தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்'
காலனிய சூழ்ச்சியா?
'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்';
ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?
தமிழில் 'திராவிடர்'
என்ற சொல்லின் அறிமுகமானது, காலனிய சூழ்ச்சியா?
என்ற ஆய்விற்குதவும் தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.
“ஆங்கிலத்தில் உள்ள
'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, புவியியல் அடிப்படையிலும், உயிரணு அடிப்படையிலும், தெளிவாக
வேறுபடுத்தி அடையாளம் காணப்படும் பொருளில் (as largely discrete, geographically
distinct, gene pools) பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.
ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில்,
'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள்
அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம்.
('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)
மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில்
'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, தமிழில் வழக்கில்
இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால்,
ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்'
என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது.
தமிழில் 'பண்' என்ற
சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக்
கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக,
மொழிபெயர்ப்புகளில், 'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய
தவறைவிட, மிக மோசமான தவறு மேற்குறிப்பிட்டதாகும்.” (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும்,
அரசியல் நீக்கமும் (depoliticize) (4); 'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’; http://tamilsdirection.blogspot.com/2015/06/depoliticize-4.html )
அதே போல, தமிழில்
'பிராமணர்' என்ற சொல்லும், காலனிய நுழைவுக்கு முன் இருந்ததற்கு சான்றுகள், எனக்கு கிடைக்கவில்லை.
சங்க இலக்கியங்களில் 'பிராமணன்' என்ற சொல் இல்லை;
'பார்ப்பார்', 'பார்ப்பான்','ஐயர்', ‘ஆரியர்’, என்ற சொற்கள் இருக்கின்றன.
இவை தவிர, 'அந்தணர்',
என்ற சொல்லும் இருக்கிறது.
தமிழில் 'சாதி' என்ற
சொல்லுக்கு இன்றுள்ள பொருளானது, காலனியத்திற்குப் பின், ஏற்கனவே இருந்த பொருளை திரித்து,
அறிமுகமானது, என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
“இன்றுள்ள 'சாதி அமைப்பு'
என்பதானது, காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு,
ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட
சூழ்ச்சியா?” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
(‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

காலனியத்திற்குப்பின்
அறிமுகமான 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ், அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாதிகள் எல்லாம்,
மேற்குறிப்பிட்ட 'பார்ப்பார், பார்ப்பான், ஐயர், அந்தணர், ஆரியர்' ஆகிய சொற்களுடன்
தொடர்புடையவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
உதாரணமாக, 'ஆரியர்'
என்ற சொல்லானது, யானையை பயிற்றுவிக்கும் திறமைசாலிகள் என்பது தொடர்பான சான்று வருமாறு.
‘ஆரியர் பிடி பயின்று
தரூஉம் பெருங்களிறு போல’
அகநானூறு 276: 9 –
10
'பார்ப்பான்', 'பார்ப்பார்' என்ற சொற்களும், மரியாதைக்குரியவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தது, என்பது தொடர்பான சான்றுகள்
வருமாறு.
' 'தோழி, தாயே,பார்ப்பான்,
பாங்கன்,
பாணன், பாட்டி, இளையர், விருந்தினர்,
கூத்தர்,விறலியர், அறிவர், கண்டோர்,
யாத்த சிறப்பின் வாயில்கள்' என்ப’ தொல்காப்பியம்:
பொருள்: 4; 52
'பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
காப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார்'' - ஏலாதி 54
'பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
காப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார்'' - ஏலாதி 54
பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும், ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
மேற்குறிப்பிட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள, 'பார்ப்பார்' மனம் நோகும் வகையில் நடத்தப்பட்டதற்கும், சான்று உள்ளது.

‘ஆர் புனை தெரியல்
நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்;
மற்று இது
நீர்த்தோ நினக்கு?'
என வெறுப்பக் கூறி'
புறநானூறு 43: 13 –
15
வேள்வி செய்யாத 'பார்ப்பான்'
எல்லாம், 'வேளாப் பார்ப்பான்' (அகநானூறு; 1- 2) என்று இழிவுபடுத்தப்பட்டிருந்தனர்.
'நால் வருணம்' தொடர்பான
சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் 'வருணம்' என்ற சொல்லானது,மேலே குறிப்பிட்ட
பதிவில் விளக்கியபடி, காலனியம் அறிமுகப்படுத்திய
சாதி அமைப்பில், சிக்கிய சமூக செயல்நுட்பமும் ஆய்விற்குரியதாகும்.
சங்க காலத்தில், வருண
அமைப்பானது, எவரும் கல்வி கற்று, சிறப்பிடம் பெறும் வகையில் இருந்தது என்பதற்கான சான்று
வருமாறு.
‘வேற்றுமை தெரிந்த
நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன்
கற்பின்,
மேற்பால் ஒருவனும்
அவன்கண் படுமே’
புறநானூறு
183 8
- 10
தமிழில் இருந்த 'இனம்',
'சாதி' போன்ற சொற்களை, காலனிய சூழ்ச்சியில்
திரித்து, அந்த திரிதலின் அடிப்படையில், 'பிராமணர்', திராவிடர்' என்ற சொற்களை அறிமுகப்படுத்தி,
சமூக ஒப்பீடு (Social Comparison) நோயையும் 'வீரியத்துடன்' தூண்டி, எவ்வாறு 'உயர்வு,
தாழ்வு, தீண்டாமை' நோய்கள் அரங்கேறின? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
“மேற்குறிப்பிட்ட முறையில்,
இன்றுள்ள சாதி முறையை காலனி ஆட்சியாளர்கள் தமது சுயநலனுக்கு உருவாக்கி, இந்தியர்களை
கீழாகவும், 'தீண்டத்தகாதவர்களாகவும்' நடத்தி, சமூக ஒப்பீடு நோயில் (Social
Comparison Sickness), அந்த புதிதாக உருவாக்கப்பட்ட சாதியினரை சிக்க வைத்தனரா? அந்த
சமூக ஒப்பீடு நோயில் சிக்கிய சாதியினர், தமக்கு 'கீழாக' கருதிய சாதியினரை இழிவாக, நடத்த,
சாதி மோதல்களுக்கான விதையூன்றப்பட்டு, ஏற்கனவே இருந்து வந்த கல்வி, தொழில் முறைகளை
சிதைத்து, புதிதாக அரங்கேறிய கல்வி, வேலை வாய்ப்புகளை 'தூண்டில் மீனாக' பயன்படுத்தி,
வளர்க்கப்பட்டதா? இன்று வெளிநாட்டு நிதி உதவியில் என்.ஜி.ஓக்கள் அந்த வளர்ச்சி குன்றாமல்,
பாதுகாத்து வருகிறார்களா? காலனியத்திற்குப்பின் இன்று வரை நடந்து வரும் சாதிக்கலவரங்கள்,
காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் நடந்ததற்கு சான்றுகள் உண்டா? சமூக உயர்வு/தாழ்வு, மற்றும் தீண்டாமை ஆகிய நோய்களை, காலனி ஆட்சியாளர்கள், இந்தியர்கள் மனதில் 'செயல்பூர்வமாக' விதைத்து;
அந்த சமூக உளவியல் செயல் நுட்பமானது ( Social Psychological Mechanism), 'இயல்பில்' பலகீனமானவர்களின் பங்களிப்பில், அக சீரழிவை வளர்த்து, தனித்துவமான(Unique) சமூக சீர்குலைவு பிரிவினை நோயாக வளர்ந்துள்ளதா? ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா? என்பவையெல்லாம் ஆய்வுக்கு உரிய கேள்விகளாகும்.” . (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)
மனசாட்சியற்ற 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளே, 'பெரியார் சமூக கிருமிகளாக' வளர்ந்தார்களா? என்று, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அடிப்படையிலும், ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன். அந்த 'கிருமிகள்' குறுக்கு வழிகளில் ஈட்டிய செல்வத்தில் மயங்கி, அந்த கிருமிகளுடன் 'நல்லுறவில்' வாழ்பவர்களும், அதே வகை மனநோயாளிகளா? விவாதத்தின் போது, 'அறிவுபூர்வ' போக்கிலிருந்து தடம் புரண்டு, விவாதத்தில் எதிர் நிலையில் உள்ளவரையும் விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாதத்தை சீர்குலைய செய்யும் போக்கானது, ஆதிக்கமாக வலம் வர, அந்த மனநோயாளித்தனமானது காரணமானதா?(http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html) என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கி, தனது அறிவு வரைஎல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, கீழ்வரும் நோயிலும் சிக்கி, ஈ.வெ.ரா பயணித்ததே, 'பெரியார் சமூக கிருமிகள்' உற்பத்தியாக வழி வகுத்ததா? என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது.
“காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்டு, 'அரசியல் விடுதலை' பெற்ற நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலோர், அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கேவலமாகக் கருதி, தம்மை அடிமைப்படுத்திய மேற்கத்திய நாகரிகத்தை உயர்வாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையிலான 'மன நோய்க்கு' ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வகை மன நோய் ‘cultural cringe’- பண்பாட்டு அடிமைச் சேவக மனப் பாங்கு - என்று அழைக்கப் படுகிறது. அது ‘பண்பாட்டு அந்நியமாதல்’ - "cultural alienation" - என்பதுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகும்.
அத்தகைய மன நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சமூக வரலாறு பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அவை பற்றிய குறைவான அறிவுடன் நடை, உடை, பாவனை, இசை, தொலைக்காட்சி உள்ளிட்டு அனைத்திலும் அமெரிக்காவில் உள்ளதைப் போன்றவைக்காகப் 'பசியுடன்' (an appetite for all things American) வாழ்வார்கள். http://en.wikipedia.org/wiki/Cultural_cringe ) காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளில், மேற்குறிப்பிட்ட சமூக மன நோயிலிருந்து தமது மக்களை மீட்க, அந்தந்த நாட்டு பேராசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.” (‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) அந்நாடுகளில் உள்ள மொழிகளில் இருந்த சொற்களின் பொருளையும், காலனிய சூழ்ச்சியில் திரித்தது தொடர்பான ஆய்வுகளையும், தேடி வருகிறேன்.

'பிராமணர்'என்ற சொல்லும், 'சாதி' என்ற சொல்லும், நேர்க்குத்து (Vertical) தரவரிசையிலான (hierarchical) கிறித்துவ அணுகுமுறையில், இந்திய மொழிகளில் என்னென்ன வழிகளில் நுழைந்து, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில், இந்திய சமூகத்தை சீரழித்த, சமூகசெயல்நுட்பம் (Social Mechanism) பற்றி, எவரேனும், முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்.
“இன்று நிலவி வரும் சாதிகள் சங்க கால சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விவசாயம்,மீன்பிடித்தல் உள்ளிட்டு அனைத்து பொருளீட்டல் துறைகளில் ஈடுபட்டிருந்த சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பறைவகை இசைக் கருவிகளை இசைத்தற்கு நிறைய சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்ல குடிமகனுக்கான(citizen) வரையறையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வியப்பைத் தரவல்லதாகும்.
“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ”
புறநானூறு 335: 7 - 8
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இசைப் புலமையுடன் வெவ்வேறு வகையிலான இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர்கள் ஆவர்.துடியன், பாணன், பறையன்,பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. கடம்பன் பற்றிய சான்றுகள் குறைவே.பறை என்பது குறிப்பிட்ட வகையிலான பல தாள இசைக்கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.
சங்க காலத்தில் குடிமக்கள் என்போர் ஏதாவது ஒரு வகை இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இசைத்தவர்கள் சாதி அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் இல்லை. செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளோ, அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ இருந்ததற்கான சான்றுகளோ இல்லை. (‘இசையில் ' தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடை’யா?’; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
மேலே குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கியதன் காரணமாகவே, எண்ணற்றோரின் விலைமதிப்பில்லாத தொண்டும், தியாகமும், தமிழ்நாட்டை கீழ்வரும் விளைவிற்குள்ளாகியது, என்பதும் முக்கியமாகும்.

“தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும்
எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும்
பாதகமாகவே முடியும்.தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் பாரம்பரியத்தை தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது,
நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய வைத்தியமாகிவிட்டது.” ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html
)
தமிழ்நாட்டில் 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்', ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (குறிப்பு கீழே) 'சுயநல கள்வர்களாக' வாழும் 'பெரியார் சமூக கிருமிகளும்', பிராமணர்'களிடையே வாழும் சமூக கிருமிகளும், புறத்தில் 'எதிரிகளாக' 'காட்சி' தந்து, அகத்தில் ஒரே வகை சீரழிவுக்குள்ளாகி, ஒருவரையொருவர் 'இரகசியமாக' காப்பாற்றி, தமிழ்நாட்டை சீரழித்து வருகிறார்களா? 1967க்கு முன்பிருந்தது போலின்றி, இன்று தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, ஆங்கில நூல்களையும்/இதழ்களையும் படிக்கும் அறிவை வளர்ப்பதில் ஆர்வமும், உழைப்பும் இன்றி, பொது அரங்கில் 'ஆதிக்கத்துடன்' உணர்ச்சிபூர்வமாக வலம் வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அதன் தொகுவிளைவாக (Resultant), இந்தியாவில் தமிழ் மொழியும், பாரம்பரியமும், பண்பாடும், 'தனித்துவமாக' (Unique) வீழ்ச்சிக்குள்ளானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
உணர்ச்சிபூர்வ போக்குகளிலிருந்து விடுதலையாகி, அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலம், தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், நெறிப்படுத்திக்கொண்டு, பொதுவாழ்விலும், மனித உறவுகளிலும், 'சுயலாப கள்வர்' நோயில் சிக்காமல் பயணிப்பதன் மூலமே, தமிழும், தமிழரும், தமிழ்நாடும், மீட்சி திசையில் பயணிக்க முடியும். தமிழ்நாட்டின் அரசியல் வெளியானது (Political Space) காலியாகி விட்டதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ள நிலையில்,(http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) மீட்சிக்கான முயற்சிகள், வெற்றி பெறும் காலமும் நெருங்கி விட்டது.
குறிப்பு :
1. இந்திய விடுதலை நாளை, கடந்த 69 வருடங்களாக, ஈ.வெ.ராவைப் போலவே, 'அகில பாரதீய இந்து மகாசபையும்' துக்க தினமாக, கறுப்பு கொடி ஏற்றி அனுசரித்து அனுசரித்து வருகிறார்கள். ( http://www.coastaldigest.com/index.php/news/90118-indias-independent-day-is-black-day-for-hindu-mahasabha ) காலனி ஆட்சியை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்படும் ஈ.வெ,ராவும், இந்து மகாசபையும், காலனி ஆட்சியில் அனுபவித்த கொடுமைகள் அளவுக்கு, காங்கிரஸில் காந்தி-நேரு ஆதரவாளர்கள் அனுபவித்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
2.சாதி அமைப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைகளை படிக்க; https://groups.google.com/forum/#!topic/mintamil/uIhHgnWQ8u0
3. Language is therefore discredited as an ethnological factor. …….. but in any case the linguistic division of the tongues of India into the Sanskritic and the Tamilic counts for nothing in that problem. From: https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/

No comments:
Post a Comment