மறைந்த இசை அறிஞர் தஞ்சை தன்ராஜ்: குருவிடம் காண்பிக்க வேண்டிய நன்றி;
பயின்ற மாணவர்களும், பழகிய நண்பர்களும் வெளிவருவார்களா?
‘தமிழிசையின் இயற்பியல்’ (Physics of Tamil Music) என்ற எனது
முனைவர் பட்ட
ஆய்வு
தொடர்பாக, 1990-களில் நான்
பயன்படுத்திய அரிய
நூலகங்களில் ஒன்று, சென்னை
திருவான்மியூர் கலாசேத்ரா அருகில் உள்ள
'உ.வெ.சா நினைவு
நூலகம்'.
அந்நூலகத்தில் சுமார்
30 பக்கங்களுக்குள் இருந்த
ஒரு
மிகச்
சிறிய
புத்தகம் என்னை
அதிர்ச்சி இன்பத்திற்குள்ளாக்கியது.
சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 -> பிரம்ம மேள பிரமாணம்’ - தஞ்சை தன்ராஜ்’ என்பதை தலைப்பாகக் கொண்டு, அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன்.
சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 -> பிரம்ம மேள பிரமாணம்’ - தஞ்சை தன்ராஜ்’ என்பதை தலைப்பாகக் கொண்டு, அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன்.
அப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்தில் உள்ள
வட்டப்பாலை முறை,
மேற்கத்திய இசை
முறை,
மேளகர்த்தா ராக
அமைப்பு உள்ளிட்ட கர்நாடக இசை ,ஆகியவற்றினை பற்றிய
அரிய
ஆராய்ச்சி முடிவுகள் இருந்தன.
இப்படிப்பட்ட அரிய
நூலை
பதிவு
செய்ய
வேண்டும் என்று
முடிவு
செய்து, எனது
முனைவர் பட்ட
ஆய்வில், அந்நூலைக் குறிப்பிட்டுள்ளேன். அதன்
பின்,
அவரைப்
பற்றி
நான்
கேள்விப்பட்டவற்றை, கீழே
தொகுத்து குறிப்பிட்டுள்ளேன்.
இவை எந்த
அளவுக்கு நம்பத்
தகுந்தவை என்பதை,
இனிவரும் ஆய்வுகள் தான்
தெளிவுபடுத்த வேண்டும்.
1. தஞ்சை மாவட்டத்தில் ஒரு
கிறித்துவ பாதிரியரால் அனாதையாகக்(orphan) கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
2. இசையில் நிபுணராகும் அளவுக்கு அவர் பெற்ற இசை
தொடர்பான கல்வி
பற்றி
எந்த
தகவலும் இல்லை.
3. சென்னை மைலாப்பூர் தெப்பக்குளம் எதிரேயுள்ள சாய்
லாட்ஜில்(Sai Lodge) பிரம்மச்சாரியாக, சாகும்
வரை
ஒரு
அறையில் வாழ்ந்து, இசை
வகுப்புகள் நடத்தி
வந்துள்ளார்.
4. இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட இசை
அமைப்பாளர்கள் அவரிடம் இசை
பயின்ற
மாணவர்களில் அடங்குபவர் .
5. குடிப்பழக்கம் உள்ளவர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி திரை இசையில் கொடி
கட்டி
பறந்த
காலத்தில், இரவில்
அவரது
அறைக்கு சென்று,
' ஸ்காட்ச் விஸ்கி'(scotch
whisky) பாட்டிலைக் கொடுத்து, அவரிடம் இருந்து, இசை
நோட்ஸ்களைப்(Music Notes) பெற்று, தமது
திரை
இசையில் பயன்படுத்தியுள்ளனர்.
6. இளையராஜா பிரபல திரை இசை
அமைப்பாளரான
பின்னரே அவர்
மறைந்தார். அவரது
இறுதிச் சடங்குகளை தமது
செலவில் இளையராஜா செய்து
முடித்து, அவர்
அறையிலிருந்த 'அனைத்தையும்' தனது
வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
7. அவர் இசை தொடர்பாக எழுதிய
குறிப்புகள் பற்றி
இளையராஜா எதையும் வெளிப்படுத்தவில்லை. அதைப்
பற்றி
பேசுவதையும் விரும்புவதில்லை.
8. அவரின் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே
இளையராஜா திரை
இசையில் கொடி
கட்டி
பறந்தார். அவை
முடிந்தவுடன், அவர்
'ஹிட்'(Hits)
பாடல்கள் கொடுப்பதும் முடிந்து விட்டது.
திருவாளர்கள் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் போன்று
அவருக்கு மாணவர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தவர்கள் தான்,
மேலே குறிப்பிட்டுள்ளவை, எந்த
அளவுக்கு சரி,
அல்லது
தவறு
என்று
தெளிவுபடுத்த வேண்டும்.
உலகப்புகழ் பெற்ற குழந்தைகள் பாடலான 'டுவிங்கில் டுவின்கில் லிட்டில் ஸ்டார்' (Twinkle twinkle little star ) பாடல் போன்ற பலவற்றை மொசார்ட் பிரெஞ்சு மொழியில் இருந்த பாடல்கள் அடிப்படையில் உருவாக்கினார். (https://en.wikipedia.org/wiki/Ah!_vous_dirai-je,_maman) எனவே ‘டிஜிட்டல்’ (Digital) யுகத்தில் எளிதாகி வரும், உலகில் எந்த இசையிலும் 'ரிஷி மூலம், நதி மூலம்' போன்ற ஆய்வுகள் எல்லாம், அந்த மூலத்திலிருந்து, அந்த இசையமைப்பாளர் இன்று நாம் ரசிக்கும் இசையை எவ்வாறு உருவாக்கினார்? என்பது தொடர்பான, அவரது திறமைக்கு சான்றாகுமே தவிர, மொசார்ட் போன்றவர்களை இழிவுபடுத்துவதாகாது.
தன்ராஜ் பற்றிய எனது முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர் நாகார்ஜுனன் (பெயர் எனது நினைவில் உள்ளபடி) சென்னையில் மாநிலக்கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில், என்னை சந்தித்தார். தன்ராஜின் இசைக் குறிப்புகள் என்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். நான் உ.வெ.சா நூலகத்தில் படித்த அந்த புத்தகத்தைப் பற்றி சொன்னேன். இளையராஜாவிடம் அது பற்றிய தகவலைப் பெற பலர் முயன்றும் ஒன்றும் பலனில்லை, என்று வருத்தத்துடன் என்னிடம் சொல்லி, விடை பெற்றார்.
தன்ராஜ் போன்ற சாதனையாளர்களுக்கு, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) பயணித்த வாழ்வே இன்பமயமாகும்; சுயலாப வலைப்பின்னல்கள் மூலம் பணம், புகழ் ஈட்டும் நாட்டமின்றி. ஆனால் அத்தகையோரை எல்லாம் இருட்டில் தள்ளி விட்டு, ஊழல் தலைவர்களுக்கு 'வாலாட்டி வளமாகும்' புலமையாளர்கள்(?) எல்லாம் செல்வாக்குடன் வலம் வர அனுமதிக்கும் தமிழ்நாடு உருப்பட முடியுமா? இயற்கையின் சாபத்திலிருந்து தப்ப முடியுமா? அந்த பாதகப் போக்கிலிருந்து தமிழ்நாடு மீள வேண்டாமா?
உள்ளார்ந்த ஈடுபாடு(Passion) என்றால் என்ன? என்றும், அதன் மூலம் கிடைக்கும் இன்பம் என்ன? என்று தெரியாமல், 'விருது, செல்வம், செல்வாக்கு'க்கு ஏங்கியே வாழும், மன நோயாளித் தமிழர்கள் அதிகரித்து வரும் நாடாக, தமிழ்நாடு இருக்கிறது.( http://tamilsdirection.blogspot.sg/2016/02/style-definitions-table.html )
அந்த சமூக நோயில் பலியாகாமல், தமிழ்நாட்டில் மேற்கத்திய இசை,
கர்நாடக இசை, தமிழ் இசை பற்றிய ஆழ்ந்த புலமையுடன் வாழ்ந்து மறைந்த இசை வல்லுநர் தன்ராஜ்
ஆவார்.
உ.வெ.சா நூலகத்தில் உள்ள
அந்த
புத்தகம் மட்டுமே அதற்கான சான்று.
கூடுதல் சான்றுகளை அவரிடம் இசை
படித்த மாணவர்களும், தொடர்பில் இருந்த
நண்பர்களும் தான்
வெளிப்படுத்த வேண்டும். அது
'குருவிடம்' காண்பிக்க வேண்டிய நன்றியுமாகும்; நட்புக்கான இலக்கணமுமாகும். அவற்றில் தவறும் போது, இயற்கையின் போக்கில், அதற்கான சமூக சாபத்திலிருந்து(Curse), நான் உள்ளிட்டு எவரும் தப்ப முடியாது, என்பதையும் நான் அறிவேன்.
சுயலாபங்களுக்காக, தமது
நேர்மை
வழிகாட்டியிலிருந்து (ethical compass) தடம்
புரளும் வாழ்க்கையானது, இழிவான
திசையில் பயணிப்பதையும் தவிர்க்க முடியாது, என்பதை
கீழ்வரும் சான்றுகளும் உணர்த்துகின்றன.
‘It blows me away how often I see people throw their
value-systems out the door in hopes for quick success.
தன்ராஜின் இசைக்குறிப்புகள் கிடைத்து, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவற்றைத் தொகுத்து தரும்(Editing) பணியை எந்த கட்டணமுமின்றி (without remuneration) நான் செய்து தர விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதை நூலாக வெளியிட, என்னால் இயன்ற நிதி உதவியையும் செய்வதும், எனக்கு மகிழ்ச்சி (Joyful) தரும் செயலாகும்.
'ராஜா அம்மணமாக இருக்கிறார்' என்று சொல்ல முயலும் தமது குழந்தைகளை
அச்சுறுத்தி, 'ராஜாவின் மாய உடை அழகு' என்று சொல்ல வைக்கும் பெற்றோர்கள் அதிகரித்து
வரும் நாடாக தமிழ்நாடு உள்ளது; அந்த சமூக இருளின் வலிமையின் 'சிக்னலாக'. ( http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_12.html
)
இசைத் துறை மட்டுமின்றி, இலக்கியம், மனித உரிமை, பெண்ணுரிமை, அரசியல், ஊடகம், உள்ளிட்ட எல்லா துறைகளிலும். செல்வாக்கான நபர்களுக்கு 'வெண் சாமரம்' வீசி பலன் பெற்று, அநீதிகளை அறியும் வாய்ப்புகளையும் 'போனஸாக' பெற்று, வாழ்ந்து வரும், 'அறிவு ஜீவிகள்' எல்லாம், தமக்குள் 'கிசுகிசு' பாணியில் பேசி மகிழும் சமூகக் கேடான தடையான (Socially Harmful Insulation) போக்கே, மேலே குறிப்பிட்ட 'சமூக இருளை'ப் பாதுகாத்து வருகிறது. 'அந்த அறிவு ஜீவிகளின்' எடுபிடிகள் எல்லாம், அதே 'கிசு கிசு பாணியில்' மகிழ, சாலை ஓர தேநீர் கடைகள் வரை அவை பரவ, 'போலியான' புகழ்ச்சிகளுடன் கூடிய சமூகப் போக்கானது, சமூக புற்று நோயாக வளர்ந்து, தமிழ்நாட்டில் புலமை வற்றும் போக்கினை ஊக்குவித்து வருகிறது.
'சாதாரண மனிதர்களை கிள்ளுக்கீரையாகவும், தம்மைப் போன்ற(?) 'ஊடக வெளிச்ச முற்போக்குகளை', 'மதிக்கத் தக்கவர்களாகவும்' கருதி, அம்பலமாகாமல் வலம் வந்த/வரும் முற்போக்குகள், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்களா? தமிழ்நாட்டிலும் அந்த போக்கானது, 1944க்குப்பின் தான் முளைவிட்டு, வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.' (http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )
தமிழ்நாட்டில் இருட்டில் மறைந்துள்ள புலமையாளர்களை எல்லாம், வெளிச்சத்திற்கு கொண்டு வர, நம்மால் இயன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்; ‘டிஜிட்டல்’ (Digital) யுகத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் சமூக சூழலில்.
சுயலாப நோக்கின்றி மேற்கொள்ளப்படும், அது
போன்ற
முயற்சிகளில் நாம்
ஈடுபடும் போது, இயற்கையின் போக்கில், அதற்கான சமூக
ஆசீர்களை (Blessings), சமூக
வளர்ச்சிக்காக நாம்
பெறுவதையும், எந்த
சக்தியாலும் தடுக்க
முடியாது, என்பதையும் நான்
அறிவேன்.
“We warriors of light must be prepared to have patience in
difficult times and to know the Universe is conspiring in our favor, even
though we may not understand how………. whoever
you are, or whatever it is that you do, when you really want something, it's
because that desire originated in the soul of the universe.... The soul of the
world is nourished by people's happiness…… When you want something, all the
universe conspires in helping you to achieve it. ” – Paulo Coelho- ‘The
Alchemist’
செ.அ.வீரபாண்டியன்
தமிழ்நாடானது 'சுயலாப உணர்ச்சிபூர்வ' இருளிலிருந்து, பாரபட்சமற்ற 'அறிவுபூர்வ' வெளிச்சத்திற்கு வருவதன் தொடக்கமாகவே, தஞ்சை
தன்ராஜின் இசை
ஆராய்ச்சிகள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதானது அமையும்.
இசைத் தகவல் தொழில்நுட்ப நிபுணர்
Music Information Technologist
http://drvee.in/
No comments:
Post a Comment