சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (4);
நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா?
'பெரியார்'
கொள்கை ஆதரவாளனாக, சுயலாப நோக்கின்றி பயணித்து வந்து, பின் 'இசையின் இயற்பியல்' (Physics of
Music) குவியத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி, உலக அளவில் முக்கியத்துவம்
பெற தொடங்கியுள்ள கண்டுபிடிப்புகளுடன் பயணித்து(http://drvee.in/),
அதன் மூலம் 'செல்வம் செல்வாக்கு' பெறும் குவியத்தை இயன்றவரை தவிர்த்து;
தமிழ்,
தமிழர், தமிழ்நாடு சந்தித்து வரும் மரண அபாயங்களை எல்லாம், எனது ஆய்வுகளின் அடிப்படையில்
உணர்ந்து;
கடந்த
சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, ஈ.வெ.ரா
அவர்கள் தொடர்பாக வெளியாகி வரும் எனது பதிவுகள் எல்லாம்,
'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் (சில விதி விலக்குகள்
தவிர்த்து) மெளனத்தையே 'எதிர்வினையாக' சந்தித்து வந்துள்ளன.
எனது
பதிவுகளில் ஒன்றினை, எனது அனுமதியுடன் 'துக்ளக்'
இதழில் வெளியிட்டு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்னை 'துக்ளக்' இதழில் அறிமுகப்படுத்தி கட்டுரையினை வெளியிட்டுள்ளார்.
அதன்பின்
அந்த மெளனமானது உடைந்து, எதிர்வினைகள் தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன். அந்த வகையில் வெளிவந்துள்ள
கீழ்வரும் பின்னூட்டமானது(Feedback), இந்த பதிவிற்கு அடிப்படையானது.
“தங்கள்
மாற்றம் தாய்மொழி, பராம்பரியம், மரபுகளைக் காப்பாற்றும் மீட்டெடுக்கும் பழைமைப்
போக்கில் உள்ளது (இதைப் பற்றியும் பெரியார் 'மலத்தில் அரிசி பொறுக்காதீர்கள்' என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதை நீங்கள் இப்போது
ஏற்க மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.)”
“அவரவருக்குச்
சரியென்று படுவதைச் செய்வதில் அவரவருக்கு உரிமையுள்ளது. அதே சமயம் பெரியாரால்,
திராவிட இயக்கத்தால் வந்த எழுச்சியின் பல
சரியான போக்குகளைக் கொச்சைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் உடைத்து சிதைக்கவும் நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா
என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். “
மேலே
குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்க, ஏற்கனவே வெளிவந்துள்ள கீழ்வரும் பகுதிகள் போதுமானவை என்று கருதுகிறேன். கூடுதலான எதிர்வினை பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன். அது போலவே, தமிழ்நாட்டை ஊழல் சூறையாடி, அந்த ஊழல் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்திற்கு காரணமான 'திராவிட' ஊழல் ஆதிக்கவாதிகளுக்கு, 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், 'ஆயுதமாக' பயன்பட்டு வருகிறார்களா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.
‘தமிழில்
'பிராமணரும்', 'திராவிடரும்'; காலனிய சூழ்ச்சியா? 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில்
சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html
‘திருச்சி
பெரியார் மையம் செயல்பட்ட காலத்தில், (இன்று லண்டனில் வாழும்) தொல்காப்பியன் 'கூரை ஏறி கோழி
பிடிக்க முடியாமல்' என்ற தலைப்பில் விமர்சனம்
வைத்த போது, அது தவறு என்று
வாதிட்டவன் நான். பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசை இயற்பில்' (Physics of Music) ஆய்வினை மேற்கொண்ட பின், அந்த வாதமானது தவறு
என்பதை விளங்கிக் கொண்டேன்.
'வந்தது
வளர்த்து, வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்;அரங்கேற்று காதை 65) தெரியாமல், சிலப்பதிகாரத்தையும் இழித்து பேசி(http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html
);
'இயல்பாக
பழுக்க வைக்காமல், ஆர்வத்தில் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' என்னும் தடியால் காயை அடித்ததால், அது
கன்றிப்போய் வெம்பி பழமாக மாறி';
தமிழ்வழிக்
கல்வி சீரழிவாக, தன்மானம் இழந்து வாலாட்டி பிழைக்கும் நாய்களாக தமிழர்களில் பலர் வளர, அவ்வாறு
ஈட்டிய செல்வத்தில் மயங்கி அவர்களின் உற்றமும், சுற்றமும் சீரழிய, ஊழல் பெருகி கிரானைட்,
தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் கொள்ளை போக;
தமிழ்நாடு
நாறுகிறதா?
சுப்பிரமணிய
சுவாமியின் 'பொர்க்கி' தமிழர் பேச்சுக்கு, தமிழ்நாட்டில் வெளிப்பட்ட எதிர்ப்புக் குரல்களில், இடம் பெறாத கட்சிகளின்
தலைவர்கள் எல்லாம், 'மடியில்' கனமுள்ளவர்களா, அந்த நாற்றத்தின் வெளிப்பாடாக?
(சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' (porki) 'சிக்னல்'; http://tamilsdirection.blogspot.sg/2017/02/porki.html) சுப்பிரமணிய
சுவாமியின் 'பொர்க்கி' வரையரையை கணக்கில் கொண்டால்;
'பொர்க்கி'
இந்தியர்களை வளர்த்து, இந்தியாவில் காலூன்றிய காலனி ஆட்சியில் உருவான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும், அந்த 'பொர்க்கி' நோய் ஊடுருவி, உண்மையான
தேசபக்தர்களுடன் மோதலுக்குள்ளாகி, பயணித்த சூழலில்;
தமிழ்நாட்டிலும் காங்கிரசில்
முளை விட்டு, வ.உ.சி
போன்ற காந்தியின் எதிர்ப்பாளர்களை காவு வாங்கி, ஆனாலும்
நீதிக்கட்சி தலைவர்களின் நேர்மையான சமூக சூழலில்;
வளர
சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'பொது வாழ்வு வியாபார
சமூக செயல்நுட்பமானது', 1944-இல் காலனிய சூழ்ச்சியில்
நீதிக்கட்சித் தலைவர்களுக்கும், ஈ.வெ.ராவிற்கும்
இருந்த தொடர்பைத் துண்டித்து;
ஈ.வெ.ராவின் 'இணையற்ற'
தியாகத்தால் உருவாகியிருந்த, சமூக ஆற்றலை 'தீனியாக்கி'
வளர்ந்த ஆபத்தில்;
தமக்கும்
தமது குடும்பத்திற்கும் 'வெளியில் தெரியாத சுயநல நீதி', மற்ற தமிழர்களை ஏமாற்ற
'தமிழ் இன உணர்வு முகமூடி',
என்று பயணித்து வரும் தலைவர்கள் எல்லாம் சருகாகி, உதிராமல், தமிழ்நாடு மீள முடியுமா? திராவிட
ஆட்சியில் அநியாயமாக உயிரிழந்த, அண்ணாமலைப்பல்கலைக்கழக
மாணவர் உதயகுமாரின் தந்தையாக தம்மை கருதிய எவரும், சில பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்டு, தி.மு.க
தலைவரின் துதிபாடிகளாக வாழ்ந்திருப்பார்களா? (https://timesofindia.indiatimes.com/city/chennai/behind-the-bull-story-depoliticisation-of-campuses/articleshow/56673942.cms
)
குறிப்பு
:
‘வே.ஆனைமுத்து சிந்தனைகள் தொகுப்பு 1’ பக்கம்: 36-37இல், ‘பார்ப்பனரும் தி.கவும்' என்ற
தலைப்பில், இராயப்பேட்டை லட்சுமிபுரத்தில், 5.1.1953 சொற்பொழிவு,'விடுதலை' 8.1.1953இல் வெளிவந்துள்ளது போன்ற
சான்றுகளின் அடிப்படையில்;
1950களின் பிற்பகுதிகளிலிருந்து
'பெரியார்'
ஈ.வெ.ரா உடல்
அளவிலும் மனதளவிலும் (Physically &
mentally dependent) பிறர்
சார்ந்தே நடமாட வேண்டிய சார்பானது (dependence), அதிகரித்த போக்கில், தனது இயல்பான அறிவு
கூர்மைப் போக்கில் மங்கத் தொடங்கி, வெளிப்படுத்திய பேச்சுக்கள், எழுத்துகள் காரணமாகவும், அவர் மறைவிற்குப் பின்,
தி.மு.க தலைவர்களுடன்
நெருக்கமாகி, 'தி.மு.க
வின் சுயலாப பார்ப்பன எதிர்ப்பு நோயில்’ (‘பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு’;
http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html
)
படிப்படியாக சிக்கி, பயணித்த போக்கிலும், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயானது ,( http://tamilsdirection.blogspot.sg/2015/04/2.html
), இன்று 'பெரியார்' இயக்கத்தையும், கொள்கையையுமே சுவடின்றி அழிக்கும் அபாயத்தில் நிகழ்காலம் உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.’ (‘மார்க்சியமும் பார்ப்பனீயமும் (2); வெம்பி
பழமாக மாறி, தமிழ்நாடு நாறுகிறதா?’;https://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2017-10-05T08:09:00-07:00&max-results=7
)
‘பிரபாகரனின்
ரசிகர்களாக இல்லாமல், தமிழ் ஈழ பொதுவாழ்வு வியாபாரிகளாக
இல்லாமல், முள்ளிவாய்க்கால்
அழிவை, அறிவுபூர்வமாக விமர்சிக்க ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு: http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html
மேலே
குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, கீழ்வருபவையும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உரியவை ஆகும்.
உலகில்
ஐ.நா அமைதிப்படைக்காக சென்ற,
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்ற இராணுவத்தினரில் சிலர் கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு, கண்டுபிடிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், உள்நாட்டு பிரச்சினைகளில் காவல் துறைக் கட்டுப்பாட்டில் சிக்கிய பகுதிகளிலும் இந்த சிக்கல் உண்டு.
நக்சலைட் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், நகசலைட்டுகளிலிருந்தும்,
காவல் துறையினரிடமிருந்தும், இரண்டு பக்கங்களிலும், இது போன்ற தவறுகள்
நடந்து வருகின்றன. மனித மிருகங்கள் இராணுவத்திலும்,
காவல் துறையிலும், நக்சலைட்டுகள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள புரட்சியாளர்களிடமும் உண்டு. இராணுவத்திலும்,
காவல் துறையிலும், நக்சலைட்டுகள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள புரட்சியாளர்களிடமும், வெளிப்பட்ட பிரமிப்பூட்டும்
மனிதாபிமான செயல்கள் எல்லாம், எதிரெதிர் முகாம்களில் இருட்டடிப்புகளுக்கும் உள்ளாகின்றன. இலங்கையில் இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய ஒருவர் என்னிடம் தெரிவித்த தகவல்: பிரபாகரனை ஒரு முறை இந்திய
அமைதிப்படை பிடித்து, பின் டெல்லியிலிருந்து வந்த
உத்திரவின்படி விடுவிக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்தது. பாதிப்புகளின் பெரும்பகுதியை கட்சித் தலைவரும், தொண்டர்களும் சந்திக்க, பொது மக்களுக்கு ஊறு
மட்டுமின்றி, இராணுவம், காவல்துறை கட்டுப்பாட்டிற்கு உள்ளாகி சீரழியும் ஆபத்துகளுமின்றி, உலகில் கட்சி நடத்திய ஒரே தலைவர் 'பெரியார்'
ஈ.வெ.ரா ஆவார்.
அவருக்கு
நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை
வரவேற்றிருந்தாலும்;
‘இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார்
இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
ஆக
பயணித்தார்; முந்தைய பதிவில் விளக்கியபடி, 'அடையாள அழிப்புக்கு' வழி வகுத்து. தமிழ்நாடு
திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழியவும், அந்த கொள்ளையர்களின் ஆதரவில்
பிரபாகரன் சிக்கி, முள்ளி வாய்க்கால் அழிவில் முடியவும்.
அந்த
சீரழிவுப் போக்கில் தமிழ்நாடு சிக்கியதால், எனது ஆய்வுகள் மூலம்,
தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள்
தாமதமாகி வருகின்றன;
என்பதையும்
பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாத, தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
'பெரியார்'
ஈ.வெ.ராவின் 'தமிழர்
அடையாள அழிப்பு'
சமூக செயல்நுட்பமானது, அவரின் கொள்கைகளையே, 'பொதுவாழ்வு வியாபாரிகளின்' மூலதனமாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர
வழி வகுத்ததா? என்பதும், ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்கு ஏற்ற
பொருளாகும். தமக்கு பிடித்த தலைவர்களின் 'பிம்பங்களின்' வழிபாட்டுப் போதைகளில் பயணிப்பவர்களின் செல்வாக்கிலிருந்து, தமிழ்நாடு 'விடுதலை' ஆகாமல், இது போன்ற அறிவுபூர்வ
ஆய்வுகளை ஊக்குவிக்கும் சமூக சூழலானது, தமிழ்நாட்டில்
உருவாக வாய்ப்பில்லை, என்பதும் எனது அனுபவமாகும்.
தனிமனித
அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், ஈ.வெ.ரா
அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, ஈ.வெ.ராவிற்கு
நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட 'அடையாள
அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும்
எனது ஆய்வு முடிவாகும்.
1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும். உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் கருதுகிறேன். அது போன்ற மீட்சி முயற்சியை, இனியும் தாமதித்தால், தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடு மாறும் வீழ்ச்சியானது, தடுக்க முடியாததாகி விடும். (http://tamilsdirection.blogspot.sg/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html )
1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும். உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் கருதுகிறேன். அது போன்ற மீட்சி முயற்சியை, இனியும் தாமதித்தால், தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடு மாறும் வீழ்ச்சியானது, தடுக்க முடியாததாகி விடும். (http://tamilsdirection.blogspot.sg/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html )
'ஈ.வெ.ராவின் பொதுத்
தொண்டருக்கான இலக்கணத்தின்படி வாழ்பவர்களை பெரும்பான்மையாக கொண்ட இயக்கமே இனி தமிழ்நாட்டில் எடுபடும்.'
என்பதும்; (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html
)
தமிழ்வழிக்
கல்வி மற்றும் தமிழின் மீட்பை முன்னிறுத்தி;
ஊடுருவி
சீர்குலைக்க முயன்ற சக்திகளை மீறி, உலகமே வியக்கும் வகையில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வெளிப்படுத்திய சிக்னலாக' (signal) கருதி ; (http://tamilsdirection.blogspot.sg/2017/01/1938-1965.html
)
பொதுச்
சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் சேதம்
விளைவிக்காத, ஆனால் கைதாகும் போது எதிர்வழக்காடாமல், அதிகப்பட்ச தண்டனை
வழங்குமாறு கோரி, அரசையே அதிர வைத்த, ஈ.வெ.ராவின் போராட்ட
வடிவங்களை, ஆர்.எஸ்.எஸ்
போன்ற இயக்கங்கள் பரீசிலித்து, இந்த காலக்கட்டதிற்கு ஏற்ற
வகையில் வளர்த்து எடுத்து பயணித்தால், 'பெரியார் கட்சிகள்' சருகாகி மறைவதும் நிச்சயமாகிவிடும்' என்பதும்;
எனது
ஆய்வு முடிவாகும். (‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்'
ஈ.வெ.ராவா? அந்த
சீரழிவுப் போக்கில், தமிழும்,
தமிழர்களும், தமிழ்நாடும் பெற
வேண்டிய, ஆய்வுகளின் பலன்கள் தாமதமாகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_10.html
)
‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html & https://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2018-04-17T17:37:00-07:00&max-results=7&start=11&by-date=false )
தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்சி, கல்வி மற்றும் அரசு/தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாரபட்ச போக்குகளை எதிர்த்தல், போன்றவற்றில் காரியம் சாதிக்க கனிந்து வரும் ஒற்றுமையை, கடந்த கால அடிமைகளாக வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்கள் எல்லாம், கெடுக்க அனுமதிக்கக்கூடாது; என்ற திசையில் நான் பயணிக்கிறேன்.
எனக்கு வரும் பின்னூட்டங்களில் வெளிப்படும் கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொண்டே, துக்ளக்கில் எனது கட்டுரைத் தொடர் வெளிவரும்; என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.
தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்சி, கல்வி மற்றும் அரசு/தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாரபட்ச போக்குகளை எதிர்த்தல், போன்றவற்றில் காரியம் சாதிக்க கனிந்து வரும் ஒற்றுமையை, கடந்த கால அடிமைகளாக வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்கள் எல்லாம், கெடுக்க அனுமதிக்கக்கூடாது; என்ற திசையில் நான் பயணிக்கிறேன்.
எனக்கு வரும் பின்னூட்டங்களில் வெளிப்படும் கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொண்டே, துக்ளக்கில் எனது கட்டுரைத் தொடர் வெளிவரும்; என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.
எனது
ஆய்வு முடிவுகள் மீது உடைமையுணர்வு (possessiveness) இன்றி, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், புதிய சான்றுகள் அடிப்படையில், அம்முடிவுகளை திருத்தி, நெறிப்படுத்தி கொள்வதில் தயக்கம் காட்டியதில்லை. அவ்வாறு திருத்திக் கொள்வதை வெளிப்படுத்தி கொண்டு, அதற்கு காரணமானவர்களுக்கும், எனது மாணவர்களாயிருந்தாலும், பகிரங்கமாக
நன்றி தெரிவிப்பதும் அதில் அடக்கம். 'பெரியாரிய - மார்க்சிய' புலமையாளனாக பயணித்த போதும், இன்று உலகின் கவனத்தை ஈர்க்கத்தொடங்கிய இசைத் தகவல் தொழில்நுட்ப புலமையாளனாக (Music Information
Technologist) பயணிக்கும்
போதும், வெளிப்பட்ட எனது ஆய்வுகளின் வெற்றியின்
இரகசியமும் அதுவேயாகும்
No comments:
Post a Comment