'சோ.ராமசாமியும், ஈ.வெ.ராமசாமியும்'
'சோ.ராமசாமியும், ஈ.வெ.ராமசாமியும்' என்ற தலைப்பில், கீழ்வரும் இரு சான்றுகள் வெளிவந்துள்ளன.
"தமிழில் படித்தால், சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம்."
('துக்ளக் ',
23.6.2010)
" தமிழில் படித்தால் பிச்சை கூட கிடைக்காது."
('விடுதலை',
27.11.43)
அவ்வப்போது எனது பார்வைகளுக்கு உரியவைகளை அனுப்பி, எனது ஆய்வுகளுக்கு உதவி வரும் நண்பர்களில் ஒருவரே, மேலே குறிப்பிட்ட 'வாட்ஸ் ஆப்' தகவலை எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு கீழ்வரும் எனது கருத்தினையும் அனுப்பி வைத்தேன்.
'இருவருமே தங்கள் மனதுக்கு சரி என்று பட்டதை துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.. சரி என்பதற்கான காரணங்களை, தவறு என்று அறிவுபூர்வமாக நிரூபித்தால், ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் ஆவார்கள்.'
ஈ,வெ.ரா அவர்களுக்கும், சோ அவர்களுக்கும் 'நெருக்கமாக' இருந்த தமிழ்ப்புலமையாளர்களில் எவராவது, 'அந்த' அறிவுபூர்வ விவாதத்தினை முன்னெடுத்தார்களா? அல்லது 'சுயலாப' நோக்கில், தத்தம் நட்புகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்'(?) பேணி வாழ்ந்தார்களா? என்பதானது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.
அவ்வாறு சுயலாப நோக்கில், சமூக ஒழுக்க நெறிகளை காவு கொடுத்து வாழ்ந்த/வாழும் தமிழ்ப்புலமையாளர்கள் தமிழ்நாட்டில் இருந்தது/இருப்பது உண்மையானால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக பணம் கொடுத்த வேட்பாளருக்கு வாக்களித்தவர்களை குறை சொல்ல முடியுமா?
“ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்”
அவ்வாறு சுயலாப நோக்கில், சமூக ஒழுக்க நெறிகளை காவு கொடுத்து வாழ்ந்த/வாழும் தமிழ்ப்புலமையாளர்கள் தமிழ்நாட்டில் இருந்தது/இருப்பது உண்மையானால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக பணம் கொடுத்த வேட்பாளருக்கு வாக்களித்தவர்களை குறை சொல்ல முடியுமா?
“ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்”
என்ற உண்மையை வெளிப்படுத்திய துக்ளக், தமிழ்வழிக்கல்வியை ஆதரித்து எழுதியுள்ள கட்டுரையில், கீழ்வரும் பகுதியும் வெளிவந்துள்ளது.
‘(காட்டுமிராண்டி) தமிழ் வழிக் கல்வி காலத்துக்கு ஒவ்வாதது, ஆங்கிலம் மூலமாகத்தான் முன்னேற முடியும் என்கிற பெரியார் சிந்தனை தமிழகத்தில் பரவி, மக்கள் மனதில் அது ஆழமாக பதிந்து விட்டது. (ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்). அதனால் எல்லா நிலையிலும் உள்ள தமிழக மக்களும், தமிழ் வழிக் கல்வியை கைவிட்டு விட்டு, ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். ஆனால், அந்தக் கருத்து முற்றிலும் தவறு என்று, சமீப காலத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. கடந்த 15
- 20 ஆண்டுகளில் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தாய் மொழி வழிக் கல்வி அவசியம் என்பதை உலகளவில் பல ஆய்வுகள் அடித்துக் கூறுகின்றன.
2004 - ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, ‘கல்வித் தரத்துக்கு தாய் மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம்’ என்கிற தலைப்பில் செய்த ஆய்வு, ‘தாங்கள் பேசாத ஒரு வெளிநாட்டு மொழியில் கற்கும் கல்வியின் தரம், நீச்சல் கற்றுக் கொடுக்காமல் மாணவர்களை நீரில் தள்ளி மூழ்கடிப்பது போலத் தான் இருக்கும்’ என்று உதாரணம் கூறி, அது அறிவு வளர்ச்சி இல்லாத கல்வியாகத்தான் அமையும் என்று கண்டித்துக் கூறியிருக்கிறது.
http://unesdoc.unesco. org/images/0014/001466/146632e.pdf).
2008 - ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் ஆய்வு, ‘ஆரம்பப் பள்ளியில் ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது தாய் மொழிக் கல்வியே’ என்று கூறிய பிறகும், அதிகமாக பல நாடுகள் கல்வித் திட்டங்களில் சில ‘புகழ் பெற்ற’ மொழிகளில் கற்கும் கல்வியைப் புகுத்துகிறார்கள். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். தாய் மொழியைத் தவிர வேறு மொழியில் கல்வி கற்பவர்கள், தாய் மொழியில் கற்பவர்களை விட, ஒரு பாடத்தைப் புரிந்து கொள்ள 7 ஆண்டுகள் கூட ஆகும்’ என்று கூறுகிறது
2010 - ஆம் ஆண்டு நார்வே நாட்டின் காசஸ்பார்க் சர்வதேசப் பள்ளியின் ஆய்வு.
(http://www.ibo.org/contentassets/4ccc99665bc04f3686957 ee197c13855/thompson
execsum 8-29-12.pdf ). தாய்மொழியில் ஒரு குழந்தை நல்ல பயிற்சி பெற்றால், மற்ற மொழிகளில் அது கற்றுக் கொள்வது சுலபம் என்று எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன. ஆங்கில வழியில் கற்பதால் இயற்கையாக தமிழிலும் தேர்ச்சி பெறுவதில்லை. ஆங்கிலத்திலும் தேர்ச்சி வரவில்லை. இதுதான் யதார்த்த நிலை.
இருந்தும், இப்படியெல்லாம் உலகில் ஆய்வுகள் நடந்து, உலகம் மாறி வருவதைப் பற்றி தமிழக மக்களுக்கு தமிழக அரசு எடுத்துக் கூறியதா? பிறந்த நாட்களுக்கு ஆயிரம் விளம்பரங்கள் கொடுக்கும் அரசு, இதுபற்றி ஏதாவது விளம்பரம் கொடுத்ததா? இத்தனை திராவிடக் கழகங்கள் இருக்கின்றனவே, ஏதாவது ஒரு கழகம் இதுபற்றி கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி, விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டியதா? மக்களுக்கு விபரம் தெரியவில்லை என்றால், ஆங்கிலத்தால் மட்டுமே அறிவு வளர்ச்சி ஏற்படும் என்று அதன் மீதுள்ள மோகத்தால் உருவான தவறான சிந்தனை அவர்களுக்கு தொடர்ந்து இருப்பதிலும், பரவுவதிலும் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும்? எனவே, கழகங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதே தவிர, தாய்மொழி வழிக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை தாங்கள் உணரவும், மக்களுக்கு உணர்த்தவும் தவறி விட்டன. ஆனால், ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடம் கற்க வேண்டியதன் அவசியத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இதுபற்றி சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்.’
(‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா
(1)?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html
)
‘2005 சூலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த போது, 'துக்ளக்' இதழில் 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் பற்றிய கட்டுரை வெளிவந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின் துக்ளக் இதழை வாங்கி, அந்த கட்டுரையைப் படித்து வியந்தேன். தி.மு.க தலைவரின் ''தொல்காப்பிய பூங்கா' நூலில் இருந்த குறைகளை அறிவுபூர்வமாக வெளிப்படுத்திய அந்த முயற்சிக்கு, தமிழ்நாட்டு பிரபல மீடியாக்களில் இடம் அளித்தவை துக்ளக்கும், தினமலர் நாளிதழ் மட்டுமே என அறிந்தேன்…………………………………..
2005 முதல் அவ்வாறு துக்ளக் இதழை படித்து வருகையில், துக்ளக் சோ பற்றிய கீழ்வரும் தகவலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
துக்ளக் சோ முன்பு ஓர் இதழில் சமஸ்கிருத சொற்களைக் கொண்டு, கண்டபடி பொருளற்ற வாக்கியங்களை உருவாக்கி, துக்ளக் இதழில் வேதங்களில் இருந்து அவற்றை எடுத்துப்போட்டதாக அறிவித்து, அந்த வாக்கியங்களின் பொருள் என்று, துக்ளக் சோ தாமாக உருவாக்கிய கருத்துரையை வெளியிட்டார். அந்த குறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை. பின் சில மாதங்கள் கழித்து, துக்ளக் சோவே, அந்த குறைபாட்டினை துக்ளக் இதழில் வெளியிட்டு, தமக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். அதற்காக அவரை 'சமஸ்கிருத விரோதி, வேத விரோதி' என்று உணர்ச்சிபூர்வ சமஸ்கிருதப் பற்றாளர்கள் எவரும் துக்ளக் சோவை கண்டித்ததாக தெரியவில்லை.
ஒருவேளை துக்ளக் ஆங்கில இதழாக இருந்து அவ்வாறு வெளிவந்திருந்தால்,வடநாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் எவராவது, அதை கண்டுபிடித்து, துக்ளக் சோவிற்கு தெரிவித்திருப்பார்கள்.
அவ்வாறு நான் கருதுவதற்கான காரணம் வருமாறு.
தமிழாயிருந்தாலும், சமஸ்கிருதமாயிருந்தாலும், பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லாதோராயிருந்தாலும்;
உணர்ச்சிபூர்வ இரைச்சலில், அறிவுபூர்வ விவாதங்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு, புலமையாளர்கள் எல்லாம் 'சித்தர்களைப் போல' ஒதுங்கி வாழும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.(‘ திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social
Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள்
(2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’;
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய அ.நக்கீரன், சாகும் வரை தமது நண்பர்கள் பாதுகாப்பில் இருந்து, வாழ்ந்து, மறைந்ததற்கும் அதுவே காரணமாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html
)
துக்ளக் முன்வைத்துள்ள தமிழ்வழிக்கல்வி
ஆதரவு தொடர்பான விவாதத்தினை, அறிவுபூர்வமாக முன்னெடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக 'ஆர்.எஸ்.எஸுக்கும், துக்ளக்கும் திடீரென தாய்மொழிவழிக்கல்வி மீது ஏன் மோகம் வந்தது?' என்ற திசை திருப்பல் வாதமானது, தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு துணை புரியுமா? அல்லது கெடுக்குமா? உண்மையான சமூக அக்கறையுள்ளவர்கள் எல்லாம் தமிழ்வழிக்கல்விக்கு ஆதரவாக வெளிப்படும் சக்திகளை எல்லாம் அரவணைத்து முன்னேறுவதே புத்திசாலித்தனமாகும்.
நேற்று வரை ஆதரிக்காத நீ, இன்று ஏன் ஆதரிக்கிறாய்? என்று அந்த ஒற்றுமையை சீர்குலைக்க முயல்பவர்களை எல்லாம் ஓரங்கட்டினால் தான், தமிழ்வழிக்கல்வி மீட்சியில் வெற்றி பெற முடியும்.
நேற்று தமிழ்வழிக்கல்வியை ஆதரித்தவர்களும் சரி, இன்று ஆதரிப்பவர்களும் சரி, மேலே குறிப்பிட்ட முன்னேற்றம் நடைபெறும் போது, இரட்டை வேடப் போக்கில் ஆதரித்தவர்கள் எல்லாம், செயல்பூர்வமாக அம்பலமாகி, ஓரங்கட்டப்படுவார்கள். (' Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics'; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
எனவே உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்களை எல்லாம், ஒதுக்கி, அறிவுபூர்வமாக, காரியம் சாதிக்கும் நோக்கில், தமிழ்வழிக்கல்வி ஆதரவின் ஒற்றுமையை வலிவுறச்செய்து முன்னேறுவோம். விரைவிலேயே வெற்றியும் பெறுவோம்.
Note: RSS Chief ‘Bhagwat
said the Sangh acknowledges as valid only those parts of “Bunch of Thoughts”
which remain relevant to the current circumstances and have been put together
in an in-house publication, “Guruji: Vision and Mission”.’; https://timesofindia.indiatimes.com/india/rss-has-discarded-chunks-of-golwalkars-thoughts-mohan-bhagwat/articleshowprint/65879084.cms
Will 'Periyar' parties
follow RSS to discard boldly EVR's wrong policy like
anti-Tamil language & literature, etc, pointed out in my blog posts?
No comments:
Post a Comment