தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(9)
தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், ‘அரசியல் நீக்க’,
சமூக கேடான போக்கை, அரங்கேற்றியவர் காந்தியா?
சுயலாப நோக்கின்றி,நேர்மையான
சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள்
எல்லாம், மீட்சிக்கான 'சரியான' திறவுகோலை தேடி வரும் காலக்கட்டம் இதுவாகும்.
அம்முயற்சிக்கு,
1925 முதல் 1944 வரை வெளிவந்துள்ள, ஈ.வெ.ராவின் 'குடி அரசு' இதழ்களை படிப்பது பலன்கள்
தரும் என்பது, எனது அனுபவமாகும்.
தாம் கண்டிக்கும் தலைவரின்
'நிறைகளை' குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் கண்டிக்கிறேன்? என்பதையும்,
தாம் பாராட்டும் தலைவரின்
'குறைகளை' குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் பாராட்டுகிறேன்? என்பதையும்,
‘பாராட்டு இரைச்சல்களையும்',
'கண்டிக்கும் இரைச்சல்களையும்' அகற்ற துணை
புரியும்.
பொது வாழ்வில் தலைவராக
வெளிப்பட்டுள்ள ஒரு தனி மனிதரை, நாம் 'தனி மனித' அளவில் எடை போட்டு பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும்,
சமூக அக்கறையில் பொது அரங்கில் பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், வேறுபாடுகள் இருந்தன;
1944இல் 'திராவிடர் கழகம்' உருவானது வரை.
தி.க உருவான பின்னும்,
1967 வரை, தி.க மற்றும் தி.மு.க விற்கு இடையிலான மோதல்களில் மட்டுமே, ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக'
அப்போக்கிலிருந்து தடம் புரண்டு பயணித்தார். அந்த காலக்கட்டத்தில், ஈ.வெ.ரா எழுதி வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம், 'தடம் புரளாமல்', அறிவுபூர்வமாக, சமூக அக்கறையுடன் இருந்தன, என்பதும் எனது அறிதலாகும். எனவே ஈ.வெ.ராவின் பேச்சுக்களுக்கும், எழுத்துக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளும் ஆய்விற்குரியவையாகும்.
ஆனால் தி.மு.கவோ, தி.க,
காங்கிரஸ் உள்ளிட்டு தாம் அரசியலில் எதிர்த்த தலைவர்கள் மீது, உணர்ச்சிபூர்வமாகவும்,
ஆபாசமாகவும் வசைபாடும் போக்கை, அரங்கேற்றினர். இன்று அந்த போக்கில், திராவிட, தேசிய,
இந்துத்வா உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் 'அந்நோயில்' சிக்கி, பலர் பயணித்து வருவதானது,
ஊடகங்களில் வெளிப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம் உருவான, போராட்டங்களை முன்னெடுப்பதிலும், அனைத்து கட்சிகளும் 'ஒரே போக்கில்' பயணிக்கின்றன.
தி.மு.க வை தவிர்த்து,
ஈ.வெ.ரா,
பொது வாழ்வில் தலைவராக
வெளிப்பட்டுள்ள ஒரு தனி மனிதரை, 'தனி மனித'
அளவில் எடை போட்டு பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், சமூக அக்கறையில் பொது அரங்கில்
பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், வேறுபாடுகளை கடை பிடித்த போக்கை, விளங்கிக்கொள்ள;
காந்தி தொடர்பாக, அவர்
கடைபிடித்த அணுகுமுறையை ஆராய்வது பலனளிக்கும்.
அந்த நோக்கில்,
இந்திய விடுதலைக்கு
முன் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களில், காந்தியின் நிலைப்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து,
ஈ.வெ.ரா எழுதியுள்ள கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்தவையாகும்.
கோட்சே காந்தியை கொலை செய்தது தவறு என்பது என் கருத்தாகும். காலனி ராணுவத்தினர் பயன்படுத்திய இத்தாலிய துப்பாக்கியானது (Italian Beretta pistol), காந்தியை கொல்ல, கோட்சே கைக்கு எப்படி வந்தது? என்ற கேள்வியை சுப்பிரமணிய சுவாமி எழுப்பியுள்ள்ளார்.(http://zeenews.india.com/news/india/subramanian-swamy-seeks-to-reopen-mahatma-gandhi-assassination-case-smells-conspiracy_1822169.html) எனவே இந்திரா கொலை, ராஜிவ் கொலை போன்றே, காந்தி கொலையிலும், 'மர்ம முடிச்சுகள்' இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அதே நேரத்தில், காந்திக்கு எதிராக, கோட்சே முன்வைத்த கருத்துக்களை திறந்த மனதுடன் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும், என்பது என் விருப்பமாகும். காந்தி தொடர்பாக, கோட்சேயும், ஈ.வெ.ராவும் முன்வைத்த விமர்சனங்களை ஒப்பிட்டு, அவற்றிற்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதும், எனது விருப்பமாகும். அந்த ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு, என்னால் இயன்ற உதவிகளையும் செய்ய இயலும்.

மாணவர்களை வேலை நிறுத்தத்தில்
ஈடுபடத் தூண்டி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதில் முடிந்த காந்தியின் 'சத்தியாகிரக
போராட்டங்களை';
காந்தி துவங்குவதற்கு முன், எச்சரித்தவர் தாகூர்.(Tagore to Gandhi, March 1921, Gandhi, Collected Works,XX (Navajivan Trust, Ahmedabad, 1966), 539, 540-1.)
தாகூரின் எச்சரிக்கையை
புறக்கணித்து, காந்தி 'சத்தியாகிரகம்' போராட்டத்தினை துவக்கி;
மேற்சொன்ன விளைவுகளில்
முடிந்த பின், இந்தியாவிலேயே துணிச்சலாக காந்தியைக் கடுமையாகக் கண்டித்தவர் ஈ.வெ.ரா; ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது, காந்தியின் மது விலக்கு பிரச்சாரத்தில், இந்தியாவிலேயே 'தனித்துவமாக', தமது குடும்பத்தினருடன் பங்கேற்றதை, காந்தி பாராட்டி எழுதியிருந்த பின்னணியிலும்.
அதே காந்தி, மரணமடைந்த
போது, அவரை வானளாவப் புகழ்ந்தவர் ஈ.வெ.ரா.
அதன்பின், காமராஜரை முதல்வராக ஆதரித்த காலத்தில்,
காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல் ஆகிய போராட்டங்களின் அவசியத்தைப்
பிரச்சாரம் செய்தவரும் ஈ.வெ.ரா.
மேற்போக்கான அணுகுமுறையில்
முரண்பாடுகளாக தோன்றும், மேற்குறிப்பிட்ட ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை, மேலே குறிப்பிட்ட;
'தனி மனித' அளவிலும்,
பொது அரங்கில் சமூக அளவிலும், அணுகுவதற்குள்ள வேறுபாடுகள் பற்றிய புரிதல் மூலமே, விளங்கிக்
கொள்ள முடியும். 1944க்கு முந்தைய தமிழ்நாட்டின் போக்கு பற்றி அறிந்தவர்களிடம், அப்புரிதல்
இருக்க வாய்ப்புண்டு.
ஈ.வெ.ராவின் 'பார்ப்பன
எதிர்ப்பானது', அந்த வகையில் புரிந்து கொள்ளப்பட்டதால் தான்;
ஈ.வெ.ராவிற்கு மிகவும்
நெருக்கமான நண்பராக ராஜாஜி இருந்தார்; 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை, பிராமணர்களில்
பலர் ஆதரித்தனர்; ஈ.வெ.ராவின் 'தனி திராவிட நாடு' கோரிக்கையை, இந்திய விடுதலைக்கு முன்,
ராஜாஜியும், பல பிராமணர்களும் ஆதரித்தனர். தமக்கு நெருக்கமான பிராமண நண்பர்களின் தோட்டங்களில், தமது கட்சியின் பயிற்சி வகுப்புகளை ஈ.வெ.ரா நடத்தினார். தமக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவிற்கு, பிராமண மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். தமது வாகனம் பழுது பார்க்க, பிராமணரின் தொழிற்கூடங்களை அணுகினார்.( மத்திய அரசில் தமிழ்நாட்டு பிராமணர்களின்
செல்வாக்கு குறைந்ததற்கும், 'காவிரி, முல்லை பெரியாறு' உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு கேடான,
பல தீங்குகள் அரங்கேறியதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற ஆய்வை தொடங்க வேண்டிய நேரமும்
வந்து விட்டது.)
'பார்ப்பன எதிர்ப்பு' தொடர்பான, மேலே குறிப்பிட்ட புரிதலானது, எப்போது தடம் புரண்டு, இன்று பெரியார் கட்சிகளிலும், பிராமண அமைப்புகளிலும், 'பொதுவான இலக்குகளில்' ஓன்று சேராமல், 'உணர்ச்சிபூர்வ பரஸ்பர பகைமைப் போக்கில்', இரு சாராரும் பயணிக்க நேரிட்டது? அதே நேரத்தில், இரு சாராரிலும் பலர், 'விடுதலைப் புலிகள்' ஆதரவு போக்கில் மட்டும், 'ஒன்றாக' பயணித்தது எப்படி? அந்த போக்கில் யார், யாரிடம் ஏமாந்தார்கள்? 'முள்ளி வாய்க்கால்' அழிவிற்கு இட்டுச் சென்ற போக்குகளில், அந்த போக்கும் இடம் பெற்றதா? இன்று (எனது பார்வையில்) தமிழ்நாட்டில் மாணவர்கள்/'ஒழுங்காக' படித்த இளைஞர்களின் சுயநலமற்ற ஆதரவானது, 'இந்துத்வா' கட்சிகளுக்கு அதிகரித்து வருவதற்கும், 'பெரியார்' கட்சிகளுக்கு 'அதிவேகமாக' குறைந்து வருவதற்குமான காரணங்களிலும், அந்த போக்கும் இடம் பெறுகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1944இல் திராவிடர் கழகம் உருவாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் அரங்கேறிய பின், திராவிட கட்சிகளில்,
கட்சித் தலைவரின் நிலைப்பாடுகள் சமூகத்திற்கு கேடாக முடியும், என்று பகிரங்கமாக கருத்து
தெரிவிக்கும் நபர், அந்த கட்சியில் நீடிக்க முடியுமா?
பொதுநல/சுயநல நோக்கிலோ, நீடிக்க முடியாமல் வெளியேறியவர்கள் எல்லாம், பொது
வாழ்வில் பல குட்டிக்கரணங்கள் போட்டு, 'செல்வம், செல்வாக்குடன்' பிழைத்து வருவதையும்
பார்த்து வருகிறோம்.
அவ்வாறு குட்டிக்கரணங்கள்
போடாமல், வாழ்ந்தால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு விடையாக வாழ்ந்து மறைந்தவர்
வ.உ.சி.
தமிழ்நாட்டில் பொதுவாழ்வில்,
அந்த சமூக கேடான போக்கை அரங்கேற்றியவர் காந்தியா?
என்ற ஆய்வுக்கு, வ.உ.சி,
பாரதி உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட தகவல்களை, தேட வேண்டிய நேரம் வந்து விட்டது.
“1857
விடுதலைப் போர் தோல்வியடைந்த பின், வெள்ளைக்காரர்கள் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது.
பல வருடங்கள் வரை, 'இந்திய தேசிய' அரசியல் அடையாளத்தோடு தொடர்புடைய காங்கிரஸ் மாநாட்டில், முதலாவதாக,
'ராஜ விசுவாச' தீர்மானங்கள் நிறைவேற, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளம் தோன்றி வளர்ந்தது.
தமிழ்நாட்டு 'இந்துத்வா' கட்சிகளில், எச்.ராஜா போன்றவர்கள், பெரியார் ஈ.வெ.ராவை 'தேச
துரோகி' என்று அழைத்த அளவுகோலின்படி, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளமானது, 'தேச துரோக'மாக
முளைவிட்டு வளர்ந்து, பின் எப்போது, அந்த பலகீனப் போக்கிலிருந்து விடுபட்டு, 'தேசப்
பற்றாக' மாறியது? என்ற கேள்வி
எழுகிறது.
அந்த
போக்கில், தமிழ்நாட்டில் காந்தி, ராஜாஜி போன்றோர் ஊக்குவித்த, அரசியல் நீக்க (depoliticize) உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாச போதையானது,
எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தி, வ.உ.சி போன்ற
இணையற்ற தியாகிகள், மனம் வெதும்பி, 'இந்திய' விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி,
பெரியார் ஈ.வெ.ராவை பகிரங்கமாக பாராட்டும் போக்கில் வெளிப்பட்டது?”
வ.உ.சி சிறையில் இருந்த போது;
அவரை சந்தித்தவர்கள்
யார்? வ.உ.சியின் குடும்பத்திற்கு உதவியவர்கள் யார்? வ.உ.சி சிறைவாசத்திலிருந்து விடுதலையான
போது, சிறை வாசலில் வரவேற்க வந்தவர்கள் யார்? பின் அவர் சாகும் வரை வறுமையில் உழன்றபோது,
மற்ற காங்கிரஸ்காரர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களில் யார்? யார்? வ.உ.சிக்கு உதவினார்கள்? வ.உ.சிக்கு உதவ, தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கொடுத்த நிதியை, இந்தியா திரும்பியபின், காந்தி மறந்தது சரியா? எவ்வளவு காலம் கழித்து, வ.உ.சி நினைவூட்டி மடல் எழுதி, அதை காந்தியிடம் எப்படி பெற்றார்? வ.உ.சி மறைந்த போது, தமிழ்நாட்டு காங்கிரஸ் அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற மறுத்ததற்கு
காரணம் என்ன?
காந்தியின் நிலைப்பாட்டை வ.உ.சி எதிர்க்காமல், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல, காந்தி 'ரசிகராக' பயணித்து,
காந்தி புகழ் பாடியிருந்தால், வ.உ.சி மேற்கண்ட கொடுமைகளை சந்தித்திருப்பாரா?
என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் காந்தியின் 'செல்வாக்கு' ஏற்படுத்திய,
'சமூக கேடுகள்' யாவை? என்ற ஆராய்ச்சியை தொடங்குவதை, தாமதப்படுத்தலாகுமா?
மகாத்மா காந்தி தமிழகத்துக்கு
20 முறை வந்து சென்றிருக்கிறார்; 1896 தொடங்கி 1946 வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு முறையும் பல்வேறு இடங்களில் பேசியிருக்கிறார்.
பல நபர்களைச் சந்தித்திருக்கிறார். காந்தி தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து
ஒரு புத்தகம் அ.இராமசாமி எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி” ஆகும்.
அது தவிர, காந்தியின் தொகுப்பு நூல் (Collected Works) வரிசையும், வ.உ.சி. பாரதி, திரு.வி.க
, நாமக்கல் கவிஞர் உள்ளிட்டு, அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த காங்கிரஸ்காரர்களின் சுயசரிதைகளும்,
அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பலர் எழுதியுள்ள நூல்களும், மேற்குறிப்பிட்ட
ஆய்வுக்கு உதவக் கூடியவையாகும்.
“இந்திய விடுதலைக்கு
முன், தமிழ்நாட்டில், காங்கிரஸ் தலைவர்களின் 'யோக்கியதை' எவ்வாறு இருந்தது? என்ற ஆய்வுக்கு
உதவும் சான்று வருமாறு.
"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது. தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்" திரு.வி.க 18 - 4 - 1928; தமிழ்ச்சோலை
1890 முதல் 1936 வரை , வ.உ.சியை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் காங்கிரசில் காந்தி, ராஜாஜி போன்ற தனிநபர்களின் 'சுயநல அரசியல்' சலனம் தோற்றுவித்த, வ.உ.சி போன்றவர்களின் துயர வாழ்விற்கு காரணமான, 'தவறான' 'டென்சன்கள்' (Tension) ஆனவை, 1944இல் 'திராவிடர் கழகம்' தோன்றிய பின், புதிதாக அரங்கேறியிருந்த திராவிட இயக்கம் நோக்கி, சமூக தொத்து நோய் செயல்நுட்பத்தில், பகுதியாக (partly) இடம்பெயர்ந்து, உரம் பெற்று வளர்ந்து, அதில் விதை கொண்டிருந்த 'தனிநபர் விசுவாசம்' ஊக்கம் பெற்று, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுடன், காங்கிரசில் 'சிற்றினமாக' கருதப்பட்டவர்கள், திராவிட கட்டத்தில் (Phase) தீயினமாக வலிமை பெற்று வளர்ந்தார்களா? என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. May 6, 2015; 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460';

வ.உ.சி மறைவிற்கு,
தமிழ்நாட்டு காங்கிரசில், இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை, என்ற தகவலை ம.பொ.சி, தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த அளவுக்கு,
காந்தியின் தனிநபர் 'உணர்ச்சிபூர்வ' செல்வாக்கானது, பொதுவாழ்வு சீர்கேட்டிற்கு துணையாக இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.”
( ‘தமிழர்களின் அடையாளச்
சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம்
நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம் ?; http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html
) ஈ.வெ.ரா தொடர்பான எனது
விமர்சனங்களை புறக்கணித்து பயணிக்கும், 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம், 'காந்தி
ரசிகர்களை'ப் போன்ற, 'பெரியார் ரசிகர்களா’? 'பெரியார் ரசிகர்' என்ற சமூக போக்கின் வளர்ச்சியின்
ஊடே, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் அரவணைப்பில், 'பெரியார் சமூக கிருமிகள்'
வளர்ந்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவானது எந்தெந்த வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வேட்டைக்காடாக இருந்தது என்பது பற்றிய தகவல்களும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கசியத் தொடங்கியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) அந்த உளவு வலைப்பின்னலின் 'ஆதரவில்', 'காந்தி பிம்பம்' வளர்க்கப்பட்டதா? அந்த 'காந்தி பிம்பத்தை' தகர்க்காமல், தலைவர்கள் எல்லாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம் உருவான போராட்டங்களிலிருந்து, நாடு 'விடுதலை' ஆக முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
காந்தி தொடர்பான அமைப்புகளுக்கும். அமெரிக்க உளவு அமைப்பான சி.அய்.ஏக்கும் உள்ள தொடர்பை பற்றிய, 1980களில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முயற்சியில் நடந்த, விசாரணை கமிசன் அறிக்கையில் உள்ள அரசியல் புழுதிகளை நீக்கி, நம்பத்தகுந்த தடயங்கள் சிக்கினவா? (The Kudal Commission, headed by Purushottam Das Kudal, was set up in February 1982 to probe into the working of three Gandhian institutions - the Gandhi Smarak Nidhi, the Gandhi Peace Foundation (GPF) and the Sarva Seva Sangh - and the Association of Voluntary Agencies for Rural Development (AVARD); http://indiatoday.intoday.in/story/kundal-commission-is-a-witch-hunt-ordered-because-we-backed-jps-pre-emergency-stir/1/348884.html ) இன்று காந்தியின் வழிபாட்டுப் போக்கினை ஊக்குவிப்பதில், அந்நிய சக்திகளின் சுயநலன்கள் அடங்கியுள்ளதா? 'பெரியார் சமூக கிருமிகளும்', அந்த சூழ்ச்சி வலையில், பங்கேற்று, 'பலன் பெற்று' பயணிக்கிறார்களா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு காந்தி 'இறக்குமதி' செய்து, வெள்ளையர்களுடன் 'சமரசப் போக்கில்' முன்னெடுத்த, 'இந்திய விடுதலை போராட்ட' போக்கை எதிர்த்து, 'சமரசமற்ற' போக்கை வலியுறுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். காங்கிரசில் காந்தியின் எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவராக, வாக்கெடுப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை, செயல்பட விடாமல் தடைகள் ஏற்படுத்தி, மனம் வெறுத்து, போஸ் காங்கிரசிலிருந்து வெளியேற காரணமானவர் காந்தி. அகில இந்திய அரசியலில், காந்தியின் செல்வாக்கு, தோற்றுவித்த 'அரசியல் நீக்கமும்', அதன் அடிப்படையில் வளர்ந்த 'வாரிசு அரசியலும்', ஆய்விற்குரியதாகும்.( http://biggchat.com/congress-president-and-boses-conflict-with-gandhi/ )
தென்னாப்பிரிக்காவில் முஸ்லீம் வர்த்தகர்களின் வக்கீலாக பணியாற்றிய காந்தி, அங்கு நடந்த 'போயர் போரில்'(Boer War) காயமடைந்த பிரிட்டன் ராணுவ வீரர்களைக் காப்பாற்ற, 'ஆம்புலன்ஸ்' தொண்டு செய்தார். (http://www.gandhitopia.org/profiles/blogs/mahatma-gandhi-s-role-in-1899-anglo-boer-war-very-few-people-know ) அங்கு கறுப்பினத்தவருக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் பற்றியும். 'காந்தி பிம்பத்திற்கு' எதிராகவும் நூல்கள் வெளிவந்துள்ளன.(http://www.bbc.com/news/world-asia-india-34265882 & https://en.wikipedia.org/wiki/Gandhi_Behind_the_Mask_of_Divinity ) ஆப்பிரிக்காவில் காந்தி சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. (https://www.theguardian.com/world/2016/sep/22/petition-calls-for-gandhi-statue-to-be-removed-from-ghana-university ) 'காந்தி பிம்பம்' உருவாகத் தொடங்கிய போதே, 1930 களிலேயே, எதிர்ப்பு குரல் எழுப்பிய ஈ.வெ.ரா, இன்று 'பெரியார் பிம்பத்தில்' சிறைபட்டுள்ளாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'பெரியார் பிம்பம்' உள்ளிட்டு, இன்றுள்ள பெரிய/சிறிய தலைவர்களின் 'பிம்பங்களின்', மற்றும் அரசியல் நீக்கம் மூலம் அரங்கேறியுள்ள 'வாரிசு அரசியலின்', 'மூல பலம்' 'காந்தி பிம்பம்' என்பதும் எனது ஆய்வு முடிவாகும். பொது வாழ்வில், சமூகத்திற்கு கேடான (தமக்கும், தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பை 'உறுதி' செய்து கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தி வரும்; 'பெரியார் சமூக கிருமிகளும்' கடைபிடித்து வரும்;) 'இரட்டை வேட' போக்குகளுக்கு, 'காந்தி பிம்பம்' கேடயமாக பயன்பட்டு வருகிறது என்பதும், அந்த 'காந்தி பிம்பத்தை' தகர்ப்பதானது, பொது மக்களின் சமூக மனவியலில் (Social Psychology) மீட்சிக்கான மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். ஒழுக்கக்கேடான வழிகளில் ஈட்டிய பணத்தில், மேற்குறிப்பிட்ட 'பிம்பங்களை' வளர்க்கும் போக்கும், முடிவுக்கு வரும். மக்களின் கவனத்தை 'பிம்பங்கள்' நோக்கி திருப்பி, 'அந்த இருளில்', கிரானைட், தாது/ஆற்று மணல், கொள்ளை, ஆந்திராவில் செம்மரக் கடத்தல் உள்ளிட்ட இன்னும் பல ஒழுக்கக்கேடான வழிகளில் (இவை பற்றியெல்லாம், 'காந்தி பிம்பம்' ஆதரவாளர்கள் கவலைப் பட்டார்களா?) தமிழ்நாடும், தமிழர்களும் சீரழிவதும் முடிவுக்கு வரும்.
தமிழ்நாட்டில் 'கட்சி சாரா' 'அறிவு ஜீவிகளின்' அமைப்புகள் நடத்தும் மாதாந்திர ஆய்வு கூட்டங்களில், நிகழ்காலத்தில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், தமிழையும் சீரழித்து வரும் சமூக இயக்கவியல் (Social Dynamics) பற்றியும், மீட்சிக்கான வாய்ப்புகள் பற்றியும், இது வரை விவாதிக்கப்பட்டதா? அல்லது 'நமக்கேன் வம்பு? என்ற சமூக பாதுகாப்பு வளையத்தில் – Social Safety Zone -(அரசியல் கொள்ளையர்கள்/அவர்களுக்கு நெருக்கமான வியாபாரக் கொள்ளையர்கள்-இன் நேரடி/மறைமுக 'நண்பர்களாக'), 'அறிவு சுய இன்பம்' (intellectual masturbation) பெறும் நோக்கில், அந்த அமைப்புகள் எல்லாம், காந்தி, 'பெரியார்' போன்ற இன்னும் பல 'பிம்பங்களை' வளர்த்து, செயல்படுகின்றனவா? 'அறிவு ஜீவிகளில்’ பெரும்பாலோரின், 'சுயநல சமரச போக்கே', எந்த சமூகத்தையும் 'ஊழல் பெருச்சாளிகளின்' ஆதிக்கத்தில் சிக்க வைக்கும், என்பதே என் கருத்தாகும்.

எல்லாம்,'உணர்ச்சிபூர்வ வழிபாட்டு' போக்குகளை ஒதுக்கி வைத்து;
'தனி மனித' அளவிலும்,
பொது அரங்கில் சமூக அளவிலும், ஒரு தலைவரை அணுகுவதற்குள்ள வேறுபாடுகள் பற்றிய புரிதலோடு;
தமிழ்நாட்டில் பொதுவாழ்வில்,
உணர்ச்சிகர வழிபாட்டு போக்கில், அரசியல் நீக்கம் உருவாகியுள்ள, ‘அந்த’ சமூக கேடான போக்கை அரங்கேற்றியவர் காந்தியா?
என்ற ஆராய்ச்சியில்
ஈடுபட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் செயல்படுவதே;
ஆக்கபூர்வமான திசையில்
நம்மை பயணிக்க வைக்கும். திரு.வி.க-வின்
1928 அறைகூவலை ஏற்று, 2016இல் 'நாம் தான் "தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்."
No comments:
Post a Comment