காலனிய, உலகமய பாதிப்புகளில் சிக்கிய;
கர்நாடக இசையும், தமிழ் இசையும், இசை ரசனையும்
'மனிதர்கள் இசை
ரசித்தலில், 'கட்டுப்பாட்டிற்கு உள்ளான மனம்' (Mental Conditioning) முக்கிய பங்கு வகிக்கிறது; இசை அழகியலுக்கு முரணாக, 'மிமிக் (mimic) ஓசை' போன்ற 'ஓசை சர்க்கஸை' (‘aural acrobatics’) கூட, 'மிக
உயர்ந்த இசை'யாக ரசிக்க முடியும்; ' என்பதே எனது கருதுகோளாகும்.
அந்த
கருதுகோளை
(postulate) நான்
உருவாக்க அடிப்படையாக இருந்த முன் தடயங்கள் (prima face
evidences) வருமாறு;
இசையில் 'ச,
ரி, க, ம, ப, த, நி" ஆகிய ஏழு சுரங்களுக்கு இடையில், இசை அமைத்தலில் (music
composing) அடுத்து அடுத்து வரும் சுரங்களுக்கு இடையிலான இசை உறவுகள் பற்றிய வெளிச்சமானது, பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்திருந்ததை;
எனது
ஆய்வுகள் மூலம் நான் வெளிப்படுத்தியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2442 )
அந்த
உறவுகளில் இசை அழகியலுக்கு அடிப்படையான உறவுகள் ‘ச - ப’ மற்றும் ‘ச –
ம’ ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களிலும்,சமஸ்கிருத இசை நூல்களிலும், நரம்பிசைக் கருவிகளில் நரம்புகளை மீட்டி, செவி மூலம் கூர்ந்து ஆராய்ந்து (ஓர்வுற்று), இசைச் சுர
உறவுகள்
(musical notes intervals) ‘ச
- ப’
மற்றும் ‘ச – ம’ இடைவெளிகளை சுருதி சுத்தமாக தீர்மானிக்க முடியும் என்பதை விளக்கிய சான்றுகள் உள்ளன. அவ்வாறு தீர்மானிக்கப்படும் இடைவெளிகளின் அதிர்வு எண்களின் தகவுகள் (Frequency
Ratios), இசை இயற்பியல் (Physics of
Music) ஆய்வுகள் மூலம் கணக்கிடப்பட்டிருக்கின்றன. ( Page 157; ‘Physics of Music’ by Alexander Wood)
இசை
இயற்பியல் அடிப்படையில், அந்த உறவுகளுக்கான அதிர்வு எண் தகவுகளின் (Frequency
Ratios) முக்கியத்துவம் தெரியாமல்;
ஆபிரகாம் பண்டிதர் தமது
'கருணாமிர்த சாகரம்'என்ற நூலில், "கர்நாடக சங்கீத முறைக்கு 2/3, 3/4 என்ற முறை ஒத்து வர மாட்டாது என்று நினைக்கிறேன்...... 3/4 என்ற ஒரு மோட்டா அளவைக் கொண்டு கண்டுபிடிக்கும் சுரங்கள் சரியானவை அல்ல என்று தெளிவாக தெரிகிறது" என்று அறிவித்துள்ளார். (பக்கம் 503 – 506)
அதே
போல, தம்பூராவை நீக்கி, கிறித்துவ பாதிரியார்கள் மூலம் கர்நாடக இசைக்குள் நுழைந்துள்ள சுருதிப் பெட்டியின் (Sriti box) அடிப்படையில், செல்வாக்கு பெற்றுள்ள இன்றைய கர்நாடக இசையை, கணினி வழி
ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள் எல்லாம்;
மேலே
குறிப்பிட்ட ஆபிரகாம் பண்டிதரின் கருத்தையே வழி மொழிந்துள்ளார்கள்;
என்பதையும், உலகில் 'செவ்விசை' (Classical Music) அடையாளத்துடன், ‘ ச - ப, ச - ம’ உறவுகளில், சுருதிக் குழப்பத்துடன் கர்நாடக இசையானது 'செவி
உணர் ஓசை சர்க்கஸாக' (‘aural acrobatics’) வலம் வரும் அபாயத்தையும் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
(Pitch Problems
in Indian Classical Music (1) & (2) ; http://musicdrvee.blogspot.sg/2015/03/normal-0-false-false-false-en-us-x-none.html)
எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்று தம்பூரா அடிப்படையில், சுருதி சுத்தமாக இசைக்கப்படும் இசைகளில், மேலே குறிப்பிட்ட அடிப்படையில், இசை அழகியல் உயர்ந்து வெளிப்படுவதில் வியப்பில்லை.
'தமிழ் இசை'யும் அந்த தவறான சுருதிப்பெட்டி திசையில், கர்நாடக இசையுடன், காலனியம் அறிமுகப்படுத்திய ‘ உயர்வு – தாழ்வு’ மோதலில் பயணிப்பதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2446 & http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
பொதுவாக எந்த
இசையை, எந்த எழுத்தாளரின் படைப்புகளை யார், யார் ரசிக்கிறார்கள்?
அத்தகையோரில், "சுயலாபத்திற்காக தமது சமூக முதுகெலும்பை (Social Spine) முறித்து பயணிக்கும் அறிவு ஜீவிகளே, புலமை வறட்சிக்கான சமூக இருளைப் பாதுகாத்து வரும் 'சமூக இருள் அரண்கள்' ஆவார்கள்." என்பதையும் வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/11/physics-of-tamil-music-1990.html )
மேலே
குறிப்பிட்ட ஆய்வில் நான் ஈடுபட, கீழ்வரும் நாலடியார் சான்றே முக்கிய காரணமாகும்.
பணிவு இல்
சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும். "
நாலடியார் 25:2
பாடலில் இடம் பெறும் 'சீர்' என்பதானது அசைகளின் கூட்டு என்பது மட்டுமின்றி,
சீருக்குள் 'பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' இருப்பதை, சிலப்பதிகாரம்,
அரங்கேற்று காதை உரையானது தெளிவுபடுத்தியுள்ளது. ‘தமிழ் இசையியல்’ (Tamil Musicology) தெரியாத, தமிழ்ப் புலமையாளர்களுக்கு,
அது விளங்காது.
ஒரு ஊரின் 'கோத்திரத்தை' அறிவதானது, அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் எந்தெந்த இசையை இசைக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.
ஒரு ஊரின் 'கோத்திரத்தை' அறிவதானது, அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் எந்தெந்த இசையை இசைக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.
பல
கிராமங்களாக இருந்த நிலையில், அந்த கிராமங்களில் இருந்த இசையையும், அந்த கிராமங்கள் ஒன்று சேர்ந்து சென்னை நகரமாக உருவான போக்கில், அந்த இசை பெற்ற மாற்றங்களையும், இன்று சென்னையில் உள்ள இசையையும், 'நாலடியார்' வழியில், ஆய்வு செய்தால், இன்று சென்னையில் வாழும் மக்களின் யோக்கியதை பற்றிய ஆய்வுக்கு அது துணை புரியும். ( ‘ The history of a city and the history of
music of the city are intertwined’ ; http://musicdrvee.blogspot.sg/2012/08/history-of-city-and-history-ofmusic.html )
அந்த
ஆய்வில், காலனியம் தமது சுயநலனுக்காகவும், இன்று 'உலகமய' சுயநலனுக்காகவும்,
சென்னையின் சமூக
சூழலில்; இசை ரசித்தலில் 'கட்டுப்பாட்டிற்கு உள்ளான மனம்' (Mental Conditioning) எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை, நான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். (To EN- JOY the Wonderful Music
Structures in Nature; Free from the Mental Conditioning ; http://musicdrvee.blogspot.sg/2013/01/normal-0-false-false-false_27.html )
'ஊர்
எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்'என்ற வகையில்;
மழை
வெள்ளம் வடியும் ஏரிகளையும், ஆறுகளையும், ஊழல் ‘அரசியல்வாதிகள் - அதிகாரிகள் கூட்டணி’ (அவர்களில் நமது
குடும்பத்தினரும், நண்பர்களும் இருந்தால் கூட கண்டு கொள்ளாமல்);
ஆக்கிரமித்ததை எதிர்க்காமலும், அங்கு வீடுகள் கட்டியும் வாழ்பவர்களின் யோக்கியதையையும், அவர்கள் தொடர்புள்ள இசை
மூலமும் கணிக்க முடியும். அந்த யோக்கியதைக்கும், காலனிய, உலகமய பாதிப்புகளுக்கு சென்னை மக்கள் உள்ளாகி வருவதற்கும் உள்ள தொடர்புகளையும், முறையான ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்த முடியும்.
புறத்தில் யோக்கியர்களாகவும், அகத்தில் சுயலாப கள்வர்களாகவும்,பயணிக்கும் படைப்பாளிகளும்(?), ரசிகர்களும் வளர்வதற்கு உதவும் சமூக
சூழலில், இசை ரசனை, எழுத்து ரசனை உள்ளிட்ட அனைத்து ரசனைகளும், சமூக அளவில், பாதகமான 'கட்டுப்பாட்டிற்கு உள்ளான மனம்' (Mental Conditioning) தொடர்பான, சமூக செயல்நுட்பத்தின் விளைவுகளே ஆகும். அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து, உணர்ச்சிபூர்வ வழிபாட்டு போக்குகளை ஊக்குவிப்பதானது, அந்த தீய சமூக செயல்நுட்பத்திற்கு வினை ஊக்கியாக (Catalyst) செயல்படும் ஆபத்தினை விளைவிக்கும்.
பாரதி, 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா, பிரபாகரன், காந்தி, நேரு, அம்பேத்கார், மார்க்ஸ், லெனின், சே குவேரா போன்று இன்னும் பலரை எல்லாம், வழிபாட்டில் சிக்க வைக்கும் 'ரசனை'யானது;
'கட்டுப்பாட்டிற்கு உள்ளான மனம்' (Mental Conditioning) என்ற சமூக செயல்நுட்பத்தில், தமது ரசனையை சிறைக்கைதியாக்கி, அந்த போதையில் பயணிப்பவர்கள் எல்லாம், எந்த அளவுக்கு அந்த போதையிலிருந்து விடுதலை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழும், தமிழ்நாடும் மீளும்.
இசை ஆய்வின் அடிப்படையில் உருவாக்கியிருந்த துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருதுகோளுக்கு (postulate), வலுவான பரிசோதனை சான்றாக (Experimental Evidence) உள்ள ஆய்வுகள் கீழே குறிப்பில் உள்ளன.
ஏற்கனவே நான்
எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளவாறு, எனது ஆய்வுகளின் வளர்ச்சிக்கு உதவும் நண்பர்களில் அதிக பங்களிப்பு வழங்கி வரும், லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியன் எனக்கு தேடி தந்த ஆய்வுகளே, கீழே குறிப்பில் உள்ளவையாகும்.
குறிப்பு:
‘Music is not for ears; We
never just hear music. Our experience of it is saturated in cultural
expectations, personal memory and the need to move’-
Elizabeth Hellmuth Margulis is director of the music cognition lab
at the University of Arkansas, a trained concert pianist, and the author of On
Repeat: How Music Plays the Mind (2013).
Excerpts:
‘Culture and experience can change how music is heard, not
just how people derive meaning from it………….
Despite sometimes being thought about as an abstract art form,
akin to the world of numbers and mathematics, music carries with it and is
shaped by nearly all other aspects of human experience: how we speak and move,
what we see and know. Its immense power to sweep people up into its sound
relies fundamentally on these tight linkages between hearing and our myriad
other ways of sensing and knowing……
People heard these tritones as ascending or descending (the first
note lower or higher than the second) depending on the linguistic background in
which they had been raised. Speakers of English who grew up in California
tended to hear a particular tritone as ascending, but English speakers raised
in the south of England tended to hear it as descending. Chinese listeners
raised in villages with different dialects showed similar differences. A striking
characteristic of this ‘tritone paradox’ is that listeners who hear the
interval as ascending generally experience this upward motion as part of the
perception, and have trouble imagining what it would be like to experience it
the other way, and vice versa for listeners who hear it as descending. The
effect influences what feels like the raw perception of the sound, not some
interpretation layered on later. Culture and experience can change how music is
heard, not just how people derive meaning from it.
No comments:
Post a Comment