Wednesday, November 1, 2017

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே;


'தனித்துவமான ரசனை இடைவெளி'?(1)


தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களின் நாடாக, தமிழ்நாடு மாறுவதன் அபாய எச்சரிக்கையா?


'திருச்சி பெரியார் மையத்தில்' பங்களித்து, மார்க்சிய புலமையாளர்களை தேடி சென்று, அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டு, 'பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலை வெளியிட்ட பின், நான்;

நக்சலைட் இயக்கத்தில் இருந்து, பின் மனித உரிமை 'அறிவுஜீவி'யான ஒருவரை சந்திக்க சென்ற போது, அவர் என்னை மிகவும் மதிப்புடன் வரவேற்று உரையாடினார். நான் வந்தது அறிந்து, உள்ளே தான் ரசித்துக் கொண்டிருந்த சிம்பொனி இசையை நிறுத்தி விட்டு, என்னை சந்திக்க வந்தார்.   அப்போது எனக்கு அவரை பற்றியிருந்த 'முற்போக்கு' பிம்பத்திற்கு, அந்த ' ரசனையானது' எனக்கு சுருதி பேதமாக' பட்டது.

பிரெஞ்சு புரட்சியின் விளைவாக, ஐரோப்பாவில் லத்தின் மொழியின் ஆதிக்கத்திற்கும், இசையில் கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்திற்கும், எதிராக தாய்மொழி, மனிதர்கள், நாட்டுப்புற இசைக்கூறுகள் போன்ற மூலங்களின் (Sources) அடிப்படையில் உருவானதே, சிம்பொனி இசை என்பது, அந்த காலக்கட்டத்தில் எனக்கு தெரியாது. பின்னர் இசை ஆராய்ச்சியில் நுழைந்த பின், அவை தொடர்பான சான்றுகளை சேகரித்து நான் எழுதிய கட்டுரையானது, (வலது கம்யூனிஸ்ட்) அறிஞர் வெ.கிருட்டிணமூர்த்தி வெளியிட்ட நூல் வரிசையில் வெளிவந்ததும்(http://www.vinavu.com/2016/07/28/history-of-symphony/  );
 

தமிழ்நாட்டில் பிரபல எழுத்தாளர்களுக்கு கூட தெரிந்திருக்குமா? என்பதும் கேள்விக்குறியே ஆகும். தமிழ் இசை, பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள எனது கட்டுரைகளும், புத்தகங்களும் கூட, அவர்கள் பார்வைக்கு சென்றிருக்குமா? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியோடு, எந்த அளவுக்கு ரசனை வீழ்ச்சியானது தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

சாதாரண மக்கள் அல்ல, பிரபலமான தமிழ் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், கவிஞர்களும் கூட, 'சிம்பொனி இசை என்றால் என்ன?' என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல்;

'தமிழர் சிம்பொனி இசை அமைத்து உலக சாதனை புரிந்து விட்டார்' என்று பாராட்டி மகிழும் அளவுக்கு, ரசனையின் சீரழிவில் தமிழ்நாடு சாதனை படைத்தது போல

பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் தெரியாமல், பாடல்கள் எழுதும் கவிஞர்கள் பற்றிய ஆய்வினையும் புறக்கணித்து, அத்தகைய கவிஞர்களை பாராட்டி மகிழ்வது போல; ( http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )

ஆட்சியில் இருப்பவர்கள் அபத்தமான நூல்கள் வெளியிட்டாலும், பாராட்டி மகிழ்வது போல;

தமிழின், தமிழ் இசையின், உலக இசையின், வளர்ச்சிக்கான ஆய்வுகளையும், விமர்சனங்களையும், அச்சுறுத்தி(மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கண்களை மூடிக் கொள்ள) இருட்டில் தள்ளுவது போல;

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகில் எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை;

என்பது தமிழ்நாட்டின்சீரழிவு ரசனை’ தொடர்பான, மீட்சிக்காக அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய, வலிமையான 'சிக்னல்' ஆகும்(http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html & http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html  & http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலைகளும், சதிகளும்' வெளியிட்டு, (தஞ்சைக்கு வந்திருந்த ஜெயகாந்தனிடம் நான் கொடுத்த போது, அவர் வாங்க மறுத்த) மத்திய புலனாய்வு துறைகளின் கண்காணிப்பில் நான் இருந்த சமயம், தஞ்சையில் ஒரு மனித உரிமைக் கூட்டத்தில், மேலே குறிப்பிட்ட மனித உரிமை அறிவுஜீவி முக்கிய பேச்சாளராக பேச வந்திருந்தார். எழுத்துபூர்வமாக அன்றி, வெறும் வாய் மிரட்டல் மூலமே, காவல் துறை அச்சுறுத்தியவுடன், அவர் கூட்டம் நடத்தாமல், தம்மைக் காண வந்த 'மனித உரிமை ரசிகர்களுடன்' தஞ்சை பெரிய கோவில் புல்வெளியில் அமர்ந்து உரையாடி விட்டு, பின் தஞ்சையிலிருந்து புறப்பட்டு சென்றார்;

என்பதைக் கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி, இன்று வரை மறக்க முடியாததாகும்.

பல வருடங்களுக்கு முன், சிதம்பரம் 'நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சியில், எனது மகளின் நாட்டியத்திற்காக சென்றிருந்த போது, என்னுடன் வந்திருந்த 'பெரியார்' தீவிர கொள்கையாளர் ஒருவர், அங்கு நடந்தகடவுள் - புராணங்கள் தொடர்புடைய நாட்டிய நிகழ்ச்சிகளை மெய் மறந்து ரசித்ததும், என்னால் மறக்க முடியாத அனுபவமானது.

அந்நிகழ்சிக்காக கோவிலுக்குள் நுழைந்ததும், எனது மகளும், இசைக்குழுவினரும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு பகுதிக்குள் நுழைந்த போது, ஆண்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி உள்ளே செல்லவேண்டும் என்று அறிந்து, நானும் சட்டையை கழற்றி, உள்ளே சென்று வந்தேன். வெளியே வந்ததும், என் மீது உள்ள அக்கறையில், அந்த 'பெரியார்கொள்கையாளர், 'சட்டையை கழற்றியதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்' என்று அறிவுறுத்தியதையும், என்னால் மறக்க முடியாது.

வீர சவர்க்காரின் ' The Indian War of Independence' (https://en.wikipedia.org/wiki/The_Indian_War_of_Independence_(book) - தமிழில் 'எரிமலை') நூலின்படி, இந்துக்களும் முஸ்லீம்களும் ஓன்று சேர்ந்து, 1857-இல் காலனி அரசை வீரமுடன் எதிர்த்தனர், என்பதை என்னிடமிருந்து அறிந்த ' பெரியார்' கொள்கையாளர் ஒருவர், அந்நூலை வரவழைத்து தருமாறு, நூல்கள் விற்கும் கடை நடத்தி வந்த, தனது நண்பரான ' பெரியார்' கட்சி பொறுப்பாளரிடம் கேட்ட போது;

'தனது கடையில் அந்நூலை விறபது சரியாக இருக்காது' என்று மறுத்து விட்டார்.

கடந்த தி.மு. ஆட்சியில், தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில், மேடைகளில் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து நின்றதையும், பாலுணர்வினைத் தூண்டும் வகையில் ஆபாச ஆடல் பாடல்கள் நிகழ்ந்ததையும்;

தமிழ்நாட்டில் 'ஆபாசத்தை' எதிர்த்து பிரச்சாரங்கள், போராட்டங்கள் மேற்கொண்ட, எந்த பெண்ணுரிமை இயக்க தலைவராவது, குறைந்த பட்சம் பகிரங்கமாக கண்டித்தார்களா, போராடா விட்டாலும்

அன்றிருந்த இந்து சட்டப்படி, வயதில் குறைந்த/அதிகமான எந்த பெண்ணையும் மகளாக்கி வாரிசாக்க முடியாது என்ற நிலையில், கட்சியின் சொத்துக்களை காப்பாற்றும் நோக்கில் நடந்த 'பெரியார் ஈ.வெ.ரா - மணியம்மை' திருமணத்தை, வரைமுறையின்றி கொச்சைப்படுத்தலானது, உணர்ச்சிபூர்வ போக்கினை வளர்த்து தமிழ்நாட்டில் அரங்கேறிய பின்;

திராவிட/தமிழ் தலைவர்களிடம் 'சிக்கி' மனைவி/துணைவி என்று எந்த உறவும் கொண்டாட முடியாத அளவுக்கு, குழந்தைகளும் பெற்று வாழ்ந்த பெண்கள் பற்றியும்;

வெளியில் தெரிவிக்க முடியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்து, மனித உரிமைகளை செல்லாக்காசாக்கி, அச்சுறுத்தல் இருட்டிலேயே வளர்ந்ததா? (http://www.dinamalar.com/news_detail.asp?id=1907782) என்பது பற்றியும்;

தமிழ்நாட்டில் எந்த பெண்ணுரிமை 'தலைவர்களாவது' கவலைப்பட்டிருக்கிறர்களா? இனியாவது கவலைப்படுவார்களா? 

தமிழ்நாட்டில், நக்சலைட், 'பெரியார்' 'தனித்தமிழ்நாடு', 'தமிழ் ஈழம்' போன்ற இன்னும் பல ஆதரவு 'அறிவு ஜீவிகள்' எல்லாம், 'பிம்ப பாதுகாப்பு மண்டிலத்திலும்', 'சொகுசு மண்டிலத்திலும்', வாழ்ந்து கொண்டு, 'புரட்சிகரமாக'  பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் 'நம்பி';

தமது படிப்பையும், வாழ்வையும், தீக்குளித்து உயிரையும்,  அழித்துக் கொண்டவர்களின் பெற்றோர்களில் எவராவது;

மருத்துவராகவோ, பொறியாளராகவோ, 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' ..எஸ், .பி.எஸ் அதிகாரியாகவோ, பேராசிரியராகவோ, வசதி வாய்ப்பில்  உயர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்களா?

ஓரு மனிதரின் அகவாழ்வானது எந்த அளவுக்கு சுயலாப நோக்கில் சமூகக் கேடான திசையில் பயணிக்கிறதோ, அந்த அளவுக்கு, அவரின் ரசனையும் சமூகக் கேடான போக்குகளை வளர்த்தவாறே பயணிக்கும்.

சமூகக் கேடான ரசனையில் பயணிக்கும் மனிதர்களில் பெரும்பாலோர், அந்த சமூகத்தில் படிப்பிலும், பதவியிலும், வசதியிலும் மேல்த்தட்டினராக இருக்கும் சமூக சூழலில்;

அந்த சமூகமானது வீழ்ச்சி திசையில் பயணிப்பதில் வியப்பில்லை.

இன்று திராவிட அரசியல் கொள்ளை வலைப்பின்னலில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்யும் பட்டி மன்றங்களில் நகைச்சுவை ததும்ப பேசும் (கிரானைட், தாது மணல் கொள்ளை, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம், etc, திராவிட அரசியல் கொள்ளை பற்றி பேசாத‌) பேச்சாளர்களும், அரங்கில் நிரம்பி வழிபவர்களும், மேலே குறிப்பிட்ட நகைச்சுவை 'ரசனை'யில் இருந்து, எந்த அளவுக்கு மாறுபட்டவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வசதியானவர்கள், படித்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக தமது 'சொகுசு மண்டிலத்திற்கு' (Comfort Zone) அடிமையானவர்கள் எல்லாம், சமூக முதுகெலும்பின்றி (Social Spineless) வளர்ந்த போக்கும், மேற்குறிப்பிட்ட 'ரசனை' வளர்ந்த போக்கும், திராவிட அரசியல் கொள்ளைக்கு எந்த அளவுக்கு உதவியது? தமதளவில் நேர்மையான வருமானத்தில் வாழ்ந்து கொண்டு, அத்தகையோரெல்லாம் திராவிட அரசியல் கொள்ளையர்களுடன் சாதி, மத, வட்டார அடிப்படைகளில், 'நேச உறவுடன்' வாழ்வதானது, தத்தம் 'சொகுசு மண்டிலம்' பாதுகாப்புக்காகவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/10/passion-httptamilsdirection.html )

‘ "சசிகலாவை வணங்கி தொழுவது வாஸந்திக்கு இப்போது குமட்டலாக ("கூச்சமும் அச்சமும்") இருக்கிறது.அதிமுகவின் கர்த்தாவாகிய எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா என்கிற ஒரு முன்னாள் நடிகை பின்னால் அரசியல் வித்தகர்கள் அணிவகுத்த போதும் ஒரு கட்டத்தில் தாள் பணிந்த போதும் இதே அஜீரணக் கோளாறு பலருக்கும் நேர்ந்தது தான்.ஆனால் அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவர் எவருமில்லை.வாஸந்தியும் கூட தான்.ஒருவேளை அப்போது "கூச்சமும் அச்சமும்" வாஸந்திக்கு வரவில்லையென்றால் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும்?" ‘ என்பதையும்;

பாரதியையும், பாரதி வழி வாழ்வதையும் போற்றிய, கட்சி சார்பற்ற, எந்த கவிஞராவது, எழுத்தாளராவது, பேச்சாளாராவது, ஜெயலலிதா ஆட்சியின் போது, "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவ"ராக இருந்தார்களா?

அந்த போக்கில்,  'பாரதி வழி, காந்தி வழி, பெரியார் வழி' உள்ளிட்ட 'எல்லா வழிகளும்', 'ஒரே வழியாகசங்கமித்த பின், தமிழ்நாடானது, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), ஆதாய அரசியலில் தானே பயணிக்க நேரிடும்.  "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொள்ள' பயந்து, திருக்குறள் (428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் நேர்மையின்றிவாழ்ந்த/வாழும் அறிவு ஜீவிகள் எல்லாம், அதற்கு காரணமான, சமூக குற்றவாளிகள் இல்லையா? இன்று அந்த 'சமூக குற்றவாளிகளை' அடையாளம் காட்டும் 'சமூக தொண்டராக', சசிகலா வலம் வருவதில், வியப்புண்டோ?

பாரதி வழியில் வாழ்வதை விட, திருக்குறள் வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொண்டு யார் வாழ்ந்தாலும், அது பாராட்டுதலுக்குரியதே ஆகும். தமிழ்நாட்டில் யாராயிருந்தாலும், அவர்களின் பேச்சும், எழுத்தும், அவர்கள் வாழும் வாழ்வின் அடிப்படையிலேயே, தகவல் பரிமாற்ற வலிமை (Communication strength)  பெறுகின்றன, அல்லது இழக்கின்றன; குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே.’  என்பதையும்;

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_12.html )

1983 சூலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்குப் பின் தமிழ்நாடெங்கும் தன்னிச்சையாக வெடித்து நீண்ட காலம் நீடித்த போராட்டத்தின் பின்னணியில்;

முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், பின்னும், இன்று வரையும், சாதாரண மக்களும், பெரும்பாலான கல்லூரி மாணவர்களும், அவரவர் பிரச்சினையில் மூழ்கி இருப்பதைக் கண்டு;( http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

தமிழக மக்களை ‘உணர்ச்சியில்லாதவர்கள்’ என்று இழிவாக பேசிக் கொண்டு, தாமோ, தமது குடும்பப் பிள்ளைகளோ வீதியில் இறங்கி போராடாமல், 'பாதுகாப்பு மண்டிலத்தில்' தமிழ் இன உணர்வாளர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

திராவிடஅரசியல் கொள்ளையை பாரபட்சமின்றி எதிர்க்கும் அணுகுமுறையின்றி;

தமிழ்நாட்டில் பெரும்பாலான எழுத்தாளர்களும், பேச்சாளார்களும், கவிஞர்களும் தமது படைப்புகளில், தமது 'சுயலாப பாதுகாப்பு லட்சுமண் கோட்டினை' தாண்டாமல், வாழ்வியல் புத்திசாலித்துடன்(?) முன் நிறுத்தும் 'ரசனை'யில் மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோர், அந்த படைப்பாளிகளை போலவே, 'பாதுகாப்பு மண்டிலத்தில்', அதற்கேற்ற 'ரசனையுடன்  பயணிக்க;

அந்த‌ 'படைப்புகளின்', அந்த 'ரசனை'யின், வாடையின்றி பயணிக்கும் நடுத்தர, ஏழை, குறிப்பாக கிராமப்புற மக்களே, தமிழ்நாட்டில் ஆங்காங்கே தினமும் தமக்கு தெரிந்த போராட்ட வடிவங்களில் போராடி வருகிறார்கள்; தமது அறிவுக்கு சரி என பட்ட பிரச்சினைகளில்

அத்தகைய மக்களும், தமிழில் எழுதப்படிக்க தெரியாமல் எண்ணிக்கையில் அதிகரித்து வரும், ஆங்கில வழியில் கல்வி கற்ற‌ தமிழர் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும்;

எண்ணிக்கையில் குறைந்து வரும் தமிழில் எழுதப் டிக்க  தெரிந்த மாணவர்களும், தமிழ் இதழ்களையும், நூல்களையும் நாம் படிக்குமாறு காட்டினாலும், 'இலாவகமாக' அவற்றை ஒதுக்கி பயணிக்கும் போக்குகளில் உள்ளவர்களில் பெரும்பாலோரின் 'ரசனை' காரணமாக:

சூது கவ்வும், ஜிகிர் தண்டா, சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, கோலி சோடா, ஜோக்கர்,'விக்ரம் வேதா' போன்ற இன்னும் பல (ரஜினி, கமல், விஜய், போன்ற பெரிய நடிகர்கள் இல்லாத) திரைப்படங்கள் எல்லாம் வணிக ரீதியில் பெற்று வரும் வெற்றிகளும்;

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே;

நம்ப முடியாத அளவுக்கு 'ரசனை இடைவெளி'யானது அதிகரித்து வருவதை உணர்த்தவில்லையா?

தமிழ்நாட்டிற்கு பாதகமானது, 'மாதொரு பாகன்' நாவலை  பாராட்டியவர்களின் ரசனையா? அந்நாவலைக் கண்டித்தவர்களின் ரசனையா? என்பது தொடர்பான எனது ஆய்வினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழில் எழுதப் படிக்க தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடும் அந்த வழியில் பயணித்து வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், உலகில் வேறு எந்த நாடும் இல்லையென்றால்;

அது 'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிகளில் விளைந்துள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' ஆகும்.

தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களின் நாடாக தமிழ்நாடு மாறி வருவதன் வெளிப்பாடே, அந்த 'தனித்துவமான ரசனை இடைவெளி' ஆகும்.

காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து;

ஊழல் பேராசையில் தமிழ்நாட்டின் வளங்களை சூறையாடியதோடு திருப்தி அடையாமல், ஆங்கிலவழிக் கல்வி வியாபாரத்தை ஊக்குவித்து, தமிழை சீரழித்து, அச்சுறுத்தியும், கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து;

காவல்துறை காட்டுமிராண்டி தாக்குதலில் இறந்தது தன் மகன் அல்ல என்று தந்தையே அச்சுறுத்தலில் நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல, பின் அதே போக்கில் 'அரசியல் செல்வாக்குள்ள' கொலைக் குற்றவாளிகள் எல்லாம் அரசு சாட்சிகளை  பிறழ்சாட்சிகளாக்கி விடுதலை ஆக:

அந்த போக்கின் உச்சக்கட்டமாக, ஜனநாயகத்தின் தூண்களை எல்லாம் முட்டாளாக்கி தமிழக முதல்வரே 'மர்மமான' முறையில் மரணமடைய:

1944இல் முளை விட்டு, 1949இல் உரம் பெற்று வளர்ந்த, உணர்ச்சிபூர்வ க‌வர்ச்சிகரமான பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா மூலமாக ரசனையை 'போதையாக்கி', மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோரின் சமூக முதுகெலும்பை முறித்ததே;

அந்த 'தனித்துவமான ரசனை இடைவெளி'க்கு முக்கிய காரணமாகும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

மேலே குறிப்பிட்ட திரைப்படங்களில் வெளிப்பட்ட ரசனையானது, மேலே குறிப்பிட்ட 'சமூக முதுகெலும்பற்ற' ரசனைக்கு எதிரான திசையில், பயணிக்கும் ரசனை ஆகும்.

வணிக ரீதியில் அந்த ரசனையானது தொடர்ந்து வெற்றி பெற்று வரும் போக்கில். தமிழ்நாட்டில் ஊழலற்ற அரசானது  மலரும் காலம் அதிக தொலைவில் இல்லை.

ஊழலற்ற தமிழ்நாட்டில், செல்வத்திலும், செல்வாக்கிலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர்கள் தத்தம் தாய்மொழிகளில் 'அப்பா, அம்மா' என்று அழைத்து வளர;

தமிழ்வேரழிந்த தமிழர் குடும்பங்களில் 'மம்மி, டாடி' ஆதிக்கத்தில், தமிழர்களில் பெரும்பாலோர், மேற்குறிப்பிட்டவர்களை நத்திப் பிழைக்கும் தரகர்களாகவும், ஊழலற்ற அரசில் தண்டிக்கப்படும் திருடர்களில் பெரும்பான்மையினராகவும், இருந்தால் வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html

பாதகமான ரசனையிலிருந்து, தமிழ்நாடு மீளத் தொடங்கியுள்ள இந்த காலக்கட்டத்தில், தமிழ்வழிக்கல்வி மீட்சியானது, 'தமிழ் வேர்க்கொல்லி' நோயிலிருந்து தமிழர்களை  மீட்கும் முயற்சியே ஆகும்.

வெளியில் தெரிந்தும், தெரியாமலும், சுயலாப நோக்கின்றி, தமிழ்வழிக் கல்வியின் மீட்சிக்கு, தமிழ்நாட்டில் பலர் முயன்று வருகின்றனர்; என்னைப் போலவே. இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களிலும் உள்ள அத்தகையோரிடையே, 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' என்ற இலக்கில், 'சினர்ஜி' முறையில் (https://en.wikipedia.org/wiki/Synergy )  ஒன்று சேர்க்க, நான் முயன்று வருகிறேன். 

வ.உ.சி, திரு.வி.க, ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா, காந்தி, நேரு போன்ற இன்னும் பலரின் பொதுவாழ்வில் வெளிப்பட்ட‌ நிறை, குறைகளிலிருந்து, எனது அறிவு அனுபவ அடிப்படைகளில் பாடங்கள் கற்று;

தனி வாழ்விலும், பொதுவாழ்விலும், வெளிப்படும் சிக்னல்களை பாரபட்சமின்றி உணர்ந்து, ஒதுங்குவதற்கும், ஒதுக்குவதற்கும் திருக்குறள் (350) வழியில், அதற்கான‌ துணிச்சலுடனும், எனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடனும், பய‌ணிப்பதால்; (https://medium.com/@benjaminhardy/23-smart-ways-to-increase-your-confidence-productivity-and-income-5ee8a3158f31 )

அந்த இலக்கில் வெற்றி பெறுவதானது, நிச்சயமாகி வருகிறது. எனவே தமிழ்நாடானது தமிங்கிலீசர் நாடாகி வரும் போக்கானாது பின் திரும்ப (Reverse), தமிழ்நாடு மீளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.   


 குறிப்பு:

இந்தியாவில் ஆரம்பக் கல்வி வரையிலாவது, 'கட்டாய தாய்மொழிவழிக் கல்வியை' அமுல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் கொடுத்து வரும் அழுத்தமானது வெற்றி பெறவில்லையென்றால்: (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

தமிழ்ப் பத்திரிக்கைகளின் அச்சு(Print) மற்றும் இணைய‌ வாசகர் எண்ணிக்கையானது, இன்னும் 10 வருடங்களில் திடீர் சுனாமி வீழ்ச்சிக்கு உள்ளாவது நிச்சயமாகி விடும்.; ஹார்வர்ட் தமிழ் இருக்கையானது (Harvard Tamil Chair), லத்தீனைப் போல, தமிழைக் காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment