Wednesday, October 10, 2018

ஆர் ரகுமான் அறக்கட்டளை சார்பில், 'ஆபிரகாம் பண்டிதர் திட்டம்', அறிவில் தடம் புரண்டு பயணிக்கிறதா?



'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில் வளர்ந்துள்ளதொடர்பு முறிவில், .ஆர்.ரகுமானும் சிக்கியுள்ளாரா?



'சர்க்கார்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், .ஆர்.ரகுமான் ஆற்றிய உரையில்;

தமது அறக்கட்டளை சார்பில், குட்டி ரேவதி பொறுப்பில் மறைந்த இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் பற்றிய திட்டம் பற்றி விளக்கியுள்ளார். அந்த காணொளியைப் பார்த்த எனது நண்பர் ஒருவர், அது பற்றி என்னிடம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கீழ்வரும் இணையதளங்களைப் பார்த்தேன்.
 
ஆபிரகாம் பண்டிதர்  தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இருட்டடிப்புக்கு உள்ளானார்? என்பதற்கான விளக்கம் அடுத்து வருகிறது. அந்தவெளிச்சத்தின் அடிப்படையில், ஆபிரகாம் பண்டிதர் மறைந்த நினைவின் நூற்றாண்டினை நினைவு கூறும் வகையில்;

.ஆர்.ரகுமான் அறக்கட்டளையானது மேலே குறிப்பிட்ட இணையதளங்கள் மூலமாக செயல்பட்டு வருவதானது பாராட்டத்தக்கதாகும்

அந்த முயற்சியானது, அறிவில் தடம் புரண்டு பயணித்தாலும் திருத்திக்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக.

இந்தியாவில் முதன் முதலாக இசை மாநாடு நடத்தியவர் தஞ்சை ஆபிரகாம் ண்டிதர் ஆவார். (https://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/encore-a-centenary-of-music-conferences/article3451531.ece )

ஆபிரகாம் பண்டிதர் (2 August 1859 – 31 August 1919; https://en.wikipedia.org/wiki/Abraham_Pandithar ) தமிழின் தொன்மை பற்றியும், தமிழிசையின் தொன்மை பற்றியும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், 1917 இல் 1346 பக்கங்கள் கொண்ட 'கருணாமித சாகரம்' என்ற அரிய நூலை வெளியிட்டார். .வெ.ரா அவர்களின் திராவிடர் கழகமும், அண்ணா துவங்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் மற்ற தமிழ் அமைப்புகளும்,  அந்த நூலானது இருட்டடிப்புக்கு உள்ளான போக்கில் பயணித்தார்களா? 1959இல் ஆபிரகாம் பண்டிதரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதா? அவ்வாறு கொண்டாடியிருந்தால், அதில் திராவிடர்/திராவிட/தமிழ் கட்சிகளின் பங்களிப்பு இருந்ததா? கிறித்துவர்களின் தமிழ்த் தொண்டுகளை போற்றும் கிறித்துவ அமைப்புகள் அதில் என்ன பங்களித்தார்கள்?

எதிரேதிர் போக்குகளில் பயணித்த கர்நாடக இசை அபிமானிகளும், தமிழிசை அபிமானிகளும், ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வதில் ஒன்றானார்களா? அதனால் தமிழ்நாட்டில் இசைக்கல்வியும், ஆராய்ச்சியும் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டன? என்பதை ஆர்வமுள்ளவர்கள், முனைவர் பட்ட ஆய்விற்கு உட்படுத்தலாம்.


இன்றும் இந்துத்வா எதிர்ப்பு உள்மறைத்திட்டத்துடன்(Hidden Agenda) செயல்படும் தமிழ் அமைப்புகளும், இந்துத்வா ஆதரவு உள்மறைத்திட்டத்துடன் செயல்படும் தமிழ் அமைப்புகளும், எனது ஆய்வுகளை  புறக்கணிப்பதில் ஒன்றுபட்டுள்ளார்களா? எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாகியுள்ளனவா? என்று சுயலாப நோக்கற்ற தமிழ்ப்பற்றாளர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். (‘தமிழகப் பல்கலைக்கழகங்களின் 'மொழியியல்', 'இசை' துறைகள் 'வாலாக' பயணிக்கலாமா? மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'; https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

ஆபிரகாம் பண்டிதர்  தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளார்? என்பதை அடுத்து பர்ப்போம்.

திராவிடர் கழகம் சார்பில், ‘சென்னையில் கடந்த 25.04.2015 &  26.04.2015 தேதிகளில், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நடந்துள்ளது. அதில் படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது…………………..  தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, '' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக‌) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html ) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை,  அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்…………….   தமிழ் இசை ஆய்வுகளில்  முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர்,  1917 இல் வெளிவந்த, தனது 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பிரமிக்க வைக்கும் வகையில்,  ', ரி, , , , , நி' தமிழ் இசைக்கே உரியவை என்று நிறுவி, மேலேக்குறிப்பிட்ட சமஸ்கிருத சுரப்பெயர்கள், சமஸ்கிருத இலக்கணப்படி, 7 சுர எழுத்துக்களை குறிக்காது என்பதற்கு, திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, அந்நூலில் வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார்.(குறிப்பு கீழே) தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த 'பாவத்திற்காக' மேலேக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் படம் இடம் பெறவில்லையா? இல்லையா? என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.’  (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

நானறிந்த வரையில் தமிழ்நாட்டில் உமாமகேசுவரனின் 'புளோட்'(PLOTE) இயக்க ஆதரவாளர்களாக பயணித்தவர்களின் முயற்சியில், கருணாமிர்த சாகரம் நூலானது, ஆபிரகாம் பண்டிதர் குடும்பத்தின் அனுமதியோடு, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது; ...தி.மு. ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் ஆதரவில். ஆனால் அவரின் அரசியல் இறக்கம் காரணமாக, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல், மிகுந்த நட்டம் அடைந்ததாக, அந்நூலை மறுபதிப்பாக வெளியிட்டவர் என்னிடம் தெரிவித்ததும், ஞாபகத்தில் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட பின்னணியில், வரும் 2019 ஆகஸ்ட் 31இல் ஆபிரகாம் பண்டிதர் நினைவு நூற்றாண்டு நெருங்கி வரும் சூழலில், . ஆர். ரகுமான் அறக்கட்டளை சார்பில், மேலே குறிப்பிட்ட இணைய தளங்கள் மூலமாக ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை தொடர்பான ஆய்வுகள் வெளிச்சத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாவதானது வரவேற்கத்தக்கதாகும்.

அதே நேரத்தில், அந்த திட்டமானது, அறிவுபூர்வ திசையிலிருந்து தடம் புரள்வது தொடர்பான எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டியதும், எனது சமூகக்கடமையாகும்.
http://www.karunamirthasagaram.com/videos.php    - ‘The eminent scholar Mammodhu's sharing on Abraham Pandithar's music intellect’

மேலே குறிப்பிட்ட மம்மது காணொளியில், கீழ்வரும் குறைபாடுகள் எனது கவனத்தை ஈர்த்தன.

மேலே குறிப்பிட்ட காணொளியில் மம்மது, ஆபிரகாம் பண்டிதரின் 24 சுருதிகள் பற்றிய ஆய்வும், இணை, கிளை, பகை, நட்பு பற்றிய ஆய்வும்,  ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை பற்றிய ஆய்வும் எவராலும் மறுக்கப்படாத முடிவுகளாக தெரிவித்துள்ளார். அந்த முடிவுகள் எவ்வாறு தவறானவை? என்பதை 1996 முதல், எனது 'தமிழ் இசையின் இயற்பியல்'(Physics of Tamil Music) முனைவர் பட்ட ஆய்வேட்டிலும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்விதழ் உள்ளிட்டு பல ஆய்வு இதழ்களில் கட்டுரைகளும், 2006இல் 'Ancient Music Treasures – Exploration For New Music' என்ற ஆங்கிலப்புத்தகத்திலும், 2009இல் 'தமிழ் இசையியல் - புதிய ண்டுபிடிப்புகள்' என்ற தமிழ்ப்புத்தகத்திலும் விளக்கியுள்ள நிலையில்;

அவற்றை எல்லாம் மறைத்து, ஆபிரகாம் பண்டிதரின்   ' - இணை' என்ற ஆய்வு முடிவினை, மறைந்த இசை அறிஞர் எஸ்.ராமநாதன் தமது சிலப்பதிகார ஆய்வில் மறுத்துள்ளதையும் மறைத்து,  ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகளை, அடுத்து வந்த ஆய்வாளர்கள் எவருமே மறுக்கவில்லை, என்று தவறாக தெரிவித்துள்ளதானது, அறிவு நேர்மையாகுமா?

மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, கூடுதல் தகவல்கள், கீழ்வரும் பதிவுகளில் உள்ளன.

உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html
 
‘HOW MIT & Raga Sputa Method can rescue the traditional Asian Music, & the ‘modernization without westernization’ in the Asian music domain?’;  http://musicdrvee.blogspot.com/2017/05/how-mit-raga-sputa-method-can-rescue.html

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, சென்னையில் எனது இல்லத்திற்கு வந்து, எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினைப் படித்த வீ.பா.கா சுந்தரம்,  மீண்டும் ஒரு முறை வந்து, என்னிடம் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) பாடம் படிக்க விரும்புவதாக சொல்லிச் சென்றார். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

அறிவியலில் நியூட்டன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் ஆய்வுமுடிவுகள், அடுத்து வந்த ஆய்வாளர்களால் தவறு என்று நிரூபிக்கப்பட்டவை எல்லாம், அறிவியலின் வளர்ச்சிக்கே வழி வகுத்தது. அது போலவே, ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் ஆகியோரின் ஆய்வு முடிவுகளில், நான் தவறு என்று நிரூபித்தவை எல்லாம், தமிழிசையின் வளர்ச்சிக்கே வழி வகுத்துள்ளது.  'வழிபாட்டுப் போதையில்'  அந்த வளர்ச்சி இருளில் நீடிப்பதானது, அதன் பலன்களை தமிழும், தமிழ்நாடும் பெறுவதைத் தாமதப்படுத்தவே வழி வகுக்கும். உலக அளவில் எனது ஆய்வுகளுக்கு கிடைத்து வரும் வரவேற்புகள் மூலமாக, தமிழ்நாடானது, அந்த தாமதத்திலிருந்து, விடுதலை பெறுவதும் சாத்தியமாகி வருகிறது.(https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html  & https://www.youtube.com/watch?v=sNUfIrfnDzU&t=8s)

மம்மது தான் அமெரிக்கா சென்றிருந்த போது, எனது 'Ancient Music Treasures – Exploration For New Music' என்ற ஆங்கிலப்புத்தகத்தை அன்பளிப்பாக பெற்றதாகவும், என்னிடம் வந்து 'இசையின் இயற்பியல்'(Physics of Music) பாடம் கேட்க வேண்டும், என்றும் சுமார் 10 வருடங்களுக்கு முன், தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார். 'திருக்குறளில் தமிழ் இசையியல்' (Tamil Musicology in Thirukkural) என்ற ஆய்வேட்டை அனுப்பியபோது, அந்த ஆய்வுகள் பற்றி இன்று வரை கருத்து தெரிவிக்காமல், 'அதில் நிறைய எழுத்துப்பிழைகள்' இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்தார்

'தஞ்சைத்தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மேற்பார்வையில், அது கணினி தட்டச்சு மூலம் உருவானது. எனவே அந்த பிழைகளை உடனே அனுப்பி வைத்தால், அவர்களின் பார்வைக்குக் கொண்டு சென்று திருத்த முடியும்' என்று தெரிவித்தேன். இன்று வரை அனுப்பவில்லை.

.ஆர்.ரகுமானின் அறக்கட்டளை சார்பில், ஆபிரகாம் பண்டிதர் திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள குட்டி ரேவதியும், மம்மதுவின் தவறுக்கு துணை போனது அறிவு நேர்மையாகுமா? என்ற கேள்வியையும், கீழ்வரும் தகவல்கள் எழுப்பும்.

எனக்கு அறிமுகமில்லாத குட்டி ரேவதி எனக்கு அனுப்பிய 'ஈமெயில்' dated 27 Nov 2015

'பெருமதிப்பிற்குரிய அய்யா வீரபாண்டியன் அவர்களுக்கு, 

வணக்கம். இது, குட்டி ரேவதி. தமிழில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில ஆவணப்படங்களும் எடுத்திருக்கிறேன். தற்பொழுது கருணாமிர்தசாகரம் குறித்த ஓர் ஆவணப்படம் எடுப்பதில் ஈடுபட்டிருக்கிறேன்.

உங்களுடைய, 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' நூலை வாசித்தேன். அற்புதமான நூல். உங்களை நேரில் சந்திக்க ஆவல் கொள்கிறேன். தங்களைச் சந்திக்க இயலுமா? எப்படி தொடர்பு கொள்வது? நான் சென்னையில் வசிக்கிறேன்.

தங்கள் பதில் எதிர்நோக்கியிருக்கிறேன்.
நன்றிகள், அய்யா.

Best Regards,
Kutti Revathi

மேலே கண்ட மடல் கிடைத்தவுடன் தான், இணையத்தின் மூலம் அவர்  ஒரு பெண் கவிஞர் என்று அறிந்து, கீழ்வரும் மடலை அனுப்பினேன்.

அன்புள்ள குட்டி ரேவதி அவர்களுக்கு,   dated 27.11.2015

கருணாமிர்தசாகரம் குறித்த ஓர் ஆவணப்படம் எடுப்பதில் ஈடுபட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

நிச்சயம் என்னால் இயன்ற உதவிகளை செய்ய இயலும்.
நான் தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கிறேன். திருச்சி National Institute Technogy(NIT) இல் வருகைப் பேராசிரியராகவும், Project Consultant ( to R & D project involving music & building architecture)  ஆகவும்  பணியாற்றி வருகிறேன்.
ஆபிரகாம் பண்டிதர் மறைவிற்குப் பின் , வெளிவந்த 'கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகத்தில் உள்ள 'ராக ஸ்புட' முறையில்  ஆய்வு செய்து, அதிலுள்ள சில தவறுகளை சரி செய்து, 'லாஜிக்குகளை' (logic) கண்டுபிடித்து, கணினி வழி இசை அமைக்கும் மென்பொருள் (music composing software) உருவாக்கும்  R & D project இலும் ஈடுபட்டுள்ளேன்.

தஞ்சையில் தங்களுக்கு வசதியான தேதியில் ந்திக்கலாம்

அன்புடன்,
செ..வீரபாண்டியன்

மேலுள்ள மடலில், எனது தொலைபேசி எண்ணையும் சேர்த்திருந்தேன். அடுத்த சில நாட்களில் தொலைபேசியில், எனது 'தமிழிசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்'  என்ற நூலை மிகவும் பாராட்டி பேசினார். என்னை நேரில் சந்தித்து, நேர்க்காணலை வீடியோ எடுக்க விரும்பினார். மீடியா வெளிச்சத்தைத் தவிர்த்து வரும் நான், வீடியோ எடுக்க அனுமத்திக்க முடியாது என்றும், ஒலிப்பதிவு  மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தேன். பின் சென்னையில் ஒரு முறை சந்தித்த போது, என்னிடம் கேள்விகள் கேட்டு, பதில்களை ஒலிப்பதிவு செய்து கொண்டார்.

பின்னர் கீழ்வரும் பதிவையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். Dated 29-11-2015
பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?
 
கீழ்வரும் மடல் அவரிடமிருந்து வந்தது. dated 30-11-2015

'பெருமதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு

வணக்கம். உங்கள் மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றேன்.
மிகவும் கவனமாக, காலம் எடுத்து வாசிக்கவேண்டியவை.

வாசித்ததும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
இவ்வளவு அக்கறையும் முனைப்பும் கொண்டு எழுதி அனுப்பியமைக்கு
என் மனப்பூர்வமான நன்றிகள்.'

பின் சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூர்   NUSஇல், பிரவீன் விஜயகுமார் என்ற ஆய்வு மாணவரின் ஆபிரகாம் பண்டிதர் சொற்பொழிவில் தான், . ஆர்.ரகுமான் அறக்கட்டளை சார்பில், குட்டி ரேவதி 'ஆபிரகாம் ண்டிதர்' பற்றிய திட்டம்(Project)  பற்றி அறிந்தேன். அந்த சொற்பொழிவிற்குப் பின், கீழ்வரும் பதிவினை அனுப்பினேன் Dated 15-08-2018. அதற்கு இன்று வரை ஒரு acknowledgement கூட வரவில்லை

தமிழின் வலிமையின் துணையோடு, மது புலமையின் வலிமையை வளர்ப்போம்;

எம்.ஜி.ஆர்  ", ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்(1)
 
மேலே குறிப்பிட்டுள்ள பதிவில், கீழ்வரும் பகுதியை, குட்டி ரேவதி படித்திருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அறிவு தடம் புரண்ட திசையில், .ஆர்.ரகுமானின் அறக்கட்டளையானது பயணித்திருக்குமா?

ஆபிரகாம் பண்டிதரும், நானும், இன்னும் பலரும் 'வெறுப்பு நோயில்' சிக்காமல், தமிழின் வலிமையின் துணையோடு, தமது புலமையின் வலிமையை வளர்த்து, புலமை மிகுந்த பிராமணர்களையும், பிராமணரல்லோதோரையும் மட்டுமே தமது சமூக வட்டத்தில் அனுமதித்து பயணித்து வந்துள்ளோம்; வெறுப்பு நோயினை உணர்ச்சிபூர்வமாக வளர்த்து, புலமைக்கு கேடாக பயணிக்கும் பிராமணர்களையும், பிராமணரல்லாதோரையும் 'சமூக புழுதிகளாக' கருதி ஒதுக்கி.

அவ்வாறு சமூக நெறியுடன் பயணிக்கவில்லையென்றால், ‘எது அறிவுபூர்வமானது? எது அபத்தமானது? என்பது பற்றிய குழப்பம் உருவாகும். அது ஒரு சமூகத்தில் அறிவுப்புலத்திற்கு ஆபத்தானதாகிவிடும். அதன்விளைவாக குப்பையில் இருக்க வேண்டியது கோபுரத்திற்குப் போக, கோபுரத்தில் இருக்க வேண்டியது குப்பைக்கு போக வேண்டியதாகி விடும். சமுகப் பயணத்தின் 'என்ஜீனாக'(Engine) இருப்பது அறிவுப் புலம் ஆகும். அது 'குப்பைகளின்' கரங்களில் சிக்கியபின், அந்த சமூகம் இழிவான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது.’

தமிழ்நாட்டில் பிரபலமாகி 'மீடியா வெளிச்சத்தில்' சிக்கிய பின்னர், தமிழ்நாட்டின் மைக்ரோ உலகம் பற்றிய நேரடி அனுபவம் பெறும் வாய்ப்புகள் பெருமளவு குறைந்து விடும். மற்றவர்கள் அல்லது மீடியா மூலமாக மட்டுமே, அந்த மைக்ரோ உலகத்தின் போக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நெருக்கடியில் சிக்குவதையும் தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் ஆதாய அரசியல் மூலம் விளைந்த அரசியல் நீக்கத்தின் (Depoliticize) காரணமாக, தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில் தொடர்பு  முறிவானது ( link breaking)  அதிவேகமாக அதிகரித்து வருகிறது’ (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில், மேலே குறிப்பிட்டதொடர்பு முறிவானது வளர்ந்து வரும் போக்கில், .ஆர்.ரகுமானின் அறக்கட்டளையும் சிக்கி பயணிக்கிறதா? என்று ஆய்ந்து, அந்த ஆய்வின் அடிப்படையில் உரிய திருத்தங்களோடு பயணித்தால், தமிழிசை வரலாற்றில்; முக்கியமான சிறப்பிடம், அந்த அறக்கட்டளை பெற வாய்ப்புள்ளது


குறிப்பு:

ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த காலத்தில் சிலர் 'இவருக்கு முன்பின் சங்கீதம் ஒன்றும் தெரியாது. மனதில் நினைத்துக்கொண்டு இப்படி உழைக்கிறார்' என்று பரிகாசம் செய்தார்கள்'.

ஆபிரகாம் பண்டிதரின் கீதம் எழுதும் முறையைக் கேட்ட மைசூர் சேஷண்ணா, "பரம்பரையாய்ச் சங்கீதத்திலேயே சீவனம் பண்ணும் எங்கள் ஞாபகத்திற்கு வராத அநேக காரியங்களைச் சொல்லுகிறீர்கள். அவைகள் நடக்கக்கூடிய காரியங்கள் என்று நான் நினைக்கவில்லை. தாங்கள் வீண் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று சொல்லி விட்டு, (தஞ்சையில்) ரயிலுக்கு போகும்பொழுது..........எனது சிநேகிதர் கிருஷ்ணசாமி ஐயரிடம் 'பண்டிதர் அவர்களுக்கு சங்கீதப் பயித்தியம் பிடித்திருக்கும்போலத் தோன்றுகிறது..பார்த்தால் ஆச்சரியமாகத் தோன்றுகிறது. ஆனால் நியாயமாகவு மிருக்கிறது. வெயில் காலம் அதிகமாயிருப்பதனால் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள்' என்று சொல்லிப்போனார்கள்'.  அதே சேஷண்ணா அடுத்த முறை தஞ்சை வந்து, ஆபிரகாம் பண்டிதரின் 'இராக புட முறை' தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பி, ஆபிரகாம் பண்டிதர் தகுந்த விளக்கமளித்தவுடன், 'எழுந்திருந்து, மேல் வஸ்திரங்களைத் தாழ்த்தி தன் இரு கைகளையும் குவித்துக் கொண்டு 'இது மகான்களாலும், இராஜாக்களாலும் நடக்க வேண்டிய காரியம். இதைத் தாங்கள் சீக்கிரம் அச்சிட்டு எங்கள் கண்ணுள்ள பொழுதே கொடுக்க வேண்டும்' என்று பகவானைப் பிரார்த்தித்து பிரியமொழி சொன்னார்கள்.' வேங்கடாசலம் ஐயர் அவர்களும், முத்தையா பாகவதர் அவர்களும், 'அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. 'இன்று தான் சங்கீதத்திற்கு உயிர் பிறந்தது. இந்த இடம் தான் சங்கீதம் பிறந்த இடம்.' என்று மிகவும் கொண்டாடினார்கள். (பக்கம் 6- 7, கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகம், இராக இலக்கணம்)

No comments:

Post a Comment