Sunday, September 2, 2018


'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (2); 


'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான NLP துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds)?




பாராட்டுக்கள் என்பவை எல்லாம், ஏமாந்தால் நம்மை அதற்காக ஏங்கும் மனநோயாளிகளாக மாற்றி விடும்; நமக்கான ரசிகர் வட்டம் வளர்ப்பதிலேயே, நமது ஆற்றலின் பெரும்பங்கு விரயமாகும் அபாயமும் உண்டு;

என்று நம்மை எச்சரிக்கும் வகையில், பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை சீரழித்தவர்கள் ஆயிற்றே? என்று கவலைப்படாமல், அத்தகையோரிடமும் நெருக்கமாகி, 'அந்த' மனநோயாளிகள் எல்லாம் பலன்கள் அனுபவித்து, அத்தோடு அடங்காமல், 'முற்போக்கு யோக்கியர்களாகவும்' தம்மிடம் ஏமாந்தவர்களிடம் பாராட்டுகளும் 'அனுபவித்து'(?), 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்ந்து, நம்மை எச்சரிப்பவர்களும் அவர்களே ஆவர்.

அந்த எச்சரிக்கையுடன், நமது நிலைப்பாடுகளுக்கும், ஆய்வுமுடிவுகளுக்கும் எதிராக வெளிப்படும் கருத்துக்களில், நம்மை வசை பாடும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி, அறிவுபூர்வமாக ஏதும் வெளிப்பட்டுள்ளதா? என்று தேடும் ர்வம் இருக்க வேண்டும். இருந்தால், அதற்கு நமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவுபூர்வ விளக்கத்தை நாம் தர வேண்டும். அதில் உரிய சான்றுகள் அடிப்படையில் குறைகள் வெளிப்பட்டால், பகிரங்கமாக அதை ஏற்றுக்கொண்டு, உரிய திருத்த திசையில், நமது ஆய்வுகள் பயணிக்க வேண்டும். 

அப்போது தான், நமக்கு எதிரான நிலைப்பாடுகள் உள்ளவர்களும் நம்மை மதிப்பார்கள். எதிர்பாராத திசைகளில் இருந்து, நமது ஆய்வுக்கு உள்ளீடுகளும், உதவிகளும் கிடைக்கும்; 

என்பதும் எனது அனுபவமாகும்.

தாம் மேற்கோள் காட்டும் கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவை? என்று ஆராயாமல், பொது அரங்கில் 'அவையும் அறியாமல்', மேற்கோள் காட்டி, 'மாட்டிக் கொள்வதும்'; 

தமது தவறால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோராமல், தவறினையும் ஒப்புக் கொள்ளாமல் பயணிப்பதும்; 

புலமையிலிருந்து துண்டிக்கப்பட்ட மொழித் திறமைகளுடன் பயணிப்பவர்களிடம் வெளிப்பட்டு, அத்தகையோரை அடையாளம் காட்டும் சிக்னலாகும். அத்தகையோர் எல்லாம் சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வருவதும், அந்த சமூகத்தின் சீரழிவின் சிக்னலாகும்.’ (‘'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

ஒரு ஆய்வில் தமது பார்வைக்கு வரும் சான்றுகளின் வலிமையானது ஒரு கருதுகோளை (Hyphothesis) மட்டுமே உருவாக்கவல்லதா? அல்லது எதிரான சான்றுகளை, வாதக்குறைபாடுகள்(logical defects) இன்றி  மறுக்கும் அளவுக்கு வலிமையானதா? என்று சான்றுகளின் வரைஎல்லைகள்(limitations) தெரியாமல், அபத்தமான முடிவுகளுடன் வெளிவருவதையும், நான் எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன். எல்லாவற்றையும் எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது. ஏற்கனவே முறையாக கிடார், ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த நிலையிலும், தாளக்கருவிகள் தொடர்பான நூல்களைப் படித்து விளங்கிக் கொள்வதற்காக, ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டதையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_19.html). தமது புரிதல் குறைபாடுகள் பற்றிய தெளிவின்றி, புரிதலுக்கு தேவைப்படும் அறிவைத் தேடி, அக்குறைபாடுகளை சரி செய்து கொள்ளாமல், ஆய்வு விவாதத்தில் பங்கேற்று அசிங்கப்பட்டு, அவ்வாறு அசிங்கப்பட்டதை கூட புரிந்து கொள்ளும் அறிவின்றி பயணிப்பவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம்'(1)  என்ற தலைப்பில் வெளிவந்த பதிவில், கிழ்வரும் இரகசியத்தையும் பகிர்ந்து கொண்டேன். (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

'பெரியார்' கொள்கையாளராகபயணித்த காலத்தில், ‘பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா..மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார். 

தஞ்சையில் ராமநாதன் செட்டியார் மன்றத்தில், 'கலை இலக்கிய பெருமன்றம்' கூட்டத்தில் அவர் பேச்சாளர்; நான் பார்வையாளர். 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவராக', அந்த நூலாசிரியரை குறை கூறினார். எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. 

எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால்………… எனவே எனது ஆராய்ச்சிகளின் பலன்களானபதிவுகளில், எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேற்குறிப்பிட்ட புத்தகத்தை .மார்க்ஸ் கண்டித்தது போல, எனது பதிவுகளையும், கண்டித்து எழுதுவதை வரவேற்கிறேன். அவை நிச்சயமாக, என்னை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும்; 'சமூகக் கிருமிகளின்' பிடியிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள்வதற்கு, பங்களிப்பு வழங்குவதற்காக.’ 

பொதுவாக எனது கண்டுபிடிப்புகளை எல்லாம், சம்பந்தப்பட்ட தமிழ், தமிழ் இசை போன்ற துறைகளில் உள்ளவர்களே புரிந்து கொள்ள சிரமப்படுவதையும் நான் அறிவேன். அத்தகையோரில் தமது அறிவு வரைஎல்லை (intellectual limitation) பற்றிய தெளிவின்றி இருப்பவர்கள் மூலமாக‌, 'இசை இழை' தொடர்பான எனது கண்டுபிடிப்பானது (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none.html  ),  'ஆய்வுக்குழாயடிச் சண்டை' அனுபவம் வழங்கியதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html  ) 

அதன் காரணமாகவே, நான் நீண்ட காலமாக பொது நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். அந்த சூழலில், பினாங்கில் பெரும்பாலும் தமிழ் அசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், அங்கு வாழும் பேரா.ஆர்.சிவக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்டதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

அண்மையில் மலேசியாவில் பினாங்குத் தீவில் உள்ள 'இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி' அரங்கத்தில், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics in Tholkappiam)  என்ற தலைப்பில், கணினி, ‘கீபோர்ட்  இசைக்கருவி (Music Keyboard) ஆகியவற்றின் துணையுடன் விளக்க உரை நிகழ்த்தினேன். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழ்ப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் சுமார் 100க்கும் அதிகமாக அரங்கை நிரப்பியிருந்தனர். 

பினாங்குத் தீவு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் குழாமும், அரசு கல்வித்துறையும், பினாங்கு சுய மெய்யறிவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அதுவாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'(Musical Linguistics) பற்றி, ‘கீ போர்ட்’(Music Keyboard), கணினி(PPT) ஆகியவை துணையிருந்தாலும், இசையியல்(Musicology), இசை இயற்பியல்(Physics of Music)  பரிச்சயம் இல்லாத தமிழ் ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு,  விளக்குவதில் உள்ள சிரமங்களை அன்று உணர்ந்தேன். 

ஏற்கனவே அது பற்றி நான் வெளியிட்ட பதிவானது, எவ்வளவு பேருக்கு விளங்கியிருக்கும்? என்ற ஐயமும் எனக்கு உண்டு. (‘'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) 

உலக அளவில் புலமை மிக்க நூல்களையும், கட்டுரைகளையும் தேடி, லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியன், அவற்றில் எனது பார்வைக்கு உரியவற்றை அவ்வப்போது அனுப்பி வைப்பதை, ஏற்கனவே நன்றியுடன் எனது பதிவுகளில் நினைவுகூர்ந்துள்ளேன். அவ்வாறு அவர் அனுப்பிய ஆய்வு தகவலின் துணையுடன், கீழ்வரும் பதிவினையும் வெளியிட்டேன்.

படைப்புக்கான(Creative) கருக்களும், திறவுகோல்களும், நல்ல மற்ற தீய எண்ணங்களும் தொடர்புடைய தோற்றுவாய்கள் பற்றிய ஆய்வுகள்?

மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter) மனிதர்கள்?

http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html 

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான, மேலே குறிப்பிட்ட பதிவினை விளங்கிக் கொள்ள முடியாதவர்களும், முயன்றால் விளங்கிக்கொள்ள துணைபுரியும் ஒரு கட்டுரையினை எனது நண்பர் தொல்காப்பியன் அனுப்பியுள்ளார்.

‘The music in you; You might not be a virtuoso, but you have remarkable music abilities. You just don’t know about them yet’; https://aeon.co/essays/you-are-a-remarkable-musical-expert-you-just-don-t-know-it 

'மொழியின் வளர்ச்சியும், இசையின் வளர்ச்சியும் இணையானவையாகும்' (‘musicality emerges in ways that parallel the development of language’) என்ற உண்மையை, உரிய சான்றுகளுடன் அக்கட்டுரையானது விளக்கியுள்ளது. 

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதையே, நான் கண்டுபிடித்துள்ளேன். அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளேன்.

The logic behind the above  ‘parallel’ -applicable to all world languages,  was discovered in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in The journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal ) 

அது மட்டுமல்ல, ' சி வா ' என்ற ஐந்தெழுத்து மந்திரமும், மோகன ராகத்தில் வரும் ' , ரி, க,  ப, ' என்ற ஐந்து சுரங்களுடன், மேலே குறிப்பிட்ட 'லாஜிக்' அடிப்படையில் தொடர்புள்ளவையாகும். அதனை பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணம் தெளிவுபடுத்தியுள்ளதையும், ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளேன். பின் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த 'உலக சைவ மாநாடு' ஆய்வரங்கிலும் இடம் பெற செய்தேன்.

The five letters of ‘ந-   - சி -வா - ‌’  in ‘parallel’ linked with the five musical notes ‘ரி -  க -   - த’  in    மோகன ராகம்; was discovered in ஆனாயநாயனார் புராணம் ( பெரியபுராணம்) , and was published in http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 ; Also submitted in the seminar of ‘ World Saiva Conference’ , Sydney, Australia.

துவக்கத்தில் குறிப்பிட்ட மனநோயாளிகளின் 'ரசிகர் வட்டத்தில்' பெரும்பாலான கல்லூரி மாணவர்களும், நன்கு படித்த இளைஞர்களும் இல்லை. அரைகுறை படிப்போடு உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் பயணிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதோடு, அவர்களில், நேர்மையான சம்பாத்தியத்திற்கான திறமைகளும், உழைக்க மனமும் இல்லாதவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது. அந்த போக்கிலும், நேர்மையாக பயணிப்பவர்கள் எவரேனும் இருந்தால், அவர்களை நோக்கியே, 'தேரா தமிழா?' என்ற கேள்வியையும் எழுப்பினேன். (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தமிழைத் திராவிட அரசியலில் சிறைப்படுத்தி, அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியல் வலிமையில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின் சருகாகி, 'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகள் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

அவ்வாறு தமிழானது 'சுயலாப அரசியல் சிறையிலிருந்து' விடுதலையாகும் போக்கில், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனது முயற்சிகளும், கடந்த சுமார் 20 வருட இருளில் இருந்து, வெளிச்சத்திற்கு வரும் போக்கும் தொடங்கியுள்ளது. 

அந்த 20 வருட இருளின் முக்கிய குற்றவாளிகளாக, ஆட்சியில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆக மாட்டார்கள். அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாம், திருக்குறள்(448) வழியில் தடம் புரண்டு, திருக்குறள் (915) வழியில், 'மனித இழிவுக்கு இலக்கணமாக பயணித்ததே, 'அந்த' இருளுக்கு முக்கிய காரணமாகும்.‍‍

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வரும் தகவலையும் வெளியிட்டுள்ளேன்.

‘உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்ட‌தாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது தெரியாமல் (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’; http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25 );

‘சமஸ்கிருதத்தினை 'செத்த மொழி' என்று அறிவித்து, தமிழை 'சாகும் மொழியாக 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக' பங்களித்தும்(?);

வருபவர்களின் கண்களைத் திறக்கும் வகையிலும்;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன்.’

குறுக்கு வழிகளில் மதிப்பெண்கள் பெறாமல், நேர்மையான உழைப்பும், ஆர்வமும் உள்ள தமிழ்  மாணவர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில் வியாபார வாய்ப்புகளும் உருவாக்கும் திசையில், தமிழின் அடுத்தக்கட்ட புலமையானது பயணிக்கத் தொடங்கியுள்ளது. ( ‘தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (2); புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்   http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html  ) 

தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் யாப்பிலக்கணத்தை விளங்கிக்கொள்ள 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), அகியவற்றில் அடிப்படை அறிவு பெற்றால், தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்' தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகையோருக்கு இசை மொழியியல் அடிப்படையிலான   Natural Language Processing(NLP)  ஆய்வுத்திட்டங்களிலும், மென்பொருள் உருவாக்க (Software development)தொழில்களிலும், Resource Persons வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன. 

அது போல பொறியியலில் ECE ,  Computer Science , உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் எல்லாம்  இசை மொழியியல்’ அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் காலமும் கனிந்து வருகிறது. அவர்களில் ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், தமக்கு உள்ள தமிழறிவு போதுமா? என்று தயங்காமல், எவ்வாறு தமிழ்ப்புலமையை வளர்ப்பது? என்பதற்கான புதிய உத்தியையும், நான் விளக்கியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444 ) அவ்வாறு புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிப்பார்கள். 

கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை கெடுக்கும் முயற்சிகளை எல்லாம், இனி அனுமதிக்க மாட்டார்கள். உலகில் எவ்வாறு பாதுகாப்பானகழிவு நீக்கல்தொழில்நுட்பங்களுடன் தொழிற்சாலைகள் செயல்படுகிறதோ, அவை போலவே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படுவதை கண்காணித்து, புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். 

அந்த போக்கு வலுப்பெறுமானால், தமிழ்ப் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்டு, வளர்த்து, புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, நான் கண்டுபிடித்த தொழில்நுட்பங்கள் மூலம் பிற நாடுகள் பலன்கள் பெறுவதற்கு முன்பு, தமிழ்நாடு பலன் பெறும் வாய்ப்புக்கும் தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது. 

குறுக்கு வழி பேர்வழிகளை எல்லாம் 'சமூக காங்கிரின் நோயாளிகளாக'(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html) கருதி ஒதுக்கி, சரியான முறையில் கல்வி, வேலைவாய்ப்புகளை பெருக்கி தமிழ்நாடு வளரும் போக்கானது தொடங்கி விட்டது, என்பதும் எனது கணிப்பாகும்.

No comments:

Post a Comment