Tuesday, June 28, 2016



இருட்டறையில் 'இல்லாத' கறுப்புப் பூனையை தேடும் வேலை தொடர வேண்டுமா?


         கீழ்வரும் கருத்துக்களை விளக்கியுள்ள ஆங்கில கட்டுரை ;

                  Why Devdutt Pattanaik Is Mostly Wrong
                                 Aravindan Neelakandan

1.   மேற்கத்திய 'ரேஸ்'  (Race) என்ற சூழ்ச்சியில்,  'இந்து', 'இந்துத்வா' சிக்கவில்லை. 'ஆரிய இனம்' என்பது 'இருட்டறையில் இல்லாத‌ கறுப்புப் பூனையை தேடும் வேலை' என்பதே ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு ஆகும்.
““Did the Aryans and their original home exist?” It concludes that such a quest is “searching for something which simply does not exist” like “searching for a black cat in a dark room which is not there.”

2.   அரவிந்தர் 'ஆரிய இனம்' என்ற கருத்தை ‘அபத்தம்’ என்றும்,’போலி அறிவியல் முடிவு’ (pseudo-scientific conclusions)  என்றும் விளக்கியுள்ளார்.

3.    'ஆரிய இனம்' என்ற கருத்தானது , ‘தமக்கு விருப்பமான கற்பனை கருதுகோளின் அடிப்படையிலான, அறிவியல் ஆராய்ச்சி மோசடி’ (“based on nothing but pleasing assumptions and inferences based on such assumptions” and that it was “a perversion of scientific investigation”. )  என்று அம்பேத்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

4. முஸ்லீம்களை 'அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாக' 'இந்து' தேசியவாதிகள் கருதவில்லை. ‘தீண்டாமை கொடுமைக்கு இந்து சமூகமே காரணம்’  என்றும், ‘அதை ஒழிக்க வேண்டும்’ என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்த, கொல்வால்கரும், தியோரஸும் கண்டித்துள்ளார்கள். (Hindu nationalists do not consider Muslims of India alien invaders. And both Golwalkar and Deoras, the second and third heads of RSS, squarely blamed Hindu society for the evil of untouchability and took the responsibility of removing it.)

மேற்குறிப்பிட்டதற்கு முரணாக 'இந்துத்வா' சார்பாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கும் சான்றுகள் இருக்கலாம்.

எதிரெதிரான நிலைப்பாடுகள் உடையவர்களில், திறந்த மன‌தும், அறிவுநேர்மையும் உடையவர்கள் எல்லாம், ஒருவரையொருவர் மதித்து, 'பிறர் பார்வை அறிதலை' (empathy:ability to understand and share the feelings of another.) அகவயப்படுத்தி, அறிவுபூர்வ விவாத திசையில் பயணிப்பார்கள். அதற்கு மாறாக, ஒருவரையொருவர் இழிவு செய்து, உணர்ச்சிபூர்வ விவாத திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் செனோபோபியா மனநோயில் சிக்கியவர்கள் ஆவர்.

தவறிழைத்தவர்களை பாரபட்சமின்றி அடையாளம் கண்டு, சட்டபூர்வ தண்டனைக்குட்படுத்துவதில் கவனம் செலுத்தாமல்;

அவர்கள் சார்ந்த சாதி, மதம், மொழி, இனம், நாடு அடிப்படைகளில், அந்த பிரிவு மக்கள் அனைவரையும்,  எதிரியாக கருதுவது என்பது 'செனோபோபியா' (xenophobia) எனும் குணப்படுத்தக்கூடிய மனநோயாகும். (http://www.medindia.net/patients/patientinfo/xenophobia-medical-treatment.htm ) தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகளை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் மனிதர்களும், கட்சிகளும், இந்த வகை மனநோயில் சிக்கும் வாய்ப்பும் அதிகமாகும். "சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.”
(http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) எனவே அறிவுபூர்வ விவாதங்களை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை ஆதரிப்பவர்கள் எல்லாம், எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும், சமூக குற்றவாளிகளே (அல்லது வெளிநாட்டு/உள்நாட்டு சுயநல சக்திகளின் 'கங்காணிகளே') ஆவர். உணர்ச்சிபூர்வ போதையில், அத்தகையோரின் 'சுயரூபங்களை' கண்டுபிடிக்கும் அறிவின்றி, தம்மை அழித்துக்கொள்ளும் 'விட்டில் பூச்சிகளின்' எண்ணிக்கையே, உணர்ச்சிபூர்வ கட்சிகளின் பலமாகும். நல்லவேளையாக, தமிழ்நாட்டில் 'விட்டில் பூச்சிகளின்' எண்ணிக்கையானது, ‘அதிவேகமாக’ குறைந்து வருவதானது, 'தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின்' மீட்சிக்கான நல்ல அறிகுறியாகும்.

'கடந்த கால அடிமைகளாக' வாழாமல், கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டு,  'ஆக்க பூர்வ வளர்ச்சி' நோக்கி, அறிவுபூர்வமாக‌ பயணிப்பவர்கள் எல்லாம், 'உடன்படும்' கருத்துக்கு ஒத்து வருபவர்களை ஒருங்கிணைத்து பயணிப்பதே,  புத்திசாலித்தனம் ஆகும்.

சுயநல உள்நோக்கத்தோடு 'ஒத்து' இருப்பது போல், நம்முடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமது சுயநலத்திற்கு ' வாய்ப்பு’ கிட்டும் போது, தமது 'இழிவான சுயரூபத்தை' வெளிப்படுத்தி அம்பலமாவார்கள், என்பது, எனது 'திருச்சி பெரியார் மையம்' அனுபவமாகும்.  (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

எனவே ‘அதற்கும் வாய்ப்புண்டு’ என்ற எச்சரிக்கையுடன், மேற்குறிப்பிட்ட வகையில், 'உடன்படும்' கருத்துக்கு ஒத்து வரும் 'இந்துத்வா'ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை  ஒருங்கிணைத்து,  பயணித்தால் மட்டுமே, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு, சுயலாப நோக்கின்றி,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். எனது ஆய்வுப் பணிகளுக்கிடையில், அதற்கும் நேரம் ஒதுக்கி, நான் முயற்சித்து வருகிறேன்; ‘இந்துத்வா’ ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள,  'சுயநல சமூக கிருமிகளை' அடையாளம் கண்டு, ஒதுக்கி; அதனால் வரும் இழப்புகளையும் விரும்பி ஏற்று; தமிழ்நாட்டை சீரழித்து வரும் பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளுக்கும் அடிமையாகாமல்; தமது அறிவு, திறமைகளை எல்லாம், 'பாராட்டு, புகழ், செல்வம்' நோக்கில் 'விலை பேசி'யும், வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்களுடன், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் 'பலன்கள்'(?) அனுபவித்தும், 'வித்தியாசமான‌ விபச்சாரிகளாக',   வாழாமல்.

விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்து,  'அறிவில்' சாதனையாளர்களாகும் வாய்ப்பை இழந்து, (தாய்மொழிவழி அடிப்படைக் கல்வியை இழந்ததால்; http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ), இன்று தமிழில் தமிழ்நாட்டில் சரளமாக எழுத படிக்க தெரியாத மாணவர்களை, நான் சந்தித்து வருகிறேன். தமிழில் பழந்தமிழ் இலக்கியங்களை படிக்கும் அளவுக்கு அறிவின்றி, ஆங்கில நூல்களையும்/இதழ்களையும் படிக்கும் அறிவின்றி, சராசரி பொது அறிவின் அடிப்படையில், கேள்விகள் கேட்டு, 'பெரியார்'/முற்போக்கு ஆதரவாளர்களாக வலம் வருபவர்கள் எல்லாம், இன்றைய மாணவர்களின் கேலிப்பொருளாகும் வாய்ப்பும்,  அதிகரித்து வருகிறது.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் குடும்பங்களில், தத்தம் தாய்மொழிகளில் 'அப்பா, அம்மா' என்று அழைத்து, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு வெளிப்படுவதும்;

தமிழ்நாட்டு கிராமங்களில் கூட, ஆங்கில வழி 'விளையாட்டுப் பள்ளிகளின்' (Play School) புற்றீசல் வளர்ச்சி  மூலமாக, 'மம்மி, டாடி' அரங்கேறி, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு சீர்குலைந்து, 'சுயநல மனித மிருக போக்கு' அதிகரித்து வருகிறது என்பதும்;


எனது அனுபவத்தில் வெளிப்பட்டுள்ளது; மனிதர்களாக பழகுவதற்குள்ள தகுதியையும் தமிழர்களில்  பலர் இழந்து வருகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ள சூழலில்.


சுயலாப நோக்கமின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும், தலைவர்களையும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல், தம்மால் இயன்ற முயற்சியை,  தாமதமின்றி தொடங்க வேண்டும். இது தொடர்பாக, திரு.வி.க 1920களிலேயே முன் வைத்த, கீழ்வரும் கோரிக்கையும் கவனிக்கத் தக்கதாகும். 

"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது.  தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்".  திரு.வி.க 18-4-1928; தமிழ்ச்சோலை
( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க‌ உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்?; http://tamilsdirection.blogspot.in/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனது முயற்சி தோற்றால், அல்லது இது போல வேறு எவரும், எனக்கு தெரியாமல் முயன்று தோற்றால்;

தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக, 'தரகர்களும், நத்தி பிழைப்பவர்களும், கூலிகளும், திருடர்களும்' மிகுந்த நாடாக தமிழ்நாடு மாறும்; ('குடிசைத் தொழிலாக மாறிய செம்மரக் கடத்தல்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1562009 )
தமிழ்நாட்டில்  புலமையாளர்கள் எல்லாம், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டில் குடியேறியவர்களாக இருக்க. ( ‘'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2); தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

குறிப்பு:  'அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்' 
http://www.vinavu.com/2014/07/18/aravindan-neelakandan-encounters-a-dalit-youth/
பாராட்டத்தக்க வகையில், அறிவுபூர்வமாக நடந்துள்ள இந்த உரையாடலை வரவேற்கிறேன். அது போல, எனது பதிவுகளில் உள்ள நிலைப்பாடுகளுக்கு எதிரான கேள்விகளை வரவேற்கிறேன்.

No comments:

Post a Comment