Sunday, June 26, 2016


இரண்டு கொலை செய்திகள்:

'மறைமுக பங்களிப்பு சமூக குற்றவாளிகளாக', நாம் இருக்கிறோமா?



முதல் செய்தி:

“கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரங்கசாமியும், ரவிக்குமாரும் மது அருந்திக்கொண்டு இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், ரங்கசாமியை அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் விடுதலை ஆனார்.

சிறையில் இருந்து வெளியே வந்த ரவிக்குமார் காளிபாளையத்துக்கு சென்றார். ரங்கசாமி வீட்டுக்கு சென்ற அவர் எனக்கு எதிராக சாட்சி கூறிய உன்னையும், உன்னுடைய குழந்தைகளையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று சுகந்தாமணியை மிரட்டியுள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை வேலை சென்ற சுகந்தாமணி பேருந்து நிலையம் அருகே ரவிகுமார் போதையில் வருவதை பார்த்த சுகந்தாமணி, ரவிக்குமாரின் தலையில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் இறந்தார்.”

இரண்டாவது செய்தி :

“சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்ணெதிரே ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என ரயில்வே காவல்துறை டிஐஜி பாஸ்கர் தெரிவித்துள்ளார்…………..அவர் மேலும் கூறும்போது, "இந்த கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும். ரயில் நிலையத்தில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வெட்டிவிட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வரும்முன் தப்பி சென்றிருக்கிறார். எனவே அந்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். இந்த கொலை குறித்து பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்" என்றார்.”

முதல் செய்தியில் கைது செய்யப்பட்ட கொலையாளியானவர், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் விடுதலை ஆனார்."

முதல் செய்தியில் கொலையாளியை, கொலையுண்டவரின் மனைவி கொலை செய்து விட்டு, போலீசில் சரணடைந்துள்ளார். "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை" என்பதால், அவர் விடுதலை ஆவாரா? இல்லையா? என்பதும், வழக்கின் முடிவில் தெரியும்.

இரண்டாவது செய்தியின்படி, கொலையாளி  கைதானாலும், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்ற விடுதலை ஆவாரா? மாட்டாரா?  என்பதும்,  வழக்கின் முடிவில் தெரியும்.
இரண்டாவது செய்தியில் கொலையாளி  கைது செய்யப்பட்ட பின், வெளிவந்துள்ள கருத்து வருமாறு:

“கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால், மூன்று மாதங்களில் ஜாமினில் வந்து விடுகின்றனர். சிறைக்கு சென்றதால், தங்களை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என, ரவுடியாக மாறி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக வழங்க வேண்டும். தண்டனையில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும்.”- ஆட்டோ ஓட்டுனர்.

குற்ற வழக்குகளில், காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி ஆகிய மூவரில் ஒருவரோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ, 'ஊழல் நோயில்' சிக்கியிருந்தால், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை" என்று குற்றவாளி விடுதலையாவதற்கும், அல்லது குறைந்த தண்டனை பெறுவதற்கும் வாய்ப்புண்டு. குறைந்த தண்டனை பெற்றாலும், சிறை அதிகாரிகள் 'ஊழல் நோயில்' சிக்கியிருந்தால்,  அந்த சிறை தண்டனையானது, 'சுகவாழ்வாக' அமையவும் வாய்ப்புண்டு.
 

1967க்கு முன் இவை போன்ற கொலை வழக்குகளில்;

"இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை"

என்று கொலையாளிகள் விடுதலையான புள்ளி விபரங்களை;

1967க்கு பிந்திய இவை போன்ற  புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு,  ஆராய வேண்டியது அவசியமாகும்;

இனிமேலாவது கொலை செய்பவர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும்,
சட்டத்தின்  மேல்  பயம் வர வேண்டுமானால்.

1944இல் தி.க தோன்றவில்லையென்றால், 1949இல் தி.மு.க தோன்றியிருக்குமா? 1949இல் தி.மு.க தோன்றவில்லையென்றால், 1967இல் ஆட்சி மாற்றம் நடந்திருக்குமா?

எனவே, மேற்குறிப்பிட்ட ஆய்வில்;

1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாட்டில் 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் 'அரவணைப்பில்' உருவாகி,   'காவல்துறை, அரசு வக்கீல்,  நீதிபதி,  சிறை உள்ளிட்ட‌ துறைகளில் 'கறுப்பு ஆடுகள் ஊழல் வலைப்பின்னல்' வளர்ந்துள்ளதா? என்பதும் இடம் பெற வேண்டும்.

அந்த வலைப்பின்னலில் 'பெரியார்' முகமூடியுடன் இடம் பெற்று, புதுப் பணக்காரர்களாக வலம் வரும் சமூக கிருமிகள் யார்? யார்? 

அந்த கிருமிகளின் எடுபிடிகளாக 'துணை பலன்' அனுபவித்தவர்கள் யார்? யார்?

என்ற ஆராய்ச்சியை,  சுயலாப நோக்கற்று, சமூக பொறுப்புடன் வாழும் 'பெரியார் கொள்கையாளர்கள்' தொடங்க வேண்டியது, அவர்களின் சமூக கடமையாகாதா?;

தமிழின் மரணப்பயணத்திற்கும், 'பெரியார்' முகமூடி சமூக கிருமிகளின் பிடியில், தமிழர்களின் சீரழிவிற்கும், காரணமான வரலாற்று குற்றவாளியாக, 'பெரியார் கட்சிகள்' முத்திரை குத்தப்படுவதை, தவிர்ப்பதற்காகவும்;  திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா?  அல்லது சமூகத்திற்கு கேடாக, திரிந்து விட்டதா? தமிழ்நாட்டில் குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளில், 'பணத்துக்காக' சீர்குலைவுகள் அதிகரிக்கும் வேகத்தில், முதியோர் இல்லங்களும், கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பங்களில் வன்முறை, கொலை, தற்கொலைகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவதும், உண்மையா? அதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தால், அந்த நோயின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க வளர்ச்சிக்கும், தொடர்பு உண்டா?  என்ற கேள்விகளும் எழுந்துள்ள சூழலில். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

“நமது சமூக வட்டத்தில் உள்ள, 'பெரியார்' முகமூடி 'சமூக ஆற்றல் உறிஞ்சிகள்', எவ்வாறு 'ஒழுக்கக்கேடான' முறைகளில், 'செல்வம், செல்வாக்கு' ஈட்டியுள்ளனர்? என்று ஆராய்ந்து, அந்த சமூக கிருமிகளை அகற்றாவிடில், அவர்களின் செல்வம், செல்வாக்கில் மயங்கி, நாமும், நமது குடும்பம், சுற்றம் உள்ளிட்ட‌ நமது சமூக வட்டமும், அந்த நோயில் சிக்குவதை தவிர்க்க முடியுமா? அக்கிருமிகளிடம் 'லாபத்தில் பங்கு' பெற்று வாழ்வதை விட, இழிவான வேறு வாழ்க்கை  உண்டா? ஏரிகள், கால்வாய்களை, 'ஊழல் கோரப்பசியில்' 'முழுங்கி', தமிழ்நாடு வெள்ளத்தில் மூழ்கி பல உயிர்கள் பலியானது; 'டாஸ்மாக்' மூலம் மாணவிகள் வரை பள்ளிகளிலேயே குடித்து சீரழிவது; மவுலிவாக்கம் பலமாடி கட்டிடம் இடிந்து பல உயிர்கள் பலியானது; 'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை பயம்' குறைந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவது; பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'மறைமுக பங்களிப்பு சமூக குற்றவாளிகளாக' நாம் இருக்கையில்?”; இதே நிலை நீடிக்குமானால், எதிர்காலத்தில் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும், இரண்டாவது செய்தியில் கொலையுண்ட சுவாதியை போல, கொலை செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது, என்ற நினைப்பின்றி.
( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

குறிப்பு: 

இரண்டாவது செய்தியிலுள்ள, நுங்கம்பாக்கம் கொலையை நேரில் பார்த்த பயணியாக, நான் இருக்க நேரிட்டிருந்தாலும், அந்த வழக்கில் சாட்சியாக நான்  விரும்ப மாட்டேன்: ஏற்கனவே தமிழ்நாட்டு நீதி மன்றங்களில் நான் பெற்ற கசப்பான அனுபவங்களின் காரணமாக.( http://www.driftline.org/cgi-bin/archive/archive_msg.cgi?file=spoon-archives/third-world-women.archive/third-world-women_2002/third-world-women.0205&msgnum=1&start=1&end=442http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )


'சென்னைக்கு பக்கத்து மாவட்டத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, புகாரோட யார் வந்தாலும், அங்க இருக்கிற சிறப்பு எஸ்.ஐ., உற்சாகம் ஆகிடுதாரு... 'இதை நானே விசாரிச்சு முடிக்கேன்'னு, சொல்லி புகாரை வாங்கிடுதாரு வே... கையோட எதிர்தரப்பை பார்த்து, பேரம் பேசி, ஒரு தொகையை கறந்துட்டு, புகார் கொடுத்தவங்களுக்கு எதிராவே செயல்படுதாரு... ''சமீபத்துல, பாண்டூர்ல அடிதடி கேஸ்ல மாட்டினவனை, பேரம் பேசி பணத்தை வாங்கிட்டு, வழியிலேயே விடுவிச்சிட்டாரு வே...அந்த குற்றவாளி, தனக்கு எதிரா புகார் கொடுத்தவரை கத்தியால குத்திட்டு தப்பிச்சு ஓடிட்டான்... 
''அதிகாரிக்கு, ஸ்டேஷன் உயர் அதிகாரியும் உடந்தையா இருக்கிறதால, நேர்மையான போலீசார் எதுவும் செய்ய முடியாம புலம்புதாவ...'

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91


No comments:

Post a Comment