Monday, October 2, 2017

                        மார்க்சியமும் பார்ப்பனீயமும் (2)
      வெம்பி பழமாக மாறி, தமிழ்நாடு நாறுகிறதா?


ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது மகளுக்கு விதவை திருமணம் செய்தபோது, 'பெரியார்' .வெ.ராவுக்கு வயது 10. ஜி.சுப்பிரமணிய ஐயர்  தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத ஏழைகளை முன்னேற்ற மேற்கொண்ட முயற்சிகளும் சந்தித்த எதிர்ப்புகளும், போல, இன்றுள்ள திராவிடர்/திராவிட கட்சிகளின் தலைவர்களில் எவராவது தமது உற்றம், சுற்றம், சாதிகளில் சந்தித்திருக்கிறார்களா? (https://en.wikipedia.org/wiki/G._Subramania_Iyer#Social_reforms ) அது போல, முத்துராமலிங்க தேவர் துணையுடன், மதுரை வைத்தியநாத ஐயர் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகளுக்கு, தமது சொந்த பந்தங்கள், உறவினர்கள் இடையே, அவர் சந்தித்த எதிர்ப்புகள் அளவுக்கு, இன்றுள்ள 'முற்போக்குதலைவர்களில் எவராவது சந்தித்திருக்கிறார்களா? (https://en.wikipedia.org/wiki/A._Vaidyanatha_Iyer ) இன்று நெடுமாறன் ஆதரவாளராக இருக்கும், புதுக்கோட்டை தமிழாசிரியர் மதிவாணன், திருக்கோகர்ணம் உயர்நிலைப்பள்ளியில் படித்த போது, தமது பள்ளி பிராமண ஆசிரியர் அருகாமை கிராமங்களிலிருந்து வந்து படித்த மாணவர்களை, தேர்வு காலங்களில் தமது வீட்டில் இலவசமாக தங்க வைத்து, காலையில் உணவும் அளித்து படிக்க வைத்ததை, என்னிடம் நினைவு கூர்ந்தார்

பிராமணர்களின்  முன்னேற்றத்திற்கு   பிராமணரல்லாதவர்கள் உதவியதற்கு பதிவும் உள்ளது. (தகவல் உதவி: திண்டுக்கல் பொ.முருகானந்தம்)


-ம்  1. நீதிக்கட்சி  துவங்குமுன் ஆங்கிலம் படித்து  பிரிடிஷாரிடம் வேலைக்குச்  சேர்ந்தவர்கள்  பிராமணர்களை  கைதூக்கிவிட்டதாக பண்டித எஸ்.முத்துச்சாமிபிள்ளை எழுதிய நூலில்  தகவல்  உள்ளது.

2. உவேசா வுக்கு  தமிழ் கற்றுக் கொடுத்த  ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆவார்.

இவை போல, தமிழ்நாடு முழுவதும், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் படித்த, வசதியான பிராமணர் உள்ளிட்ட பல சாதியினர் சாதி வேறுபாடுகளைக் கடந்து, மேற்கொண்ட முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும்  போக்கு, இயல்பான போக்கில், சரியான முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கும்.

அம்முயற்சிகளில் குறை கண்டு, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) புரியாமல், தாய்மொழி, பாரம்பரிய, பண்பாடுகளை சீர்குலைத்து, தனதளவில் 'பிராமண துவேசம்' இன்றி வாழ்ந்து (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html );

ஆனால் பேச்சுக்கள் எழுத்துக்கள் மூலம் 'பிராமண துவேசத்திலும்', 'குருட்டு பகுத்தறிவிலும்' தனது தொண்டர்களை சிக்க வைத்து, மேற்குறிப்பிட்ட சீர்குலைவுக்கும் ஊழல் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு புரியாமல்'இனம்' தொடர்பான காலனி சூழ்ச்சியில் 'பெரியார்' .வெ.ரா சிக்கி பயணித்தது தெரியாமல், 'பெரியார் தந்த புத்திஎன்று அறிவித்து, ‘ஊழல் ஒழிப்பு என்பது ஒரு நிருவாகப் பிரச்னை’ என்பதாக‌  சுருக்கி புரிந்து கொண்டு(குறிப்பு கீழே)

திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் வால்களாகவே பயணித்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிக்கவும்;

மேலே குறிப்பிட்ட இயல்பான சமூக சீர்திருத்த முயற்சிகளை சிதைத்து, 1967க்குப் பின் ..சி, காமராஜர், முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட இன்னும் பல தலைவர்களை எல்லாம், அவரவர் சார்ந்த சாதிகளின்  'சங்கங்களில்' சிறை பிடிக்கும் அளவுக்கு, சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிவேகமாக வளர வழி வகுத்ததே 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோய், என்பதும்;

அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி, நான் முன்வைக்கும் ஆய்வு முடிவாகும்தமிழ்நாட்டில் மனித இழிவுக்கு இலக்கணமான பொதுவாழ்வு வியாபாரிகள் வளர்ந்து, ஆதிக்கம் செலுத்த வழி வகுத்ததும், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' என்பதும், அந்த ஆய்வில் அடக்கமாகும்.

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும்ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ( ‘ 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html )

எனவே 'பார்ப்பனீயம்', 'பிராமணீயம்' போன்ற சொற்களை மார்க்சிய ஆதரவாளர்கள் இன்று அந்த சொற்களின் அடையாளத்தின் கீழ் உள்ள சாதிகளை குறிப்பதாக கருதி, பயன்படுத்துவது சரியா? மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm) அந்த சொற்களின் பயன்பாட்டிற்கு இடம் உண்டா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

அந்த விவாதத்தினை தவிர்த்து, 'பார்ப்பனீயம்' என்ற சொல்லை, மார்க்சிஸ்டுகள் பயன்படுத்தினால்;

அது 'பெரியாரிஸ்டுகளின்' தொடர்பால் தூண்டுவிக்கப்பட்ட (Induction), மார்க்சிய நியாயமற்ற‌ 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயாகாதா? (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm), அந்த சொல் எங்கே, எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற தெளிவான புரிதல் இன்றி, அச்சொற்களை 'பெரியார்' ஆதரவாளர்கள் இன்றும் பயன்படுத்தி வருவதை, முகநூல் விவாதங்களில் கண்டேன்.

நாட்டின் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் சம்பந்தமே இல்லாத அதே சமயம் உபரி உற்பத்தி நாசத்துக்கும் முடக்கத்துக்கும் காரணமான புரோகிதம் தொழில் என்றால்........இது பார்ப்பன உற்பத்தி முறை சமூகம்தானே!” - முகநூல் விவாதத்தில்.

மார்க்சியத்தில் உற்பத்தி (Production) என்றால் என்ன? அந்த உற்பத்தி தொடர்பான உறபத்தி விசைகள் (Production Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Production Relations) யாவை? உபரி உற்பத்தி (Surplus Product) என்றால் என்ன? உபரி மதிப்பு (Surplus Value) என்றால் என்ன? உபரி உற்பத்தி அபகரிப்பு என்றால் என்ன? அவற்றில் தொழிலாளி - முதலாளி உறவுகளின் நிலை என்ன? "உற்பத்திக்கும் சம்பந்தமே இல்லாம‌ல், அதே சமயம் உபரி உற்பத்தி நாசத்துக்கும் முடக்கத்துக்கும்" மார்க்சியத்தில் இடம் உண்டா? அதற்கு புரோகிதம் தொழிலில் இடம் உண்டா? புரோகிதம் தொழிலுக்கும், பூசாரி தொழிலுக்கும் உபரி உற்பத்தி நாசத்திலும் முடக்கத்திலும் வேறுபாடு உண்டா?

நான் பணியாற்றிய துறையில், அலுவலக உதவியாளராக (Office Assistant) பணியாற்றியவர்களில் சிலர், கூடுதல் வருமானத்திற்காக சில கோவில்களில் புரோகிதராகவும் பணியாற்றினர். சில  மாதங்களுக்கு முன் எனது வீட்டில் மின் கம்பிகள் (Wiring) பழுது நீக்கம் செய்த எலெக்ட்ரீசன், ஒரு கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். அந்த புரோகிதர்களும், இந்த பூசாரியும் நடுத்தர வசதி வாய்ப்புகளுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சிற்றூர்கள் வரை வேகமாக பரவி வரும் 'ஆதி பராசக்தி' கோவில்களில், புரோகிதர், பூசாரியின்றி பெண்களே அந்த பணிகளை செய்கிறார்கள். 'பார்ப்பன உற்பத்தி முறை'யில் அந்த புரோகிதர்- பூசாரி - பெண்களின் பங்கு என்ன? திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வெண் சாமரம்' வீசிய கறுப்பு சட்டைகளும், சிகப்பு சட்டைகளும் அரசியல் புரோகிதர்களா? பூசாரிகளா? உபரி உற்பத்தி நாசத்திலும் முடக்கத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டா?

திருச்சி பெரியார் மையம் செயல்பட்ட காலத்தில், நான் எழுதி வெளிவந்த 'பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலானது, மேலே குறிப்பிட்ட குழப்பங்களுக்கு காரணமாக இருந்தால், அது வியப்பில்லை. அந்த நூல் உள்ளடக்கத்திற்கான அடிப்படைகள் எல்லாம், பின்னர் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தவறு என்று நிரூபித்துள்ளேன். அந்த ஆய்வுகள் தொடர்பான பதிவுகளை படித்து, விளங்கி கொள்ள முடியாதவர்களே, மேற்குறிப்பிட்ட மார்க்சிய குறிப்பாயம் (Marxian Paradigm) தொடர்பான அடிப்படை புரிதல் இன்றி, மார்க்சிய சொற்களை பயன்படுத்தி வருகிறார்கள், என்பதும் எனது கருத்தாகும். மறுத்து, தங்கள் பக்கம் உள்ள மார்க்சிய நியாயங்களை, இப்பதிவின் பின்னூட்டமாக பதிவிடுவதை, நான் வரவேற்கிறேன்.

நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான திறமைகளோ ஆர்வமோ இல்லாதவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட அரசியல் புரோகிதர்களாக, 'தமிழ் இன உணர்வு, தன்மானம், பகுத்தறிவு, சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு' போன்றவை எல்லாம் 'மந்திரங்கள்' ஆக, அந்த 'முற்போக்கு புரோகித‌' தொழில் மூலம் 'அதிவேக பணக்கார‌ர்களாக' மாறி,  'நகரத்திலேயே விலை உயர்ந்த கார் தன்னிடம் இருப்பதாக பெருமை பேசி', தனது நோயில் தனது உற்றத்தையும், சுற்றத்தையும் சிக்க வைத்ததோடு அடங்காமல், 'பெரியார்' முகமூடியில் இருந்தவரை, நான் ஏமாந்து எனது சமூக வட்டத்தில் அனுமதித்த பாவத்தின் விலையாக, எனது உற்றத்திலும், சுற்றத்திலும் அந்நோயினை பரப்ப, அந்நோயில் சிக்கியவர்களை எல்லாம், எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ வேண்டியது, சமூக தேவையுமாகிவிட்டது. (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )

திருச்சி பெரியார் மையம் செயல்பட்ட காலத்தில், (இன்று லண்டனில் வாழும்) தொல்காப்பியன் 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாமல்' என்ற தலைப்பில் விமர்சனம் வைத்த போது, அது தவறு என்று வாதிட்டவன் நான். பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசை இயற்பில்(Physics of Music) ஆய்வினை மேற்கொண்ட பின், அந்த வாதமானது தவறு என்பதை விளங்கிக் கொண்டேன்.

'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்;அரங்கேற்று காதை 65) தெரியாமல், சிலப்பதிகாரத்தையும் இழித்து பேசி'இயல்பாக பழுக்க வைக்காமல், ஆர்வத்தில் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' என்னும் தடியால் காயை அடித்ததால், அது கன்றிப்போய் வெம்பி பழமாக மாறி';

தமிழ்வழிக் கல்வி சீரழிவாக, தன்மானம் இழந்து வாலாட்டி பிழைக்கும் நாய்களாக தமிழர்களில் பலர் வளரஅவ்வாறு ஈட்டிய செல்வத்தில் மயங்கி அவர்களின் உற்றமும், சுற்றமும் சீரழிய, ஊழல் பெருகி கிரானைட், தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் கொள்ளை போக;

தமிழ்நாடு நாறுகிறதாசுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' தமிழர் பேச்சுக்கு, தமிழ்நாட்டில் வெளிப்பட்ட எதிர்ப்புக் குரல்களில், இடம் பெறாத கட்சிகளின் தலைவர்கள் எல்லாம், 'மடியில்' கனமுள்ளவர்களா, அந்த நாற்றத்தின் வெளிப்பாடாக? (சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' (porki) 'சிக்னல்'; http://tamilsdirection.blogspot.sg/2017/02/porki.htmlசுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' வரையரையை கணக்கில் கொண்டால்;


'பொர்க்கி' இந்தியர்களை வளர்த்து, இந்தியாவில் காலூன்றிய காலனி ஆட்சியில் உருவான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும், அந்த 'பொர்க்கி' நோய் ஊடுருவி, உண்மையான தேசபக்தர்களுடன் மோதலுக்குள்ளாகி, பயணித்த சூழலில்;

தமிழ்நாட்டிலும்  காங்கிரசில் முளை விட்டு, ..சி போன்ற காந்தியின் எதிர்ப்பாளர்களை காவு வாங்கி, ஆனாலும் நீதிக்கட்சி தலைவர்களின் நேர்மையான சமூக சூழலில்;

வளர சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'பொது வாழ்வு வியாபார சமூக செயல்நுட்பமானது', 1944இல் காலனிய சூழ்ச்சியில் நீதிக்கட்சித் தலைவர்களுக்கும், .வெ.ராவிற்கும் இருந்த தொடர்பைத் துண்டித்து;

.வெ.ராவின் 'இணையற்ற' தியாகத்தால் உருவாகியிருந்த, சமூக ஆற்றலை 'தீனியாக்கி' வளர்ந்த ஆபத்தில்;

தமக்கும் தமது குடும்பத்திற்கும் 'வெளியில் தெரியாத சுயநல நீதி', மற்ற தமிழர்களை ஏமாற்ற 'தமிழ் இன உணர்வு முகமூடி', என்று பயணித்து வரும் தலைவர்கள் எல்லாம் சருகாகி, உதிராமல், தமிழ்நாடு மீள முடியுமா?   திராவிட ஆட்சியில் அநியாயமாக உயிரிழந்த‌, அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரின் தந்தையாக தம்மை கருதிய எவரும், சில பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்டு, தி.மு.க தலைவரின் துதிபாடிகளாக வாழ்ந்திருப்பார்களா? (https://timesofindia.indiatimes.com/city/chennai/behind-the-bull-story-depoliticisation-of-campuses/articleshow/56673942.cms )


குறிப்பு :


‘வே.ஆனைமுத்து சிந்தனைகள் தொகுப்பு 1’ பக்கம்: 36-‍37இல், ‘பார்ப்பனரும் தி.கவும்' என்ற தலைப்பில், இராயப்பேட்டை லட்சுமிபுரத்தில், 5.1.1953 சொற்பொழிவு,'விடுதலை' 8.1.1953இல் வெளிவந்துள்ளது போன்ற சான்றுகளின் அடிப்படையில்;

1950களின் பிற்பகுதிகளிலிருந்து ‍  'பெரியார்' .வெ.ரா உடல் அளவிலும் மனதளவிலும் (Physically & mentally dependent) பிறர் சார்ந்தே நடமாட வேண்டிய சார்பானது (dependence), அதிகரித்த போக்கில், தனது இயல்பான அறிவு கூர்மைப் போக்கில் மங்கத் தொடங்கி, வெளிப்படுத்திய பேச்சுக்கள், எழுத்துகள் காரணமாகவும், அவர் மறைவிற்குப் பின், தி.மு. தலைவர்களுடன் நெருக்கமாகி, 'தி.மு. வின் சுயலாப பார்ப்பன எதிர்ப்பு நோயில்’ (‘பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு’; http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) படிப்படியாக சிக்கி, பயணித்த போக்கிலும், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயானது ,( http://tamilsdirection.blogspot.sg/2015/04/2.html), இன்று 'பெரியார்' இயக்கத்தையும், கொள்கையையுமே சுவடின்றி அழிக்கும் அபாயத்தில் நிகழ்காலம் உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

No comments:

Post a Comment