Thursday, June 7, 2018


சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (7);

 

'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமும் தொடங்கி விட்டது, மீட்சியின் 'சிக்னலாக'



'துக்ளக்' இதழை,பெரியார் கொள்கையாளராக பயணித்த காலத்தில் வெறுத்து, தவிர்த்து வந்த நான், பழந்தமிழ் இலக்கியங்களை 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) ஆய்வுக்கு உட்படுத்தி பயணித்த போக்கில்;

அது போன்ற வெறுப்பு நோய்களில் இருந்து விடுபட்டேன். 2005 சூலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த போது, 'துக்ளக்' இதழில் 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் பற்றிய கட்டுரை வெளிவந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின் துக்ளக் இதழை வாங்கி, அந்த கட்டுரையைப் படித்து வியந்தேன். தி.மு.க தலைவரின் ''தொல்காப்பிய பூங்கா' நூலில் இருந்த குறைகளை அறிவுபூர்வமாக வெளிப்படுத்திய அந்த முயற்சிக்கு, தமிழ்நாட்டு பிரபல மீடியாக்களில் இடம் அளித்தவை துக்ளக்கும், தினமலர் நாளிதழ் மட்டுமே என அறிந்தேன்.

அந்தப் பிரச்சினையில், 'தமிழ், தமிழ் உணர்வு, வீர தீர சூரர்கள்' வாலைச் சுருட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்களா? இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.

அது பற்றிய கவலையின்றி, காலனிய சூழ்ச்சியில் 'இனம்' திரிந்தது தெரியாமல், 'இன நலன்' என்று தி.மு.க தலைவரை ஆதரித்து பயணித்தவர்கள் யார்? யார்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். அது போன்ற மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம், 'அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயிர் இழந்த உதயகுமார் நம் குடும்பப் பிள்ளை இல்லையே'என்று கருதி, அந்தப் போக்கில் பயணித்திருப்பார்களா?

இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட உயிர் இழப்புகளுக்கு அத்தகையோர் எல்லாம், முதலைக் கண்ணீர் வடிப்பார்களா?

அது போலவே, தமிழ்நாட்டின் 'கல்விக்காவலர்களாக'(?) வலம் வருபவர்களின் பார்வைக்கு, கீழ்வருவது உரியதாகும்.

‘கல்லூரிகளில் ஆங்கிலவழி மாணவர்களும் (தமிழ்வழி மாணவர்களைப் போலவே) பல்கலைக் கழக தேர்வுகளை ஆங்கிலமும் தமிழும் கலந்து 'தமிங்கிலிசில்' எழுதி வருகிறார்கள். ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் பல்கலைக் கழக தேர்வுகள் எழுத வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது. உடனே வை.கோ உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களும் 'தமிழுக்கு அநீதி'(?) என்று கொதித்தெழுந்தார்கள். உடனே அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் இது போல, வேறு எந்த மாநிலத்திலும், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் ஆங்கிலத்தையும், அந்த மாநில மொழியையும், கலந்து எழுதுவதை, அரசும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கும் அளவுக்கு, உயர்க் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.’ (‘தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி: தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?’ ; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

'நீட்' தேர்வு எதிர்ப்பு உள்ளிட்டு, தமிழ்நாட்டின் கல்விக்காவலர்களாக தம்மை அறிவித்து பயணிப்பவர்கள் எல்லாம், வைகோ உள்ளிட்ட தலைவர்களின் எதிர்ப்புகளை கண்டித்திருந்தால், முதல்வர் ஜெயலலிதா அந்த தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் உத்திரவினை வாபஸ் பெற்றிருக்க மாட்டார்; அந்த உத்திரவிட்ட பி.எச்.பாண்டியனின் மனைவியான, மறைந்த சிந்தியா பாண்டியனை, உயர்மட்ட கல்விக்குழுத்தலைவர் பதவியிலிருந்தும் அகற்றியிருக்க மாட்டார்.

2005 முதல் அவ்வாறு துக்ளக் இதழை படித்து வருகையில், துக்ளக் சோ பற்றிய கீழ்வரும் தகவலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

துக்ளக் சோ முன்பு ஓர் இதழில் சமஸ்கிருத சொற்களைக் கொண்டு, கண்டபடி பொருளற்ற வாக்கியங்களை உருவாக்கி, துக்ளக் இதழில் வேதங்களில் இருந்து அவற்றை எடுத்துப்போட்டதாக அறிவித்து, அந்த வாக்கியங்களின் பொருள் என்று, துக்ளக் சோ தாமாக உருவாக்கிய கருத்துரையை வெளியிட்டார். அந்த குறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை. பின் சில மாதங்கள் கழித்து, துக்ளக் சோவே, அந்த குறைபாட்டினை துக்ளக் இதழில் வெளியிட்டு, தமக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். அதற்காக அவரை 'சமஸ்கிருத விரோதி, வேத விரோதி' என்று உணர்ச்சிபூர்வ சமஸ்கிருதப் பற்றாளர்கள் எவரும் துக்ளக் சோவை கண்டித்ததாக தெரியவில்லை.

ஒருவேளை துக்ளக் ஆங்கில இதழாக இருந்து அவ்வாறு வெளிவந்திருந்தால்,வடநாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் எவராவது, அதை கண்டுபிடித்து, துக்ளக் சோவிற்கு தெரிவித்திருப்பார்கள்.

அவ்வாறு நான் கருதுவதற்கான காரணம் வருமாறு.

தமிழாயிருந்தாலும், சமஸ்கிருதமாயிருந்தாலும், பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லாதோராயிருந்தாலும்;

உணர்ச்சிபூர்வ இரைச்சலில், அறிவுபூர்வ விவாதங்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு, புலமையாளர்கள் எல்லாம் 'சித்தர்களைப் போல' ஒதுங்கி வாழும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.(‘ திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html   

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய அ.நக்கீரன், சாகும் வரை தமது நண்பர்கள் பாதுகாப்பில் இருந்து, வாழ்ந்து, மறைந்ததற்கும் அதுவே காரணமாகும்.

அது போன்ற போக்கானது, தமிழ் இசை தொடர்பாகவும் வெளிப்பட்டு வருகிறது.

‘1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) என்ற தலைப்பில் நான் முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்று வரை நான் வெளிப்படுத்திவரும் ஆய்வு முடிவுகள் எல்லாம், சில விதி விலக்குகளை தவிர்த்து,

'பெரியார்' கட்சிகளைப் பொறுத்த மட்டில், 'செவிடர்கள் காதில் ஊதிய சங்கான' விளைவினையே சந்தித்து வந்துள்ளன‌.’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

’’ எமதுள்ளம் சுடர் விடுக 34: தமிழர் இசையும் வாழ்வும்! என்ற தலைப்பில்  பிரபஞ்சன்  'தமிழ் இந்து' நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்த போது, கீழ்வரும் பகுதியானது எனது கவனத்தை ஈர்த்தது.

இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’ என்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’

கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு கீழ்வரும் மின்மடலை அனுப்பினேன்.

தங்களின் கட்டுரையில்;


“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு."

எனது கவனத்தை ஈர்த்தது. 

'அந்த 22 சொற்கள்' யாவை?" என்பதை அனுப்பினால், அவை மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் சரியாக 'புரிந்து' பதிவாகி உள்ளனவா? என்ற‌ எனது ஆய்வுக்கு உதவும்.”

இன்று வரை பதில் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்.

ஒருவரின் ஆய்வுக்கட்டுரையில் இரண்டு குறைகளை நான் சுட்டிக்காட்டி, அந்த இரண்டு குறைகளுக்கும் விளக்கம் அளித்து அவர் அனுப்பிய சான்றுகள் சரி என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறு என்றால் அறிவுபூர்வமாக மறுக்க வேண்டும். அதை விடுத்து புதிதாக ஒரு குறையை நான் வெளிப்படுத்தினால், அது 'ஆய்வுக்குழாயடி சண்டை'யாகி விடாதா? அது போன்ற அனுபமும், எனக்கு அண்மையில் கிடைத்தது. 
 
தமிழில் இசை தொடர்பான 'இழை' பற்றிய எனது கண்டுபிடிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
அதில் கீழ்வரும் சான்று இடம் பெற்றுள்ளது.

'முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ்'; - பெருங்கதை 4:5,19

அது தொடர்பாக, கீழ்வரும் மறுப்பு எனக்கு வந்தது.

முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ் In explaining this, you say ‘muRRizai’ means an  accomplished thread ‘payiRRiya’ means giving birth. I am giving below what Tamil Lexicon gives as meanings for payiRRu” என்று குறிப்பிட்டு லெக்சிகனில், அது தொடர்பான‌ அனைத்தையும் சேர்த்துள்ளார்.

பின் கீழ்வரும் அவரின் முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

There is no meaning as ‘giving birth to’. The context also does not allow that. Here one of the heroines of the epic  PatumAtEvi is referred to by the term muRRizai, who says that she would learn to play the lute that UtayaNan taught  another heroine, VAcavatattai, to play. Grammatically, muRRizai is an anmoziththokai. No  musical thread is present in this poem.” 

முதலில் வெளிப்படுத்தியுள்ள லெக்சிகன் தொடர்பான;  ““There is no meaning as ‘giving birth to’. - கருத்துக்கு கீழ்வரும் விளக்கம் அளித்துள்ளேன்.

பயிற்றல்  - தோற்றுவித்தல் ;
மர்ரே எஸ் ராஜம் குழு தொகுத்த 'சங்க இலக்கியங்கள்' தொகுதியில், 'பாட்டும் தொகையும்' என்ற தலைப்பில் வந்ததில், 'சொல் – தொடர்- விளக்கம்' என்ற் தலைப்பில், இந்த பொருள் வெளிவந்துள்ளது; லெக்சிகனில் வெளிவராத பொருள் இதுவாகும்.

 அடுத்து 'முற்றிழை' தொடர்பன‌ மேலே குறிப்பிட்ட சான்றில் ;

 Grammatically, muRRizai is an anmoziththokai.
என்ற கருத்து தொடர்பாக, கீழ்வரும் விளக்கத்தினை அனுப்பினேன்.

‘அன்மொழித்தொகை என்று வைத்துக் கொண்டாலும்;

" வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத்தொடர் மொழிகளுக்கு உருய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிற சொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும்" (www.tamilvu.org )

எனவே 'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து பற்றி ஆராய்வதும் இங்கு அவசியமாகிறது.’

அந்த ஆராய்ச்சியில் 'முற்றிழை' எவ்வாறு இசை தொடர்புடையது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினேன். (முழுவதும் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் மின்முகவரியை pannpandi@yahoo.co.in    தெரிவித்தால், அந்த விளக்கத்தினை அனுப்ப இயலும்).

அது தவறு என்றால்;

'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து எது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினால், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

அது போன்ற முயற்சியின்றி, இசையியல்(Musicology) தொடர்புடைய எனது விளக்கமானது எந்த அளவுக்கு அவருக்கு புரிந்தது? என்ற குழப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில், அவரிடமிருந்து மின்மடல் வந்தது.

(வளரும்)

No comments:

Post a Comment