இடையிடு 2: Interlude 2:
சமூக தள விளைவு (social polarization) பற்றிய சான்றுகள்?
தமிழும், தமிழர்களும்,சீரழிய, 'பாதகமான சமூக மடை மாற்றம்' காரணமா?
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே'
உள்ளிட்ட பல, இன்னும் மோசமான வாசகங்கள், பெரியாராலும், அவரது இன்றைய கட்சிகளில் உள்ளவர்களாலும், தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோருக்கு கல்வி மறுப்பு காரணங்களாக,
பிரச்சாரம் செய்யப்பட்டுகிறது.
நிகழ்காலத்தில் காணும் அவலங்களையும், அநீதிகளையும்
கண்டு உணர்ச்சிபூர்வமாக கோபமுற்று, அந்த உணர்ச்சியையே உந்துதலாகக் கொண்டு, அதைக் களைய
செயல்படுபவர்கள், ஒரு சமூகத்தில் இருப்பதானது,
அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும். அம்முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சந்திக்கும் இழப்புகள் எல்லாம், அந்த சமூகத்தின் மீட்சிக்கும்,வளர்ச்சிக்கும் மூலதனங்களாக வெளிப்படும்.
சமூக அளவில் வெளிப்படும் அந்த உணர்ச்சிபூர்வ போக்குகளை,
தமது பொதுவாழ்வு கொள்ளைக்கு பயன்படுத்தும், 'வாழ்வியல் புத்திசாலி'க் கொள்ளையர்களும் ஒரு சமூகத்தில்
இருப்பார்கள். அந்த அவலங்களின், அநீதிகளின்
மூலங்கள் (sources) தொடர்பாக, அறிவுபூர்வமாக
அணுகாமல், உணர்ச்சிபூர்வ போக்கில் அணுகுவது, அந்த கொள்ளையர்களின் வளர்ச்சிக்கே,- சமூக வளர்ச்சிக்கான ஆற்றலை, ஆக்கபூர்வ பாதையிலிருந்து, அழிவுபூர்வ பாதைக்கு,
திசை திருப்பும் 'சமூக மடை மாற்றத்திற்கே'
- துணை புரியும். சமூக அவலங்களுக்கும், அநீதிகளுக்கும் காரணமானவர்களுடன் 'கூட்டு சேர்ந்து', சமூக
உணர்ச்சிபூர்வ போக்கினை திரையாக பயன்படுத்தி, அக்கூட்டுறவை 'வெற்றிகரமாக' மறைத்து, அக்கொள்ளையர்கள்
வளர்வார்கள். அத்தகைய சமூகக் கொள்ளையர்கள் ஈட்டும் செல்வம், செல்வாக்கு எல்லாம், அந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கும், சமூக மக்களிடையே அவர்கள் வழியில், 'சமூகக் கள்வர்கள்' பிரிவினரின் வளர்ச்சிக்கும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கும் வழிவகுக்கும்.
( https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )
( https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )
அத்துடன் தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.
உணர்ச்சிபூர்வ போக்கிலிருந்து விடுபட்டு, திறந்த
மனதுடனும், அறிவுநேர்மையுடனும், உலக அரங்கில் வெளிப்படும் ஆய்வுகளையும், சான்றுகளையும்
விழிப்புடன் அடையாளம் கண்டு, தவறுகளை 'ஈகோ' (Ego) சிக்கலின்றி, பகிரங்கமாக அறிவித்து, தம்மைத் திருத்தி,
பயணிப்பவர்களே, அந்த கொள்ளையர்களை வீழ்த்தி, அந்த
அவலங்களின், அநீதிகளின் பிடியிருந்து சமூகத்தை மீட்க முடியும். அதில் தவறினால், 'பாதகமான சமூக மடை மாற்றமானது', 'நச்சு' விதைகளின் விவசாயத்திற்கு உதவி, 'சமூக நச்சு அறுவடை'யில் முடியும்.
( https://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html)
( https://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html)
வடமொழி நூல்களில் உள்ளதாக, பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் தொண்டர்கள், சுட்டிக்காட்டுபவைகள்,
காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு
ஆதாரங்கள் உண்டா? உண்மையில் காலனி ஆட்சிக்கு முன், கல்வியில் பிராமணர்களை விட அதிகம்
கல்வியறிவுள்ளவர்களாக 'கம்மாளர்' எனப்படும் இன்றைய 'விஸ்வகர்மா' சாதியினர் இருந்தனர்
என்பதை, கல்வெட்டுகள் உள்ளிட்ட பல சான்றுகள் உணர்த்துகின்றன.இசையில் உயர்வு, தாழ்வு,
தீண்டாமை போன்றவை 'காலனியத்தின் நன்கொடையா?' என்பது பற்றிய எனது ஆய்வுகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.
( 'இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?
காலனியத்தின் செல்வாக்கில் இந்தியா சிக்கியபின்
தான், வெள்ளைக்காரர்கள் இந்தியர்களையும், இந்தியர்களின் மொழி , பாரம்பரியம், பண்பாடு
போன்றவற்றை கீழாக மதித்து, ஒப்பீடு நோயை (comparison disease) உருவாக்கி, வளர்த்தார்கள்; இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கும் 'கிளப்' (club) உள்ளிட்ட 'தீண்டாமை'களை அறிமுகப்படுத்தினார்கள். காலனிய ஆட்சியில் ஆங்கிலத்தை
மேன்மையாகக் கருதிய கல்வியில் முதல் வரிசையில் பலன் பெற்ற பிராமணர்கள், காலனி வேலைவாய்ப்புகளிலும்
முதல் வரிசையில் பலன் பெற்றார்கள். அந்த ஒப்பீடு நோயில் பிராமணர்கள் சிக்கி, படிப்படியாக
அடுத்தடுத்த சாதிகளிலும் அது பரவ, சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை தமிழ்நாட்டில்
அரங்கேறின. தமிழ்நாட்டில் காலனி ஆட்சிக்கு முன், இவை இருந்ததற்கு எனது தேடலில், இதுவரை,
சான்றுகள் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில், தனித்துவமாக, 'கிறித்துவ' மதமாற்றமானது, மேற்கத்திய மோகத்தில், ஒப்பீடு நோயை வளர்த்து, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை இழிவாகக் கருதிய 'திராவிட' பங்களிப்பை வினையூக்கியாகக்(catalyst) கொண்டு, பாதகமான 'சமூக மடை மாற்றத்திற்கு' பங்களிப்பு வழங்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944இல் தி.க தோன்றுவதற்கு முன், தாழ்த்தப்பட்ட சாதியில்
பிறந்த அயோத்திதாச பண்டிதர் புலமையாளராக, திரு.வி.கவுடன் சமூக அளவில் சமமான நண்பராக
இருந்த தகவல், திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவர் சாமியராகி, வ.உ.சியால் பெரிதும் மதிக்கப்பெற்ற தகவல் வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றில்
உள்ளது. காலனி ஆட்சியை எதிர்த்து, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்கள் போராடியபோது, அவருக்கு
தளபதியாக (இன்று அடையாளப்படுத்தப்படும்) 'தலித்' செயல்பட்டது தொடர்பான சான்று வருமாறு:
(Dalit) Sundaralinga
Kudumbanar was a general of the Veerapandiya Kattabomman
in his fight against the British East India Company.
'பள்ளர்', 'சக்கிலியர்' உள்ளிட்ட சாதியினர், காலனி
ஆட்சிக்கும் முன், சமூகத்தில் உயர்நிலையில் இருந்தது தொடர்பான சான்றுகளும் வெளிவரத்
தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் வரலாற்றில் எந்தெந்த கட்டத்தில் எந்தெந்த மக்கள் குழுவினர்,
'வெற்றி' பெற்ற அரசர்களால் அடிமைகளாக்கப்பட்டனர்? அந்த 'அடிமைகள்', காலனியம் அறிமுகப்படுத்திய 'ஒப்பீடு நோய்' மூலமாக, 'தீண்டாமையில்' சிக்கினார்களா? குறிப்பாக சங்ககாலத்தில் விவசாயம்,
மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து தொழில்களில் ஈடுபட்டவர்களும் 'பறை' வகை இசைக்கருவிகளை
இசைத்து, 'பறையராக' (குடிமகனுக்கான-citizen- இலக்கணத்தின்படி; புறநானூறு 335:7-8) வாழ்ந்துள்ள சான்றுகளின் அடிப்படையில், 'பறை', 'பறையர்'எந்த காலக்கட்டதில்
'தீண்டாமைக்கு' உள்ளாகினர்? என்பதும் ஆய்விற்குரியதாகும். சமூக ஒப்பீடு (social comparison) நோயில் சிக்கிய மனிதர்களிடம் வெளிப்படும், உயர்வு மனப் பான்மையும், தாழ்வு மனப்பான்மையும், ஒரே நாணயத்தின் - நோயின் - இரு பக்கங்களாகும். ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்;
https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
தமிழ்நாட்டில்
'கல் வீட்டில்' முன்பு வசதியான பிராமணரல்லதோர் தான் வாழ்ந்தனர். பிராமணர்கள் குடிசை
வீட்டில் தமக்கான நெறிமுறைகளோடு வாழந்தது வரை, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு இருந்தது.
எப்போது பிராமணர்கள் ஆங்கிலேயரின் கல்வி முறையில் படித்து, வேலைக்குப் போய், கல்வீட்டில்
வாழ ஆரம்பித்தார்களோ, அப்போது முதல், காலனி ஆட்சியில் அறிமுகமான ஒப்பீடு நோயில், 'பிராமண துவேசம்' முளை விட்டு வளர்ந்ததா? என்பதும்
ஆய்விற்குரியதாகும்.
உலகில் நாத்திகம் பற்றி, அதிகமான நூல்கள் உள்ள தொன்மை மொழிகளில் சமஸ்கிருதம் மற்றும் பாலி முதலிடம் வகிப்பதை, நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தெளிவுபடுத்தியுள்ளார். ( 'Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language; Greek, or Roman or Hebrew or Arabic)'; Page 35; ' Identity and Violence- The Illusion of Destiny- Amartya sen) வடமொழியில் இருந்த மனுதர்மம் உள்ளிட்ட சில நூல்கள் எந்த சூழலில் உருவாகி, இந்தியாவின் எந்தெந்த பகுதிகளில் அவற்றில் இருந்தவை நடைமுறைபடுத்தப்பட்டன? தமிழ்நாட்டில் அவை நடைமுறைபடுத்தப்பட்டதற்கு சான்றுகள் உண்டா?
அறிவுபூர்வமாக அணுக வேண்டிய சமூக சிக்கல்களை, தமிழிலும்,
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் உள்ளவற்றை புரிந்து கொள்வதில், பிறரைச் சார்ந்திருந்த வரை எல்லைகளில் (limitations) சிக்கி , பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், உணர்ச்சிபூர்வ போக்கில் அணுகி, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக்குழப்பத்தில்
சிக்க வைத்ததே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய, - 'பாதகமான சமூக மடை மாற்றத்திற்கு' - காரணமானதா?
(https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2015-06-16T03:34:00-07:00&max-results=7&start=3&by-date=false )
1944க்கு முன், பிராமணர்களிலும், மற்ற உயர் சாதிகளிலும் சமூக உணர்வுடன் சமூக அநீதிகளை எதிர்த்து, தத்தம் சாதிகளில் 'எதிர்ப்பையும், புறக்கணிப்பையும்' சந்தித்து, தொண்டுகள் புரிந்த சமூக தள விளைவு (social polarization) பற்றிய சான்றுகள் யாவை? இன்று அப்படிப்பட்ட போக்குகள் உண்டா?
(https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2015-06-16T03:34:00-07:00&max-results=7&start=3&by-date=false )
1944க்கு முன், பிராமணர்களிலும், மற்ற உயர் சாதிகளிலும் சமூக உணர்வுடன் சமூக அநீதிகளை எதிர்த்து, தத்தம் சாதிகளில் 'எதிர்ப்பையும், புறக்கணிப்பையும்' சந்தித்து, தொண்டுகள் புரிந்த சமூக தள விளைவு (social polarization) பற்றிய சான்றுகள் யாவை? இன்று அப்படிப்பட்ட போக்குகள் உண்டா?
மாறாக, தத்தம் சாதிகளில் உள்ள 'முற்போக்கு,
பிற்போக்கு' 'சாதனையாளர்களை', அந்தந்த சாதி நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாராட்டி, கெளரவிக்கும்
'சமூக அசிங்கங்கள்' இன்று அரங்கேறி வருகின்றனவா? 'சாதி ஒழிப்பு வீரர்கள்'(?) அந்தந்த
சாதி அமைப்புகளிலுள்ள 'வி.ஐ.பி'(V.I.P)-க்களுடன் நெருக்கமான உறவைப் 'பேணி', அந்தந்த சாதி அமைப்பு
இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி, தமது 'செல்வாக்கையும்' வளர்த்து வருகிறர்களா? 'அது போன்ற சாதி ஒழிப்பு வீரர்'களில் சிலர், திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களை நத்திப் பிழைத்தவர்களுடன் நெருக்கமாகி, 'சாதி ஒழிப்பு'/'பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு' வீரர்களாக வலம் வருகிறர்களா? அந்த 'பகுத்தறிவு, பாரப்பன எதிர்ப்பு' வீரர்களில், 'அதிவேக' 'திராவிட' பணக்காரரானவர்கள், 'குடும்ப சோதிடர்கள்' ஆலோசனையில் வாழ்கிறார்களா? 1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா?
என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக
முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும்.
உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வ விவாதங்கள்
அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் கருதுகிறேன். அது போன்ற மீட்சி முயற்சியை, இனியும் தாமதித்தால், தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடு மாறும் வீழ்ச்சியானது, தடுக்க முடியாததாகி விடும்.
( https://tamilsdirection.blogspot.com/2015_06_01_archive.html )
'பாதகமான' சமூக மடை மாற்றத்திற்கு உள்ளான, தமிழ்நாட்டில், சொந்த காசில் 'சூன்யம்' வைத்துக் கொள்ளும் பெற்றோர்கள்: தாய்மொழி, பாரம்பரியம்,பண்பாடு வேரறுக்கும் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்க வைத்து, பெருநகரங்களுக்கும், மேலை நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் முதல் தலைமுறை; தமிழ் சரியாக படிக்கத் தெரியாமல், கொச்சைத்தமிழ் பேசும் இரண்டாவது தலைமுறை; தமிழில் படிக்கவும் தெரியாமல், பேசவும் தெரியாமல், இயல்பைத் தொலைத்து, வேரறுந்த, 'காரியகார' உலக அகதிகளாக, மேற்கத்திய மோக எந்திரராக (Robot) வாழும் மூன்றாம் தலைமுறை.
குறிப்பு: 'பாதகமான சமூக மடை மாற்றமானது', தமிழ்நாட்டில் 'மனித காக்கை, நாய்களின்' எண்ணிக்கையை 'அதிவேகமாக' வளர்த்து, உணர்ச்சிபூர்வ 'சமூக மூச்சுத் திணறலை' (social suffocation) எந்த அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )
( https://tamilsdirection.blogspot.com/2015_06_01_archive.html )
'பாதகமான' சமூக மடை மாற்றத்திற்கு உள்ளான, தமிழ்நாட்டில், சொந்த காசில் 'சூன்யம்' வைத்துக் கொள்ளும் பெற்றோர்கள்: தாய்மொழி, பாரம்பரியம்,பண்பாடு வேரறுக்கும் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்க வைத்து, பெருநகரங்களுக்கும், மேலை நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் முதல் தலைமுறை; தமிழ் சரியாக படிக்கத் தெரியாமல், கொச்சைத்தமிழ் பேசும் இரண்டாவது தலைமுறை; தமிழில் படிக்கவும் தெரியாமல், பேசவும் தெரியாமல், இயல்பைத் தொலைத்து, வேரறுந்த, 'காரியகார' உலக அகதிகளாக, மேற்கத்திய மோக எந்திரராக (Robot) வாழும் மூன்றாம் தலைமுறை.
குறிப்பு: 'பாதகமான சமூக மடை மாற்றமானது', தமிழ்நாட்டில் 'மனித காக்கை, நாய்களின்' எண்ணிக்கையை 'அதிவேகமாக' வளர்த்து, உணர்ச்சிபூர்வ 'சமூக மூச்சுத் திணறலை' (social suffocation) எந்த அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )
No comments:
Post a Comment