Thursday, October 5, 2017

தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்.வெ.ரா (2)   


                                     அடையாள அழிப்பு’ (Identity Destruction);


உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் தொடங்குமா?


இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற மேற்கத்திய அரசுகள் தத்தம் சுயநலன்களுக்கு உதவும் வகையில், உலக வரைபடத்தை கூறு போட்டதன் விளைவுகளில் ஒன்றான பிரிவினைக்குள்ளான வடகொரியா தென்கொரியா மோதலானது, அடுத்த உலகப்போர் மூலம் உலகமே அழியும் அபாயத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

அதே காரணங்களால், உலக அளவில் அதிகரித்து வரும் 'அடையாள இழப்பு'  (Identity Loss) என்பதானது, வடகொரியா தூண்டியுள்ள அச்சத்தை விட, அதிக வலிமையுள்ளது;

என்பதை உணர்த்தும் சிக்னல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் விளைவாக, குர்த் மக்களின் தாயகமான நிலப்பகுதியானது, சிரியா, ஈரான்ஈராக், துருக்கி ஆகிய நாடுகளிடையே துண்டாடப்பட்டு, அதன்பின் புறக்கணிப்பின் மூலம் உருவான அடையாள இழப்பானது வளர்ந்து, அந்த நான்கு நாடுகளிலிருந்தும், தமது தாயகத்தை மீட்கும் போக்காக, அண்மையில், தனிநாடு கோரும் கருத்து வாக்கெடுப்பை, பல தடைகளை மீறி, நடத்தி, வலிமையான சிக்னலை வெளிப்படுத்தியுள்ளது. (https://www.irinnews.org/special-report/2017/09/13/country-called-kurdistan?gclid=Cj0KCQjwjdLOBRCkARIsAFj5-GD4hvkk2PUnWNWs1Ig5AndFcbtUzOS8Jo7lFfZrVkL5po8d0MJ8qlAaAriwEALw_wcB & https://en.wikipedia.org/wiki/Iraqi_Kurdistan_independence_referendum,_2017 )

அந்த தனிநாடு கோரிக்கை வாக்கெடுப்பின் பின் விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்ந்தால், மக்கள் தாங்க மாட்டார்கள் என்று கருதி, குர்திஸ் மாகாண (தனிநாடு ? ) தலைவரான மசூத் பர்சானி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்; மத்திய ஈராக் அரசின் கோபத்தை தணிக்க. (https://sg.yahoo.com/news/iraqi-kurdish-leader-barzani-confirms-intention-step-down-144822337.html )

அதே போல கி.பி 1492 வரை தனி நாடாக இருந்த காடலோனியா, பல மாற்றங்களை சந்தித்து, பின் ஸ்பெயின் நாட்டின் ஆளுமையில் சிக்கியது.

லெனினின் சமகால கம்யூனிஸ்ட் தலைவர்  டிராட்ஸ்கி ரஷ்ய புரட்சியில் பங்கேற்று, பின் ஸ்டாலினுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வெளியேறி, காடலோனியாவில் குடியேறி, ஸ்பெயின் அரசுக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்க‌, ஸ்டாலின் அரசின் துணையோடு அந்த புரட்சி ஒடுக்கப்பட்டு, பின்னர் டிராஸ்கி கொல்லப்பட்டார். அந்த புரட்சியில், உலகப்புகழ் பெற்ற 'மிருகப் பண்ணை' நாவல் எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லும் பங்கேற்று,’ காடலோனியாவிற்கு அஞ்சலி’-  'Homage to Catalonia' என்ற தலைப்பில், அந்த புரட்சி அனுபவங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று, ஸ்பெயின் அரசின் கீழ் காடலோனியா மாநில அரசில் ஆட்சியில் உள்ள கட்சியானது, மத்திய அரசின் எதிர்ப்பையும், ஒடுக்குமுறைகளையும் மீறி, தனிநாடு கோரிக்கைக்கான கருத்து வாக்கெடுப்பை நிகழ்த்தி, உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..  (https://en.wikipedia.org/wiki/Catalan_independence_referendum,_2017 & https://en.wikipedia.org/wiki/History_of_Catalonia   & https://en.wikipedia.org/wiki/Homage_to_Catalonia )

உலகில் தனிநாடு கோரும் முயற்சிகள் எல்லாம், சர்வதேச அரசியல் பொருளாதார சூழ்ச்சி வலையில் சிக்கி, பயணிப்பதையும், தனிநாடு கோரும் தலைவர்களின் அறிவுஅனுபவங்களையும், பொறுத்து,

கருத்து வாக்கெடுப்பு இல்லாமலேயே தனிநாடு ஆவது;

மிகுந்த உயிர், உடைமை சேதங்களுக்குப் பின் தனி நாடாகி, சீரழிவு போக்கிலேயே பயணிப்பது;

மிகுந்த உயிர், உடைமை சேதங்களுக்குப் பின், தனிநாடு கோரிக்கையே சாண் ஏறி, முழம் சறுக்கின கதையானது;

தனிநாடாக இருந்து அருகாமை பெரிய நாட்டுடன் இணைந்து சீரழிந்தது; பிரமிக்கும் வகையில் வளர்ந்தது;

போன்றவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்து வருபவையாகும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு கருத்து வாக்கெடுப்புகள் காரணமாக, 'குர்திஸ்தான்' மற்றும் 'காடலோனியா' என்ற தனிநாடுகள் உருவாக உள்ள தடைகளை, அந்த கருத்து வாக்கெடுப்பை முன்னெடுத்த தலைவர்களே அறிவார்கள்ஆயுத போராட்ட வழியில் பயணிக்காத, 'காடலோனியாதனிநாடு கோரும் கட்சியானது முன்னெடுத்த வாக்கெடுப்பில், 43% சதவீத மக்களே வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்கள். பின் மறுவாரத்தில், தனிநாடு கோரிக்கையை எதிர்ப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்ட பேரணியும் நடந்துள்ளது. (http://www.straitstimes.com/world/europe/protesters-rally-against-catalan-independence-in-barcelona )

'குர்திஸ்தான்அரபு நாடுகளின் அரசியலுக்கும், காடலோனியா ஐரோப்பிய நாடுகளின் அரசியலுக்கும், திருகுவலியாக பயணிக்கத் தொடங்கியுள்ளன‌.

உலகமயமாக்கலில் ஏற்பட்டு வரும் 'அடையாள இழப்பு' (Identity Loss) பிரச்சினையே, மேலே குறிப்பிட்ட திருகுவலிக்கு காரணம் என்பது தொடர்பான கட்டுரையும் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை வழியில், 'இந்திமயமாக்கம்' என்பதானது, இந்தியாவில் ஏற்படுத்தி வரும் 'அடையாள இழப்பு' தொடர்பாக, ஒரு இணைய குழுவில், நான் பதிவு செய்த கருத்தும், கீழே குறிப்பில் உள்ளது.

தமிழ்நாட்டில் 'சமூக நீதி, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு' என்ற பெயரில், தாய்மொழி, பாரம்பரிய, பண்பாடு தொடர்புடைய, 'பெரியார்' .வெ.ராவின் 'அடையாள அழிப்பு' (Identity Destruction) ஏற்படுத்திய பாதிப்புகள், உலகில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவ பாதிப்புகள் (Unique Damages)  ஆகும்.


'ஒரு தனி மனிதரின், சமூகத்தின் 'அடையாள அழிப்பு' என்பதானது, அந்த சமூகத்தின் அக வாழ்வில், 'நேர்மை வழிகாட்டியை' (ethical compass) சிதைத்து, சமூக சீரழிவிற்கு வழி வகுக்கும்என்பது தொடர்பான, உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்விற்கு, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் ஏற்பட்ட சீரழிவுகள் துணைபுரியக் கூடியவை ஆகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html & http://tamilsdirection.blogspot.sg/2016/03/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

ஒரு தனி மனிதரின் அக வாழ்விற்கும், அவர் வாழும் சமூக அக வாழ்விற்கும், தாய்மொழிவழி அடையாளத்திற்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய புரிதலின்றி;

தான் விரும்பிய திசைக்கு எதிரான திசையில், தனது பயணமானது, 1944க்குப் பின் வெளிப்படுத்திய 'சுருதிபேத' சிக்னல்களை அரைகுறையாக புரிந்து கொண்டு;

எல்லைமீறி போன பின், அரைகுறையாக விழித்துக் கொண்டு, அதன் பின்னும் காமராசரை ஆதரித்த போக்கில், தமிழர் அடையாளத்திற்கு கேடாக, நேரு குடும்ப ஆட்சியில் இந்தியாவில் தேசகட்டுமானம் (Nation Building) சீர்குலைவதை புரிந்து கொள்ளாமல், ஒரே நேரத்தில் காமராசர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டே, பிரிவினை கோரிக்கையும் ஆதரித்த இரண்டும் கெட்டான் போக்கில், 'பெரியார்' .வெ.ரா பயணித்ததன் விளைவாக;

அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'பெரியார்' .வெ.ராவின், அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், பொதுவாழ்வு வியாபாரத்திற்கான முதலில்லா மூலதனமாக்கி, வெற்றி பெற்றதன் 'பலன்களை'த் தான், இன்று தமிழும், தமிழ்நாடும், தமிழர்களும், 'அனுபவித்து'க் கொண்டிருக்கிறார்கள்வெவ்வேறு கொள்கை முகாம்களில் இருந்தாலும், அகத்தில் சீரழியாதவர்கள் எல்லாம் எதிர்நீச்சலில் ஒன்றுபடுவதன் மூலமே மீட்சிக்கான தாமதத்தை குறைக்கும் வகையில்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், சென்னை ராஜதானியானது தனிநாடாக இருந்த வாய்ப்பானது, 'பெரியார்' .வெ.ராவால் 'திராவிடர் கழகம்' துவங்கியதன் மூலம், எவ்வாறு  அந்தவாய்ப்பானது கெட்டது? என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2) அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?’; http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதன்பின், இந்திய விடுதலைக்கு முன், 'பெரியார்' .வெ.ரா ராஜாஜியின் ஆதரவுடன் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையில் தோற்றது பற்றியும் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html  ) அவ்வாறு பிரிந்திருந்தால், 1967 வரை உயிர்ப்புடன் இருந்த தமிழ்வழிக்கல்வியும், கிரானைட், தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம், ஊழல் சுனாமியில், கறுப்பு மற்றும் சிகப்பு சட்டைகளின் ஆதரவுடன், 1950களிலேயே சீரழிந்திருக்கும்.

இந்திய விடுதலைக்குப் பின், பிரிவினை கோரிக்கையை முன்வைத்துக் கொண்டே, காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை .வெ.ரா அவர்கள் ஆதரித்த போக்கில்;

பொதுமக்கள் கருத்துருவாக்கத்தில் (public opinion formation), ஏற்கனவே 'திராவிடர்/தமிழர்/திராவிட 'குழப்பங்களில் சிக்கியிருந்த பிரிவினை கோரிக்கையானது எந்த அளவுக்கு பலகீனமாகி, அக்கோரிக்கையானது பொதுவாழ்வு வியாபாரத்திற்கு, முதலில்லாத மூலதனமாக மாறியது, என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.. (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

இந்திய விடுதலைக்குப் பின், 'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று அறிவித்து பயணித்தது தி.மு.. 1960களில் பிரிவினையை  தி.மு. கைவிட்ட பின்னர், தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வு வியாபாரம் ஆனது என்பதையும் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_25.html )

'தனித்தமிழ்நாடு கோரிக்கையானது' முதலில்லா மூலதன பொதுவாழ்வு வியாபாரிகளிடம் சிக்கி, பயணித்த போக்கில்;

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, நிபந்தனைகளுடன் பரோலில், தனித்தமிழ்நாடு/தமிழ் ஈழம் குழுக்களின் 'புரவலராக' இருந்து, பின் மருத்துவ மனையில் 'சர்ச்சைக்கு' இடமான அறுவை சிகிச்சைக்கு உள்ளான தனது கணவரை பார்க்க, சென்னை வந்த போது, சசிகலா ஆதரவு .தி.மு. தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்றுள்ளனர். (https://tamil.oneindia.com/news/india/sasikala-going-chennai-from-bengaluru-car-297784.html ) 2ஜி வழக்கில் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கனிமொழியை, சென்னை விமான நிலையத்தில் எண்ணற்ற தி.மு. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். 1967க்கு முன், கட்சிகளில் வெட்கப்பட வேண்டியவைகளாக இருந்தவை எல்லாம், இன்று திராவிடக் கட்சிகளில் பாராட்டப்படுபவையாக மாறி உள்ளன; தமிழ்நாட்டில் 'பெரியார்' .வெ.ராவின் 'அடையாள அழிப்பு' ஏற்படுத்திய தன்மானக் கேடான பாதிப்புகளில் ஒன்றாக

தமிழ்நாட்டை சீரழித்த இவை போன்ற 'ஊழல் செல்வாக்குகளுக்கு', 'பார்ப்பன எதிர்ப்பு, இனமானம்' வெண்சாமரம் வீசிய கறுப்பு சட்டைகள் எல்லாம் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயினால், அம்பலமாகாமல் உள்ளார்களா? அதில் குளிர் காய்ந்த சிகப்பு சட்டைகளும், அதே காரணத்தால், தப்பித்துள்ளார்களா? என்ற கேள்விகள், இருட்டில் இருந்த காலமும் முடிவுக்கு வருகிறது.

தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருவதையும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்திபோட்டி போட்டு, 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாகி வருவதையும், ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.    ( http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.htmlதிராவிட ஆளுங்கட்சித் தலைவர்களில் யார்? யார்தமிழர்களையும், தமது கட்சிக்காரர்களையும் 'பதர்' போல‌ இரண்டாம் தரத்தினராக நடத்தி, தம்மை தேடி வரும் வடநாட்டு/வெளிநாட்டு முதலாளிகளையும்வடநாட்டு கட்சிகளைச் சார்ந்தவர்களையும், வாசல் வரை வந்து வழியனுப்புபவர்கள்? அந்த தலைவர்களின் 'எடுபிடிகளான பெரியார் சமூக கிருமிகள்' யார்? யார்? என்பது அந்தந்த கட்சிகளில், மேல் மட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரியும்; மீடியா வெளிச்சத்திற்கு வராமல்.

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான',  'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானதுதமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு - பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்தும், அந்த வலைப்பின்னலின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் 'தனி நாடு' கோரிக்கையிலிருந்தும், தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது,( http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html  & http://tamilsdirection.blogspot.sg/2016/09/blog-post.html )

தமிழ்நாட்டில் அடையாள இழப்பின் (Identity Loss) வளர்ச்சியும், தமிழ்நாட்டில் இசையின் சுருதிக் குழப்பங்களிலும், இசை வடிவ குழப்பங்களிலும், இசை ரசனை குழப்பங்களிலும், தமது இயல்பான ரசனையையும், மகிழ்ச்சியையும் தொலைத்து, மேற்கத்திய, இந்திமய தூண்டுதலுக்குள்ளான தூண்டப்பட்ட ரசனை, மகிழ்ச்சி மூலமாக;  (http://tamilsdirection.blogspot.com/2017/10/  http://tamilsdirection.blogspot.com/2017/10/ & http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தமிழர்களில் பெரும்பாலோர் மனநிறைவற்ற மனநோயாளிகளாக வாழ, அவற்றின் தொகுவிளைவாக, கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி குற்றங்கள் மிகுந்து வரும் நாடாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது;

உலகத்திலேயே டிஜிட்டல் யுகத்தில், சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் தூண்களை முட்டாளாக்கி, கறுப்புச் சட்டைகளும், சிகப்பு சட்டைகளும், காவி சட்டைகளும், 'தனித்தமிழ்நாடு/தமிழ் ஈழம்' சட்டைகளும் மெளன சாட்சியில் ஒன்றி பயணிக்க‌, ஒரு முதலமைச்சரே மர்மமான முறையில் மருத்துவ சிகிச்சை மூலமாக மரணத்தில் முடிந்த சாதனை(?) படைத்த நாடாக.

இந்தியாவில் தேச கட்டுமான சீர்குலைவுப் போக்கில் (Derailed Nation Building Process), தனித்துவமாக 'அடையாள இழப்பில்' (Unique Identity Loss) தமிழ்நாடானது, சீரழிந்ததன் வெளிப்பாடே, மேலே குறிப்பிட்ட சாதனை, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

நேரு குடும்ப ஆட்சியில், இந்திய விடுதலைக்குப்பின் தேச கட்டுமானமானது (Nation Building) சீர்குலைவிற்குள்ளான சவாலை, பிரதமர் மோடி சந்தித்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/10/caution-bjps-support-to-strengthen.html)

இந்தியா சீர்குலைந்து, சோவியத் நாட்டினை போல் பிளவுபடுமானால், அதில் ஆப்பிரிக்க நாடுகளை போல, சீரழிவில் முதல் இடத்தில் தமிழ்நாடு இருக்கும் வாய்ப்புள்ளதையும் ஏற்கனவே எச்சரித்துள்ளேன்.

'பெரியார்' .வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, பிரிவினை சமூக நோயிலிருந்து 'தமிழர்' என்ற அடையாளம் மீண்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் ரிமாற்ற ஆக்கபூர்வ (Mutually beneficial) திசையில் பயணிக்கும் சமூக செயல்நுட்பம் உருவாகும் என்பதும்;

அது பிரதமர் மோடி சந்தித்துள்ள தேசகட்டுமான சிக்கலுக்கு தீர்வாகமேலே துக்ளக் தெரிவித்த தென்னாட்டு பங்களிப்பு வரிசையில், அமையக் கூடும் என்பதையும், நான் கணித்துள்ளேன். (‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்.வெ.ரா (1)’; http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

'பெரியார்' .வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் நடைபெற வேண்டிய நெருக்கடியை, இந்திய அளவிலும், உலக அளவிலும் வெளிப்படும் போக்குகளை உணர்ந்து;

அந்த விவாதமானது, அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது. கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, உடன்படும் நிலைப்பாடுகளில் (உதாரணமாக, தாய்மொழிவழிக் கல்வி) சேர்ந்து செயல்படுவதானது, அதற்கு வினை ஊக்கியாக (catalyst)  வெளிப்படும் என்பதும் எனது கருத்தாகும்.

குறிப்பு:

To draw the attention of the patriotic Indians to the danger awaiting India;
 I have added the brackets in the following article.

“Blowing away the next cloud —identity loss—is more problematic. As the world (India) melds into one interdependent homogenous blob who are we as individuals? I ask the question because who we are is determined to a large degree by the language we speak, the religion we practice, our national history, culture and laws.

Globalisation (Hindianization) is creating an identity crisis and that in turn has created a political backlash from people who fear that the essence of who they are is under threat. (Hindianization) The most recent examples are independence referenda in Kurdistan and Catalonia, (adding strength to the referendum demands in Kashmir, etc).’’ ; http://www.newindianexpress.com/opinions/2017/oct/04/our-world-has-an-identity-crisis-1666422--1.html

Apart from worsening the mother tongue based identity loss in the non-Hindi states;

& networking the divisive problems, by the foreign funded NGOs with open/latent links with the regional thug leaders;

inter-state river/border disputes, unresolved for too long a period, are time bombs waiting for the triggering by the vested interests  planning to destabilize India;

Unless the mother-tongue based education, the enhanced role of the regional languages both in state & central govt functioning in the respective states (availing the developments in Natural Language Processing) & encouraging the mother tongue, & native culture based identity, also developing harmony with Indian identity;

Such developed harmony may succeed in resolving both the inter-state disputes & the identity loss;

Hindianization will lead to disintegration into African like nations, ruled by regional dynastic thugs. 

No comments:

Post a Comment