Monday, September 3, 2018

'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (3);


சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசிக்கும் இரகசியம்?


வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய லாப நட்ட கணக்குகள் எல்லாம், குடும்பம் மற்றும் நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைந்த‌தால், இயல்பான அன்புக்கும், லாபநட்ட நோக்கற்ற உதவிக்கும் 'வறட்சி' ஏற்பட்டு, தமிழ்நாடானது சமூக மூச்சுத் திணறலுக்கு(Social Suffocation)  உள்ளாகி விட்டது;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தம்மை ஒப்பிட்டுக் கொண்டே,   'செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கான 'ஏக்கங்களுடன்' வாழ்கிறார்கள். அதன் விளைவாக பிறர் நம்மை 'உயர்வாக' நினைக்க வேண்டும் என்பதற்காக வாழும் அடிமைகளாக, தமது இயல்பை ஒட்டிய வாழ்வைத் தொலைத்து வாழ்கிறார்கள். நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு அவசியமான சமூக வெளியில் (social space) நல்ல சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டம்' பற்றிய புரிதலின்றி,சமூக மூச்சுத் திணறலுக்குக் காரணமுமாகி, அதில் பாதிக்கப்பட்ட நோயாளியாகவும் வாழ்கிறார்கள்………….சமூகத்தில் குழந்தைகள் வளரும்போதே, மேலேக் குறிப்பிட்டவாறு வாழும் தமது பெற்றோர்களையும், மற்ற பெரியவர்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு, மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளிலேயே மற்ற குழந்தைகளுடன் பழகி வளர்வது சமூகத்தில் மூச்சுத் திணறல் மேலும் அதிகரிக்க வழி வகுக்காதா?’ (http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html )

தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளிகளில், குறிப்பாக மேல்த்தட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் எல்லாம், பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களைப் போலவே, 'லாபநட்ட கணக்குடன்' பழகி வருகிறார்களா? இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து, வியப்பும், அதிர்ச்சியும் அடையலாம்.

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/08/under-current-decisive.html )

அத்தகையோர் எல்லாம் வாழும்போதே மரணித்தவர்கள் ஆவார்கள்;

என்பதையும் கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான(Negative Oscillator) நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.’ (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

அவ்வாறு 'அழிவுபூர்வ அலையியற்றி' போல இருப்பவர்களை எல்லாம், மனிதத்தில் மரணித்து வாழும் மனிதர்களாக அடையாளம் கண்டு, அத்தகையோரின் வாடையின்றி வாழ்வதும், எனது ஆய்வுகளின் வெற்றியின் இரகசியமாகும். (‘Are you living with the 'dead bodies'?  ; http://veepandi.blogspot.com/2012/12/normal-0-false-false-false_3340.html )

தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை (Social Status) என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காகவாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.  ( ‘இன்பத்தைத் திருடும் ஒப்பீடு’;  http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

நமக்கு நாமே எஜமானாக வாழும்போது மட்டுமே, திரைப்படத்தில் மட்டுமே நகைச்சுவை காட்சிகளை ரசிக்காமல், சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசிக்க முடியும்.

என்னை வாழத் தெரியாத முட்டாளாகவும், தமக்கு 'லாபமற்ற'வராகவும் கருதி, என்னைக் கீழாக மதித்து, ஒதுக்கி வாழ்பவர்களில் சிலர், எனக்குள்ள சமூகத் தொடர்புகளில், 'மிகுந்த செல்வாக்குள்ளவர்கள்' இருப்பதாக அறிந்தவுடன், என்னிடம் 'குழைந்து, வாலாட்டி' நெருக்கமாக முனைந்தது பற்றிய எனது அனுபவங்களையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.’ (‘வித்தியாசமான விறுவிறுப்பான (interesting)  அனுபவங்கள்’; http://tamilsdirection.blogspot.com/2015/03/interesting.html )

'பெரியார் கொள்கையாளர்' வேடத்தில் என்னிடம் பழகிய‌ ஒருவர், சிறு உதவி கேட்ட போது, எனது நண்பரான உயர்பதவியில் இருப்பவருடன் தொலைபேசியில் பேசச்செய்தேன். அவரிடம் " நீங்க யாரு? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டு, 'தராதரம்' தெரியாத 'முற்போக்கு' முட்டாளாக, அந்த  'பெரியார் கொள்கையாளர்' வாழும் சிக்னலை, எனக்கு உணர்த்தினார். அத்தகைய 'புத்திசாலி பார்ப்பன எதிர்ப்பு முற்போக்குகள்', திராவிட ஊழல் பெரும்பணக்காரர்களுக்கு வாலாட்டி பிழைத்து, ஊழல் பிரமீடின் பாதுகாவலர்களாக வலம் வந்த 'நகைச்சுவைகளும்' தமிழ்நாட்டில் 'தனித்துவமாக'(Unique) அரங்கேறியுள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பலமுறை விமானங்களிலும், குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளிலும் பலமுறை பயணித்து வரும் நான், எனது ஆய்வுத்திட்டம்(R & D Project) தொடர்பாக, ‘ஏசி’(AC) காரில் பயணித்து, ‘ஏசி’ அறையில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் நான்

தமிழ்நாட்டில் இருக்கும் காலங்களில் விரும்பி அரசுப் பேருந்துகளில், அவ்வப்போது பயணித்து வருகிறேன்; சிங்கப்பூரில் வாழும் எனது மகனின் எச்சரிக்கையைப் புறக்கணித்து; 'சமூக அந்தஸ்து கூண்டில்'(Social Status Prison) சிக்காதவர்களின் உலக சமூக சுவாசத்திற்காக(Social Breathing). அந்த பயணங்களிலும், மேலே குறிப்பிட்ட மகிழ்ச்சியான முகங்களையும், 'இயல்பான' கோபங்களையும் பார்த்து வருகிறேன். மேலே குறிப்பிட்ட 'புலி வாலைப்' பிடித்து பயணிப்பவர்களில், சொந்தமாக கார் வாங்கும் 'வளர்ச்சி'(?) அடையாத வரையில், அரசுப்பேருந்தில் பயணிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி, சக பயணிகளிடம் தமது 'உயர்வை' வெளிப்படுத்தி பயணிப்பவர்களையும், நான் பார்த்து, அந்த நகைச்சுவையையும் அனுபவித்திருக்கிறேன். (‘'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (1)’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் உண்மையான தன்மானத்துடன் வாழ்வதும், அவரவரின் சமூக நிலைக்கு ஏற்றவாறு சிரமம் ஆகி வருகிறது.

நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருக்கிறார்கள்

ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;

என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/02/ )

சாமான்ய மனிதர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் வாழும் மைக்ரோஉலகத்துடன் திருக்குறள்(140) வழியில் 'ஒட்டி' வாழ்ந்தால் மட்டுமே, மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கி, வெளிப்படும் நகைச்சுவைகளை எல்லாம் ரசிக்கும் வாய்ப்புகள் கிட்டும். 

உமா மகேசுவரன், சிரி சபாரெத்தினம், பத்மநாபா, ஜெயலலிதா போன்றவர்களின் ஆதரவாளர்களாக பயணித்து, அவர்கள் மறைவிற்குப் பின், அந்த 'மறைவுக்கு' காரணமானவர்களுடன் 'ஒட்டி' பலன்கள் பெற்று,  செல்வம் மற்றும் செல்வாக்குடன் வலம் வருபவர்கள் எல்லாம், கடந்த காலத்தில் 'அந்த' ஆதரவாளர்களாக உணர்ச்சிபூர்வமாக அவர்கள் பேசிய வீடியோக்களை இன்று காண நேர்ந்தால், அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். (‘தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறுகிறாரா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html )


போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி, முன்பு சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டிருந்த பின்னணியில், அவர் மூலம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையை எவ்வாறு கற்பனையாக‌ ரசிப்பது? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/02/ )

மனிதர்கள் எல்லாம் மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) (https://en.wikipedia.org/wiki/Transducer ) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்து வருகிறார்கள்.’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

மேலே குறிப்பிட்ட செயல்நுட்பமானது எந்த அளவுக்கு புரிகிறதோ, அந்த அளவுக்கு நமது தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) நமக்கு அடிமைப்படுத்தி, நமக்கு நாமே எஜமானர்களாக வாழ முடியும். அப்போது தான் உண்மையான தன்மானத்துடன் வாழ முடியும்.

அவ்வாறே நான் ஆடம்பரமற்று எளிமையாகவும், சாதாரண மனிதர்கள் மட்டுமே எளிதில் சந்திக்க கூடிய வகையிலும், மற்றவர்களில் நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் 'வடிகட்டி' (Filter), ஈமெயில் (Email) மூலம் மட்டுமே எவரும் தொடர்பு கொள்ளும் வகையிலும், 'முக்கியத்துவ சிறையில் சிக்குவதை இயன்றவரை தவிர்த்து;

'தராதர வடிப்பானின்றி' (Abandoning human characteristics filter), மனிதர் அனைவரையும் .வெ.ரா அவர்கள் வழியில் 'சமமாக' நடத்தி, 'அனுபவித்து', பாடம் கற்று, இன்று 'சமூக கிருமிகளை', சாதி, மத பேதமின்றி, எனது 'தீண்டாமைக்கு' உட்படுத்தி;

சமூகத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடன், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நான் வாழ்ந்து வருகிறேன்; கடந்த கால இழப்புகளிலிருந்தும் 'விடுதலை' பெற்று. (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாவதால், எனக்கு தனிப்பட்ட முறையில் 'லாபத்தையே' அனுபவித்து வந்துள்ளேன்.

ஆனால் திருச்சி  NIT உள்ளிட்டு நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் எல்லாம், அந்த 'லாபத்தை' நான் இழக்க வேண்டிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன
(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிக்க (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html & https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html );

சமூகக்கடமையானது எனக்கிருப்பதையும் உணர்ந்துள்ளேன்.

ஏற்கனவே உள்ள வடிப்பான்களை (Filters) இன்னும் மேம்படுத்தி, பெரிய பாதிப்பின்றி, வாழ்வதற்கும் என்னை பண்படுத்தி வருகிறேன். உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேறி, பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம் ஒரங்கட்டப்பட்டு, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீட்சி பெற, என்னால் இயன்ற அளவுக்கு 'வினை ஊக்கியாக(Catalyst) பங்களித்து வாழ்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html ) அவ்வாறு மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக வாழ்ந்தால் மட்டுமே, சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசித்து வாழ முடியும்

No comments:

Post a Comment