தமிழ்நாட்டில் 'சுயநல சக்திகளின்' அழிவு காலம் நெருங்கி விட்டதா?அடுத்த சட்டமன்ற தேர்தலில், எந்த கட்சி எவ்வாறு ஆட்சியை பிடிக்க முடியும்?
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் 'ஊழல் கூட்டணி' எவ்வாறு செயல்படுகிறது?
என்பதை, 'கழிவறை' பிரச்சினை மூலம் வெளிப்படுத்திய;
'ஜோக்கர்'
என்ற திரைப்படமானது, வியாபார ரீதியிலும்
வெற்றி பெற்று, வருவதானது, ஒரு அபூர்வ ‘சிக்னலாகும்’(Signal). 'ஜோக்கர்' படத்தில் வரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக
இல்லாமல்; 'சாகச' நோயில் சிக்காமல், தாங்கக்கூடிய இழப்புகளை விரும்பி ஏற்று, விளம்பரமின்றி
ஊழல் ஒழிப்புக்கு பங்களிப்பவர்கள், வளர்ந்து வரும் காலக்கட்டம் இது என்பதும், அவ்வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். 'தமிழ்/தமிழின உணர்வு
வியாபாரிகள்' ஆதிக்க சூழலில், சுயலாப நோக்கற்ற தமிழ் ஆதரவாளர்கள்/புலமையாளர்களும்
'ஜோக்கர்'களாக, தமிழ்நாட்டில் வாழ்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'செல்வாக்கான' தலைவர்களிடம், 'இன்று வாலாட்டி' பிழைத்து வரும் 'அறிவு ஜீவிகள்', 'அந்த' தலைவர்களின் இறப்பை எதிர்நோக்கி, அவர்களின் 'வண்டவாளங்களை' எழுத்தாக்கி 'செழிக்க', இப்போதே திட்டமிட்டு, 'செயலாற்றி' வரும் போக்கில், தமிழ்நாடே 'ஜோக்கர் நாடாகி' வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'செல்வாக்கான' தலைவர்களிடம், 'இன்று வாலாட்டி' பிழைத்து வரும் 'அறிவு ஜீவிகள்', 'அந்த' தலைவர்களின் இறப்பை எதிர்நோக்கி, அவர்களின் 'வண்டவாளங்களை' எழுத்தாக்கி 'செழிக்க', இப்போதே திட்டமிட்டு, 'செயலாற்றி' வரும் போக்கில், தமிழ்நாடே 'ஜோக்கர் நாடாகி' வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'இந்துத்வா' எதிர்ப்பு
கண்ணோட்டமுடைய எனது நண்பர், கீழ்வரும் எனது கணிப்பு சரியென்று
தெரிவித்துள்ளார்.
தமிழக பி.ஜே.பி கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் தாம் வாழும் ஊர்களில் எல்லாம், பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம்;
தத்தம் பகுதியில் இருக்கும்
கழிவறை மற்றும் குப்பை பிரச்சினைகளில் செயல்பூர்வமாக தொடர்ந்து, கவனம் செலுத்தியிருந்தால்;
கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளுக்கும் அதிகமாக
வெற்றி பெற்றிருப்பார்கள் என்பது எனது கணிப்பாகும்.
அவ்வாறு நடந்திருந்தால்,
'ஜோக்கர்' திரைப்படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட/ஆளும் முதல்வர்களுடன், நெருக்கமாக
இருந்த/இருக்கும் தலைவர்கள், அந்த படத்தை பார்த்து கண்ணீர் விடும் 'சமூக நகைச்சுவை'யானது,
அரங்கேறியிருக்குமா? திராவிட கட்சிகளின் பாணியில், ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், குழு அரசியல், ஆகிய
நோய்களில், தமிழக பா.ஜ.க சிக்கியிருக்குமா? உண்மையான நாட்டுப்பற்றுள்ள கட்சிக்காரர்கள் யார்?
'ஆதாய' நோக்கிலான கட்சிக்காரர்கள் யார்? உறுப்பினர் எண்ணிக்கை அளவுக்கு சீரங்கம் இடைத்
தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலில், வாக்குகள் கிடைத்ததா? என்று பிரித்தறிய முடியாத
குழப்பத்தில், பா.ஜ.க தலைமை சிக்கியிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
1944இல் தி.க தோன்றியதன் விளைவாக, 1949இல் தி.மு.க உருவாகி , 1967இல் ஆட்சியைப் பிடித்ததானது; மக்கள் பங்கேற்புடன் இருந்த அரசியலானது, ஆதாய அரசியல் வளர்ந்த அதிவேகத்தில் சீர் குலைந்ததா; 'திருச்சி பெரியார் மையம்' மூலம் மேற்குறிப்பிட்ட ஊழல் கூட்டணியில் இடம் பெற்று 'வளர்ந்த', 'பெரியார் சமூக கிருமிகளையும்' உருவாக்கி? ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html) குப்பை, தண்ணீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, டாஸ்மாக் கடை அகற்றல் உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்கு, கட்சிகளை ஓரங்கட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் ஆங்காங்கே தாமாகவே போராடி வருவதானது, அரசியல் நீக்கத்தை (Depoliticize) உணர்த்துகிறதா? பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும், அதில் சிக்கியுள்ளனவா? என்ற ஆய்வை தொடங்கியாக வேண்டும்.
மக்கள் பங்கேற்புடன் உண்மையான ஜனநாயக அரசியல் அரங்கேறும்போது, ஆதாய தொண்டர்கள் பலத்தில் பயணித்து வரும் அனைத்து கட்சிகளும், சுவடின்றி அழிந்து விடும்; 'ஆதாய அரசியலில்', ஆங்கிலவழிக்கல்வி வியாபார சுனாமியில், தொடங்கிய தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணமும் தடுத்து நிறுத்தப்படும்.
1944இல் தி.க தோன்றியதன் விளைவாக, 1949இல் தி.மு.க உருவாகி , 1967இல் ஆட்சியைப் பிடித்ததானது; மக்கள் பங்கேற்புடன் இருந்த அரசியலானது, ஆதாய அரசியல் வளர்ந்த அதிவேகத்தில் சீர் குலைந்ததா; 'திருச்சி பெரியார் மையம்' மூலம் மேற்குறிப்பிட்ட ஊழல் கூட்டணியில் இடம் பெற்று 'வளர்ந்த', 'பெரியார் சமூக கிருமிகளையும்' உருவாக்கி? ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html) குப்பை, தண்ணீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, டாஸ்மாக் கடை அகற்றல் உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்கு, கட்சிகளை ஓரங்கட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் ஆங்காங்கே தாமாகவே போராடி வருவதானது, அரசியல் நீக்கத்தை (Depoliticize) உணர்த்துகிறதா? பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும், அதில் சிக்கியுள்ளனவா? என்ற ஆய்வை தொடங்கியாக வேண்டும்.
மக்கள் பங்கேற்புடன் உண்மையான ஜனநாயக அரசியல் அரங்கேறும்போது, ஆதாய தொண்டர்கள் பலத்தில் பயணித்து வரும் அனைத்து கட்சிகளும், சுவடின்றி அழிந்து விடும்; 'ஆதாய அரசியலில்', ஆங்கிலவழிக்கல்வி வியாபார சுனாமியில், தொடங்கிய தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணமும் தடுத்து நிறுத்தப்படும்.
ஒரு சமூகத்தில் ஜனநாயக
அரசியலில், தமது வாழும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள, மக்கள் பங்கேற்பதானது, முக்கிய பங்கு வகிப்பதை, ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
“இந்திய விடுதலைக்குப்
பின், முதல் முறையாக 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம், மக்களை ஜனநாயக முறைக்கு உட்படுத்தும்
(inclusive process) முயற்சியானது, பிரதமர்
மோடியால் துவங்கப்பட்டுள்ளது. " civic participation is critical for
democracies to function" - Robert D.Putnam
' Making Democracy Work: Civic Traditions in Modern Italy'” என்பதையும் ஏற்கனவே
பார்த்தோம். (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html
)
ஆனால் திராவிடக் கட்சிகளைப்
போலவே, தமிழக பா.ஜ.கவும் ஊடக விளம்பரமாக அந்த 'தூய்மை இந்தியா' திட்டத்தை அணுகியுள்ளார்களா?
என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அது போலவே, தாய்மொழிவழிக்
கல்விக்காக, ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, தமிழக பா.ஜ.க உணர்ந்துள்ளதா?
“10 வயது வரை இந்தியா முழுவதும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்குமாறு,
ஆர்.எஸ்.எஸ் கொடுத்து வரும் அழுத்தமானது; (‘Why RSS, the only option, to rescue
the TN Tamil Medium Education & hence Tamil?’;
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html & 'RSS groups turn the page for mother
tongue lectures in IITs and IIMs';
http://www.newindianexpress.com/nation/Teaching-trouble-RSS-groups-turn-the-page-for-mother-tongue-lectures-in-IITs-and-IIMs/2016/08/14/article3579133.ece
)
புதிய கல்வி கொள்கையில்,
'மாநில அரசுகள் விரும்பினால்' என்று நீர்த்து போகவும் வாய்ப்புள்ளது; தாய்மொழிவழிக்
கல்வி பற்றிய பரிந்துரையை புறக்கணித்து, 'கல்வி வியாபாரத்திற்கு' உதவும், 'புதிய கல்வி
கொள்கை' எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் சூழலில்.;(http://www.thehindu.com/news/cities/bangalore/draft-national-education-policy-rekindles-debate-on-mother-tongue/article8930355.ece),
ஆங்கிலவழிக்கல்வி காரணமாக, தமிழக சட்டசபையில், திராவிட கட்சிகளின் இளம் எம்.எல்.ஏக்கள்
பேசும் விவாதங்களில், ஆங்கிலம் செல்வாக்கு செலுத்தி வரும் சூழலில்.
(http://timesofindia.indiatimes.com/city/chennai/They-are-Tamil-leaders-but-inside-assembly-debate-in-English/articleshow/53692205.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section
)”; http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2016-08-14T02:41:00-07:00&max-results=7
)
தமிழ்வழிக் கல்வியானது
(எனவே தமிழும்) மரணப் படுக்கையில் உள்ள நிலையில், புதியகல்விக் கொள்கையில், தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு இருக்கும் வாய்ப்பையும்,
தமிழ்நாட்டில் புதியகல்விக் கொள்கை எதிர்ப்பில் கெடுத்துவரும் முயற்சியை,
தமிழக பா.ஜ.க வலிமையாக
எதிர்த்ததா? இனியாவது எதிர்க்குமா? (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )
'புதிய கல்வி கொள்கையில்,
சமஸ்கிருதம் படிக்க விரும்பினால், வாய்ப்புகள் உருவாக்க பரிந்துரைத்துள்ளது போல, இந்தியாவில் தமிழையும் அந்த வரிசையில் சேர்க்க, தமிழக பா.ஜ.க குரல் எழுப்புமா? தமிழக பகுத்தறிவாளர்கள், வேதத்தை எதிர்ப்பதற்கும், உதவும் நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை, தமிழக
பா.ஜ.க இதுவரை வெளிப்படுத்தினார்களா? இது போன்ற
முயற்சிகள் இன்றி, தமிழ்நாட்டில் பா.ஜ.க வேர் பிடிக்க முடியுமா?
அது போலவே, வெளிநாட்டு
நிதி உதவியில் என்.ஜி.ஒ என்ற பெயரில் வலம்
வரும் நபர்களின் 'ஊழல்' சுயரூபங்களை, மோடி அரசானது, வெளிப்படுத்தி வரும் முயற்சிகளை, தமிழக பா.ஜ.க அறிவார்களா?
“சமூகத்தில் பிளவையும்,
அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளாக (மத கலவரங்கள், 'என்கவுண்டர்' (Encounter) மரணம் போன்றவற்றிலும் கூட,
பாரபட்ச அணுகுமுறையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களை மட்டுமே குவியப்படுத்தி) தேர்ந்தெடுத்து, சாதாரண மக்களை
'காவு' கொடுத்து, 'போராடி', 'புகழுடன்' வலம்
வரும், மேல் தட்டு வசதி வாய்ப்புகளுடன் வாழும், சமூக நீதி/மனித உரிமை காவலர்கள்;
தனிப்பட்ட முறையில்,
'ஒழுக்கக்கேடான பெரிய மனிதர்களுடன்’, நெருக்கமான நட்பு கொண்டு;
அந்த பெரிய மனிதர்களின்
சட்ட விரோத கொடுமைகளுக்குள்ளானவர்கள், உதவி கோரி நாடினாலும், சந்திக்க கூட மறுத்த கொடுமையையும், நான் அறிவேன்.
அந்த கொடுமைகாரர்களின் 'சுயரூபம்' அம்பலமாகாமல், 'நாம்' என்று சமூக நீதி/மனித உரிமை
ஆதரவாளர்களை ஏமாற்றி வருவதையும், நான் அறிவேன். அது போலவே, அகத்தில் சீரழிந்து, ஊழலில்
ஈடுபடும் துணிச்சலற்ற (?) ‘கோழை யோக்கியர்கள்’ எல்லாம், 'ஊழல் வழி' 'அதிவேக' பணக்காரர்களுக்கு, 'வெண்சாமரம்'
வீசி வரும், இழிவான போக்கையும், நான் அறிவேன்.”
என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/08/depoliticize-10-race-caste.html
)
புதிய கல்வி கொள்கை
எதிர்ப்பில் முன்னணியில் உள்ள, இந்திய 'இடது சாரி' அறிவுஜீவிகளை, KGB என்ற ரஷ்ய உளவு அமைப்பானது, எவ்வாறு தமது சுயநலனுக்கான
எடுபிடிகளாக மாற்றுகிறது? என்பதை விளக்கும்
வீடியோ: https://www.youtube.com/watch?v=5It1zarINv0&feature=youtu.be&t=1896
அமெரிக்காவின் ஃபோர்ட்
பவுண்டேசன்(Ford Foundation) - சி.ஐ.ஏ(CIA) இந்தியாவில் வலதுசாரி அறிவுஜீவிகளை எவ்வாறு
தமது சுயநலனுக்கான எடுபிடிகளாக மாற்றுகிறது? என்பதை விளக்கும் இணைய தளம்: http://canarytrap.in/2014/03/11/kejriwal-indias-biggest-scam/ & https://www.facebook.com/notes/surajit-dasgupta/the-cia-ford-ngo-congress-nac-aap-nexus/10152395314509630/
பிரதமர்
மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்திய விடுதலைக்கு முன், நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான
கோப்புகளும், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின், உளவு அமைப்புகளின்
'வேட்டைக்காடாக' இந்தியா இருந்துள்ளது தொடர்பான தகவல்களும், ஆங்கில ஊடகங்களிலும், புத்தகங்களிலும்
வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்திரா
காந்தி பிரதமராயிருந்த காலத்தில், மொரிசியஸ் நாட்டின் தேர்தலில், தமக்கு வேண்டியவர்
வெற்றி பெற்று, அதிபராக, இந்திய உளவு அமைப்பு 'ரா' மேற்கொண்ட வெற்றிகர திட்டமும், புத்தகமாக
வெளிவந்துள்ளது. ரஷ்யா,
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகளின் ஆதரவில், அப்படி செயல்படுபவர்களில்
யார்? யார்? 'அந்த வழிகளில்' மேல்தட்டு வசதியில் வாழ்ந்து கொண்டு, தம்மை 'வழிபடும்' எடுபிடி சமூக வட்டத்தின் பங்களிப்பில், சாதாரண மக்களிடமிருந்து
அந்நியமாகி, 'அரசியல் நீக்கத்திற்கும்' (depoliticize) பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
எனவே தமிழ்நாட்டில் உளவு அமைப்புகளின் வலைப்பின்னலில் சிக்கி செயல்படுபவர்களின் - 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு- சுயநல 'சுயரூபமும்' வருங்காலத்தில் அம்பலமானால், வியப்பில்லை.
அரசியல் நீக்கத்தில், ‘2016
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம், அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா?’
என்ற
'சிக்னல்' வெளிப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.; http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html
ஆளுங்கட்சி,
எதிர்கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணியில் இருந்த இ.ஜ.க உள்ளிட்ட கட்சிகளில் உள்ளவர்கள்
சந்தித்து வரும் 'ஊழல்' தொடர்பான வழக்குகளும்;
ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணைபுரியும்
வாய்ப்புள்ள, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இருந்து வரும் 'இருளுக்கு' எதிரான
குரலை உச்சநீதிமன்ற நீதிபதியே எழுப்பியுள்ளதும் ( http://www.newindianexpress.com/nation/TNIE-Exclusive-Justice-Chelameswar-skips-SC-Collegium-meet-for-want-of-transparency-in-judges-appointments/2016/09/02/article3608194.ece
);
தமிழ்நாட்டில்
ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சந்தித்து - வரும் உட்கட்சி பிரச்சினைகளும்;
தமிழ்நாட்டில்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் முறையாக, போர்க்கொடி உயர்த்தியுள்ள செய்தியும் (http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-ias-officers-associations-confidential-general-body-meeti-261786.html);
மேற்குறிப்பிட்டவை தொடர்பாக, அடுத்தடுத்து வெளிப்பட்டு
வரும் செய்திகளும்;
'ஆதாய
அரசியல்' போக்கில் பயணித்து அரசியலானது, சீர்குலைவை
சந்தித்து வருவதையே, உணர்த்துகின்றனவா? என்பதும்
ஆய்விற்குரியத்கும்.
தமிழ்நாடானது
'ஆதாய அரசியலிலிருந்து' விடுதலை ஆகி, ஆக்கபூர்வ திசையில் பயணிக்க இருப்பதையே, மேற்குறிப்பிட்டவை
உணர்த்துகின்றன.
தமிழக
பா.ஜ.கவானாலும் சரி, வேறு எந்த கட்சியானாலும் சரி,
அந்த சிக்னலை
உணர்ந்து, 'சுயநல' போக்கிலிருந்து விடுபட்டு, தமதளவில்
அகத்தில் தூய்மையாக்கும் பணியை தொடங்கி;
புறத்தில், தாம் வாழும்
பகுதியில் 'தூய்மை' இந்தியா திட்டத்தை ஆதரித்து;
பேச்சையும்,
எழுத்தையும் குறைத்து, செயல்மூலம் பேசத் தொடங்கினால் மட்டுமே;
தமிழ்நாட்டு
அரசியலில் வேர் பிடித்து;
ஊழலை ஒழிக்கும் நம்பிக்கையை மக்கள் மனதில் 'செயல்பூர்வமாக'
விதைத்து;
அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியையும் பிடிக்க முடியும்; சாதி,
மத அடிப்படைகளிலான பாரபட்சத்தை நீக்குவதிலும், தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவிப்பதிலும்,
ஆர்.எஸ்.எஸ் ‘செயல்பூர்வமாக’ கவனம் வெலுத்தி வரும் சூழலில், (அப்படியா?
என்ற ஆச்சரிய போக்கு நீடிப்பதற்கு, தமிழக பா.ஜ.கவின் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளே
காரணமாகும்)
No comments:
Post a Comment