Thursday, March 1, 2018


தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’(Macro-world (2);



‘என்கவுண்டரில்’  சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy)


‘ 'கிளாசிகல் எந்திரவியல்' (Classical Mechanics) அணுகுமுறையில் 'மைக்ரோ உலகத்தின்' செயல்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது. அது போலவே 'குவாண்டம் எந்திரவியல்' (Quantum Mechanics) அணுகுமுறையில் 'மேக்ரோ உலகத்தின்' செயல்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது.’ என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். அது போல சமூகத்திலும் 'மைக்ரோஉலகம்' தொடர்பற்று வாழும் 'மேக்ரோ உலகத்தில்' வாழும் மனிதர்களால், மைக்ரோ உலகத்தின் நியாயங்களை விளங்கிக் கொள்ள முடியாது.

கல்லூரி ஆசிரியர் கழகத்தில் ஒரு கிளையில் உறுப்பினராக உள்ள வரையில் மைக்ரோ உலகத்தில் வாழ்ந்த, கிளையில் நடந்த தேர்தலில் கிளையின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாதவர், சிலமாதங்களுக்குப் பின் நடந்த தேர்தலில், மாநில கல்லூரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்;

என்ற உதாரணத்தை முந்தைய பதிவில் பார்த்தோம்
(https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

அவ்வாறு மைக்ரோ உலகத்திலிருந்து மேக்ரொ உலகத்திற்குள் நுழைந்த அந்த நபர், தமது வசதி வாய்ப்புக்களை 'எந்த வழியிலாவது' பெருக்கும் நோக்கத்தில் வாழ வேண்டுமானால்;

மேக்ரோ உலகத்தில் 'செல்வாக்கான' நபர்கள் யார்? யார்? என்று 'நுகர்ந்து', அந்த நபர்களின் 'பலகீனங்கள்' யாவை? என்பதை 'அறிந்து', அவர்களின் பார்வையில் படும்படி 'வாலாட்டி', அவர்களுக்கு 'உதவும் திறமைகள்' (?) தம்மிடம் இருப்பதை, 'எந்த வழியிலாவது'(?) அவர்களுக்கு புரிய வைத்து, நெருக்கமாகி, 'அதிவேக' பணக்காரர் ஆன பல 'தமிழர்கள்', நானறிந்த 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு, நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். (http://tamilsdirection.blogspot.in/2013/10/  )
மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் கழகம், கட்சிகள், இலக்கிய, கலாச்சார அமைப்புகள் போல, மேக்ரோ உலகத்தில் கல்வி, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் தொடர்புடைய‌

மேக்ரோ உலகமானது ஒப்பீட்டளவில் 'பலகீனங்கள்' இல்லாத, அல்லது 'பலகீனங்கள்' மிகவும் குறைவாகவும்;

புலமை, சொந்த வாழ்வில் நேர்மை, ஊழலுக்கு வழியற்ற நிர்வாகத் திறமை, போன்ற 'பலங்கள்' மிக அதிகமாகவும் உள்ளவர்களின் செல்வாக்கில் இருக்கும் வரை;

மேலே குறிப்பிட்ட 'சமூக செயல்நுட்பம்' மூலமாக மேக்ரோ உலகில் வாழும் எந்த நபரும், 'அதிவேக பணக்காரர்' ஆக முடியாது. 1967 வரை தமிழ்நாட்டின் மேக்ரோ உலகம் அப்படித்தான் இருந்தது;

என்பதை இன்று சுமார் 70 வயதுக்கும் அதிகமானவர்கள் அறிவார்கள்; இன்றுள்ள கல்லூரி மாணவர்களிடமும், படித்த இளைஞர்களிடமும் அதை சொன்னாலும், அவர்கள் நம்ப மறுக்கும் அளவுக்கு;

இன்று தமிழ்நாட்டின் மேக்ரோ உலகம் சீரழிந்திருக்கிறது

அவ்வாறு சீரழிந்ததன் காரணமாகவே, மேக்ரோ உலகில் எந்த எதிர்ப்புமின்றி, தமிழ்நாட்டின் முதல்வர் சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக 'மர்மமான' முறையில் தமிழ்நாட்டில் 'புகழ்பெற்ற' மருத்துவ மனையின் கண்காணிப்பு கேமிராக்கள் எல்லாம் செயல் இழக்க, ஆளுநர் உள்ளிட்டு முதல்வரின் பாதுகாப்பான மருத்துவ சிகிச்சையைக் கண்காணிக்க வேண்டிய அரசு எந்திரங்கள் செயல் இழக்க, உலக வரலாற்றில் இணையற்ற இழிவுக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடும் இடம் பெறும் அவலம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் துபாயில் இறந்த நடிகை, அதே மரணத்தை தமிழ்நாட்டில் 'அதே வகையில்'(?) சந்தித்திருந்தாலும், அந்த நடிகையின் 'பிம்பத்தைப்' பாதிக்கும் எந்த தகவலும் வெளிவராமல், தாமதமின்றி இறுதிச் சடங்கு நிறைவேறியிருக்கும்;

என்பதை எவரும் மறுக்க முடியுமா?

மேலே குறிப்பிட்ட சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக 'மர்மமான' முறையில் தமிழ்நாட்டில் 'புகழ்பெற்ற' மருத்துவ மனையின் கண்காணிப்பு கேமிராக்கள் எல்லாம் செயல் இழக்க, அந்த மருத்துவ மனை வாயிலில் நின்று, ஜெயலலிதாவின் சிகிச்சையில் முன்னேற்றம் உள்ளதாக அறிவித்த பிரபலங்களில் எவருக்காவது;

மைக்ரோ உலகத்தில் வாழும் சாமான்யர்கள் தொலைக்காட்சிகளில் அதைப் பார்த்து கோபமாகவும் கிண்டலாகவும் வெளிப்படுத்திய 'கமண்ட்ஸ்' (comments) தெரிந்திருந்தால்;

அவர்கள் எல்லாம் சாகும்வரை 'வெளியில் சொல்ல முடியாத' குற்ற உணர்வு அடிப்படையிலான தாழ்வு மனப்பான்மையுடனேயே வாழ்ந்து மறைந்தால் வியப்பில்லை


ஆதாய அரசியலின் விளைவான அரசியல் நீக்கத்தில் (depoliticize) பலகீனமாகி வந்த தமிழ்நாட்டு கட்சி அரசியலானது, மேற்குறிப்பிட்ட அப்பொல்லோ வாயில் மூலமாக மரணத்தை தழுவி விட்டதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியது; எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட, அதிக செல்வாக்குடைய 'தலைவர்'(?) தினகரன் என்பதை உணர்த்தியவாக்குகள் மூலமாக.

‘‘ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், பொதுமக்களிடம் அந்த 'மர்ம மரணம்' ஏற்படுத்திய வீச்சினைப் பற்றியும், பொதுமக்களின் கருத்துருவாக்க செயல்நுட்பம் (Public Opinion Mechanism) பற்றியும், புரிதலின்றி;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' குறித்த விசாரணை கோருவதற்குப் பதிலாக, சசிகலாவை தரிசித்து ஆதரவு நல்கிய கட்சித் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், துணை வேந்தர்கள் எல்லாம், 'எந்த அளவுக்கு இழிவான அமாவாசைகளாக' பொது மக்கள் பார்வையில் வெளிப்பட்டார்கள்?

அதன் தொடர்விளைவாக தி.மு., ...தி.மு. மட்டுமின்றி, பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் 'அமாவாசைகளாக' யணித்தவர்களின்  'நம்பிக்கை' எந்த அளவுக்கு அதிகரித்தது? வெட்கப்பட்டு 'அமாவாசைகளாக' மாற தயங்கியவர்கள் எல்லாம், அந்தந்த கட்சிகளில் எவ்வாறு அமாவாசைகளாக மாறத் தொடங்கினார்கள்?

என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் வெட்ட வெளிச்சமானது.’ (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html )

மேக்ரோ உலகில் 'அந்த அமாவாசைகள்' எல்லாம் அவர்களுக்கு தெரிந்த வழிகளில் பலன்கள் பெற்றதை கண்டிக்காத கமல்ஹாசன், சாமானியர்கள் தங்களால் முடிந்த, பொதுக்கூட்டங்களில், ஆர்பாட்டங்களில் பங்கேற்க கட்டணம் வசூலித்தது போலவே, தங்களுக்கு மிக பெரிய தொகையான வாக்குக்கு பல ஆயிரம் வாங்கியதை மட்டும் குறை சொன்னது சரியா? மேக்ரோ உலகத்தில் வாழும் கமல்ஹாசனுக்கு, மைக்ரோ உலக நியாயம் தெரியவில்லையா?என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

சங்க காலம் முதல் 1967 வரை தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு இருந்த சட்டபூர்வ பாதுகாப்பானது 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின் சீர் குலைந்து, ஊழல் பெரும்பசிக்கு தீனியானதையோ, தனியார் சொத்துக்களை எல்லாம் அச்சுறுத்தியும், கொலை செய்தும் அபகரித்ததையோ, அத்துடன் அடங்காமல் அதிக லாபம் தரும் தொழில் வியாபாரங்களையும் விட்டு வைக்காமல் அபகரித்து தமிழ்நாட்டின் தொழில் வியாபார வாய்ப்புகளை எல்லாம் அரசியலுக்கு அடிமைப்படுத்திய போக்கையோ, கண்டிக்காத;

'பிரபல' (?) எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட கொள்ளையர்களில் 'அதி புத்திசாலிகள்' ஏற்பாடு செய்த பொதுக்கூட்டங்களில், கருத்தரங்குகளில், இன்னும் பல நிகழ்ச்சிகளில், அந்த ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் தத்தம் 'புலமை' மூலம் 'போட்டி போட்டு' வாழ்த்தியவை எல்லாம் இணைய தளத்தில் ஒலி/ஒளி பதிவுகளாக கிடைக்கின்றன. கமல்ஹாசன் அறிவித்துள்ள அவர‌து கட்சி பேச்சாளர்களில், அத்தகையோர் இடம் பெற்றுள்ளார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

நமக்கு தொடர்பின்றி நடந்த நிகழ்ச்சிகளை கற்பனையாக மாற்றி, அதன் மூலம் இன்பம் அனுபவித்தலை 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) என்று குறிப்பிடுவார்கள்.

அது போன்ற இன்பத்தை அனுபவிக்க விரும்புபவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட ஒலி/ஒளி பதிவுகளில் பாராட்டுக்குள்ளான ' கதாநாயகர்களுக்குப்' (?) பதிலாக, ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணியை' அந்த கதாநாயகர்களாக 'கற்பனை செய்தால்', வாய்விட்டு குலுங்கி சிரிக்கும் நகைச்சுவை நிறைந்த இன்ப அனுபவங்களாக ரசிக்கலாம்; கீழ்வரும் பின்னணியில்.

'பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகளில்;  (http://www.frontline.in/static/html/fl2016/stories/20030815007913400.htm  ) கீழ்வரும் முக்கிய தகவலானது, இடம் பெற்றதாக தெரியவில்லை.

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர் அந்த 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. 'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும்.

பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக்கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html  )

அவ்வாறு வாழ்ந்து 'ரவுடி' வீரமணி மறைந்திருந்தால், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, படத்திறப்பு நிகழ்ச்சியில் 'தமிழ்த்தேசிய', 'திராவிடர்/திராவிட', 'கம்யூனிஸ்ட்' தலைவர்கள் எல்லாம் கலந்து, 'ரவுடி' வீரமணியின் 'தொண்டுகளை'(?) பாராட்டி பேசியிருப்பார்கள்; 'ரவுடி' வீரமணியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாபத்திற்குள்ளாகி. தமிழ்நாட்டின் 'முற்போக்குகள்' எல்லாம், மைக்ரோஉலகலிருந்து அந்நியமாகி, சமுக அடித்தளத்தை இழந்து வருவதாலும், 'புத்திசாலி ரவுடி வீரமணிகளின்' பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெரும் போக்கானது தொடங்கி விட்டதாலும், அவர்கள் 'சமூக சருகாகி' உதிரும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (‘Are the seculars & liberals in India, losing the hopes for social survival?’; http://veepandi.blogspot.sg/2017/07/are-seculars-liberals-in-india-losing.html )

திராவிட கட்சிகளின் ட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்தது? என்ற முன்னோட்ட ஆய்விற்கு:

1967க்கு முன் இருந்த சென்னை மாநிலக்கல்லூரி எவ்வாறு இருந்தது? 1967 முதல் எவ்வாறு படிப்படியாக சமூக விரோத சக்திகளிடம் சிக்கி, 'ரவுடி' வீரமணி தலைமை விருந்தினராக பங்கேற்கும் அளவுக்கு சீரழிந்தது? என்ற ஆய்வினை மேற்கொள்வதானது துணை புரியும். (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html )   
  
'இனம்' என்ற சொல்லின் (1944 திரிதலுக்கு முன் இருந்த பொருளின் படி), மைக்ரோ உலகத்திலும் 'நல் இனம்', 'சிற்றினம்', 'தீ இனம்' என்ற பிரிவுகளில் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். 1944இல் .வெ.ரா அவர்கள் 'இனம்' என்ற சொல்லின் பொருளானது திரிந்தகாலனிய சூழ்ச்சியில் சிக்கி, 'திராவிடர் கழகம்' தொடங்கியதானது, இன்று தமிழ்நாட்டில் மைக்ரோ உலகில் சிற்றினமாகவும், தீயினமாகவும் இருந்த மனிதர்கள் எல்லாம், துவக்கத்தில் குறிப்பிட்ட ' சமூக செயல்நுட்பம்' மூலம், மேக்ரோ உலகில் செல்வாக்கான மனிதர்களாக வலம் வரும் விளைவில் முடிந்துள்ளது;( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html

என்ற எனது ஆய்வு முடிவினை எதிர்த்து, அறிவுபூர்வ மறுப்புகள் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


பிறரின் பாராட்டுக்கு ஏங்காமல், தமக்கான வாழ்வை வாழ்பவர்கள் எல்லாம், மேக்ரோ உலகில் செல்வாக்கான இடம் (தமிழக முதல்வர் பதவி) கிடைத்தாலும், தயங்கியே ஏற்று, பின் தமது கடமையை நிறைவேற்றிய பின், தமது இயல்பான, உண்மையான மகிழ்ச்சிக்கான மைக்ரோ உலகத்திற்கு திரும்பி விடுவார்கள்;


என்பதற்கு ஓமாந்துரார் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்துள்ளார்.



சீரழிந்த சமூகத்தில் மேக்ரோ உலகில் தமக்கான இடத்தை 'இறுகப் பற்றி' வாழ்வதற்கு,  இழிவான சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிகளில் இருந்து தப்புவது கடினமே.


மேக்ரோ உலகத்தில் 'இழிவான சமரசங்கள்' இன்றி, தமது சமுக நிலையை பாதுகாத்து வாழ்வதானது கடினமாகி வரும் சூழலில்;

வாழ்க்கையில் இயல்பான இன்பங்களை அனுபவித்து வாழ விரும்புபவர்கள் எல்லாம் இழப்புகளை பற்றிய கவலையற்ற எளிமையான, போலி பாராட்டு, புகழுக்கு இடமளிக்காத வகையில் வாழ்வதன் மூலமே;

மேலே குறிப்பிட்ட 'விகேரியஸ்' இன்பங்கள் உள்ளிட்ட இயற்கையிலும், சமூகத்திலும் வெளிப்படும் இன்பங்களை அனுபவித்து வாழ முடியும். ( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html

நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருக்கிறார்கள்

ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;

என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்


பாழடைந்து அல்லது ஊழல் கட்டுமானத்தில் சிக்கிய கட்டிடங்கள் எல்லாம் மழையில் வெள்ளத்தில் இடிந்து விழுவதற்கு முன்பேயே, அக்கட்டிடங்களில் கட்டுமானப் பொருட்களின் அணுக்களும் (atoms) மூலக்கூறுகளும் (molecules) பாழடைவதற்கான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை, 'சேதமற்ற ஆய்வு' (Non-Destructive Testing) முறையில் முன்கூட்டியே கணிக்க முடியும்; சேதங்களையும் தவிர்க்க முடியும்; மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ள கட்சிகளின் ஆட்சிகளில்


அது போலவே சமூகத்திலும் தமிழ்நாட்டில் இன்றுள்ள மேக்ரோ உலகமானது இடிந்து விழுவதற்கு முன்பேயே, சமூகவியலுக்கான‌ 'சேதமற்ற ஆய்வு' (Social Non-Destructive Testing) முறையில், நான் விடுத்துள்ள அபாய எச்சரிக்கைளில்;



கட்டிடங்கள் போலின்றி, சமூக எந்திரவியலில் (Social Mechanics) மைக்ரோ உலகில் வீழ்ந்து வரும் போக்குகளுனேயே, புதிய மேல்கட்டுமானத்திற்கான போக்குகளும் முதலில் மைக்ரோ உலகில் தான் வெளிப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



எனது அபாய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தன்மானக் கேடான திசையில் பயணிக்கும் கட்சிகளும், மனிதர்களும், குடும்பங்களும், 'அதற்கான விலையை' கொடுப்பதிலிருந்தும் தப்ப முடியாது;



என்பதும் சமூகவியல் இயற்கை விதியாகும்.

No comments:

Post a Comment