பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்;
தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?
வீழ்ந்து வருகிறார்களா?
'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது'
என்று முழக்கமிட்டு, திராவிடக் கட்சிகள் 1967இல் ஆட்சியை பிடித்து, ஆண்டதன் தொகுவிளைவாக,
தமிழ்நாடானது, இந்தியாவில் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
( “தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள்
வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. “
– ‘பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!’ பிரவீண் சக்ரவர்த்தி- விவேக் தேஹேஜியா; http://tamil.thehindu.com/opinion/columns/
)
இன்று வடக்கிலிருக்கும் ஏழைகள் எல்லாம், வேலைக்காக,
தெற்கில் இருக்கும் தமிழ்நாட்டை நோக்கி, 'படையெடுத்து
வரும்' விபரீதம் அரங்கேறிவரும் அளவுக்கு, தமிழ்நாடு பணக்கார மாநிலமாகி வருகிறது.
“தமிழ்நாட்டில்
கட்டிட வேலைகளுக்கும், மொத்த வியாபாரக்கடைகளில் மூட்டை தூக்கும் வேலைகளுக்கும், கிராமங்களில்
விவசாய வேலைகளுக்கும், வட நாட்டிலிருந்து 'தரகர்கள்' மூலம் வருவிக்கும் பணியாட்கள்
குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்து, தமிழர்கள் உடலுழைப்புத் துறையில் 'பதராகும்'
போக்கை வளர்த்து வருகிறர்கள். இந்த 'பதராகும்' போக்கின் ஊடே, தமிழ்நாட்டில் தமிழர்களில் பலர் , எல்லா வகையான
தரகுப் பணிகளிலும் 'நிபுணர்களா'க செல்வம்,
செல்வாக்குடன் வளர்ந்து வளர்கிறார்கள்.”; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html
தமிழ்நாட்டில் வசதியில், வாய்ப்புகளில், சொத்துகளை
வாங்கி குவிப்பதில், யார் முன்னணியில் இருக்கிறார்கள்? என்ற ஆய்வின் மூலமே, தமிழர்கள்
தமிழ்நாட்டில் 'வளர்ந்து' வருகிறர்களா? 'வீழ்ந்து' வருகிறார்களா? தமிழ்நாடு 'பணக்கார'(?) நாடாகி வருவதற்கு காரணமான
'சமூக செயல்நுட்பத்தில்'(?), தமிழர்கள் சீரழிந்து, இயற்கை வளங்களும் சீரழிந்து, தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்)
மரணப்படுக்கையில் உள்ளனவா? என்பது தெளிவாகும்.
சுமார் 5 வருடங்களுக்கு முன், திருச்சி காட்டூர் அருகே,
புதிதாக உருவாகி இருந்த ஒரு பகுதிக்கு, துக்கம் விசாரிக்க, ஒரு தமிழர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
பெரிய பெரிய வீடுகள் இருந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே தமிழரின் வீடுகள் ஆகும்.
பெரும்பாலான வீடுகள் வடநாட்டினரின் வீடுகளாக இருந்தன.
சுமார் 7 வருடங்களுக்கு முன், வாடகைக் காரில், எனது
குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தேன். சாலையின்
இருபுறமும் இருந்த நிலங்களில் பெரும்பாலானவற்றை வடநாட்டு பணக்காரர்கள் வாங்கி விட்டதாக,
ஓட்டுநர் தெரிவித்தார்.
சுமார் 30 வருடங்களுக்கு முன், நான் பேராசிரியராக
வேலை பார்த்து வந்த நகரத்தில், நான் கேள்விப்பட்ட தகவலானது, எனக்கு மறக்க முடியாததானது.
அந்த நகரத்தில் அதுவரை நடந்த எந்த போராட்டத்திலும்,
ஒரு வடநாட்டுக்காரரின் கடையானது, சிறு கல்வீச்சுக்கு கூட உள்ளானது இல்லை. அந்த அளவுக்கு
அரசியல் கட்சிகள் மற்றும் 'ரவுடிகள்' முக்கிய புள்ளிகளுக்கு, கொடுக்க வேண்டியதை கொடுத்து,
அந்த வடநாட்டுக்காரர், எந்த பாதிப்புமின்றி வியாபாரத்தில் நன்கு 'வளர்ந்து' வருகிறார்.
திராவிட ஆளுங்கட்சித் தலைவர்களில் யார்? யார்? தமிழர்களையும், தமது கட்சிக்காரர்களையும் 'பதர்' போல இரண்டாம் தரத்தினராக நடத்தி, தம்மை தேடி வரும் வடநாட்டு/வெளிநாட்டு முதலாளிகளையும், வடநாட்டு கட்சிகளைச் சார்ந்தவர்களையும், வாசல் வரை வந்து வழியனுப்புபவர்கள்? அந்த தலைவர்களின் 'எடுபிடிகளான பெரியார் சமூக கிருமிகள்' யார்? யார்? என்பது அந்தந்த கட்சிகளில் மேல் மட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரியும்; மீடியா வெளிச்சத்திற்கு வராமல்.
தமிழ்நாட்டில் விவரமானவர்களுக்கு பொருள் ரீதியிலும், ஏமாந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வ ரீதியிலும் 'தீனி' போட்டு, தொண்டர்களை 'வளர்த்து', அவ்வப்போது 'பொது பிரச்சினைகளை' வைத்து, போராடி வரும் 'வாழ்வியல் புத்திசாலி(?) தலைவர்கள்' எல்லாம், வருமானம் ஈட்ட, பல பல புதிய வழிகள் உருவாகி வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் விவரமானவர்களுக்கு பொருள் ரீதியிலும், ஏமாந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வ ரீதியிலும் 'தீனி' போட்டு, தொண்டர்களை 'வளர்த்து', அவ்வப்போது 'பொது பிரச்சினைகளை' வைத்து, போராடி வரும் 'வாழ்வியல் புத்திசாலி(?) தலைவர்கள்' எல்லாம், வருமானம் ஈட்ட, பல பல புதிய வழிகள் உருவாகி வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
இவை போன்றவற்றில், விபரமுள்ள மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம்,
மேற்குறிப்பிட்ட போக்கினை உறுதி செய்யும் தகவல்களே, எனக்கு கிடைத்து வருகின்றன.
தமிழ்நாடு பணக்கார மாநிலமாக வளர்ந்து வரும் போக்கில், 'பணக்காரர்களாக' ஒப்பீட்டளவில், பிற மாநிலத்தவரும்,
வெளிநாட்டினரும் 'அதிவேகமாக' வளர்ந்து வருவதற்கு, கிழ்வரும் சமூக செயல்நுட்பமானது காரணமா?
என்பதும் ஆய்விற்குரியதாகும்.
“அகத்தில் ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி, புறத்தில்
கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம், மனசாட்சியின்றி, தனது செல்வம், செல்வாக்கு உள்ளிட்ட
தேவைகளுக்கு பயன்படுத்தும் மனித மிருகங்கள் எல்லாம், 'சிற்றினம்' ஆக, சங்க இலக்கியங்களில்
அடையாளம் காணப்பட்டுள்ளது. அகத்தில் கட்டுப்பாடுகள் அற்ற, சிற்றின மனிதர்களின் செயல்பாடுகள்,
பெரும்பாலும், பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட ஒழுக்கநெறிகளால், புறத்தில் எந்த
அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த சமூகம் வளர்ச்சிப் பாதையில்
பயணிக்கும்.
அந்த கட்டுப்பாடுகள் எல்லாம், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்புடைய அடையாளங்கள்
எல்லாம், 'முற்போக்கு', 'புரட்சி' என்ற பெயரில்,எந்த அளவுக்கு சிதைக்கப்படுகிறதோ,
அந்த அளவுக்கு, அந்த சமுகம் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும். சிற்றின மனிதர்கள்
எல்லாம், சமூகத்தில் 'செல்வாக்கான' தீ இனமாக, இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம்,
'தூண்டப்பட்ட' சிற்றினமாக்கி, 'சமூக வலிமை' பெறுவார்கள். அவ்வாறு வீழ்ச்சிப்பாதையில்
பயணிக்கும் சமூகத்தில், அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், தவிர்க்க முடியாமல்
வெளிப்படும் அறிகுறிகளாகும்.
வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் சமூகத்தில்,
செல்வாக்குள்ள சிற்றின மனிதர்களால், 'சான்றோர்' இனமாக முன்னிறுத்தும் மனிதர்கள்
எல்லாம், அந்த வீழ்ச்சிக்கு பங்களிக்கும் 'தீ இனம்' ஆவர். அது போன்ற
'தீ இன' சான்றோர்கள், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு, வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்?
என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு செல்வாக்குடனும், 'ஊழல் பெரும்பசியுடனும்' வலம்
வரும் பலர், தமது இளமை காலத்தில், 'சமூக நீதி, தமிழ் இன உணர்வு, தனித்தமிழ்நாடு, புரட்சி'
என்று உணர்ச்சிபூர்வ பேச்சுக்களையும், எழுத்துக்களையும் வெளிப்படுத்தியவர்கள்
ஆவர். பொது வாழ்வு கொள்ளைக்கு, முதலில்லா மூலதனமா (capital without investment), அந்த
பேச்சுக்களும், எழுத்துக்களும்? என்பதும் ஆய்விற்குரியதாகும். “
“வசதியிலும் செல்வாக்கிலும் இருப்பவர்களுக்கு 'வாலாட்டி', தமது வசதி வாய்ப்பை
உயர்த்துவதையே, தமது வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கலாம். அத்தகையோர் சமூகத்தில் மிக சிறுபான்மையாகவும், சமூகத்தின்
'வி.ஐ.பி'(VIP)-க்களாக மதிக்கப்படாமலும், சங்க காலம் முதல் 1967 வரை தமிழ்நாட்டில்
இருந்ததாக, நானறிந்த வரலாற்றுச் சான்றுகள்
உணர்த்துகின்றன.
தமிழ்நாட்டுத் தொலைக் காட்சிகளில் 'இசைப் போட்டிகளில்' அதிகமாக வெற்றி பெறுபவர்கள்,
குறிப்பாக சிறுவர், சிறுமியர்களில்,பெரும்பாலும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று
கேள்விப்படுகிறேன். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழ்நாட்டில் தரத்தில் உயர்ந்த பொறியியல்
கல்லூரிகளில், இசைத் தகவல் தொழில்நுட்பம்' (Music Information Technology) என்ற பாடத்தை நான்
அறிமுகப்படுத்தியுள்ளேன். அதில் ஒப்பீட்டளவில்,
தமிழ்நாட்டு மாணவர்களை விட , பிற மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் படிக்கும்
மாணவர்களே எனக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். எனது சமூக வட்டத்தில் உள்ள 'திராவிட
அபிமானிகளில் பலர்', எனது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்வதை விட, அந்த ஆய்வுகள் மூலம்
எனக்கு எவ்வளவு செல்வம், செல்வாக்கு கிடைக்கிறது/கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில்
தான் அதிக ஆர்வத்துடன் உள்ளார்கள்.
எனவே தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து
வருவதும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்தி , போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக'
வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக வளர்வதும், ஒரே நோயின் இரு அம்சங்களாகும்.”
14 ஆம் நூற்றாண்டிலிருந்து பிறமொழி 'முஸ்லீம், கன்னட, தெலுங்கு' மன்னர்கள் ஆட்சிகளில்
'தொடர்ந்து' தமிழ்நாடு ஏன் சிக்கியது? (https://en.wikipedia.org/wiki/Bahmani_Sultanate
& https://en.wikipedia.org/wiki/Krishnadevaraya#Success_in_Deccan
);
என்ற கேள்வி தொடர்பான ஆய்வுகளில், தமிழரின்
'அகச் சீரழிவுக்கும்' முக்கிய இடம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அறிவுபூர்வ ஆராய்ச்சியை விடுத்து, உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பனர்கள் தான் காரணம்' என்று சொல்லி, ஏமாற்றும்/ஏமாறும் போக்கானது, சீரழிவை கூட்டுவதற்கே வழி வகுத்தது. (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )
1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா,
தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, 1944இல்
'தடம்' புரண்டு, 'இனம், சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சி வலையில் சிக்கி, தாய்மொழி,
பாரம்பரியம், பண்பாடு போன்ற 'ஆணி வேர்களையே', 'நோய்களாக' கருதி பயணித்து, தமிழர்களின்
'அகச்சீரழிவு போக்கை வேகமாக்கியதன்' விளைவானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின்
மீட்சிக்கான வாய்ப்பை மேலும் பலகீனமாக்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அகத்தில் ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி, புறத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம்,
மனசாட்சியின்றி, தனது செல்வம், செல்வாக்கு உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் மனித
மிருகங்களின் பிடியிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் விடுவிக்கும்
முயற்சியானது, ஆர்வமுள்ள மனிதர்களின் 'அகத்தில்' இருந்து தான் தொடங்க வேண்டும். அத்தகைய
போக்கினை ஊக்குவிக்கும் அமைப்பானது அந்த போக்கில் தான் உருவாகும். சாதி/மத/மொழி/வட்டார
அடிப்படைகளில் 'உணர்ச்சிபூர்வ' வெறுப்பை வளர்த்து வரும் கட்சிகள் ஒழியாமல், அறிவு பூர்வ
விவாதங்கள் ஊக்குவிக்கப்படாமல், அது சாத்தியமில்லை.
பிறமொழி மன்னர்கள் ஆட்சியிலும், காலனி ஆட்சியிலும், பின் 1967 வரையிலும், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள், ஆறுகள், கிரானைட், தாது/ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, சீரழிக்கும் - மேலே குறிப்பிட்ட 'முதலில்லா மூலதன'- கொள்ளையர்களிடம், நேரடியாகவும்/மறைமுகமாகவும் பலன்கள் பெறாத 'சான்றோர்கள்'(?), தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? அந்த கொள்ளையர்களின் 'உதவிகளில்'(?) ஈழ விடுதலை முயற்சியானது சிக்கி, சீரழிந்ததா? (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html ) அந்த கொள்ளைகளில், சிலவற்றை மட்டும் 'சுயலாப' நோக்கில், 'சடங்காக' எதிர்க்காமல், தொடர்ந்து, உண்மையாக எதிர்த்து வரும் எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் இருக்கிறார்களா?
பிறமொழி மன்னர்கள் ஆட்சியிலும், காலனி ஆட்சியிலும், பின் 1967 வரையிலும், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள், ஆறுகள், கிரானைட், தாது/ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, சீரழிக்கும் - மேலே குறிப்பிட்ட 'முதலில்லா மூலதன'- கொள்ளையர்களிடம், நேரடியாகவும்/மறைமுகமாகவும் பலன்கள் பெறாத 'சான்றோர்கள்'(?), தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? அந்த கொள்ளையர்களின் 'உதவிகளில்'(?) ஈழ விடுதலை முயற்சியானது சிக்கி, சீரழிந்ததா? (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html ) அந்த கொள்ளைகளில், சிலவற்றை மட்டும் 'சுயலாப' நோக்கில், 'சடங்காக' எதிர்க்காமல், தொடர்ந்து, உண்மையாக எதிர்த்து வரும் எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் இருக்கிறார்களா?
மேற்குறிப்பிட்ட சூழலில், நானறிந்தது வரையில், வேறு எவரும் சந்தித்திருக்க முடியாத 'கசப்பான' அனுபவங்களின் பின்னணியில், மீதமுள்ள காலத்தையும், 'ஆக்கபூர்வமாக' கழிக்க ;
அரசு பள்ளிகளில் 'தமிழ்வழிக் கல்வி' மீட்சிக்கு, என்னால் இயன்ற உதவிகளை, எனது நம்பிக்கைக்கு பாத்திரமான மனிதர்கள் மூலம் செயல்படுத்த 'ஏற்பாடு' செய்து விட்டு, சில காலம் வெளிநாட்டில் வாழ்வதன் மூலமே, 'ஆக்கபூர்வமாக' கழிக்க முடியும் என்ற கருத்தானது, என் மனதில் வலு பெற்று வருவதற்கு, கீழ்வரும் போக்கும் காரணமாகும்.
தமிழ்வழிக்கல்வி மீட்சி என்பதானது, தமிழை மரணப்படுக்கையிலிருந்து மீட்கும். தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில்;
இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல அறிவுப் புதையலாக, பழந்தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன;
என்பதை நிரூபிக்கவல்ல எனது ஆய்வுகளை தொடர்ந்து செய்வதற்கான சூழலும்,ஆதரவும்;
தமிழ்நாட்டில் இல்லை, என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
எனது R & D projects, மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாகி வரும் வியாபார வாய்ப்புகள் மூலம், எனக்கு வரும் நிகழ்கால/எதிர்கால வருமானங்களை தெரிந்து கொள்வதில் மட்டுமே ஆர்வமுள்ள, தமிழ் உள்ளிட்ட எனது ஆய்வுகள் பற்றி அறியும் ஆர்வமற்ற;
'வாலாட்டி' வசதியாகும் அறிவில் 'நிபுணரான'(?), மற்றும் அறிவு 'வாசனை தெரியாத', மனிதர்களின் 'வாடையின்றி' வாழ, மேலே குறிப்பிட்ட வழியைத்
தவிர, வேறு வழி இருப்பதாக, எனக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment