Sunday, August 14, 2016

சங்க இலக்கியங்கள்-சமூகவியல் வெளிச்சத்தில்;


சிம்புவின்  'பீப் பாடல்



விருப்பு  வெறுப்புகளை  ஒதுக்கி வைத்து, பொது  அரங்கில் வெளிப்படும் 'சிக்னல்களை'  (Signals)  ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது,  சம்பந்தப்பட்ட சமூகத்தின் மீட்சியில், அக்கறையுள்ளவர்களின் சமூக கடமையாகும்.

அந்த வகையில், இந்திய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த,சிம்புவின் 'பீப்' பாடல் தொடர்பாக: ( http://www.thehindu.com/features/metroplus/we-who-take-offence-whats-the-big-deal-with-simbus-beep-song/article8004860.ece )

எதிர்த்தவர்கள்/அமைப்புகள் யார்? யார்?  அந்த 'எதிர்ப்புகளை' எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்? வழக்குகள் தொடுத்தவர்கள் யார்? யார்? பின் அந்த 'எதிர்ப்புகளும்/வழக்குகளும்' எவ்வாறு சமாளிக்கப்பட்டன?

தமிழ்நாட்டில் இது போன்ற என்னென்ன பிரச்சினைகள்,  'இதே வழியில்' 'ஆடிஎவ்வாறு, அடங்கின?

பொது அரங்கில், பிரச்சினைகளை கிளப்பி, இது போல ஆட்டங்கள்’   ஆடி, அடங்கிய போக்குகளில், பலன்கள்  பெற்றவர்கள்  யார்?  யார்? பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்பொதுப் பிரச்சினைகளை வைத்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், பொதுமக்களுக்கு ஊறு விளைவித்தும், 'ஆட்டங்கள்' ஆடி, சொத்து சேர்த்து வரும் 'பொதுவாழ்வு விபச்சாரிகள்' யார்? அவர்கள்  'பெரிய மனிதர்களாக'  உலா வர துணை புரிந்து, 'பலன்' பெற்று வரும் (அதே நேரத்தில், 'அந்த பெரிய மனிதர்களின்' 'இழிவு வெளிப்பாடுகளை, தமக்கு நெருக்கமான' முற்போக்கு வட்டத்தில் 'விலாவாரியாக', கேலியாக,  'புரட்சிகர'வாதிகளாகவும்’, விவாதித்து வரும்) 'அறிவு விபச்சாரிகள்’ யார்? இது போன்ற 'விபச்சார தொழில்கள்' எப்போது முளை விட்டு, எப்படி  வளர்ந்து,  இன்று என்ன நிலையில் உள்ளன? தமிழ்நாட்டிலிருந்து சீனாவிற்கு, 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்ட‌ 'பொதுவாழ்வு வியாபாரிகள்' அடிக்கடி, எதற்காக, பயணிக்கிறார்கள்? ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில், 'முள்ளி வாய்க்கால்'  ராஜபட்சேயை ஆதரித்த சீனாவை எந்த தமிழ்/திராவிட‌ கட்சியாவது கண்டித்தார்களா?  சீன பட்டாசு மூலம் சிவகாசி உள்ளிட்டு (http://www.dinamalar.com/news_detail.asp?id=1592726), தமிழ்நாட்டு உற்பத்தி துறையை (Manufacturing industry)  சீர் குலைத்து வருவது மட்டும் இன்றி, ஆதனக் கோட்டையிலேயே சீன முந்திரிக் கொட்டை வியாபாரம் அரங்கேறும் அளவுக்கு, விவசாயத்தையும் சீர் குலைத்துவரும், 'சீன இறக்குமதியை' தொடர்ந்து எதிர்த்து வரும், இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் அந்நிய உளவு சக்திகளின் 'ஆதரவில்'(?), ‘வெளிச்சம்’ போட்ட/போடும் 'அறிவுஜீவிகளை’ அம்பலப்படுத்தி வரும்‍ (https://www.youtube.com/watch?v=5It1zarINv0&feature=youtu.be&t=1896), 'பிரபல' எழுத்தாளர்கள் எவரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? இல்லையென்றால், அது 'அறிவு விபச்சாரத்தின்' உச்சக்கட்டமாகாதா? ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதரித்துள்ள 'ஆம் ஆத்மி கட்சி'யானது,  தமிழ்நாட்டில் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களை சீர் குலைத்து வரும் 'ஊழல் வழி'  சீன இறக்குமதியை, இதுவரை ('ஜோக்கர்' திரைப்படம் பார்த்து 'கண்ணீர் விட்ட' தலைவர்களும்) கண்டித்தார்களா? இனியாவது கண்டிப்பார்களாஇது போன்ற பிரச்சினைகள் எல்லாம், 'ஜோக்கர்' போன்ற திரைப்படங்களில் இனியாவது இடம் பெறுமா? வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு, அக சீரழிவின் மூலமாக  'மனித நாய்களின்' எண்ணிக்கை அதிகரித்து, திருட்டு, கனிவளங்கள் கொள்ளை, கொலை, தற்கொலை, 'அதி வேகமாக' பரவி, தமிழ்வழிக் கல்வியின் மரணப் பயணத்தையும் கணக்கில் கொண்டால், தொலைநோக்கில், முள்ளி வாய்க்கால் அழிவை விட, மோசமான அழிவில் தமிழ்நாடு சிக்கியுள்ளதா? 

என்பது போன்ற சமூகவியல் ஆய்வுகளுக்கான கேள்விகளைசிம்புவின் 'பீப்' பாடல் எழுப்பியுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் 'உள்ளடக்கம்'  (content) என்ற நோக்கில், சிம்புவின் 'பீப்' பாடலோடு, போட்டி போடும் திரைப்பட பாடல்களை  மேலே குறிப்பிட்டுள்ள  ஊடக தொடர்பில் படிக்கலாம்.

அந்த பாடல்களுக்கு வெளிப்படாத எதிர்ப்பானது, சிம்புவின்  'பீப்' பாடலுக்கு வெளிப்பட்டது ஏன்?

அந்த பாடல்களை போல இல்லாமல், வெளிப்படையாகசிம்புவின் பாடலில், 'பெண் குறி' தொடர்பான சொல் இடம் பெற்றது தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த சொல்லானது, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' கீழ்வருமாறு இடம் பெற்றுள்ளது.
'புண்டை puntai Pudendum muliebre; பெண் குறி, obscene.’

ஒரு சொல், பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றிருந்தால்அச்சொல், எந்தெந்த இலக்கியங்களில், எங்கெங்கு இடம் பெற்றுள்ளது என்பது பற்றிய குறிப்புகளும், லெக்சிகனில் இடம் பெறும்.

மேற்குறிப்பிட்ட சொல்லானது, பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை என்பதும், லெக்சிகனில் வெளிப்பட்டுள்ளது.

பெண்ணின் பாலியல் உறுப்புகள் தொடர்பான 'அல்குல்', 'முலை' ஆகிய சொற்கள் எல்லாம், சங்க‌ இலக்கியங்களில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன;  மனிதர்களின் கை, கால், முகம் போன்ற பிற உறுப்புகளைப் போலவே.

எனவே பெண்ணின் பாலியல் உறுப்புகள் தொடர்பான சொற்களை, 'அசிங்க' நோக்கில், பயன்படுத்தும் போக்கானது, தமிழர்களிடையே எப்போது அரங்கேறியதுஅந்த போக்கில், 'புண்டை' என்ற சொல் எப்போது 'புதிதாக' உருவானது? பிற மொழி அரசர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்திலா? அல்லது காலனி ஆட்சி காலத்திலா?  அந்த 'அடிமை நோயில்' சிக்கிய, இயல்பில் கோழைகளான தமிழர்களின், 'போலியான வீரத்தை' வெளிப்படுத்தும் போக்கில், அந்த 'புதிதாக உருவான கெட்ட சொல்' , உரம் பெற்று வளர்ந்ததா?  காலனி நோயில் அரங்கேறிய, ‘’புதிய தரவரிசை சாதி அமைப்பில்’ (new hierarchical caste structure)  'உருவான',  'நாகரீக' மனிதர்கள், அந்த 'சொல்லை' கண்டு, அஞ்சி, ஒதுங்கிய போக்கானது, அந்த 'போலி வீரத்திற்கு' வலு சேர்த்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

அந்த 'அசிங்க' போக்கினால், இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளிலும்,  'அசிங்க பார்வை' என்ற குறிப்பாய மாற்றமும் (Paradigm Shift) நிகழ்ந்ததாஎன்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html) காலனிய சூழ்ச்சியில், இந்தியாவிற்குள் -தமிழ்நாட்டினுள்- அறிமுகமான‌ செவ்வியல்-classical/நாட்டுப்புறம்-folk வரிசையில், மேற்குறிப்பிட்ட பெண்ணின் பாலியல் உறுப்புகள் பற்றிய  'அசிங்க' பார்வையும், மேற்கத்திய இறக்குமதியாக இருக்கலாம். 
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

அதன் விளைவாகவே, மேற்கத்திய ஆய்வாளர்களும்அவர்கள் வழியில் 'பகுத்தறிவாளர்களும்', பண்டை இலக்கியங்களிலும், புராணங்களிலும் குறைகள் காணும் போக்கும், அரங்கேறியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த குறிப்பாய மாற்றத்தின் விளைவாக, பொது அரங்கில், புராணங்கள் தொடர்பான புலமையற்றவர்களின் 'ஆபாச பட்டி மன்றங்கள்', 'வழக்காடு மன்றங்கள்' (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html) பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், 'ஆபாச' கருத்துக்களும், 'போலி வீர' சவால்களும், வளர்ந்த சமூக சூழலே, 'பீப்' பாடல் உருவாகி, தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையாக வெளிப்பட்டதற்கு காரணமா?

இசை தொடர்பான‌ 'பறை', 'பறையர்', மற்றும் 'சாதி' போன்ற சொற்கள்  எல்லாம், 'தீண்டாமை' நோயுடன், எப்போது தமிழில் அரங்கேறின‌அந்த போக்கில் தான், தமிழர்களிடையே அகச் சீரழிவும் அரங்கேறியதா? என்பதும் ஆய்விற்குரியவையாகும்
(http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html குறிப்பு கீழே)

தமிழர்களின் அகச் சீரழிவோடு,  பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாத‌, 'புண்டை' என்ற சொல் அரங்கேறியதா? என்பது தொடர்பான ஆய்வில்,  எனது  கீழ்வரும் அனுபவமும் முக்கிய இடம் பெறும்.

1980களில் தஞ்சை மன்னர் சரபோசி அரசு கல்லூரியில், கல்லூரி ஆசிரியர்களின், உரிமைகளுக்கான,  போராட்டங்களில்,  நான் முன்னிலை வகித்த காலத்தில்;

பேரா..மார்கஸ் தனது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாணவர்கள்  'அராஜகம்'  (1965 இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின்நன்கொடையா’?; 
http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) மிகுந்திருந்த, அந்த சமயத்தில்;

தமது 'எடுபிடி மாணவர்கள் '  பின் தொடர,   ஒரு மாணவ தலைவர், வகுப்பு வாசலில் நின்று, ஒரு மாணவனை வெளியில் அனுப்புமாறு கேட்டிருக்கிறான். அதற்கு .மார்க்ஸ், வகுப்பு தேர்வு  நடப்பதால், வகுப்பு முடிந்த பின் அனுப்புவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே;

அந்த மாணவ  'தலைவனின்' முதுகுக்குப் பின்னால் றைந்திருந்த, 'எடுபிடி மாணவன் 'ஒருவன்;

 " டேய் முட்டாப் புண்டை, அனுப்புடா' என்று கத்தினான்.

ஆத்திரமடைந்த .மார்க்ஸ், வகுப்பு முடிந்து, ஆசிரியர்கள் அறைக்கு வந்து, அதை தெரிவித்தார். உடனே சக சிரியர்களுடன் கலந்து பேசி, அந்த மாணவன் யார்? என்று அடையாளம் கண்டு, அவன் மீது  நடவடிக்கை எடுக்கும் வரை, வகுப்புகளில் பாடம் நடத்தப் போவதில்லை என்று முடிவு செய்து, அதை துறை தலைவரிடம்,  நான் தெரிவித்தேன்.

அதன்பின் அந்த மாணவ தலைவன் ஆசிரியர் அறைக்கு முன் வந்து  நின்று,
' மறுபக்கம் என்ன நடந்தது? என்று விசாரிக்காமல், வகுப்புகள் எடுக்க மறுப்பது சரியா? என்று என்னிடம் கேட்டான்.

நான் உடனே, அந்த 'கெட்ட' சொல்லை, வழக்கில் உள்ள அடை சொற்களோடு உரக்க சொல்லி‘ஆசிரியர்களை இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது’  என்று தெரிவித்தேன்.

உடனே .மார்க்ஸ், எங்களை விட வயதில் மூத்த  'பிராமண' பேரா.கே.என்.ராமச்சந்திரன்,  மற்ற சக பிராமண/பிராமணரல்லாத ஆசிரியர்கள் னைவரும், என்னை  பின்பற்றி, அந்த 'கெட்ட' சொற்களை' உரக்கச் சொல்லி, ‘ஆசிரியர்களை இழிவு படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்கள். 'எதிர்பாராத அதிர்ச்சி'க்குள்ளாகிய‌, அந்த மாணவர் தலைவன் வருத்தம் தெரிவிக்க, அப்பிரச்சினை முடிந்தது.

அந்த எடுபிடி மாணவர்களாக‌  இருந்த சிலருடன், 'பெரியார் கொள்கை 'போதை’யில் நான் சேர்ந்து (தமிழில் படிக்கும் ஆர்வமற்ற, ஆங்கில அறிவில்லாதவர்களுக்கு, சர்வதேச அரசியல்/ஊழல் பற்றி விளக்கி) செயல்பட்டதானது, ஒரு 'சமூக குற்றம்' என்பதை இப்போது உணர்ந்துள்ளேன்; அதன் மூலம், 1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா ஆற்றிய 'அபாய அறிவிப்பு' உரையின் சமூக முக்கியத்துவத்தையும்,  புரிந்து கொண்டேன். 'பெரியார்' முகமூடியில் 'சமூக கிருமிகளாக' வெளிப்பட்டவர்களை, நான் அடையாளம் காண உதவி, எனது 'சமூக குற்றமும்', ஒரு சமூகவியல் ஆய்வு பரிசோதனையானது (Sociological research experiment) என்பது, சமூகத்திற்கு கிடைத்த பலனாகும்; மேற்குறிப்பிட்ட 'அபாய அறிவிப்பிலிருந்து', ஈ.வெ.ரா எவ்வாறு சறுக்கி, சாவதற்கு முன்  'முனிவராக பொது வாழ்விலிருந்து ஒதுங்க' பரீசீலிக்கும் அளவுக்கு, தமிழ்நாடு சீரழிய காரணமான 'சமூக செயல்நுட்பத்தை' கண்டு பிடித்து.

பின்னர் 'பெரியார் சமூக கிருமியாக' வெளிப்பட்ட, அவர்களில் ஒருவர்எரிச்சலில், கோபத்தில், அதே சொற்களை அடிக்கடி  பயன்படுத்தியதால், அவர் தான், .மார்க்சை, இழிவு படுத்தியிருப்பாரோ என்ற ஐயம் எனக்கு இருந்தது/இருக்கிறது. இயல்பில் பலகீனம் காரணமாக, ஊழலில் ஈடுபடும் துணிச்சலற்ற 'கோழை' யோக்கியர்களையும், தமது அடிவருடிகளாக மாற்றும் அளவுக்கு, அந்த 'சமூக கிருமிகளின்' 'குறுக்கு வழி' செல்வமானது, மேலே குறிப்பிட்ட 'விபச்சார தொழில்களை' ஊக்குவிக்கும், நச்சு சமூக சூழலை உருவாக்கியுள்ளது. 'பெரியார்' முகமூடியில் அந்த 'நச்சு சமூக சூழல்' தொடர்வது என்பதானது, ஈ.வெ.ராவிற்கு செய்யும் துரோகம் ஆகாதா? தவறான திசை திருப்பலுக்குள்ளான சமூகத்தில், 'சமூக நீதியாக' பயணித்தவையும், 'சமூக அநீதியாக' பயணிக்க நேரிடும்; என்பதற்கு நிகழ்கால தமிழ்நாடானது, வரலாற்று சான்றாகி வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

அந்த 'நச்சு சமூக சூழல்' வளர்ந்த போக்கில், தமிழ்நாட்டில் இது போன்ற 'கெட்ட' சொற்களை, கல்லூரிகளில் மாணவர்களும், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களும் பயன்படுத்துவது என்ற போக்கானதுநானறிந்த வரையில், 1970களிலிருந்து, தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கலாம்;

அதே காலக் கட்டத்தில், ஆங்கிலவழிக் கல்வியானது, புற்றீசல் போல் வளர்ந்த போக்கில், தமிழரின் அடையாளச் சிதைவும், தமிழ் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும், தமிழ் தவிர பிற மொழி அறியாத 'தமிழ்/முற்போக்கு  புலமை'யும், வளர்ந்துள்ளதும், ஆய்விற்குரியவையாகும்.

மனித உறுப்புகளில் 'அசிங்கம்' என்ற அணுகுமுறை  இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களை, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி அணுகி;

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு அடிமையாகி, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழர்க்கு கேடேன்று தவறாக கருதி, 'திராவிட' இயக்கங்கள்  பயணித்தன் விளைவுகளா, சிம்புவின் 'பீப்' பாடலும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும்? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த மேற்கத்திய குறிப்பாயத்திலிருந்தும், அதன் மூலம் உருவான 'நாகரீக' போக்கில் சிக்கி, ஒதுங்கி, பொதுவாழ்வை சிற்றினத்தின் 'ஏக போகமாக்கும்' நோயிலிருந்தும், 'விடுதலை'  ஆகாமல், தமிழின், தமிழரின் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க‌ முடியுமாமேலே குறிப்பிட்ட 'நாகரீக' மனிதர்களும், 'அடிமை தாழ்வு  மனப்பான்மை நோயில்' சிக்கிய 'கெட்ட சொல் வீரர்களும்', ஒருவரையொருவர் வளர்த்து வரும், ஒரே நோயின் – நாணயத்தின் -  இரு பக்கங்களாகும். 

திராவிட கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், தமிழ் சினிமாவானது, அந்த இரண்டு எதிர் பக்கங்களாகும் தளவிளைவுக்குள்ளாகி (Polariztion) ((“Tamil cinema is divided into two genres – one coming from Alwarpet and the other, Kodambakkam. “They are poles apart.” ; http://www.thehindu.com/features/friday-review/music/man-of-many-parts/article5684682.ece );

உச்சத்தை சந்தித்து, மரண வாயிலில் உள்ளதா? இரண்டு பக்கங்களிலும் இருந்த 'பதர்கள்' உதிர்ந்து, மணிகள் உரம் பெற்று, ஒன்று சேரும் போக்கு தொடங்கியுள்ளதா? 'சூது கவ்வும்', 'சதுரங்க வேட்டை', 'ஜிகிர்தண்டா',  'காக்கா முட்டை', 'கோலிசோடா', குற்றம் கடிதல், 'ஜோக்கர்' - இது போன்ற முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, தயாரிப்பாளரின் வங்கிக் கணக்கில் (Account Name: Dream Warrior Pictures; A/C No: 4211747273 IFSC Code: KKBK0000462) ரூ 1000 போட்டுள்ளேன். - என்று வெளிவரும் திரைப்படங்கள் எல்லாம், அந்த 'மீட்சி' போக்கின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழின், தமிழரின் வீழ்ச்சிக்கு, அகத்தில் சீரழிந்த மனிதர்களால் பங்களித்த கலை உலகமானது, அகத்தில் நேர்மையான சமூக பற்றுள்ள இளைஞர்கள் மூலமாக, மீட்சிக்கு பங்களிக்கும் படலம் தொடங்கி விட்டதா? என்பதே இனி வரும் வரலாறாகும்.

குறிப்பு :

'பெரியார்' ஆதரவாளர்களில் ஒருவர், எனது பதிவுகளை ஈமெயில் மூலம் பெறுவதை, விரும்பாததை, கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
“I dont want my inbox flooded with such distorted, perverted views. Kindly remove my id from your mail list.”

அடுத்து மலேசியாவில் வாழ்ந்து மறைந்த அறிஞர். Dr.K. லோகநாதனின் பதிவிலிருந்த ( From: https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/ ) ஆங்கில மேற்கோளை, நான் சுட்டி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து;

"அய்யா, தமிழில் எழுதமுடியாத பேற்றிஞர் எனக்கு அனுப்பவேண்டாம் , தமிழருக்கான துரோகக் கடிதஙகளை."

என்று ஒரு 'பெரியார்' ஆதரவாளர் வெளிப்படுத்திய கருத்தையும் பதிவிட்டுள்ளேன். 'அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் பயன்படுத்தப்படும் பின்னணியில், சுயலாப நோக்கின்றி, தமக்குள்ள கொள்கைப்பற்றில், நம் மீது சரியாகவோ/தவறாகவோ கோபப்படுபவர்கள் எல்லாம் மதிக்கத்தக்கவர்களே ஆவர்.'
(http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html) 'பெரியார்' ஆதரவாளர்கள் உள்ளிட்டு எவரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல.

எனவே மனம் புண்படாமல், எனது பதிவுகளை படிக்கக்கூடியவர்கள் என்று உறுதி செய்த பின்னரே, எவருக்கும் ஈமெயில் மூலம்,  என் பதிவை அனுப்புவது என்று முடிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment