Saturday, December 3, 2016


 எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (3)



'சுயமரியாதையுள்ள அனாதை'யின், இன்பங்கள் நிறைந்த வாழ்க்கையின் சூட்சமம்


“1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்; 'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக, ராஜாஜியின் துணையுடன் 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?” என்பதையும்; 

நான் " 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், தமிழ்நாட்டில் நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' என்று அடையாளம் பெறலாம்;" என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

பொதுவாக சமூகத்தில் 'அனாதை' என்றால் ஒரு தாழ்வான பார்வை இருக்கும். உலகில் பிரமிக்க வைக்கும் சாதனைகளை புரிந்த பலர், அனாதையாகவே தமது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர்கள் ஆவர். (http://motivateme.in/10-orphans-who-became-famous-with-their-passion-hard-work/ )

ஆனால் நானோ, "சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், தமிழ்நாட்டில் சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக: விரும்பி, 'சுயமரியாதையுள்ள‌ அனாதை'யாக பயணிக்க தொடங்கிய பின், எனது ஆய்வு சாதனைகள், எனக்கே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, எனது சாதி அடையாளத்திலிருந்து 'விடுதலை' பெற்று, எனது சமூக அடையாளம் 'சைவ பறையர்' ஆனது; காலனி ஆட்சியின் சூழ்ச்சியில், 'புதிதாக' அரங்கேறிய 'சாதி(?) ‘உயர்வு – தாழ்வுக்கு’ எதிரான போரிலும் , எனது பங்களிப்பாக; புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரராக 'காட்சி' தந்து, அகத்தில் 'தமது சாதியை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் சமூக கிருமி'களையெல்லாம், எனது 'தீண்டாமை'க்கு உட்படுத்தி.

அது தொடர்பான சமூக செயல்நுட்ப இரகசியங்களை, உண்மையான சுயமரியாதை தமிழராக‌ வாழ விரும்புபவர்களின் பார்வைக்காக முன் வைக்கிறேன்.

“மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்; அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘நாடு பயணிக்கும் போக்கில்: நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

தமிழ்நாட்டின் முக்கிய போக்குகளில், 'வெளிச்சத்திற்கு வராமல், நான் பங்காற்றியவற்றில், சிலவற்றை மேலே குறிப்பிட்ட பதிவில் பதிவு செய்துள்ளேன்.

அதே போல் 1983 சூலை இனப் படுகொலைக்குப்பின், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' வளர்ந்த ஈழ விடுதலைக் குழுக்களில், எண்ணிக்கையிலும் ஆயுத‍ம் மற்றும் பண  பலத்தில்      PLOT, TELO முதல் இரண்டு இடங்களில் இருக்க, மூன்றாம் இடத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், முதல் இடத்தில் வர காரணமான வெகுசிலரில், நானும் ஒருவனாக இருந்து பங்களித்ததையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

அதே போல, 'சமூக ஒப்பீடு நோயில்' சிக்கி, பாராட்டு புகழுக்கு ஏங்காமலும், தானாக அவை நம்மை தேடி வரும் போது, தமிழ்நாட்டை அந்த நோயிலிருந்து மீட்கும் முயற்சிகளுக்கு, நமது பங்களிப்பாக, அவற்றை தவிர்ப்பதை, சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைத்து, அதிலிருந்து 'தப்பித்த' அனுபவங்களும் எனக்குண்டு. ‘உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டைப் போல், 'குறுக்கு வழிகளில்' பெற்ற 'செல்வம், செல்வாக்கோடு' திருப்தி அடையாமல், 'பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கும் ஏங்கும் மனநோயாளிகளின் எண்ணிக்கையானது, இந்த அளவுக்கு, வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

மறைந்த திரு.கணபதி ஸ்தபதிக்கும் ( கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோவில்கள் கட்டியவர்) எனக்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும், அதற்கான காரணத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html )  

அவர் எனக்கென்று ஒரு பாராட்டு விழா எடுக்கப் போவதாக,  என்னிடம் தெரிவித்த போது, அவர் மீது கோபப்பட்டு, சில மாதங்கள் தொலைபேசியில் அவருடன் பேசுவதை கூட தவிர்த்து வந்தேன். அதையும் மீறி, சாகும் வரை என் மீது அவர் வெளிப்படுத்தியதானது, 'அன்பு, பாசம்' போன்ற சொற்களில் கூட அடக்க முடியாது என்பதை, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அறிவர்.

அவ்வாறு தமிழ்நாட்டில், எனதளவில், சமுக நோய்களை எதிர்த்து, பயணித்து வந்த நான்,  'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்த(?), 'பெரியார் சமூக கிருமிகள்' எனது குடும்பத்தில் சீர்குலைவை ஏற்படுத்தியதன் விளைவாக

இயல்பில் சிற்றினமானவர்கள், நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று”( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'இசை' தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த நான், அதனை எனது தனிப்பட்ட பிரச்சினையாக அணுகவில்லை. மாறாக தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தில் வளர்ந்துள்ள சமூக நோயானது, மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பத்தையே தீண்டியதை, ஒரு 'சமூகவியல் சிக்னலாக' கருதி, அதனையும் எனது ஆய்வு குவியத்தில் கொண்டு வந்து, இது போன்ற பதிவுகளை, கடந்த சுமார் 8 வருடங்களாக வெளியிட்டு வருகிறேன். அதன் காரணமாகவே, உயிருள்ளவை தொடர்பாக வெளிவந்த ' ‘ON GROWTH AND FORM’ ' என்ற நூலை, ஆய்வு நோக்கில் படித்து, '‘ON SOCIAL GROWTH AND FORM’  ' என்ற, சமூகவியல் ஆய்விலும் நான் ஈடுபட நேர்ந்தது.(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) அநேகமாக அதன் விளைவாக, சமுகவியலில் (Sociology), ஒரு புதிய பல்துறை (inter-disciplinary) பிரிவு உருவாக, அது வழி வகுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால், எனது இசை ஆய்வுகள் மூலம் எனக்கு கிடைத்த புதிய தொடர்புகளை விட, 'பெரியார் சமூக கிருமிகளின் தோற்றம்' பற்றி தொடங்கிய ஆய்வுகள் மூலமாக‌, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 'வணங்கத்தக்க' மிக பெரிய மனிதர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் வியந்து என்னை ஊக்குவிக்கும் விளைவும் நடந்து வருகிறது. ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், அதிலும் 'பெரியார் முகமூடியில், சமூக கிருமிகளாக வலம் வருபவர்கள் எல்லாம், தண்டிக்கப்படுவதானது, ஆளும் அரசின் யோக்கியதையைப் பொறுத்ததாகும். ஆனால் நமது சமூக வட்டத்தில், 'அத்துமீறி' பிரவேசித்து, சீர் குலைப்பவர்களை எதிர்த்து, தனி மனித இராணுவம் போல, சமூக விசைகளின் (Social Forces) துணையுடன், சமரசமின்றி, போராட முடியும், என்பதை நான் நிருபித்து வருகிறேன்; ; ஒரு சமூக பொறியியல் செயல்நுட்பமாக (Social Engineering mechanism), சுயமரியாதை உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்து, ‘பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு’ எதிரான போரானது, தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும், என்ற நம்பிக்கையில்.  அதுவே அவர்களின் வியப்பிற்கு காரணமாகும்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் அரங்கேறியதன் காரணமாக, ஒரு காலத்தில், நான் ஏன் 'பண நெருக்கடியில் சிக்கினேன்?' என்பதை பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html) ஆனால் இன்று என் மீது நம்பிக்கை வைத்து, புதிய ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்ள, அவர்கள் தாமாகவே 'நிதி உதவி' செய்ய முன் வருவதும், எனக்குள்ள ஆய்வு பளு காரணமாக, அவற்றை நான் மேற்கொள்ள தயங்கி வருவதும் நிகழ்கால நடப்பாகும். நான் பண நெருக்கடியில் வாழ்ந்த காலத்திலும் கூட, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருபாகரன் என்பவர், சென்னையில் எனது வீட்டிற்கு வந்து, புதுசேரிக்கு அழைத்துச் சென்று, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்றைய தலைவர் விஜய் என்பவரை சந்திக்க செய்தார். அவர் 'உலக இசைகள் எல்லாம் கர்நாடக இசைக்குள் அடக்கம்' என்று, பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் வெளிப்படுத்திய கருத்தை, ஒரு ஆய்வாக (Research Project) செய்து தருமாறு கேட்டுக் தொண்டபோது, அந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை, என்று மறுத்து திரும்பினேன். (தமிழ் இசை, கர்நாடக இசை தொடர்பாக, எனது ஆய்வுகளின் அடிப்படையில்; 'தவறான திசையில் தமிழிசை ஆர்வம்"; http://www.musicresearch.in/categorydetails.php?imgid=82 )

வெளியில் பொதுநலவாதி போல காட்சி தந்து, கிடைக்கும் ஆதரவுகளை எல்லாம்,  தமது சுயநலத்திற்கே சூழ்ச்சிகரமாக பயன்படுத்தும் பொதுவாழ்வு வியாபாரிகளிடம் பெற்ற, பல வகையான கசப்பான அனுபவங்களின் பின்னணியில்; இன்று என்னுடன் எவரும் ஈமெயிலில்(Email) மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். என்னுடன் தொலைபேசியில் பேசுவதற்கும் கூட, நான் 'தனித்துவமான' பாதுகாப்பு தடைகளோடு(security Filters) பயணிக்கிறேன். தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் மிகுந்த பாராட்டும் புகழும் பெற்ற ஒருவர், சில மாதங்களுக்கு முன், என்னுடன் தொலை பேசி தொடர்பு கொண்டு, என்னுடன் 'நெருக்கமாக' முயலும் திசையில் பேசியதை, இயன்றவரை அவரை புண்படுத்தாமலேயே, நான் தனித்து எனது ஆய்வு உலகத்தில் வாழ்வதை தெளிவு படுத்தினேன். அவர் இன்று வரை என்னை தொந்திரவு செய்யவில்லை. 

அதே நேரத்தில், நான் வியக்கும் சாதனை புரிந்தவர்கள் VIP-களாக இருந்தாலும், அவர்களை சந்திப்பதில் தயக்கம் காட்டியதில்லை.

உதாரணமாக,'ஜோக்கர்' திடைப்பட 'சூட்டிங்'கில்(Shooting) பணியாற்றிய உதவி கேமராமேன் கார்க்கி, ஒரு இசை அமைப்பாளர் பரிந்துரையில் என்னை சந்தித்தார். பின் அவர் அப்படத்தில் கேமராமேனாக பணியாற்றும் செழியன் என்பவர்,  இசை தொடர்பாக புத்தகம் எழுதியிருப்பதாகவும், அதை எனக்கு அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். சரி என்றேன். கொரியரில் 10 புத்தகங்கள் பார்சலில் வந்தன. பிரித்து பார்த்தேன். ' The Music School- ஒரு முழுமையான மேற்கத்திய இசைப்பயிற்சி' என்ற தலைப்பில் தொகுப்பு வரிசை நூல்கள்10 (ஒவ்வொன்றும் 100 பக்கங்களுக்கும் அதிகம்). படித்ததும் பிரமித்துப் போனேன். அதில் உள்ள பொருள் நானறிந்தது என்றாலும், தமிழில், அவ்வளவு எளிமையாக, மேற்கத்திய இசை நுணுக்கங்களை எவரும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் என்னால் எழுத முடியாது. நிகழ்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள இசை நூல்களில், எனது நூலும் உள்ளிட்டு, இது போன்ற காலத்தை வென்ற 'மானுமெண்டல்'(Monumental)  நூல் வேறு எதுவும் கிடையாது. (http://www.themusicschool.co.in/) எனவே செழியன் என்னை நேரில் பார்க்க விரும்புவதாக தெரிவித்தபோது, தயக்கமின்றி உடனே சம்மதித்தேன். 'ஜோக்கர்' படம் அப்போது வெளிவராததால், தமிழில் திருப்பு முனையான அந்த படத்தில் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பதும் எனக்கு தெரியாது.

நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடி விட்டு, மீண்டும் கணினி இசை என்னிடம் கற்றுக் கொள்ள வருவதாக சொல்லி, சென்றுள்ளார். அத்தகைய சாதனையாளர்கள் போன்றவர்களெல்லாம், எனக்கு தெரிந்தவர்கள் என்று, நான் பழகி வரும் சாதாரண மனிதர்கள் எல்லோரிடமும் சொல்லி, எனக்கு ஒரு முக்கியத்துவ ஒளிவட்டம்(Aura) வந்து விடக்கூடாது, என்பதிலும் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்; அவர்கள் மூலம், எனது சமூகவியல் ஆய்வுக்கு கிடைத்து வரும், 'அரிய உள்ளீடுகளை' (inputs). நான் இழந்து விடக்கூடாது, என்ற எச்சரிக்கை உணர்வுடன்.

இப்படி சமூகத்தில் V.I.P-'க்களாக வலம் வருபவர்களை தவிர்க்கும் நான், எனக்கு தேவையானவற்றிற்காக பெட்டிக்கடையிலிருந்து, டீக்கடை உள்ளிட்டு சாமான்யர்களுடன் அவர்களில் ஒருவராக பழகி வருவதானது, அவ்வப்போது அரசு பேருந்திலும் பயணிப்பதானது, எனது சமூகவியல் ஆய்வுக்கு அரிய உள்ளீடுகளாகவும்(inputs) அமைந்து வருகிறது. அதே நேரத்தில் எனது ஆய்வு தொடர்பான இடங்களுக்கு,  AC காரில் பயணிப்பதும், அங்கு என்னை எனது Hand Bag மற்றும் Laptop- ஐ கூட நான் தூக்க அனுமதிக்காமல், உதவியாளர்கள் துணை வருவதும் நடக்கிறது. 

“தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர’  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.”

'பிறர் தம்மை பெரிதாக நினைக்க வேண்டும்' என்ற ‘சமூக ஒப்பீடு நோயில்’ (Social Comparison Infection) சிக்கி, தமக்கான வாழ்வை இழந்து வாழாமல் (‘“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html) )

தமது இயல்பு மற்றும் திறமைகளை சரியாக புரிந்து, அவற்றிற்கு இணக்கமான உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions)  வாழும் எவருக்கும், மேலே குறிப்பிட்ட இன்பங்களை அனுபவித்து வாழ்வதானாது, தாமாகவே அமையும். அத்தகையோரின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டில் அதிகரிப்பதானது, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரியும். அந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, என்னால் ஆன பங்களிப்பே, இந்த பதிவு ஆகும். 

அவ்வாறு வாழ்வதில் வெளிப்படும் சாதனைகளை, உலகம் ஏற்றுக் கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல.

இன்றும் அவரை அடக்கம் செய்த கல்லறை எது? என்று தெரியாத அளவுக்கு, புகழின்றி, வறுமையில் இறந்த, இசை மேதை மொசார்ட்(Mozart) (The most famous person to be buried in the St. Marx Cemetery is Wolfgang Amadeus Mozart. Later attempts to locate his mass grave all failed, including a search by his widow, 17 years after Mozart's death, and by Vincent Novello in 1829. In 1855 a gravestone was erected at what was presumed to be the correct spot. Later the stone was transferred to a group of famous musician graves at Zentralfriedhof; https://en.wikipedia.org/wiki/St._Marx_Cemeteryhttps://en.wikipedia.org/wiki/St._Marx_Cemetery );
எழுத்தாளர் பிரான் கஃபா(Franz Kafka : http://en.wikipedia.org/wiki/Franz_Kafka );


உள்ளிட்டு பலரின் சாதனைகள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிச்சத்திற்கு வராமல், அவர்கள் இறந்து பல வருடங்கள் கழித்து, உலகப் புகழ் பெற்றதும் வரலாறு ஆகும். (http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html )
 

அப்படி வாழ்வதற்கான மனநிலையையும், இயற்கையின் அருளையும் பெறுவதற்கான முன் நிபந்தனையாக;

சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களையும், அவர்களின் 'செல்வ வெளிச்சத்தில்' மயங்கி, 'நெருக்கமாகுபவர்களையும்', குடும்பமாக, சுற்றமாக, நட்பாக இருந்தாலும், ‘உயிருள்ள பிணங்களாக’ கருதி, ஒதுக்கி, அவர்களை 'மனதில் நினைத்தாலும்', 'இயற்கையின் கோப வெறுப்புக்கு' (Nature’s Curse) உள்ளாக நேரிடும், என்ற விழிப்புணர்வும் அவசியமாகும். நமது வாழ்வும், நேரமும், நமது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடன், நமது முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு தடைகளுடனும் (security Filters) வாழ்வதும் முக்கியமாகும்.


அந்த மன‌ வலிமையை பெற, நான் அவ்வப்போது நினைவு கூறும் திருக்குறள் (350)
‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’
 

No comments:

Post a Comment