Thursday, March 8, 2018



வைரமுத்து இசைத்தமிழைச் சீரழித்த போக்கின் தொடர்ச்சியா;


இயற்றமிழைச் சீரழிக்கும் கமலஹாசனின் 'மய்யம்' ?

யேசுதாசுக்கும் வைரமுத்துவிற்கும் இடையில் ஒரு பாடல் ஒலிப்பதிவில் நடந்த மோதலை உதாரணமாகக் கொண்டு நான் எழுதிய பதிவில் வெளிவந்துள்ள கீழ்வரும் பகுதி விளங்கினால் தான், வைரமுத்து இசைத்தமிழைச் சீரழித்த போக்கின் தொடர்ச்சியா, இயற்றமிழைச் சீரழிக்கும் கமலஹாசனின் 'மய்யம்'? என்ற கேள்வியின் முக்கியத்துவம் புரியும்.

ஒரு பாடலில் வரும் எழுத்தின் ஒலி சுருதி சுத்தமாக (accurate pitch) பாடலுக்கான இசையுடன் பொருந்த வேண்டும். அதாவது எழுத்தின் ஒலியும் சுருதியும் ஒன்றுடன் ஒன்று முழுமையாகப் பொருந்த வேண்டும். அதை தொல்காப்பியம் ( எழுத்து: 1;33)

 'இசையொடு சிவணிய நரம்பின் மறைய
  என்மனார் புலவர்' என்று தொல்காப்பியத்திற்கு முன்னர் வழக்கில் இருந்த சூத்திரம் மூலம் விளக்கியுள்ளது.

 'சிவணிய' என்றால் 'பொருந்துதல்' (Tamil Lexicon) என்று பொருள். ‘'இசையொடு சிவணிய நரம்பின்என்பது சரியாக சுருதி சேர்க்கப்பட்டு பொருந்திய நரம்பு என்று பொருளாகும். பாடலில் வரும் எழுத்தின் ஒலி அந்த 'சுத்தமான சுருதியில்'  (tuned accurate pitch) மறைந்து  -ஒன்றி -ஒலிக்க வேண்டும்.
அவ்வாறு பாடலின் எழுத்தின் ஒலி சரியாக சுருதி சேர்க்கப்பட்ட யாழின் நரம்போடு ஒன்றி ஒலிக்க வேண்டும் என்பதைக் கீழ்வரும் சான்று வலியுறுத்துகிறது.

' யாழெழுத்திற் பாவாற் புணர்க்க' பஞ்ச மரபு 89

திருக்குறள் (573) 'பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்' என்ற குறள் மூலம் அதை விளக்கியுள்ளது. (கூடுதல் சான்றுகளுடன் கூடிய விளக்கத்திற்கு

குரலொலியில் '' உச்சரிப்பின் போது, வாயினுள் நடைபெறும் செயல்நுணுக்கத்தை, தொல்காப்பியம் ( எழுத்து: 3;13) கீழ்வருமாறு விளக்குகிறது.

' நுனி நா அணரி அண்ணம் வருட,
  கார, காரம், ஆயிரண்டும் பிறக்கும்.'

ஆக பாடலில் வரும் எழுத்தின் ஒலியானது கீழ்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தான், பாடகரால் சுருதி சுத்தமாக பாட முடியும்.

 1. பாடலில் வரும் எழுத்தின் ஒலி, பாடலில் அந்த எழுத்துக்கான சுரத்தில் சுருதி சுத்தமாகப் (accurate pitch) பொருந்த வேண்டும்.

2. பாடலில் அந்த எழுத்து ஒலிக்கும் நேரம் (பாடலுக்கான இசைக் குறியீட்டில் உள்ள அட்சர காலம் – beat duration of the musical note ) பாடகரின் வாயினுள் அந்த எழுத்தை ஒலிக்கத் தேவைப்படும் செயல்நுட்பத்திற்கு ஏற்றதாகவும்,  இருக்க வேண்டும்

யேசுதாஸ் சிரமப்பட்ட "மூழ்காது" என்ற சொல்லில் 'மூ' வுக்கான சுரம், 'ழ்'க்கான சுரம், அடுத்துவரும் 'கா'வுக்கான சுரம், மேலேக்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவையா என்பதை அந்த பாடலுக்கான சுரக்குறியிட்டில் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஒரு பாடலில் உள்ள சுரங்களை இணைக்கப் பயன்பட்ட 'இழை' பற்றிய சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய உள்ளன. இது தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரை  ‘Sangeet Natak’ (Vol XLII, Number 3,2008) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

யேசுதாஸ் பாடிய பாடலின் ஒலிப்பதிவில் கணினி துணையுடன், அந்த சொல்லுக்கு அவர் பயன்படுத்தியுள்ள சுரங்களைக் கண்டுபிடிக்க முடியும். மேற்குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளுமே பூர்த்தியாகாத வகையில் "மூழ்காது" என்ற சொல் இருப்பது,  அந்த ஆய்வில் வெளிப்பட்டால் வியப்பில்லை.” 'மூழ்காது' என்ற சொல்லில், 'ழ்'- ஏன் வைரமுத்து விரும்பியது போல் 'அழுத்திப் பாட' முடியாது என்பதற்கான காரணமும் அந்த ஆய்வில் வெளிப்படலாம். .  யேசுதாஸ் பாடலில், “'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.” என்பதற்கான காரணம் அதுவே என்று ஆய்வில் வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

பழைய திரைப்படப் பாடல்களில் உள்ள சொற்கள் தெளிவாக கேட்பது போல், இன்றுள்ள பாடல்களில் கேட்க முடியாமல், சிரமப்பட்டே அச்சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவ்வாறுள்ள சொற்கள் இடம் பெற்ற பாடல்களை மேற்குறிப்பிட்ட முறையில் ஆராய்ந்தால், அச்சொற்கள் அந்த இரண்டு நிபந்தனைக்ளையும் பூர்த்தி செய்யாமல் இசைப்பது தெளிவாகும்.

இளையராஜா வருகைக்கு முந்தைய திரைப்பாடல்களில் அந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகாத பாடல்கள் அரிது. இளையராஜாவிற்கும் வைரமுத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு,  அந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகாத பாடல்களை வைரமுத்து எழுதி, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்களாகதிருத்த மறுத்தாரா என்பதும் ஆய்விற்குரியது.’ (‘பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?’ ; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )

தமிழில் உள்ள உயிரெழுத்துக்கள் ' ஒள' என்ற 7 எழுத்துக்களும், '  ரி        நி' என்ற 7 சுரங்களுடன் தொடர்புடையது என்பதை 'சேந்தன் திவாகரம்'  தெளிவுபடுத்தியுள்ளதையும், அதுவே குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் மறைந்துள்ள இசையியல் (Musicology) புதிருக்கான திறவுகோல் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்';  http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

தமிழில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் பாடலில் இசைக்கப்படும்பொழுது, அது இசைக்கும் நேரம் (மாத்திரை- duration), அதிர்வு எண் (Frequency), முழக்கம் (Loudness) ஆகியவற்றின் வரையறைகளுக்கு உட்பட்டே ஒலிக்க வேண்டும், என்பதை, இசை மொழியியல் ஆய்வுகளுக்கு ஏற்ற வகையில் யாப்பிலக்கணம் விளக்கியுள்ளது.

'' என்ற உயிரெழுத்தை தமிழில் இருந்து அகற்றி, 'அய்' என்று எழுதுவதானது;

தொல்காப்பியத்தில் நமது வாயினுள் '' என்ற எழுத்து எவ்வாறு பிறக்க வேண்டும்?
'' என்ற உயிர் எழுத்து எவ்வாறு பிறக்க வேண்டும்?
'ய்' என்ற மெய்யெழுத்துஎவ்வாறு பிறக்க வேண்டும்?

அவ்வாறு பிறந்தால் தான், பாடலில் ஒலிக்கும்போது, அந்தந்த எழுத்துக்களுக்கான மேலே குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு ஒலிக்க முடியும்;

என்பதெல்லாம் தெரியாமல், 'அய்' என்று எழுதுவதானது தற்குறித்தனமாகும்

எனவே கமலஸாசனின் 'மய்யம்' தமிழில் தற்குறித்தனத்திற்கு ஒரு உதாரணமாகி விட்டது. அது மட்டுமல்ல, அதுவே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவிற்கும் உதாரணமாகி விட்டது;

என்பதை நாலடியார் கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

'பணிவுஇல் சீர் மாத்திரை இன்றி நடக்குமேல்
 வாழும் ஊர் கோத்திரம் கூப்படும்' நாலடியார்: 242

'சீர்' என்பது நேரசை, நிரையசை ஆகிய இரண்டு வகை அசைகள் சேர்ந்து உருவாக்குவது ஆகும்.

அது மட்டுமல்ல; எழுத்துக்கள் அசைகளாக சீரில் இசைக்கும் பொழுது, சீரினுள் ' பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகியவை இருப்பதை, சிலப்பதிகாரம் விளக்கியுள்ளது

கமல்ஹாசனின் 'மய்யம்' என்பதானது, '' என்ற உயிரெழுத்தானது, அவ்வாறு இசைக்கப்படும்போது உட்பட வேண்டிய வரையறைகளை எல்லாம், 'அய்' எவ்வாறு சிதைத்தது? என்பதை மேலே பார்த்தோம். அந்த 'சீர்' கேடானது, கமல்ஹாசன் வாழும் ஊரின் சீர்கேட்டின் விளைவாகும்;

என்பதை ' நாலடியார்' விளக்கியுள்ளதையும் மேலே பார்த்தோம்.

.வெ.ரா அவர்களின் 'லை' எழுத்து சீர்திருத்தமானது, மேலே குறிப்பிட்ட பாதகங்களை விளைவிக்காமல், எளிதில் எழுதுவதற்கான வரிவடிவ சீர்திருத்தமே ஆகும். தமிழின் வரலாற்றில் அவ்வாறு நிகழ்ந்துள்ள வரிவடிவ சீர்திருத்தங்களின் தொடர்ச்சியே அதுவாகும். ஆனால் கமல்ஹாசனின் 'மய்யம்' தமிழ் இலக்கணத்தில் நிகழ்காலத்தில் நடந்து வரும் கேள்வி கேட்பாரற்ற இலக்கணச் சீரழிவுகளில் ஒன்றாகும். (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)   சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html )

எனவே வைரமுத்து இசைத்தமிழைச் சீரழித்த போக்கின் தொடர்ச்சியா, இயற்றமிழைச் சீரழிக்கும் கமலஹாசனின் 'மய்யம்' ? என்ற அறிவுபூர்வ விவாதத்தினை தாமதமின்றி தொடங்குவதானது, தமிழின் மீட்சிக்கு வழி வகுக்கும். அந்த மீட்சிப் போக்கானது, தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு இட்டுச் செல்லும், என்பதை மேலே குறிப்பிட்ட 'நாலடியார்' சான்று தெளிவுபடுத்தியுள்ளது.


வைரமுத்து, கமலஹாசன் போன்றவர்கள் எல்லாம் வணிக நோக்கில், 'பிம்ப' பாதுகாப்பில், இவை போன்ற அறிவுபூர்வ விவாதங்களை இருளில் நீட்டிக்கச் செய்வதன் மூலம், தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவிற்கு பங்களித்தால், டிஜிட்டல் யுகத்தில் இன்றைய மாணவர்கள் படித்த இளைஞர்கள் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாத சூழலும் உருவாகி வருகிறது. 

குறிப்பு: அறிவுபூர்வ ஆராய்ச்சியில் ஆரவமுள்ளவர்களின் பார்வைக்கு;

கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ள பேச்சாளர் ஞானசம்பந்தன் 'மய்யம்' தொடர்பாக கொடுத்துள்ள விளக்கம்:

 
பாரதியின் படைப்புகளில் உள்ள இலக்கணப்பிழைகள் தொடர்பாக, 1950களில் ( எழுத்தாளர் பெயர் பாகீரதி என்பதாக ஞாபகம்) வெளிவந்த நூல், 'பாரதி பிம்ப' வழிபாட்டில் இருட்டில் மறைந்தது நீடிப்பதால், இது போன்ற விளக்கங்கள் வெளிவருகின்றனவா? தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை உள்ள இலக்கண நூல்களில், தனது விளக்கத்திற்கான சான்றினை பேச்சாளர் ஞானசம்பந்தன் வெளிப்படுத்தினால், அதனை அறிவுபூர்வ ஆய்விற்கு உட்படுத்த முடியும்.
 

2 comments:

  1. உங்கள் பதிவில் குறிப்பிடப்படும் நபர்களுக்கு நீங்கள் வைக்கும் விவாத நோக்கிலான கருத்துகள் அவர்கள் பார்வைக்கு சென்று சேர்கிறதா?
    அதற்கான முயற்சி செய்யப்படால்தானே விவாதம் தொடர வாய்ப்பு உண்டாகும்.

    ReplyDelete
    Replies
    1. ஈமெயில் தெரிந்து அனுப்பியவர்கள் எவரும் இதுவரை பதில் கூட போடவில்லை. படிப்பவர்களில் ஆரவமுள்ளவர்கள் அனுப்பலாம். எனக்கு அவர்களின் ஈமெயில் தெரிவித்தால், நான் அனுப்ப இயலும்.

      Delete