Thursday, September 6, 2018


'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (4);

 

தமிழகப் பல்கலைக்கழகங்களின் 'மொழியியல்', 'இசை' துறைகள் 'வாலாக' பயணிக்கலாமா?

மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'



'வாழ்க்கை' நீரோட்டத்தில் 'நல்லாண்மை'யுடன், 'புகழுக்கு ஏங்காமல்', 'சமூக ஒப்பீடு நோயில்' (Social Comparison Infection) சிக்காமல், 'திறவோர்' ஆக, 'உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்' (Passions) பயணிக்கும்போது, நமக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான உறவுகளின் 'செயல்முறை நுணுக்கம்' (Processing) ஆக்கபூர்வமாக மாறி, நம்ப முடியாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு (அந்தந்த கண்டுபிடிப்புகளுக்கான 'இயற்கையின் கதவுகள் திறந்து') இட்டுச் செல்லும் என்பதும் எனது அனுபவமாகும்.’ என்பதனை;

கீழ்வரும் புறநானூற்றுப் பாடல் வழியில், எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் பயணித்து வருவதை, ஏற்கனவே நான் விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

" 'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

 நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்

 முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்

 காட்சியின் தெளிந்தனம்” - புறநானூறு 192: 6 – 10

நமக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான உறவுகளின் 'செயல்முறை நுணுக்கம்' (Processing) ஆக்கபூர்வமாக மாறி, நம்ப முடியாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு (அந்தந்த கண்டுபிடிப்புகளுக்கான 'இயற்கையின் கதவுகள் திறந்து') இட்டுச் செல்லும் என்பது  தொடர்பாக;

நிகழ்காலத்தில், நான் சந்தித்து வரும் இனிமையான அனுபவத்தினை, இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாவதால், எனக்கு தனிப்பட்ட முறையில் 'லாபத்தையே' அனுபவித்து வந்துள்ளேன்.

ஆனால் திருச்சி  NIT உள்ளிட்டு நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் எல்லாம், அந்த 'லாபத்தை' நான் இழக்க வேண்டிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html )

புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிக்க (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html);

சமூகக்கடமையானது எனக்கிருப்பதையும் உணர்ந்துள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) என்பதையும் ஏற்கனவே, வெளிப்படுத்தியுள்ளேன்.

மேலே குறிப்பிட்ட முயற்சியில், மொழிக்கும், இசைக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வுகளில், நிகழ்காலத்தில் நடந்துள்ள முன்னேற்றங்கள் பற்றிய 'ஆய்வு சர்வே'(Research Literature Survey) முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

கனடாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றும் விஞ்ஞானி ஸ்டீவன் பிரவுன் என்பவர் மொழிக்கும் இசைக்கும் பொதுவான தோற்றுவாய்(a joint origin of language and music) இருப்பது தொடர்பான ஆய்வுக்கட்டுரையினை படித்து வியந்தேன்.

சொற்கள் உள்ள பாடல்களின் மொழியும் இசையும் இணைகின்றன. மொழிக்கும் இசைக்கும் பொதுவான தோற்றுவாய் இருப்பதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்றாக இது இருக்கிறது.”

““language and music are perennially reunited in songs with words, occurring in both melogenic (more-musical) and logogenic (more speech-like) styles. This potential for direct and seamless coupling between words and musical pitches is one of the strongest pieces of evidence supporting a joint origin of language and music”; ‘A Joint Prosodic Origin of Language and Music’ -Steven Brown (https://www.frontiersin.org/articles/10.3389/fpsyg.2017.01894/full  )

தமிழில் சொற்கள் உள்ள மொழியும் இசையும் யாப்பிலக்கணத்தில் இணைகின்றன. தொல்காப்பிய விதிகளில் 'இசை'(music) என்ற சொல் வரும் இடங்களில் எல்லாம், உரையாசிரியர்கள் அனைவரும் 'ஒலி'(sound) என்று பொருள் கொண்டார்கள். அதன் விளைவாக, தொல்காப்பியத்தில் அந்த விதிகள் வெளிப்படுத்தியஇசை மொழியியல்’ (Musical Linguistics) உலகின் கவனத்தை ஈர்க்க முடியாமல், இருளில் மறைந்தது.

இசையின் இயற்பியல்'(Physics of Music) அடிப்படையில், அந்த விதிகளை எல்லாம் 'இசை' என்ற பொருளில், நான் ஆய்வுக்கு உட்படுத்தியே, தொல்காப்பியத்தில் 'இசை எழுத்தொலியியல்'(Musical Phonetics) இருப்பதைக் கண்டுபிடித்தேன். அந்த கண்டுபிடிப்பானது '‘The Musical Phonetics in Tholkappiam ' என்ற தலைப்பில், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விதழில் வெளிவந்தது. (‘The journal from the International Institute of Tamil Studies’, Chennai in 2013 )

2013இல் ஆங்கிலத்தில் வெளிவந்த எனது கட்டுரையானது உலகின் கவனத்தினை ஈர்க்காததன் காரணமாகவே, 2017இல் அந்த சாத்தியம் தொல்காப்பியத்தில் இருப்பது தெரியாமல், சாத்தியம் இருப்பதை யூகித்து ஸ்டீவன் பிரவுன் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார்.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விதழில் வெளியிடாமல், ‘மொழியியல்’(Linguistics) தொடர்பான மேற்கத்திய நாடுகளில் இருந்து வெளிவரும் ஆய்வு இதழில் வெளியிட்டிருந்தால், ஸ்டீவன் பிரவுன் போன்றவர்களின் பார்வைக்கு சென்றிருக்குமா? அவ்வாறு சென்றிருந்தால், அவர் 2017இல் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில்;

சொற்கள் உள்ள பாடல்களின் மொழியும் இசையும் இணைவது தொடர்பான, உலக மொழிகளுக்கான இலக்கணமானது, தமிழில் தொல்காப்பியத்தில் இருப்பதை தமது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். மேற்கத்திய ஆய்வு உலகில் செல்வாக்குடன் வலம் வரும் அத்தகையோரின் ஆய்வுகளில் அது இடம் பெற்றால் தான், உலகின் கவனத்தை ஈர்க்க முடியும். அவ்வாறு ஈர்த்தால் தான், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில், 'Natural Language Processing’ (NLP) போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான புதையல் இருப்பதானது, உலக பல்கலைக்கழகங்களின் கவனத்தையும் ஈர்க்கும்


அது மட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற நோவாம் சோம்ஸ்கி (http://linguistics.mit.edu/user/chomsky/ ) முன் வைத்துள்ளபொருள் தொடர்பற்ற(non-semantic) மொழியியல் கொள்கைக்கு ஏற்ற வகையில் தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம் இருப்பதானது, அவரின் பார்வைக்கு சென்றிருக்கும்.


தமிழ் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் தரம் உயர்ந்த ஆய்வு இதழாக, சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் ஆய்வு இதழ் என்று கருதி, அந்த இதழில் நான் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டேன். தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' தொடர்பான புதிய கண்டுபிடிப்பினை வெளிப்படுத்திய, அந்த ஆய்வுக்கட்டுரையானது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள 'மொழியியல்'(linguistics) துறைகளின் கவனத்தினை இதுவரை ஈர்த்ததா? இனியாவது ஈர்க்குமா? அது சரி என்றால், ஏற்றுக்கொண்டு, பாடங்களில் சேர்க்க வேண்டும். தவறு என்றால், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் மறுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களே புறக்கணித்த பின், மேற்கத்திய புலமை உலகின் கவனத்தை, அது ஈர்க்க முடியுமா? ஸ்டீவன் பிரவுன் 2017இல் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், 2013இல் தொல்காப்பியத்தில் வெளிப்பட்ட கண்டுபிடிப்பினை புறக்கணித்ததற்கு, அவரை குறை சொல்ல முடியுமா?

என்ற கேள்விகளை, இனி எழுப்புவது ஆற்றல் விரயம் என்று உணர்ந்து;

நான் ஸ்டீவன் பிரவுனை தொடர்பு கொண்டேன். அவர் எனது http://drvee.in/  இணைய தளத்தினைப் பார்த்து, திருச்சி NIT-இல் நான் மேற்கொண்டு வரும் ஆய்வு தொடர்பாக, கீழ்வரும் மடலை எனக்கு அனுப்பியுள்ளார்.

Dear Vee,

Thanks for your mail. I was looking over your web page. I was a keynote speaker at the conference of the International Association for Empirical Aesthetics in Toronto this past weekend, and i gave a talk that quoted Goethe’s analysis of architecture as frozen music. So, i was very interested to see your project on defreezing the music of architecture. I’m not sure what you have in mind, but i’m very intrigued by this concept. Can you please tell me more about the project and approach?

Thanks,

Steven

அவரின் அந்த ஆர்வத்திற்கு விளக்கமளித்து, அதன்பின் தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' தொடர்பான எனது கண்டுபிடிப்பினை அவருக்கு புரிய வைத்து;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தில், அவரின் ஆய்வு ஆலோசனைகளையும் பெற்று முன்னேற முடியும்; உலகின் கவனத்தை ஈர்த்து.

அந்த முயற்சியில் நான் பெறும் வெற்றியானது, சுமேரு மொழி தொடர்பான ஆய்வுகளுக்கும் துணை புரிய வாய்ப்பிருக்கிறது.

உலக அளவில் தரத்தில் மிக உயர்ந்த அமெரிக்காவில் உள்ள  'மிசாசுடஸ் இன்ஸ்டிடூய்ட் அஃப் டெக்னோலோஜி' -MIT' (http://www.mit.edu/   ) வெளியிடும் புத்தகங்கள் எல்லாம் தரத்தில் உயர்ந்தவையாக இருக்கும்.  அவ்வாறு வெளிவந்த 'The Origins of Music' புத்தகத்தில் வெளிப்பட்டகீழ்வரும் தகவலானது, என்னை மிகவும் ஈர்த்தது. 

குறியிட்ட இசை(musical score)  தொடர்பாக, உலகில் கிடைத்துள்ள சான்றுகளில் மிகவும் தொன்மையான சான்று சுமேரியாவில் கிடைத்துள்ளது. (‘The earliest known musical score is Sumerian, dating to approximately 1400 BC. The score was unearthed and decoded in the 1970s and first performed by modern musicians in 1974…….. This again suggests that some central features of Western music, including the importance of a tonic note, and perhaps the prevalence of particular musical intervals, were present even before formal “Western music” existed."  Page 39: 'The Origins of Music' - MIT Press)

அதனுடன் தொடர்புடைய கீழ்வரும் எனது கண்டுபிடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளேன்.

மலேசியாவில் வாழ்ந்து மறைந்தமுனைவர் கே.லோகநாதன்சுமேரு மொழி தொல் தமிழே’, என்பதை தொடர்ந்து தமது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=JYGWUv5Zhnw  )

அதன் பலனாக,2014 பிற்பகுதியில், ஓர் வரலாற்று சிறப்புமிக்க திருப்பமாக, சுமேருத் தமிழ் தொடர்பாக 'மலேசிய நண்பன்' எனும் மலேசியாவின் தினசரி ஒன்றில் பல கட்டுரைகள் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவரின் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ள, சுமேரு மொழியிலுள்ளகிழ்வரும் வரிகள் எனக்கு சொற்களால் விளக்க முடியாத இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

" யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே. "

இசை தொடர்பாக 'சுருதி' என்ற பெயர்ச் சொல், இசையில் செயல்படுவதை 'சுருதிய' என்ற வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டதற்கு,  எனக்கு கிடைத்த, - நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்திய-  சான்று இதுவாகும்.

தமிழிசை தொடர்பாக, நமக்கு கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாத, ஆனால் இசையியல்(musicology) முக்கியத்துவம் வாய்ந்த சொல் 'சுருதிய', சுமேரு  மொழியில் இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய விழைகிறேன்.’ (‘சுமேரு  மொழியில் தொல் தமிழ் இசையியல் (Ancient Tamil Musicology)  கூறுகள்’; http://tamilsdirection.blogspot.com/2015/01/v-behaviorurldefaultvmlo.html )

சமஸ்கிருதத்தில் 'சுருதி' என்ற சொல்லுக்கு பலபொருள் உண்டு. இசை தொடர்பாக, சமஸ்கிருதத்தில் 'சுருதி' என்ற சொல், பிற்காலத்தில் தான் வழக்கிற்கு வந்திருக்கிறது. (. Prior to the 13th century C.E, Sruti was used only as a measuring unit and tool and not as a part of a musical structure, according to music expert Dr.N.Ramanathan.)

ஆனால் தமிழில் தேவாரம், பரிபாடல் போன்ற இலக்கியங்களில் இசை தொடர்பாக 'சுருதி' என்ற சொல்லானது பயன்பட்டதை, சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நான் வெளிப்படுத்தி வருகிறேன்.

ஆனாலும் இன்று வரை தமிழிசை தொடர்பாக நூல்கள் வெளியிட்டு வரும், மறைந்த வீ.பா.கா சுந்தரம் முதல் மம்மது வரை, அனைவருமே அதைப் புறக்கணித்து, இசையில் 'சுருதி' என்ற சொல்லானது, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்குள் நுழைந்துள்ளதாக தவறாக எழுதி வந்தார்கள்; வருகிறார்கள். (‘உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் அவ்வாறு தவறாகவே புரிந்து கொள்ளும் நிலைமையானது, இனியும் நீடிக்கலாமா? சுமேரு மொழியில் வெளிப்பட்டுள்ள 'சுருதிய' என்ற வினைச்சொல்லின் பயன்பாட்டினையும் அவர்கள் அறிந்து வியப்படைவதும், இனியும் தாமதமாகலாமா?

அநேகமாக தமிழ் மற்றும் இசை தொடர்பான படிப்புகளில், சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த குறைபாடானது, தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' தொடர்பாக நான் துவங்கியுள்ள ஆய்வுத் திட்டம் மூலமாக முடிவுக்கு வரும் காலமும் நெருங்கி வருகிறது.

எனது ஆய்வானது சரியான திசையில் பயணித்து வருகிறது;

என்பதை, கீழே குறிப்பிட்டுள்ள ஆய்வுகளும் உணர்த்தியுள்ளன.

இசைக்கும் மொழிக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வுகளில், நான் பயணிக்கும் திசையிலேயே Harold S. Powers-  (http://en.wikipedia.org/wiki/Harold_Powers ) பயணித்து, கர்நாடக இசையில் பாடப்படும் தெலுங்குப் பாடல்களை ஆய்வுக்கு உட்படுத்தி, குழம்பிய முடிவுகளையே வெளியிட முடிந்தது. (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) அவர் கர்நாடக இசையில் உள்ள தமிழ்ப்பாடல்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தாலும், அதே குழப்பமான முடிவை பெற்றிருப்பார்;

என்பதும் எனது யூகமாகும்.

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல்(musicology) பரிமாணம் தெரியாமல், தமிழ்ப் பாடல்களையும் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள பாடல்களைப் போல பாடும் தவறுகள் பற்றியும், ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2446 ) தமிழில் யாப்பிலக்கணத்தில் புலமையுள்ளவர்களுக்கே அந்த இசையியல் பரிமாணம் தெரியாத நிலையில், இது போன்ற தவறுகள் எல்லாம் தொடர்வதில் வியப்பில்லை.

உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது’ (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’; http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25 );

என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html ) எனவே உலக மொழியியலில் தொல்காப்பியத்தின் அடிப்படையிலான 'இசை மொழியியல்' அரங்கேறுவதற்கு, சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் ஏற்கனவே அரங்கேறியுள்ளதானது துணை புரியும்.

அந்த நோக்கிலேயே, Harold S. Powers, Steven Brown, உள்ளிட்ட இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் வலிமையில்;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன்.

அநேகமாக மேற்கத்திய உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஸ்டிவன் பிரவுன் போன்றவர்களின் துணையுடன், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' இடம் பெற்ற பின்னர்;

தமிழ்நாட்டில் உள்ள மொழியியல் துறைகளும் 'வாலாக' அதனைப் பின்பற்றலாம். 'சுருதி', 'அத்தம்', சுருதித் தீர்மானிப்பு(Pitch Standard), சுருதி சேர்த்தல்(Tuning) உள்ளிட்ட இன்னும் பல கண்டுபிடிப்புகள் எல்லாம், தமிழ்நாட்டில் உள்ள இசைத் துறைகளும் அதே போக்கில் பாடத்திட்டங்களில் அதனை சேர்க்கலாம்; 20 வருட தேவையில்லாத தாமதத்திற்குப் பிறகு.

'நடக்காததை விட, தாமதமாக நடப்பது நன்று' (Better late than never) என்ற பழமொழி எனது நினைவிற்கு வருகிறது.

குறிப்பு: நோவாம் சோம்ஸ்கியும் தொல்காப்பியமும்  

No comments:

Post a Comment