமாணடமாக கூடிய கூட்டமானது;

மன்னார்குடி குடும்பத்தால் 'மர்மமான' முறையில் ஜெயலலிதா இறந்ததாக கோபப்பட்ட ஜெயலலிதா விசுவாசிகள் தமிழ்நாட்டில் இல்லை அல்லது மிக மிக குறைவு என்று உணர்த்தவில்லையா?

அந்த கேள்வி தொடர்பாக அவருடன் உரையாடியதில், கீழ்வருவதானது வெளிப்பட்டது.

உழைத்து சம்பாதிப்பதை தவிர்த்து, எந்த வழியாவது பணத்துக்கு ஏங்குபவர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து விட்டார்கள். எனவே தினகரனின் புதுக்கட்சி தொடக்க விழாவில் கூடிய பிரமாண்ட கூட்டமானது அதிசயமில்லை

மத்திய மாநில அரசுகளில் ஒரு மாநில முதல்வரின் பாதுகாப்புக்கு இருந்த விதி முறைகளை எல்லாம் செல்லாக்காசாக்கி,  மர்மமான முறையில் ஜெயலலிதா இறந்தது தொடர்பாக, பாரபட்சமற்ற, தண்டிக்கும் அதிகாரமுள்ள விசாரணையைக் கோராமல், ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின் சசிகலாவை தரிசித்து ஆதரவு நல்கிய கட்சித்தலைவர்களுக்கும், பத்திரிக்கை அதிபர்களுக்கும், துணை வேந்தர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், தினகரன் புதுக்கட்சி தொடங்கிய பொதுக்கூட்டத்தில் அவரை வரவேற்று ஆர்ப்பரித்தவர்களுக்கும் வேறுபாடு உண்டா?

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, தி.மு.கவை, ஆளுங்கட்சி உடைந்த நிலையிலும் டெபாசீட் இழக்க வைத்து, பா..கவை நோட்டாவிடம் தோற்கச் செய்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் தத்தம் அரசியல் வாழ்வில் பெற்ற அதிகபட்ச வாக்குகளை எல்லாம் விஞ்சி, சாதனை படைத்து, கட்சிகளின் அரசியல் எல்லாம் செல்லாக்காசாகி விட்டதை நிருபித்து சாதனை படைத்தார் தினகரன். 'திராவிட லல்லுக்களிடம்' பிரதமர் மோடி தொடர்ந்து தோற்று வருவதும்,  அந்த சாதனை மூலமாக வெளிப்பட்டது.

தினகரனின் கட்சியில் நீக்கப்பட்ட 'திராவிட' தொடர்பாக:

தமிழ்நாடானது திராவிடக் கட்சிகளில் ஆட்சிகளில் எந்த அளவுக்கு இந்தியாவில் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளது? என்பது தொடர்பான புள்ளி விபரங்களை துணைமுதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடானது இந்தியாவில் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது உண்மையே என்றாலும்;

தமிழ்நாட்டில் அதன் பலன்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு சாதகமாகி;

அந்த சாதக போக்கிற்கு துணை புரியும் வகையில் தமிழ்நாட்டில் தரகர்களும், வாலாட்டி பலன் பெறுபவர்களும், அதிவேகமாக அதிகரித்து வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/09/1967.html

தமிழ்நாட்டில் தரகர்களும், வாலாட்டி பலன் பெறுபவர்களும், எல்லா வகை போதைகளுக்கும் ஆட்ப்பட்டவர்களும், அந்த போக்கிலேயே கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களில் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் மாணவர்களும்;

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி வீழ்ந்து, கல்வி வியாபார ஊழல் சுனாமியில் ஆங்கிலவழிக்கல்வி அதிகரித்து வரும் போக்கில் வெளிப்பட்டவையாகும். குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட மனித உறவுகள் எல்லாம் 'பணத்துவா' மூலமாக அதிகமாக சீரழிந்து ருவதும் அதே காலக்கட்டத்தில் வெளிப்பட்டுவருபவையாகும். 

ஜெயலலிதாவின் மீது சுயலாப நோக்கற்ற விசுவாசிகள் எல்லாம் நடுத்தர, ஏழை, பெரும்பாலும் கிராம மக்களாகவும், ஆதாயத்திற்கு விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம் வசதியாகி 'செட்டில்'ஆக விரும்புபவர்களாகவும் இருந்த சூழலில்; 

மேற்குறிப்பிட்ட ஆதாய விசுவாசிகளோடு, தினகரன், மேலே குறிப்பிட்ட தமிழ்நாட்டின் சூழலை புரிந்து கொண்டதன் அடிப்படையில், தி.மு., பா.. ஆகிய கட்சிகளில் இருந்த ஆதாய விசுவாசிகளையும் 'ஈர்த்தே' ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட மிக அதிக வாக்குகளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்று, கட்சிகளின் அரசியலை செல்லாக்காசாக்கி விட்டார்.

மக்களின் மொழிக்கும் அவர்களின் அடையாளத்திற்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவு பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகள் எல்லாம் தெரியாத;

'தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள் எல்லாம் தமது அடையாளமும் பயனற்றது என்று கருதுவார்கள்' என்பது பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகள் எல்லாம் தெரியாத;

.வெ.ரா அவர்கள் தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்து, தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து  பயணித்ததாலேயே; ; ( ‘‘தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html )

தமிழ்நாட்டில் தரகர்களும், வாலாட்டி பலன் பெறுபவர்களும், எல்லா வகை போதைகளுக்கும் ஆட்ப்பட்டவர்களும், அந்த போக்கிலேயே கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையில் மாணவர்களும் அதிகரித்து வரும் சூழலில்

கட்சிகளின் அரசியல் எல்லாம் செல்லாக்காசாகி விட்டதை நிருபித்து சாதனை படைத்தார் தினகரன். 'திராவிட லல்லுக்களிடம்' பிரதமர் மோடி தொடர்ந்து தோற்று வருவதும்அந்த சாதனை மூலமாக வெளிப்பட்டது.

.வெ.ரா அவர்களின் 'தொண்டால்' ஏற்பட்ட மேலே குறிப்பிட்ட விளைவுகளின் சூழல் காரணமாகவே,, அவரது தொண்டுகளும், அவர் வழியில் பயணித்த என்னைப் போன்ற எண்ணற்றோரின் தொண்டுகளும்;

தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்திற்கு முதலில்லாத மூலதனங்கள் (Capital without investment) ஆகி விட்டன.

மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள இழப்பின்' காரணமான 'முற்போக்கு' போதைகளில் சிக்கி ஆங்கிலவழியில் தமது குடும்ப பிள்ளைகளை படிக்க வைத்து;
ஊழல் பேராசையில் தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடி, அச்சுறுத்தியும், கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்த திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு வாலாட்டி, வாய்க்கும் ஊழல் வழிகளில் எல்லாம் பணம் ஈட்டி

கிரானைட், தாதுமணல், ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட கனிவளங்கள் ஊழல் சுனாமியில் சிக்கியது பற்றி மூச்சு விடாமல், சீன இறக்குமதி உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒழிக்கும் போக்குகள் பற்றிய கவலையின்றி;

வறட்டுத்தனமாக 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' என்று புறத்தில் வெளிச்சம் போடும் பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகள் ஆவர்.’ ( http://tamilsdirection.blogspot.in/2018/03/2.html    ) 

1967க்குப் பின் அரங்கேறிய திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த மானமும் அறிவும் சுயமரியாதையும்  சீரழிந்ததானது;

1944இல் .வெ.ரா அவர்கள் தொடங்கிய 'திராவிடர் கழகமானது', தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள், ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து பயணித்ததானது;

தமிழர்களின் இயல்பான அடையாள சமூக செயல்நுட்பத்தை சீர்குலைத்து, எந்த வழியிலாவது தம்மை 'உயர்த்தி' காண்பிக்கும் போதைகளில் (குறிப்பு கீழே) சிக்க வைக்கும் விளைவில் முடிந்தது;  என்பதானது, .வெ.ரா அவர்களின் தோல்வியாகும்.


இந்தியாவில் 'காலனிய மனநோயாளிகள்' உள்ள சூழலில், அவர்களிடமிருந்து தனித்துவமாக வேறுபட்ட 'திராவிட மனநோயாளிகள்' எல்லாம், .வெ.ராவின் தோல்விக்கான சமூக செயல்நுட்பத்தின் மூலம் உருவானவர்கள் ஆவர். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  

தினகரன் என்ற நபர் தம் மீதுள்ள வழக்குகள் முடிந்து சிறை சென்றாலும்;

சிறையில் இருந்த ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டில் வெளிப்பட்டிருந்த செல்வாக்கை விட, இன்னும் கூடுதல் செல்வாக்கு உள்ளாவராக வெளிப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது; இதே சூழல் நீடிக்குமானால்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் தத்தம் அரசியல் வாழ்வில் பெற்ற அதிகபட்ச வாக்குகளை எல்லாம் விஞ்சி, சாதனை படைத்து, கட்சிகளின் அரசியல் எல்லாம் செல்லாக்காசாகி விட்டதை நிருபித்து சாதனை படைத்த தினகரனின் வெற்றிக்கான அடித்தளமே;

மேற்குறிப்பிட்ட .வே.ராவின் தோல்வி என்பதே எனது ஆய்வு முடிவாகும்.


‘திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா; முடித்து வைப்பவர் சசிகலாவா?’ (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html ) என்ற கேள்விக்கு விடையாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு வெளிப்பட்டது. அம்முடிவின் தொடர்ச்சியாக‌, 'திராவிட' குறியீடானது இவ்வளவு சீக்கிரம் தினகரன் மூலமாக அழிக்கப்படும்; என்பது நான் எதிர்பாராதது ஆகும். இனி 'திராவிடர்' அழிந்து, ‘தமிழர் சுயமரியாதை அடையாளமீட்புதொடங்குவதும் எதிர்பாராத அளவுக்கு விரைவில் நடப்பதும் சாத்தியமாகி வருகிறது.

'திராவிட லல்லுக்களிடம்' பிரதமர் மோடி தொடர்ந்து தோற்று வருவதும் நீடிக்குமானால்;

தமிழ்நாட்டை  ஊழல் சுனாமியிலிருந்தும், அதன் தொடரான கல்வி வியாபார ஆங்கிலவழிக்கல்வி சீரழிவிலிருந்தும், தமிழ்நாட்டை மீட்க மோடியை மட்டுமே நம்புவது பலன் தராது.

திராவிட, தேசிய கட்சிகளில் உள்ள ஆதாய ஆதரவுகளை தினகரன் ஈர்த்து, அக்கட்சிகளை எல்லாம் செல்லாக்காசாக்கி வரும் போக்கின் எதிர்வினையாக, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியாகும் போக்கும் தொடங்கி விட்டது. சுயலாப நோக்கின்றி, இழப்புகளை கண்டு அஞ்சி ஒதுங்காமல், ‘தமிழர் சுயமரியாதை அடையாளமீட்பு’ தனிமனித இராணுவமாக முயல்பவர்களின் எண்ணிக்கையானது, மீடியா வெளிச்சத்திற்கு வராமல் அதிகரித்து வருகிறது. தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியானது 'எதிர்பாராதது' என்று ஏமாந்தவர்கள் எல்லாம், மீண்டும் இன்னொரு எதிர்பாராத தோல்வியை சாட்சியாக‌  பார்க்கும் (witness)  காலமும் அதிக தொலைவில் இருக்காது.


குறிப்பு: 'திராவிடர்/திராவிட' கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், கல்லூரியில் 'விரிவுரையாளர்' பணியில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் 'பேராசிரியர்கள்' என்று பெயருக்கு முன் போட்டார்கள். அதன் அடுத்த கட்ட 'வளர்ச்சியில்'(?) பள்ளி ஆசிரியர்களும் அதை பின்பற்றி பேராசிரியர்கள் ஆனார்கள். கட்சித் தலைவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதும், உலகிலேயே தனித்துவமாக‌ (Unique) ஒழிந்து, 'தலைவர், பொருளாளர், தளபதி, ஆசிரியர்' என்று வழிபடும்/அடிவருடும் போக்குகளும் அரங்கேறின.

No comments:

Post a Comment