எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (5);
குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்புள்ளவையா?
‘உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics)
சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī
of Pāṇini) அடிப்படையில் உருவானது’
(‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern
linguistics’;http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25
);
என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html
) எனவே உலக மொழியியலில் தொல்காப்பியத்தின் அடிப்படையிலான 'இசை மொழியியல்' அரங்கேறுவதற்கு, சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī
of Pāṇini) அடிப்படையில் ஏற்கனவே அரங்கேறியுள்ளதானது துணை புரியும்.
அந்த நோக்கிலேயே,
Harold S. Powers, Steven Brown, உள்ளிட்ட இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் வலிமையில்;
சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்'
(Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்'
(Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html
)
'Natural Language
Processing(NLP)' என்ற துறையில்,
‘மொழியியல் – Linguistics’ அடிப்படையில்,
speech to text, text to speech, machine translation, grammar check, etc போன்றவை எல்லாம், எவ்வளவு வியாபார வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன?
என்ற விபரம் அறிந்தவர்களுக்கு எல்லாம், 'இசை மொழியியல்' (musical
linguistics) என்ற துறை உருவாகி, 'lyrical
text to music, vice versa, music grammar check, etc' போன்ற ஆய்வுகளை முன்னெடுக்கும் போது, புதிதாக எவ்வளவு வியாபார வேலைவாய்ப்புகள் உருவாகும்? என்று யூகிக்க முடியும்.
இசைக்கும் மொழிக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி, நீண்ட காலமாக பல ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வரும் பின்னணியில், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையானது, உலக அளவில் 'நவீன மொழியியல்' (Modern
Linguistics) துறையில் உலகப்புகழ் பெற்ற நோவாம் கோம்ஸ்கியின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனது ஆய்வுக்கட்டுரையினைப் படித்து, அவர் கீழ்வரும் கருத்தினை தெரிவித்துள்ளார்.
“Very intriguing. I hope all of this can become part of an
emerging discipline of ‘musical linguistics’ " - Prof.Noam Chomsky
அது போலவே இந்தியாவில் NLP துறைக்கான உயர்தொழில் நுடப ஆய்வுக்கூடங்களுடன் முன்னணியில்,
ஐதாராபாத்தில் மத்திய அரசின் ‘Indian
Institute of Information Technology (IIIT)- இல் Language Technologies Research Center இருக்கிறது.
அதன் தலைவர் ராஜிவ் சங்கால்,
மேலே குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரையினைப் படித்து கீழ்வரும் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
”Very interesting. And
happy to know that you are working on it.''
- Dr. Rajeev Sangal, FNAE
Professor (Area: Computer Sc & Engg),
Language Technologies Research Center, IIIT Hyderabad
தொல்காப்பியத்தின் அடிப்படையில்
'இசை மொழியியல்' என்ற துறை தனியாக உருவாக இவ்வளவு அங்கீகாரம் பெற்ற பின்னும், கூடுதலாக
பிரிட்டனில் உள்ள இசை அறிஞர் ரிச்ச்ர்ட் வெட்டஸுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையினை
அனுப்பினேன். ஏனெனில், அந்த ஆய்வுக்கட்டுரையில், குடுமியான் மலை இசைக்கல்வெட்டினையும்
பல சான்றுகளில் ஒன்றாக சேர்த்திருந்தேன். அவரின் குடுமியான் மலை இசைக்கல்வெட்டு ஆய்வு
தொடர்பாக, நான் அவருக்கு அனுப்பிய சான்றினையும், அவர் எனக்கு நன்றி தெரிவித்து மடல்
எழுதியதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
Thank you so much for this
very interesting information. I will look up the inscription you mention at the
earliest opportunity. I would also be interested to know about any other
examples from Tamil literature about the relationship of vowels and musical
notes. I’m very happy to know that
you have found my article useful.
Best wishes
Richard Widdess
Professor of Musicology, Research
Tutor and Acting Head of Department
Department of Music, School
of Oriental and African Studies
University of London
Note: The reference in the
ancient Tamil text ‘Senthan thivAkaram’ relating the seven long vowels in Tamil
to the seven music notes Sa, Re, Ga, Ma , Pa , Dha, Ne was sent to Prof’Richard
Widdess
'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'
தொடர்பான மேலே குறிப்பிட்ட எனது ஆய்வுக்கட்டுரையினைப் படித்த பின், ரிச்சர்ட் விட்டஸ்
கீழ்வரும் ஐயங்களை எழுப்பி எனக்கு மடல் எழுதியுள்ளார்.
Dear Dr Veerapandian
Thank you for sending me
your very interesting article. I agree
that it is tempting to see a connection between the Kuḍumiyāmalai
Inscription and the system of Tamil phonetics, and I look forward to learning
in more detail how vowels were associated with musical pitches in that system.
But we should perhaps remember that the inscription appears to be instrumental
music, and it only uses four vowels, not the seven you refer to. And the
linguistic elements of the inscription are mostly Sanskrit, apart from one
short colophon in Tamil. Finally the melodies are ascribed in the inscription
to grāmarāgas
with Sanskrit names, not to the Tamil pans. So it isn't clear to me how the
notation of the inscription could be related to Tamil phonetics. But if you
have any further evidence I'd be very interested to know about it.
Best wishes
Richard Widdess
'ச, ரி, க, ம, ப, த, நி' என்ற ஏழு சுர எழுத்துக்களும், தமிழில் 'ஆ, ஈ, ஊ,
ஏ, ஐ, ஓ ஒள' எனும் ஏழு நெடில் உயிரெழுத்துக்களுடன் தொடர்புடையவை என்ற சான்றின் அடிப்படையில்
தான், குடுமியான்மலை இசைக்கல்வெட்டினையும், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான
சான்றுகளில் சேர்த்திருந்தேன். ஆனால் குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் ' ஆ, ஈ, ஊ, ஏ'
என்ற நான்கு உயிரெழுத்துக்கள் மட்டுமே, ஏழு சுரங்களுடன் இணைந்துள்ளன. எனவே ரிச்சர்ட்
வெட்டஸ் அது தொடர்பாக எழுப்பிய ஐயம் சரியே ஆகும்.
யாழ் போன்ற நரம்பிசைக்கருவிகளில்,
'ச, ரி, க, ம' ஆகிய நான்கு சுரங்களில் இருந்து, எவ்வாறு ' ப, த, நி' மற்றும் வலிவு தானம் - மேல் ஸ்தாயி – higher
octave 'ச' வைப் பெற முடியும் என்பதற்கான சான்றுகள்
சிலப்பதிகாரத்திலும், பஞ்ச மரபிலும் உள்ளன. அதனை எனது 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music - 1996) முனைவர் பட்ட ஆய்வேட்டில் விளக்கியுள்ளேன்.
ஆனால் அடுத்து அவர் எழுப்பியுள்ள
கீழ்வரும் ஐயங்கள் மிக முக்கியமானவையாகும்;
தமிழ்நாட்டில் சமஸ்கிருத வெறுப்பு
நோயின் காரணமாக, தமிழுக்கு விளைந்துள்ள பாதிப்புகளை எல்லாம் புரிந்து கொள்ள.
குடுமியான்மலை இசைக்கல்வெட்டில்
இசைச்சுரங்கள் தொடர்பான எழுத்துக்களும், வாசகங்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
அவற்றை 'தமிழ் இசையியல்'(Tamil Musicology) மற்றும் தொல்காப்பியத்தில் கண்டுபிடித்துள்ள
'இசை மொழியியல்' ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்பு படுத்த முடியும்?
மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான
விடைகள் பெற, குடுமியான் மலை இசைக்கல்வெட்டு, திருமயம், அதனருகே உள்ள மலையக் கோவில்
இசைக்கல்வெட்டுகள் தொடர்பான சான்றுகளை தேடி எடுத்து, விடைகள் எழுதும் முயற்சியில் தற்போது
ஈடுபட்டுள்ளேன்.
எனது ஆய்வு முடிவுகள் தொடர்பாக உணர்ச்சிபுர்வமாக எதிர்த்து கேள்விகள் கேட்டாலும், அறிவுபூர்வமாக கேள்விகள் கேட்டாலும், 'அந்த' கேள்விகளை எல்லாம், ஆர்வத்துடன் வரவேற்று, அவற்றில் வாதக்குறைபாடு இன்றி, உரிய சான்றுகளின் அடிப்படையில் இருப்பவை எவை?
என ஆராய்ந்து, எனது மனசாட்சிக்கும், அறிவுநேர்மைக்கும் உட்பட்டு முயற்சித்து, சான்றுகளைத் தேடி தெளிவு பெற்று, உரிய திருத்தங்களையும் பகிரங்கமாக அறிவித்து, பயணித்ததன் காரணமாகவே, இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மார்க்சிய - லெனினிய அறிவுடன் கூடிய 'பெரியாரியல்' புலமையாளனாகவும்(theoretician), இன்று உலக அளவில் அங்கீகாரம் பெறத்தொடங்கியுள்ள இசைத் தகவல் தொழில்நுட்பப் புலமையாளனாகவும்
(Music Information Technologist) வளர முடிந்தது.
ஆங்கில மொழியில் உள்ள நூல்கள்
எல்லாம் ஆங்கிலேயரால் மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. பிற மொழி புலமையாளர்களின் படைப்புகளும்
நேரடியாகவும், மொழிபெயர்ப்பு மூலமாகவும் ஆங்கிலத்தில் நூல்களாக வலம் வருகின்றன. அது
போலவே சமஸ்கிருதத்தில் தமிழ்ப்புலமையாளர்களும் நூல்கள் எழுதி வெளிவந்திருக்கின்றன.
அது போலவே தமிழ் நூல்களில், அவற்றில்
உள்ள கருத்துக்களில், எவை எவை, தமிழ்ப்புலமையுள்ள பிறமொழியாளர்களிடமிருந்து நேரடியாகவும்,
மொழிபெயர்ப்புகள் மூலமாக தமிழில் நுழைந்தவை? என்ற ஆய்வு அணுகுமுறையின்றி, உணர்ச்சிபூர்வமாக
பயணிக்கும் தனித்தமிழ் பற்றாளர்கள் எல்லாம் அறிவு வளர்ச்சி முடங்கியவர்களாகவும், அறிவு
வளர்ச்சிக்கு தடைகளாகவுமே, தெரிந்தும், தெரியாமலும் பயணிக்க நேரிடும். ( குறிப்பு
கீழே)
பல தமிழ்ப்புலவர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்கள் எழுதியது தொடர்பான சான்றுகள் எல்லாம், மலேசியாவில் நடந்த முதல் உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வுத்தொகுப்பின் மூலமாக உலகின் கவனத்தை ஈர்த்தன.
இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசாமி எழுதிய
‘The Dance of Shiva’ உள்ளிட்ட இன்னும் பல நூல்கள் (https://en.wikipedia.org/wiki/Ananda_Coomaraswamy#Works_by_Coomaraswamy
), தாகூரின் ஆங்கில நூலான The
English Gitanjali or Song Offerings, போன்ற இன்னும் பல இந்தியர்கள் எழுதிய நூல்கள் மூலமாக ஆங்கில மொழியின் பெருமை அதிகரித்தது. அது போலவே தமிழ்ப்புலவர்கள் எழுதிய சமஸ்கிருத நூல்கள் மூலமாக சமஸ்கிருத மொழியின் பெருமை அதிகரித்தது. தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத வெறுப்பின் காரணமாக இருளில் சிக்கிய இது போன்ற உண்மைகள் எல்லாம், வெளிச்சத்திற்கு வர வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது.
தமிழாயிருந்தாலும், சமஸ்கிருதமாயிருந்தாலும், ஆங்கிலமாயிருந்தாலும், வேறு எந்த மொழியாயிருந்தாலும், அந்தந்த மொழிகளில் உள்ள படைப்புகளில் உள்ள கருத்துக்கள் எல்லாம் அந்தந்த மொழிகளுக்கே சொந்தமாகாது. மாறாக விருப்பு வெறுப்பற்ற அறிவுபூர்வ ஆய்வின் மூலமே, அந்தந்த கருத்துக்களின் மூலங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான சான்றுகளுக்கு இணக்கமாக குடுமியான்மலை இசைக்கல்வெட்டு இருப்பதை உணர்த்தியுள்ள , வையாபுரிப் பிள்ளையின் கருத்துப்படி, கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'சேந்தன் திவாகரம்' நூலில் 'மிகுதியாய் காணப்படும் வடநூல் பொருள்கள்' இருப்பது பற்றியும் , அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தமிழ் இசையியல் வளர்ச்சியில் வடநூலார் பங்கு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது போலவே, வட நூல்கள் வெளிப்படுத்தியுள்ள இசையியலில், தமிழ்நூலார் பங்கு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான சான்றுகளுக்கு இணக்கமாக குடுமியான்மலை இசைக்கல்வெட்டு இருப்பதை உணர்த்தியுள்ள , வையாபுரிப் பிள்ளையின் கருத்துப்படி, கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'சேந்தன் திவாகரம்' நூலில் 'மிகுதியாய் காணப்படும் வடநூல் பொருள்கள்' இருப்பது பற்றியும் , அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தமிழ் இசையியல் வளர்ச்சியில் வடநூலார் பங்கு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது போலவே, வட நூல்கள் வெளிப்படுத்தியுள்ள இசையியலில், தமிழ்நூலார் பங்கு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழ் இசையியல் தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு (Complimentary
role) வகித்துள்ளன. அதற்கான காரணம் வருமாறு.
சமஸ்கிருதத்தில் எழுத்தின் ஒலிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன
(phonetically defined). அது சமஸ்கிருத மொழியின் தனித்துவ சிறப்பாகும். தமிழில் உயிரெழுத்துக்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மெய்யெழுத்துக்களின் எழுத்தொலிகள், அந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து அமையும்
(phonetically with one or more options). உதாரணமாக 'க' என்ற சொல்லானது, 'சக்கரம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும், ‘சங்கம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தமிழ் இசையியலில், 'ச, ரி, க, ம, ப, த, நி' ஆகிய ஏழும் மேலே குறிப்பிட்டவாறு, அந்தந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து ஒலிப்பவை ஆகும். எனவே தமிழ் இசையில் மாணவர்களின்
பயிற்சியில் சுருதி சுத்தமாக ஒலிக்க, ஏழு சமஸ்கிருத எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.
குடுமியான் மலை இசைக்கல்வெட்டில் ஏழு இசைச்சுரங்களும் சமஸ்கிருத எழுத்துக்களில் உள்ளதை ஆராயும் போது, மேலே குறிப்பிட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தில் shadja
(षड्ज) என்பது சுரப்பெயராகும். ஆனால் 'ச' என்ற சுரமானது,’ सा’ என்ற சமஸ்கிருத எழுத்தில் குறிக்கப்படுகிறது; சமஸ்கிருத சுரப்பெயரில் உள்ள முதல் எழுத்திலிருந்து வேறுபட்டு.
சமஸ்கிருத சுரப்பெயர்களிலிருந்து, சமஸ்கிருத இலக்கணப்படி, ஏழு சுர எழுத்துக்களைப் பெறமுடியாது, என்பதற்கு திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, ஆபிரகாம் பண்டிதர், வெளியிட்டுள்ளார். (பக்கம்
527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர்,
1917)
இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’
என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
குடுமியான்மலை இசைக்கல்வெட்டானது
நரம்பிசைக்கருவியில் இசை பயில்வது தொடர்பான கல்வெட்டாகும். எனவே அதில் ஏழு சுர எழுத்துக்களும் சமஸ்கிருத எழுத்துகளாக உள்ளன.
ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகள் சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் இடையிலான இசையியல்(Musicology) தொடர்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளர்களாலும், சமஸ்கிருதப் பற்றாளர்களாலும் இருட்டடிப்புக்கு உள்ளானதா? அதன் விளைவாக, குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத சுர எழுத்துக்கள் எல்லாம், தமிழ் இசையியலுக்கு தொடர்பற்றவையானதா?
என்று ரிச்சர்ட் விட்டஸ் உள்ளிட்ட உலக ஆய்வாளர்கள் கருத காரணமானதா? என்ற விவாதமானது, இனியும் இருட்டில் நீடிப்பதானது, தமிழ் இசையியலுக்கு கேடாகாதா?
குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் சுர எழுத்துக்கள் மட்டுமின்றி, அவை தொடர்பான வாசகங்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள கிரந்த எழுத்துக்கள் எல்லாம், தமிழ் மொழியாளர்கள் தங்கள் கருத்தினை சமஸ்கிருதத்தில் எழுதப் பயன்படுத்திய எழுத்துக்களாகும்.('The Grantha alphabet has traditional been used by Tamil speakers to write Sanskrit'; https://www.omniglot.com/writing/grantha.htm ) அந்த வாசகங்கள் தொடர்பான இசையியல் (Musicology)
கருத்துக்கள் எல்லாம் எவ்வாறு தமிழ் இசையியல் தொடர்பானவை? என்பது தொடர்பான சான்றுகளையும் தேடி தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
அந்த முயற்சியின் மூலமே, திருமயம், மலையக்கோவில், ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் ஆகிய இடங்களில் உள்ள இசைக்கல்வெட்டுகள் எல்லாம், இசைச்சுரங்களில் இருந்து எவ்வாறு இசையமைத்தல் உருவாகிறது? அவை எவ்வாறு தொல்காப்பியத்தில் உள்ள இசை மொழியியலுடன் தொடர்புள்ளவை? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தரும்.
தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் மேலே குறிப்பிட்டவாறு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின்(Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான இசை மொழியியல் இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது.
பேச்சில் இடம் பெறும் எழுத்தின் ஓசையானது, யாப்பிலக்கணத்தில் இசையாக அசையை உருவாக்கி, அசையின் மூலமாக சீரையும் தூக்கையும் உருவாக்கி, தொடர்ந்து மற்ற பிரிவுகளையும் வளர்த்து பாடலை முழுமையாக்குகிறது; சார்பற்ற(Objective) விதிகளின் துணையுடன்.
எழுத்தொலிகள் வரையறுக்கப்பட்ட சமஸ்கிருதத்தின் துணையுடன் தான், தொல்காப்பியத்தில் நான் கண்டுபிடித்துள்ள இசை மொழியியலில் NLP Application Development-க்கு தேவைப்படும் லாஜிக்குகளையும் உருவாக்க முடியும்.
தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் மேலே குறிப்பிட்டவாறு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின்(Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான இசை மொழியியல் இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது.
பேச்சில் இடம் பெறும் எழுத்தின் ஓசையானது, யாப்பிலக்கணத்தில் இசையாக அசையை உருவாக்கி, அசையின் மூலமாக சீரையும் தூக்கையும் உருவாக்கி, தொடர்ந்து மற்ற பிரிவுகளையும் வளர்த்து பாடலை முழுமையாக்குகிறது; சார்பற்ற(Objective) விதிகளின் துணையுடன்.
எழுத்தொலிகள் வரையறுக்கப்பட்ட சமஸ்கிருதத்தின் துணையுடன் தான், தொல்காப்பியத்தில் நான் கண்டுபிடித்துள்ள இசை மொழியியலில் NLP Application Development-க்கு தேவைப்படும் லாஜிக்குகளையும் உருவாக்க முடியும்.
தமிழ் மற்றும் இசை தொடர்பான படிப்புகளில் யாப்பிலக்கணம், தமிழ் இசையியல் (Tamil
Musicology) தொடர்பான எனது கண்டுபிடிப்புகள் எல்லாம், தமிழ்நாட்டு மாணவர்கள் பலன்கள் பெற முடியாத போக்கில், சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் தாமதமானது, ‘தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பாக நான் துவங்கியுள்ள ஆய்வுத் திட்டம் மூலமாக, உலக அளவிலான புலமையாளர்களின் அங்கீகாரத்துடன் முடிவுக்கு வரும் காலமும் நெருங்கி வருகிறது.
அநேகமாக மேற்கத்திய உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' இடம் பெற்ற பின்னர்;
தமிழ்நாட்டில் உள்ள மொழியியல் துறைகளும் 'வாலாக' அதனைப் பின்பற்றலாம். 'சுருதி', 'அத்தம்', சுருதித் தீர்மானிப்பு(Pitch
Standard), சுருதி சேர்த்தல்(Tuning)
உள்ளிட்ட இன்னும் பல கண்டுபிடிப்புகளை எல்லாம், தமிழ்நாட்டில் உள்ள இசைத் துறைகளும் அதே போக்கில் பாடத்திட்டங்களில் அதனை சேர்க்கலாம்; 20
வருட தேவையில்லாத தாமதத்திற்குப் பிறகு.
'நடக்காததை விட, தாமதமாக நடப்பது நன்று'
(Better late than never) என்ற பழமொழி எனது நினைவிற்கு வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html
)
குறிப்பு :
தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி', ஊரான் வீட்டுப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி' என்று பயணித்து;
தமிழ் இலக்கணத்தை, உலக அளவிலான ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல், தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற' பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா, தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்?
என்ற கேள்வியை எழுப்புவதற்கான காரணங்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )
அருமையான ஆய்வு சந்தக் கட்டோடு செய்யுள் எழுத இயலும் என்னால் இசையியலின்நுண்மங்களைபுரிந்து கொள்ள இயலும் அறிவு மிகக்குறைவு.பண்டிதரை அடிகளைஆர்வத்தால் முன்னர் வாசித்தது.அவ்வளவே கழகங்கள் தமிழுக்கு விளைத்த நன்றினும் கேடேமிகுதி, ஆய்வு தொடர்க வாழ்த்துகள்
ReplyDelete