'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (6)
நமது குழந்தைகளாவது தன்மானமிழந்த போக்கிலிருந்து தப்பிப்பார்களா?
தமிழில் 'தன்மானம்' என்ற சொல் இருப்பது தெரியாமல்,
'self-respect' என்று ஆங்கிலச்சொல்லை, 'சுயமரியாதை' என்று மொழிபெயர்த்து, 'தன்மானம்' வழக்கொழிய காரணமானவர் யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
ஈ.வெ.ரா அவர்கள் அந்த சொல்லினை ஏற்று, அறிமுகப்படுத்திய காலத்தில், அவருக்கு நெருக்கமாக இருந்த 'ஆங்கில'(?) புத்திசாலிகளில் சிலர் தான், அதற்கு காரணமாக இருக்கக்கூடும்;
என்பதும் எனது யூகமாகும்.
“14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் சோமசுந்தர பாரதியார் கூறுகிறார்:
“சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்” (https://tamilthesiyan.wordpress.com/2017/07/27/
)
அதற்குப் பின், 1944
முதல் திராவிடர்/திராவிடக்கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'சுயமரியாதை' என்ற சொல்லானது வளர்ந்த வேகத்தில், தமிழ்நாட்டில் 'தன்மானம்' வீழ்ந்தது. காலில் விழும் பண்பாடும் அதே வேகத்தில் வளர்ந்தது. காரியம் சாதிக்க வாலாட்டும் போக்கும், பின்னர் அதே காரியம் இன்னும் அதிகமாக சாதிக்க, காலை வாறும் போக்கும் வளர்ந்தது. காரியம் சாதிக்கும் நோக்கில், தலைவர்களின் பெயர்களைச் சொல்வதே அவமரியாதையாகி, வழிபடும் போக்கும் வளர்ந்தது. பின் அதே நபர் காரியம் சாதிக்க, அதே தலைவரை தூற்றுவதும் ஆதாய அரசியலின் தன்மானக்கேடான இலக்கணமானது. 1949க்கு முன் ஈ.வெ.ரா அவர்களை 'பெரியார்' என்று போற்றியவர்கள், 1949 முதல் 1967 வரை அவரைத் தூற்றினர். பின் 1967 முதல் அவர் சாகும் வரை மீண்டும் போற்றினர்; சுயலாபத்திற்காகவா? அல்லது பொதுநலத்திற்காகவா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். அந்த 'திராவிட' அரசியல் இலக்கணத்தில், ஈ.வெ.ரா அவர்கள் முதல் பலியாகி, அந்த போக்கில் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் இன்னும் மோசமாக பலியாகினர். ஊழலில் நேரடியாக பங்கேற்கும் 'துணிச்சலின்றி'(?), 'அந்த' இலக்கணத்தின் துணையுடன், ஊழல் பெருச்சாளிகளிடம் 'ஆதாயம்' பெற்று, இழிவுக்கு இலக்கணமாக வாழும் தலைவர்களும், அந்த போக்கில் உருவானார்கள்.
அந்த போக்கு வளர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், அநேகமாக 'அணையப்போவதன்' முன்னறிகுறியாக, தற்போது 'பிரகாசித்து' வருகிறது; போற்றுவதற்கும், தூற்றுவதற்கும், மீண்டும் போற்றுவதற்குமான 'கால இடைவெளி' மிக மிக குறைந்து.
அந்த போக்கு வளர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், அநேகமாக 'அணையப்போவதன்' முன்னறிகுறியாக, தற்போது 'பிரகாசித்து' வருகிறது; போற்றுவதற்கும், தூற்றுவதற்கும், மீண்டும் போற்றுவதற்குமான 'கால இடைவெளி' மிக மிக குறைந்து.
தாய்மொழி தமிழைக் கண்டித்த போக்கில், 'சுயமரியாதை' என்ற சொல் வளர்ந்து, தமிழ்நாட்டில் 'தன்மானம்' வீழ எவ்வாறு காரணமானது? என்ற ஆய்வுக்கு கீழ்வரும் தகவல் துணை புரியும்.
‘தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு
(social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை
(suicide), போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug
use) போன்றவை அதிகரிக்கும். ‘(http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm
)
தாய்மொழிக்கும், பண்பாட்டிற்கும், பொது ஒழுக்கத்திற்கும் இடையிலான தொடர்புகளை சீர்குலைத்து, ஆட்சியில் அமர்ந்தால், அந்த சமூகமானது எவ்வாறு சீர்குலையும்? என்பதற்கு உலகவரலாற்றில் தனித்துவமான சான்றாகி விட்டது தமிழ்நாடு. தன்மானக்கேடான முறையில் வாழும் எழுத்தாளர்கள் எல்லாம், விளிம்புநிலை மனிதர்களுக்கு 'முதலைக்கண்ணீர்' வடித்து, அவர்களை 'கதாநாயகர்களாக்கி' புகழ் பெறும் கூத்தானது, தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமாக இருக்கலாம். அகத்தின் நேர்மை வழிகாட்டியான தன்மானம் சீர்குலைந்து, புறத்தில் பிறர் மதிக்க எந்த (இழிவான) வழியிலும் வாழும் புற வழிகாட்டியாக, தமிழில் புதிதாக நுழைந்த 'சுயமரியாதை'யானது, தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதன் தொகுவிளைவாக, கீழ்வரும் தன்மானக்கேடான போக்கில், தமிழ்நாடு சிக்கியுள்ளது.
திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு நெருக்கமாகி, வாலாட்டி 'வளமாகி', பின் சாமான்ய தமிழர்களிடம் 'ஆணவம் மிகுந்த சுயமரியாதையுள்ளவர்களாக' புறத்தில் வெளிச்சம் போடும், 'உண்மையான தன்மானம்' இழந்தவர்கள் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியது.
திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு நெருக்கமாகி, வாலாட்டி 'வளமாகி', பின் சாமான்ய தமிழர்களிடம் 'ஆணவம் மிகுந்த சுயமரியாதையுள்ளவர்களாக' புறத்தில் வெளிச்சம் போடும், 'உண்மையான தன்மானம்' இழந்தவர்கள் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியது.
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி, இடைநீக்கம் செய்யப்படும் அதிகாரிகளில் பெரும்பாலோருக்கு, அந்த இடைநீக்கமானது, அவமானமாக தெரியவில்லை. அது மட்டுமல்ல, வேலை செய்யாமலேயே, அந்த காலக்கட்டத்தில் அவர்கள் பெறும் ஊதியமும் அவர்களுக்கு மகிழ்ச்சியாகிறது;
என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தாம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் பலர் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பாராட்டும் வாசகர்களாக இருந்தாலும் வியப்பில்லை. வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் அநீதிகளை எதிர்க்காமல், ஏதாவது ஒரு ஊழல் கட்சித் தலைவரிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ 'ஒட்டி', 'பாதுகாப்பாக' வாழ்ந்து கொண்டு, போதையூட்டும் எழுத்து/பேச்சு உத்தியை வளர்த்து வாழும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின், 'கள்ளுண்ட வண்டு போன்ற' 'எழுத்து/பேச்சு போதை' ரசனையில் மிதக்கும் ரசிகர்களும், 'அந்த' எழுத்தாளர்களைப் போலவே 'பாதுகாப்பாக' வாழ்ந்தார்கள். அதுவும் தமிழ்நாடானது, சமூகக் குற்றவாளிகளின் பிடியில் சிக்க காரணமானது.
விமானத்தில் பயணம் செய்பவர் தமிழிசை செளந்தர்ராஜன், கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டு இன்னும் பல தலைவர்களில் ஒருவராக எவர் இருந்தாலும், விமானத்துக்குள்ளும், விமான நிலையத்திலும் அவர்களை கண்டித்து முழக்கமிடுவதானது, அவர்களின் தன்மானத்தினை சீர்குலைப்பதாகாதா? பொது அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிப்பதாகாதா? இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், அதனை 'காலித்தனம், சண்டித்தனம்' என்றே கண்டித்திருப்பார். அதனை இன்று வாழும் 'பெரியார்' கட்சிகளின் தலைவர்கள் மறுப்பார்களா?
அவ்வாறு தமக்கு பிடிக்காத தலைவரின் தன்மானத்தினை பொது இடங்களில் குலைக்கும் நபர்களில், யார், யார், தமக்கு பிடித்த தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று, விமானத்தில் திரும்பும்போது வரவேற்றார்கள்? என்று ஆராய்ந்தால், அவர்கள் எல்லாம் கீழ்வரும் கேள்விக்கு விடையாவார்கள்.
மற்றவர்களின் தன்மானத்தினை இழிவு செய்யும் மனப்பாங்கானது, அந்த போக்கில் நமது தன்மானத்தினை, நாமும் இழந்து வாழும் விளைவில் முடியாதா? (Is
it our loss of esteem for others that slowly but surely smothers our esteem for
ourselves?)
‘எந்த நாட்டிலும் தன்மானம் கெட்ட புலமையாளர்களின் ஆதரவின் துணையுடனே தான், சுயலாப கள்வர்கள் எல்லாம், தலைவர்களாக தலையெடுத்து, அந்த நாட்டை சீரழிக்க முடியும்.’ (‘தமிழ்வழி மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், நமக்குள்ள யோக்கியதை?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_17.html
)
அறிவு தடம்புரண்டு, உணர்ச்சிபூர்வமாக இன்பம் தேடுவதானது, ‘hedonistic satisfactions’ ஆகும். தமிழ்நாட்டில் அரசியலில், நிர்வாகத்தில், வியாபாரத்தில் அத்தகையோர் மிகுந்து உள்ளனர்; பொதுவான சமூக ஆமோதிப்புடன்
(a self-centred person craving for hedonistic satisfactions at the cost of others or the nation’s resources. Thanks to our collective attitude, we have more self-serving people in
politics, administration and business
than people with self-esteem.; http://www.newindianexpress.com/opinions/2018/sep/08/the-fading-face-of-self-esteem-1869020.html
)
அவ்வாறு அறிவு தடம்புரண்டு, தமக்கு பிடிக்காத தலைவர்களின் தன்மானத்தை சீர் குலைப்பது, பொதுச்சொத்துக்களை நாசம் செய்வது போன்ற உணர்ச்சிபூர்வமாக இன்பம் தேடுபவர்கள் (‘hedonistic satisfactions’) எல்லாம், அதற்கு ஏற்ற அளவில் தத்தம் தன்மானத்தை இழந்து வாழ்வதையும் நாம் பார்க்கிறோம்.
நமது காலம் தான் தன்மானமிழந்தவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிய காலமாகி விட்டது. நமது குழந்தைகளையாவது அதிலிருந்து தப்பிக்க வைப்போம்;
என்ற நோக்கில், கீழ்வரும் யோசனையானது முன்வைக்கப்பட்டுள்ளது.
“நமது நிகழ்கால பரம்பரையானது சமூக சகதியிலும், இரட்டைவேடப் போக்கிலும் பயணிக்கட்டும்.
தன்முனைப்பு மிகுந்த ஆணவ சுயநல போக்கிற்கு எதிரான, தன்மானம் அடிப்படையிலான தன்னடக்கத்தினை முன் நிறுத்தி, நமது குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் படிப்படியாக அதனை அவர்கள் அகவயப்படுத்திக் கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு முன் உதாரணமாக, அவர்கள் முன் நாம் நடந்து கொள்ள வேண்டும்.”
Well, let us ignore the present generation. Let it wallow in the filth of greed and hypocrisy. The one practical way to ensure a dignified tomorrow is to prepare our children for it. The best way is to be absolutely honest with them—for they instinctively appreciate that—and to unfold before them, stage by stage, as they grow up, the worth of self-esteem that goes with humility as opposed to self-centredness that goes with vanity. Let us do so with confidence in our mission and with faith in the child. http://www.newindianexpress.com/opinions/2018/sep/08/the-fading-face-of-self-esteem-1869020.html )
Well, let us ignore the present generation. Let it wallow in the filth of greed and hypocrisy. The one practical way to ensure a dignified tomorrow is to prepare our children for it. The best way is to be absolutely honest with them—for they instinctively appreciate that—and to unfold before them, stage by stage, as they grow up, the worth of self-esteem that goes with humility as opposed to self-centredness that goes with vanity. Let us do so with confidence in our mission and with faith in the child. http://www.newindianexpress.com/opinions/2018/sep/08/the-fading-face-of-self-esteem-1869020.html )
ஆனால் மேலே குறிப்பிட்ட யோசனையை செயல்படுத்துவதில், ஒரு சிக்கல் இருக்கிறது.
ஊடகங்கள் போற்றும் அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டு சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களும்;
தமிழ்நாட்டின் மலைகள், கனிமங்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை சூறையாடிய, மக்களிடம் பிரபலமானவர்களை கூட விட்டு வைக்காமல், அவர்களின் சொத்துக்களை அச்சுறுத்தியும், கொலை செய்தும் அபகரித்த அரசியல் தலைவர்களை கண்டிக்கும் துணிச்சல் இல்லையென்றாலும், குறைந்த பட்சம் அவர்களிடம் இருந்து ஒதுங்கியாவது வாழலாம். அதை விடுத்து, அவர்களை ஊடக வெளிச்சத்துடன் 'தரிசித்து' நெருக்கமாகி வருகிறார்கள்.
குழந்தைகளின் பள்ளிகளில், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில், அத்தகையோர் எல்லாம் தலைமை விருந்தினர்களாக(Chief
Guests)
பங்கேற்று, குழந்தைகளுக்கு மோசமான முன்மாதிரிகளாக வெளிப்பட்டு வருகிறார்கள்.
நமது உற்றத்திலும், சுற்றத்திலும், அந்த மோசமான முன்மாதிரிகளுக்கு நெருக்கமானவர்களும், நமது குடும்பத்தையும், குழந்தைகளையும், அந்த மோசமான திசையில் ஊக்குவிப்பதை நாம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
மேலே குறிப்பிட்டவற்றின் தொகு விளைவாக;
தன்முனைப்பு மிகுந்த ஆணவ சுயநல போக்கிற்கு எதிரான, தன்மானம் அடிப்படையிலான தன்னடக்கத்தினை முன் நிறுத்தி நாம் வாழ்வதானது;
'பிழைக்கத் தெரியாத முட்டாளாக' நம்மை நம் குடும்பத்தினரின் முன், குறிப்பாக நமது குழந்தைகளின் முன், நிறுத்தாதா?
என்ற கேள்விக்கு அனுபவபூர்வமாக, நான் கீழ்வரும் தீர்வினைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறேன்.
அகநேர்மையுள்ள ஒவ்வொரு
தன்மான
மனிதரும், தமது சமூக வட்டத்தில் எவரையும் அனுமதிக்க பயன்படுத்தும் தராதர அளவுகோலே, அவரின் தராதரமாகும். தனது லாபத்துக்கான மனிதரை, எந்த தராதரமின்றியும் தமது சமூக வட்டத்தில் அனுமதித்து, 'யோக்கியராக' புறத்தில் காட்சி தருபவர்கள் எல்லாம் ஆபத்தான சமூக கிருமிகள் ஆவார்கள்.
நமது தேவைகளையும்(needs),
ஈடுபாடுகளையும்(interests)
நமக்கு அடிமைப்படுத்தி, நமக்கு நாமே எஜமானர்களாக வாழ முடியும். அப்போது தான் உண்மையான தன்மானத்துடன் வாழ முடியும்.
அவ்வாறே நான் ஆடம்பரமற்று எளிமையாகவும், சாதாரண மனிதர்கள் மட்டுமே எளிதில் சந்திக்க கூடிய வகையிலும், மற்றவர்களில் நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் 'வடிகட்டி'
(Filter), ஈமெயில் (Email) மூலம் மட்டுமே எவரும் தொடர்பு கொள்ளும் வகையிலும், 'முக்கியத்துவ சிறையில் சிக்குவதை இயன்றவரை தவிர்த்து;
'தராதர வடிப்பானின்றி'
(Abandoning human characteristics filter), மனிதர் அனைவரையும் ஈ.வெ.ரா அவர்கள் வழியில் 'சமமாக' நடத்தி, 'அனுபவித்து', பாடம் கற்று, இன்று 'சமூக கிருமிகளை', சாதி, மத பேதமின்றி, எனது 'தீண்டாமைக்கு' உட்படுத்தி;
சமூகத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடன், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்
(Passions) நான் வாழ்ந்து வருகிறேன்; கடந்த கால இழப்புகளிலிருந்தும் 'விடுதலை' பெற்று. (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html
)
அவ்வாறு வாழத் தொடங்கிய பின்னர்;
நமக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான உறவுகளின் 'செயல்முறை நுணுக்கம்'
(Processing) ஆக்கபூர்வமாக மாறி, நம்ப முடியாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு (அந்தந்த கண்டுபிடிப்புகளுக்கான 'இயற்கையின் கதவுகள் திறந்து') இட்டுச் செல்லும் என்பது தொடர்பாக;
நிகழ்காலத்தில், நான் சந்தித்து வரும் இனிமையான அனுபவத்தினையும் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html
)
நமது சமூக வட்டத்திற்கு அருகதை உள்ளவர்களாக நாம் அனுமதித்துள்ள உற்றம், சுற்றம் மட்டுமின்றி, மைக்ரோஉலகில் நாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ளவர்கள் மத்தியில்;
தன்முனைப்பு மிகுந்த ஆணவ சுயநல போக்கிற்கு எதிரான, தன்மானம் அடிப்படையிலான தன்னடக்கத்தினை முன் நிறுத்தி நாம் வாழ்வதன்
மூலமாக;
நாம் தமிழ்நாட்டின் மீட்சிக்கான சமூக பொறியியல் வினை ஊக்கியாக(Social
Engineering Catalyst) வெளிப்படுவதும் சாத்தியமாகி வருகிறது. குறிப்பாக மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் அதன் வீச்சானது, பிரமிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.
மாணவர்கள், படித்த இளைஞர்கள், சாமான்யர்கள் மத்தியில் தன்முனைப்பு மிகுந்த ஆணவ சுயநல போக்கானது வெறுப்புக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவது அதிகரித்து வருகிறது; கோலமாவு கோகிலா, ஜோக்கர், கோலிசோடா, சூது கவ்வும் போன்ற இன்னும் பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் பெரிய வெற்றிகள் எல்லாம், அதனை வெளிப்படுத்தி வரும் சிக்னல்கள் ஆகும்.
தன்முனைப்பு மிகுந்த ஆணவ சுயநல போக்கில் வளர்ந்து உச்சத்தில் உள்ள;
ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தி.மு.க உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகள் எல்லாம், அடித்தளம் செல்லரித்த கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது போல, புதைபடும் காலமும் நெருங்கி வருகிறது. ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்;
பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, மலேசியாவில் நடப்பது போல, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html
)
எனவே நமது குழந்தைகளாவது தன்மானமிழந்த போக்கிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.
No comments:
Post a Comment