Monday, August 1, 2016


தமிழ்வழிக் கல்வியின் மீட்சி:

அந்த இரண்டு நோய்களையும் ஒழிக்காமல் சாத்தியமா?


தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் நிலை குறித்து, திரு.பொ.முருகானந்தம்  (ezhil.kavin65@gmail.com ) எனக்கு அனுப்பியுள்ள இணைப்பானது, அரிய தகவல்களின்  தொகுப்பு ஆகும்.

சில அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளால், பள்ளியின் தரமும், வசதிகளும் உயர்ந்து, மாணவர்களை ஈர்த்து வருவது, நம்பிக்கை தருவதாகும். அத்தகைய பள்ளிகளுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை, விளம்பரமின்றி வழங்குவதில்,  என்னைப் போன்றே (இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்) பலரும் ஈடுபட்டுள்ளதும் நம்பிக்கை தருவதாகும்.

அதே நேரத்தில்;

"அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம், குடிநீர், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இல்லாதது; கல்வித்தரம் உயராதது; ஆசிரியர் பற்றாக்குறை, அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்க அரசு தலையீடு இல்லாதது; இவற்றால் கற்பித்தலில் உள்ள குறைபாடு போன்ற காரணங்களினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மூடக்கூடிய நிலைக்கு சென்று விடுகின்றது." என்ற கருத்து, ஆய்விற்குரியது.

ஆர்வமுள்ளவர்கள் அடுத்த முறை  திருச்சி செல்லும்போது, நேரம் ஒதுக்க முடியுமானால்; என்னுடன் ஈ மெயில் தொடர்பு கொண்டு, அறிமுக ஏற்பாடு செய்து கொள்ள இயலுமானால்;

திருச்சி விமான நிலையத்திலிருந்து, கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள அன்னை ஆசிரம் ஆரம்பப்பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியையிடம், அல்லது ஆசிரம அலுவலகத்தில், என் பெயரைச் சொல்லி, அங்குள்ள வசதிகளை பாருங்கள்.

அவ்வளவு நல்ல வசதி இருந்தும் ஏன் பிள்ளைகள் போதுமான அளவில் சேரவில்லை?  என்பது ஆய்விற்குரியதாகும்.

ஓர் அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியையின் கணவர் எனக்கு தெரிவித்தது:

முன்பு போலன்றி,அரசு பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசு உதவிகளில், வசதிகள் மேம்படுத்த வாய்ப்புள்ளது. இலவச உடை, புத்தகம், சைக்கிள், காலணி, மதிய உணவு உள்ளிட்டு, பள்ளியில் சேர ஊக்குவிக்கும் பல வசதிகள் உள்ளன. 

அவை எல்லாம் இருந்தும், அங்கு ஏன் பிள்ளைகள் சேரவில்லை?

2 வயது முதலே ஆங்கில வழி விளையாட்டுப்பள்ளியில் சேர்ப்பது நல்ல எதிர்காலத்திற்கு நுழைவு வாயில், அல்லது கெளரவப் பிரச்சினை என்ற சமூக ஒப்பீடு (Social Comparison) நோயானது கிராமம் வரை பரவி, அரசு பள்ளிகளை புறக்கணிக்க வைக்கிறது, என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நோய்களிலும்,  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள் சிக்கி, ( அநேகமாக அதன் தொடர்விளைவாக) 'சுயலாப' கள்வர் நோயிலும் மூழ்கி, தமது சமூக வட்டத்தில் அந்நோய்களை பரப்பும் சமூக கிருமிகளானதும், அதன் 'விளைவுகளை' நான் சந்தித்ததும், ஆகிய காரணங்களால், அவற்றை எனது சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்த நேர்ந்த்து.

அந்த ஆய்வானது மேற்குறிப்பிட்ட சமூக நோய்களின் ஆழத்தை எனக்கு உணர்த்தியது. பின் அதுவே, சமூகத்தில் உண்மை நிலை என்று நான் கண்டுபிடிக்கவும் காரணமானது.

நேர்மையான சுய சம்பாத்திய தகுதி, திறமை இல்லாதவரை, திருச்சி பெரியார் மையத்திலும், எனது வீட்டிலும் அனுமதித்தது, எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பதும் எனக்கு புரிந்தது. (குறிப்பு கீழே) (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlஈ.வெ.ராவிற்கு இருந்த கல்வி வரை எல்லைகள் (limitations) பற்றி கணக்கில் கொள்ளாமல், 'பெரியார் கொள்கை போதையில்' நான் பயணித்ததே, அதற்கு காரணமாகும். 'பெரியார் கொள்கை போதை'க்கு முன்னும், பின்னும், இது போன்ற, இழிவுக்கு இலக்கணமான நபர்கள் எவரும், எனது சமூக வட்டத்தில் இருந்தது கிடையாது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' - புறநானூறு 192- 2 (‘பெரியார்’ ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களும், அறிவுபூர்வ விவாதத்தை பின் தள்ளி, உணர்ச்சிபூர்வ போக்குகளும் வளர,  1944இல் விதை போட்டு,  உரம் ஊட்டி வளர்க்கப்பட்டதானது, அதற்கு காரணமா? என்ற ஆய்விலும் நான் ஈடுபடவும், அது காரணமானது. அந்த நச்சு போக்குகளால் விளைந்த ‘தமிழ் வேரழிவு’ நோயிலிருந்து,  தமிழும், தமிழரும், தமிழ்நாடும் 'குணமாக', தமிழ்வழிக்கல்வி மீட்சியே,  அதற்கான மருந்து;  என்ற நோக்கில், நான் முனையவும், அதுவே காரணமானது. 

தமிழ்நாட்டில் முன்பு இல்லாத அளவுக்கு  சாதி மோதல்களும், கெளரவக் கொலைகளும் அதிகமாகி, 'ஊழல் வழி' பணக்காரர்கள் 'பெரிய மனிதர்களாக' வலம் வரவும், அகத்தில் சாதிப்பற்றுடன் புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரர்களாக வலம் வரவும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக, அதே கால கட்டத்தில் வளர்ந்த, அந்த இரண்டு நோய்களுமே காரணங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழர்களின் ஆணி வேர்களை (தாய்மொழி, இலக்கியங்கள்) சிதைத்துக் கொண்டே, மேற்கொள்ளப்பட்ட 'சாதி ஒழிப்பு' முயற்சிகளின் ‘தவிர்க்க இயலாத’ விளைவுகளா இவை? அந்த 'ஆணி வேர்களை' சிதைத்து, சமூக சூழலை சீரழித்து வரும் போக்குகளை  வீழ்த்தி, 'ஆணி வேர்கள்' மீட்பு நோக்கில் முயலாமல், தமிழின், தமிழரின் மீட்சி சாத்தியமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

2 வயது முதலே ஆங்கில வழி விளையாட்டுப்பள்ளியில் சேர்ப்பது என்பது ‘நல்ல எதிர்காலத்திற்கு நுழைவு வாயில் அல்ல’  என்பதையும், 10 வயது வரை தாய்மொழிவழிக் கல்வி பெறாத குழந்தைகளின் மூளையில் புலன் அறிவு (cognitive skills)  வளர்ச்சி குறைவாக நடந்து, அவர்கள் படிப்பில் தாம் சாதிக்க வேண்டியதை விட குறைவாகவே சாதிப்பார்கள் என்பதையும், உலக அளவிலான யுனெஸ்கோ உள்ளிட்ட ஆய்வுகள் உணர்த்தியுள்ள்ன. (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

“ ஒரு மனிதன் தனக்கு எஜமானராக இருந்து அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்கள் வேறு; செல்வம், செல்வாக்கில் மற்றவர்கள் தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற, சமூக ஒப்பீட்டு (Social Comparison) நோயில் சிக்கி - மற்றவர்களின் மதிப்புக்காக ஏங்கி - அடிமையாக‌ அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்கள் வேறு……………. மேற்குறிப்பிட்ட ஒப்பீடு நோயில் சிக்கிய மனிதரின் மனதினுள்,  ஏமாற்றம், சுய அனுதாபம், தம்மைப் பற்றிய குறைவான மதிப்பீடு, பொறாமை ஆகியவை உருவாக வாய்ப்புகள் அதிகம் உண்டு. ( only creates the feeling of frustration, self-pity, low self-worth, and envy. ) அதன் காரணமாக நமது இயல்பையே தொலைத்து வாழ்வதும் தவிர்க்க இயலாது. (Comparing ourselves with others takes away our individuality. ) நமது இயல்புக்கு எதிரான போரில்,  நாம் மூழ்கி, நாம் கற்பனை செய்துள்ள ஒப்பீடு போட்டியில், மற்றவரை 'எந்த வழியிலாவது' வீழ்த்த வழிதேடும் நோயாளி போன்று, நாம் வாழ நேரிடும். (We constantly battle against ourselves, and look for ways to beat him in this perceived competition.)

பொதுவாக இந்த நோயில் சிக்கியவர்கள், எந்த ஒருவரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் இகழ்வதும், அதே நபரால் தமக்கு ஆதாயம் எனில் அவரை 'ஆகா, ஓகோ' என்று புகழ்வதும் அந்த நோயின் மறு பக்கங்களாகும்.” என்பதையும் உலக அளவிலான ஆய்வுகள் உணர்த்தியுள்ளன..... ’தமிழ்நாட்டில் லாபநட்ட கணக்கில்லாமல், யாரும் யாரையும் மதிப்பது கிடையாது’,  என்ற சமூக வட்டத்தை விட்டு விலகி வாழும்போது மட்டுமே, இயல்பான மதிப்பையும், அன்பையும் அனுபவிக்க முடியும். அந்த இயற்கையான வாழ்வு வாழ்வது அபூர்வமான இன்பமாகும்." (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

எனவே 2 வயது முதலே ஆங்கில வழி விளையாட்டுப்பள்ளியில் சேர்ப்பது நல்ல எதிர்காலத்திற்கு நுழைவு வாயில்,  மற்றும்  கிராமம் வரை பரவியுள்ள, கெளரவப் பிரச்சினை என்ற சமூக ஒப்பீடு (Social Comparison), ஆகிய‌ அந்த இரண்டு நோய்களையும் ஒழிக்காமல், தமிழ்வழிக் கல்வி மீட்சி என்பது சாத்தியமில்லை. 

ஊழல் எதிர்ப்பு அலையில் மோடி பிரதமரான பின்னும்;

தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு மந்தமாக இருக்கும் வரை, அந்த இரண்டு நோய்களையும் பரப்பி வரும் சமூக நோய்க் கிருமிளின் ஆட்டம் அடங்காது.

10 வயது வரை  இந்தியா முழுவதும் தாய்மொழிவழிக் ல்வியை கட்டாயமாக்குமாறு, ஆர்.எஸ்.எஸ் கொடுத்து வரும் அழுத்தமானது; (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?’; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  & 'RSS groups turn the page for mother tongue lectures in IITs and IIMs'; http://www.newindianexpress.com/nation/Teaching-trouble-RSS-groups-turn-the-page-for-mother-tongue-lectures-in-IITs-and-IIMs/2016/08/14/article3579133.ece )

புதிய கல்வி கொள்கையில், 'மாநில அரசுகள் விரும்பினால்' என்று நீர்த்து போகவும் வாய்ப்புள்ளது; தாய்மொழிவழிக் கல்வி பற்றிய பரிந்துரையை புறக்கணித்து, 'கல்வி வியாபாரத்திற்கு' உதவும், 'புதிய கல்வி கொள்கை' எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் சூழலில்.;(http://www.thehindu.com/news/cities/bangalore/draft-national-education-policy-rekindles-debate-on-mother-tongue/article8930355.ece), ஆங்கிலவழிக்கல்வி காரணமாக, தமிழக சட்டசபையில், திராவிட கட்சிகளின் இளம் எம்.எல்.ஏக்கள் பேசும் விவாதங்களில், ஆங்கிலம் செல்வாக்கு செலுத்தி வரும் சூழலில். (http://timesofindia.indiatimes.com/city/chennai/They-are-Tamil-leaders-but-inside-assembly-debate-in-English/articleshow/53692205.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section )

எனவே தமிழ்நாட்டில் தமிழ்வழி அரசு பள்ளிகளுக்கு 'புத்துயிர்' கொடுக்க, நம்மால் இயன்ற உதவிகளை புரிந்து கொண்டே;

'சுயலாப கள்வர்களாக', அந்த இரண்டு நோய்களையும் பர‌ப்பி வரும் சமூக நோய்க் கிருமிகளையும், ஊழலில் ஈடுபடும் 'துணிச்சலின்றி', அக்கிருமிகளின் 'ஊழல்வழி' பணத்தில் மயங்கி, ஊக்குவிக்கும் 'கோழை யோக்கியர்களையும்', நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றுவதன் மூலமே, தமிழ்வழிக்கல்வி (எனவே தமிழின்) மீட்சிக்கும், மீட்சிக்கு துணை புரியும் சமூக சூழல் மாற்றத்திற்கும், நாம் பங்களிப்பு வழங்க முடியும்.

குறிப்பு :

‘ "பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர்."  -  முதல்வர் ஜெயலலிதா ; 
http://www.dinamalar.com/news_detail.asp?id=1545868

முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கு காரணமானவர்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான,  'தகுதி, திறமைகள்' இல்லாத சிற்றின மனிதர்களே ஆவர். அத்தகையோரை அனுமதிக்கும், கட்சியும் சரி, குடும்பமும் சரி, அவர்களின் 'சுயரூபம்' வெளிப்படும் வாய்ப்பு வரும்போது, அதனால் விளையும் சீர்குலைவிலிருந்து தப்ப முடியாது. ‘ (http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_20.html )

“ இந்த ஜனங்க இப்படிதான். தீயவங்க பின்னாடி போகும். கெட்டவங்களை ஜெயிக்க வைக்கும். அபத்தங்களைக் கொண்டாடும். அதுக்காக நாமளும் அப்படியே பதவிக்கும் பவுசுக்கும் அடிமையாக முடியுமா... இதுக்கு பதிலா.... பெத்த அம்மாவையும் கட்ன பொண்டாட்டியையும் விலைக்கு விக்கலாம்..!”
‘ஜோக்கர்’-  திரைப்பட வசனம்.

http://tamil.filmibeat.com/reviews/joker-review-041680.html

No comments:

Post a Comment