Thursday, December 29, 2016


இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்;

 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?

 
தமிழ்மொழியின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவில் ஊழல் வகித்து வரும் பங்கினை அறியும் 'பகுத்தறிவின்றி', பெரியார் கொள்கையாளர்களில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? அல்லது அந்த சீரழிவில் 'திரிந்த பகுத்தறிவுடனும்', 'திரிந்த சமூக நீதியுடனும்', 'திரிந்த மனித சமூக கிருமிகளாக' யார்? யார்? பயணிக்கிறார்கள்? என்ற ஆய்வினை தொடங்க வேண்டிய அவசியத்தை, ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் (?), மரணமும், இறுதிச் சடங்கும், அதன்பின் தொடரும் நிகழ்ச்சிகளும் உணர்த்துகின்றன.

ஊழல் கல்வி வியாபாரத்தின் ஆதிக்கத்தில்;

தமிழ்நாட்டில் குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி, ஆங்கிலவழிக் கல்வி மூலம் குழந்தைகளின் மூளையில் புலன் திறன் வளர்ச்சி(cognitive skills development) குன்றி;( ‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’; http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

ஆங்கிலத்திலும் புலமையின்றி, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத;( ‘தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி: தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

மேற்கத்திய மோகத்தில், ‘புலன் தாக மிருகப் போக்கில்’, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை லாப நட்ட கணக்கில் சிக்க வைத்து, பணம் சம்பாதிக்க, எவர் காலிலும் விழ போட்டி போடும், தரகு, ஊழல், திருட்டு மூலம் செல்வந்தராகி வரும், 'பெரிய மனிதர்களின்' ஆதிக்கத்தில், அவர்களை நத்தி பிழைக்க,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, கம்யூனிஸ்ட், இந்துத்வா' உள்ளிட்ட எந்த கொள்கையையும் வெட்கமின்றி பயன்படுத்தும், 'சிற்றின'த்தின் 'அதிவேக வளர்ச்சியின்' மூலம், தமிழ் வேரழிந்த, தமிங்கிலீசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி வருகிறது;

என்பதை எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்கள் அறிவார்கள்.

'மகாத்மா' காந்தி தனது பேச்சுக்கள் எழுத்துக்கள் மூலம் எவ்வாறு 'மகாத்மா' என்ற பிம்பத்தை வளர்த்து, அந்த பிம்பத்தைப் பாதிக்கும் உண்மைகளை தனது சுயசரிதையில் தவிர்த்து, பகத்சிங், சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட சுயலாப நோக்கற்ற இந்திய விடுதலை வீரர்களை 'காவு' கொடுத்து பயணித்தார், என்பது தொடர்பாக, உரிய சான்றுகளுடன் பல படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. (http://thevoiceofnation.com/personalities/mahatma-gandhi-was-fond-of-meat-daru-and-sex/ )

'பணக்கார' காமக் களியாட்டங்களுடன் தான் வாழ்ந்த வாழ்வை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தி, பொதுவாழ்வில் நுழைந்த பின், காந்தி உள்ளிட்டு எந்த தலைவரும் அனுபவித்தராத  சமூக‌ வாழ்வு நிலையான‌ (Social Status) சாதாரண மனிதராக‌,  வாழ்வில், போக்குவரத்து உள்ளிட்டு விரும்பி, துயரங்களை அனுபவித்து வாழ்ந்து, அடித்தட்டு மக்களின் சமூக நிலையுடன் 'ஒட்டி' பயணித்த ஒரே தலைவர், நானறிந்தது வரை, ஈ.வெ.ரா அவர்கள் மட்டுமே. (ஈ.வெ.ராவிற்கு தெரிவிக்காமல், திரு.கி.வீரமணி அவர்கள், திருச்சி பெரியார் மாளிகையில் 'ஏர் கண்டிசன்' (Air-Condition) பொருத்தியிருந்தார். தனது மறைவிற்கு முன், கடைசியாக திருச்சி பெரியார் மாளிகைக்கு வந்த ஈ.வெ.ரா, அது கண்டு கோபமுற்று, “பாவிகளா, இயற்கையாக நல்ல காற்று வெளியில் இருந்து வந்து கொண்டிருந்ததே. அதைக் கெடுத்து விட்டீர்களே." என்று புலவர் இமயவரம்பனை கண்டித்திருக்கிறார். இது மறைந்த புலவர் இமயவரம்பன் என்னிடம் தெரிவித்த தகவலாகும்.)

அவ்வாறு வாழ்ந்து, ஈடு இணையற்ற முறையில், சமூக மாற்றத்திற்கான சமூக ஆற்றலை சேகரித்து வந்த அவர், 1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறியதானது, அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக முடிந்தது, என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். அவ்வாறு அவர் வெளியேற காரணமான  பிராமண, மற்றும் திரு.வி.க உள்ளிட்ட பிராமணரல்லாத தலைவர்களே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சீர்கேட்டிற்கான , 'அழிவுபூர்வ மடை மாற்றத்திற்கு' பங்களிப்பு வழங்கியுள்ளார்கள், என்பதும் எனது ஆய்வாகும்.(‘ சமூக தள விளைவு (social polarization) பற்றிய சான்றுகள்? தமிழும், தமிழர்களும்,சீரழிய, 'பாதகமான சமூக மடை மாற்றம்'   காரணமா?; http://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

ஈ.வெ.ரா அவர்கள் உள்ளிட்டு, அவர் வழியில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம்;

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிக்கவே, அழிவுபூர்வ மடை மாற்றம் சூழ்ச்சியில் சிக்கியதை;

ஆக்கபூர்வ மடை மாற்றம் மூலம் மீட்க முடியும், என்ற நம்பிக்கையுடன்;

நம்ப முடியாத இழப்புகளை விரும்பி ஏற்று, நான் பயணித்து வருகிறேன்; 'பிம்ப சிறையில்' சிக்குவதை கவ‌னமுடன் தவிர்த்து; என்னை புகழ்ந்து என்னுடன் நெருக்கமாக முயன்ற/முயலும் ‘சமூக கிருமிகளை’ அடையாளம் கண்டு ஒதுக்கி.

தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, 'அழிவுபூர்வ மடைமாற்ற' சூழ்ச்சியில் சிக்கி, ஈ.வெ.ரா அவர்கள் பயணித்திருந்தாலும், உடல் அளவிலும், மனதளவிலும் சுயசார்பில் (Physically & Mentally Independent) வாழ்ந்தது வரையிலும், அவர் பின்பற்றிய கீழ்வரும் அணுகுமுறையை, எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பின்பற்றி வருவதால், மேலே குறிப்பிட்ட இலக்கில்,  நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். 

“தமது ஆரியர் - திராவிடர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல், மனித சமத்துவத்தையும், நாத்தீகத்தையும் ஏற்றுக் கொண்ட, ஆந்திராவில் வாழ்ந்த 'காந்தீய நாத்தீகரான' பிராமணர் கோராவுடன் ஈ.வெ.ரா அவர்கள் சேர்ந்து செயல்பட்டதும் மேற்குறிப்பிட்ட அணுகுமுறையில் தான். அதே போல. 1938 இல் ஈ.வெ.ரா தலைமை தாங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சில பிராமணர்கள் பங்கேற்றதும் அந்த வகையில் தான். இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினை பகிரங்கமாக கோரி பெற்றதும், அந்த அணுகுமுறையில் தான்.”(‘ சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்; 'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html)
என்ற அதே அணுகுமுறையில், இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பார், என்று நான் கருதுவதற்கான காரணங்களை, இந்த பதிவில் முன் வைக்கிறேன்.

"இரத்தக்கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும், அவற்றிற்கு ஆதாரமான சாஸ்திர புராண குப்பைகளை கொளுத்தி விடவும், அதற்கு சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்; பிறகு வரட்டும் நம்மிடம். இந்த சாதி வித்தியாசம் காரணமாகத் தானே நாம் ஆரிய்த்தை எதிர்க்க நேரிட்டிருக்கிறது." ( 29 09 1948 சிதம்பரம் சொற்பொழிவு, விடுதலை 05 - 10 - 1948 )
ஆக ஈ.வெ.ரா அவர்கள் பிராமணர்களுடன் சேர்ந்து செயல்பட மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

1.    "பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்"

2.    "சாஸ்திர புராண குப்பைகளை கொளுத்தி விடவும்"

3.    "கடவுளைத் தகர்க்கவும்"

"பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்" என்று ஈ.வெ.ரா வலியுறுத்திய திசையில் ஆர்.எஸ்.எஸ் பயணிக்கத் தொடங்கியுள்ளது, என்பது தொடர்பான தகவல்களை கீழே பார்ப்போம்.

கிறித்துவ, முஸ்லீம் போன்றவற்றிற்குரிய மதம்(Religion)  என்ற பொருளில், 'இந்து' மதம் என்று காலனிய நுழைவிற்குப்பின் அரங்கேறியதில் உள்ள தவறுகள் பற்றியும்; சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளில் சாதிகளுக்கிடையிலான திருமணங்களை ஊக்குவித்தல் பற்றிய விவாதமும்; மேற்கத்திய வலையில் சிக்காமல், இந்தியாவை நேசிக்கும் இந்தியர்களை குறிக்க 'இந்துத்வா' என்ற சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய விவாதமும்;  வேறு சரியான சொல் பற்றிய தேடலும்,  தொடங்கிவிட்டதை , ஆர்.எஸ்.எஸ் இணைய தளம், ராஜீவ்மல்கோத்ரா இணைய தளம், உள்ளிட்ட கீழ்வரும் இணைய தளங்களில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.


இவை போல, ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும்,  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தி, பெரியார் கட்சிகளின் இணையதளங்களில் வெளிவந்திருந்தால், தெரிவிக்கவும்.”; (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

"சாஸ்திர புராண குப்பைகளை கொளுத்தி விடவும்" என்று ஈ.வெ.ரா வலியுறுத்தியதானது, தமது அறிவு வரை எல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவை;

 என்பதற்கான விளக்கம் கீழே.
‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html
 
"கடவுளைத் தகர்க்கவும்" என்று ஈ.வெ.ரா வலியுறுத்தியது தொடர்பாக:
‘Experiencing God, the Infinite,through Resonance’; https://veepandi.blogspot.com/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html  இக்கட்டுரை தொடர்பான அறிவுபூர்வ விமர்சனத்தை, ஆங்கில அறிவுள்ள 'பெரியார்' கொள்கையாளர்களிடமிருந்து வரவேற்கிறேன். Email:pannpandi@yahoo.co.in) 

கால தேச வர்த்தமான மாற்றங்களில், தமது கொள்கைகளும் காலாவதியாக வாய்ப்புண்டு, என்று கணித்தவரும் ஈ.வெ.ரா ஆவார்.

வாய்ப்புள்ள பிரச்சினைகளில், ஒத்த கருத்துள்ள, சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள் எல்லாம், தத்தம் கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு, ஈ.வெ.ரா அவர்கள் சிறந்த முன்னுதாரணமும் ஆவார். அந்த வகையில், 'அழிவுபூர்வ மடை மாற்ற' சூழ்ச்சியில் சிக்கியுள்ள‌, தமிழ்நாட்டை, ஆக்கபூர்வ மடை மாற்றம் மூலம் மீட்கும் முயற்சியில், எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் முயன்று வருகிறேன்.
 
ஈ.வெ.ரா அவர்கள் 'அழிவுபூர்வ மடை மாற்ற' சூழ்ச்சியில் சிக்கி, தமிழ்நாடு பயணித்தன் சீரழிவானது, முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையிலும், மரணத்திலும், இறுதி சடங்கிலும் வெளிப்பட்டது. 

ஒரு மாநில முதல்வர் என்பவர் உடல் அளவிலும், மனதளவிலும் முதல்வருக்கான பொறுப்புகளை நிறைவேற்ற தகுதியானவர் என்று ஆளுநர் திருப்தியில் உள்ளவரை தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வரை, அரசின் சுகாதாரத்துறை தலைமையின் கீழ் உள்ள குழுவின் மேற்பார்வையில், ஆளுநர் கவனத்தில், சிகிச்சை வழங்கப்படுவதன் மூலமே, மேற்குறிப்பிட்ட அரசியல் சட்ட கடமையை, ஆளுநர் செய்ய முடியும். ஆனால் அதை கடைபிடிக்காமலும், ஜெயலலிதாவின் உறவினர்களை பார்க்கக்கூட அனுமதிக்காமலும், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும், மரணமும், இறுதி சடங்கும், கீழ்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. 

'சம்பிரதாயங்களுக்கும், சட்டத்திற்கும், அல்லது ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு'க்கும், அப்பாற்பட்டு, அதிகார வழிபாட்டு போக்கில், சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்த திசையில், தமிழ்நாடு பயணிக்கிறதா? அது திராவிட அரசியலின் சாதனையா?  அது எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்ற கேள்விகளை, எவ்வளவு காலம் தான் இருட்டில் வைக்க முடியும்? ( ‘- விஜயகாந்த் வழியில் சசிகலா ‍ நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?’; https://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html )
 
தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, காலனிய சூழ்ச்சியில் 'ரேஸ்' என்ற பொருளில் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' தோன்றி, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களுடன், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவைகளை வெறுத்து, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக பயணித்ததே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சீர்கேட்டிற்கான , 'அழிவுபூர்வ மடை மாற்றத்திற்கு' காரணமா? என்ற ஆய்வின் முக்கியத்துவத்தை, எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈ.வெ.ரா தலைமையில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் தன்மையை;

 ஈ.வெ.ராவை அவமானப்படுத்தி, அண்ணாதுரையும் ராஜாஜியும் கூட்டு சேர்ந்து தூண்டிய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெளிப்பட்ட, பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்களும் சேதம் விளைவிக்கும் 'காந்தி பாணி' போக்கை, 'திராவிட பாணியில்' அரங்கேற்றிய, சமூக ஆற்றலின் தன்மையுடன் ஒப்பிட வேண்டிய அவசியமும் வந்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அந்த போக்கில் 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, பின் 1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகி, பயணித்த போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க பயணித்த சமூக போக்கில்;

'இந்தியர்' என்ற அடையாளமானது எந்த அளவுக்கு வலிமை பெற்றது?

அடையாளக் குழப்பங்களுடன், சுயநல ஊழல் அரசியலுக்கு பயன்பட்டு, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளமானது, எந்த அள‌வுக்கு, குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்களிடம், பலகீனமாகியுள்ளது? அவ்வாறு பலகீனமாக, 'பெரியார்' கொள்கையாளர்கள் எவ்வளவு பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்?

என்பதைப் பொறுத்தே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியல் போக்கானது முடிவாகும். அந்த நோக்கில், கீழுள்ள கருத்தானது, ஆழ்ந்த ஆய்விற்கும், விவாதத்திற்கும் உரியதாகும். 

‘தமிழக அரசியலில் அதிமுக பெரும் திருப்பத்தைக் கொண்டு வந்த கட்சி. நாத்திகத்தை நாகரீகமாகக்கிய,தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையை குலைத்த தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.’ ; 'துக்ளக்' ஆசிரியராக எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் வெளிவந்துள்ள துக்ளக் தலையங்கத்தில்;

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிகளின் போது, 'திராவிடர்/திராவிட' பிடியிலிருந்து தமிழ்நாடானது 'விடுதலை' பெறும் போக்கானது வெளிப்பட்டுள்ளதை, தி.க. தலைவர் கி.வீரமணியும், கீழ்வரும் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர் "ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் திராவிட இயக்கக் கொள்கையின் அடிப்படையிலோ, அறிஞர் அண்ணாவின் சிந்தனை அடிப்படையிலோ ஆட்சி நடத்தினார் என்று சொல்ல முடியாது. சீர்திருத்தவாதி என்றிருந்த அந்த நிறமும் முற்றிலும் சிதிலம் அடைந்தது. மூகாம்பிகைப் பக்தராக தன்னைக் காட்டிக் கொண்டார். அதன் எதிரொலி கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. "ராஜாஜியின் சொல் கேட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்தேன், சங்கராச்சாரியார் ஆலோசனையின் அடிப்படையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினேன்" என்று சொல்லும் அளவுக்கு திராவிட இயக்கக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்தார்...........எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கப் பட்ட செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு முதல்அமைச்சராகி - கட்சியின் - ஆட்சியின் சர்வாதிகாரியாக நிலை பெற்று, திராவிட இயக்கத்தின் அடிப்படை முற்போக்கு - பகுத்தறிவுச் சிந்தனைகளை எல்லாம் சீர்குலைத்ததில் அவருக்குத்தான் ‘முதல் பரிசு!" ‍- கி.வீரமணி; https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-kamal-try-help-bjp-get-tamilnadu-power-accusing-veeramani-297214.html

'திராவிட இயக்கத்தின் அடிப்படை முற்போக்கு - பகுத்தறிவுச் சிந்தனைகளை எல்லாம் சீர்குலைத்த' ஜெயலலிதாவை, 'சமூக நீதி காத்த வீராங்கனை'  என்று கி.வீரமணி பாராட்டியும் இருக்கிறார். அவருக்கு 'மெய்காப்பாளராக'  இருந்த சசிகலாவையும் 'பெரியார் தந்த புத்தியில்' பாராட்டியிருக்கிறார். இவையெல்லாம் அறிவுபூர்வமாக விவாதிக்கப்படுவதை, எவ்வளவு காலம் தான், தாமதிக்க முடியும்?

1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா 'திராவிடர் கழகம்' தொடங்கி, பின் அவரையே ஓரங்கட்டி, 1949இல் தி.மு.க உருவாகி, 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் போக்கு அரங்கேறி, 1967இல் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டை சீரழித்ததற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றல்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூலம் செயல்பட்டு, இன்று திருப்புமுனை கட்டத்தில் உள்ள நிலையில்;

காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எல்லாம், 'திராவிட பொதுவாழ்வு சுயநல குழு அரசியல் நோயில்' சிக்கி, தமிழ்நாட்டை மீட்கும் வாய்ப்பை தவற விடும் போக்கில் பயணிக்கின்றன. 

சுயநல சக்திகள் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளிலும், தேசியக் கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சூழலில்;

கட்சி வேறுபாடுகளை மறந்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமே;

தமிழ்நாட்டில் ஆக்கபூர்வ சமூக தள விளைவினை (Social Polarization) ஏற்படுத்த முடியும்.

அந்த நோக்கில், திராவிட கட்சிகளிலும், 'இந்துத்வா' கட்சிகளிலும் உள்ள உணர்ச்சிபூர்வ கூறுகளை எதிர்த்து வந்துள்ளேன். (‘'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் (morons) யார்?யார்?; https://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனது பதிவுகளில் முன்வைத்துள்ள கருத்துக்களை,  “திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கிய சமூக பொறுப்புடனும் விவாதிக்க வேண்டுகிறேன். எதிராக வெளிப்படும் சான்றுகளை, உண்மையை அறிய விரும்பும் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறேன்; உரிய சான்றுகளின் அடிப்படைகளில், எனது கருத்துக்களில் திருத்தங்களை ஈ.வெ.ரா வழியில், கூச்சமின்றி வெளியிட்டு. 

அதற்கு மாறாக;

"தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html );
என்று என்னை இழிவுபடுத்த நடக்கும் முயற்சிகள் மூலம், எனது ஆய்வுகளை 'அறிவுபூர்வ' விவாதத்திற்குட்படுத்தாமல், 'உணர்ச்சிபூர்வ' இருட்டில் தள்ளுவதால், இழப்பு, எனக்கா? அல்லது 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கிய முயற்சிகளுக்கா? அவரவர் அறிவு, அனுபவம், மனசாட்சி மூலம் விடைகள் பெறலாம். 'அகத்தில் சாதி வெறியுடனும்' (தமது சாதி தலைவர்களுடனும், அமைப்புகளுடனும், இதழ்களுடனும் -  தமது முற்போக்கு வட்டத்திற்கு தெரியாமல் -  உறவு கொண்டு), புறத்தில் 'சாதி ஒழிப்பு வீரர்களாகவும்', வலம் வரும் 'இரட்டைவேட' போக்கில், இது வரை வாழ வில்லை; இனியும் வாழப் போவதில்லை. தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) மரணப்பயணத்திலிருந்து மீட்கவும், தமிழரின் தொழில் நுட்பங்கள், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை மேற்கத்திய வலையில் சிக்காமல் நவீனப்படுத்தி (modernization without westernization)  மீட்கவும், என்னால் இயன்றவரை முயற்சித்து வருகிறேன். அம்முயற்சிகள் வெற்றிபெற, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேருவது பலன் தரும் என்று கருதினால், அதை பகிரங்கமாக அறிவித்து சேருவேன். தலைவர்களையும், கொள்கைகளையும் வழிபடாமல், அறிவு நேர்மையுடனும் திறந்த மனதுடனும் விமர்சித்து, சுயலாப நோக்கின்றி, தேர்தல் அரசியலில் சிக்காமல், பயணிக்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தால், தெரிவிக்கவும். பரிசீலிக்கிறேன்.” (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

2016 சனவரியில் நான் வெளிப்படுத்திய மேலே குறிப்பிட்ட கருத்து தொடர்பாக; 

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் எதுவும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இனியும் தொடர்பு கொண்டாலும், அந்த அழைப்பை பரிசீலிப்பேன். தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மீட்சிக்காகவும், உணர்ச்சிபூர்வ அணுகுமுறையை விடுத்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்கவும், எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நம்பத்தகுந்த இயக்கம், ஆர்.எஸ்.எஸ், அல்லது வேறு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு இயக்கமாக இருந்தாலும், பகிரங்கமாக அறிவித்து சேருவேன். 

உடல் அளவிலும், மனதளவிலும் சுயசார்பில் (Physically & Mentally Independent) வாழ்ந்தது வரையிலும்;

பொது வாழ்வில், சுயலாப நோக்கற்று, 'பிம்ப' சிறையில் (image prison) சிக்காமல் பயணித்த ஈ.வெ.ரா அவர்களை முன்மாதிரியாக கொண்டு பயணிப்பதால்;

ஈ.வெ.ரா அவர்கள் உள்ளிட்டு, அவர் வழியில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம்;

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிக்கவே, அழிவுபூர்வ மடை மாற்றம் சூழ்ச்சியில் சிக்கியதை;

ஆக்கபூர்வ மடை மாற்றம் மூலம் மீட்க முடியும், என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.

படிக்கவும்:

‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8); தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html
 
Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
 
“ஈ.வெ.ரா அவர்கள் சாகும் வரை பொது சிவில் சட்ட கோரிக்கையை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார்.. அந்த 'பெரியார் தந்த புத்தியை' இழந்து, இன்று தி.க அதை எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது.

ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால்; 

குன்றக்குடி அடிகளாரை பாராட்டியது போல, ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை (Bold mine)  பாராட்டி, வரவேற்று; 

சமத்துவமின்மையையும் (inequality), பாரபட்சத்தையும் (discrimination), 'செயல்பூர்வமாக' எதிர்க்க, வாய்ப்புள்ளவற்றில், இன்றும்(present)  நாளையும்(future) ஆர்.எஸ்.எஸுடன்   கூட்டாக செயல்பட்டு, அக்கருத்து 'வெறும் பேச்சா? அல்லது செயல்பூர்வமா?' என்று சமூகவியல் சோதனை (sociological experiment)  மூலம் நிரூபிப்பார் என்பது என் கருத்தாகும். 

" Without mentioning the debate on intolerance,  Bhagwat emphasised that truth has no place for inequality and discrimination. “Accept all the diversities and look at others with affection in all circumstances. Consider others in your place. They all our ours. The society gets its power from the social unity. A person behaves when he realises that all are equal,” Bhagwat said.
He referred to Ambedkar to insist that political unity cannot be achieved sans economic and social unity. “The Constitution can’t protect us unless we stand united leaving aside social inequality. Equality will be established only when everyone resolves that he won’t exploit anyone,” Bhagwat said echoing Ambedkar’s opinion.": http://www.newindianexpress.com/nation/Embrace-People-of-Different-Beliefs-Ideologies-Bhagwat/2016/01/04/article3210181.ece” ; ‘ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (3); ஈ.வெ.ரா வளர்த்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 'பெரியார்' சமூக கிருமிகள் செயல்நுட்பத்தில் எவ்வாறு சிக்கியது?’; http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none.html)

2 comments:

  1. // http://www.organiser.org/
    http://rajivmalhotra.com/ // இந்த தளங்களில் உள்ள சாதிஎதிர்ப்புக் கட்டுரைகளை குறிப்பிட்டு சுட்டிக்காட்டினால் படிக்க விரும்புபவர்கள் படிக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. http://www.quora.com/What-is-Rashtriya-Swayamsevak-Sanghs-RSS-take-on-casteism-How-is-RSS-trying-to-root-out-the-problem-of-casteism

      Delete