Monday, October 1, 2018



மலேசியாவில் 2018 மே-யில் நடந்த ஆட்சி மாற்றம் மூலம் உருவானகருதுகோள்’ (Hypothesis);



மெய்ப்பிக்கும் சமூகவியல் பரிசோதனை(Sociological Experiment) தமிழ்நாட்டில் ?



நிகழ்காலத்தில் நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள், மற்றும் ஊழல்/நேர்மையற்ற குறுக்கு வழிகளில் பணம் ஈட்டாமல் வாழ்ந்து வரும் சாமான்யர்கள் ஆகியோருடன் உரையாடுகையில், அவர்களின் மனங்களில் கீழ்வரும் போக்கு வெளிப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் எப்போது ஊழல் ஒழிந்து ஊழலற்ற ட்சியானது அரங்கேறும்? இப்போதுள்ள மற்றும் புதிதாக தொடங்கப்பட்டு வரும் கட்சிகள் மீது நம்பிக்கையின்றி, தமிழ்நாடு மீள்வதற்கு வழியில்லை, என்ற சலிப்பு.

மேற்குறிப்பிட்ட போக்கினை என்னிடம் வெளிப்படுத்தி உரையாடியவர்களிடம், கீழ்வரும் தகவலை தெரிவித்த போது, அவர்கள் வியப்பெய்தினார்கள்; தமிழ்நாடும் மீளும் என்ற வெளிச்சத்தினை, அந்த தகவல் மூலமாக உணர்ந்தார்கள்.

மேலே குறிப்பிட்ட ஊழலற்ற ஆட்சி அமையாதா? என்ற ஏக்கமும், அவ்வாறு அமைய வாய்ப்பில்லை என்ற சலிப்பும், 2018 ஏப்ரல் வரை மலேசியாவில் வாழும் மக்களிடையே வெளிப்பட்டது. 2018 மே 9 அன்று பொதுத் தேர்தல் நடந்து, மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை, அப்போது பிரதமராயிருந்த நசீப் ரஜாக் தோற்று, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கைக்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படவில்லை.

தமிழ்நாட்டில் இன்று உள்ளதைப் போலவே, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க குவார்ட்டர், பிரியாணி, பணம் பாணியில், ஆதாய அரசியலின் உச்சத்தில், காவல் துறை, புலனாய்வுத் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணியாற்றிய தலைமை அதிகாரிகளை தமது எடுபிடிகளாக்கி, கட்சியிலும் ஆட்சியிலும் அசைக்க முடியாத அச்சுறுத்தும் சக்தியாக ஆட்சி செய்து, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் மெகா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஆட்சி நடத்தினார், பிரதமர் நசீப் ரஜாக்.

ஆனால் மலேசிய பொதுத்தேர்தல் முடிவானது, பிரதமாயிருந்த நசீப் ரஜாக்கிற்கு நம்பமுடியாத துன்ப அதிர்ச்சியாகவும், மேலே குறிப்பிட்ட ஏக்கத்துடனும், சலிப்புடனும் வாழ்ந்த மக்களுக்கு நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியாகவும் அமைந்தது. (https://en.wikipedia.org/wiki/Malaysian_general_election,_2018 )


தன்மானமிழந்து 'ஆதாய அரசியல்' மூலம் மலேசியாவில்  ஆண்ட  கட்சியின் தூண்களாகவும், 'ஆதாய தொண்டர்களாகவும்' வலம் வந்தவர்கள் எல்லாம், இன்று எந்த அளவுக்கு அவமானங்களை அனுபவித்து வருகிறார்கள்? என்ற ஆய்வுக்கு, கீழ்வரும் தகவல் துணை புரியும்.


ஆட்சியை இழந்த கட்சியின் தலைவர் பதவி விலகி, புதிதாக செயல் தலைவர் ஆனவர், தமது கட்சியானது, இழந்த மக்களின் நம்பிக்கையை மீண்டும் எவ்வாறு பெறுவது? என்ற ஆலோசனையை, மக்கள் செல்வாக்குடன் பிரதமரான மகாதீரிடம் கோரினார்.
“Shortly after the general election in May, when the Barisan Nasional was trounced and consigned to the scrap heap, then acting Umno president Zahid Hamidi raised eyebrows when he called on Tun Dr Mahathir Mohamad for advice. Dr Mahathir revealed that Datuk Seri Zahid "wanted to know how to manage Umno. So, I was frank and said Umno had betrayed the Malays".(https://www.straitstimes.com/opinion/stranger-things-when-umno-chiefs-seek-mahathirs-advice )

மக்கள் தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்

என்பதை மலேசியா இன்று நிரூபிக்கிறது; நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_10.html  )

'நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று';

என்று எந்த துணிச்சலில் நான் கணித்தேன்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ளயோக்கியதை?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html

ஆர்.கே.நகர் பாணியில் பயணித்து, ஆளும் ...தி.மு. அல்லதுசசிகலாதினகரன்கட்சி, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், அதே ஆதாய அரசியல் மூலமாக, அவர்களுக்கு அகல பாதாளம் காத்திருக்கும்;

என்பதற்கு நிகழ்கால சாட்சியாக‌, 2018 மே மாதம் வரை மலேசியாவின் பிரதமராக இருந்த நசீப் துன் ரசாக், அந்த ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்; என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் பினாங்கு சென்றதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html  ). ஆட்சி மாற்றத்திற்கு முன்னும், கடந்த வருடம் மலேசியாவில் உள்ள மலாக்காவிற்கு சிங்கப்பூரிலிருந்து எனது மகன் குடும்பத்துடன் காரில் சென்று வந்தேன். சிங்கப்பூரில் இருந்த நேரங்களில் மலேசிய பொதுத்தேர்தலுக்கு முன்னும், பின்னும் ஊடகங்களையும் கவனித்து வந்தேன்.

மேலே குறிப்பிட்ட வழிகளில், எனக்கு கிடைத்துள்ள உள்ளீடுகளின்(inputs) அடிப்படையில்,  மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சி தோற்று, ஆட்சி மாற்றமானது துணிச்சலான ஊழல் ஒழிப்பு திசையில் பயணிப்பதற்கு காரணமான, சமூக செயல்நுட்பம் தொடர்பான கீழ்வரும் கருதுகோளை (Hypothesis);

தமிழ்நாட்டில் மேக்ரோ உலகில், சமூகத்தில் செலவாக்கான இடங்களில் உள்ளவர்களில், சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, தனி மனித இராணுவம் போல, தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்புவர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

கருதுகோள் (Hypothesis):

மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்தில் வாழும் சாமான்யர்களிடமிருந்து  தொடங்கும். அந்த அறிகுறிகளை உணர்ந்து, 'ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகளையும், தலைவர்களையும் 'தீண்டாமைக்கு'  உட்படுத்தி, அதனால் வரும் 'லாப' இழப்புகளையும் விரும்பி ஏற்று, மலேசியாவில் அறிவு ஜீவிகளான மேக்ரோ உலகில் பிரபல'  எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் மத்தியில் 'கணிசமான' எண்ணிக்கையில்,  'அந்த அறிகுறிகளின்' திசையில், மைக்ரோஉலகோடு 'ஒட்டி' பயணித்த போக்கே, சமரமற்ற ஊழல் எதிர்ப்பு கூட்டணி உருவாகி, ஆட்சியைப் பிடித்து, ஊழலில் சிக்கிய நீதிபதிகள் கூட ஊழல் பேர்வழிகளுக்கு உதவ அஞ்சும் சமூக சூழலை உருவாக்கியது.’ 

மேலே குறிப்பிட்ட திசையில், தமிழ்நாட்டில் மைக்ரோஉலகோடு 'ஒட்டி' பயணிக்காத 'செல்வாக்கு' நபர்களை எல்லாம், எவ்வாறு அடையாளம் கண்டு, 'தீண்டாமைக்கு' உட்படுத்தி, மேலே குறிப்பிட்ட மீட்சிக்கான சமூக சூழலை உருவாக்க, நாம் பங்களிக்க முடியும்? என்பதையும், அடுத்து பார்ப்போம்.

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், 'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர்; 'என்கவுண்டர்'(encounter) மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட‌ 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. 'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும்.

பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக்கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html   )

அவ்வாறு வாழ்ந்து 'ரவுடி' வீரமணி மறைந்திருந்தால், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, படத்திறப்பு நிகழ்ச்சியில் 'தமிழ்த்தேசிய', 'திராவிடர்/திராவிட', 'கம்யூனிஸ்ட்' தலைவர்கள் எல்லாம் கலந்து, 'ரவுடி' வீரமணியின் 'தொண்டுகளை'(?) பாராட்டி பேசியிருப்பார்கள்; 'ரவுடி' வீரமணியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாபத்திற்குள்ளாகி. தமிழ்நாட்டின் 'முற்போக்குகள்' எல்லாம், மைக்ரோஉலகலிருந்து அந்நியமாகி, சமுக அடித்தளத்தை இழந்து வருவதாலும், 'புத்திசாலி ரவுடி வீரமணிகளின்' பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெரும் போக்கானது தொடங்கி விட்டதாலும், அவர்கள் 'சமூக சருகாகி' உதிரும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (‘Are the seculars & liberals in India, losing the hopes for social survival?’;http://veepandi.blogspot.sg/2017/07/are-seculars-liberals-in-india-losing.html ) 

எந்தெந்த 'அறிவுஜீவிக்கு' என்னென்ன 'பலகீனங்கள்' என்பதைத் துல்லியமாக 'கணித்து', 'அந்தந்த எலும்புத்துண்டை' (பணம், விரும்பும் ஆதாயம், புகழ், முக்கியத்துவம்) விநியோகித்து, தமக்கு வாலாட்ட வைப்பது? என்பதானது, 'புத்திசாலி ரவுடி வீரமணிகளின்' வெற்றியின் இரகசியமாகும்.

மேற்குறிப்பிட்ட 'சமூக விபச்சார'  அறிவுஜீவிகள் 'வளர்ந்து' செல்வாக்கு பெற்ற போக்கில், புலமையாளர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டார்களா? அதன் தொடர்விளைவாக, புலமை வாசனையின்றி பயணித்த 'பெரியார்' கொள்கையாளர்களில் யார், யார், "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை. 'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்ற போக்கில், ஈழ விடுதலையையும் அதில் சிக்க வைத்தார்கள்? (http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_26.html ) அதுவே முள்ளிவாய்க்கால் முடிவிற்கும், இன்றுவரை உரிய பாடங்கள் கற்கும் நோக்கில், அந்த முடிவுக்கு இட்டுச் சென்ற போக்குகளை எல்லாம், திறந்த மனதுடன் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தும் வழியின்றியும், தடுத்து வருகிறதா? என்பது போன்ற கேள்விகளை எல்லாம் இனியும் இருட்டில் வைக்க, இன்றைய மாணவர்களும், படித்த இளைஞர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்த பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருந்த அவலமும், மேற்குறிப்பிட்ட சமூக சூழலில் அரங்கேறியது. (‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்தது? என்ற முன்னோட்ட ஆய்விற்கு:

1967க்கு முன் இருந்த சென்னை மாநிலக்கல்லூரி எவ்வாறு இருந்தது? 1967 முதல் எவ்வாறு படிப்படியாக சமூக விரோத சக்திகளிடம் சிக்கி, 'ரவுடி' வீரமணி தலைமை விருந்தினராக பங்கேற்கும் அளவுக்கு சீரழிந்தது? என்ற ஆய்வினை மேற்கொள்வதானது துணை புரியும். (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html  )  

ஜெயலலிதாவின் மர்ம மரணமானது தூண்டுவித்த 'அமாவாசைகளின் புரட்சியால்' (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html), மேக்ரோ உலகில் புலி வேடமிட்டிருந்த நரிகளின் ஒப்பனைகள் எல்லாம், மைக்ரோ உலகில் அறிவுபூர்வ விவாத மழையில் கரையும் போக்கும் துவங்கி விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_26.htmlமைக்ரோ உலகில் தமது 'புலி வேட ஒப்பனைகள்'  கரைவது தெரியாமல், மேக்ரோ உலகில், மீடியா 'வெளிச்சத்தில்'(?) பயணிக்கும் கூத்தும் தொடர்கிறது; மேலே குறிப்பிட்ட கருதுகோளை நிரூபிக்கும் வகையில்.


நமக்கு வேண்டியவர்களாயிருந்தாலும், மேலே குறிப்பிட்ட 'சமூக விபச்சார அறிவுஜீவிகளாக' பயணிப்பவர்களை, துணிச்சலுடன் ஒதுக்கி, அதனால் வரும் இழப்புகளை விரும்பி ஏற்று பயணிப்பவர்கள் மைக்ரோ உலகில் அதிகமாகி வருவதன் காரணமாகவே, தமது 'புலி வேட ஒப்பனைகள்'  கரைவது தெரியாமல், 'அந்த'  அறிவுஜீவிகளும் 'ஆதாய ரசிகர்கள்' பலத்திலேயே மேக்ரொ உலகில் 'பவனி' வரும் அசிங்கத்தில் சிக்கியுள்ளார்கள். 

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, ஆதாயத் தொண்டர்கள் பலத்தையே பெருமளவு நம்பி பயணிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? என்று ஆராய்ந்தேன். சாதாரணமாக வாழும் தமிழர்கள், என்னை விட புத்திசாலிகளாக, அந்த 'தீ இனம்' மனிதர்கள் எவ்வளவு ' தமிழ், தமிழ் உணர்வு, செல்வ வெளிச்சம்' போட்டாலும், மயங்காமல், அந்த 'மூக விபச்சாரிகளை' இழிவாகக் கருதி, ஒதுங்கி வாழ்வது, அல்லது பணம் தேவைப்பட்டால் அவர்களிடம் 'ஆதாயத் தொண்டராக' பணியாற்றி, தேவை முடிந்த பின் விலகி வாழ்வது, எனக்கே வியப்பான அனுபவமாகும். (http://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html ) என்னை விட புத்திசாலிகளான 'சாமான்ய' தமிழர்களிடமிருந்து பாடங்கள் கற்று, பின் வரும் போக்கில் பயணிக்கிறேன்; தமிழ்நாட்டில் மைக்ரோ உலகோடு 'ஒட்டி ஒழுகும்' (திருக்குறள் 140) புரிதலின் அடிப்படையில்.

அகத்தில் 'சுயலாபக் கணக்குகளுடனும்', 'சாதி/மத பற்றுகளுடனும்', தமது பேச்சில், எழுத்தில், தம்மை உலக குடிமகனாக வெளிப்படுத்த, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' (புறநானூறு) வரிகளை பயன்படுத்துபவர்களில்;

பலர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். எனது சமூக வட்டத்தில் அவ்வாறு வாழ்ந்து வருபவர்கள், என் மீது மிகுந்த அன்பு செலுத்தினாலும், அவர்களை எல்லாம் அடையாளம் கண்டவுடன், எனது சமூக வட்டத்திலிருந்து, இயன்ற வரை அவர்களை புண்படுத்தாமலேயே தள்ளி வைத்து வாழ்ந்து வருகிறேன்; அதனால் வரும் இழப்புகளையும், என்னைப் பண்படுத்தி செதுக்கும் 'உளிகளாக' கருதி.

தனிப்பட்ட முறையில் ஊழல்/நேர்மையற்ற குறுக்கு வழிகளில் பணம் ஈட்டாமல், நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழும் தமிழர்கள், அவர்கள் வாழும் ஊரில், பிரபலமான நபர் எனில், ஊடகத்தில், 'செல்வாக்குடன்' வலம் வருவதில் வியப்பில்லை.

அப்படி வாழ்பவர்கள், அகத்தில் சீரழிந்து, மேலே குறிப்பிட்ட குறைபாடுகளுடன் வாழும் போது, அத்தகையோரே அந்த சமூக சீரழிவின் ' எளிதில் அம்பலமாகாத பாதுகாப்பு அரண்களாக' வெளிப்படுவார்கள். அவர்களின் புறத்தோற்றத்தில் ஏமாந்து, நாம் அவர்களுடன் பழகினால், வாய்ப்பு கிட்டும் போது, அவர்களின் சுயலாபங்களுக்காக, மனசாட்சியின்றி, நமக்கு தெரியாமலேயே நம்மை காவு கொடுப்பார்கள். அதை கண்டுபிடிக்காத 'முட்டாள்களாக' நாம் வாழ்ந்தால், அதனால் நாம் அவதியுறுகையில், நமக்கு ஆறுதலும் வழங்குவார்கள்.

அது போன்று, நான் 'அனுபவித்தவற்றில்' சிலவற்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

ஒரே நேரத்தில், முதல் மனிதராகவும், சமூக நியாயத்திற்கானமூன்றாம் மனிதராகவும் எனது வாழ்வை, (ஆடம் ஸ்மித்- Adam Smith- 'The Theory of Moral Sentiments ' என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளபடி) நான் அணுகி, நான் எவ்வாறு வாழ்ந்து வருகிறேன்? என்பதையும்;

'காந்த பண்பற்ற இரும்பானது, காந்த புலத்தில்(Magnetic Field)  இருக்கும்போது, 'காந்தத் தூண்டல்'(Magnetic Induction)  என்ற அறிவியல் வினை (Scientific process) மூலம், காந்தப் பண்பு' (Magnetic property)  பெறுவது போல;

மேற்குறிப்பிட்ட இயல்பில் பலகீனமான,  'ரசிகர்கள்' எல்லாம், 'சுயபுத்தியையும், இயல்பையும்' காவு கொடுத்து, சமூகத்தில் 'அதீத' செல்வாக்கில் வலம் வரும் பிம்பங்கள் மூலம், சமூகத் தூண்டல்' (Social Induction)  என்ற சமூகவியல் வினை (Sociological Process)  மூலம், 'பிம்ப ரசிக' பண்பில் தம்மை சிறைபடுத்தி, தாமாகவே தம்மை பலியாக்கி, வாழ்கிறார்கள்.' என்பதையும்;

மேற்குறிப்பிட்டஅனுபஅறிவில், மிழ்நாட்டில், மேலே குறிப்பிட்ட 'சமூகத் தூண்டல்' போக்கின் பின்பலத்தில், 'பெரியார் கிருமிகள்' உள்ளிட்ட 'பொதுவாழ்வு வியாபாரிகள்', 'குறுக்கு ழிகளில் ணக்காரர் ஆகும்,  வெற்றியின் இரசியங்களையும், ண்டுபிடித்து, திவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html  )

செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் 'வாலாட்டி' வாழ்பவர்களிடமிருந்தும், எனது ஆய்வுகள் பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அந்த 'ஆய்வுகள்' மூலம் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது/கிடைக்கும் என்பதில் மட்டுமே ஆர்வமுள்ள, அறிவு/உள்ளார்ந்த ஈடுபாடு 'வாசனை' பற்றி அறியாதவர்களிடமிருந்தும், நான், இயன்றவரை அவர்களை புண்படுத்தாமல் ஒதுங்கி, எவ்வாறு உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions) வாழ்ந்து வருகிறேன்? என்பதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html) தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; தமது தனி வாழ்வில் கோழையாக இழிவான, 'சுயலாப'  சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, மேக்ரோ உலகில் 'யோக்கியர்களாக' வலம் வருபவர்களை, என்னை மதித்தாலும், ஒதுக்கி, என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன். சமூக இயக்கவியலில் (Social Dynamics), சமூக பொறியியல் (Social Engineering) வினையூக்கியாக (Catalyst) வாழ்வதன் மூலமே, சமூக தள விளைவினைத் (Social Polarization) தூண்டி, ஆக்கபூர்வமாக தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்மால் பங்களிப்பு வழங்க முடியும்.’ என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/10/depoliticize10-social-induction.html )

'தன்மானக்கேடான' சமரசங்கள் மூலமாக, மேக்ரோ உலகில்  'மேலாக' வாழ வாய்ப்பிருந்தும் தவிர்த்து, சாமான்யராக‌ அவ்வாறு வாழ்ந்து வருவதன் காரணமாகவே, கல்லூரி மாணவர்கள், மற்றும் ஊழல்/நேர்மையற்ற குறுக்கு வழிகளில் பணம் ஈட்டாமல் வாழ்ந்து வரும் சாமான்யர்கள் ஆகியோருடன் உரையாடும் வாய்ப்புகளும் எனக்கு கிட்டியுள்ளன. அவற்றை உள்ளீடுகளாக(inputs) கருதி, சமூக இயக்கவியல் (Social Dynamics) ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழும், தமிழ்நாடும் மீளும்;

என்ற நம்பிக்கையூட்டும் வெளிச்சத்தினை, அவர்களுக்கு உணர்த்தும் சமூக பொறியியல் வினை ஊக்கியாகவும் (Social Engineering Catalyst), நான் செயல்பட்டு வாழ்வதும் சாத்தியமாகி வருகிறது.

உண்மையாகவும், நேர்மையாகவும், நல்ல சமூக ஒழுக்க நெறிகளுடனும் வாழும் பணக்காரர்களில் பெரும்பாலோர், தமக்கு தொந்திரவு வேண்டாம் என்று அஞ்சி, 'ஊழல்' பெருச்சாளிகளுடன் ' நல்லுறவில்' (?) வாழ்ந்து வருகிறார்கள். அந்த 'நல்லுறவு' என்பதும் சமூக குற்றமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து, திருந்தும் விளைவினை ஏற்படுத்தும் சமூகத் தூண்டலானது (Social Induction);

தமிழ்நாட்டில் கிராமங்களில் அடிமட்டத்தில் முளை விட்டு, மேல் நோக்கி, வலிமையுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை மீட்கும், அந்த சமூகத் தூண்டலுக்கு, நம்மைப் போன்றவர்கள் எல்லாம், சமூக வினை ஊக்கியாக' (Social Catalyst) வாழ்வதன் மூலம், அந்த மீட்சிக்கு நாம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்.( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள். அந்த சமூக முட்டாள்த்தன போக்கில், தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள 'ஆளுயரமாலை, மலர்க்கிரீடம்' போதைகளில் சிக்கி, சாதாரண மக்கள் அருவறுக்கும் கோமாளிகளாக வரும் தலைவர்களும், அந்த போதையில் பயணிப்பவர்களே ஆவர்; பா.. உள்ளிட்டு எந்த கட்சியில் இருந்தாலும்;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிரத் தொடங்கி விட்டது; ‌ http://tamilsdirection.blogspot.com/2017/08/under-current-decisive.html )

மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்தில் வாழும் சாமான்யர்களிடமிருந்து  தொடங்கும் அறிகுறிகளை உணர்ந்து, 'ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகளையும், தலைவர்களையும் 'தீண்டாமைக்கு'  உட்படுத்தி, அதனால் வரும் 'லாப' இழப்புகளையும் விரும்பி ஏற்று, மலேசியாவில் அறிவு ஜீவிகளான மேக்ரோ உலகில் பிரபல'  எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் மத்தியில் 'கணிசமான' எண்ணிக்கையில்,  'அந்த அறிகுறிகளின்' திசையில், மைக்ரோஉலகோடு 'ஒட்டி' பயணித்த போக்கே, சமரமற்ற ஊழல் எதிர்ப்பு கூட்டணி உருவாகி, ஆட்சியைப் பிடித்து, ஊழலில் சிக்கிய நீதிபதிகள் கூட ஊழல் பேர்வழிகளுக்கு உதவ அஞ்சும் சமூக சூழலை உருவாக்கியது.’ 

என்று நான் உருவாக்கியுள்ள கருதுகோளை (Hypothesis) மெய்ப்பிக்கும் சமூகவியல் பரிசோதனையானது(Sociological Experiment), தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. அந்த சமூக பரிசோதனையில், ஒரே நேரத்தில் அந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ள சமூக பொறியியல் வினை ஊக்கியாகவும், வெளிப்படுபவைகளை கண்காணித்து ஆய்வு செய்யும் சமூகவியல் விஞ்ஞானியாகவும் செயல்படும் வாய்ப்பும், என்னைப்போன்றே தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு கிடைத்துள்ளன. அந்த சோதனையின் முன்னேற்றத்தில், அத்தகையோரெல்லாம் 'கூட்டு முயற்சியில்' ஒருங்கிணைந்து, தமிழும், தமிழ்நாடும் மீளும் வெற்றியும், அதிக தொலைவில் இல்லை, என்பதே எனது கணிப்பாகும்.

No comments:

Post a Comment