Wednesday, October 11, 2017

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' .வெ.ராவா? (1)


அந்த சீரழிவுப் போக்கில்தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும்  பெற வேண்டிய, ஆய்வுகளின் பலன்கள் தாமதமாகின்றனவா?


'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா?', 'சர்வதேச அரசியலும் உரிமைப் போராட்டமும்', 'பெரியாரியல் பார்வையில், இந்திய தேசியம்', 'பெரியார் தொண்டர்கள் பார்வைக்கு' போன்ற புத்தகங்களை வெளியிட்டு, 'திருச்சி பெரியார் மையத்தில்' நான் பங்காற்றிய காலம் வரை, 'பெரியார்' .வெ.ரா தொடர்பான விவாதங்கள் அறிவு பூர்வ தளத்தில் நடைபெற்றன‌; 

அதன்பின் எனக்கு தெரியாமல், 'திருச்சி பெரியார் மையம்' ஒளி வட்டத்தில் (aura), சசிகலா குடும்ப வலைப்பின்னலில் இடம் பெற்று, 'பெரியார் சமூக கிருமிகள்' செயல்பட்டு, அதன் பின்னர் எனது ஆய்வுப் பார்வையில் 'சமூகவியல் பரிசோதனை மனித மாதிரிகளாக' (Sociological Experimental Human Specimens) அகப்பட்டு (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  & http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html  ).

அதன் தொடர்விளைவாக‌, இன்று 'பெரியார்' வழிபாட்டு போக்கிலும், தமிழ்த் தேசிய/இந்துத்வா முகாம்களில் சிலர் உணர்ச்சிபூர்வமாக பெரியாரை இழிவுபடுத்தும் போக்கிலும், .வெ.ரா அவர்கள் சுவடின்றி மறையும் அபாயம் வெளிப்பட்டுள்ளது; 

ஆங்கிலவழிக் கல்வி புற்றீசல் வளர்ச்சியில், 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வரும் போக்கில்;(http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html )

திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் 'ஊழல் பாதுகாப்பு கவசமாக', 'பெரியார் தந்த புத்தி' பயன்பட்டு வரும் போக்கில்;

மாணவர்கள், இளைஞர்களின் கேலிப் பொருளாக, 'பெரியார்' இடம் பெற, வாய்ப்புகள் உருவாகி வரும் அபாயத்தில்
  
.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பினை', குருட்டுப் பகுத்தறிவில், தவறாக புரிந்து கொண்டு, 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயில் 'இறுகிய மனப்பாங்கில்' (Fixed Mindset) 'பெரியார் கட்சிகள்' சருகாகி உதிரும் திசையில் பயணிப்பதும்(https://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2017-10-05T08:09:00-07:00&max-results=7 )

.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' இடம் கொடுத்து, 'வளர்ச்சி மனப்பாங்கில்'(Growth Mindset) ) அறிவு பூர்வ விவாதத்தை ஊக்குவித்து ஆர்.எஸ்.எஸ் பயணிப்பதும்; (http://www.news18.com/news/india/rss-has-one-message-for-both-friends-and-foes-debate-dont-abuse-1544117.html )

தமிழ் உள்ளிட்ட தாய்மொழிவழி அடையாளங்களை ஆர்.எஸ்.எஸ் மீட்டு, மேற்கத்தியமாக்கலில் சிக்காத நவீனமயப் போக்கில் (Modernization without westernization) , இந்தியாவை மீட்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

'இறுகிய மனபாங்கின்' பாதக விளைவுகளையும், 'வளர்ச்சி மனப்பாங்கின்' சாதக விளைவுகளையும் நன்கு விளக்கியுள்ள ஆங்கில நூல் 'mindset- Changing the way you think to fulfil your potential (by DR CAROL S. DWECK) ' ஆகும்.

அது போலவே, ஈழ விடுதலை முயற்சிகளில் நடந்த நிறை குறைகளை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தாமல், 'பிரபாகரன் வழிபாடு' போக்கும், அந்த அபாயத்தின் வலிமையைக் கூட்டியுள்ளது.

பிரபாகரனின் ரசிகர்களாக இல்லாமல், தமிழ் ஈழ பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாமல்முள்ளிவாய்க்கால் அழிவை, அறிவுபூர்வமாக விமர்சிக்க ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு: http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html

மேலே குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, கீழ்வருபவையும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உரியவை ஆகும்.

உலகில் ஐ.நா அமைதிப்படைக்காக சென்ற, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்ற இராணுவத்தினரில் சிலர் கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு, கண்டுபிடிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், உள்நாட்டு பிரச்சினைகளில் காவல் துறைக் கட்டுப்பாட்டில் சிக்கிய பகுதிகளிலும் இந்த சிக்கல் உண்டு. நக்சலைட் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், நகசலைட்டுகளிலிருந்தும், காவல் துறையினரிடமிருந்தும், இரண்டு பக்கங்களிலும், இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றன. மனித மிருகங்கள் இராணுவத்திலும், காவல் துறையிலும், நக்சலைட்டுகள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள புரட்சியாளர்களிடமும் உண்டு. இராணுவத்திலும், காவல் துறையிலும், நக்சலைட்டுகள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள புரட்சியாளர்களிடமும், வெளிப்பட்ட பிரமிப்பூட்டும் மனிதாபிமான செயல்கள் எல்லாம், எதிரெதிர் முகாம்களில் இருட்டடிப்புகளுக்கும் உள்ளாகின்றன. இலங்கையில் இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய ஒருவர் என்னிடம் தெரிவித்த தகவல்: பிரபாகரனை ஒரு முறை இந்திய அமைதிப்படை பிடித்து, பின் டெல்லியிலிருந்து வந்த உத்திரவின்படி விடுவிக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்தது. பாதிப்புகளின் பெரும்பகுதியை கட்சித் தலைவரும், தொண்டர்களும் சந்திக்க, பொது மக்களுக்கு ஊறு மட்டுமின்றி, இராணுவம், காவல்துறை கட்டுப்பாட்டிற்கு உள்ளாகி சீரழியும் ஆபத்துகளுமின்றி, உலகில் கட்சி நடத்திய ஒரே தலைவர் 'பெரியார்' ஈ.வெ.ரா ஆவார்.  

அவருக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

ஆக பயணித்தார்; முந்தைய பதிவில் விளக்கியபடி, 'அடையாள அழிப்புக்கு' வழி வகுத்து. தமிழ்நாடு திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழியவும், அந்த கொள்ளையர்களின் ஆதரவில் பிரபாகரன் சிக்கி, முள்ளி வாய்க்கால் அழிவில் முடியவும்.

அந்த சீரழிவுப் போக்கில் தமிழ்நாடு சிக்கியதால், எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாகி வருகின்றன;

என்பதையும் பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாத, தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

'பெரியார்' ஈ.வெ.ராவின் 'அடையாள அழிப்பு' சமூக செயல்நுட்பமானது, அவரின் கொள்கைகளையே, 'பொதுவாழ்வு வியாபாரிகளின்' மூலதனமாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர வழி வகுத்ததா? என்பதும், ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்கு ஏற்ற பொருளாகும். தமக்கு பிடித்த தலைவர்களின் 'பிம்பங்களின்' வழிபாட்டுப் போதைகளில் பயணிப்பவர்களின் செல்வாக்கிலிருந்து, தமிழ்நாடு 'விடுதலை' ஆகாமல், இது போன்ற அறிவுபூர்வ ஆய்வுகளை ஊக்குவிக்கும் சமூக சூழலானது, தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பில்லை, என்பதும் எனது அனுபவமாகும்.

தனிமனித அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், ஈ.வெ.ரா அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, ஈ.வெ.ராவிற்கு நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட 'அடையாள அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

'ஈ.வெ.ராவின் பொதுத் தொண்டருக்கான இலக்கணத்தின்படி வாழ்பவர்களை பெரும்பான்மையாக கொண்ட இயக்கமே இனி தமிழ்நாட்டில் எடுபடும்.' என்பதும்; (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

தமிழ்வழிக் கல்வி மற்றும் தமிழின் மீட்பை முன்னிறுத்தி;


ஊடுருவி சீர்குலைக்க முயன்ற சக்திகளை மீறி, உலகமே வியக்கும் வகையில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வெளிப்படுத்திய சிக்னலாக'  (signal) ; (http://tamilsdirection.blogspot.sg/2017/01/1938-1965.html )

பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் சேதம் விளைவிக்காத, ஆனால் கைதாகும் போது எதிர்வழக்காடாமல், அதிகப்பட்ச தண்டனை வழங்குமாறு கோரி, அரசையே அதிர வைத்த, போராட்ட வடிவங்களை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பரீசிலித்து, இந்த காலக்கட்டதிற்கு ஏற்ற வகையில் வளர்த்து எடுத்து பயணித்தால், 'பெரியார் கட்சிகள்' சருகாகி மறைவதும் நிச்சயமாகிவிடும்' என்பதும்;

எனது ஆய்வு முடிவாகும்.

நான் தமிழ்நாட்டில் பிறந்து 1967க்கு முன்னரே பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் படித்துக் கொண்டிந்ததாலும், 'பிம்ப' (Ego) சிறையில் சிக்காமல், தவறுகளை பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளவும், தமது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி பயணிப்பதால் வரும் தீமைகள் பற்றி விளங்கிக் கொள்ளவும், .வெ.ராவை வியந்து முன்மாதிரியாக கொண்டு, திறந்த மனதுடன் அறிவுபூர்வ திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் எனது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு:  

                                 My Official Website:  www.drvee.in

தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; ரசிகர்களை ஊக்குவிக்காமல், என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே ('இடிப்பாரை'),  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

பொதுவாக ஆராய்ச்சி உலகில், பெரும்பாலும் அரசு/பல்கலைக்கழக/தனியார் நிதி உதவிகள் பெற்று, ஆராய்ச்சிகளில் முனைந்து, சாதனை புரிந்தவர்கள்/புரிபவர்கள் எல்லாம்,  தமக்குள்ள செல்வாக்குகள் அனைத்தையும் பயன்படுத்தி, அச்சாதனைகள் மூலம் 'பொருள், புகழ்' பெறுவதிலும் கவனம் செலுத்தி,  மீடியா வெளிச்சம் உள்ளிட்ட அந்த பலன்களையும் அனுபவிப்பார்கள்.

அவ்வாறு அனுபவித்து வருபவர்களில் நான் சந்தித்தவர்களும், என்னைப் பற்றி கேள்விப்பட்ட சமூக மேல் மட்டத்தில் உள்ளவர்களும், நம்பமுடியாத வியப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்; கீழ்வரும் காரணத்தால்.

மேலே குறிப்பிட்ட போக்கில் நான் சிக்காமல், ஆடம்பரமற்று எளிமையாகவும், சாதாரண மனிதர்கள் மட்டுமே எளிதில் சந்திக்க கூடிய வகையிலும், மற்றவர்களில் நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் 'வடிக‌ட்டி' (Filter), ஈமெயில் (Email) மூலம் மட்டுமே எவரும் தொடர்பு கொள்ளும் வகையிலும், 'முக்கியத்துவ சிறையில் சிக்குவதை இயன்றவரை தவிர்த்து;

'தராதர வடிப்பானின்றி' (Abandoning human characteristics filter), மனிதர் அனைவரையும் ஈ.வெ.ரா அவர்கள் வழியில் 'சமமாக' நடத்தி, 'அனுபவித்து', பாடம் கற்று, இன்று 'சமூக கிருமிகளை', சாதி, மத பேதமின்றி, எனது 'தீண்டாமைக்கு' உட்படுத்தி;

சமூகத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடன், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நான் வாழ்ந்து வருகிறேன்; கடந்த கால இழப்புகளிலிருந்தும் 'விடுதலை' பெற்று. (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )
எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாவதால், எனக்கு தனிப்பட்ட முறையில் 'லாபத்தையே' அனுபவித்து வந்துள்ளேன்.

ஆனால் திருச்சி  NIT உள்ளிட்டு நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் எல்லாம், அந்த 'லாபத்தை' நான் இழக்க வேண்டிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.( http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

ஏற்கனவே உள்ள வடிப்பான்களை (Filters) இன்னும் மேம்படுத்தி, பெரிய பாதிப்பின்றி, வாழ்வதற்கும் என்னை பண்படுத்தி வருகிறேன். உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேறி, பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம் ஒரங்கட்டப்பட்டு, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீட்சி பெற, என்னால் இயன்ற அளவுக்கு 'வினை ஊக்கியாக' (Catalyst) பங்களித்து வாழ்கிறேன்.

3 comments:

  1. நான் அறிந்தவரை,பழகியவரை சமூகநலன் நோக்கில் சார்பற்ற கருத்தை வெளிப்படுத்துவர்கள் வரிசையில் மிகச் சிலரே வருகிறார்கள். உங்களுடைய பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை;உடன்படும்,படா பகுதிகள் இருந்தாலும். தொடருங்கள், சிறுநூற்களாக கொண்டுவாருங்கள்.என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.

    ReplyDelete
  2. நடுவயது மற்றும் 60 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர் 'பிம்ப' வழிபாட்டாளர்களாகவும், பொதுவாழ்வு வியாபாரிகளாகவும், அவர்களின் வால்களாகவும் பயணிக்கிறார்கள். உங்களைப் போல, அறிவுபூர்வ விமர்சனப் போக்கில் உள்ள சிலரின் பின்னூட்டங்கள், எனது பதிவுகளை நெறிப்படுத்த துணை புரிகின்றன. தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகள், நூல்கள் வாடையின்றி, மேற்கத்திய ஆங்கில மோகத்தில் வாழும், மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு, எனது 'சாதனைகள்' வெளிப்படும் போது தான், எனது பதிவுகளில் உள்ள கருத்துக்கள் நோக்கி, அவர்களின் கவனம் திரும்பும். அந்த காலம் நெருங்கி வரும் திசையில், நான் பயணிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களில் (திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களின் குடும்பப் பிள்ளைகள் உள்ளிட்டு) பெரும்பாலோருக்கு, இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாது.

      Delete