வைரமுத்து 'கோழை இரட்டை வேடப் போக்கில்' பயணிக்கிறாரா?
ஆண்டாள்
பற்றி இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள்
காட்டியதாக விளக்கமளித்து;
'ஆண்டாள்
விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது, என் நோக்கமன்று' என்றும்,
'அவ்வாறு புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்' வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அந்த
ஆய்வினை மேற்கோள் காட்டுவதற்கு முன், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள
கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு அறிவுபூர்வமானவை
என்று ஆராயாமல், அதனை வைரமுத்து வெளிப்படுத்தியிருந்தால்,
தான் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை
என்பதையும் தெரிவித்திருக்க வேண்டாமா? (குறிப்பு
கீழே)
மேற்கத்திய
உலகில் கிறித்துவ முஸ்லீம் மதங்களின் கடவுள்கள், குறியீடுகள், மதநூல்கள் பற்றியும் ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
உதாரணமாக,
ஏசுநாதரின் உண்மையான பெற்றோர்கள் யார்? என்பது குறித்த ஆய்வுகளை வெளிப்படுத்துவதானது, மேற்கத்திய உலகில் வாழும் கிறித்துவர்களின் மனதை புண்படுத்தியதாக, எந்த
எதிர்ப்பும் வெளிப்பட்டதாக தெரியவில்லை. (‘The evidence
of the Rabbis’; https://www.bibliotecapleyades.net/biblianazar/esp_biblianazar_7.htm
) ஆனால் அதனை வைரமுத்து வெளிப்படுத்தினால்,
அதனால் மனம் புண்பட்ட கிறித்துவர்கள்
எல்லாம், வைரமுத்துவை கண்டித்து போராட்டம் நடத்த மாட்டார்களா?
முகம்மது
நபியை இழிவுபடுத்தி கார்டூன்கள் வெளிவந்த போது, உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வெளிப்பட்டன. பின் அதற்காக மன்னிப்பு
கேட்டும், அந்த எதிர்ப்புகள் அடங்கவில்லை.
(https://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy#Response_to_protests_and_reprintings
)
மக்களின்
வழிபாட்டிற்கு உள்ளான கடவுள்கள், தலைவர்கள் தொடர்பான ஆய்வுகளை, மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தும்போது;
அவ்வாறு
வழிபடுபவர்களின் மனம் புண்படும் வகையில்
வெளிப்படுத்துவதானது, பொது அமைதிக்கு ஊறு
விளைவிக்கும் பொறுப்பற்ற செயலாகும்.
அதிலும்
கிறித்துவ, முஸ்லீம் மதங்களில் உள்ள வழிபாட்டாளர்களுக்கு அஞ்சி வாழும்
போக்கில்;
இந்து
கடவுள்களையும், மதநூல்களையும் இழிவுபடுத்தும் 'கோழை இரட்டை வேடப்
போக்கினை' கண்டிக்காத 'முற்போக்குகள்' வாழும்
தமிழ்நாட்டில், கட்சித்தலைவர்களின் நூல்களை அறிவுபூர்வமாக கூட விமர்சிக்கமுடியாத 'அறிவு ரவுடித்தன
போக்கு' இருப்பதற்கு சான்றாகவே;
'தொல்காப்பிய
பூங்காவில் களைகள்' நூலாசிரியரின்
வாழ்வானது, வரலாற்று சான்றாகி விட்டது. வைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்கு, தமிழ்
மீது நேர்மையான
அக்கறை இருந்திருந்தால்;
'தொல்காப்பிய
பூங்காவில் களைகள்' நூல் எழுதிய தமிழ்
அறிஞர் நக்கீரன் (http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802
);
சாகும்
வரை, தமது ஆர்வலர்களின் பாதுகாப்பில்
வாழ்ந்திருக்க வேண்டிய நெருக்கடியானது, அவருக்கு வந்திருக்குமா?
'தமிழ்
உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ
முட்டாள்களை வளர்த்து, 'கோழை இரட்டை வேடப்
போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும் 'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில்,
அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத 'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும், துக்ளக், தினமலர் தவிர்த்த, மீடியா வெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு;
தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?
வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? (‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்; http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )
ஊழல் திமிங்கிலங்களின் அரவணைப்பில் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் சிக்கி, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைரமுத்து போன்ற பிரபலங்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் அடிப்படைக்கல்வியைக் கூட ஆங்கிலவழியில் பயின்றிருந்தால், அது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
மேற்கத்திய குறிப்பாயத்தின் (Western Paradigm) 'மன அடிமையாக', அத்தகைய ' கோழை இரட்டை வேடப் போக்கின்' சான்றாக, ' மாதொரு பாகன்' வெளிவந்ததுள்ளதையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அத்தகைய 'கோழை இரட்டை வேடப் போக்கில்' இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் எல்லாம், சமூக குற்றம் புரியும் நோக்கில் செயல்படுபவர்கள் ஆவர். (The standard common law test of criminal liability is expressed in the Latin phrase actus reus non facit reum nisi mens sit rea, i.e. "the act is not culpable unless the mind is guilty". ( https://en.wikipedia.org/wiki/Mens_rea )
தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?
வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? (‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்; http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ் துணையுடன் தமிழ்வழிக்கல்வியை மீட்பது பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
) ஆங்கிலவழிக்கல்வியின் வளர்ச்சிக்கு கல்வி
வியாபார ஊழலே முக்கிய காரணமாக இருப்பதால், ஊழல் ஒழிப்பும் தமிழ்வழிக்கல்வி மீட்சியில்
உள்மறைந்துள்ளது.
மேற்கத்திய குறிப்பாயத்தின் (Western Paradigm) 'மன அடிமையாக', அத்தகைய ' கோழை இரட்டை வேடப் போக்கின்' சான்றாக, ' மாதொரு பாகன்' வெளிவந்ததுள்ளதையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அத்தகைய 'கோழை இரட்டை வேடப் போக்கில்' இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் எல்லாம், சமூக குற்றம் புரியும் நோக்கில் செயல்படுபவர்கள் ஆவர். (The standard common law test of criminal liability is expressed in the Latin phrase actus reus non facit reum nisi mens sit rea, i.e. "the act is not culpable unless the mind is guilty". ( https://en.wikipedia.org/wiki/Mens_rea )
மேற்கத்திய
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இது போன்ற ஆய்வுகள்
எல்லாம் பெரும்பாலும் ஒரு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு
வருவதானது, வைரமுத்துக்கு தெரியாதா?
உதாரணமாக
அமெரிக்காவில் இர்சிக், ஹார்ட்கெரேவ், உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் நீதிக்கட்சியை மட்டம் தட்டி, அதை விட தி.க மேல் என்றும்,
பின் தி.கவை மட்டம்
தட்டி, அதை விட தி.மு.க மேல்
என்றும், மேற்கொள்ளப்பட்டதை, நான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html
)
மேற்கத்திய
பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் தொடர்பாக வெளிப்பட்ட ஆய்வினை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய வைரமுத்து, அவரின் திரைப்படப் பாடல்களில், எழுத்தொலிகளின் சுருதி சுத்தமானது குறைபாடுள்ளதா? என்பது தொடர்பாக, நான் வெளிப்படுத்தியுள்ள ஆய்வினை தெரிந்து
கொள்வதில் ஆர்வம் காட்டினாரா? ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html
)
தெரிந்தும்
தனது செல்வாக்கின் மூலம் அதனை அறிவுபூர்வமான பொது
விவாதத்திற்கு உட்படுத்தாமல், இருட்டடிப்புக்கு உள்ளாக்கியுள்ளாரா? என்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சமாகும்.
தமிழைத்
திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கி, சிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா? ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html
)
என்பது
பற்றி வைரமுத்து இதுவரை கவலைப்பட்டாரா? இனியாவது கவலைப்படுவாரா?
உலக
அள்வில் புகழ் பெற்ற மேற்கத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்டன் பொல்லாக் தமிழைப் பற்றி, அபத்தமான, தவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டதை வைரமுத்து இதுவரை கண்டித்தாரா? இனியாவது கண்டிப்பாரா? (http://tamilsdirection.blogspot.in/2017/11/tamil-chair.html
)
இல்லையென்றால்,
தமிழை முதலில்லாத மூலதனம் (capital without investment) ஆக்கிய பொதுவாழ்வு வியாபாரியாக, அவர் தமிழ்நாட்டின் வரலாற்றில்
இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றிய சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில் உள்ள 'பிரபல' தலைவர்கள் எவரும் கண்டித்தார்களா? அவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி தமிழர்' வரையறையின் அடிப்படையில், குறைந்த பட்சம், அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html ) மாறாக அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்ப அரசியலை அவர்களும் ஆதரித்ததானது, எதை உணர்த்துகிறது? ஆதாய நோக்கற்ற இயல்பான எதிர்ப்பு வலிமையின்றியும், அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, 'சமூக கோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானது, ஆண்டாள் சர்ச்சையில், வைரமுத்துவின் மூலம் வெளிப்பட்டுள்ளதா?
என்பது
போன்ற கேள்விகளை எல்லாம்;தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றிய சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில் உள்ள 'பிரபல' தலைவர்கள் எவரும் கண்டித்தார்களா? அவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி தமிழர்' வரையறையின் அடிப்படையில், குறைந்த பட்சம், அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html ) மாறாக அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்ப அரசியலை அவர்களும் ஆதரித்ததானது, எதை உணர்த்துகிறது? ஆதாய நோக்கற்ற இயல்பான எதிர்ப்பு வலிமையின்றியும், அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, 'சமூக கோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானது, ஆண்டாள் சர்ச்சையில், வைரமுத்துவின் மூலம் வெளிப்பட்டுள்ளதா?
ஆண்டாள்
தொடர்பான சர்ச்சையில், திருக்குறளுக்கு (
711 & 713) முரணாக அவை அறியாமல் பேசிய வைரமுத்துவின் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களின் மனசாட்சிக்கு முன்வைக்கிறேன். வைரமுத்துவுக்கு
ஆதரவாக கூட்டாக அறிக்கை வெளியிட்ட, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மோடியை எதிர்த்து கூட்டாக அறிக்கை வெளியிட்ட, எழுத்தாளர்களும் மேலே குறிப்பிட்ட, வைரமுத்துவை
நோக்கி எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு, அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டு, விடைகள் கண்டு, பயணிப்பார்களா?
குறிப்பு :
'வைரமுத்து
சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்' ; http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251
No comments:
Post a Comment