தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)
'காலனிய மனநோயில் ', அடையாளச் சிக்கல்;
'நாம்', 'அவர்கள்' ?
காலனியத்திற்கு முன்,
தமிழில் 'இனம்', 'சாதி' போன்ற சொற்களுக்கு இருந்த பொருளை;
மேற்கத்திய இறக்குமதிகளான,
'ரேஸ்' (Race) மற்றும் 'காஸ்ட்' (Caste) என்ற சொற்களின் பொருளில் திரித்து;
'மொழி' அடிப்படையில்
இருந்த, 'திராவிடர்' என்ற சொல்லையும், அந்த சூழ்ச்சிகர திரிதல் பொருளில், இன அடிப்படையில்
'திராவிடர்' என்ற சொல்லாக, 'புதிதாக' உருவாக்கி;
அந்த திரிதலின் அடிப்படையில்,
1944இல் 'திராவிடர் கழகம்' தோன்றி;
காலனிய ஆட்சியில் அறிமுகமான
சாதிப் பட்டியலின் அடிப்படையில்;
'பிராமணர்களை' எதிரிகளான
'அவர்கள்' என்ற சொல் குறித்த அடையாளத்திலும்;
'பிராமணரல்லாதோரை ' 'நாம்' என்ற சொல் குறித்த அடையாளத்திலும்
சிக்க வைத்து,
அந்த 'சிக்கல்' திசையில், 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்' ஒருவரையொருவர் வளர்த்து:
தமிழ்நாடு பயணித்தற்கும்;
இன்று தமிழ், தமிழர்,
தமிழ்நாடு சந்தித்து வரும் சீர் கேடுகளுக்கும் தொடர்பு உண்டா? என்ற ஆய்வு என்பது;
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு அவசியமாகி விட்டது.
'நாம்', 'அவர்கள்'
என்ற சொற்கள், மேற்கத்திய சூழ்ச்சியில், எவ்வாறு உருவாகி செயல்பட்டன? என்பது தொடர்பான
ஆய்வு கட்டுரையை அண்மையில் படித்தேன்.
WE AND THEY – THE
OUR AND THE OTHER. THE BALKANS OF THE 20TH CENTURY FROM A COLONIAL
AND POST-COLONIAL PERSPECTIVE
By MAGDALENA KOCH
(Adam Mickiewicz University in Poznań, Poland)
தென்கிழக்கு ஐரோப்பா
பகுதியில் வாழும் மக்கள் 'பால்கன்கள்' (Balkans; https://en.wikipedia.org/wiki/Balkans
) என்று குறிக்கப்பட்டனர். அந்த மக்களிடையே, மேற்கத்திய சூழ்ச்சியில் 'நாம்'(We), 'அவர்கள்'(They) போன்ற சொற்கள் எவ்வாறு அறிமுகமாகி, என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகி, இன்று எவ்வாறு சரியான திசையில் பயணிக்க முடியும்? என்பது
மேற்குறிப்பிட்ட ஆய்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
அந்த மேற்கத்திய சூழ்ச்சிவலையிலிருந்து
விடுபடும் முயற்சிகளுக்கு;
இந்த ஆய்வு கட்டுரை பயன்படும் என்பதை சுட்டிக்காட்ட, அதன் சில பகுதிகள்
கீழே குறிப்பில் உள்ளன.
காலனி ஆட்சியில் அடிமைப்பட்ட
நாடுகளில், இரு வேறு நாடுகளின் வரையறைகளும், வரை எல்லைகளும் ஒரு வகையான மோதலில் சிக்க
வாய்ப்புண்டு. இந்தியாவில் அந்த பாதிப்புகளே காலனிய மன நோயாளிகளையும், திராவிட மன நோயாளிகளையும் உருவாக்கியது
பற்றி ஏற்கனவே பார்த்தோம். (’ 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’;
காலனிய சூழ்ச்சியில்
சிக்கி, தமிழ்நாட்டில் 'நாம்', 'அவர்கள்' என்ற
பிரிவினையானது;
தனி மனித அளவில் குடும்பம்,
'உள்சாதி/மதம்', வட்டாரம், என்று வெவ்வேறு சிறு(Micro level) மட்டங்களில்;
'நமப முடியாத அளவுக்கு' குறுகி செயல்பட்டு;
ஆனால் தத்தம் சுயநலனுக்கு
உதவும் வகையில், இயக்க (Dynamic) போக்கில் விரிந்து;
கடைசியில்
திராவிடர்/ ஆரியர்; இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு; முற்போக்கு/பிற்போக்கு என்ற பெரிய அளவிலான
(Macro level) பிரிவினையில் ;
‘நாம்', 'அவர்கள்'
என்ற சொற்கள், மேற்சொன்ன வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறாக, எவ்வாறு ஒரே நபரால் பயன்படுத்தப்படுகின்றன?
என்பதும் ஆய்விற்குரியதாகும். பெரிய அளவில்
(Macro level) 'சமூக நீதிக்கு/மனித உரிமைக்கு' ஆதரவான 'நாம்'
என்று காட்சி தருபவர்களில் யார்? யார்?, 'சிறிய' அளவு மட்டங்களில் (Micro level) சமூகத்திற்கு கேடாக, 'அவர்களாக' வாழ்கிறார்கள்? அவ்வாறு
வாழ்வது தெரியவில்லையென்றால், 'அந்த பெரிய அளவு (Macro level) காட்சியில்' ‘நாம்’ ஏமாறுவதை
தடுக்க முடியுமா? சமூகத்தில் பிளவையும்,
அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளாக (மத கலவரங்கள், 'என்கவுண்டர்'(Encounter) மரணம் போன்றவற்றிலும் கூட, பாரபட்ச அணுகுமுறையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களை மட்டுமே குவியப்படுத்தி) தேர்ந்தெடுத்து, சாதாரண மக்களை
'காவு' கொடுத்து, 'போராடி', 'புகழுடன்' வலம்
வரும், மேல் தட்டு வசதி வாய்ப்புகளுடன் வாழும், சமூக நீதி/மனித உரிமை காவலர்கள்;
தனிப்பட்ட முறையில், 'ஒழுக்கக்கேடான பெரிய மனிதர்களுடன்’, நெருக்கமான நட்பு கொண்டு;
அந்த பெரிய மனிதர்களின்
சட்ட விரோத கொடுமைகளுக்குள்ளானவர்கள், உதவி கோரி நாடினாலும், சந்திக்க கூட மறுத்த கொடுமையையும், நான் அறிவேன்.
அந்த கொடுமைகாரர்களின் 'சுயரூபம்' அம்பலமாகாமல், 'நாம்' என்று சமூக நீதி/மனித உரிமை
ஆதரவாளர்களை ஏமாற்றி வருவதையும், நான் அறிவேன். அது போலவே, அகத்தில்
சீரழிந்து, ஊழலில் ஈடுபடும் துணிச்சலற்ற
(?) ‘கோழை யோக்கியர்கள்’ எல்லாம், 'ஊழல் வழி' 'அதிவேக' பணக்காரர்களுக்கு, 'வெண்சாமரம்'
வீசி வரும், இழிவான போக்கையும், நான் அறிவேன்.
இந்தியாவில் தேச கட்டுமானமானது, (Nation Building) சீர்குலைவிற்கு உள்ளாகியிருப்பது பற்றிய புரிதலின்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க பயணிக்கிறதா? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘Is BJP aware of the derailing of the Indian nation building process?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )
நாம் ஒவ்வொருவரும்,
நமது நிலைப்பாடுகள் மீது உடைமையுணர்வு
(possessive) பற்றின்றி (திருக்குறள் 350);
திறந்த மனதுடன், நேர்மையான
சுயவிமர்சனத்தை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலமே,
மேற்குறிப்பிட்ட மேற்கத்திய சூழ்ச்சி வலையிலிருந்து
நம்மை விடுவித்து, பயணிக்க முடியும்.
தமிழர்களின் சமூக வீழ்ச்சி
பற்றிய, உண்மையான கவலையுள்ளவர்கள் எல்லாம், தாம் வாழும் வாழ்க்கையானது, மேற்குறிப்பிட்ட
வழிகளில் வீழ்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்க்கையாக உள்ளதா? இல்லையா? ஆங்கிலவழிக்கல்வி
மூலம், குழந்தைகளின் புலனறிவு வளர்ச்சியும் குறைந்து,
(http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
) தமிழில் எழுத, படிக்க, பேசவும் தெரியாத, ‘தமிழ்வேரழிந்த’
'உலக அகதிகளாக', நமது வருங்கால பரம்பரையானது, அசிங்கப்படுவதற்கு தான், நாம் வாழ்கிறோமா?
என்பது போன்ற கேள்விகளுக்கு, நமது மனசாட்சிக்குட்பட்டு, நாம் தான் விடை காண முடியும்.
அந்த விடைகளின் அடிப்படையில், நமது வாழ்வை, அந்த பங்களிப்பிலிருந்து, விடுவிக்கும்
மாற்றங்களையும், நாம் தான் செய்ய முடியும்; அரசியல் நீக்கத்தில்
(Depoliticize), 'ஆதாய தொண்டர்கள்' பலத்தில், 'கட்சி அரசியல்' ஆனது, சிக்கியுள்ள சூழலில்.
அதற்கு, நமது அறிவு,
அனுபவம் ஆகிய அடிப்படைகளில், நமது தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களுடன்,
இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில், அடையாளச் சிதைவுக்கு எதிரான, நமது அடையாள மீட்பு தொடர்பை வலுவாக்கி, அந்த வகையிலான ஒழுக்கநெறிகளை,
நமது மனசாட்சிக்குட்பட்டு, நாம் பின்பற்றி வாழ வேண்டும்.
அத்தகையோர் நமது சமூக
வட்டத்தில் 'நாம்' என்ற சொல்லினராக அதிகரிப்பது என்பதும்;
'சுயலாப கள்வர்' நோயில் சிக்கிய, 'தீ இன' மனிதர்கள்
எல்லாம், நமது சமூக வட்டத்தை விட்டு, 'அவர்கள்' என்ற சொல்லினராக வெளியேறுவது என்பதும்;
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்கி, வாழ்வதன் அறிகுறிகளாகும்.
காலனி சூழ்ச்சியில், 1944இல் முளைவிட்ட அடையாளச் சிதைவின் காரணமாக உருவான, திராவிட மனநோயாளித்தன போக்கில், தேசிய கட்சிகளை 'வால்களாக்கி', ஊழல் வழிகளில் தமிழ்நாட்டை சீரழித்து;
'பணம், செல்வாக்கு, சம்பாதிக்க', குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை, மனசாட்சியின்றி;
'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்'(?) காவு கொடுக்கும் 'சிற்றினம்' ஆனதை,
'அவர்கள்' என்ற சொல்லினராக அடையாளம் கண்டு ஒதுக்கும், 'சமூக செயல்நுட்பம்' ஆனது, அரங்கேறும் நேரம் வந்து விட்டது.
( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (9)
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்கி, வாழ்வதன் அறிகுறிகளாகும்.
காலனி சூழ்ச்சியில், 1944இல் முளைவிட்ட அடையாளச் சிதைவின் காரணமாக உருவான, திராவிட மனநோயாளித்தன போக்கில், தேசிய கட்சிகளை 'வால்களாக்கி', ஊழல் வழிகளில் தமிழ்நாட்டை சீரழித்து;
'பணம், செல்வாக்கு, சம்பாதிக்க', குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை, மனசாட்சியின்றி;
'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்'(?) காவு கொடுக்கும் 'சிற்றினம்' ஆனதை,
'அவர்கள்' என்ற சொல்லினராக அடையாளம் கண்டு ஒதுக்கும், 'சமூக செயல்நுட்பம்' ஆனது, அரங்கேறும் நேரம் வந்து விட்டது.
( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (9)
அறிவும்
ஆர்வமும் உள்ளவர்களின் பார்வைக்கு- 'தமிழ்
, தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு வாய்ப்புகள்’
குறிப்பு :
In other words,
the Balkans became a metaphor of conflicted multiculturality, a region of
continuous (resuming) hatred, a boiling point and a region of destabilization
that generates unceasing conflicts. This Balkan imaginarium imposed on lay
thinking is basically a colonization of thought and notion because it came into
being mainly in the West and then was adopted by the Balkan countries
themselves. The perception of the Balkans is mainly comprised of pejorative or
even contemptuous labels………………………
The vision of the
world based on imaginations of culture, civilization and development on the
basis of the dichotomous rule: centre (We)
peripheries (They) played a significant role in the conception of the
intellectual and political elites of Western Europe in the 19th and 20th
centuries. Western Europe was a synonym of development, civilization, culture, urbanization,
pragmatism, rational thinking which means a synonym for a coloniser that brings
“the correct” values, whereas the Balkans –
the symbol of non-modernity, stagnation, backwardness, superstitions,
tendency to despotism, and remoteness from development – were
forced to implement “the real” values from outside……………………
We should
actually be glad for the process of eradicating negative ideas of the
colonisers on the “troublesome
peripheries of Europe” that is taking place at present. We should gladly
welcome the process of deconstructing the term Balkans as a stigmatizing
geopolitical and cultural label.
No comments:
Post a Comment